Wednesday, January 20, 2010

பல தமிழ் சினிமாக்களில் என்னத்த "காட்டுறாங்க?"இங்கே,   ஒவ்வொரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கும் rating உண்டு.
அந்த அந்த நிகழ்ச்சிக்கு தனி தனி rating...... எந்த எந்த rating உரிய நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கிறதோ அதற்கு ஏத்த மாதிரி, தனி தனி சேனல். வசதி பண்ணி கொடுத்துருக்காங்க. பிறகு, விடிய விடிய டிஸ்னி சேனல் பாத்துட்டு, "என்னது, மின்னி மௌசு ரெக்கார்டு டான்சு, கடைசி வரை ஆடலனு",  சில "ஜொள்னா" பார்ட்டி அப்புறம் புலம்ப கூடாது பாருங்க.

TV viewers உக்கு , நிகழ்ச்சிகளின் theme, content, scenes, violence, உபயோகப் படுத்தும் வார்த்தைகள் (language usage) போன்று சில அம்சங்களை வைத்து rating கொடுத்து,  "இந்த அம்சங்கள் இந்த படங்களில் அல்லது நிகழ்ச்சிகளில் இருக்கு. தொட்டாசிணுங்கி உனக்கு பிடிக்கிலைனாலும் சரி,  உன் புள்ள குட்டி வம்சத்துக்கு ஆகாதுனாலும் சரி - சேனலை மாத்து. இந்த கருமாந்தரத்தை தான் எப்ப போடுவாங்கன்னு  பாக்க உக்கார்ந்துருக்கேன் என்பவர்களே , என்சாய் மக்கா என்சாய்..." அப்படிங்கறாங்க.

Y - for all ages
Y7 - for ages 7 and up
PG - Parental guidance
PG 13 - for children under age 13, parental guidance is needed to watch the program.
Y14 - for ages 14 and up
TV R - Restricted audiences only.
TV MA - for matured audiences only

survey சொல்லுதுங்க:  எட்டு ஒம்பது வயசு வரையிலாவது  பெருவாரியான சின்ன புள்ளைங்க  எல்லாம் அமெரிக்காவிலே ஒழுங்கா அவங்க வயசுக்கு ஏத்த நிகழ்ச்சிகள் தான் டிவில பாக்குறாங்களாம். சர்தாங்க.

எங்க வீட்டில், M TV போன்ற சேனல் எல்லாம் பொண்ணுக்கு பத்து வயதுக்கு மேல தான் என்று ரூல் போட்டாச்சு. அவ வகுப்பில் மொத்தமே ஒம்பது பேர்தான். எல்லோருக்கும் வீட்டில் அந்த ரூல் போல. இது வரை, "அவள் மட்டும் பாக்குறா..... இவன் மட்டும் பாக்குறான்" என்று சொல்லி பாக்கணும்னு கேக்கலை. ஆனால்..........
என் மகள்,  US டிவியில் பார்க்கும் நிகழ்ச்சிகள், அவள் வயதுக்கு உரியதுதானா என்று மெனக்கெடும் என் ரேடார் மூளை, தமிழ் சேனல் நிகழ்ச்சிகள் பார்க்கும் போது ஏனோ கும்மி அடிக்க போய்க்கிட்டு இருந்துச்சு. இப்போ?

கொடுமை கொடுமைன்னு தமிழ் படம் பாக்க போனா, அங்கேயும் ரெண்டு கொடுமை அவுத்து போட்டுட்டு (அட, தலை முடியைதாங்க, நீங்க வேற.....) ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்!

தமிழ் படம் interest வந்துச்சுனா, நம்ம மாதந்தோறும் கப்பங் கட்டி  அழுவுற இருபத்து அஞ்சு டாலர் பழுத்துருமே என்று  அவளை - ஐந்து வயது  செல்லத்தை, சன் டிவி யில் ஒரு தமிழ் படம் பாக்க என்னுடன் உக்கார வச்சுட்டேன்.

"உனக்கு எதுவும் புரியலைனா என்ட்ட கேளு. நான் explain பண்றேன். நீ பேசுற தமிழ் மாதிரியே தான் இருக்கும். சில சமயம், சீரியஸா அல்லது லோக்கல் டச் ஓட பேசும்போது உனக்கு புரியாம போச்சுனா சொல்லு. உனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கேளு."
"சரிம்மா."

என்னுடைய கடைசி அஞ்சு வார்த்தைகள் என்னை பந்தாட போவுது னு தெரியாம சொல்லிட்டேன்.
1,2,3 ............. டிங் டிங் டிங் .......... மூவி ஸ்டார்ட்ஸ் : டைம்: மதியம் 2:45 மணி.

"அம்மா, இப்படித்தான் நீங்க ஷாப்பிங் போகும் போது பயந்து கிட்டே போவீங்களா?"
"இல்லமா, இது சினிமா. நிஜத்தில் இப்படி எல்லாம் அதிகம் நடக்காது."
"அம்மா, யார் இவன்? எதுக்கு தாத்தா மாதிரி ஆளை எல்லாம் இவன் அடிக்கிறான்?"
"இவன் bad guy. அப்படிதான் அடிப்பான்."
" யாரையும் அடிக்க கூடாதுன்னு இந்தியாவில் சொல்லி தர மாட்டாங்களா?"
"இவன் bad guy மா. யார் பேச்சும் கேக்க மாட்டான்."

டன் டன் டன் டன் .......டான்.............. டன டன டன் டன் டன் .......... டான்.
hero entry:

"இவன் யார் மா? இவனும் ஷாப்பிங் பண்றவங்களை, ஷாப் வச்சுருக்கிரவங்களை அடிக்க போறானா?"
"இல்லமா. படத்தை பாரு."
" இவனும் அடுத்தவனை அடிக்குறான், அம்மா. ஒரு தாத்தாவை அந்த ஆளு அடிச்சதுக்கு, அவன் கூட வந்த people எல்லாரையும் அடிக்கிறான்."
" இவன் நல்லவங்களை அடிக்க மாட்டான். only bad guys."
" so, he is a good bad guy."
"good bad guy?"
"yes. bad guy னா, நல்லவங்களை அடிக்குறான். good bad guy னா, கெட்டவங்களை அடிக்குறான். என்ன ஆனாலும், அடிக்குறது தப்புன்னு நீங்கதானே நான், அலீசை அடிச்சப்போ சொன்னீங்க."

(இந்த பொறுப்புள்ள அம்மாவின் பருப்பு ரொம்பவே நேரம் கெட்ட நேரத்துல வேகுது.)
"ஆமாம்.......... good bad guy னே வச்சுக்க."

சண்டை முடிஞ்சு item song: அடிதடி முடிஞ்சு அதிரடி நடனம்: கும்மாங் குத்து முடிஞ்சு டப்பாங்  குத்து.

"அம்மா, இந்த பொண்ணு good bad guy ஓட girl friend ஆ?"
"இல்ல. சும்மா டான்ஸ் ஆடுவா. அப்புறம் போய்டுவா."

ஒரு தோழியின் அப்பா சொன்ன வில்லங்க கமெண்ட் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது: முந்தி எல்லாம், வில்லன் முன்னாலே தான் ஆடுறதுக்கு இப்படி பொண்ணு ஒண்ணு வரும். காபரே டான்ஸ் னு பாப்போம். இப்போ ஹீரோ வுக்கு தான் அந்த மச்சம். அடுத்து யாருக்கு அந்த அதிர்ஷ்டமோ?

- வெட்டி பேச்சின் ஆருடம்: சன் pictures போற வேகத்துக்கு, அவங்க தயாரிப்பில் வர  படங்களை பாக்க போறவங்களுக்கு தியேட்டரில் நேரில் வந்து, ஒரு அம்மணி அப்படி ஆடிட்டு போக வழி பண்ணிடுவாங்க. இப்போவே சன் டிவி இல் ராஜா யாரு ராணி ஆறு நிகழ்ச்சியில் முன்னோட்டம் விட்டு பாத்துட்டாங்க.

"நான் போன வாட்டி தாத்தா பாட்டி பாக்க ஊருக்கு போனப்போ இப்படி யாரும் dress பண்ணி பாக்கலை."
"நானும் பாக்கலை."
"இவ ஷாப்பிங் பண்ணவே இந்த டிரஸ் லதான் வந்தாளா?"
"தெரியலை. சும்மா வந்து, டான்ஸ் ஆடிட்டு போயிருவா."
" பாவம் அந்த பொண்ணு. அவளுக்கு டிரஸ் சின்னதா போனப்புறம், அவங்க அம்மா பெரிய சைஸ் டிரஸ் வாங்கி தரலை."
"இல்ல, அவ டான்ஸ் ஆட மட்டும் அப்படி டிரஸ் போட்டு இருக்கா...."

தன் ஷர்ட் ஐ தூக்கி லேசாக மேலே சுருட்டி வைத்து கொண்டு, sofa மேல் ஏறி குதித்தாள்.

"sofa மேல ஏறி குதிக்காத. ஷர்ட் ஐ இழுத்து விடு. அசிங்கமா வயித்தை எல்லாம் காட்ட கூடாது."
"அம்மா, இந்தியாவில் எல்லா அம்மாவும் தன் பொண்ணு கிட்ட இப்படி சொல்ல மாட்டாங்கனு நினைக்கிறேன். பாருங்க, அந்த பொண்ணுக்கு அவங்க அம்மா அப்படி சொல்லலை."
"சரி விடு. இந்தியாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. என் பொண்ணு செய்ய கூடாது. எங்கே இருந்தாலும் சரி. புரிஞ்சுதா?"
"ஓகே. Whatever!"

அட கண்றாவியே, படம் இன்னும் கதை (??) பக்கம் எட்டி கூட பாக்கல. அதுக்குள்ளேயே இப்படி, இங்கே நம்ம கதை கந்தல் ஆகுதே!
alert............... ஓய்ங்.........ஓய்ங்........... ஓய்ங்............. சைரன் சத்தம் உள்ளுக்குள் கேக்குதே.......
TV remote எடுத்து gun மாதிரி தற்காப்புக்கு  ரெடியா வச்சுக்கிட்டேன்.

"அம்மா, இந்த good bad guy, நிஜமா good guy தான். பாருங்க, அந்த பொண்ணு ஹிப், டம்மி, பெல்லி பட்டன் எல்லாம் தெரியுதுன்னு தன் கையை வச்சு மூட பாக்குறார்."

Attack............Charge............... TV remote gun shoot: change the channel:
click. click. click.

"Wonder Pets.... Wonder Pets....... TV Rating Y" tv show க்கு மாறுது எங்கள் நிகழ்ச்சி.
சுபம். டைம்: மதியம் 3 மணி.

பின்குறிப்பு:
இப்போ தமிழ் படம், sun tv, நான் மட்டும் ஏதோ திருட்டு "தம்" அடிக்குற குட்டி பையன் மாதிரி - என் பொண்ணுக்கு தெரியாம அப்போ அப்போ பாக்குறேன். நமக்கு பதினெட்டு வயசுக்கு மேல ஆனதில் இந்த சலுகை பாருங்க. ஹி,ஹி,ஹி.....63 comments:

goma said...

ரெண்டு கொடுமை அவுத்து போட்டுட்டு (அட, தலை முடியைதாங்க, நீங்க வேற.....) ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்!

இது சித்ரா டச்..........ஹ்யூமர் சிகரத்தை டச் பண்ணீட்டீங்க சித்ரா

Chitra said...

ரொம்ப நன்றி, கோமா மேடம். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு உற்சாக டானிக். (இப்படித்தான் உசுப்பேத்தி, உசுப்பேத்தி சிகரங்களை தொடுகின்றேன்...... ஹா, ஹா, ஹா....)

goma said...

Y - for all ages
Y7 - for ages 7 and up
PG - Parental guidance
PG 13 - for children under age 13, parental guidance is needed to watch the program.
Y14 - for ages 14 and up
TV R - Restricted audiences only.
TV MA - for matured audiences only

நம்ம சேனல் பாஷையில்
v-விடலைப் பையங்களுக்கு
j- ஜொள்ளுபார்ட்டி -above 45
N-நோஞ்சான்பார்ட்டி for all ages ,below 5 and above 75
......இதையெல்லாம் யோசிச்சுதா உங்க யூ எஸ், டீவீ

goma said...
This comment has been removed by the author.
sathishsangkavi.blogspot.com said...

//கொடுமை கொடுமைன்னு தமிழ் படம் பாக்க போனா, அங்கேயும் ரெண்டு கொடுமை அவுத்து போட்டுட்டு (அட, தலை முடியைதாங்க, நீங்க வேற.....) ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்!//

தமிழில் எந்தச் சேனல் போனாலும் இதே தொல்லை தாங்க...

இதைவிட விளம்பரம் போடுவானுங்க பாரு.... அது அதவிடக் கொடுமை...

vasu balaji said...

:)). என்னா ரேட்டிங் வெச்சாலும் தி.வீ. ரேட்டிங்க் முன்னாடி அடி பட்ரும்னு தான் வைக்கல போல.
/இப்போ தமிழ் படம், sun tv, நான் மட்டும் ஏதோ திருட்டு "தம்" அடிக்குற குட்டி பையன் மாதிரி - என் பொண்ணுக்கு தெரியாம அப்போ அப்போ பாக்குறேன். நமக்கு பதினெட்டு வயசுக்கு மேல ஆனதில் இந்த சலுகை பாருங்க. ஹி,ஹி,ஹி...../

இங்க ஒரு 10 வயசு விடலை அய்ய தோடான்னு சவுண்ட் குடுக்கும்

பின்னோக்கி said...

எங்க இந்தியால எல்லா குழந்தைகளயும் மெச்சூர்டா வளர்க்குறோம் பார்த்தீங்கள்ள ??

Thenammai Lakshmanan said...

ஒரு சினிமா பார்த்ததுக்கே சித்ரா சுனாமில மாட்டுன கப்பலாய்ட்டீங்க ஹாஹாஹா

SUFFIX said...

//என்னுடைய கடைசி அஞ்சு வார்த்தைகள் என்னை பந்தாட போவுது னு தெரியாம சொல்லிட்டேன்.//

ஹா ஹா ரிஸ்க் ரஸ்க் மாதிரி கையில எடுத்திட்டிங்களே.

SUFFIX said...

இடுகை நகைச்சுவையாக இருந்தாலும், கொஞ்சம் யோசிக்கவும் வச்சிட்டிங்க சித்ரா, பெற்றோர்களும் குழந்தைகள் முன் இது போன்ற விடயங்களில் முன் ஜாக்கிரதையாக இருக்கணும்.

Dr.Rudhran said...

அழகாக வந்திருக்கிறது

மகா said...

superb article ....keep it up mam...

Unknown said...

சூப்பரு..

சமாளிக்கத் தெரியலை. ஆமா, ஏன் இந்தியால வளர்ற பிள்ளைங்க எல்லாம் இப்பிடி கேக்க மாட்டேங்குது?

Unknown said...

ஹா ஹா..., ரொம்ப நல்லா இருக்கு..., அமெரிக்கா போயும் சன் டிவி பாக்ற கலாச்சாரம் போகல்ல...,

CS. Mohan Kumar said...

நன்று. நன்றி

ஜெட்லி... said...

அதகளம் பண்றீங்க.....
//அட கண்றாவியே, படம் இன்னும் கதை (??) பக்கம் எட்டி கூட பாக்கல. அதுக்குள்ளேயே இப்படி, இங்கே நம்ம கதை கந்தல் ஆகுதே!
//

:))

Unknown said...

Good one Chitra..but this the is reality of life...how much can we protect our children...and till when...

தாரணி பிரியா said...

//அம்மா, இந்தியாவில் எல்லா அம்மாவும் தன் பொண்ணு கிட்ட இப்படி சொல்ல மாட்டாங்கனு நினைக்கிறேன். //

படிக்கும்போது சிரிப்பு வந்தாலும் யோசிக்க வைக்குதுங்க. அயல் நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகள் இப்படித்தானே யோசிப்பாங்க :(

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு:))

S Maharajan said...

மேடம்
கலைஞர் டிவி அங்கே தெரியாதது நல்லதா போச்சு
இல்லேன்னா "மானாட மயிலாட" என்கின்ற காவிய ஷோ பத்தியும்
உங்க பொண்ணுக்கு விளக்க வேண்டியிருக்கும்

பத்மநாபன் said...

சீரழிவு வரவேற்பு அறையில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து இருப்பதை, சிரிப்பும் சிந்தனையுமாய் எடுத்து சொல்லியுள்ளீர்கள் .
good bad guy , good guy ஆக மாறியது highlight .....எப்படி அந்த Innocence யை காப்பாற்ற போறோமோ ???

Paleo God said...

நீங்க எதுக்கும் மெகா சீரியல் ட்ரை பண்ணுங்களேன்..:))

திருவாரூர் சரவணா said...

இங்க மிட் நைட் மசாலான்னு சொல்லி நடு ராத்திரியிலதான் ஏடா கூடமா போட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆனா அமெரிக்காவுக்கும் மிட் நைட் மசாலா காட்டணும்னு நினைச்சுதான் இந்தியாவோட பகல்லயே இப்படி. இவங்கள சொல்லி என்ன பண்றது . இனி எல்லா படம் மட்டுமல்ல...சீரியல் கூட இப்படித்தான் வரும் போலிருக்கு.

ராமலக்ஷ்மி said...

//(இந்த பொறுப்புள்ள அம்மாவின் பருப்பு ரொம்பவே நேரம் கெட்ட நேரத்துல வேகுது.)//

:))!

S.A. நவாஸுதீன் said...

///இடுகை நகைச்சுவையாக இருந்தாலும், கொஞ்சம் யோசிக்கவும் வச்சிட்டிங்க சித்ரா, பெற்றோர்களும் குழந்தைகள் முன் இது போன்ற விடயங்களில் முன் ஜாக்கிரதையாக இருக்கணும்///

இதத்தான் நானும் சொல்ல நினைத்தேன். நல்ல விஷயம் சித்ரா. பகிர்வுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

செம ஹாஸ்யங்க உங்களுக்கு

ஓஹ்! இடுக்கண் வருங்காலா ..

தமிழினிமை... said...

superdaa..
NOMBA NOMBA NASITHTHAEN..
sorry..sorry makkaa RASITHTHAEN..

தமிழ் உதயம் said...

இதனால் அறியப் படுவது யாதெனில் குழந்தைங்ககிட்ட ரெம்ப ஜாக்கிரதையா பேசணும்

புலவன் புலிகேசி said...

விஜய் டிவில கொஞ்சமா ஆரம்பிச்சா அன்க அதை காப்பியடிச்சு பெருசா பசங்களை சீரழிக்கிறானுங்க...

Ms.Chitchat said...

Enjoyed ur write-up Chitra, u have dissected the facts point by point. That is the cinema of today,a fight, a dance with barely clad girls or sensuous steps, no story - a hit:):) With us having seen Paarthal pasi theerum and Paasa malar etc., idhu kodumai. But, as these films become hits, it encourages others to follow suit. Adhu thaan indraiya nilamai :( Very thought provoking !!!!!

Chitchat

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அம்மாடி சித்ரா, இதைப் பற்றி நான் எழுத இருந்தேன். நீ முந்தி விட்டாய் . நல்லது.
எங்க வீட்டில் gas boiler திருத்த ஒரு ஆங்கில மெக்கானிக் வந்தார். அந்த நேரம் நான் மட்டும் தான் வீட்டில் இருந்தேன். சன் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் வந்த போது நிறுத்தாமல் போய் கதவைத் திறந்து விட்டேன். அவரும் போகும் போது டிவி யை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு சமையலறைக்குப் போய் விட்டார். சுமார் ஒரு மணி நேரம் ரிப்பேர் வேலை பண்ணினார். நானும் டிவி யைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். பெரிதாக ஒன்றும் பார்க்கவில்லை, அந்தக் காலத்து சிவாஜி , கே ஆர் விஜயா பாடல்கள் தான் போய்க் கொண்டிருந்தது.
விடை பெறும் போது ,இதன் rating என்னவென்று கேட்டார். அப்படி ஒன்றும் இல்லை என்று விழித்தேன். ' This is very sexy ' என்றவர் அவர்கள் கண்ணில் உடம்பில் எல்லாம் செக்ஸ் ஓடுகிறது. ப்ளூ பிலிம் பார்த்தால் கூட இப்படி பீலிங்க்ஸ் வராது. பிள்ளைகள் பார்க்க விட வேண்டாம் என்று அறிவுரை சொல்லிப் போனார். யோசித்த போது உண்மைதான் என்று புரிந்தது. நம்ம திரைப் படங்களில் கண்ணாலேயே பல கற்பழிப்புகள் நடப்பது நமக்குப் பழகி விட்டதால் தெரிவதில்லைப் போலும்.
இப்போதெல்லாம் நானும் உன்னைப் போல் களவாகத் தான் சண் டிவி பார்க்கிறேன். அழுவதா? சிரிப்பதா?
.

தமிழினிமை... said...

///இந்த பொறுப்புள்ள அம்மாவின் பருப்பு ரொம்பவே நேரம் கெட்ட நேரத்துல வேகுது.)///
...............................................

///அம்மா, இந்த good bad guy, நிஜமா good guy தான். பாருங்க, அந்த பொண்ணு ஹிப், டம்மி, பெல்லி பட்டன் எல்லாம் தெரியுதுன்னு தன் கையை வச்சு மூட பாக்குறார்."///

...............................................


///TV remote எடுத்து gun மாதிரி தற்காப்புக்கு ரெடியா வச்சுக்கிட்டேன்///
...........................................
//இல்ல. சும்மா டான்ஸ் ஆடுவா. அப்புறம் போய்டுவா."////
..........................................
DIALOGUES ..that were my pick of the day..
technically well footed and comically appealing..

Priya said...

Interesting Chitra!

//இப்போ தமிழ் படம், sun tv, நான் மட்டும் ஏதோ திருட்டு "தம்" அடிக்குற குட்டி பையன் மாதிரி - என் பொண்ணுக்கு தெரியாம அப்போ அப்போ பாக்குறேன்.//......

என்ன கொடுமை சித்ரா இது?

அப்போ நான் கூட எனக்கு குழந்தை பிறந்த அப்புறம்,திருட்டு தம், ச்ச...திருட்டு டிவிதான் பார்க்கணுமோ....:)

தமிழினிமை... said...

சித்து ..
இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய
தொய்வுக்கும் சேர்த்து இந்த பதிவில்
வேலை நடந்திருப்பது காண நல்ல நலம்..
...........................................
ஒரு மனதை நனைக்கும்
நல்ல நகைச்சுவை சாரல்
போல இருந்தது
word usage..
..............................
ஆனால் அந்த நீர் பாய்ச்சல்
செடிகளின் வேருக்கு உண்டான
பாய்ச்சல் மாதிரி அல்லாது..
அடக்க முடியாத ஆற்றில்
உட்கார்ந்து கொண்டு
குழந்தைகள் ஒவ்வொருவரின் மேலும்
தெளித்து விளையாடும்
குதூகலத்தின் சாரல் போல அமைந்திருந்தது.
ரொம்ப சிலிர்ப்பானது..
.......................................
i loved this particular write-up
and enjoyed it with real fun..
my SMILES TOWARDS MY MONITOR
is a blissful proof to it..
.....................................
-AMUDHU....

தமிழினிமை... said...

///அழகாக வந்திருக்கிறது///
-This is my fave comment and wud have been mine too..
but as a lover of words i wanted to add more and more for you to cheer you up..
keep going kannammaa..and that too with lots of fun and frolic..

Unknown said...

Hi Chithra,
Loved the posting, We started feel the same way,when poorvi liked tamil movie. I was very happy, and then came all kind of questions.
so no more tamil movies,
Enga veetulayum thiruttu thanamathan pakkurom
he.he..

Sabarinathan Arthanari said...

நல்லா இருக்குங்க

Romeoboy said...

ஏய் யாரப்பா அந்த டிவிக்காரங்க,, முதல்ல அவங்களுக்கு சுட்டி டிவி கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க!!!! பாவம் அந்த குழந்தை 30 நிமிஷத்துல எத்தனை கேள்வி கேக்குது, ஒரு நாள் முழுசா உங்க சேனல் பார்த்தா தமிழ்நாடு பக்கமே அவங்க அம்மா கூடிட்டு வரமாட்டாங்க.

Joe said...

Valid points!

neatly written article with good amount of humour! keep it up!

நசரேயன் said...

//என் பொண்ணுக்கு தெரியாம அப்போ அப்போ பாக்குறேன். நமக்கு பதினெட்டு வயசுக்கு மேல ஆனதில் இந்த சலுகை பாருங்க. //

அதுவாது கிடைக்குதேன்னு சந்தோஷ படுங்க..

suvaiyaana suvai said...

//திருட்டு "தம்" அடிக்குற குட்டி பையன் மாதிரி - என் பொண்ணுக்கு தெரியாம அப்போ அப்போ பாக்குறேன்//
என்ன கொடுமை இது?

ஹேமா said...

எங்க கலாசாரங்களும் பண்பாடுகளும் எங்க வரைக்கும் வந்து நிக்குது பாருங்க.இன்னும் என்ன என்னவோன்னும் யோசிக்கணும் சித்ரா.

ரிஷபன் said...

அருமை..சீரியஸ் மேட்டரை நகைச்சுவை கலந்து கொடுத்தாலும் உள்ளே கொதிக்க வச்சுட்டீங்க..

SurveySan said...

:) ஒரு டிவி பாக்கரதுல இம்புட்டு மேட்டர் இருக்கா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

நிஜம் . நிஜம்.. எங்கள் வீட்டில் தமிழ் சினிமா பார்ப்பது நிப்பாட்டி வெகு காலம் ஆனது..

தமிழ்ப்பாட்டு படத்தைவிட இங்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் கன்னியர் செக்ஸியாகத்தெரிவதில்லை...

வாழ்த்துகள் சித்ரா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்படமெல்ல்லாம் அதிகமா குட்டீஸோட பாக்கம இருக்கறது பெட்டர் தான்.. நுணலும் தன் வாயால் கெடும்.. மாதிரி செமயா மாட்டி இருக்கீங்க..

ஆதி மனிதன் said...

Good one.

Prathap Kumar S. said...

ஹஹஹஹ.. முடில சித்ரா டீச்சர்... சிரிச்சுட்டே இருக்கேன்... சிரிச்சு முடிச்சப்புறம் கமெண்டு போடுறேன்...ஹஹஹஹஹ

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... ரொம்பப் பாவம் நீங்க.
குழந்தைங்க முன்னாடி டி.வி. பார்க்கன்னு தனி கல்ச்சர் இருக்கு போல.
ரொம்ப நல்லாருக்குங்க பதிவு.

Mythili (மைதிலி ) said...

nallaa irukku chitraa.. adiyei..magalukku thamizh cinema kaattanumnu aasaipatta muthal ammaa neeyaaha thaan irukkum... naan eppavume thaniyaa thaan parpen.. even without husband... yarodeyum sernthu paarka mudiyaatha cinemaakkal... serialoda nilaimai innum mosam. eppavum poraami, maamiyaar kodumai, etc. etc.. very hilarious way of writing.. thanks for sharing..

கமலேஷ் said...

ரொம்ப அழகா ரசிக்கும் படி எழுதுறீங்க..குழந்தைங்களோட t.v பாக்ரதுல கூட இவ்வளவு பிரச்சனை இருக்கா....இதை மாதிரி சீன்லாம் என் வாழ்க்கைலயும் வரும்னு நினைக்கும் போது கல்யாணம் பண்ணவே லேசா பீதியாதான் இருக்கு...

அனுபவம் said...

அம்மாடியோவ் அருமையா இருக்கு!
அன்புடன் தணிகாஷ்

Jaleela Kamal said...

//உங்கள் இந்த பதிவை படிக்கல‌, பிறகு படித்து கமெண்ட் கொடுக்கிறேன். //சித்ரா அக்காரவடிசல் கொஞ்சம் குழைவாதான் செய்வார்கள். அது என் ருசிக்கேற்ப நான் செய்த்து. என் பதிவு எடுத்து எல்லாம் காப்பி செய்து வேறு பிரபள தளத்தில் கொடுக்கிறார்கள், கீழே பெயர் இல்லாமல், ஆகையால் குறிப்பு போட பிடிக்கல.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

டி.வி. பார்க்கப் பிடிக்காமல் தான் இதற்கே வந்தேன்.
மறுபடியும் ஞாபகப் படுத்துகிறீர்கள்....

malar said...

உங்கள் பதிவு நல்ல இருத்தது.

படத்தை பர்க்கவிடாமல் தடுத்து விட்டீர்கள்.

அமெரிக்காவில் உடை உடுதுவதில் இருந்து மக்களுடைய பழ்க்கவழ்க்க்ங்கள் வரை ஏகதேசம் அந்த படத்தில் வருவது போல் தான் நடக்கும்( சண்டை காட்சிகள் தவிர)என்று என்க்கு தெரிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஹுஸைனம்மா said...

சித்ரா,

நகைச்சுவையாக எழுதினாலும் நிஜம். எங்க வீட்டில அதனாலேயே சன், கலைஞர் etc. வெல்லாம் இல்லை.

எப்பவாவது படம் பார்த்தாலும் மூணுமணிநேரப் படத்தை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி முக்காமணிநேரத்திலயே முடிச்சுடுவோமே!!

ரொம்பப் பொத்திவைக்கிறோம்னு சிலபேர் சொல்லுவாங்க; என்ன சொன்னாலும் நம் கண்முன்னாடி அந்தக் கொடுமையைப் பார்க்க சகிக்கல...

சிரிச்சுகிட்டே சிந்திக்க வைக்கிறீங்க!!

அன்புடன் மலிக்கா said...

இதுக்குதான் நாங்க இதுபோல வெட்டி வேலையெல்லாம் பார்க்கிறதில்லை தோழி. செம நக்கல் பதிவுல சூப்பர்

அண்ணாமலையான் said...

நல்ல அருமையான பதிவு

விஸ்வாமித்திரன் said...

யக்கா சும்மா போட்டு தாக்கறீங்க ; keepit up.

Jaleela Kamal said...

முழுவதும் படிச்சாச்சு,
குழந்தைகளை வைத்து கொண்டு டீவி பார்க்கும் போது ரொம்ப உஷாரா பார்க்கனும். இதுக்கு தான் நாங்க குறிப்பிட புரொகிராம் மட்டும் தான் பார்ப்போம், ஆனாலும் டீவியிலிய இப்ப வர எல்லாம் படு மோசம். குழந்தைகள் கெட்டு போக நிறைய சான்ஸ் இருக்கு

RAGUNATHAN said...

நல்ல பதிவு. அப்படியே இதையும் படிங்க
http://krnathan.blogspot.com/2010/01/blog-post.html

சுஜா செல்லப்பன் said...

ரொம்ப நல்ல பதிவு.....இதே அனுபவம்தான் எனக்கும்...இதுக்கும் மேல போய் சின்னக் குழந்தைங்கள் ஆடும் நிகழ்ச்சிகள் நிறைய வருது.அதிலும் chemistry பத்தி பேசறாங்க...என்ன கொடுமை இது?????

Angel said...
This comment has been removed by the author.