Thursday, October 22, 2009

சமையல் கலை.....

ஆய கலைகள் 64. சரியா?  அதை மூச்சு விடாம சொல்ல முடிஞ்ச தமிழர் 64 பேராவது இருப்பாங்களா? என் இன்றைய topic அது இல்ல. அதனால் 64 கலைகளையும் சொல்ல முடியாத தமிழர்களை மன்னிச்சு விட்டுருவோம். சரி, உனக்கு தெரியுமான்னு கேக்கிறீங்களா? இருங்க ஒரு செகண்டில்  கூகுள் பண்ணிட்டு சொல்றேன். ....

எனக்கு தெரிஞ்ச கலைகளில், சமையல் கலையை ஓவியத்திற்கு ஒப்பிடலாம். அப்போ என் சமையல் பத்தி கேக்க தோணுதா?  நான் சமையலில் பிக்காசோ மாதிரி. இதுதான் right side, left side, upsidenu இல்லாம அவர் வரைவார். இதுதான் செட்டிநாடு சமையல், நெல்லை சமையல், கொங்கு நாட்டு சமையல் இல்லாம நான் சமைப்பேன்.
என் சமையலுக்கும் கொஞ்சம் fans உண்டு. அது அவங்க செய்த புண்ணியமா இல்ல பாவமானு தெரியலை.

 நான் வேற வழி இல்லாம சமைக்க வந்தவ. கல்யாணம் ஆன புதிதில்,  என் கணவருக்கு, தன்  மனைவி தினம் தோறும் ஒரு வகை variety rice செய்ராளேன்னு சந்தோசம். ஒரு நாள் புளிசாதம், ஒரு நாள் லெமன் சாதம், ஒரு நாள் தேங்காய் சாதம், ஒரு நாள் vegetarian biriyani என்று.
சில நாட்கள் கழித்து வெறும் வெள்ளை சாதமும் கடையில் வாங்கிய தயிரும்தான்.
கணவனின் concerned கேள்வி: இன்னைக்கு variety  ரைஸ் பண்ணலியா?
மனைவியின் casual பதில்: இல்ல, அம்மா வாங்கி கொடுத்த எல்லா readymix packetsum காலி ஆயிட்டு.
நீங்க எல்லாம் நிஜமாகவே சாலமன் முகத்தை  பாக்கணுமே..............ஹா, ஹா, ஹா, .....

  பசி பத்தும் செய்யும். என்னை சமைக்க வச்சது. அங்க இங்க கேட்டு, trial and error basis ல  ஒரு வழியா நல்லா சாப்பிடுகிற அளவுக்கு சமைக்க பழகினேன்.

என் நண்பர்கள்  மத்தியில் சிறந்த சமையலில்: அம்முவின் சொதி, கோமியின் வத்தல் குழம்பு, பிரேமா சித்தியின் மினி-இட்லிஸ், சுபாவின் (அனுஜா) மீன் வறுவல், விஷியின்  ரசம், ரவியின் தயிர் சாதம், தீபாவின் தட்டை, சாந்தா அண்ணியின் முறுக்கு, சாந்தியோட அம்மம்மாவின் புளியோதரை, பூரணியின் பருப்பு உசிலி, ரகுவின் கேசரின்னு பட்டியல் நீண்டு நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.
நல்ல சமையல் மட்டும் இல்லங்க, சமையல் என்கிற பேரில் அவலை நினைத்து உரலை இடிச்சு நம்மை research lab எலிகளா ஆக்கி ஒரு வழி பண்றவங்களையும் மறக்க முடியலை.  சீரியசா  எவ்வளவு முயற்சி பண்றேன் தெரியுமா?
தினேஷின் பிரியாணிலெஸ் ; கிருஷ்ணாவின் இழுப்பாத்தி (சப்பாத்தி என்ற போர்வையில்);  சீமாவின் கொழு கொழுமா (ராஜ்மாவாம்); சந்திப்பாவின் இனிப்பு உப்புமா (கேசரியாம்); ஷங்கரின் கோந்து கேக் (banana கேக் ஆம்); லதாவின் பருப்பு கழுவின தண்ணீர் (சாம்பார்தானு சத்தியம் பண்றாள்);  பாஸ்கியின்  முட்டை கோஸ் களி பேஸ்ட் (original டிஷ் என்னன்னு இன்னும் research பண்ணி முடியலை) பட்டியல் நீள்கிறது. .... so, இங்கே ஸ்டாப் பண்ணிக்கிறேன்.

எனக்கு சைவ சாப்பாடு செய்ய basics  கற்று கொடுத்த Dr.புவனேஷ்வரியும் அவங்க அம்மாவையும் என்னால் காய் கறிகள் உள்ள வரை மறக்க முடியாது. நான் சென்னை வரும்போது எல்லாம் ஒரு நீள வாழை இலையில் ஒரு டிஸ்கவரி சேனல் ஒன்றை  விவேக் உக்கு  கோவை  சரளா  காட்டின மாதிரி எனக்கு non-veg. விருந்து வைக்கும் தினேஷின் அம்மா சமையலை கடலில் மீன் உள்ள வரை மறக்க முடியாது.

12 comments:

Solomon said...

Funny! Keep it up!

goma said...

ஐய்யோடா நம்ம கூட சேர்ந்து கும்மியடிக்க புதுசா ஒரு பதிவாளரைக் கண்டு பிடிச்சுட்டேனே...[அறிமுகப் படுத்திய சொதி புகழ் அம்முவுக்கு நன்றி]

Chitra said...

Thank you.

goma said...

என் friends மத்தியில் super சமையலில்: அம்முவின் சொதி, கோமியின் வத்தல் குழம்பு, பிரேமா சித்தியின் மினி-இட்லிஸ், சுபாவின் (அனுஜா) மீன் வறுவல், vishyin ரசம், ரவியின் தயிர் சாதம், தீபாவின் தட்டை, சாந்தா அண்ணியின் முறுக்கு, சாந்தியோட அம்மம்மாவின் புளியோதரை, ரகுவின் கேசரின்னு பட்டியல் நீண்டு நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.

சூப்பர் அவியல் கூட்டணி

தமிழினிமை... said...
This comment has been removed by the author.
Chitra said...

Hi Amudha Devi, super, super, super! romba santhosham.
How are you? konjam nanjamaa aattam pOtaam......... !!!
Thank you for your compliments. innum, "chittukuruvikkenna kattuppaadu?" thaan........ ha,ha,ha,.......

தமிழினிமை... said...
This comment has been removed by a blog administrator.
Chitra said...

Hi Amudha, I just e-mailed youda. I am happy that I got in touch with you.

Unknown said...

kalakal chitra...did u forget my parupu sambar !. Manam thapichadu. Keep up the super duper comedy coming. For cooks like me whose hands remble when u come, u need to share ur great cooking recipes with us.

Chitra said...

Krishna, unga sambaarai ladhavin sambar thooki saappittudichi. I still remember the day, karthik requested me to go easy on you as you trembled so much while cooking our dinner. Krishna, krishna, krishna.... nothing can beat your iLuppaaththi........

நட்புடன் ஜமால் said...

(original டிஷ் என்னன்னு இன்னும் research பண்ணி முடியலை) பட்டியல் நீள்கிறது. .... so, இங்கே ஸ்டாப் பண்ணிக்கிறேன்.
]]

அவங்க சமையல் - இவங்க சமையல்ன்னு சொல்லுதீகளே - நீங்க எதுவும் சமைக்கலையா ...

ஆனாலும் உங்க நேர்மை(வெரைட்டி ரைஸ்) பிடிச்சிருக்கு - (எனக்கென்னா மாட்டுனது சாலமன் தானே)

பித்தனின் வாக்கு said...

ஆகா ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா இத்தனையும் ரொம்ப பொறுமையா சாப்பிட்ட சாலமன் சாருக்கு ஒரு விருது கூடக் கொடுக்கலாம் போல. ஆமா இத்தனையும் டிரை பண்ணிங்களே. பாத்திரத்தை விட்டு எடுக்க முடிந்ததா?