Monday, January 4, 2010

New Year சரவெடிகள்!

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
தெரிவிக்க நினைத்து மறந்த அனைவருக்கும், வாழ்த்துக்கள்.
தெரிவிக்க, நினைக்க கூட மறந்தவருக்கும் வாழ்த்துக்கள். (போன போகுது, விடுங்க. அடுத்த வருஷம் மறக்காதீங்க.)

2010 அருமையாக நண்பர்கள் பட்டாளத்துடன் இனிதே ஆரம்பம் ஆயிட்டு. சுமார் ரெண்டு வருடங்கள் கழித்து ஒரு "Get together" ............ பலர், வீடுகள் வாங்கி செட்டில் ஆகி விட்டிருந்தார்கள். சில நண்பர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. சிலருக்கு, குழந்தைகள் என்று குடும்பம் பெருகி இருந்தது.

எங்கள் நண்பர் கூட்டத்தில் - அடித்த கொட்டத்தில் - வெடித்த சரவெடிகள் சில:

சரவெடி #1:
" முடி (hairline) தலையில் மேல ஏறிகிட்டே போகுதுன்னு கவலை பட்டீங்களே?"
"முன்னாடி மேல மெதுவா ஏறி, இப்போ பின்னாடி சல்லுனு  இறங்க ஆரம்பிச்சுட்டு. என்ன செய்ய?"

சரவெடி #2:

"ஐயா சைஸ் ஐ பார்த்தால், உங்க மனைவி நல்லா சமைப்பாங்க போல தெரியுது."
"காயமே இது பொய்யடா, வெறும் காற்று அடைத்த பையடா......"

சரவெடி #3:
"சார், ஒரு  car companyil மெக்கானிக் ஆக இருக்கார்."
" மிசிகன்  Auto companyil புது கான்செப்ட் (New concept car) டிசைன் பண்ணும் engineering teamil பெரிய போஸ்டில் இருக்கேன்."
"அந்த "ஆல் இன் ஆல் அழகுராஜா" வேலையை அப்படியும் சொல்லலாம்."

சரவெடி #4:
"அண்ணன் கூட விளையாட போறியா?"
"ஒரு மாத வித்தியாசத்துக்கு எல்லாம் அண்ணனா? அவன் பெரியவன் ஆனதும், ஏம்மா என் potential டாவு எல்லாரையும் என் தங்கை ஆக்கி வச்சுருக்கேன்னு கோபப்படப் போறான்."

சரவெடி #5:

"என் மனைவி, தினமும் காலையில் ஒரு அரை மணி நேரமாவது பூஜை பண்ணுவா. நல்ல கணவர் அமையணும்னு பதினாறு வயதில் இந்த பழக்கத்தை ஆரம்பிச்சிருக்கா."
"அவ்வளவு பூஜை பண்ணியும் நீதான் கணவர்னா, பூஜை பண்ணலைனா, அவங்க நிலைமை இன்னும் மோசம் ஆயிருக்கும்."
"இன்னும் ஏன் தொடர்ந்து பண்ணுறாங்க? என் கணவரை நல்லவரா மாத்து சாமின்னு இருக்குமோ?"
"பூஜை விஷயத்தை ஏண்டா சொன்னேன்னு இருக்கு?"

சரவெடி #6:

புபேஷ், தன் மனைவியிடம்: "சாலமன் ஐ எனக்கு பதினொரு வருஷமா நல்லா தெரியும். எனக்கு ரொம்ப friendu னு சொல்லி இருக்கேன்ல."
சாலமன்: "ஆமாங்க. புபேஷ் ரொம்ப நல்லவங்க. அதுக்கு மேல என்னவெல்லாம் சொல்லணும், என்னவெல்லாம் சொல்ல கூடாதுன்னு இன்னும் புபேஷ் என்னிடம் சொல்லவில்லை. அதுக்கு அப்புறம், நீங்க என்ன கேள்வி வேண்டுமானாலும் என்ட்ட கேளுங்க. நாம பேசலாம்."
புபேஷ்: "இந்த "total damage introduction" உக்கு நான் சும்மாவே இருந்துருக்கலாம்.

சரவெடி #7:

"எப்படி சாலமன், ஏழு எட்டு மணி நேரம் டிரைவ் பண்ணி சித்ராவை கூட்டிட்டு போய் ரஜினி படம் தியேட்டரில் பாக்குறீங்க?"
"எனக்கு ரஜினி படம் பிடிக்காது. ஆனால், சித்ராவை பிடிக்கும். நான் தியேட்டரில் படம் பாக்கலைனா ரஜினி கோவிச்சுக்க மாட்டார். ஆனால் சித்ரா கூட ஒரே வீட்டில் அதுக்கு அப்புறம் நான்  இருக்கணுமே. அதான்."

சரவெடி #8:
"டேய், எப்பவும் உன்னை  பீர் பாட்டிலும் கையுமாத்தான் பாத்திருக்கேன். இப்போதான், பால் பாட்டிலும் கையுமா பாக்குறேன்."
"பழசை எல்லாம் நினைவு படுத்தாத. நான் இப்போ உக்கார்ந்து புலம்ப முடியாது. என் மகளை கவனிக்கணும்."


சரவெடி #9:
"பையன் உங்களை மாதிரியே இருந்தாலும் நல்லா, அழகா இருக்கான்."


சரவெடி #10:
"ஊரில் பொண்ணு பாத்தாச்சா?"
"இன்னும் பாத்துகிட்டு இருக்காங்க. போன வாட்டி, ஒரு பொண்ணு போட்டோ அனுப்புனாங்க. என் மூஞ்சு எனக்கு தெரியும். அந்த பொண்ண வேறு நான் கட்டி இருந்தா, எங்களுக்கு பொறக்க போற குழந்தை, புறந்த உடனேயே, hospitalai விட்டு மரத்துக்கு மரம் தாவி எங்களுக்கு முன்னாடி வீடு வந்து சேர்ந்திரும். அதான் வேண்டாமுனுட்டேன்."


HAPPY NEW YEAR 2010 !


53 comments:

ரிஷபன் said...

பட்.. படார்.. வெடிச்சத்தம் ஜோர்..
பையன் உங்களை மாதிரியே இருந்தாலும் நல்லா, அழகா இருக்கான்."

இந்த ஒத்த வரிக்கே சிரிப்பு பிச்சுகிச்சு..
//ஆனால் சித்ரா கூட ஒரே வீட்டில் அதுக்கு அப்புறம் நான் இருக்கணுமே. அதான்..//
காமெடி ட்ராஜெடி ஆகாம இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?!

Dr.Rudhran said...

may this year be full of smiles

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா!

அண்ணாமலையான் said...

அடடே வாங்க வாங்க நீங்க இல்லாம ஒரே நிசப்தமா இருந்தது,இப்பத்தான் வெடி சத்தம் கேக்குது... இந்த 2010 ல தூள் கிளப்புங்க.....

Paleo God said...

#7 Is not a Joke..:) welcome back..:)

அரங்கப்பெருமாள் said...

ஹாஹா..ஹாஹா..

Paleo God said...

நான் சொல்லவந்தது அது இல்லங்க... அது கிட்ட தட்ட ஒரு அக்கறை, அன்பு, கவிதையா எனக்கு தெரிஞ்சிது அதான் ::))

பின்னோக்கி said...

இவ்வளவையும் நியாபகம் வெச்சு எழுதுனதுக்கு எதாவது வல்லாரை கீரை சாப்டறீங்களா ?. அனைத்தும் அருமை.

லெமூரியன்... said...

\\தெரிவிக்க, நினைக்க கூட மறந்தவருக்கும் வாழ்த்துக்கள்........//

அடங்கவே மாட்டீங்களா....!
நாங்க வாழ்த்து சொல்லனும்னு நெனைச்ச...நீங்கதான் இன்னும் 5 நாளக்கு என்ன யாரும் distrub பன்னாதீங்கப்பானு ஒரு பதிவு போட்டீங்க...!

சரி சரி போகட்டும்.....!
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!

கலையரசன் said...

பட்.. பட்.. படார்.. டமார்.. டப்.. டப். டொம்.. டும்..பட்.. பட்..

பட்டாசா நாங்களும் சிரிக்கிறோம்!!

SUFFIX said...

சரவெடிகள் டாப் 10!! எல்லாமே சூப்பரு. புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிங்க, நல்ல நட்புகள் என்றும் தொடருட்டும் சித்ரா.

sathishsangkavi.blogspot.com said...

புத்தாண்டின் முதல் பதிவை 10000 வலா சரவெடியுடன் ஆரம்பிச்சு இருக்கறீங்க....

வாழ்த்துக்கள்.....

Jaleela Kamal said...

ம்ம்ம் சித்ரா எல்லோருடனும் அடித்த சரவெடி சூப்பரா இருக்கு //சரவெடி #8:

"டேய், எப்பவும் உன்னை பீர் பாட்டிலும் கையுமாத்தான் பாத்திருக்கேன். இப்போதான், பால் பாட்டிலும் கையுமா பாக்குறேன்."

"பழசை எல்லாம் நினைவு படுத்தாத. நான் இப்போ உக்கார்ந்து புலம்ப முடியாது. என் மகளை கவனிக்கணும்."//
ச‌ரியான‌ காம‌டி/

புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

//பாக்கிஸ்தாணி ப‌ரோட்டா கீமா, இத‌ற்கு முன் உள்ள‌ ப‌ரோட்டா குறிப்பும் இந்த‌ கீமாவையும் சேர்த்து செய்து பாருங்க‌ள் ஓர‌ள‌விற்கு மியாமி டேஸ்ட் கிடைக்கும். வ‌ந்த‌தும் இந்த‌ அக்காவை தேடி வ‌ந்து க‌ருத்து தெரிவித்த‌மைக்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம் சித்ரா//

தமிழ் உதயம் said...

சரவெடி சப்தத்துல காதே செவிடாப் போச்சு.

கண்ணா.. said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

2010 ஆரம்பத்திற்கு 10 சரவெடி ஆர்ப்பாட்டாமா...தூள்..!!

Ms.Chitchat said...

Puthaandu Nalvazhthukkal. First time to ur site and liked it. Enjoyed the saravedis. Following u.

Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/

Romeoboy said...

10,000 வாலா பட்டாசு மாதிரி சர சரன்னு இருக்கு ஜோக்ஸ் எல்லாம்... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கு எல்லாம் ..

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. சரவெடி சௌண்ட் செமையா இருக்கு.

vasu balaji said...

வந்ததுமே அதிரடி சரவெடியா:)) பட்டய கிளப்புங்க

goma said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சரவெடி நல்லாத்தான் வெடிக்குது....

Prathap Kumar S. said...

ஹஹஹ சான்ஸே இல்ல... பத்துநாள் அமைதியா இருந்துச்சு... இப்பத்தான் சத்தமே வந்துருக்கு... எல்லா காமெடியும் சூப்பர்...அதுல ரஜீனிபடம் மேட்டர், பீர் மேட்டர், கல்யாண பொண்ணு மேட்டர் வயறு வலிக்குது...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா டீச்சர்.

மகா said...

//சரவெடி #4:
"அண்ணன் கூட விளையாட போறியா?"
"ஒரு மாத வித்தியாசத்துக்கு எல்லாம் அண்ணனா? அவன் பெரியவன் ஆனதும், ஏம்மா என் potential டாவு எல்லாரையும் என் தங்கை ஆக்கி வச்சுருக்கேன்னு கோபப்படப் போறான்."//

அழகான "கலர்" வெடி ....

சாருஸ்ரீராஜ் said...

சரவெடி சத்தம் பயங்கரமா இருக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள்

சாருஸ்ரீராஜ் said...

சரவெடி சத்தம் பயங்கரமா இருக்கு , புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

superb ma chitra
welcome back

hayyram said...

gud. continue

regards
www.hayyram.blogspot.com

ஜெட்லி... said...

//நான் தியேட்டரில் படம் பாக்கலைனா ரஜினி கோவிச்சுக்க மாட்டார். ஆனால் சித்ரா கூட ஒரே வீட்டில் அதுக்கு அப்புறம் நான் இருக்கணுமே. அதான்//

உங்க மேல "பய"ங்கரமான அன்பு போல...
பாவம் சாலமன் சார்....

பூங்குன்றன்.வே said...

சரவெடி...அசரவைக்குதுங்க. வாழ்த்துகள்..

Vasanth said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

suvaiyaana suvai said...

சத்தம் பயங்கரமா இருக்கு super!!!!

மீன்துள்ளியான் said...

நீங்க சும்மாவே வெடி போடுவீங்க புத்தாண்டு வேற ... சும்மா இருப்பீங்களா ...

புலவன் புலிகேசி said...

சும்மா பட படன்னு வெடிச்சி தள்ளிட்டீங்க...

வால்பையன் said...

//"முன்னாடி மேல மெதுவா ஏறி, இப்போ பின்னாடி சல்லுனு இறங்க ஆரம்பிச்சுட்டு. என்ன செய்ய?"//

அங்க ஒரு வழுக்குபாறை வரப்போகுதா!?

வால்பையன் said...

//"ஐயா சைஸ் ஐ பார்த்தால், உங்க மனைவி நல்லா சமைப்பாங்க போல தெரியுது."//

எந்த ஹோட்டல்ல ரெகுலரா சாப்பிடுவாருன்னு எனக்கு மட்டும் சொல்லுங்க!

வால்பையன் said...

//"அந்த "ஆல் இன் ஆல் அழகுராஜா" வேலையை அப்படியும் சொல்லலாம்."//

சொன்னாலும் சொல்லாட்டியும் அமெரிக்கா போயிட்டாருல்ல! பின்ன
ஆல் இன் ஆல் அழுகு ராஜா தான்!

வால்பையன் said...

//"ஒரு மாத வித்தியாசத்துக்கு எல்லாம் அண்ணனா? அவன் பெரியவன் ஆனதும், ஏம்மா என் potential டாவு எல்லாரையும் என் தங்கை ஆக்கி வச்சுருக்கேன்னு கோபப்படப் போறான்."//

இந்த நினைப்பு ஏன் என் பெற்றோர்களுக்கு வரல!

வால்பையன் said...

//"என் மனைவி, தினமும் காலையில் ஒரு அரை மணி நேரமாவது பூஜை பண்ணுவா. நல்ல கணவர் அமையணும்னு பதினாறு வயதில் இந்த பழக்கத்தை ஆரம்பிச்சிருக்கா."//

சாமியை ஓவரா தொந்தரவு பண்ணினா, இப்படியெல்லாம் தண்டனை கிடைக்கும்!

வால்பையன் said...

//சாலமன்: "ஆமாங்க. புபேஷ் ரொம்ப நல்லவங்க. அதுக்கு மேல என்னவெல்லாம் சொல்லணும், என்னவெல்லாம் சொல்ல கூடாதுன்னு இன்னும் புபேஷ் என்னிடம் சொல்லவில்லை. அதுக்கு அப்புறம், நீங்க என்ன கேள்வி வேண்டுமானாலும் என்ட்ட கேளுங்க. நாம பேசலாம்."//

பூபேஷ், உங்க வீட்டுகாரர்கிட்ட கடன் வாங்கிட்டு திருப்பி தரலைன்னு நினைக்கிறேன்! இப்படி வாருறாரே!

வால்பையன் said...

//"எனக்கு ரஜினி படம் பிடிக்காது. ஆனால், சித்ராவை பிடிக்கும். நான் தியேட்டரில் படம் பாக்கலைனா ரஜினி கோவிச்சுக்க மாட்டார். ஆனால் சித்ரா கூட ஒரே வீட்டில் அதுக்கு அப்புறம் நான் இருக்கணுமே. அதான்."//

அடி பலமா விழுமோ!

வால்பையன் said...

//"பையன் உங்களை மாதிரியே இருந்தாலும் நல்லா, அழகா இருக்கான்."//

ரெண்டும் ஒன்னு தான்!

ஹேமா said...

புது ஆண்டு தொடங்கி 5 நாளாகுது.
அப்பாடி...வெடிச்சத்தம் தாங்க முடில சித்ரா பக்கத்தில.

கலகலப்ரியா said...

happy new year chitra..? maranthuttenaa.. hihi...

ISR Selvakumar said...

எல்லாமே சரவெடிதான்.
அதிர் வெடி எது தெரியுமா?
”சித்ராவை எனக்கு பிடிக்கும்னு” ஒருத்தர் அலம்பல் விட்டுருக்காரே அவர்தான்.

சுசி said...

சரவெடி அசத்தல்தான் போங்க..

எல்லாரையும் சந்திச்ச சந்தோஷம் இந்த வருஷம் பூரா இருக்கட்டும்.

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா
அன்புடன் என் வலைதளத்திற்கு வரவேற்கிறேன்
கொஞ்சம் வெட்டி பேச்சு பேசலாமே
http://vittalankavithaigal.blogspot.com/

butterfly Surya said...

வாழ்த்துகள்.

தமிழினிமை... said...

loved the collection..
ingu thamizhil thatachchu seiyum vaaippu illai..
thats y this much late..
FEELING IT HARD TO WRITE EVEN IN FACE BOOK..
NIRAYA RASITHTHAEN..
as usual..
especially andha SISTER-PROBABILITY..

FoodLovers said...

Wish u avery happy new year

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த கட்டோ கடைசி சரவெடி உங்களுக்கே
கொஞ்சம் ஓவராத் தெரியலை ?
presentation வித்யாசமாக இருந்தது..
வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.

CS. Mohan Kumar said...

//அண்ணன் கூட விளையாட போறியா?"
"ஒரு மாத வித்தியாசத்துக்கு எல்லாம் அண்ணனா? அவன் பெரியவன் ஆனதும், ஏம்மா என் potential டாவு எல்லாரையும் என் தங்கை ஆக்கி வச்சுருக்கேன்னு கோபப்படப் போறான்."//

:)))

நல்லா நியாபகம் வச்சி எழுதிருக்கீங்க

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.. எல்லாமே நல்லாருக்கு. கடைசி ஒன்னு டாப்பு. :)

ஹுஸைனம்மா said...

நல்லாருக்கு சித்ரா. கடைசி உள்ளதுதான் ஓவர். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு இல்லையா?

Chitra said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மேல குறிப்பிட்ட சங்கதிகள் எல்லாம் என் நண்பர்கள் மத்தியில் வெடித்த நிஜ சரவெடிகள். அதனால் அவர்களுக்கு விசேஷ நன்றி.