Sunday, April 18, 2010

நேனே சந்திரமுகி

இந்த மாதம் 22 ந் தேதியுடன், நான் ப்லாக் எழுத வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.  எதை பற்றி எழுதலாம் என்று  யோசித்து கொண்டிருந்த வேளையில்,  "ரா, ரா, ......" என்ற சந்திரமுகி பாடல் கேட்க நேரிட்டது.
திடீரென்று  (வழக்கம் போல தான்)  அப்படியே மாவு கிரைண்டர் சுத்தி, நாங்கள் "சந்திரமுகி" பார்த்த விதம் கண் முன் பொங்கியது - சாரி  - வந்தது.

Dallas, Texas  இல்  ஒரு வட இந்தியர் வைத்து இருந்த தியேட்டரில் தான்  சந்திரமுகி படம் பார்க்க போனோம்.
 
"லக....லக.....லக......"  ஒன்று:

தியேட்டர் நெருங்கிய பொழுதுதான்,  படம் ஆரம்பிக்கவும் தூவ,  ரெடி ஆக வாங்கி வைத்து இருந்த paper confetti எல்லாம், நண்பர் தன் வீட்டிலேயே விட்டு விட்டு வந்து விட்டார் என்று தெரிந்தது.  அசராத மற்றொரு  நண்பர்,  தியேட்டர் lobby க்கு வந்ததும், அங்கு வைக்கப் பட்டு இருந்த தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு உள்ள  பிட் நோட்டீஸ் அத்தனையும் எடுத்து வந்து  நண்பர்களிடம் கொடுத்து,  பொறுமையாக கிழித்து confetti  மற்றும் பேப்பர் ராக்கெட்ஸ்  விட, செய்து வைக்கும் படி சொன்னார். நாங்கள் தயார் ஆனோம்.
தியேட்டர் மேனேஜர்  ஒன்றும் புரியாமல், வெளியில் வைக்கும் நோட்டீஸ் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் காலி ஆகிறதே என்று மூன்றாவது முறையும் வைத்து விட்டு திரும்பியவர், நண்பர் பாய்ந்து சென்று அத்தனையும் எடுப்பதை பார்த்து விட்டு, எச்சரிக்கை செய்து விட்டு சென்றார்.

"லக....லக.....லக....."  இரண்டு:

 எங்கள் குழுவில் மொத்தம் 16 நண்பர்கள் இருந்தோம்.    எல்லோரும் சேர்ந்து அமர்ந்தோம்.   என் பக்கத்தில் ஒரே ஒரு சீட் தான் காலியாக இருந்தது.

 படம் ஆரம்பிக்க இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த போது,   குடும்பத்துடன் வந்த ஒரு ரசிகர்,  சேர்ந்து  உட்கார இடம் கிடைக்காமல்,  தானும்  தன் மனைவியும் , கை குழந்தையுடன் வேறு  வரிசையில்  உட்கார ஏற்பாடு செய்து  விட்டு, என்னருகில் இருந்த இருக்கையில், அவரின் அம்மாவை   உட்கார வைத்து விட்டு சென்றார். அத்துடன்,  தியேட்டர் houseful ஆனது.

  அந்த ஆன்ட்டியை  (Aunty )   கண்டதும், தனியாக உட்கார்ந்து இருக்கிறாரே  என்று  பேச்சு கொடுத்தேன்.   அவரும்  உடனே,  நெடு நாள் பழக்கம் போல தன் ஊர் கதை, வீட்டு கதை எல்லாம் என்னிடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
நண்பர் கூட்டம்,  படம் ஆரம்பிக்கும் முன்னே விசில் சத்தத்தை ஆரம்பிக்க,  ஆன்ட்டி முகம் சுளித்தார்.  பேப்பர் ராக்கெட்ஸ் பறக்க ஆரம்பித்தன. சத்தம் கூடவே,  மேனேஜர்  ஓடி வந்து, நண்பர்களுக்கு  இரண்டாவது எச்சரிக்கை செய்தார். பேசி பார்த்ததில், மேனேஜர்  வேலைக்கு புதிது என்று தெரிந்து விட்டது. நான் ஒரு பக்கமும், அந்த பக்கம் எங்கள் தோழியும் ஒன்றும் தெரியாதது போல, நண்பர்களுக்கு  அரணாய் அமைதியாக  அமர்ந்து இருந்தோம்.

"லக...லக....லக...."   மூன்று:

எங்கள் நண்பர், ஷங்கர் ஒரு gallon தண்ணீர் கேன் (3  3/4 liters கொள்ளளவு கொண்ட பெரிய பிளாஸ்டிக்  can)  ஒன்று உள்ளே கொண்டு வந்து உட்கார்ந்தார். நண்பர்கள் ரஜினி பாடல்களை பாடி, விசில் அடித்து ஆட்டம் போட, தானும் தன்னை மறந்து உற்சாகத்துடன் கலந்து கொண்டார். ஆட்டத்தின் உச்சியில், தண்ணீர் கேன் கையில் எடுத்து சுழற்றி சுழற்றி ஆடியவர், கை தவறி விட, சுற்றிய வேகத்தில் அத்தனை பெரிய கேன் - தண்ணீருடன்- வேகம் எடுத்து பறந்தது. சற்று தள்ளி,   concrete தரையில் பட்டு , ஒரு வெடி சத்தத்துடன் சிதறி கொட்டியது. அந்த பக்கம் இருந்தவர்கள் தலைகள் தப்பியது, ஒரு ஆச்சர்யம்!

உள்ளே உட்கார்ந்திருந்த பலர், ஏதோ bomb வெடித்து விட்டது என்று பதறி அலற, மேனேஜர் மீண்டும் உள்ளே ஓடி வந்து பார்த்தால், எங்கள் கூட்டம் .............. 
திட்டினார் - திட்டினார் - திட்டினார் -  எங்களில் யாருக்கும் ஹிந்தி தெரியாததால் ஒன்றும் புரியவில்லை. புரிந்து இருந்தால்:
"no bad words ...... no ..... no..... mummy எல்லாம் திட்டாத...... நோ...... ஒன்லி பூஸ்ட்....... மை பாமிலி, டோட்டல்  damage ...... ஒய் ப்ளட்? சேம் ப்ளட்......." என்று  "வடிவாக"  நாங்களும் பதில் பேசி இருந்து இருப்போம். 
மற்றுமொரு நல்ல செய்தி:    யாரும் bomb என்று  பயந்து போய், போலிசை  போன் செய்து  கூப்பிடவில்லை.  தப்பித்தோம். 


ரஜினி படம் பார்க்கும் போது, இதெல்லாம் சகஜமப்பா என்று, எதுவுமே நடக்காதது போல அந்த ஆன்ட்டியை    திரும்பி பார்த்தேன்.  அவரின்  பொன்மொழிகள்:  "பாத்தியாமா? இதுகளெல்லாம் அவங்க அம்மா, அப்பா, அமெரிக்காவுக்கு எவ்வளவு பெருமையா அனுப்பி வைத்து இருப்பாங்க. இங்கே பாரு. நம்மூரு லோ கிளாஸ் (???) ஆளுங்க மாதிரி எப்படி ஆட்டம் போடுதுங்க.  எல்லாம் மேற்படிப்பு படிச்சு பெரிய பெரிய வேலைக்கு போறதுங்க.  அமெரிக்காவில அவுத்து விட்ட கழுதைங்க மாதிரி ஆடுதுங்க," என்று தன் பங்குக்கு எனக்கு புரிகிற மாதிரி  தமிழில் கொட்டித்  தீர்த்தார். அவ்வ்வ்வ்......
  
நான் திரும்பி, என் நண்பர்களை பார்த்தேன். ஒருவர், குழந்தை நல மருத்துவத்தில் (Pediatrics) மேல் படிப்பு படிக்க வந்தவர் ; மற்றொருவர் - IT project ஒன்றின் டீம் மேனேஜர் ; இரண்டு நண்பர்கள் - Ph.D. டிகிரி வாங்க வந்தவர்கள்;  ஒருவர் - Food Technology யில் research  செய்பவர்;   மற்றொரு நண்பர் - புற்று நோய் செல்லில் (cancer cells) research செய்பவர் - என்று பட்டியல் நீண்டது. எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று உறுதியாக நம்பி கொண்டிருந்த அந்த ஆன்ட்டியிடம்   இந்த விவரங்களை சொல்லாமல், சிரித்தேன். 


படம் ஆரம்பம் ஆனது.  தியேட்டரில் பெரும்பாலோர்  கத்தினார்கள். அந்த ஆன்ட்டியின்    புலம்பல் தொடர ஆரம்பித்தது.  படம் ஆரம்பிக்கும் வரை, பொறுமையுடன் கேட்டு கொண்டிருந்த எனக்கு, இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை.  எனக்குள் இருந்த பவித்ர சுந்தரி  விடை பெற்று கொண்டு போக, உள்ளிருந்த ரஜினி ரசிகை வெளியே வந்து விட்டாள். எனது umpire விசிலை எடுத்துக் கைக்குள் வைத்து கொண்டேன். ரஜினியின் ஷூ அறிமுகம்........ அந்த ஆன்ட்டி, ஏதோ சொல்லி புலம்ப மீண்டும்  என் பக்கம் திரும்ப, முதல் ஆளாக என் விசில் தனியாக தியேட்டர் அதிர அடித்தேன். என்னை தொடர்ந்து நண்பர்கள் விசில்கள்...............தியேட்டரில் மற்ற ரஜினி ரசிகர்களின் விசில்கள்................ "லக லக லக ......" பேயாடி விட்டது, அவர் முகத்தில். 

எனக்கு என்னவோ ஓரிரு முறை,  அந்த ஆன்ட்டி   மேலே நோக்கி சாமியிடம், "நல்ல வேளை, அப்பனே  - இப்படி ஒரு பெண்ணை எனக்கு மருமகளாக  தரவில்லை," என்று சொல்லி நன்றி கூறுவது போல தெரிந்தது. படம் முடியும் வரை,  எதேச்சையாக   அவர் பக்கம் திரும்பும் போதெல்லாம் அவர் என்னை பார்த்த பார்வைகள் ....... நானே "சந்திரமுகி" என முறைத்து கொண்டே இருந்தார்.  "லக லக லக ......" என்று ஒரு முறை, அவரின் பக்கமாகவும் சந்தடி சாக்கில் கத்தினேன்.

எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், தன் நிலை மறந்து, ஒரு குழந்தையாக மாறி, சந்தோஷமாக இருந்தால்  என்ன?   அது கலையாகட்டும் -  விளையாட்டாகட்டும், - சினிமாவாகட்டும் - பிக்னிக் ஆகட்டும்.  அவரவர்  படிக்கும் போதும், வேலை பார்க்கும் போதும் அதோடு ஒன்றி கவனத்துடன்  இருக்கிறோம். மற்ற நேரங்களில், நமக்கு என்று இருக்கும் அடையாளத்தை தொலைத்து விட்டு,  வெளி வரத் துடிக்கும் குதூகலத்தை  அவிழ்த்து விட்டால் என்ன?    "தண்ணி" அடித்து விட்டோ இல்லாமலோ ஆடும் dirty dancing பற்றி நான் சொல்லவில்லை.

பொழுது போக்கும் நேரங்களில் கூட,  ஒரு சீரியஸ் ஆசாமியாகவோ, ஒரு critic ஆகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.    எப்பொழுதும் விளையாட்டுத்தனமாக  இருந்தால், பொறுப்பு இல்லாத ஆள் என்று சொல்லலாம். ஆனால், எப்பொழுதும் ஒரு உம்மணா மூஞ்சியாக uptight ஆக  இருந்தால்தான் sophisticated people என்று ஏற்றுக் கொள்ள கூடியது என்று ஏன் நினைக்க  வேண்டும்?  சரி, சரி.... நாங்கள் கொஞ்சம் (தான்)  ஓவரா அன்று ஆட்டம் போட்டு விட்டோம். அந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஒரு புன்னைகையுடன் எல்லாவற்றையும் ரசிக்கலாமே. அந்த ஆன்ட்டி  கூட, எங்களை சகித்து கொண்டு சிரித்து இருந்தால், எவ்வளவு கல கல வென்று படத்தை ரசித்து இருந்து இருப்பார்கள்?  

சந்தோஷமாக  ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில்  - தலை கால் புரியாமல்தான் ஆடக்  கூடாது.  112 comments:

எல் கே said...

//அமெரிக்காவில அவுத்து விட்ட கழுதைங்க மாதிரி ஆடுதுங்க," என்று தன் பங்குக்கு எனக்கு புரிகிற மாதிரி தமிழில் கொட்டித் தீர்த்தார்./
அருமை

சென்னை தோக்கனும் நீங்க பண்ண அக்ரமத்துகு


வழக்கம் போல அருமையான மாவாட்டல்

மாவாட்டல் சித்ரா வாழ்க

Chitra said...

வாழ்த்துக்கும் வாழ்க கோஷத்துக்கும் நன்றி, LK.

சாந்தி மாரியப்பன் said...

சும்மா... லக லக லக ன்னு இருக்கு :-)))).
அப்புறம் umpire விசில் எல்லாம் எதுக்கு. நீங்க விசில் அடிக்க இன்னும் பழகிக்கல்லையா :-)))))

சங்கர் said...

//இந்த மாதம் 22 ந் தேதியுடன், நான் ப்லாக் எழுத வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.//

அவ்வளவு நாள் தான் ஆச்சா, என்னக்கு என்னவோ நீண்ட நெடுங்காலமாக உங்க படைப்பிலக்கியங்களை வாசிச்சிட்டு வர்ற மாதிரி ஒரு பீலிங் (நோ, அழக்கூடாது)

சங்கர் said...

//Dallas, Texas இல் ஒரு வட இந்தியர் வைத்து இருந்த தியேட்டரில் தான் சந்திரமுகி படம் பார்க்க போனோம்//

தியேட்டருக்குள்ள நாயர் டீக்கடை வச்சிருப்பாரா?

சாந்தி மாரியப்பன் said...

சும்மா... லக லக லக ன்னு இருக்கு :-)))).
அப்புறம் umpire விசில் எல்லாம் எதுக்கு. நீங்க விசில் அடிக்க இன்னும் பழகிக்கல்லையா :-)))))

சங்கர் said...

//எனக்குள் இருந்த பவித்ர சுந்தரி விடை பெற்று கொண்டு போக, உள்ளிருந்த ரஜினி ரசிகை வெளியே வந்து விட்டாள்.//

எங்களுக்கு சொப்பன சுந்தரி தான் தெரியும், இது யாரது புதுசா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் Chitra

Chitra said...

ஷங்கர் - நான் "அழுதது" , இதற்காக........."படைப்பிலக்கியங்களை" ........அவ்வ்வ்வ்......

Prabu M said...

ரஜினி பேரைக் கேட்டா அமெரிக்காவும் அதிரும்ல!! :)

ரொம்ப கரெட்க்ட் அக்கா.....

மனதை வீட்டுல வளர்க்கிற நாய் மாதிரி எப்பவும் கட்டிப்போட்டே வெச்சிருந்தா உரிமையாளர் கடி வாங்குறது உறுதி...
கொஞ்சம் ஃப்ரீயா விட்டே ஆகணும்..... ரஜினி படமும் கிரிக்கெட் மேட்சும்.... ஆகா.... தூங்குற புலண்கள் எல்லாம் அப்போ அடுத்தடுத்து விழிக்குமே அதெல்லாம் சூப்பரான சந்தோஷம்.... சிலருக்குப் புரியாதுக்கா...

goma said...

சந்தோஷமாக ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில் - தலை கால் புரியாமல்தான் ஆடக் கூடாது.

ரஜினி கெட்டார் போங்கள்.....சூப்பர் பன்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்....
தங்கச்[சி]த்ரா !
எக்ஸ்ட்ரா ச் எல்லாம் உன் உச்சி மண்டையில் கன்னத்தில் கரங்களில் ,நான் தந்தவை.

இது எப்படி இருக்கு ஹாங்....

பத்மா said...

சூப்பர் சித்ரா .அதென்ன விசில் ? எனக்கும் வேணுமே !நெஜம்மா.
அட்டகாசமான பகிர்வு

Chitra said...

விசில் அடிக்கச் சொல்லி கொடுத்து நண்பர்கள் ஓய்ந்து விட்டார்கள். தன் மனைவியின் வாடிய முகத்தை, மலர வைக்க என் கணவர் தந்த அன்பு பரிசுதான் இந்த umpire விசில். இன்னும் பத்திரமாக வைத்து இருக்கிறேன். :-)

Chitra said...

Thank you, T.V.R. sir.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சாலமன் க்கு ரெண்டோட ஒன்னு மூணு குழந்தைகளை சமாளிக்கணும்னு சொல்லுங்க.

Chitra said...

பிரபு, நச்னு சொல்லிட்டீங்க.

Chitra said...

Goma madam, ஹி,ஹி,ஹி,ஹி,..... சந்தோஷமாக இருக்குதுங்க.

Chitra said...

Padma, Sports Dept. Stores - Refree or Umpire whistle. ooooiiiii....!!!

Chitra said...

நாய்க்குட்டி மனசு, அப்படித்தான் எங்கள் நண்பர்களும் சொல்றாங்க..... சரியா சொல்லிட்டீங்க.

iniyavan said...

கொஞ்சம் அதிகப்படியா இருக்கு சித்ரா.

Chitra said...

நான் நடந்த உண்மையை சொன்னேன். அவ்வளவுதான், சார்.

அன்புடன் மலிக்கா said...

லக்க லக்க லக்காஆஆஆஆஆஆஆஅ

Pavithra Srihari said...

ithunga paaru low class (??) maari sirikkaren sirrikaren siruchuttae irukken

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு சித்ரா, நல்லா ஆட்டம் போட்டிங்களா? நானும் தலைவரு இரசிகன் தான் ஆனா ஆட்டம் போட்டதில்லை. ஆட்டம் போடும் நண்பர்களை பார்த்து இரசித்தேன்.

யாரு அது பவித்திர சுந்தரி,?. தங்கய்ச்சியா? சொல்லவேயில்லை?

// அமெரிக்காவில அவுத்து விட்ட கழுதைங்க மாதிரி ஆடுதுங்க," //

அந்த ஆண்டிக்கு தியேட்டர் இருட்டுல சரியா கண்ணுத் தெரியல்லை போல, பின்ன இப்படி சொல்லாமா? எருமை மாடுங்கன்னுதானே சொல்லனும். சைஸ் கூட சரியாத் தெரியல்லையா?

//இந்த மாதம் 22 ந் தேதியுடன், நான் ப்லாக் எழுத வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.//

வாழ்த்துக்கள். எழுத்துக்களில் நீண்ட காலம் எழுதுவதைப் போல ஒரு ரிச்சனஸ் இருக்கு.

நல்லா எஞ்சாய் பண்ணிங்க போல. ஜமாய் ஜமாய்.

நாடோடி said...

அமெரிக்காவில் போய் ந‌ம்ம‌ ஊர் கூத்தா.......... ந‌ட‌த்துங்க‌ ந‌ட‌த்துங்க‌..

கண்ணா.. said...

அட...! எங்களுக்கும் இதே மாதிரி அனுபவம் சிவாஜி படத்தின் போது கத்தாரில் நடந்தது. ஆனா அப்போ அங்க உள்ள அரபிகள் கூட கடும் வாக்குவாதம் நடந்தது. ஏன்னா எங்க கூட்டத்துல ஒருத்தனுக்கு அரபி தெரியும்.

இறுதியில் நம்ம சம்பிரதாயங்களையெல்லாம் விளக்கி சொன்ன பிறகு அந்த அரபியே...நாங்க எவ்வளவோ இந்திய படம் ரிலீஸ் பண்ணிருக்கோம் இந்த அளவுக்கு எனர்ஜியை பாக்கலைன்னு சொன்னாரு..

அப்புறம் அந்த umpire விசில் போட்டோ பிடிச்சு போடுங்க... நாங்களும் நாலஞ்சு வாங்க வேண்டியிருக்கு

settaikkaran said...

"நேனே சந்திரமுகி" சால பாக உந்தி! அந்த ஆன்ட்டி இந்தியாவுக்கு வந்தா சொல்லுங்க, லிபர்டி தியேட்டரிலே எம்.ஜி.ஆர்.படத்துக்கு நான் டிக்கெட் எடுத்துக் கூட்டிக்கிட்டுப்போறேன். :-))

எல் கே said...

//அந்த ஆண்டிக்கு தியேட்டர் இருட்டுல சரியா கண்ணுத் தெரியல்லை போல, பின்ன இப்படி சொல்லாமா? எருமை மாடுங்கன்னுதானே சொல்லனும். சைஸ் கூட சரியாத் தெரியல்லையா?/

super

Chitra said...

கண்டக்டர் விசிலை விட கொஞ்சம் பெரிதாக - ஆனால் சத்தம் playfield பூரா கேட்க வேண்டுமே என்று பலமாக அடிக்கும். :-)

ISR Selvakumar said...

ஆஹா... எந்திரன் படத்துக்கு இப்பவே விசில் அடிக்க நானும் ரெடியாகிட்டேன்.

Jaleela Kamal said...

லக லக லக லக நேனே சந்திர முகி, ஹா வழக்கம் போல் கலக்கல் சித்ரா.

அந்த விசில கொஞ்சம் படம் போட்டு காட்டினா நல்ல இருக்கும், என் பெரிய பையன் வீட்டில் சும்மாவா வித வித மான விசில் அடித்து கொன்டு இருப்பான். அப்ப டேய் சும்மா இருடா என்று திட்டினாலும் அவனை பிரிந்ததிலிருந்து அவன் விசில் சத்தம் தான் காலையில் என் செல்லில் அலார சத்தம்.

Jaleela Kamal said...

பக்கத்தில் அந்த ஆன்டி, நினைத்து இருப்ப்பாங்க கொடும கொடும ந்ன் கோயிலுக்கு போனா அங்க ஏதோ நின்னுச்சான்ன்னு நினைத்து இருப்பாங்க///

ARAN said...

மனசு குழந்தை போல குதூகலப்படுவது சில நேரங்களில் மட்டும் தான்
அது கண்டிப்பாக ரஜினி படம் பார்க்கும்போது நிகழும்.
அதுதான் ரஜினியின் ஈர்ப்பு.இதெல்லாம் சிலருக்கு புரியாது விட்டு தள்ளுங்க சகோதரி.

CS. Mohan Kumar said...

ரொம்ப சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க; நாங்களும் கூட இருந்து பார்த்த மாதிரி இருந்தது

Vidhya Chandrasekaran said...

ஆஹா நான் காலேஜ் ஃபைனல் இயரின் போது பார்த்த படம். தியேட்டர் வழக்கம்போலவே அல்லோல்கலப்பட்டது.

நாஸியா said...

hello please konjam dubai pakkam varringala serndhu padam paarkalam?

ungalai paarthaa poraamaiyaaaa irukkunga!!!!

முனைவர் இரா.குணசீலன் said...

இந்த மாதம் 22 ந் தேதியுடன், நான் ப்லாக் எழுத வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன/


6 மாதங்கள் தான் ஆகிறதா?

2 வருடங்களாவது எழுதியிருப்பீர்கள் என்றல்லவா இன்றுவரை எண்ணியிருந்தேன்..

vasu balaji said...

/இந்த மாதம் 22 ந் தேதியுடன், நான் ப்லாக் எழுத வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. /

ம்கும். இன்னும் ப்ளாக்கர் குடுக்குற அடாசு டெம்ப்ளேட் வெச்சிக்கிட்டு அலம்பல் வேறயா:))

/ஒரு வட இந்தியர் வைத்து இருந்த தியேட்டரில் தான் சந்திரமுகி படம் பார்க்க போனோம்./

அதான பார்த்தன். நம்மூர்க்காரன்னா நடு ஹால்ல கோலம் போட்டு தர தரன்னு இழுத்துட்டு போய் உக்கார வச்சு பேயோட்டியிருப்பான்:)). வடக்கூரானுக்கு கோலம் போடத்தெரியல:)))))

தக்குடு said...

//விசில் அடிக்கச் சொல்லி கொடுத்து நண்பர்கள் ஓய்ந்து விட்டார்கள். தன் மனைவியின் வாடிய முகத்தை, மலர வைக்க என் கணவர் தந்த அன்பு பரிசுதான் இந்த umpire விசில்// suuuuuuper family akka....:)congrats for 6th month in blog.

Unknown said...

அக்கா, நானும் சிவாஜி பாக்க போனபோது இதே அட்டூழியமெல்லாம் பண்ணோம்..

பாழாப்போனவிங்க சந்திரமுகியை ரெண்டு மாசம் கழிச்சித்தான் எங்க ஊர் தியேட்டருக்குக் கொண்டு வந்தாங்க. என்னையும் தங்கமணியையும் ஆப்பரேட்டரையும் டிக்கெட் குடுக்குறவரையும் சேத்து பத்து பேரு இருந்தோம் தியேட்டர்ல.. :((

கண்ணகி said...

சந்திரமுகி வாழ்க...லக..லக..

ஆண்ட்டி பாவம்...

Subha said...

//அவரவர் படிக்கும் போதும், வேலை பார்க்கும் போதும் அதோடு ஒன்றி கவனத்துடன் இருக்கிறோம். மற்ற நேரங்களில், நமக்கு என்று இருக்கும் அடையாளத்தை தொலைத்து விட்டு, வெளி வரத் துடிக்கும் குதூகலத்தை அவிழ்த்து விட்டால் என்ன?//

உண்மைதான் சித்ரா...நம்முள் இருக்கும் குழந்தைத்தனம் அப்பப்போ வெளியே வரும்போதுதானே பல சந்தோஷமான விஷயங்களை அனுபவிக்க முடியும்..அதுவும் இந்த இயந்திர உலகில்!

உங்கள் எழுத்து நடை அருமை. ரசித்துச் சிரித்தேன்.

Prasanna said...

தண்ணி கேன் யார் மண்டைலயாச்சும் விழுந்து இருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி :))

Chitra said...

Prasanna, அப்போ இந்த இடுகை, இங்கேயுள்ள ஜெயிலில் இருந்துதான் எழுதி இருப்பேன்.....
தலைப்பு: "நான் ஏன் உள்ளே வந்தேன்?" என்று இருந்து இருக்கும். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

அமுதா கிருஷ்ணா said...

அந்த ஆண்ட்டி ரஜனி படம் வந்தது தப்பு..உங்கள் பக்கம் அமர்ந்தது அதை விட தப்பு....

ஸாதிகா said...

பிளாக் ஆரம்பித்து ஆறே மாதங்கள்தானா?நெடுநாள் போல் எழுத்துநடை அமர்க்ளப்படுகின்றதே?

Ramesh said...

வாழ்த்துக்கள் 6 மாதம் ஆன பெருமைக்கு.
வெட்டிப்பேச்சு....ஹாஹாஹா... "லோகிளாஸ்்" அன்ரி ரொம்பத்தான் இருந்திருக்காங்க...
///சந்தோஷமாக ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில் - தலை கால் புரியாமல்தான் ஆடக் கூடாது. //
,இது பிடிச்சிருக்கு

நட்புடன் ஜமால் said...

எனக்கும் மின் விசிறியெல்லாம் சுத்துது

------------------

ஆனாலும் பாவங்க நீங்க, இப்படி ஓரு ஆண்ட்டிa(u)nty பார்ட்டி பக்கத்தில்யே உட்காருவாங்களா ...

யாசவி said...

lot of fun to read :)

dheva said...

சித்ரா...

ரஜினி ரசிக்கைக்கு இந்த ரஜினி ரசிகனின்...சல்யூட்...(ரஜினி ஸ்டைல்)....! கலக்கல ஒரு பதிவையும் போட்டுட்டு....அழகா ஒரு மெஸெஜ்ம் கொடுப்பதில் நீங்கதான் எக்ஸ்பர்ட் சித்ரா.....(claps)

" இயற்கையா இருந்து தொலைங்களேப்பா.......இது தான் உங்களின் மொத்த கரு " சென் தத்துவத்தை...சந்திரமுகி வடிவில் கொடுத்திருகீங்க....சூப்பர்...வாழ்த்துக்கள் சித்ரா.... உங்களுக்கு இன்னொரு பட்டம் கொடுக்கணும்...யோசிச்சிட்டு இருக்கேன்... கூடிய விரைவில்...விழாவை அறிவிக்கிறேன்.... !

சைவகொத்துப்பரோட்டா said...

கடைசியா ஒரு தத்துவம்
சொன்னீங்களே ஜூப்பர் :))
(உண்மையாகத்தான் சொல்றேன்)

ராமலக்ஷ்மி said...

ஆறு மாத நிறைவுக்கு என் வாழ்த்துக்கள் சித்ரா.

Santhappanசாந்தப்பன் said...

அமெரிக்காவுலயுமா? தாங்கல!! பாவம் அந்த மேனேஜர்!!

உங்களை மாதிரி ஒரு மருமகள்?? சான்சே இல்ல போங்க!!! அன்னிக்கு அவங்க மருமகளை ரொம்ப பாராட்டி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

ச‌ண்ட‌க்கோழி ப‌ட‌த்துல‌ மீரா ஜாஸ்மின் அல‌ப்ப‌ரைதான் ஞாப‌க‌ம் வ‌ருது

GD said...

ச‌ண்ட‌கோழி மீரா ஜாஸ்மின் எப‌க்ட்டு....
நல்லா இருக்கு....

கே. பி. ஜனா... said...

படத்தை விட த்ரில்லிங்கா இருக்கு! நல்ல சுவாரஸ்யமான எழுத்து!

pichaikaaran said...

"சந்தோஷமாக ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில் - தலை கால் புரியாமல்தான் ஆடக் கூடாது. "

punch dialog????

அகல்விளக்கு said...

//ஏதோ சொல்லி புலம்ப மீண்டும் என் பக்கம் திரும்ப, முதல் ஆளாக என் விசில் தனியாக தியேட்டர் அதிர அடித்தேன்.//


அப்படிப்போடுங்க அருவாள.....

:-)

Sanjai Gandhi said...

:))))))

ஜெட்லி... said...

தலைவர் படம்னா சும்மாவா....ரணகளம் பண்ணீ இருக்கீங்க....

S Maharajan said...

//சந்தோஷமாக ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில் - தலை கால் புரியாமல்தான் ஆடக் கூடாது.//

இது சித்ரா அக்கா பன்ச்

ஸ்ரீராம். said...

ஹாஃப் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி சூழ்நிலைகளில் இந்த சந்தோஷ Infection அருகே இருப்பவர்களை உடனே தொற்றிக் கொள்ளும்..
கடைசி தத்துவம்...ஆமாங்க..ஆமாங்க...

சசிகுமார் said...

ஆறு மாசத்திலேயே இவ்வளவு பிரபலமா. எப்படிங்க அந்த மந்திரத்த எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் அக்கா.

மங்குனி அமைச்சர் said...

ஆஹா , அருமை , மேடம் உங்க பிரண்ட்சோட போய் "சந்திரலேகா " படம் பாதிகளே அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவும் , விரிவாகவும் எழுதவும் (வந்துட்டாங்க அங்க இருந்து , தக்காளி அவன், அவன் அடுத்து வர்ற நம்ம கிராமத்து புயல் ராமராஜன் நடித்த படத்துக்கா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான் , இவுகளுக்கு சந்திர முகி யாம்)

பாசகி said...

//"லக லக லக ......" என்று ஒரு முறை, அவரின் பக்கமாகவும் சந்தடி சாக்கில் கத்தினேன்.//

:)

//பொழுது போக்கும் நேரங்களில் கூட, ஒரு சீரியஸ் ஆசாமியாகவோ, ஒரு critic ஆகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.//

gud one.

படத்தலைப்பை பார்த்துட்டு வந்தேன். கலக்கீட்டிங்க. இப்படியெல்லாம் பார்த்தாத்தான் அது தலைவர் படம். பகிர்வுக்கு நன்றிங்க.

பாசகி said...

//அந்த ஆண்ட்டி ரஜனி படம் வந்தது தப்பு.//

என்ன கொடுமை மேடம் :(

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஆறு மாத வலையுலக வாசத்துக்கு வாழ்த்துகள் சித்ரா.
சந்திரமுகி பார்த்த மகிழ்ச்சியை விட பதிவைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.
ரஜனி வரும் போது விசிலடிக்காதவர்கள் ரசனையில்லாதவர்கள் என்று என் கணவர் சொல்வார்.

ஹேமா said...

முதல்ல வாழ்த்துக்கள் சித்ரா.அப்புறம் நீங்க அடிக்கிற கூத்தில மறந்திடுவேன்.பாவம் சித்ரா எங்க அண்ணா..அதான் உங்க கணவர் !

உங்க ஒரு ஆளையே சமாளிக்க முடியாம இத்தனை பேர் கஸ்டப்படுறோம்.
ஐயோ...தியேட்டரில 16 பேரா !

Ganesh Babu said...

சித்ரா உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

கும்மாச்சி said...

அது சரி சித்ரா, படம் ஆரம்பிக்கும் முன்பே உங்க விசில வெளிய எடுத்திருந்திங்கன்னா அந்த அம்மா “நூவே சந்தரமுகின்னு” அம்பேல் ஆயிருப்பாங்க. லக... லக.... லக.....

Ahamed irshad said...

"எவரெது".......................?

SUFFIX said...

Be a Roman in Rome, வெட்டி+லூட்டி சித்ரா அருகில் அந்த ஆண்ட்டி, சோ பிட்டி!!:)

கல கல கல பகிர்வு.

வேலன். said...

மீண்டும் ஒரு முறை சந்திரமுகி படம் பார்த்த பீலிங்.. அருமை...180 ஆது நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

பனித்துளி சங்கர் said...

"லக....லக.....லக....." ஆஹா கலக்கல் . மிகவும் ரசிக்கும் வகையில் அனுபவத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் .


மீண்டும் வருவேன் "லக....லக.....லக

அம்பிகா said...

\\எனக்குள் இருந்த பவித்ர சுந்தரி விடை பெற்று கொண்டு போக,\\

ஆஹா! நல்லாத்தான் படம் பாத்து இருக்கீங்க.

Asiya Omar said...

you too chitra ? SUPERB.

Madhavan Srinivasagopalan said...

Nice experience..


ஆறு மாசத்திலே 225 followers ? ஒவ்வொரு போஸ்டுக்கும் 30 -40 கமெண்ட்ஸ்.. உங்களால மட்டு எப்படி முடியுது..?
நா கூட பிளாக் எழுத ஆரம்பிச்சு ௫-௬ மாசம் ஆயுடிச்சு.... sales ரொம்ப கம்மிதான்.. ஐடியா குடுங்களேன்..

தமிழ் உதயம் said...

நம்மல விட பெரிய ரஜினி பைத்தியமா இருக்கீங்க.

திருவாரூர் சரவணா said...

ஒரு திருமண விழாவில் இசைக்குழுவினர் சந்திரமுகியில் வரும் அண்ணனோட பாட்டைப் பாடியபோது ஆறிலிருந்து அறுபது வரை மிக ஜாலியாக ஆட்டம் போட்டது. அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது உங்க ஆட்டம் சும்மா...

எந்த நேரமும் இறுக்கமாக இருப்பதை விட, இது போன்ற சில தருணங்களில் நாம் குழந்தையாக மாறிவிடுவது எல்லையற்ற மகிழ்ச்சிதான். ஏனெனில் குழந்தைகளின் குறும்பால் சிறு சிறு கோளாறு ஏற்பட்டாலும் எதுவும் உள்நோக்கத்தோடு யாருக்கும் பாதிப்பைத் தருவதாக இருப்பதில்லை. இவற்றை எல்லாம் ரசிப்பதுதான் அழகு.

எட்வின் said...

அக்கா அசத்திட்டீங்க போங்க...

//சந்தோஷமாக ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில் - தலை கால் புரியாமல்தான் ஆடக் கூடாது//

சரியா சொன்னீங்க.

suffix சொன்ன மாதிரி Be a Roman in Rome. நேத்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஜெயிச்சப்பவும் இப்படித்தான் விசிலடிச்சிட்டு இருந்தேன் நான்.

ஆனாலும் அந்த ஆன்ட்டி கிட்ட விவரத்த சொல்லிட்டே விசிலடிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்ம்.

அப்புறம் ஆறு மாத நிறைவிற்கு வாழ்த்துக்களும் பூங்கொத்தும் இந்தாங்க பிடிங்க.

Menaga Sathia said...

நல்லா அட்டகாசம் பண்ணிருக்கிங்க.அந்த அம்மாதான் பாவம்...சூப்பர்ர்ர் லக...லக...

பதிவு எழுதி 6 மாதம்தான் ஆகுதா??? நம்பவே முடியல....

GEETHA ACHAL said...

சித்ரா...நீங்களா...சூப்பர்ப் தான் போங்க...அமெரிக்காவில் இது எல்லாம் செய்ய கூடாதா என்ன...வெரும் நம்மூரில் மட்டும்ம்தான் செய்ய வேண்டுமா என்ன...படத்தினை எங்க பார்த்தாலும் விசில் அடிக்க தான் தோனும்..கரெக்டாக தான் செய்து இருக்கின்றிங்க...

ஈரோடு கதிர் said...

சூப்பர்ர்ர்ர்

க.பாலாசி said...

//அவரின் பொன்மொழிகள்: "பாத்தியாமா? இதுகளெல்லாம் அவங்க அம்மா, அப்பா, அமெரிக்காவுக்கு எவ்வளவு பெருமையா அனுப்பி வைத்து இருப்பாங்க. இங்கே பாரு. நம்மூரு லோ கிளாஸ் (???) ஆளுங்க மாதிரி எப்படி ஆட்டம் போடுதுங்க//

தேவையா இதெல்லாம்னு தோனிருக்குமே... நல்லா பாத்திங்க படத்த....

இங்க வந்தா காமடிக்கு பஞ்சமில்லங்க...

Radhakrishnan said...

வெகுவாக ரசித்தேன்.

நசரேயன் said...

// மாவு கிரைண்டர் சுத்தி//

இன்னும் அரைத்து முடியலையா ?

//
Dallas, Texas இல் ஒரு வட இந்தியர் வைத்து இருந்த தியேட்டரில் தான் சந்திரமுகி படம் பார்க்க போனோம்.//

எல்லா ஊரிலேயும் அவங்க தான் தியேட்டர் முதலாளி

சுசி said...

//எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், தன் நிலை மறந்து, ஒரு குழந்தையாக மாறி, சந்தோஷமாக இருந்தால் என்ன? அது கலையாகட்டும் - விளையாட்டாகட்டும், - சினிமாவாகட்டும் - பிக்னிக் ஆகட்டும். //

சூப்பர் சித்ரா.. கை குடுங்க..

கடைசில பஞ்ச் செம..

அன்புடன் அருணா said...

/நமக்கு என்று இருக்கும் அடையாளத்தை தொலைத்து விட்டு, வெளி வரத் துடிக்கும் குதூகலத்தை அவிழ்த்து விட்டால் என்ன?/
அட!நம்ம கட்சி!

Alarmel Mangai said...

இதைத்தான் "Living in the moment" என்று காலம் காலமாகச் சொல்லுறாங்க. எல்லோரும் இப்படி இருந்துட்டா வாழ்க்கை ரெம்பச் சுவாரஸ்யமாக, ரசனையுடையதாக இருக்கும். என்ன, நான் (நீங்களும்) சொல்றது?

தாரணி பிரியா said...

சித்ரா எந்திரன் படம் ரிலீஸ் ஆகும்போது இங்க வந்திடுங்களேன். விசில் அடிக்க நான் சொல்லி தரேன்

prince said...

//எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், தன் நிலை மறந்து, ஒரு குழந்தையாக மாறி, சந்தோஷமாக இருந்தால் என்ன? அது கலையாகட்டும் - விளையாட்டாகட்டும், - சினிமாவாகட்டும் - பிக்னிக் ஆகட்டும். அவரவர் படிக்கும் போதும், வேலை பார்க்கும் போதும் அதோடு ஒன்றி கவனத்துடன் இருக்கிறோம். மற்ற நேரங்களில், நமக்கு என்று இருக்கும் அடையாளத்தை தொலைத்து விட்டு, வெளி வரத் துடிக்கும் குதூகலத்தை அவிழ்த்து விட்டால் என்ன?// சரியா சொன்னீங்க எத்தனை பேருக்கு புரிய போகுதோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.(பார்வையாளர் வட்டத்திலிருந்து வெளிய வாங்க நீங்களும் ஒரு குழு ஆட்டகாரங்களா மாறுங்க மக்கா மாறுங்க) (headbang)

Selvakumar said...

// எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், தன் நிலை மறந்து, ஒரு குழந்தையாக மாறி, சந்தோஷமாக இருந்தால் என்ன? அது கலையாகட்டும் - விளையாட்டாகட்டும், - சினிமாவாகட்டும் - பிக்னிக் ஆகட்டும். //
கருத்து சரிதான். ஆனால் இடம்தான் தவறு. உங்கள் நண்பர்கள் மட்டும் பார்க்கும் தனித் திரையிடல் என்றாலோ ரசிக கண்மணிகள் மட்டும் பார்க்கும் சிறப்பு ஷோ அல்லது முதல் ஷோ என்றால் பரவாயில்லை. [அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்தான் ] ஆனால் ஒரு பொதுவான திரையரங்கில் இப்படி நடந்து கொண்டு அடுத்தவரை இம்சிப்பது நாகரீகமற்ற செயல். பெரிய அறியவில் ஆராய்ச்சியாளராயினும், மென் பொருள் மேலாளராயினும் இந்த செயல் நியாயப்படுத்தக் கூடியதல்ல. கொண்டாட்டத்தின் வெளிப்பாடு என்று சொல்லி புத்தாண்டில் பெண்கள் கையைப் பிடித்து இழுக்கும் கும்பலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ரசனையின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். குதித்து குதூகலமாய் இருப்பதின் சந்தோஷம் நமக்கு. அதற்காக அமைதியாய் ரசிப்பவரை உம்மனாம் மூஞ்சி என்று முத்திரை குத்துவதும், அவர் ரசிப்பில் குறுக்கிடுவதும் என்னதான் விளையாட்டு , வெறும் சினிமா என்றாலும் நல்ல விஷயமல்ல தோழி.
நட்புடன் செல்வா.

Sukumar said...

தலைவருக்காக இது கூட செய்யலைனா எப்படி.. குட்... குட் ..

கண்மணி/kanmani said...

பெர்ரீய ரவுடிதான் போல.....
ரசிப்பு ரவுடி ன்னு சொன்னேன்ம்மா

எனக்கு விசில் அடிக்கப் பிடிக்காது [தெரியாது]ஆனா ரசிச்சு வாய்விட்டு சிரிப்பேன்...

கண்மணி/kanmani said...

ஆறு மாதத்தில் அபார வளர்ச்சி...எழுத்தில் முதிர்ச்சி
வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

பர் சித்ரா .அதென்ன விசில் ? எனக்கும் வேணுமே !நெஜம்மா.
அட்டகாசமான பகிர்வு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//எனக்குள் இருந்த பவித்ர சுந்தரி விடை பெற்று கொண்டு போக, உள்ளிருந்த ரஜினி ரசிகை வெளியே வந்து விட்டாள். //

ஹிஹி... பவித்ரா சுந்தரியாவது... பரிமள சுந்தரியாவது.... ரஜினி படம்னு வந்துட்டா....அதெல்லாம் பாக்க பிடாதுப்பா.!!

சூப்பர் அனுபவம்.. :)

படம் முடிஞ்சதும் ஆன்டி எதாவது..மிச்ச மீதி அர்ச்சனை குடுத்தாங்களா...? இல்ல ஒன்லி டர்டி லுக் தானா?? :D :D

ஜெய்லானி said...

//அந்த ஆன்ட்டி மேலே நோக்கி சாமியிடம், "நல்ல வேளை, அப்பனே - இப்படி ஒரு பெண்ணை எனக்கு மருமகளாக தரவில்லை," என்று சொல்லி நன்றி கூறுவது போல தெரிந்தது//


அது சரி அவங்க மனசையும் படிச்சீட்டீங்களா ? கில்லாடிதான் நீங்க, நா நம்பிட்டேன்.

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள் சித்ரா!!
நாங்க சந்திரமுகியை ஹூஸ்டன்ல பாத்தோம். same confetti same visil same blood:-)

தாராபுரத்தான் said...

எப்போதுமில்லை....எப்போதாவது..இப்படி..குழந்தைகள் உன்னை மிரட்டுகிறார்களா?

Mythili (மைதிலி ) said...

ஆனாலும் இப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணிக்கிட்டு... அப்புறம் ஆண்டிக்கு அட்வைஸ் வேற.. உனக்கே கொஞம் ஒவரா இல்ல.. பாவம் அவங்க உன் லக லக லக வை எப்படி தான் 3 மணி நேரம் தங்கிக்கிட்டாங்களோ??

வருண் said...

அந்த "ஹை க்ளாஸ்" ஆண்ட்டி பாவம்தான். :) She should have known better!

ரஜினி படம் பார்க்கும்போது மரியாதையா "ரஜினி ரசிகர்(கை)களை"த்தவிர யாரையும் பக்கத்தில்கூட விடக்கூடாது! It is very hard for others to understand. :))

அஷீதா said...

சந்தோஷமாக ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில் - தலை கால் புரியாமல்தான் ஆடக் கூடாது. //

aahaa thathuvam amma thathuvam ayyaa thathuvam. thathuvam nalla irukku :))

vaazhthukkal! idhu ungalin vetrigaramaana 6 maadha payanathirku.

advance vaazhthukkal and all the best! idhu ini varum padhivu payanangal vetriyadaiya :))

ஹுஸைனம்மா said...

குழந்தை மனசுதான் உங்களுக்கு!!

நல்லவேளை நான் அந்தத் தியேட்டரில் இல்லை; இருந்திருந்தால், படத்தை ரசித்துப் பார்க்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தராததற்காக அத் தியேட்டர் மானேஜரிடம் கட்டணத் தொகையைத் திருப்பித் தரும்படி தகராறு செய்திருப்பேன்.

பித்தனின் வாக்கு said...

ஆகா சித்ரா இப்படி எல்லாம் ஒரு உள்குத்து இருக்குதா? நான் கவனிக்கவேயில்லையே.

நேனே சந்திரமுகின்னு டைட்டில் போட்ட உடனே, நான் என்னமோ நீ சந்திர முகி மாதிரி ஆட்டம் போட்டதைதான் சொல்கின்றாய் என்று நினைத்தேன். அனா பதிவை நல்லா பார்த்தவுடன் தான் புரிந்தது. அதில் அழகான ஜோதிகா படம் போட்டு நாந்தான்னு சொல்வது. இதில் இருக்கும் உள்குத்தை யாரும் கவனிக்கவில்லை போலும்.

ஹிம் பத்த வைச்சுட்டியே பரட்டை. இது எப்பூடி????

malarvizhi said...

பதிவு நன்றாக உள்ளது ,சித்ரா . வாழ்த்துக்கள்.

malar said...

நான் தான் கடைசியோ....

R.Gopi said...

சித்ரா

லக லக லக லக....

துபாய்ல “சந்திரமுகி” பார்த்த பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்...

அதே எனர்ஜியுடன் தான் இங்கும் அனைவரும் படம் பார்த்தோம்...

தலைவர் இண்ட்ரோ அப்போ, நான் அடிச்ச விசில் சத்தம் இந்தியாவுல கேட்டுதாம்!!??

சிவாஜிக்கு கேட்கவே வேண்டாம்... அவ்ளோ அதகளம் பண்ணி விட்டோம்..

☀நான் ஆதவன்☀ said...

லகலகலக :))))

//
சந்தோஷமாக ஆடலாம் - கர்வத்தில், ஆணவத்தில் - தலை கால் புரியாமல்தான் ஆடக் கூடாது.//

நச் :)

Unknown said...

Kalakal chitra...

Namma first time ona partha - kadhaluku mariyadai padam thann nayabagam varudhu.

Andha theatreila the reaction was different n sogam (coz the movie itself was dragging n tooo much emotional) only saving grace was ur funny comments all along. Will never forget that experience ever.

Unknown said...

ஹாப்பி 6 மந்த்ஸ் :)

ரொம்ப லேட்டஸ்ட் படத்துக்கு போன அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி :)

Admin said...

லக... லக.. லக... கலக்கல்....