Wednesday, June 23, 2010

பச்ச முளகாய் - அது காரம் இல்லை

 
பச்ச முளகாய் அருமை பெருமை எல்லாம் பற்றி, ஒரு அமெரிக்க நண்பர் சொல்லி கொண்டு இருந்தாங்க.
"அதுல நிறைய விட்டமின்ஸ் (A, E and B groups) இருக்காம்.   மேலும்,  metabolism rate அதிகப்படுத்துமாம்.

முக்கியமா அதில் இருக்கிற capsaicin compounds, கான்செர் ட்ரீட்மென்ட்க்கு உபயோகப்படுத்தப்படுவதாக சொன்னாங்க.  பச்ச முளகாய் காரம் அதிகம் சேர்த்து கொள்ளாத நாடுகளில், கான்செர் ரேட் அதிகமா இருக்குதாம்.  சரியா போச்சு...... அல்சர் அது இதுனு சொல்லி காரம் குறைச்சவங்களுக்கு,  இந்த மிரட்டல் செய்தி எப்படி இருக்கும்?  அவ்வ்வ்வ்வ்வ்....  விஷ முறிவுக்கு, சின்ன வெங்காயம் மாதிரி - கான்செர் முறிவுக்கு பச்ச முளகாய் என்று சொன்னார்.

 http://www.chillies-down-under.com/health-cancer.html

அப்புறம், என்ன நினைத்தாரோ - அவரே, " இதில் வேடிக்கையான(???)  விஷயம் என்னவென்றால், பச்சை மிளகாய் சாப்பிட்டுவிட்டு, அதிகம் காரம் தாங்காமல்,  உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டு சில நிமிடங்களில்,  மாரடைப்பு  காரணமாக  இறந்து போனவர்களும் உண்டு," என்று சொல்லி சிரித்தார்.

 மிளகாய்  சாப்பிட்டாலும் குத்தம் - சாப்பிடவில்லை என்றாலும் குத்தம் .... ம்ம்ம் ....... எப்படி என்றாலும் போற உயிரை, பச்ச முளகாய் பேரை சொல்லி விளையாடினால்  ......  என்ன கொடுமை சார், இது?

இப்போ, நான் பச்சை மிளகாய் சாப்பிடுறதா வேண்டாமா? 

திடீர் என்று நான்தான் இந்தியாவின் ஒரே அமெரிக்க பிரதிநிதி மாதிரி ,  கேட்டார்.

(இது அடிக்கடி எனக்கு நடக்குறது தாங்க......   இந்திய பழக்க வழக்கங்களை பற்றி ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்பாங்க..... அந்த அந்த நேரத்துக்கு தோன்றும் காரண கப்ஸாக்களை,  நானும் சளைக்காமல் சொல்வேன். யாராவது அமெரிக்க ஆளு,  உங்க  கிட்ட இந்தியாவுல அப்படி ஆஹாவாமே ......  இப்படி ஓஹோவாமே என்று கேட்டால், இல்லைன்னு சொல்லி என்னை மாட்டி விட்டுறாதீங்க... நன்றிகள் பல. )

இந்தியாவிலே,  முளகாய்களையும் எலுமிச்சையும் இணைத்து கட்டி, அசுத்த ஆவிகள் (அட, காத்து கருப்பு திருஷ்டி  கண்றாவியை தான் அப்படி சொன்னார்....)    விலகி செல்ல கட்டி விடும் பழக்கம் பற்றி விளக்கம்  கேட்டார்.  எனக்கு உடனே, ஒரு படத்துல,  விவேக் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல,   அஞ்சு கட்டுற தாயத்து காமெடி சீன்  தான் நினைவு வந்தது..... அதையே  "அறிவியல் ஆராய்ச்சி"  ஆதாரமா வச்சு,  என்னவோ விளக்கம் கொடுத்தேன்..... என்ன சொன்னேன் என்று அப்போவே திருப்பி சொல்லச் சொல்லி அவர்  கேட்டு இருந்தால், அங்கேயே "கண்ணை பார் சிரி" மாதிரி நாக்கை தள்ளி கொண்டு நானே பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு,   ஹி ஹி ஹி ஹி னு சிரிச்சு இருந்து இருப்பேன்.  திருஷ்டி போச்சோ என்னவோ, அவர் அங்கே இருந்து அப்போவே ஓடி போய் இருந்துருப்பார்..... ஹூம்......

அப்புறம், நம்ம நாட்டுல உள்ள ஒரு நியூஸ்  எடுத்து விட்டார் பாருங்க...............

ஏப்ரல் 2009, உலகத்திலேயே காரமான பச்ச முளகாய் வெரைட்டில 51 எண்ணிக்கை சாப்பிட்டு விட்டு,  Guinness Book of Records  வைத்து இருப்பது யார் தெரியுமா?  26 வயது,  அஸ்ஸாம் மாநிலத்து பச்சை "முளகாய்" கிளி:  திருமதி.அனந்திதா தத்தா  தான்.


Bhut Jolokia என்கிற மிளகாய் தான் உலகத்திலேயே அதிகம் காரமான மிளகாய்.  ஜோலோக்கியா தான்  கின்னஸ் ரெகார்ட் ஹோல்டர்.    அந்த மிளகாயில் உள்ள ஒரு  சின்ன வெள்ளை விதை மட்டும் சாப்பிட்டாலே, ஐந்து மணி நேரத்துக்கு வாய் எரியுமாம் - கண்ணில் நீர் வந்து கொண்டே இருக்குமாம் - மூக்கு எரிச்சல் வருமாம். அப்போ ஒரு முழு மிளகாய் சாப்பிட்டால், என்ன ஆகும் என்று நினைத்து கொள்ளுங்கள்....

இதுல அனந்திதாவுக்கு ஒரு வருத்தம் - practice பண்ணும் போது அறுபது மிளகாய் வரை சாப்பிட்டு விட்டார்களாம்.... இங்கே அத்தனை சாப்பிட முடியாம போய்ட்டோமேனு......  என்னங்க, உங்களுக்கே டூ மச் - nine மச்சா தெரியல.போதாதற்கு,  கொஞ்சம் மிளகாய்கள் எடுத்து கண்ணில் தேய்த்து காட்டினார்களாம்..... அம்மாடி....... !!!
கீழ் கண்ட லிங்க் கிளிக் செய்து முழு செய்தி வாசித்து கொள்ளவும்:
http://www.dailymail.co.uk/news/worldnews/article-1169045/Woman-gobbles-51-worlds-hottest-chillies--rubs-25-eyes-Gordon-Ramsay-watches-horror.html

                                        
ஆமாம் சித்ரா,   மிளகாய் பத்தி சொல்லி இருக்கியே,  என்ன மேட்டர்னு கேக்குறீங்களா?

என் குடும்பத்துடன் ஒரு mexican restaurant போய் இருந்தேன்.  அங்கே டிவியில்,  SOCCER மேட்ச் ஒளி பரப்பாகி கொண்டு இருந்தது......... அங்கே  வேலை செய்து  கொண்டு இருந்தவர்களும் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களில் பலரும்,   சவுத் அமெரிக்கா நாடுகளில்  இருந்து வந்தவர்கள்.  ஆளாளுக்கு Brazil, Argentina என்று சப்போர்ட் செய்து விவாதித்து  கொண்டு இருந்தார்கள்.  அவர்களுடன் சேர்ந்து நானும் என் கணவரும் , ஏதோ ஆர்வ கோளாறில் மேட்ச் பார்க்க ஆரம்பித்து கோல் போடும் போது சத்தம் போட்டோம்.  நம்ம டீமுக்கு இப்படி சப்போர்ட்  என்று அவங்களுக்கு ஒரே சந்தோஷம்.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்போ, ஒருத்தருக்கு ஒரு டவுட்....... நம்ம டீமுக்கே இந்த கரகோஷம்...... அப்போ,  இந்தியா டீம்  வந்து இருந்தால்....... அப்படியே இந்தியா டீம்  பற்றி கேட்க ஆராம்பித்து விட்டார்கள்....... இத்தனை மக்கள் இருக்கும் நாட்டில்,    ஏன் சரியான டீம் வரவில்லை என்று கேள்வி வேற...... உப்பு சப்பு இல்லாத பதில் சொல்லி சமாளித்தேன். 

ஆனாலும் மனசுல ஒரே பீலிங்க்ஸ்.......  இனி,  restaurant போனா, சாப்பிட்டோமா வந்தோமா என்று இருக்கணும்.  அப்புறம் அமெரிக்க நண்பர்,   காரசாரமான இந்த செய்தி   சொன்னதும், ,   எனக்கு சந்தோஷம் கொடுத்தது.

இல்லாததை நினைச்சு புலம்புறதை விட,  இருக்கிறதை வச்சு பெருமை பட்டுக்க வேண்டியதுதான்.  எத்தனையோ விளையாட்டு டீம்களை விட,    தனி ஆளாய் சாதனை படைத்து இருக்கும் திருமதி.அனந்திதாவுக்கு  - ஒரு ஓ போடுங்க!
 
 அவுட் ஆகாமல், மிளகாய் சாப்பிடுவதில் அரை சதம் அடித்த அம்மணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

125 comments:

Asiya Omar said...

பச்ச முளகாய் - மிளகாய் எப்ப முளகாய்ன்னு ஆச்சு.செய்தி காரசாரமாக நல்ல ருசியாத்தான் இருக்கு.நானும் இரண்டு நாள் முன்னாடி என் மகனும் அவரும் ஃபுட்பால் ரசிச்சு பார்த்து கிட்டு இருந்தாங்க,அந்த நேரத்தில் இந்தியாவில் ஃபுட் பால் டீம் கிடையாதான்னு என் கணவர் கிட்ட கேட்டப்போ அவர் அதை சமாளிக்க பட்டபாடு மிளகாய் தின்ன மாதிரி என் கண்ணில் தண்ணி வந்து விட்டது.

பின்னோக்கி said...

காரமான விஷயத்தைப் பற்றி சுவையான தகவல்கள்

சாருஸ்ரீராஜ் said...

மிளகாய்ல இத்தனை விசயம் இருக்கா ... எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு , வழக்கம் போல நல்லா எழுதி இருக்கீங்க.

நாடோடி said...

கார‌சார‌மான‌ ப‌திவுனு சொல்லுவாங்க‌ளே அது இது தானா?...ஹா..ஹா..

ராம்ஜி_யாஹூ said...

By this time, americans must be very well aware of Chilli because america is now filled with more Telugu people than Tamilnadu ppl.

Karthick Chidambaram said...

கார‌சார‌மான‌ ப‌திவு ....! Indiyaavil naanga yaarayum illa ... yethayum kooda odhaikka maattom. Naanga romba mariyaadha therinjavangannu unmaya sollavendiyathuthanenga !

வால்பையன் said...

மிளகாய் இந்தியாவை பூர்வீகமாக கொண்டதில்லை!

Anonymous said...

ஏம்மா நானே வயிறு எறியுதுன்னு புலம்பிட்டு இருக்கேன்! நீங்கவேற் இப்படியா?

SUFFIX said...

சிவப்பு மிளகாயை விட பச்சை மிளகாய் தான் நல்லதுன்னு சொல்லுவாங்க. சொன்ன விதம் அருமை!!

SUFFIX said...

//இந்திய பழக்க வழக்கங்களை பற்றி ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்பாங்க//

சீக்கிரமே இந்தியன் அம்பாஸிடர் ஆயிடுவீங்க :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி பச்சை மிளாகாய் எந்த கலர்ல இருக்கும்? கிளிப் பச்சை, லைட் பச்சை, டார்க் பச்சை?

அமுதா கிருஷ்ணா said...

மிளகாய் விலை இப்ப இங்கு கூடி போச்சு சித்ரா...

Ahamed irshad said...

3rd Photo ok ok...

Santhappanசாந்தப்பன் said...

அதிகமாகவும் சேர்க்கக் கூடாது, சேர்க்காமலும் இருக்கக் கூடாதுன்னு தான், நம்ம ஆளுங்க சட்னில அளவா சேர்த்து சாப்டுறாங்க! #இஎஇ

இந்தியாவில் ஃபுட்பால் டீம் இருக்கு. பூட்டியா பத்தி கேள்விபட்டதில்லையா. நாம இப்போதான் தெற்காசிய அளவில் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறோம்!

நட்புடன் ஜமால் said...

மிரட்டுறாங்களே ...

பச்சை மிளகாயையை விட சிவப்பே நல்லது - நார் சத்து அதிகம்

பச்சை மிளகாய்/அறைத்த பொடி - அதிகம் உணவில் சேர்ப்பவர்களுக்கு ஒபிஸிட்டி வரும் வாய்ப்பு அதிகம் ...

Madhavan Srinivasagopalan said...

//இல்லாததை நினைச்சு புலம்புறதை விட, இருக்கிறதை வச்சு பெருமை பட்டுக்க வேண்டியதுதான். எத்தனையோ விளையாட்டு டீம்களை விட, தனி ஆளாய் சாதனை படைத்து இருக்கும் திருமதி.அனந்திதாவுக்கு - ஒரு ஓ போடுங்க!

அவுட் ஆகாமல், மிளகாய் சாப்பிடுவதில் அரை சதம் அடித்த அம்மணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!//

HA HA HA.. well said.

ஹேமா said...

காரமான விஷயத்தைக்கூட சித்ராவால்தான் சுவாரஸ்யமாய்ச் சொல்ல முடிகிறது !

சாந்தி மாரியப்பன் said...

அனந்திதா மிளகாய் சாப்பிடுறத பாத்தாலே நம்ம கண்ணுல தண்ணி வருதே.. சாப்பிட்ட அவங்களுக்கு ஒண்ணும் ஆகலையாமா?.!!!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சுவையான காரசாரமான பதிவு தான். இப்போ நான் மிளகாய் சாப்பிடவா? வேண்டாமா? சும்மா இருந்தவர்களை இப்படி ஒரு குண்டைப் போட்டுக் கலக்கி விட்டிருக்கிராயே சித்ரா? நியாயமா? ஹ ஹ ஹா

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுவையான தகவல்கள்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அந்த மிளகாயில் உள்ள ஒரு சின்ன வெள்ளை விதை மட்டும் சாப்பிட்டாலே, ஐந்து மணி நேரத்துக்கு வாய் எரியுமாம் - கண்ணில் நீர் வந்து கொண்டே இருக்குமாம் - மூக்கு எரிச்சல் வருமாம். அப்போ ஒரு முழு மிளகாய் சாப்பிட்டால், என்ன ஆகும் என்று நினைத்து கொள்ளுங்கள்.... //

இப்ப‌டி சொல்லிட்டு த‌லைப்பு ஏன் அப்ப‌டி வ‌ச்சீங்க‌!

Anonymous said...

ஆமா, ஜலபினோவும் மிளகாய்தானே

Anonymous said...

சித்ரா நல்லா இருக்கு பா இந்த காரமான பதிவு.... அச்சச்சோ மிளகாய் நான் சாப்பிட்ட மாதிரி ஒரு பீலிங்க்ஸ் ...

திருமதி அனந்திதாவுக்கு ஒரு பெரிய ஓஓ ஓஓஓ

Anonymous said...

சித்ரா profile படம் சுபேரா இருக்கு ...

dheva said...

ஒரு பச்சை மிளகாய்க்கு பின் இவ்வளவு மேட்டரா...! சித்ரா கண்ணுல தண்ணி வருது சித்ரா...! என்ன பச்ச மிளகாய்தான கொஞ்சம் கொசுறு கொடுங்கன்னு கேட்டவங்க எல்லாம் மாரடைப்புல ஷாக் ஆகியிருக்காங்கலாம்...உங்க பதிவ படிச்சுட்டு....

மொக்க போடுறவன் எல்லாம் நல்ல எழுதுறேன்னு சொல்லிகிற காலத்துல நல்ல மேட்டர சொல்லிட்டு மொக்கையா எழுதினேன்னு சொல்ற ஒரே ஆளு நீங்கதான்....

வேற யாராச்சும் ஏதாச்சும் சொன்னா

அது நியூஷ்....

நீங்க சொன்னா...

அது மாஸ்.....(அப்பாடி சொல்லிட்டோம்ல...)

அடுத்த தடவை பர்ஸேஸ் பன்ணும் போதும் சமைக்கும் போதும் பச்சை மிளகாயை மறந்துறாதீங்க மகா ஜனங்களே....புட்பால் மேட்ச விட பச்ச மிளகா ரொம்ப முக்கியம் (இதானே சொல்ல வந்தீங்க...லாஸ்ட் பாராவில...ஹா...ஹா....ஹா...)

எலக்சன்ல நின்னா.... எங்கள் சின்னம்....பச்சை மிளகாய்...! எங்கள் ஓட்டு பச்சை மிளகாய்க்கே...!

வெட்டிப் பேச்சு கூட்டம் வெவரமா ஆட்சியை பிடிச்சுடும் போல இருக்கே....!

(ஏய்யா...காமெண்ட் போட வந்தா போட்டமா போனமானு இரு...என் பிளாக்ல வந்து நீ ஒரு கட்டுரை எழுதுறியா..என்று அரிவளோடு சித்ரா வர்றாங்க..... நான் எஸ்கேப்...........)

வாழ்த்துக்கள் சித்ரா...வழக்கப்படி சிக்ஸர்தான்...!

க.பாலாசி said...

நாங்கள்லாம் வெங்காயத்துக்கே கொடங்கொடமா கண்ணீர் சிந்துற ஆட்கள்... இதுல எங்கப்போயி மொளகாயெல்லாம்..........

S Maharajan said...

கார‌சார‌மான‌ ப‌திவு!

சசிகுமார் said...

பச்சை மிளகாய் நல்லதா நல்ல செய்தி சொல்லிருக்கீங்க அம்மணி.

சசிகுமார் said...

படத்துல அவுங்க கண்ணை மூடிக்கிட்டு தான் தேய்க்கிறாங்க அதனால இது கள்ள ஆட்டம். நான் ஒதுக்க மாட்டேன். ஹி ஹி ஹி

vasu balaji said...

டெம்ப்ளேட்டுக்கு மேட்சிங் டைட்டிலா:)

Vidhya Chandrasekaran said...

காரசாரமான பதிவு..

goma said...

”ஆ...ஐய்யோ...அம்மா...ஊ..ஏ..”
இதெல்லாம் மிளகாய் சாப்பிட்ட அம்மணிக்கு நான் போடும் ஓ!

Mythili (மைதிலி ) said...

Milagaai Mulagaai aahidichchu... naan ninaikkiren avvalavu kaaramaana vivagaaram discuss panninathula thavariducchchunnu. Enakkum kavalai thaan indian team football la illayennu. திருமதி.அனந்திதா தத்தா romba thanguvaanga polirukku. Namma indiya pengal azhuthu azhuthu kanneer vidaraanga ivanga paravaayillai azhaamale kanneer viduraanga. Puthiya thagavalgal...good.

அம்பிகா said...

காரசாரமான பதிவு; நல்ல பகிர்வு.

தமிழ் உதயம் said...

ஒண்ணு தெரியுது. restaurant க்கு நிறைய போவீங்க போல் இருக்கு.

Hai said...

ஒரு செய்தி அந்த மிளகாய வச்சு ராணுவத்துக்கு கூட்டத்தைக் கலைக்கிற கண்ணீர் புகைகுண்டு மாதிரி என்னமோ ஆராய்ச்சியெல்லாம் போயிட்டிருக்குன்னு படிச்சேன். இந்த அம்மா என்னடான்னா அதைவிட பெரிய குண்டா போட்டுட்டாங்க.

GEETHA ACHAL said...

ஆஹா..பச்சைமிளகாயினை சாப்பிடுவதா...ஒன்று அல்லது இரண்டு என்றால் பரவாயில்லை...இவங்க...சூப்பர்ப்...வாழ்த்துகள்....

எப்பூடி.. said...

பச்சைமிளகாய் வாழ்க :-)

ராமலக்ஷ்மி said...

அமைதிச் சாரல் சொன்னதே. உஸ்ஸுன்னு இருக்கே படத்தைப் பார்த்தாலே:)!

திருவாரூர் சரவணா said...

காரமான மிளகாயை சாப்பிடுறது ஸ்வீட்டான ஆள் மாதிரி தெரியுது.

எதுக்கும் நான் கம்ப்யூட்டரை விட்டு தள்ளிப் போய்டுறேன். காரத்துல என் கண்ணும் எரியுது.

க ரா said...

ரொம்ப காரமான பதிவுங்க.

எட்வின் said...

பச்சமிளகாய்ல இவ்ளோ மேட்டரா... ம்ம்ம். அன்னைக்கு பழைய சாதமும், பச்ச மிளகாயும் இருந்தாலே போதும். ஆனா இன்னைக்கு எப்பிடி இருக்கு வாழ்க்கை. ம்ம்ம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

இத்தனமிளகாய் சாப்பிட்டு சாதனை படைத்திருக்காங்களே திருமதி.அனந்திதா தத்தா மேடம் வாழ்த்துகள் மேடம்.

ஆமா சித்ரா, சிவாஜில ரஜினிசார் மிளகாய் சாப்பிடுற சீனை விட்டுட்டீங்களே..

///திடீர் என்று நான்தான் இந்தியாவின் ஒரே அமெரிக்க பிரதிநிதி மாதிரி , கேட்டார்.

(இது அடிக்கடி எனக்கு நடக்குறது தாங்க...... இந்திய பழக்க வழக்கங்களை பற்றி ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்பாங்க..... அந்த அந்த நேரத்துக்கு தோன்றும் காரண கப்ஸாக்களை, நானும் சளைக்காமல் சொல்வேன். ///

இந்திய அமெரிக்க பிரதிநிதி ஆனதுக்கு வாழ்த்துகள். ஆனா

Vishy said...

பச்சை மிளகாய் காரம் பயங்கரம்னா.. அதோட “பின்” விளைவுகள் அதை விட பயங்கரமா இருக்கும்..

India Soccer team இப்போ மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுகிட்டே world cup பார்த்துக்கிட்டு இருப்பாங்க.. India விளையாண்டா அங்க உதைபடறது பந்து அல்ல.. நம்ம Team தான்..

There are quite a blogs on the same topic - this one is pretty comprehensive
http://in.yfittopostblog.com/2010/06/14/barefoot-in-bengal-and-other-stories/

மங்குனி அமைச்சர் said...

ஆனாலும் மனசுல ஒரே பீலிங்க்ஸ்....... இனி, restaurant போனா, சாப்பிட்டோமா வந்தோமா என்று இருக்கணும். ///


பில்லு , கிள்ளு எதுவும் பே பண்ணிடலையே ????

Jayanthy Kumaran said...

Dear Chitra,
Very lovely post from you yet again...love to visit here often.
Keep on rocking...!

Menaga Sathia said...

சுவராஸ்யமான காரசார பதிவு!!

VELU.G said...

ஆஹா மிளகாய்ல இத்தனை விஷயமா நல்லாயிருக்கே

Anonymous said...

சித்ரா மேடம் நான் இந்த மிளகாய் பத்தி 2 கமெண்ட் போட்டேன் ஆனா நீங்க அது accept பண்ணலே மாதிரி தெரியறது ஏன் பா நான் எதா தப்பா எழுதிட்டேனா ???

சிநேகிதன் அக்பர் said...

செம காரம்

நசரேயன் said...

நல்ல காரசாரம்

தெய்வசுகந்தி said...

காரமான விஷயத்தை சுவாரசியமா சொல்லியிருக்கீன்ங்க சித்ரா!!!!!

//இந்திய பழக்க வழக்கங்களை பற்றி ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்பாங்க..... அந்த அந்த நேரத்துக்கு தோன்றும் காரண கப்ஸாக்களை, நானும் சளைக்காமல் சொல்வேன்//
நீங்கதானா அது????? :-)

Riyas said...

அடி ஆத்தாடி.. எப்புடி அவ்வளவு மிளகாய் சாப்பிட்டாங்க..

அவங்க சாப்பிட்டது ஒரு வேள இனிப்பா இருந்துருக்குமோ..

Chitra said...

///பச்ச முளகாய் - மிளகாய் எப்ப முளகாய்ன்னு ஆச்சு.///


......"பச்ச முளகாய் அது காரமில்ல" .... is a song from the movie, Mr.Bharath. :-)

Chitra said...

Thank you, பின்னோக்கி சார்.

........ மிக்க நன்றி, சாருஸ்ரீராஜ் மேடம்.

Chitra said...

நாடோடி said...

கார‌சார‌மான‌ ப‌திவுனு சொல்லுவாங்க‌ளே அது இது தானா?...ஹா..ஹா..


..... உப்பு சப்பு இல்லாத வெட்டி பேச்சு இல்லைன்னு தான் ஒரு symbolic shot! ha,ha,ha,ha,ha....

Chitra said...

ராம்ஜி_யாஹூ said...

By this time, americans must be very well aware of Chilli because america is now filled with more Telugu people than Tamilnadu ppl.


....... ha,ha,ha,ha,..... Few friends from Andhra refer :USA as United States of Andhra. ha,ha,ha,ha,ha...

Chitra said...

Karthick Chidambaram said...

கார‌சார‌மான‌ ப‌திவு ....! Indiyaavil naanga yaarayum illa ... yethayum kooda odhaikka maattom. Naanga romba mariyaadha therinjavangannu unmaya sollavendiyathuthanenga !


..... what an idea!!!! thank you! ha,ha,ha,ha,ha...

Chitra said...

வால்பையன் said...

மிளகாய் இந்தியாவை பூர்வீகமாக கொண்டதில்லை!


..... The hottest pepper in the worl, Bhut Jolokia is from the Assam region.

http://en.wikipedia.org/wiki/Bhut_Jolokia_pepper

:-)

Chitra said...

திரவிய நடராஜன் said...

ஏம்மா நானே வயிறு எறியுதுன்னு புலம்பிட்டு இருக்கேன்! நீங்கவேற் இப்படியா?


...... I am so sorry, Sir.

Chitra said...

SUFFIX said...

//இந்திய பழக்க வழக்கங்களை பற்றி ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்பாங்க//

சீக்கிரமே இந்தியன் அம்பாஸிடர் ஆயிடுவீங்க :)


...... அந்த வேலை வேறயா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Chitra said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி பச்சை மிளாகாய் எந்த கலர்ல இருக்கும்? கிளிப் பச்சை, லைட் பச்சை, டார்க் பச்சை?...... இங்கே எல்லா பச்சை நிறங்களிலும் கிடைக்கின்றன....

Chitra said...

அமுதா கிருஷ்ணா said...

மிளகாய் விலை இப்ப இங்கு கூடி போச்சு சித்ரா...


...... அதிலேயும் Guinness ரெகார்ட் ட்ரை பண்றாங்க போல.

Chitra said...

அஹமது இர்ஷாத் said...

3rd Photo ok ok...

...Thank you.

Chitra said...

சாந்தப்பன் said...

அதிகமாகவும் சேர்க்கக் கூடாது, சேர்க்காமலும் இருக்கக் கூடாதுன்னு தான், நம்ம ஆளுங்க சட்னில அளவா சேர்த்து சாப்டுறாங்க! #இஎஇ

..........soopparu!


இந்தியாவில் ஃபுட்பால் டீம் இருக்கு. பூட்டியா பத்தி கேள்விபட்டதில்லையா. நாம இப்போதான் தெற்காசிய அளவில் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறோம்!

......... I think it is little bit late. அவ்வவ்வ்வ்வ்.....

Chitra said...

நட்புடன் ஜமால் said...


பச்சை மிளகாய்/அறைத்த பொடி - அதிகம் உணவில் சேர்ப்பவர்களுக்கு ஒபிஸிட்டி வரும் வாய்ப்பு அதிகம் ...

........... I don't think so. I heard it other way round.

Benefits of red chilli powder:

* Safe and effective analgesic agent in the management of arthritis pain, herpes zoster-related pain, diabetic neuropathy, post mastectomy pain, and headaches
* Hope of weight loss for people suffering from obesity
* To provide symptomatic relief from rhinitis

http://www.neelagrotech.com/red-chilli-powder.htm

Chitra said...

Thank you, Madhavan!

Thank you, Hema!

Chitra said...

அமைதிச்சாரல் said...

அனந்திதா மிளகாய் சாப்பிடுறத பாத்தாலே நம்ம கண்ணுல தண்ணி வருதே.. சாப்பிட்ட அவங்களுக்கு ஒண்ணும் ஆகலையாமா?.!!!!!


...... நான் கொடுத்து இருக்கிற நியூஸ் லிங்க் பாருங்க.... ஒண்ணும் ஆகாம, நல்லா இருக்காங்க.... :-)

Chitra said...

ஜெஸ்வந்தி said...

சுவையான காரசாரமான பதிவு தான். இப்போ நான் மிளகாய் சாப்பிடவா? வேண்டாமா? சும்மா இருந்தவர்களை இப்படி ஒரு குண்டைப் போட்டுக் கலக்கி விட்டிருக்கிராயே சித்ரா? நியாயமா? ஹ ஹ ஹா


...... ஏதோ என்னால முடிஞ்சது. ha,ha,ha,ha,ha...

Chitra said...

Thank you, T.V.R. Sir!

Chitra said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அந்த மிளகாயில் உள்ள ஒரு சின்ன வெள்ளை விதை மட்டும் சாப்பிட்டாலே, ஐந்து மணி நேரத்துக்கு வாய் எரியுமாம் - கண்ணில் நீர் வந்து கொண்டே இருக்குமாம் - மூக்கு எரிச்சல் வருமாம். அப்போ ஒரு முழு மிளகாய் சாப்பிட்டால், என்ன ஆகும் என்று நினைத்து கொள்ளுங்கள்.... //

இப்ப‌டி சொல்லிட்டு த‌லைப்பு ஏன் அப்ப‌டி வ‌ச்சீங்க‌!


....... திருமதி.அனந்திதா மேடம்க்கு காரமா இல்லைதானே?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பச்ச முளகா சாப்பிடுற அக்கா (!) கட்டி இருக்கிற சாரி நல்லா இருக்கே.
ஸ்ஸ்ஸ், இருங்க கண்ணா தொடச்சிகிட்டு வந்திடுறேன்.

Chitra said...

சின்ன அம்மிணி said...

ஆமா, ஜலபினோவும் மிளகாய்தானே

..... Jolokia is 1,001,304 Scoville heat units - jalepeno is about 4,500 Scoville units.

http://www.thescarms.com/hotstuff/pepperfacts.htm

Chitra said...

sandhya said...

சித்ரா profile படம் சுபேரா இருக்கு ...

....Thank you very much, Sandhya!
:-)

Chitra said...

dheva said:

அடுத்த தடவை பர்ஸேஸ் பன்ணும் போதும் சமைக்கும் போதும் பச்சை மிளகாயை மறந்துறாதீங்க மகா ஜனங்களே....புட்பால் மேட்ச விட பச்ச மிளகா ரொம்ப முக்கியம் (இதானே சொல்ல வந்தீங்க...லாஸ்ட் பாராவில...ஹா...ஹா....ஹா...)

..........

...... அப்படியும் சொல்லலாம் போல , தேவா..... ஆனால், இந்திய soccer டீம் உலக அளவில் இந்த வருடம் வரை பெரிய அளவில் பெயர் வாங்கவில்லையே (அல்லது பெயர் வாங்கும் விதம் ஊக்கப் படுத்தப்படவில்லையே) என்ற "எரிச்சலும்" இருக்கலாமே?

Chitra said...

Thank you, S.Maharajan!Thank you, க.பாலாசி sir!Thank you, Sasi!Thank you, Bala Sir!Thank you, Vidhya!Thank you, Goma Madam!

Chitra said...

தமிழ் உதயம் said...

ஒண்ணு தெரியுது. restaurant க்கு நிறைய போவீங்க போல் இருக்கு.


...... Twice in a week (atleast). We like to try different cuisine. :-)

Chitra said...

Mythili Krishnan said:

Enakkum kavalai thaan indian team football la illayennu.


..... same feelings, ma!

Chitra said...

Thank you, Ambika!

Chitra said...

அரைகிறுக்கன் said...

ஒரு செய்தி அந்த மிளகாய வச்சு ராணுவத்துக்கு கூட்டத்தைக் கலைக்கிற கண்ணீர் புகைகுண்டு மாதிரி என்னமோ ஆராய்ச்சியெல்லாம் போயிட்டிருக்குன்னு படிச்சேன். இந்த அம்மா என்னடான்னா அதைவிட பெரிய குண்டா போட்டுட்டாங்க.


.... Good challenge for the military research center. :-)

ராஜ நடராஜன் said...

//இப்போ, நான் பச்சை மிளகாய் சாப்பிடுறதா வேண்டாமா? //

விலாசம் சொல்லுங்க!அம்மணிகிட்ட சொல்லி பார்சல் அனுப்பி வைக்கிறேன்:)

Chitra said...

Thank you, Geetha Achal!


Thank you, எப்பூடி sir!


Thank you, ராமலக்ஷ்மி akka!


Thank you, திருவாரூரிலிருந்து சரவணன்!


Thank you, Ramasamy Sir!

Chitra said...

எட்வின் said...

பச்சமிளகாய்ல இவ்ளோ மேட்டரா... ம்ம்ம். அன்னைக்கு பழைய சாதமும், பச்ச மிளகாயும் இருந்தாலே போதும். ஆனா இன்னைக்கு எப்பிடி இருக்கு வாழ்க்கை. ம்ம்ம்


...... அதான், இந்த அளவுக்கு நோய்கள் முந்தி வராம இருந்திருக்குமோ?

Chitra said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இத்தனமிளகாய் சாப்பிட்டு சாதனை படைத்திருக்காங்களே திருமதி.அனந்திதா தத்தா மேடம் வாழ்த்துகள் மேடம்.

ஆமா சித்ரா, சிவாஜில ரஜினிசார் மிளகாய் சாப்பிடுற சீனை விட்டுட்டீங்களே..


...... Super comedy scene! How can I forget! soccer கூட மிக்ஸ் பண்ண வேண்டாமே என்று.... ! :-)

Praveenkumar said...

//தனி ஆளாய் சாதனை படைத்து இருக்கும் திருமதி.அனந்திதாவுக்கு - ஒரு ஓ போடுங்க! //

ஓ..! ஓ..! நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான்..! பதிவும் செம காரசாரமா.. இருக்கு..!

ராஜ நடராஜன் said...

//ஆளாளுக்கு Brazil, Argentina என்று சப்போர்ட் செய்து விவாதித்து கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் என் கணவரும் , ஏதோ ஆர்வ கோளாறில் மேட்ச் பார்க்க ஆரம்பித்து கோல் போடும் போது சத்தம் போட்டோம். நம்ம டீமுக்கு இப்படி சப்போர்ட் என்று அவங்களுக்கு ஒரே சந்தோஷம்.//

அய்!நம்ம சப்ஜெக்ட்!உய்ய்ய்ய்ய்ய்ய்!

Chitra said...

Vishy said...

பச்சை மிளகாய் காரம் பயங்கரம்னா.. அதோட “பின்” விளைவுகள் அதை விட பயங்கரமா இருக்கும்..

India Soccer team இப்போ மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுகிட்டே world cup பார்த்துக்கிட்டு இருப்பாங்க.. India விளையாண்டா அங்க உதைபடறது பந்து அல்ல.. நம்ம Team தான்......ha,ha,ha,ha,ha,ha..... "கலக்கிட்டீங்க" ....என்ன ஒரு "காரமான" கமென்ட்!

ராஜ நடராஜன் said...

//நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்போ, ஒருத்தருக்கு ஒரு டவுட்....... நம்ம டீமுக்கே இந்த கரகோஷம்...... அப்போ, இந்தியா டீம் வந்து இருந்தால்....... அப்படியே இந்தியா டீம் பற்றி கேட்க ஆராம்பித்து விட்டார்கள்....... இத்தனை மக்கள் இருக்கும் நாட்டில், ஏன் சரியான டீம் வரவில்லை என்று கேள்வி வேற...... உப்பு சப்பு இல்லாத பதில் சொல்லி சமாளித்தேன். //

கடைப்பக்கம் வந்துட்டுப் போங்க!

Chitra said...

மங்குனி அமைச்சர் said...

ஆனாலும் மனசுல ஒரே பீலிங்க்ஸ்....... இனி, restaurant போனா, சாப்பிட்டோமா வந்தோமா என்று இருக்கணும். ///


பில்லு , கிள்ளு எதுவும் பே பண்ணிடலையே ????


..... பில்லு பே பண்ணாம வந்தா, செக்யூரிட்டி கேமரால எடுத்த போட்டோ - வீடியோ வோட நம்மை தேடி வந்து "உதைப்பாங்க" .......!

ராஜ நடராஜன் said...

//மிளகாய் இந்தியாவை பூர்வீகமாக கொண்டதில்லை!//

மொளகா திங்காத ஆளுகளப் பார்த்து போய் சொல்லுங்க.

எந்த மண்னுக்கு எது சொந்தமோ அதுவே அங்கே பூக்கும்!

Chitra said...

Thank you, Jay!


Thank you, Mrs.Menagasathia!


Thank you, Velu.G. Sir!


Thank you, Akbar!


Thank you, நசரேயன்!

ஸாதிகா said...

ஸ்ஸ்ஸ்..ஹப்பா...

Chitra said...

sandhya said...

சித்ரா மேடம் நான் இந்த மிளகாய் பத்தி 2 கமெண்ட் போட்டேன் ஆனா நீங்க அது accept பண்ணலே மாதிரி தெரியறது ஏன் பா நான் எதா தப்பா எழுதிட்டேனா ???


..... இல்லைங்க, Sandhya . நான் தூங்க போயிட்டேன்..... இப்போதான் வந்து பார்த்து publish பண்ணேன்.

Chitra said...

தெய்வசுகந்தி said...

காரமான விஷயத்தை சுவாரசியமா சொல்லியிருக்கீன்ங்க சித்ரா!!!!!

//இந்திய பழக்க வழக்கங்களை பற்றி ஆர்வமாக என்னிடம் கேள்வி கேட்பாங்க..... அந்த அந்த நேரத்துக்கு தோன்றும் காரண கப்ஸாக்களை, நானும் சளைக்காமல் சொல்வேன்//
நீங்கதானா அது????? :-)


...... YESSSS!!!

Chitra said...

Riyas said...

அடி ஆத்தாடி.. எப்புடி அவ்வளவு மிளகாய் சாப்பிட்டாங்க..

அவங்க சாப்பிட்டது ஒரு வேள இனிப்பா இருந்துருக்குமோ..


...... சரியா போச்சு.... உலகத்திலேயே காரமான மிளகாய்ங்க.....

Chitra said...

ராஜ நடராஜன் said...

//இப்போ, நான் பச்சை மிளகாய் சாப்பிடுறதா வேண்டாமா? //

விலாசம் சொல்லுங்க!அம்மணிகிட்ட சொல்லி பார்சல் அனுப்பி வைக்கிறேன்:)

......... ha,ha,ha,ha,ha... No, thank you. I had quite an experience eating Habanero chilli peppers. ha,ha,ha,ha....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மிளகா ரெண்டு எக்ஸ்ட்ராவா நறுக்கினாலே நாளெல்லாம் கை எரியுது....

இதுல அவங்க. கண்ணில வச்சி காட்டுறாங்க... :O :O
முடியலப்பா...!!

நல்ல பகிர்வு சித்ரா..!! :-)))

கடைசியில ரெஸ்டாரன்ட்ல என்ன சாப்டீங்க... மிளகா பஜ்ஜியா?? :D

வருண் said...

ரொம்ப நாளைக்கு முன்னால நானும் என்னவோ பச்சை மிளகாய் பத்தி எழுதினேன்.

http://timeforsomelove.blogspot.com/2009/07/blog-post_14.html

**போதாதற்கு, கொஞ்சம் மிளகாய்கள் எடுத்து கண்ணில் தேய்த்து காட்டினார்களாம்..... அம்மாடி....... !!! ***

ஆனா, இந்த கண்ணிலே எடுத்து தேய்க்கிறதெல்லாம் டூ மச் ங்க!

----------
***அப்படியே இந்தியா டீம் பற்றி கேட்க ஆராம்பித்து விட்டார்கள்....... இத்தனை மக்கள் இருக்கும் நாட்டில், ஏன் சரியான டீம் வரவில்லை என்று கேள்வி வேற.***

இந்தியாவும், இந்தியர்களும் நமக்கு "இதுபோல்"தான் அடிக்கடி "பெருமை" சேர்த்து தர்றாங்க! ஒரு வழியலுடன் வாங்கி கட்டிக்க வேண்டியதுதான்!

I would blame it on Cricket and its fans who are responsible for not letting any other sports to grow! :)

Unknown said...

சுவையான தகவல்கள்.....

ஜெய்லானி said...

@@@நாடோடி--// கார‌சார‌மான‌ ப‌திவுனு சொல்லுவாங்க‌ளே அது இது தானா?... ஹா..ஹா. //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

கும்மாச்சி said...

அது சரி, மிளகாய் வைத்து இவ்வளவு மசாலா அரைக்க முடியுமா, சித்ரா கலக்குங்க.

பனித்துளி சங்கர் said...

ஆஹா இவங்க எவளவு மிளகாய் தின்றாலும் ஒன்றுமே ஆகாத மாதிரியே இருக்காங்க.
இவங்க ரொம்ப நல்லவுங்க போல !

prince said...

நீல நிறத்தில மிளகாய் பார்த்திருக்கீங்களா??

செந்தில்குமார் said...

கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட்டா வந்துட்டேன் எல்லாம்
இந்த வேலை வேலை

ஆனலும் காரம் கொஞ்சம் அதிகம் இந்த பதிவில் சித்ரா...

அருமை அந்த அக்கா அவ்வளவு மிளகாய் சாப்பிட்டுட்டு சும்மா அப்படியே நம்ம ஊரு அதான் ஜயனார் சிலை மாதிரி இருக்கங்களே..

நேசமித்ரன் said...

பச்சை மிளகாய் பத்தி இவ்வளவு செய்தியையும் சுவாரசியமா சொல்றீங்க

நன்றிங்க

Alarmel Mangai said...

பார்த்தாலே கண்ணுல தண்ணி வருதே; அந்த அம்மா இப்படி சாக்லேட்டைச் சாப்பிடுற மாதிரில்லா இருக்கு?

தாராபுரத்தான் said...

கிராமங்களில் சோளக்கூழ்(அம்புளி) என சொல்லுவோம்..அதற்கு பச்சை மிளகாய் கடித்து குடித்தால்....நினைத்தாலே நாக்கிலே எச்சில் ஊறுதல்ல..அதை நினைவு படுத்திவிட்டது உங்கள் பதிவு.

யாசவி said...

முளகாய்ன்ன என்னங்க?

எனக்கு மிளகாய்தான் தெரியும்.

காரசாரமான பதிவு

எல் கே said...

when you are going to break this record???

ஜெயந்த் கிருஷ்ணா said...

காரசாரமான பதிவு..

கே. பி. ஜனா... said...

பச்சை மிளகா நல்ல ஆ காரம், சந்தேகமே இல்லே -- கே.பி ஜனா!

சௌந்தர் said...

காரமான பதிவு

Pandian said...

தாங்க முடியலே!!!பச்சை மிளகா காரம் !!!

சுந்தர்ஜி said...

நானும் ஒரு மிளகா விரும்பி சித்ரா.மிளகாய் நெடி அடிக்குதுன்னு சில பேர் சொல்லும்போது அதோட வாசனை அபாரம்னு சொல்ற ரகம்.மண்டிகள்லேருந்து வரும் காய்ந்த மிளகாய் மணமும் ருசிதான்.மிளகா சமாச்சாரம் போதும்னு நெனைக்கிறேன்.

இப்பத்தான் தெரியும் நீங்களும் பாளையங்கோட்டைதான்னு.நான் செயிண்ட் ஜான்ஸ்லயும் எம்.டி.டி.லயும் படிச்சப்போ பத்து வருஷம் தாமிரபரணித்தண்ணிதான்.அது போல வருமா சித்ரா?

பித்தனின் வாக்கு said...

good article. pidinga arai kilo milakai as a gift

Anonymous said...

நல்லா காரமான பதிவா இருந்தது..
படங்கள் அருமை..
இருங்க கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வரேன்.

Anonymous said...

நல்லா காரமான பதிவா இருந்தது..
படங்கள் அருமை..
இருங்க கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வரேன்.

ஸ்ரீராம். said...

எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ கொண்டு வந்துட்டீங்க.... படத்தைப் பார்த்தாலே கண்ணும் வாயும் எரியுது....எப்படிதான் சாப்டாங்களோ.... எங்க தண்ணி....எங்க தண்ணி...

Thenammai Lakshmanan said...

இத்தனை மக்கள் இருக்கும் நாட்டில், ஏன் சரியான டீம் வரவில்லை என்று கேள்வி வேற...... உப்பு சப்பு இல்லாத பதில் சொல்லி சமாளித்தேன். //

உண்மைதான் சித்து.. என்ன செய்ய..?

தமிழ் மதுரம் said...

அப்புறம், என்ன நினைத்தாரோ - அவரே, " இதில் வேடிக்கையான(???) விஷயம் என்னவென்றால், பச்சை மிளகாய் சாப்பிட்டுவிட்டு, அதிகம் காரம் தாங்காமல், உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டு சில நிமிடங்களில், மாரடைப்பு காரணமாக இறந்து போனவர்களும் உண்டு," என்று சொல்லி சிரித்தார்.//


பயமுறுத்துறீங்களே:))

பச்சை மிளகாய் உறைப்பாகவும், உபயோகமான தகவல்களுடனும் இருக்கிறது. பச்சைமிளகாய் பற்றி இவ்வளவு விசயங்களா? பச்சை மிளகாய் பற்றி இதுவரை தெரியாத விடயங்களை எங்களோடு பகிர்ந்து கொண்ட தோழிக்கு நன்றிகள்

ஜெயந்தி said...

அவங்களுக்கு காரமே எடுக்கலியா? எப்படி சாப்பிட்டாங்க? அம்மாடி.

jai said...

ayioo amma kaaram taangha mudiyala,,,---- united states of andhra hahahah nicely related

Jey said...

மேடம், எனது முதல் பதிவு போட்ருக்கேன், படிச்சிட்டு ஒரு ரெண்டு ஓட்டு போட்ட்டுட்டு போங்க.

Anonymous said...

நல்ல வேளை சொன்னீங்க. இதை வச்சே காரமா சமைக்கும் போது சமாளிக்கறேன் :))

Gayathri said...

இனி காரமா சமைக்க ஒரு நல்ல சாக்கு, என் இப்படி காரமா சமசுருக்கேனு யாரவது என்னை கேட்ட இன்த ப்லக் கு அனுபிடவேண்டியது தான்,சித்ராவுக்கு நன்றி.
என் முதல் ப்லாக் தொடங்கிருக்கேன் படிச்சுட்டு உங்க கருத்துக்களை எழுதுங்கள்..