Monday, October 26, 2009

நுணலும் தன் வாயால்....

அம்மா: "சித்ரா, ராணி டீச்செருக்கு குழந்தை புறந்திருக்காம். பாக்க என் கூட வர்றீயா?"

அம்மா: "சித்ரா, பக்கத்து வீட்டுக்கு, அக்காவின்  பேபி பாக்க வர்றீயா?"

"போமா, பேபி ன போரு. என்னை பார்த்து சிரிக்காது, விளையாடாது. சத்தம் போடாதே, பாப்பாவை தூக்காதே, அங்க இங்க ஓடாதே னு சொல்வீங்க......."

தப்பு..... தப்பு...... தப்பு....... சின்ன வயதில் அப்படி இப்படி சொல்லி போகாம இருந்தது தப்பு. பெரிய பொண்ணு ஆன பிறகும் பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சினேன தவிர, அம்மா என்ன பேசுறாங்க, குழந்தையின் தாய் என்ன சொல்றாங்கன்னு கவனிக்காம விட்டது தப்பு ......

கல்யாண வாழ்க்கைக்கு தயார் படுத்தும்போது, "மாப்பிள்ளைய புரிஞ்சு நடந்துக்க....... மாமியாருக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க ......." என்றல்லாம் சொல்லி அனுப்புகிறவர்கள், "பக்கத்து வீட்டுக்காரிகிட்ட பாத்து நடந்துக்க...... எதுத்த வீட்டுக்காரிகிட்டே நல்லா பழகிக்க.... கல்யாண வீட்டில் இத பேசாத..... அத பேசு....." போன்ற social lifekku தேவையான 101 சொல்ல நினைப்பதில்லை. நான் அசடு என்பதால் அனுபவம்தான் கற்றுக் கொடுக்கிறது.

திருமணம் ஆனபின், இப்ப நான்  பெரிய மனுஷியாம். அம்மா மட்டுமோ மாமியார் மட்டுமோ விசேஷங்களுக்கு போனால் பத்தாதாம்.  நான் இப்ப தனி familyaam. குடும்ப attendance recordil எனக்கு இப்ப தனி entry. ration cardu தனி தனியா இருக்கிற மாதிரி. அதனால், நானும் தனியா ஆஜர் ஆகணுமாம். என்னாட இது மதுரைக்கு வந்த சோதனை மாதிரி.

என் தோழி, பிந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு, அஜிதாவின் குழந்தையை பாக்க போனேன். வழக்கம் போல் குழந்தையை பாத்தோமா கொஞ்சினோமா என்று இருந்தேன்.  "baby ரொம்ப cuteaa இருக்கு." என்றேன்.
அது பத்தாதாம்.

பிந்து என்னிடம், அஜிதாட்ட  எதாவது பேசு என்றாள்.  என்னத்த பேச........ ஆஹா, வார்த்தை வந்திருச்சு.... "அஜிதா, இப்ப பரவாயில்லயா?"  (wait a minute, hospital என்றதும் ஏதோ sick ஆன ஆள்ட்ட கேட்ட மாதிரி இருக்கே.) "அஜிதா, நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க."
மனதுக்குள்: சுமார், சித்ரா. next time இன்னும் கொஞ்சம் home-work பண்ணிட்டு வரணும். படிக்கிற காலத்திலேயே ஒழுங்கா homework பண்ணல. இப்ப பண்ண வேண்டி இருக்கு.
என் மன எண்ணங்கள் தெரியாமல், அஜிதா கேள்வி என்ற பெயரில் ஒரு நாட்டு வெடி குண்டை எனக்குள் போட்டார்கள். "சித்ரா, குழந்தை யாரை மாதிரி இருக்கு?"
ஐயோ, ஐயோ, இது எனக்கு தேவையான கேள்வியா? எனக்கு என்னவோ எல்லா newborn babiesum ஒரே மாதிரித்தான் தோணும். மனம் தூங்கி கொண்டிருந்த மூளையை எழுப்பியது. மூளை பத்தாவது படிக்கும்போது சயின்ஸ் examskku ராப் பகலாய் படிச்சுட்டு தூங்கியது. இப்போ எழும்பி, இதுவும் biology questionnu  நினைச்சிருச்சி. கேள்விய உத்து உத்து பாத்தா மாதிரி (science கேள்வி தெரியும். பதிலும் கேள்விக்குள் தெரியுதான்னு  உத்து உத்து question paperai பாத்தா மாதிரி) இப்ப என் கையில் இருந்த babyai பார்த்தது. இங்கு copy அடிக்க பக்கத்தில் யாரும் பதில் வைத்திருக்கவில்லை.
அப்பொழுது பார்த்தா பாப்பாவின் light brown eyes என் கண்ணில் பட வேண்டும்?
"அஜிதா, உங்களுக்கு dark brown eyes. உங்கள் கணவரின் கண் நிறத்தை உத்து பாத்ததில்லை. அவருக்கும் light brown மாதிரி நினைவு இல்லை. பேபி அப்போ யார் மாதிரின்னு தெரியலையே?"
பிந்து என் முதுகில் ஏன் தட்டினாள் என்று சில வினாடிகளில் புரிந்து, என்னை நியாயப் படுத்திகொள்ளும் முயற்சியாக, "இல்ல, அஜிதா, babykku லைட் கலர் கண்களாக இருப்பதால், அப்படி சொல்லிட்டேன்.  உங்க வீட்டில் யாருக்கும் இந்த நிறம் நான் பாத்ததில்லை. உங்க husband வீட்டிலேயும்....." பிந்து என்னை பேசி முடிக்க விடவில்லை.
"சித்ரா, போதும். போதும். வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்க."
அஜிதா என்னை பரிதாபமாக பார்த்தாள்.  ஓஹோ..... நாந்தான் இப்போ பரிதாபத்துக்கு உரியவளா?
எனக்கு இது வேணும், இன்னமும் வேணும்.......

குடும்பத்துக்குள் குழப்பங்கள் வர சகுனிகள் மட்டும் அல்ல என்னை மாதிரி அசடுகளும் காரணமாகி விடுகிறார்களோ?

இப்பொழுதெல்லாம் எனக்கு பிரச்சினை இல்லை. என்னால் மற்றவர்களுக்கும் இல்லை.
"baby cuteaa இருக்கு. அப்படியே அப்பா மாதிரி இருக்கு."
"இல்லையே சித்ரா. எல்லோரும் என்னை மாதிரி இருக்குன்னு சொல்றாங்க."
"அப்படியா. கண்ணும் வாயும் உங்கள மாதிரி வேணா இருக்கலாம். ஆனா மூக்கும் காதும் அப்படியே அப்பாதான்."
ஆத்தா............. நான், பத்தாங் கிளாஸ் பாஸ் ஆயிட்டேன்............!!!!!!!

5 comments:

Alarmel Mangai said...

chitra,

romba thannadakkama paththam class passnu solreengale!

enakkennavo niinga ippo Ph.D level vanthuttathaaththaan thoNuthu ;)

Chitra said...

Ammu, ippadiye ennai usuppEthi usuppEthi thaan.........

தமிழினிமை... said...

AGAIN ANOTHER AMMU IN THE Q-nallaa irukkudaa.i also agree with the other ammu on her views on MARUTHTHUVAR ON THATHTHU(BITHU)VAM..by the way im getting reminded of AMMA.her hairbun and her walkingstyle lingers b4 my eyes.hwz-she now?im turning on to your VETTI daily for more information.please dont make us wait for long.you know-its like once again being together in muthulakshmi,gomathi,jeya,poongkodi,mrs.solomon,prameela,bama and the whole lot of teachers classes..keep on writing without using any contraceptives for your thoughts..

Chitra said...

Amudha, Rani miss, Mary Kamalam miss, Jeyalakshmi miss, Leela Packiaraj miss, Geometry miss (9th std.) , pangajam miss and more. right? Who can also forget our great games teachers, Pushpa miss, Angel (patta peyarthaan mudhalla gyabagam varudhu......) miss, Jeba miss and others.
Amma appa nallaa irukkaanga. Amudha, e-mail anuppinEnE. paathiyaa? phone # anuppu. koopiduREn.........

Chitra said...

Amudha , epsibaai miss (Getzibai real nameaai irukkumo?).....
I will never forget your idea of changing our games uniform canvas shoes into sandals........ ninaiththu ninaiththu sirikkirEn. We were one cool vaandu group of class. ......... ha,ha,ha......