Thursday, December 10, 2009

அமெரிக்க பொருளாதாரமும், என் வீட்டு அடுப்பும்.

வாங்க, வாங்க, வாங்க......
தலைப்பை பாத்த உடனேயே, நம்ம வீட்டு வாசலில் காலை கைய வைப்பீங்கன்னு தெரியும்.
வாங்க, காபி குடிச்சிக்கிட்டே பேசலாம்......... இன்னும் என் வீட்டில் அடுப்பு எரியுது. இறைவனுக்கு நன்றி.

நான் அமெரிக்கா வந்தது, ஏதோ நான் இல்லாமல் உலகம் இந்த பக்கம் சுத்த மாட்டேங்குது என்பதற்காக இல்லை.
நான் இங்கு மேல் படிப்பு படிக்கவோ, இல்லை வேலை வெட்டி என்று பெரியதாய் சாதிக்கவோ வரவில்லை.
எல்லாம், இந்த கல்யாணம் காட்சினு ஆனவுடனே, ராமன் இருக்கிற இடம் சீதைக்கு அயோத்தி - சாலமன் இருக்கிற இடம் சித்ராவுக்கு அமெரிக்கான்னு (ஹி,ஹி,ஹி,...) வந்ததுதான். அது மட்டும் இல்ல, என்னுடைய  தினுசுக்கு சைஸ் உக்கு வாய்க்கு,  எந்த ராவணன் தூக்கிட்டு போக போறான்? பேசாம, பெட்டியை கட்டுனோமா மூட்டையை தூக்குனோமானு, அமெரிக்கா வந்துட்டேன்.

நம்ம கதை, இப்படி இருக்க, ஊருக்கு இந்த ஜூனில் - நம்மை பெத்தது, நம்ம கூட புறந்தது, நம்ம கூட படிச்சது, நம்ம கூட வளர்ந்தது, நம்ம கூட ஊரை சுத்தனது எல்லாம் தமிழ் நாட்டில் நமக்காக வடை சுட்டு வச்சிட்டு காத்துக்கிட்டு இருக்காங்கலேன்னு   போய் பாத்தேன். அப்போ பக்கத்தில் இருந்த சிலர்,  ஒபாமா ஏதோ அமெரிக்கா ambassador போஸ்ட் கொடுத்து என்னை அனுப்பி வச்சிருக்கார்னு கேள்வி மரியாதை குடைச்சல் மரியாதை பண்ணி காச்சி எடுத்துட்டாங்க பாருங்க........... ஐயா, சாமி, ஆளை விடுங்கனா கேட்டாத்தானே?
இங்கேயே தலையில் ஆயிரத்து எட்டு சிக்கு சிணுக்கு வச்சுக்கிட்டு, அமெரிக்க தலையில் பேன் பாக்குறாங்க.

எங்க வீட்டு பொருளாதார விவகாரமே எனக்கு முழுசா புரிஞ்சிக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குது. நான் எங்கே அமெரிக்கா பொருளாதாரத்தை பத்தி கருத்து சொல்ல? விட மாட்டேனுட்டாங்க...... ஒபமா கிடைக்கவில்லை, அமெரிக்கா வில் இருந்து நீதான்னு கிடைச்சேனு, கேள்வி மேல் கேள்வி கேட்டு குடஞ்சாங்க:
இவங்க உண்மையிலேயே உலக நல விரும்பிகளா? இல்லை, உள்ளூரு வயித்தெரிச்சல் கோஷ்டிகளா?

"உலக நல விரும்பி":   இந்த பொருளாதார சீரழிவுக்கு காரணம், அளவுக்கு அதிகமா கடன் கொடுத்த வங்கிகள் காரணமாமே?
வெட்டி பேச்சு, சித்ரா:   கடன் கொடுத்த வங்கிகளுக்கு திருப்பி கொடுக்காத சொங்கிகள் காரணம்.
இப்போ நீங்க அன்னைக்கு, சென்னை போறதுக்காக வாங்கிட்டு போன travel bag (சின்ன suitcase) திருப்பி தராமல் இல்லையா, அது மாதிரி.

"உலக நல விரும்பி":  கார் தாயரிப்பு நிறுவனங்களும், இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பலியாமே?
வெட்டி பேச்சு, சித்ரா:  ஆமாம், தினமும் காலையில் 20 ford cars, 20 chevrolet cars பலி மேடையில் உயிரை கொடுத்துகிட்டு இருக்கின்றன.

"உலக நல விரும்பி":  ஒபாமா வந்தால், ஏதோ பெருசா கிழிக்க போறார்னு நினைச்சேன்.
வெட்டி பேச்சு, சித்ரா:  ஆமாம், இங்க சக்கர நாற்காலியில் உக்கார்ந்த்துகிட்டு படுத்திட்டு கிழிக்கிற தலைவர்கள்  அளவுக்கு அவராலே எப்படிங்க முடியும்?

"உலக நல விரும்பி": புஷ் எல்லாம் ஒரு அரசியல் தலைவரா?
வெட்டி பேச்சு, சித்ரா: இல்லங்க. தன் நலம், தன்  குடும்ப நலம், தன் தோழி நலம், தன் சினிமா நலம், தன் பண நலம், தன் ஜாதி நலம் மட்டும் அரசியல் கொள்கைகளாய் வைத்திருக்கும் நம் ஊரு  அரசியல் தலைவர்களே, தலைவர்கள்.

"உலக நல விரும்பி":  அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டானமே?
வெட்டி பேச்சு, சித்ரா: இந்தியாவிலேயே, இந்தியர்களுக்கு இந்தியர்கள் வேலை இல்லைனு சொல்றதை எவ்வளவு கஷ்டப்பட்டு பொறுத்துக்கிட்ட இந்தியன் ஒருவன்,  இப்படி அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்காக எப்படி  கவலை  படுகிறார்? வாழ்க அவரது பொது நல சிந்தனை!

"உலக நல விரும்பி":  உங்க கணவருக்கும் வேலை இல்லைன்னு சொல்லிட்டா, திரும்ப இந்தியா தானா?
வெட்டி பேச்சு, சித்ரா: சார், சத்தியமா சொல்றேன். உங்க வீட்டில் வந்து உங்க சோத்தில் பங்கு கேக்க மாட்டேன். அந்த travel bag திருப்பி கேட்டுருவோனு இவ்வளவு பயமா?  சாமி, முடியலை.

உலக நல விரும்பி: நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?
வெட்டி பேச்சு, சித்ரா: . உங்க வீட்டில் அடுப்பு எரிய,  gas  cylinder வாங்க இன்னும் நாயா பேயா சுத்தி சமாளிக்கிறதை விடவா?

"உலக நல விரும்பி":  அங்கே பொருளாதாரம் எப்போதான் முன்னேறும்?
வெட்டி பேச்சு, சித்ரா: இதோ நான் திரும்பி போய், கஜானா சாவியை ஒபாமா கையில் திருப்பி கொடுத்த உடனே.

இவர் வெட்டி கவலை - வெளி ஊர் கவலை - உலக கவலை - படுற அளவுக்கு, இவர் வீட்டு கவலையும் நாட்டு கவலையும்  கருத்தில் கொண்டு ஏதாவது செஞ்சிருந்தா, அமெரிக்க பொருளாதாரம் இவரை ஏன் பாதிக்குது? இந்நேரம், அமெரிக்கா, இந்தியாவிடம் அல்லவா பொருளாதார உதவிக்கு நிற்கும்.  என்னது, இது என் கவலயா?  ஐயோடா.....

115 comments:

thiyaa said...

காலத்துக்கேற்ற பதிவு

Chitra said...

நன்றி, தியா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகர்வு..இன்னொன்றையும் விட்டு விட்டீர்களே..இன்னும் கொஞ்ச நாள்ல அமெரிக்க டாலர் 30 ரூபாய்க்கு வந்துடுமாமே..

Chitra said...

வந்த பிறகு போட்டுறலாம் தான்..............

malarvizhi said...

வலைக்கு வந்தமைக்கு நன்றி . ஈமு சென்னையில் இருக்கிறதா என்பது எனக்கும் தெரியாது . ஆனால் சேலம் , கரூர் , எங்கள் சிதம்பரம் இங்கு எல்லாம் இருப்பது தெரியும். நீங்கள் படங்களில் பார்த்தது என் வீட்டில் உள்ளவை.

Chitra said...

தகவல்களுக்கு நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பகிர்வு சித்ரா.......

நீங்க அமெரிக்காவில் இருந்தாலும் இப்படி நக்கல் கலந்த கிண்டலான பதில் சொல்ல
தமிழ்நாட்டுக்காரனாலாதான் முடியும்.. ஏன்னா நாம எப்பவுமே நம்மல தாழ்த்தி அடுத்தவர்களை
உயர்த்திதான் பேசுவோம்.........

ஒவ்வொரு கேள்விகளுக்கும் உங்கள் நக்கலான பதில் நல்லாயிருக்கு.....

Chitra said...

ரொம்ப நன்றி, சங்கவி sir. எனக்கு நிஜமாவே அமெரிக்கா பொருளாதாரம் எப்போ முன்னேறும் என்று தெரியவில்லை. புஷ், ஒபமா பண்றதுக்கு என்னை கேட்டால்? அப்புறம், நான் கருணாநிதி, ஜெயலலிதா பண்றதுக்கு சென்னைவாசியையா கேக்க முடியும்?

சங்கர் said...

// ஒபாமா ஏதோ அமெரிக்கா ambassador போஸ்ட் கொடுத்து என்னை அனுப்பி வச்சிருக்கார்னு//

அமெரிக்காவுல கூட அம்பாஸிடர் கார் இருக்கா

Mythili (மைதிலி ) said...

என்னையும் உன் வலைக்குள் இழுத்து விட்டாய்.... நன்றி சித்து

Chitra said...

நக்கலுக்கே நக்கலா, சங்கர் சார். நடத்துங்க, நடத்துங்க.....

Chitra said...

தோழியாய் இருக்கிற தண்டனை மட்டும் போதாதா என்று சொல்லாமல் சொல்லும், என் தோழி, மைதிலி.

Romeoboy said...

ஊருக்கு போகும் போது அந்த சூட்கேஸ் வாங்கிட்டு போனிகளா ??

Romeoboy said...

\\வாங்க, காபி குடிச்சிக்கிட்டே பேசலாம்//

ஏதோ காபின்னு எழுதி இருகிங்களே அது எப்ப கிடைக்கும் ?

Chitra said...

என் suitcase திருப்பி கிடைச்சதும்.

Chitra said...

உலக நல விரும்பி: அமெரிக்கா பொருளாதரத்தை பத்தி "கவலை" படுகிறார்.
என் நல விரும்பி: (romeoboy): என் suitcase பத்தி கவலை படுகிறார்.

goma said...

அம்மாடி!!! ஆத்தாடி!!!! வெட்டிப் பேச்சு ,எல்லோரையும் எப்படி வெட்டி வெட்டி பேசுது.....
நல்ல பொருத்தமாத்தான் பேரு வச்சிருக்காங்ய.....

வெட்டி பேச்சு, சித்ரா: இதோ நான் திரும்பி போய், கஜானா சாவியை ஒபாமா கையில் திருப்பி கொடுத்த உடனே.

இங்க சக்கர நாற்காலியில் உக்கார்ந்த்துகிட்டு படுத்திட்டு கிழிக்கிற தலைவர்கள் அளவுக்கு அவராலே எப்படிங்க முடியும்?

ரெண்டும் சூப்பர்ர்ர்ர்ர்ர்ரோ சூப்பர் மாம்மே!

மகா said...

//உலக நல விரும்பி": அங்கே பொருளாதாரம் எப்போதான் முன்னேறும்?
வெட்டி பேச்சு, சித்ரா: இதோ நான் திரும்பி போய், கஜானா சாவியை ஒபாமா கையில் திருப்பி கொடுத்த உடனே.//
very nice..

Chitra said...

Goma madam,

//அம்மாடி!!! ஆத்தாடி!!!! வெட்டிப் பேச்சு ,எல்லோரையும் எப்படி வெட்டி வெட்டி பேசுது.....
நல்ல பொருத்தமாத்தான் பேரு வச்சிருக்காங்ய.....//
கலக்கிட்டீங்க போங்க.......ரொம்ப நன்றி.

Chitra said...

thank you very much, Maga.

VENNILLA said...

Hi friend this is vennilla here.. ur doing a really good job.. can we exchange links..

Chitra said...

Thank you, Vennilla. என்னமோ டாலர் exchange பண்ற மாதிரி கேக்குறீங்க. ஹி,ஹி,ஹி....

பூங்குன்றன்.வே said...

//இன்னும் என் வீட்டில் அடுப்பு எரியுது. இறைவனுக்கு நன்றி.//

நல்ல மனசை காட்டுது.

ரொம்ப ரொம்ப நல்ல கட்டுரையும்,உண்மையான அக்கறையையும் காட்டுகிறது மேம்.

ஜெட்லி... said...

//சார், சத்தியமா சொல்றேன். உங்க வீட்டில் வந்து உங்க சோத்தில் பங்கு கேக்க மாட்டேன். அந்த travel bag திருப்பி கேட்டுருவோனு இவ்வளவு பயமா? சாமி, முடியலை.
//

கலக்குறிங்க....ரொம்ப ரசிச்சு படிச்சேன்....
எல்லாமே செம கவுண்டர்....

Dr.Rudhran said...

good again..keep writing

தேவன் said...

/// ஆமாம், இங்க சக்கர நாற்காலியில் உக்கார்ந்த்துகிட்டு படுத்திட்டு கிழிக்கிற தலைவர்கள் அளவுக்கு அவராலே எப்படிங்க முடியும் ///

நல்லா சொன்னிங்க போங்க.

Prathap Kumar S. said...

//இங்கேயே தலையில் ஆயிரத்து எட்டு சிக்கு சிணுக்கு வச்சுக்கிட்டு, அமெரிக்க தலையில் பேன் பாக்குறாங்க//

ஹஹஹ... ரொம்ப டாப்பு....
இடையிடையே நம்மூரு ஆளுங்களை கலாய்ச்சீங்களே கலக்கல்...

யாருக்குமே கேள்வி கேட்கத்தெரிலங்க அமெரிக்காவுலேருந்து வர்றவங்ககிட்ட இப்படியா கேட்குறது... இப்ப நான் கேட்குறேன் பாருங்க...

ஏஞசலினா ஜுலி,பிரிட்னி ஸ்பியர்ஸ் இவங்களை பார்த்தீங்களா? இனிமே பார்த்தா நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க :-)

மதார் said...

அந்த ஊர்குசும்பு அப்படியே இருக்கு , எங்க போனாலும் நாம தனியா தெரியுரோமோ ? உங்க காமெடி நல்லா இருக்கு .பாளையங்கோட்டை அழகா நம்ம ஊர்பேர சொன்னதுக்கு முதலில் வாழ்த்துக்கள் . ப்ளோக்ல நாம படிக்கும்போதே கண்டுகொள்வோம் இது நம்ம பக்கம்னு , ஆனாலும் ஊர்பேர போட ஏனோ கஷ்டபடுறாங்க . நான் புதியவள் முதலில் மனம் வருந்தியது இதற்காகவே . தயவு செஞ்சு சொந்த ஊர மதிங்க ........ உங்களுக்கு அல்ல அக்கா .

saravanakumar sps said...

ekka ongalappaththu jolluvita ethaiyavathu besa
nammaoru makkavaranga pozhikkapona etaththula namma kathai namaku nallave theriyum

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு

dearbalaji said...

உங்ககிட்ட பேசறப்போ ஜாக்கிரதயா பேசனுமின்னு நினைகிறன். பின்னாடி இப்படி பழி வாங்கமாட்டிங்கனு என்ன நிச்சியம்.

வால்பையன் said...

உலக அரசியலை வைத்து உள்ளூர் அரசியலை கிழித்த விதம் அருமை!

அமெரிக்காவுக்கு ஆட்டோ வாரதுன்னு தைரியமா!?

குப்பன்.யாஹூ said...

Nice post, thanks for sharing

Chitra said...

என் நல்ல மனதை தொட்டுட்டீங்க, பூங்குன்றன் சார்.

Chitra said...

ஜெட்லி, ரொம்ப நன்றி.

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

Dr.Rudhran, Thank you very much. It is a blessing to be encouraged by you.

Chitra said...

நன்றி, கேசவன் சார். இப்படிதான் எல்லோரும் என்னை உசுப்பேத்தி விடுறாங்க. ஹி,ஹி,ஹி....

Chitra said...

ஊரு நக்கல்............. நன்றி, மதார் (மலர்) அக்கா, மேடம், தங்கச்சி......... தென்னகத்து oxford - பாளையங்கோட்டை - பெருமைதானே!

Chitra said...

ஹி,ஹி,ஹி,....... நல்லா "ஜொள்ளுட்டீயே" சரணகுமார்.

அரங்கப்பெருமாள் said...

//வாங்க, காபி குடிச்சிக்கிட்டே பேசலாம்...//
எனக்கு சக்கர நோய் இருக்கு. ஜீனி(சுகர்) வேண்டாம்.

அது சரி அடி தூள் பண்ணூறீங்க அம்மணி. நகைச்சுவையா இருந்தாலும், கொஞ்சம் உண்மை இருக்கு.

Chitra said...

நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்.

Chitra said...

ஐயோ, என்னை "பலி" "பழி" வாங்குறாங்கனு சொல்ல வந்தா...... என்ன பாலாஜி சார், கிண்டல் பண்றீங்க!

Chitra said...

பெருமாள் சாருக்கு, ஒரு காப்பி.................... சீனி இல்லாமா............!
உண்மைதான் சிரிப்பாய் சிரிக்குது, சார்.

suvaiyaana suvai said...

interesting amma thaangala.....

Chitra said...

சுவை, ப்ளீஸ் தாங்கிக்கோங்க..........

தமிழினிமை... said...

அப்பா.......(திரு.பொ.ம.ராசாமணி..அவர்கள்) உங்க பேர இவ எப்படியெல்லாம் காப்பாத்துறா பாத்துக்கோங்க.....அனேகமா கவனிச்சுக்கிட்டு தான் இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.....

Chitra said...

நாஞ்சில் சார், angelina joli, Brittany Spears கூட, அடுத்து coffee உக்கு போறப்போ சொல்லிட்டா போச்சு. சரியா சொன்னீங்க.

Chitra said...

தமிழினி, என் கண்ணில் நீர் ------- அவர் இருந்து வாழ்த்துற மாதிரியே இருந்துச்சு, புள்ள.

Jerry Eshananda said...

வெட்டி பேச்சு வீராங்கனைக்கு வாழ்த்துகள்

Chitra said...

வீராங்கனை - உங்கள் நக்கலுக்கு அளவே இல்லை, ஜெரி சார்.

நசரேயன் said...

பட்டய கிளப்ப்டீங்க.. என்ன நக்கலு..போற போக்கிலே நானும் வத்தி வச்சிட்டு போறேன், சாலமன் அண்ணாச்சி ரெம்ப பாவம் தான்..

Chitra said...

நசரேயன் சார், சாலமன் மேல் உள்ள கரிசனையில், நீங்களே ராவணனுக்கு தகவல் சொல்லியிருவீங்க போல........

தமிழினிமை... said...

ஏல..ஒனக்கு 91/2 கிலோ மொளகா பொடிய கண்ணுல கொட்டினாலும் கண்ணுல தண்ணி வராது..ஒன்னயவே நான் என் commentடால அழ வச்சேன்னா நான் எவ்வளவு பெரிய நாதாரி..?? நல்லாத்தான் போகுது ..நீ ஒரு கடப்பார முழுங்கி ..ஆனா comedy கூட கலந்து கலந்து பழகுறவ..நான் ஒரு SENSITIVE SENGAMALAM....ADVERTISEMENT பாத்தா கூட 71/2 turkey towelல வஞ்சகம் இல்லாம நனைக்கிறவ..நான் ஒன்ன அழ வச்சதுக்கு பெருமையா..?? வெறுமையா..??மன்னிச்சிக்கப்பூ...ஆனாலும் அப்பா அவுக பாத்துக்கிட்டு தான் இருப்பாவ..நல்ல நட்பு எல்லா உறவுமுறைகளையும் அடக்கியது...வர்ரேன் புள்ள..

Chitra said...

தமிழினி, அழாதே. சிரிடி கண்ணம்மா.

Chitra said...

வால் பையன் சார், நன்றி. ஏதோ நம்மால முடிஞ்சது.

Chitra said...

Thank you, Kuppan sir.

Kumky said...

இயல்பான நகைச்சுவையும்,
கூடவே நக்கலும்..

அடேங்கப்ஃஃஃபா...
(வெ.மூர்த்தி ஸ்டைலில் படித்துக்கொள்ளவும்)

Chitra said...

கும்க்கி, mburru ummmmm........ (மூர்த்தி ஸ்டைலில் - உதட்டை மடக்கி சத்தம் போட்டு கொள்ளவும்.) நன்றி, சார். வருகைக்கும் கருத்துக்கும்.

அண்ணாமலையான் said...

”என் நல்ல மனதை தொட்டுட்டீங்க, பூங்குன்றன் சார்.”
உங்களுக்கு நல்லமனசு மட்டுமில்லே வெளிப்படையான மனசும் கூட, இல்லேன்னா உங்க மனசு வெள்ளன்னு மத்தவங்களுக்கு தெரியுமா? (ஆத்தாடி எவ்ளோ கமெண்ட்டு?)

vasu balaji said...

அடியாத்தீ. இவ்வளவு டெர்ரரா நீங்க.=)) அருமை.

Chitra said...

என் பதிவை விட, கமெண்ட்ஸ் காலம் நல்ல இருக்கு என்று சொல்லாமல் சொல்றீங்க. வெள்ளை மனசில் பட்டதை சொல்லிட்டேன். ஹி,ஹி,ஹி......ரொம்ப தேங்க்ஸ் சார்..

ILA (a) இளா said...

அம்மாடி,,,, புள்ளபூச்சி மாதிரி இருந்துகிட்டு என்னா கொட்டு கொட்டுயிருக்கீங்க?

மீன்துள்ளியான் said...

சேட்டை கொஞ்சம் ஓவரா தான் இருக்கு
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Thenammai Lakshmanan said...

//வெட்டி பேச்சு, சித்ரா: இதோ நான் திரும்பி போய், கஜானா சாவியை ஒபாமா கையில் திருப்பி கொடுத்த உடனே.//

அருமையா இருக்கு தங்கச்சி வாழ்க வளர்க

ஹேமா said...

அமெரிக்கா குளிர்ல கொண்டுபோய் விட்டும் உங்க குசும்பை பாத்திங்களா !

Chitra said...

தேனம்மை அக்கா, உங்கள் வாழ்த்துக்கள் தேனாய் இனிக்குது.

Chitra said...

ஹேமா மேடம், இது ஸ்டீல் பாடி. ( quotes ukku Thanks to Sivaji Rajini) - இந்த குளிரு ஒண்ணும் செய்யாது. :-)

Chitra said...

புள்ள பூச்சியா............??? ஹா, ஹா, ஹா......

Chitra said...

மீன்துள்ளியான் சார், நீங்க துள்ளுங்க, சார்.

Chitra said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் terrorist பட்டத்துக்கும் நன்றி, வானம்பாடிகள் சார்.

லெமூரியன்... said...

ஆத்தீ......நம்ம ஊரு புள்ளயா நீங்க..........71 பின்னூட்டமா..........ம்ம்ம்......பெரிய ரசிகர் பட்டாளமே உங்களுக்கு உண்டா................வலையுலகுக்கு நா புதுசு.........அதனால தப்பா நெனைக்காதீங்க...........
அப்புறம் யாராவது உணர்ச்சிவசப் பட்டு எங்க தலைவிய தெரியாம நீ எப்டிலே பதிவர் ஆகலாம்னு கேட்ட நா அழுவேன்.! :-) :-) :-)

பதிவு நல்லா இருக்கு...இனி உங்கள பாலோ பண்றேன்.!

Chitra said...

ஐயோ, நம்புங்க லெமூரியன் சார், நானும் blog உலகுக்கு oct. முதல் தான் அறிமுகம்.
நம்மூரு ஆதரவும் கிடைச்சிடுச்சி. நன்றி சார்.

டவுசர் பாண்டி said...

//வெட்டி பேச்சு, சித்ரா: ஆமாம், இங்க சக்கர நாற்காலியில் உக்கார்ந்த்துகிட்டு படுத்திட்டு கிழிக்கிற தலைவர்கள் அளவுக்கு அவராலே எப்படிங்க முடியும்?//


யக்கா !! நீங்க அங்க இருந்துக் கீனு , இத்த சொல்லரீங்கோ !! நாங்க ????????????

சொம்மா !! சாதா பாண்டிய , கீஞ்சி போன டவுசரா ஆக்கிடுவாங்களே !! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
மூச் !! நானு !!
இல்லீங்கோ !!
ல்லீங்கோ!!
லீங்கோ !!
ங்கோ !!
கோ !!
...........

Chitra said...

டவுசர் பாண்டி சார் , இப்படி பேரை வச்சுக்கிட்டு, நீங்க இப்படியெல்லாம் சொல்லப்பிடாது.

டவுசர் பாண்டி said...

இது இன்னா !! ஒரே ஆச்சிரியமா கீது ? சொம்மா புயலு கணக்கா பதிலு குட்து கீரீங்கோ !!

பேருல இன்னா கீது ? மாட்னா அவ்ளோதான் !! யான மெர்ச்ச டால்டா டின்னு கணக்கா ஆக்கிடுன்வங்கோ !!

நானு பதிவு போடறது உங்களுக்கு புடிக்கலியா ? செர்தான் !! மாட்டி உடற்துளியே கீரீங்களே !!

Unknown said...

அட ,இந்தியாவை கிண்டல் செய்து அமெரிக்க துதி பாடி நையாண்டி பண்ண இன்னொரு அமெரிக்க வாழ் தமிழர்..

Chitra said...

அப்படியும் சொல்லலாம். அது உங்கள் பார்வையை பொறுத்தது. நிச்சயமா, நான் அமெரிக்கா துதி பாடி இந்தியாவை குறைச்சி பேசலை. அரசியல் தலைவர்களை யார் வேணா குத்தம் சொல்லலாம். அமெரிக்காவில் இருந்தால் என்ன, இந்தியாவில் இருந்தால் என்ன. வோட்டு மதிப்பு ஒண்ணுதான். மும்பையில் இருக்கிறவன் தமிழ்நாடு அரசியல் பத்தி பேசக் கூடாதுன்னு சட்டம் உண்ட என்ன? அப்புறம், புளப்புக்காக அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு போறவங்க மட்டும் ஏன் பேச கூடாது? அவர்களை நக்கல் பண்ணா, நாட்டையே அவமதிப்பது போல என்று நான் நினைக்கலை. நீங்க அப்படி நினைச்சதுக்கு நான் பொறுப்பு இல்லை.

அண்ணாமலையான் said...

இதுக்கு பதில், பதிலுக்கு பதில்னு போய்ட்டே இருந்தா அடுத்த பதிவு எப்படி வரும்? போங்க போய் அந்த வேலைய பாருங்க...

புலவன் புலிகேசி said...

//"உலக நல விரும்பி": ஒபாமா வந்தால், ஏதோ பெருசா கிழிக்க போறார்னு நினைச்சேன்.
வெட்டி பேச்சு, சித்ரா: ஆமாம், இங்க சக்கர நாற்காலியில் உக்கார்ந்த்துகிட்டு படுத்திட்டு கிழிக்கிற தலைவர்கள் அளவுக்கு அவராலே எப்படிங்க முடியும்?//


நல்ல பஞ்ச்சுங்க..

//இவர் வெட்டி கவலை - வெளி ஊர் கவலை - உலக கவலை - படுற அளவுக்கு, இவர் வீட்டு கவலையும் நாட்டு கவலையும் கருத்தில் கொண்டு ஏதாவது செஞ்சிருந்தா, அமெரிக்க பொருளாதாரம் இவரை ஏன் பாதிக்குது? இந்நேரம், அமெரிக்கா, இந்தியாவிடம் அல்லவா பொருளாதார உதவிக்கு நிற்கும்.//

உண்மை...இவங்களுக்கு வந்ததுல்லாம் கவலை இல்லீங்க..உங்க நிலமை எப்புடின்னு வேவு பாக்குறது...

Chitra said...

//உண்மை...இவங்களுக்கு வந்ததுல்லாம் கவலை இல்லீங்க..உங்க நிலமை எப்புடின்னு வேவு பாக்குறது... //...............................நல்ல பஞ்ச்சுங்க.., புலிகேசி சார்.

Jaleela Kamal said...

சித்ரா ராகவன் பதிவில் 15 நாள் முன் உங்கள் அப்பா உங்களை விட்டு பிரிந்தது போட்டு இருந்தீர்கள்,
அவருடைய ஆத்மா சாந்தி அடைய என் பிராத்தனைகள்.க‌வ‌லை ப‌டாதீங்க‌.

மனதை தேத்தி கொள்ளுங்கள், எங்கும் போக வில்லை உங்கள் அப்பா உங்களுடன் தான் இருக்கிறார் என்று நினைத்து கொள்ளுங்கள்.

Jaleela Kamal said...

நல்லதொரு பகிர்வு,

இங்கேயே தலையில் ஆயிரத்து எட்டு சிக்கு சிணுக்கு வச்சுக்கிட்டு, அமெரிக்க தலையில் பேன் பாக்குறாங்க.//// ஹா ஹா

Chitra said...

நான் blog எழுதுறதே, அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வு தரும் warmth இல் இருக்கத்தான். நன்றி, jaleela அக்கா.

Jaleela Kamal said...

ஆமாம் சரியாக சொன்னீர்கள், பிலாக் எழுதுவதில் நம்மலையே மறக்கும் அளவிற்கு ஆகிறது.

எழுதுங்கள், நிறைய எழுதுங்கள். அதன் மூலம் உங்கள் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.

Chitra said...

ஜலீலா அக்கா, என் அப்பாவின் நகைச்சுவை உணர்வில் எனக்கு கால் பங்கு கூட வரவில்லை.
முயற்சிக்கிறேன் அக்கா. உங்களின் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி. blog மூலமா உங்களை மாதிரி நல்ல தோழர்கள் அமைந்து விட்டார்கள். இறைவனுக்கு நன்றி.

Anonymous said...

உண்மைதான் சித்ரா மேடம்..
நமக்கு நம்ம பிரச்சனை கொடுக்குற கவலைய விட அடுத்தவங்க பிரச்சனை தர (அல்ப) சந்தோசம் அதிகம்..

அன்புடன் மலிக்கா said...

சித்ரா. நான் முதன்முதலில் ஆஜர் தங்களின் வலைபூவிற்க்கு.. நல்லதொரு பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com

Jaleela Kamal said...

// நகை சுவையா நீங்கள் எழுதியதே இரண்டு பதிவிலேயே எனக்கு ரொம்ப பிடித்து விட்டது, அப்ப உங்கள் அப்பா உங்களை விட நகைசுவையா?
உங்கள் மனதில் அவர் பேசிய நகைசுவைகள் ஒலித்து கொண்டே இருக்கும். கண்டிப்பா அவருடைய இழப்பு உங்களுக்கு ஈடு கட்ட முடியாதது தான்.//
உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கேன் வந்து பெற்று கொள்ளுங்கள்

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை.

Chitra said...

நன்றி, சரவணா குமார் சார்.

Chitra said...

நன்றி, மணி சார். அல்ப சந்தோஷம் கொடுத்துட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் போல.

Chitra said...

malikka, thank you very much.

நினைவுகளுடன் -நிகே- said...

காலத்துக்கு ஏற்ற தேடல்
வாழ்த்துக்கள்

Chitra said...

நல்ல நினைவுகளுடன், நன்றி.

அப்பாதுரை said...

ஒபாமாவுக்கு ஓட்டு போட்டீங்களா? வசமா மாட்டிக்கிட்டீங்க (என்னைப் போலத்தான்).
நாம அடுப்பு எரியுதானு பாத்துட்டிருக்கோம்; அவரு வேறே எங்கியோ பாத்துட்டிருக்காரு.
நடுவுல நம்ம ஊரு பிளாகுக்காரங்க புஷ் தான் ராட்சசன்னு பதிவு போட்டுக்கிட்டே இருக்காங்க.
உலக நல விரும்பி கிட்டே கொஞ்சம் ஒபாமா தண்டவாளத்தையும் எடுத்து விடுங்க.

ரிஷபன் said...

ஆயிரந்தான் சொல்லுங்க.. நையாண்டில கிடைக்கற விறுவிறுப்பே தனிதான்.. சீரியஸ் மேட்டர என்னா லைட்டா எடுத்து விட முடியுது.. அதையும் மீறி தெரிகிற ‘நல்லெண்ணங்கள்’.. வாழ்த்துகள்

Chitra said...

Thank you, Appadurai sir.

Chitra said...

என்னை உற்சாகப் படுத்தும் தங்கள் கருத்துக்கு நன்றி, ரிஷபன் சார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நன்றிங்க.. அந்த ட்ராவல் சூட்கேஸ்க்கு!
இல்லாங்காட்டி நமக்கு படிக்க இப்படி ஒரு
'PIECE' கிடைச்சுருக்குமா?

SUFFIX said...

//எங்க வீட்டு பொருளாதார விவகாரமே எனக்கு முழுசா புரிஞ்சிக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குது//

அப்போ நீங்க தான் பொருளாதார துறைக்கு சரியான ஆள்!!

ஹுஸைனம்மா said...

ஐ, நமக்கும் தின்னவேலிதானா? அதுவும் கான்வெண்டா? நானு மேரி சார்ஜண்ட்.

நல்லா எழுதுறீங்கக்கோவ். நான் இப்ப துபாய்க்குப் பக்கத்துல உள்ள அபுதாபிலங்க. என்னா, துபாய் பொருளாதாரத்தைப் பத்திக் கேள்வி நுனி வரைக்கும் வந்துருக்குமே? அதே நெலமதாங்க இங்கனயும். ;-)))

Chitra said...

அப்படியும் வச்சுக்கலாம், ராமமூர்த்தி சார். ஹா, ஹா, ஹா,.....

Chitra said...

ஐ, இது எப்படி இருக்கு? நல்லாத்தான் இருக்கு. நன்றி, SUFFIX

Chitra said...

Message from Ignatius to Sargent: Same boat - same blood!
நன்றி, ஹுசைன் அம்மா

தமிழ் உதயம் said...

சிரியஸ்ஸா எழுதறிங்க. நல்லா இருக்கு. கொஞ்சம் சீரியஸ்ஸா எழுதினா எங்கள ுக்கு தெரியாத சில அமெரிக்க விஷயங்கள தெரிஞ்சுப்போம். நா 106 வது COMMENTS தர்றேன். எனக்கு 30 COMMENTS மேல தாண்டினதில்ல.

Chitra said...

கமெண்ட் எண்ணிக்கையில் ஒண்ணும் இல்லைங்க. எல்லோரின் ஆதரவும் நட்பும் தான்.
நமக்கு சுகமில்லைனா கூட, சீரியஸ் ஆகுமானு தெரியவில்லை, தமிழுதயம் சார்.
கருத்துக்கு நன்றி.

ஜெனோவா said...

யக்கோவ் ... போட்டு கிழி கிழின்னு கிழிக்கிரியல ...
உங்ககிட்ட கொஞ்சம் பார்த்து சூதானமாத்தான் நடந்துகிடனும் போலுக்குல்லா ...

ம்ம்ம் நடத்துங்க ;-)

Chitra said...

அவ்வளவு, மோசம் இல்லை நான், ஜெனோவா சார். ஹி,ஹி,ஹி,.....

கண்மணி/kanmani said...

ஹ்ம்ம்ம்ம் எப்படி இவ்வளவு நாள் உங்க 'நக்கலைப்' பார்க்காம விட்டேன்.

இளைய கவி said...

//"உலக நல விரும்பி": இந்த பொருளாதார சீரழிவுக்கு காரணம், அளவுக்கு அதிகமா கடன் கொடுத்த வங்கிகள் காரணமாமே?
வெட்டி பேச்சு, சித்ரா: கடன் கொடுத்த வங்கிகளுக்கு திருப்பி கொடுக்காத சொங்கிகள் காரணம்.
இப்போ நீங்க அன்னைக்கு, சென்னை போறதுக்காக வாங்கிட்டு போன travel bag (சின்ன suitcase) திருப்பி தராமல் இல்லையா, அது மாதிரி.//

cool lines , Awsome

Chitra said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எல்லாம் கடவுள் அருள், இளைய கவி sir.

Chitra said...

Thank you very much for visiting the blog, Ms.Kanmani

பின்னோக்கி said...

தலைப்பை பார்த்து திகிலுடன் வந்தேன். நல்லா கிளப்புறீங்க பீதிய.

நானானி said...

சித்ரா,
ரொம்பத்தான் குசும்பு. பின்னே சும்மாவா படித்த இடங்கள் அப்படி! நாங்கள் விட்டு விட்டு வந்த மண்ணில் உருண்டு புரண்டல்லவா வந்திருக்கிறீர்கள்!! இனி அடிக்கடி வருவேன்.