Sunday, June 27, 2010

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க!

எனது முந்தைய பதிவு ஒன்று,  "ஆண் பேச நினைப்பதெல்லாம்"......... வாசித்து விட்டு,  அதன் தொடர்ச்சியாக,
"ஆண் கேட்க நினைப்பதெல்லாம் ....." என்று எழுதுங்க என்று சிலர் எனக்கு இ-மெயில் அனுப்பி இருந்தார்கள்.
அடிக்கிறது வெட்டி அரட்டை,   இதுல நேயர் விருப்பம் ...... ஆஹா..... சூப்பரு என்று நானும், கேள்விகளை அனுப்புங்க ....என்னால் முடிந்த அளவு, பெண்களிடம் பேசி, பதில் வாங்கி தருகிறேன் என்று ஒரு சேவை மனப்பான்மையுடன்  அடுத்த "ஆராய்ச்சி" மணி அடிக்க கிளம்பினேன்.......  சந்தோஷமாக,  கேள்விகள் வந்து குவிந்தன.... அதில்,  மொத்தம்  பத்து கேள்விகள் எடுத்துக்கிட்டு, சர்வே ஆரம்பிச்சேன்.....  முக்கியமாக நம் பெண் பதிவர்கள் சிலரும்  ஆர்வமாக பங்கு பெற்று கொண்டாங்க......  மற்ற நட்பு வட்டங்களும் பதில் தந்து இருக்காங்க.... சிலர், அவர்களுடைய தோழிகளிடம் இருந்து பதில் வாங்கி தந்து இருக்காங்க....

 அந்த பதில்களில் முக்கியாமனவற்றை தெரிந்து எடுத்து, இங்கே தொகுத்து தந்து இருக்கிறேன்......

பெண்ணின் மனதை தொட்டு அறியாதவர்களுக்கு ஒரு சிறிய முன்னுரை: 

பெண் மனதில் - பெண் கொண்டுள்ள attitude பல வகைப்படும்.  கீழ் கண்ட பதில்களில் இருந்து நீங்கள் தெரிந்து/புரிந்து  கொள்ளலாம். அதில், நீங்கள் எந்த வகை பெண் - girlfriend/wife/friend - உடன் டீல் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து,   பதிலை சாமர்த்தியமாக செலக்ட் செய்து கொள்ளவும். தவறான பதிலுடன் தவறான வகை மனதுள்ள பெண்ணுடன் அணுகினால்,  மக்கா - உங்க முதுகில "கெட்டி மேளம்" தான்..... இதற்கு கம்பெனி பொறுப்பு ஆகாது. அதனால், உங்கள் மண வாழ்க்கையில் - காதல் வாழ்க்கையில் - வரும் "சுனாமி"களுக்கும் இந்த
வெட்டி பேச்சு "மன்னார் அண்ட் கம்பெனி" பொறுப்பு எடுக்காது.

முதல் ஐந்து கேள்விகளும் பதில்களும் இங்கே:  மற்ற ஐந்து கேள்விகள்  அடுத்த பதிவில்/இடுகையில்:

மந்தைவெளியில் இருந்து "கரிசனம்" கந்தசாமி கேட்கிறார்:
1. நான் ஆணாக பிறந்து இருக்கலாம் என்று எப்போதாவது நினைத்தது உண்டா?
(முடிந்தால், இரண்டு மூன்று வரிகளில் எப்பொழுது (why and when)  என்று சொல்லவும்.)

 1.   ஒரு போதும் நினைத்தது இல்லை.
2.   நான் ஆணாகப் பிறக்காததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வேன்.  
3 .   நான் வளர்ந்ததே ஆண்பிள்ளை (Tom Boy) மாதிரி தான். அதனால், அப்படி தோன்றியது இல்லை.
4 .  சில நேரங்களில்,  நினைத்து ஏங்கி இருக்கிறேன்:
................ பெற்றோருக்கு பண உதவி செய்வதில் இருந்து, கூட வைத்து கவனித்து கொள்ள இயலாத நிலையில்.
.................சில வேலைகளுக்கு (field job) ஆணாக இருந்து இருந்தால், இன்னும் advantage இருந்து இருக்கும். 
................. ஜஸ்ட் லைக் தட் ... நண்பர்களுடன் சௌகரியமாக ஆண்கள்,   கும்மி, ரம்மி, தண்ணி, சைட்  அடிக்க முடியும்.  இந்த செயல்களுக்கும் அவர்களது  "நல்லவர்" இமேஜ்க்கும் நோ டேமேஜ். ஆனால், விளையாட்டாக பொண்ணுங்க செய்தால் கூட, "முத்திரை" குத்திடுறாங்க..... குறிப்பாக, திருமணம் ஆன பெண்களுக்கு இது ஒரு challenge தான்.  ஹி,ஹி,ஹி,ஹி.... 
5.     இது என்ன காஞ்சு போன கருவாட்டு கேள்வி.  ஆண்கள் எப்பொழுதாவது பெண்ணாக பிறந்து இருக்கலாம் என்று நினைத்தது உண்டா? அப்படி நினைத்த தருணங்கள் தவிர மற்ற நேரம்,  நாங்க அப்படி நினைச்சோம் என்று வச்சுக்க சொல்லுங்க...... 

அடுத்த கேள்வி கேட்பவர், நாளைக்கு கல்யாணம் பண்ண ரெடி ஆகி கொண்டு இருக்கும் "அசால்ட்"ஆறுமுகம்:

2 .  பெண்கள், தனக்கு வரப் போகும் கணவரிடம், முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?
(எல்லாம் அல்ல.  மிக முக்கியம் என கருதப்படும்  விஷயங்கள் மட்டும்)

1.   தன் மனைவியை  விரும்ப வேண்டும்.
2.  தன் மனைவி  மேல் உள்ள அன்பை வெளிப்படுத்த தெரிய வேண்டும்.
3 .  அவ்வப்போது பாராட்டி, உற்சாகப் படுத்த வேண்டும்.  
4 .  வீட்டு பொறுப்புகளில் உதவி செய்ய வேண்டும் - சீண்டலுடன் - கூடலுடன் - சேட்டைகளுடன் - சில்மிஷங்களுடன்.
5 .  நல்ல வேலை அல்லது பிசினஸ் இருக்க வேண்டும்.  ஓரளவுக்காகவது,  பார்க்கிற மாதிரி லுக் இருக்க வேண்டும்.
6 . நல்ல understanding - மனைவியின் உணர்வுகளை, ஆசைகளை மதிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 
7 .  அனுஷ்கா, தமன்னா மாதிரியும் இருக்கணும் - "எங்கும் எங்கெங்கும்" பொம்மீஸ் நைட்டீஸ் போட்ட குடும்ப தலைவியாயும் இருக்கணும் என்று எதிர்பார்த்து - மனைவியை  டார்ச்சர் பண்ணாம இருக்கணும். 

எதிர்பார்ப்புக்கும் கிடைத்ததற்கும் பாலமாக ஒரு கேள்வியை எடுத்து விடுகிறார்,  "பில்ட் அப்" பீட்டரு:
3 .  உங்கள்  கணவரிடம்  பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?  

1 .  விருந்தோம்பல் - பிறருக்கு உதவுவது.
2 .  தன் மனைவி சுதந்தரத்தில் தலையிடாமல் இருப்பது.
3 .  3 Idiots virus மாதிரி டைமிங் சென்ஸ் கொண்டிருப்பது.
4 .  தன் மனைவியுடன் கலந்து பேசி விட்டு, எந்த முடிவையும் எடுப்பது. 
5 .  தன் மனைவி மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை. 
6 .  ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும்,  சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது. 

ஆத்துக்குள்ள காலை விடும் முன், "ஆழம்" பார்க்க எண்ணும் "அடுத்தாத்து" ஆல்பர்ட்டு:  
4 .  உங்கள் கணவர் அல்லது காதலர், இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது. உங்கள்  reaction என்ன? என்ன செய்வீர்கள்?  

1 .  கண்டிப்பாக சண்டைதான்.......
2 .   பயங்கர கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாது...... இரு தரப்பு பெற்றோர் வரை விஷயம் போகும்.
3 .  தன்னை பிடிக்காமல் தானே இன்னொரு பெண்ணை தேடினார் என்று ஒதுங்கி விடுவது..... ஒரு வேளை, தன் கணவர் அப்படி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் இவ்வளவு உறுதியான பதிலை  தர முடிகிறதோ என்னவோ.....
4 .  குழந்தைகளுக்காகவாவது விவாகரத்து வரை போகாவிட்டாலும்,  "மறந்தேன் - மன்னித்தேன்" என்று நிச்சயம் இருக்க முடியாது.
5 .  "அரிசினு அள்ளவும் விடாமல் - உமினு ஊதவும் விடாமல்" பாடாக படுத்தி,  பழி வாங்கி  விடுவது.
6 .   திருமணத்துக்கு முன் என்றால் - போட்டிக்கு தானும் வேறு ஆளை தேடி கொள்ளுதல்  ....... திருமணத்துக்கு பின் என்றால் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - இந்த கற்பு கிற்பு என்று தடுக்கிறதே...... நிச்சயமாக அவருக்கும் மனம் வலிக்கிற மாதிரி ஒரு செயல் உண்டு....

இந்த கேள்வியை கேட்பது,  வம்பு வேண்டாமே ஆனாலும் ஏதோ ஒன்றை கேட்டு வைப்போமே என்று இருக்கும் "டீசன்ட்டு" தங்கசாமி: 
5 .  உங்கள் கணவர் அல்லது காதலருக்கு, உங்களை (மட்டுமே) பிடிக்க முக்கியமான காரணங்கள் சொல்லுங்களேன்...

1 .  மனைவியின் சமையல்  - வீட்டு நிர்வாகம்.
2 .  மனைவியின் தன்னம்பிக்கையும் தைரியமும்.
3 .  வெளிப்படையான பேச்சு.
4 .  மனைவி அல்லது girl friend கிட்ட ஏதாவது ஒன்று கன்னாபின்னான்னு பிடிக்கணும்.  அப்போ தான் சரிப்பட்டு வரும்.
இது ஆளாளுக்கு வேறுபடுவதால் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
5 .  இதையும் கேள்வின்னு கேக்குறவங்களை என்னனு சொல்றது?  அவரோட டைப்புக்கு, வேற எவளும் இப்படி அட்ஜஸ்ட் பண்ணி இருக்க மாட்டாள்.   இதுதான் "cheap maintenance " .......
 

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...... இப்போவே கண்ணை கட்டுதே...... இன்னும் பாதி கிணறு இருக்குதே....." என்று நினைக்காதீங்க..... கேட்டதுதான் கேட்டுட்டாங்க - முழு பதில்களையும் பாத்து தெரிஞ்சுக்கோங்க...
  விரைவில் அடுத்த பாகம்!

நன்றி: படங்கள் கூகிள்.

73 comments:

S Maharajan said...

//3 . உங்கள் கணவரிடம் பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?
ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது //

செம கலக்கல்
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி

ISR Selvakumar said...

பெண்கள் மனதில் இருப்பதையெல்லாம் ஒரு பெண் கேட்டு வாங்கிவிட முடியும்,அதாவது சித்ரா அவர்கள் வாங்கி விட முடியும் என்பதே ஒரு நம்ப முடியாததுதான்.

ஆனாலும் படிக்க கலகல நடையுடன் படு சுவாரசியமாக இருக்கிறது.

நட்புடன் ஜமால் said...

சில நேரங்களில், நினைத்து ஏங்கி இருக்கிறேன்:
................ பெற்றோருக்கு பண உதவி செய்வதில் இருந்து, கூட வைத்து கவனித்து கொள்ள இயலாத நிலையில்.]]

சிரிப்பான பதிவுக்குள்ளும் நெகிழ்வான சிந்திக்க வைக்கும் விடயங்கள்

சீக்கிரம் அடுத்தது ...

Prathap Kumar S. said...

/ஓரளவுக்காகவது, பார்க்கிற மாதிரி லுக் இருக்க வேண்டும். //

ஏன் இப்படில்லாம் பயமுறுத்தறீங்க...???

//அனுஷ்கா, தமன்னா மாதிரியும் இருக்கணும் - "எங்கும் எங்கெங்கும்" பொம்மீஸ் நைட்டீஸ் போட்ட குடும்ப தலைவியாயும் இருக்கணும் என்று எதிர்பார்த்து - மனைவியை டார்ச்சர் பண்ணாம இருக்கணும். //

ஹஹஹஹ....டாப்பு பதில்...


//ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது //

ஹஹஹஹ சிரிச்சுட்டே இருக்கேன்.... :))))))))))

Unknown said...

ஐயா கனவான்களே இப்ப தெரியுதா பெண்கள் எவ்வளவு கொடுமைக்காரங்கன்னு ..
இனிமே கல்யாணமே பண்ணிகாதிங்க ராசாக்களா..
அப்புறம் இளிச்சவாயனுங்க கிடைக்காம அவங்க திண்டாடட்டும்..

என்ன ஒரு குசும்புன்கிறேன்...

கார்க்கிபவா said...

/ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது/

ஹிஹிஹிஹி

அப்புறம், படமெல்லாம் கூகிள் தரலையே... அது மூலமா வேற வேற தளம்தானே?

இபப்டிக்கு,
எப்படியாவது தப்பு கண்டுபிடிப்போர் சங்கம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

செம கலக்கல் சுவாரசியமாக இருக்கிறது....


சீக்கிரம் அடுத்தது .

Vidhya Chandrasekaran said...

ஆராய்ச்சி...முடியலம்மா..

Asiya Omar said...

அருமையாக தொகுத்து இருக்கீங்க..அடுத்தது எப்போ...?

Ahamed irshad said...

ரொம்ப நல்லா? இருக்குங்க...

தமிழ் உதயம் said...

"கரிசனம்" கந்தசாமி
"அசால்ட்"ஆறுமுகம
"பில்ட் அப்" பீட்டரு
"அடுத்தாத்து" ஆல்பர்ட
"டீசன்ட்டு" தங்கசாமி
ஆகியோருக்கு நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஐயா கனவான்களே இப்ப தெரியுதா பெண்கள் எவ்வளவு கொடுமைக்காரங்கன்னு ..
இனிமே கல்யாணமே பண்ணிகாதிங்க ராசாக்களா..
அப்புறம் இளிச்சவாயனுங்க கிடைக்காம அவங்க திண்டாடட்டும்..
///

ஐயோ எங்க வீட்டுல எனக்கு பொண்ணு பாக்குறாங்களே. நிறுத்திடவா?

Anonymous said...

ஆமா சித்ரா நானும் நிறையே சமயங்களில் ஏன் ஆணாக பிறக்கவில்லே என்று ஏங்கியிருக்கேன் ..ரீசன் எல்லாம் நீங்க எழுதினது தான் ..அப்புறம் ஆண் ஆனால் கலியாணம் பண்ணாமலும் இருக்கலாம் பெண்ணா பிறந்தால் கல்யாணம் ஆகாமல் இருந்தா அவளை உறவினர்களும் சமூகவும் வாழ விடாதே இதும் ஒரு காரணம் தான் ..சுவாரிசயமான பதிவு ...மீதி படிக்க ஆவலோடு வெய்டிங் ..நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

SUFFIX said...

சுவாரஸ்யமான இடுகை, ’ஆண் பேச் நினைப்பதைவிட’ இதில் தரமான் ஆராய்ச்சி தென்படுகிறது. அடுத்த பகுதியும் வரட்டும்.

மங்குனி அமைச்சர் said...

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் , இன்று முதல் நமது சித்திரா மேடம் அவர்கள் "வாரமலர்" புத்தகத்திக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார் என்பதை தெரிவித்து "கொ"ல்"கிறோம்"

Vidhoosh said...

//அரிசின்னு அள்ள//// இதப் படிக்கும் போது சிரிப்பா அடக்க முடியல...கலக்கல். :))))))))

நாடோடி said...

கேள்விக‌ளும் ப‌தில்க‌ளும் க‌ல‌க்குது... ஆராய்ச்சி தொட‌ர‌ட்டும்..

அன்புடன் அருணா said...

/தவறான பதிலுடன் தவறான வகை மனதுள்ள பெண்ணுடன் அணுகினால், மக்கா - உங்க முதுகில "கெட்டி மேளம்" தான்..... /
இது முக்கியமான அறிவுரை!

பின்னோக்கி said...

மிக பயங்கரமான ஆராய்ச்சியா இருக்கே. தொடருங்கள். அடுத்த பகுதிக்கு ஆவலாய் காத்திருக்கிறோம்

Mythili (மைதிலி ) said...

Super answers Chitraa... romba nyaayamaana yathaarthamaana badilgal.. All women will agree with it.. Particularly rendaavathu Question and Answer is the key one for which all Men should know the answer... Nalla Pathivu.

goma said...

நல்ல தொகுப்பாளினி என்ற பட்டம் தந்தேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

எப்பாடி எத்தன கேள்விக.. அத்தனக்கும் பதில் சிரிப்புதான்.. ஹ்ஹா ஹா ஹா... ரொம்ப சுவாரசியமா இருக்கு.

பருப்பு (a) Phantom Mohan said...

7 . அனுஷ்கா, தமன்னா மாதிரியும் இருக்கணும் - "எங்கும் எங்கெங்கும்" பொம்மீஸ் நைட்டீஸ் போட்ட குடும்ப தலைவியாயும் இருக்கணும் என்று எதிர்பார்த்து - மனைவியை டார்ச்சர் பண்ணாம இருக்கணும்.
////////////////////////////////

இது குறிப்பா என்னை குறி வச்சு சொன்னது போல் இருக்கே???????

அடுத்த பாகம் வேறயா? வெளங்கும்! ஆனா உங்க புண்ணியத்தில நிறைய விஷயம் தெரிஞ்சிக்கிட்டேன் நன்றி!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தொகுப்பு அழகாக சுவாரசியமாக இருக்கு சித்ரா. ஆரம்பத்தில் ,ஆண்களின் தப்பான கணக்கீட்டால் வரும் பின் விளைவுகளுக்கு மன்னாரன்க் கம்பனி பொறுப்பேற்காது என்று போட்டது நல்ல ஐடியா.

அம்பிகா said...

ஆராய்ச்சி முடிஞ்சுதா?
நல்ல தொகுப்பு...
நகைச்சுவையானதும் கூட...

ஜெட்லி... said...

ஆண்டவா நீ தான் காப்பத்தணும்.....

சசிகுமார் said...

//ஓரளவுக்காகவது, பார்க்கிற மாதிரி லுக் இருக்க வேண்டும்//

அப்படின்னா நாங்கெல்லாம் என்ன பண்றது. ஐந்து கேளிவிகளும் அதற்கேத்த பதில்களும் நன்று. அடுத்த ஐந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்

Anonymous said...

//6 . ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது. //

:) அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டீஸ்

தமிழ் மதுரம் said...

ஆஹா... என்ன அருமையான சிந்தனை உள்ள ஆள் நீங்கள். ஆண் வர்க்கத்திற்காக அனுதாபப்படுவதற்கு வாழ்த்துக்கள்.

சூடு, சுவாரஸ்யம் இவை இரண்டும் கலந்தது உங்கள் பதிவு.

ஹேமா said...

எப்பிடி சித்ரா.....!நகைச்சுவைதான்.ஆண்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Anonymous said...

ப்ரித்வி??? Clooney மாதிரின்னு எழுதுங்கக்கா. *ஆஹா நானே வாய்க்கொடுத்திட்டேனா? * Its ok.

Riyas said...

அடடா அசத்தல்... பெண்களின் மனசுக்குள் இத்தனை விஷயங்களா..

பிரேமா மகள் said...

பசங்க.. தொலைஞ்சாங்க..

ராஜ நடராஜன் said...

//அடிக்கிறது வெட்டி அரட்டை, இதுல நேயர் விருப்பம் ......//

வெட்டி அரட்டைன்னு சொன்னாலும் மனோதத்துவம் கொடிகட்டிப்பறக்குது.கேள்விகள் கேட்டு பதில் போடுவதன் காரணமாக இருக்கலாம்.

மன்னார் அண்ட் கம்பெனி இன்னும் வ(ள)ர வாழ்த்துக்கள்.

க ரா said...

எப்படி. இப்படில்லாம். செம ஆராய்ச்சி பன்னிருக்கீங்க.

சுசி said...

சீக்கிரம் பார்ட் டூ ப்ளீஸ்..

Menaga Sathia said...

ha ha kalakal....

ஹுஸைனம்மா said...

எப்டிங்க இப்டிலாம்!!??

எதுக்கும் நாஸாவில உங்கப் பதிவை வாசிக்கச் சொல்லுங்க, அள்ளிப் போட்டுட்டு போயிடுவாங்க!! உங்களத்தான்!! ஆராய்ச்சி விஞ்ஞானி வேலைக்குத்தான்!!

:-)))) உருப்படியான ஆராய்ச்சிதான்!!

ராமலக்ஷ்மி said...

சில பதில்கள் குபீர் சிரிப்பு வகை:))!

சுவாரஸ்யமான பதிவு.

Prasanna said...

மைண்ட்ல வச்சிக்கறேன்.. அப்புறம் யூஸ் பண்றேன்.. ஆராய்ச்சி கட்டுரைக்கு நன்றி..

Sabarinathan Arthanari said...

// உங்கள் கணவரிடம் பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?

2 . தன் மனைவி சுதந்தரத்தில் தலையிடாமல் இருப்பது.

4 . தன் மனைவியுடன் கலந்து பேசி விட்டு, எந்த முடிவையும் எடுப்பது. //

இதுக்கு ஆந்திராவில் கொத்தடிமையா போகலாம் போலிருக்கே ;) ஆண்டவா காப்பாத்து :))

Romeoboy said...

பாதிக்கே ஒரு பதிவா !!! .... கேள்விகள் மற்றும் பதில்கள் Super..

அன்புடன் நான் said...

இன்னும புரிஞ்சி நடந்துக்க வேண்டியதுதான்....

movithan said...

செம நையாண்டி.

படங்கள் சூப்பர்.

GEETHA ACHAL said...

ஆஹா...சித்ரா...அருமையாக பதில் எழுதி இருக்கின்றிங்க...கலக்கல்...எனக்கு எல்லா பதில்களும் மிகவும் பிடிச்சு இருக்கு.....

VELU.G said...

ஆஹா மேட்டர் superஆ போகும் போல இருக்குதே

Paleo God said...

கேள்வி கேட்ட உங்க வாசகர்கள் எல்லாருமே பயங்கரமா இருக்காங்களே!! :))

தாராபுரத்தான் said...

இந்த இடுக்கையின் வாயிலாக உன் தன்னம்பிக்கை.. தைரியம்.. இந்த பதிவு உலகத்தில் நீ வைத்திருக்கும் நம்பிக்கை..வெளிப்படுகிறது மகளே..

vasu balaji said...

இப்புடியெல்லாமா யோசிக்கிறாவ? :))

எப்பூடி.. said...

உங்கள் ஆராட்சிப்பணி தொடரட்டும் , வாழ்த்துக்கள்.

பத்மா said...

நல்ல ஆய்வு சித்ரா
hilarious

சிநேகிதன் அக்பர் said...

டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

Pavithra Srihari said...

Hahaha.... super

Pavithra Srihari said...

Hahaha.... super

ஜெயந்தி said...

//பெண் மனதில் - பெண் கொண்டுள்ள attitude பல வகைப்படும். கீழ் கண்ட பதில்களில் இருந்து நீங்கள் தெரிந்து/புரிந்து கொள்ளலாம். அதில், நீங்கள் எந்த வகை பெண் - girlfriend/wife/friend - உடன் டீல் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து, பதிலை சாமர்த்தியமாக செலக்ட் செய்து கொள்ளவும். தவறான பதிலுடன் தவறான வகை மனதுள்ள பெண்ணுடன் அணுகினால், மக்கா - உங்க முதுகில "கெட்டி மேளம்" தான்..... இதற்கு கம்பெனி பொறுப்பு ஆகாது. அதனால், உங்கள் மண வாழ்க்கையில் - காதல் வாழ்க்கையில் - வரும் "சுனாமி"களுக்கும் இந்த
வெட்டி பேச்சு "மன்னார் அண்ட் கம்பெனி" பொறுப்பு எடுக்காது.//
எப்படியெல்லாம் தப்பிச்சுக்கறாங்கப்பா.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Chitra... Very niceeeeee...!!

எல்லா பதில்களையும் நீங்க தொகுத்து வழங்கிய விதம் டாப்பு...!!
கலக்கலா போகுது.. அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்.. :D :D :D

(Ennamaaaa think panrainynga...)

பனித்துளி சங்கர் said...

//3 . உங்கள் கணவரிடம் பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?
ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது //

ஆஹா இங்கும் சினிமாவா ! புகைப்படங்கள் எல்லாம் புதுமைதான்

Jayanthy Kumaran said...

Very innovative post Chitra..Enjoyd drooling here.

prince said...

கிட்ட தட்ட 90 % உண்மையான மட்டும் யதார்த்தமான பதில்கள்
...ஆண்களுக்கும், பெண்களுக்குமான புரிந்துகொள்ளுதலை வளர்க்க உதவும் தங்களின் இது போன்ற ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள்!!!

Karthick Chidambaram said...

sema pathivu ...
sirikkavum sinthikkavum ....

வேலன். said...

அருமையான கலக்கலான பதிவு...

வாழ்க வளமுடன்,
வேலன்.

R.Gopi said...

மிக மிக யதார்த்தமான மற்றும் நகைச்சுவை தூவி எழுதப்பட்ட பதிவு...

அதிலும் இது பலே ஜோர் ரகம்...

//3 . உங்கள் கணவரிடம் பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?
ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது //

R.Gopi said...

மிக மிக யதார்த்தமான மற்றும் நகைச்சுவை தூவி எழுதப்பட்ட பதிவு...

அதிலும் இது பலே ஜோர் ரகம்...

//3 . உங்கள் கணவரிடம் பிடித்த முக்கியமான விஷயங்கள் என்ன?
ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது //

ஜெய்லானி said...

எங்கள் சார்பில் கேள்விகள் கேட்ட "கரிசனம்" கந்தசாமி, "அசால்ட்"ஆறுமுகம" பில்ட் அப்" பீட்டரு"அடுத்தாத்து" ஆல்பர்ட"டீசன்ட்டு" தங்கசாமி ஆகியோருக்கு நன்றி. நன்றி. நன்றி.

M. Azard (ADrockz) said...

கலக்கல் பதிவு, வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

ப்ரித்வி ராஜ் மாதிரி சொக்க வைக்கவில்லை என்றாலும், சிம்பு மாதிரி விரல் வித்தை காட்டி அலட்டி கொண்டு, மிரட்டாமல் இருப்பது //

ஹாஹாஹா இது யாரோட கருத்துன்னு மட்டும் சொல்ல முடியுங்களா அம்மணி..:))

மனோ சாமிநாதன் said...

உணர்வுகளின் தொகுப்பு ரொம்பவும் அழகு சித்ரா!

ஸ்ரீராம். said...

வாசகர்களை கேள்வி கேளுங்களேன் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்...!

பித்தனின் வாக்கு said...

All are good and sensitive. nice.

"உழவன்" "Uzhavan" said...

கொஞ்சநஞ்சமில்ல.. ரொம்பவே வெட்டியா இருக்கீங்க :-)

மாதேவி said...

நல்ல சுவாரஸ்யம்.

மா.குருபரன் said...

அருமையான பதிவு வாழ்த்துகள்.