Thursday, December 3, 2009

கடவுள நம்புறேன்னு சொல்வாங்க ஆனா நம்ப மாட்டாங்க

உங்கள் சிந்தனைக்கு:

என் தோழி ஒருத்தி, கோவிலில் இருந்து 1/2 மணி நேரம் ஜெபம் செய்து விட்டு வந்தாள். அவள் முகம் வாடி இருப்பதை கண்டு, என்ன ஆச்சு என்றேன். ஒரு மணி நேரத்திற்கு, தன் கவலைகளை பற்றி என்னிடம் புலம்பி விட்டு, அதான் கோவிலுக்கு வந்து, சாமி கிட்ட என் ப்ரிச்சனைகளை சொல்லிட்டு வரேன். இப்போ வீட்டுக்கு போறேன். ஒரே பயமாகவும் கவலையாகவும் இருக்கு என்றாள்.


ஆமாம்,  சாமியை நம்பினால், அவர் பாத்துப்பார் என்று நம்ப வேண்டாமா? அந்த நம்பிக்கை, ஒரு அமைதியை தர வேண்டாமா? இது எப்படி இருக்கு தெரியுமா? அழுக்கா இருக்கேன் என்று போய் சுத்தமா குளிச்சிட்டு வந்து, மீண்டும் சேத்துகுள்ளே புரண்டு அழுக்கு ஆகிவிடுவது போல.


ஒரு முறை, நான் மற்றுமொரு தோழி வீட்டில், அவள் தயாராகி வருவதற்காக காத்திருந்த வேளையில், அவளது மாமியார் பக்கத்து பூஜை அறையில் இருந்து சுலோகம் சொல்லி கொண்டிருந்ததது கேட்டது. ஆவலுடன் எட்டி பாத்தேன். அவர் என் பக்கமா திரும்பி, ஒரு சுலோகம் சொல்லி கொண்டே, என்ன என்று கேட்டார். நான் திரும்பி செல்ல எத்தனிக்கையில், "சித்ராவா, இன்னும் மருமக ரெடி ஆகலையா? நான் அப்பவே சொன்னேன். இங்க அங்கேனு காலை தேச்சுக்கிட்டே இருந்தாள். இப்ப பாரு, நாழி ஆயிட்டு." என்று ஒரு போடு போட்டார். நான் "பரவா இல்லை" என்று சொல்லி விட்டு ஹாலுக்குள் வந்தேன். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

kitchenil fridge கதவு மூடி திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளிருந்த என் தோழியின் மாமியார், "சித்ரா, என்னன்னு பாரு. வேலைக்காரிக்கு நான் எல்லாம் எடுத்து வச்சுட்டு தான் வந்தேன். இன்னும் எதுக்கு fridge உக்குள் குடையிரா? போய் என்னன்னு கேளு." என்றார். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

ரெண்டு நிமிஷம் கூட ஆகியிருக்காது. "சித்ரா, வெளியிலே சைக்கிள் பெல் சத்தம் கேக்குது. பூ விக்குற ரவியானு பாரு. அவன் எனக்கு ஐஞ்சு ரூபா மீதி தரணும்" என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

நான் எழும்பி செல்லும்போது, விக்கல் எனக்கு வந்து விட, அவர், " உன்னை யாரோ நினைக்கிறா. கொஞ்சம் சீனி அள்ளி வாயில் போட்டுக்கோ. டேபிள் மேல இருக்கிற பெரிய டப்பாவில் இருந்து இல்லை. பக்கத்தில் ஒரு சின்ன கிண்ணத்தில் சீனி இருக்கும்." என்றார். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

அடுத்த ரெண்டு நிமிஷத்தில், "சித்ரா, அந்த gas stove ஐ வேலைக்காரியிடம் அணைக்க சொன்னேன். அணைச்சிட்டாலா என்று பார்." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா,  மருமக இவ்வளவு நேரமா குளிக்கிராளா? போகும் போது geyser off பண்ணிட்டாளானு செக் பண்ணிக்க சொல்லிக்கோ."  மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, திரும்பி வரும்போது, நம்ம ஐயர் கடை திறந்து இருந்தா, coffee பொடி மறக்காமா வாங்கி வர மருமகளுக்கு ஞாபக படுத்திக்கோ." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, வேலைக்காரி ஏதோ பாத்திரத்தை கீழே போட்ட சத்தம் கேக்குது. என்னன்னு பாரு." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, உனக்கு ஜூஸ் வேணுமினா, fridge இல் இருக்கு. எடுத்துக்க." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, பூஜை பண்றதால உன்னை கவனிக்க முடியலை. உபசரிக்க முடியலை." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, நோக்கு சாமி பக்தி எல்லாம் உண்டா? இல்ல, அது எல்லாம் வேண்டாம்னு இருக்கியா?" மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

உள்ளிருந்து வந்த என் தோழி, " சாரி, சித்ரா. ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேனா? எங்க மாமியார் பூஜையில் இருக்காங்க. இல்லனா அவங்களாவது உனக்கு பேச்சு துணைக்கு இருந்திருப்பாங்க. வா போகலாம்."

"ஆண்டவா, எனக்கே இந்த நிலமைனா, என் தோழியை காப்பாத்து." கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தன் முன்னால் கடவுள் உண்டு என்று ஆத்மார்த்தமாக நம்பியிருந்தால், அவரை மனப்பூர்வமாக ஆராதித்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடாமல் பூஜித்து இருப்பார். இன்று அவள் மாமியார் செய்த பூஜைக்கு பலன் தான் என்ன? அது அந்த கடவுளுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை.

"கடவுள் இல்லை" என்பவர், அதை உறுதியாய் நம்பி, "தன் கையே தனக்கு உதவி" என்று இருப்பார்கள்.
"கடவுள் இல்லாமல் நான் இல்லை" என்பவர், அதை உறுதியாக நம்பி, "எல்லாம் கடவுள் கையில்; எல்லாம் அவன் செயல்" என்று  இருப்பார்கள்.


"கடவுள் இருக்கிறார்" , ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை என்று, "கடவுள் என்னை ரொம்பவும் சோதிக்கிறார். என்ன செய்ய போறேன்னு தெரியலை" என்று இருப்பவர்கள் பாவம். இவர்களுக்கு, தன்னம்பிக்கையும் இல்லை; தெய்வ நம்பிக்கையும் இல்லை. "இறைவா, இவர்களை காப்பாற்று."

47 comments:

goma said...

கடவுள் இருக்கிறார்.நம் உயிர், துடிக்கத் தொடங்கியதிலிருந்து அடங்கும் வரை அவன் அனைத்தையும் எழுதி விட்டான்.
அந்த எழுத்தை அவனே நினைத்தாலும் திருத்தி எழுத இயலாது.
நினைத்து நினைத்து எழுத்தை மாற்றினால் அவன் எப்படி கடவுள் ஆவார்.[அவர் என்ன சீரியல் இயக்குனரா]
இதுதான் என் பக்தியின் தத்துவம்

goma said...

அடுத்தவருக்காகக் கடை பிடிப்பதல்ல இறை பக்தி.
நீ மனிதனை ஏமாற்றலாம் இறைவனை ஏமாற்ற முடியுமோ?

ஜெட்லி... said...

நல்ல பதிவு...
நான் கூட கடவுள்
நம்பிக்கையைபற்றி
ஒன்னு ஒரு பதிவு போட
போறேன்.....

Chitra said...

அந்த பதிவை படிக்க ஆவலாய் உள்ளேன். நிச்சயம், தூள் கிளப்பும், Jetli sir.

Chitra said...

Goma, madam, nalla principle.

பெசொவி said...

கடவுள் நம்பிக்கை வந்து விட்ட ஒருவன் பூஜை நேரம் என்ற ஒன்று இல்லாமல் கூட 24 மணி நேரமும் கடவுளைப் பூஜித்துக் கொண்டிருக்க முடியும். நம்பிக்கை வரவழைக்க செய்யப்படும் முயற்சிதான் இந்த பூஜை, ஜெபம் எல்லாம், பாவம், பலர் இன்னமும் பயிற்சியிலேயே இருக்கிறார்கள் என்பது அனுதாபத்துக்குரிய அனுபவம். இது பற்றி நானும் பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்.

Chitra said...

உண்மைதான். சரியாக சொன்னீங்க.....

புலவன் புலிகேசி said...

//"கடவுள் இல்லை" என்பவர், அதை உறுதியாய் நம்பி, "தன் கையே தனக்கு உதவி" என்று இருப்பார்கள்.//

அப்பட்டமான உண்மை...கடவுளை மற...மனிதனை நினை...

//"கடவுள் இருக்கிறார்" , ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை என்று, "கடவுள் என்னை ரொம்பவும் சோதிக்கிறார். என்ன செய்ய போறேன்னு தெரியலை" என்று இருப்பவர்கள் பாவம்.//

இது போன்று குழப்பத்தில் இருப்பவர்தான் இன்று பெரும்பான்மை...
//"கடவுள் இல்லாமல் நான் இல்லை" என்பவர், அதை உறுதியாக நம்பி, "எல்லாம் கடவுள் கையில்; எல்லாம் அவன் செயல்" என்று இருப்பார்கள்.//

இது மாதிரி ஒருவர் கூட இல்லை என்பதுதான் உண்மை..

Chitra said...

//"கடவுள் இல்லாமல் நான் இல்லை" என்பவர், அதை உறுதியாக நம்பி, "எல்லாம் கடவுள் கையில்; எல்லாம் அவன் செயல்" என்று இருப்பார்கள்.//
அதுதான் துறவறத்தின் உச்ச நிலையோ?

தேவன் said...

சரியாகச் சொன்னீர்கள்.

காலத்தை கடந்து இருக்கும் இறையை காலத்தால் குறைப்பதா?

Anonymous said...

very very thanks madam..

actually am in dilemma but after reading ur line

//"கடவுள் இல்லாமல் நான் இல்லை" என்பவர், அதை உறுதியாக நம்பி, "எல்லாம் கடவுள் கையில்; எல்லாம் அவன் செயல்" என்று இருப்பார்கள்.//

i feel better now..

thanks..

தமயந்தி said...

chitra..give me ur ph number plz..came to samadhanapuram and searchd for ur house last nite..

do mail me immediatelyda
.or call me

Chitra said...

இறை நம்பிக்கை என்ற பெயரில் சிலர் "விளையாடுகிறார்கள்".
நன்றி, கேசவன்.

Chitra said...

Sachanaa, நன்றி. நம்பிக்கைதான் வாழ்க்கை.

Chitra said...

நான் இன்னும் இங்குதான் இருக்கிறேன். பாளையம்கோட்டை வர முடியவில்லை. Thank you, Dhamayanthi.

Chitra said...

நன்றி, தியாவின் பேனாவுக்கும், தியாவுக்கும். :-)

கலகலப்ரியா said...

நல்லாருக்கு சித்ரா..!

Chitra said...

நன்றி, கலகலப்ரியா. உங்கள் கல கல ஸ்டைல் தனிதான்.

Prathap Kumar S. said...

கடவுளை நினைக்க கோவிலுக்குத்தான் போகனும், பூஜை ரூமுக்குத்தான் போகனும் என்பதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை.

தூணிலும் துரும்பிலும் இருப்பார் என்று சொல்லும்போது ஏன் கோவிலுக்கும் பூஜைஅறைக்கும்போகவேண்டும்.
உங்க தோழியோட மாமியார் மாதிரி நிறைய பேர் இருக்காங்க...ஒண்ணும் பண்ண முடியாது.

Chitra said...

சரிதாங்க, நாஞ்சில். அவங்க கடவுள் பெயரை விட, என் பெயரை நிறைய தரம் சொல்லிய மாதிரி இருந்துச்சு. ஹி,ஹி,ஹி,.....

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு சித்ரா.

Chitra said...

நன்றி, ராமலக்ஷ்மி அக்கா.

அகல்விளக்கு said...

நல்ல பதிவு..
:-))

ஹரிணி அம்மா said...

//"கடவுள் இல்லை" என்பவர், அதை உறுதியாய் நம்பி, "தன் கையே தனக்கு உதவி" என்று இருப்பார்கள்.//

உண்மைதான்!! தன் வேலையையே ஒழுங்காக செய்யவில்லையென்றால்..பிறருக்கு உதவவும் முடியாது!!

Chitra said...

நன்றி, அகல் விளக்கு.

Chitra said...

நன்றி, ஹரிணி அம்மா. comment உக்கும் கருத்துக்கும்

மீன்துள்ளியான் said...

நிதர்சனமான உண்மை ...
நம்மிடம் நம்பிக்கை இல்லாத போது தான் நாம் மற்றவர்களை நாடி சொல்லுகிறோம் ... அதில் கடவுள் அதிக நண்பர்களை கொண்டு இருக்கிறார் .. ஆனால் அவரை நம்பும் நண்பர்கள் தான் ரெம்ப கம்மி

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

Chitra said...

Thank you, Meenthulli senthil

சத்ரியன் said...

//"கடவுள் இருக்கிறார்" , ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை என்று, "கடவுள் என்னை ரொம்பவும் சோதிக்கிறார். என்ன செய்ய போறேன்னு தெரியலை" என்று இருப்பவர்கள் பாவம். இவர்களுக்கு, தன்னம்பிக்கையும் இல்லை; தெய்வ நம்பிக்கையும் இல்லை. "இறைவா, இவர்களை காப்பாற்று."//

சித்ரா,

உண்மையில் நீங்கள் தான் உண்மையான பக்தை. காரணம், அடுத்தவர்களுக்காக இறைஞ்சுகிறீர்கள்.

Chitra said...

சத்ரியன் சார், நன்றி. எவ்வளவு தூரம் உண்மையான பக்தை ...... தெரியவில்லை, சார்.

ரிஷபன் said...

எல்லா வீட்டுலயும் பெரும்பாலான மனுஷங்க கிட்டேயும் இதான் பிரச்னை.. வழிபாட்டை தப்பா புரிஞ்சுகிட்டது.. இதையும் மீறி கடவுள் தத்துவம் புரிகிற மனிதர்களால் தான் நம்ம மனசுல அடுத்தவங்க மீதான பிரியம் இப்பவும் ஜீவனோட இருக்கு.. நல்லா வந்திருக்குங்க சித்ரா..

Chitra said...

நன்றி, ரிஷபன் சார். "கடவுள் தத்துவம் புரிகிற மனிதர்களால் தான் நம்ம மனசுல அடுத்தவங்க மீதான பிரியம் இப்பவும் ஜீவனோட இருக்கு.." ரொம்ப சரியா சொன்னீங்க.

thiyaa said...

நல்ல பதிவு

கமலேஷ் said...

ரொம்ப நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்...

Chitra said...

Thank you, Nesamithran.

இராகவன் நைஜிரியா said...

உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை.

கலைவாணர் நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சி..

கலைவாணர் ஆசிரியராக நடிப்பார். ஒரு பையனைப் பார்த்து கடவுள் எங்கு இருக்கின்றார் என்பார்.

மனுஷனுக்கு கஷ்டம் வரும் போது கடவுள் இருக்கின்றார் என்பார் அந்த பையன்.

இதுதான் இப்ப உலகத்தில் நிறையப் பேரிடம் காணப் படுகின்றது.

வாழ்க்கையில் உயரும் போது, தன்னுடைய சொந்த முயற்சி, உழைப்பு என்றும், கஷ்டம் வரும் போது ஆண்டவன் என்னை ஏன் இப்படி சோதனைப் பண்ணுகின்றார் என்பதும் வழக்கமாகப் போய்விட்டது.

Chitra said...

well said, Raghavan sir. You are right!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கு ஜெயகாந்தனின் 'தேவன் வருவாரா'
ஞாபகம் வருகிறது.

Chitra said...

சரியா போச்சு........ என்னை வம்பில் மாட்டி விடாதீக. அவர் எங்கே, நான் எங்கே?

Chitra said...
This comment has been removed by the author.
SUFFIX said...

நல்ல சிந்தனை சித்ரா, மனித மனம், அதன் குணத்தை யாராலும் மாற்ற முடியாது, முடிந்த வரை பிராத்தணைகள் சடங்கிற்க்காக இல்லாமல் மனப்பூர்வமாக இருக்க வேண்டும்.

Chitra said...

இதைத்தாங்க நான் சொல்ல வந்த வந்தேன். நீங்க கரெக்ட் ஆ ரெண்டு வரிகளில் சொல்லிட்டீங்க, SUFFIX.

SUFFIX said...

//Chitra said...
இதைத்தாங்க நான் சொல்ல வந்த வந்தேன். நீங்க கரெக்ட் ஆ ரெண்டு வரிகளில் சொல்லிட்டீங்க, SUFFIX.//

அது தானே முறை, இடுகை பக்கம் பக்கமா இருக்கணும், பின்னூட்டங்கள் இரண்டு வரிகளில் 'பன்ச்' டயலாக்கா இருக்கணும்.

priyamudanprabu said...

"கடவுள் இல்லை" என்பவர், அதை உறுதியாய் நம்பி, "தன் கையே தனக்கு உதவி" என்று இருப்பார்கள்.


////நான் அப்படிதான்
////
"கடவுள் இல்லாமல் நான் இல்லை" என்பவர், அதை உறுதியாக நம்பி, "எல்லாம் கடவுள் கையில்; எல்லாம் அவன் செயல்" என்று இருப்பார்கள்.


"கடவுள் இருக்கிறார்" , ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை என்று, "கடவுள் என்னை ரொம்பவும் சோதிக்கிறார். என்ன செய்ய போறேன்னு தெரியலை" என்று இருப்பவர்கள் பாவம். இவர்களுக்கு, தன்னம்பிக்கையும் இல்லை; தெய்வ நம்பிக்கையும் இல்லை. "இறைவா, இவர்களை காப்பாற்று."
///

நல்ல ஆய்வு

kannan Seetha Raman said...

Vanakkam.

"கடவுள நம்புறேன்னு சொல்வாங்க ஆனா நம்ப மாட்டாங்க" என்கின்ற தங்களின் பதிவை பத்திர படுத்தும் அளவிற்கு மிகவும் அருமையான ஆக்கம் சகோதரியே!
நெஞ்சை தொட்ட கதை

kannan Seetha Raman said...

ஐயா
"கடவுள நம்புறேன்னு சொல்வாங்க ஆனா நம்ப மாட்டாங்க" என்கின்ற தங்களின் பதிவை பத்திர படுத்தும் அளவிற்கு மிகவும் அருமையான ஆக்கம் சகோதரியே!
நெஞ்சை தொட்ட கதை

Tamilan said...

தங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா? இல்லை, சொர்கம்/நரகத்திலா?