Sunday, April 25, 2010

ரூம் போட்டு யோசிக்கத் தேவையில்லை.

சில Indian Associations,  அமெரிக்காவுக்கு  புதிதாக  வரும் இந்தியர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும் உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளன.  ஆரம்ப நிலை உதவி செய்யும் சில நண்பர்கள், சில சமயம் என்னையும் உடன் அழைத்து போனது உண்டு.   இங்கு வரும் அனைவரும், எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு வருவதில்லை.  அதில்  தவறும் இல்லை.

சித்ராவாகிய நான், இப்பொழுது சொல்லப் போவதெல்லாம்  உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதற்காக ரூம் போட்டு யோசிக்கவில்லை:

நோ ரூம் சர்வீஸ்: # 1

புதிய அறிமுகம்:    சித்ரா, நீங்க தயிர் எங்கே  வாங்கி வந்தீங்க?
சித்ரா:                  பக்கத்தில் உள்ள grocery store ல தான்.
அவள்:                   இந்தியன் கடையா? அமெரிக்கன் கடையா?
சித்ரா:                 American store தான்.  
அவள்:                  நான் அங்கே தயிர் தேடினேன். கிடைக்கவில்லை. 
சித்ரா:                  அந்த கடையிலேயே யாரிடமாவது கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்களே? 
அவள்:                  கேட்கலாம்னு  நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners  ஆக             இருந்தாங்க.    இந்தியன்ஸ்  ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
சித்ரா:                              ??????????

நோ ரூம் சர்வீஸ்:  # 2:

சனி, ஞாயிற்று கிழமைகளில்,  பெரும் பாலான  அமெரிக்கன் Grocery stores,  பல உணவு பதார்த்தங்களை taste செய்து, பிடித்து இருந்தால் நாம் வாங்கும் விதமாக, நிறைய samples எடுத்து தருவார்கள்.  புதியவர்  ஒருவரையும் அழைத்து கொண்டு ஒரு கடைக்கு போய் இருந்தோம். samples பற்றி விளக்கி நாங்கள் சொல்வதற்குள்,  "இதெல்லாம் நான் சென்னையிலேயே பார்த்திருக்கேன்.  அங்கேயும் இப்படிதான் samples தருவாங்க.  இதில் நிறைய ஐட்டம்ஸ், இப்போ சென்னையிலேயே கிடைக்குது," என்று சொல்லி கொண்டே,  samples வைக்கப் பட்டிருந்த மேஜை அருகே சென்று, ஒரு சின்ன கப் எடுத்து "மடக்" என்று குடித்து விட்டார்.  அருகில் நின்ற நாங்கள், சிரிப்பை அடக்கி கொண்டிருந்த வேளையில் - அந்த மேஜை அருகே நின்று samples எடுத்து வைத்து கொண்டிருந்த கடை ஆள் ஒருவர், மெதுவாக:
"sir,  you just drank the water from the cup, in which I  washed these spoons that I used  to serve the soup-samples."
நம்ம ஆளு அசட்டு சிரிப்புடன்,  கடையை விட்டு வெளியேறி விட்டார்.

நோ ரூம் சர்வீஸ்:  # 3:

 எங்கள் நண்பர் வாடகைக்கு எடுத்து இருந்த  வீட்டில்,  அவரையும் சேர்த்து நான்கு இந்தியர்கள் தங்கி இருந்தனர். அதிலே ஒருவர், இந்தியாவில் இருந்து வந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது.
ஒரு நாள், வீட்டு கதவு தட்டப் படும் ஓசை கேட்டு, புதியவர்  கதவை திறந்து பார்த்தார். வெளியில் ஒரு  white அமெரிக்கன் நின்று கொண்டு இருந்தார். 
" Is Jefferson  home?" 
"Jefferson?  Who is Jefferson?"
"He is my  friend from school days."
"There is no Jefferson here. Only Indians. No foreigners."
"?????????"

.......  நிறைய கதை சொல்லிக்கிட்டே போகலாம். அப்போ அப்போ மாவு கிரைண்டர் சுத்தும் போது எடுத்து விடுறேன்.

அப்புராணியாய் இந்தியாவில் இருந்து வந்த சிலர்,   எல்லாம் பழகி கொண்ட பின்,   இந்தியாவில் இருந்து புதிதாக வரும்  சிலரிடம் காட்டும் பிலிம் இருக்கே................... (நிச்சயமாக, நான் அவள் இல்லை. நம்புங்க.)
அட, அட, அடடா........   அப்படியே  வடிவேலு சார், துபாய் போயிட்டு வந்து பார்த்திபன் சார்  கிட்டேயும் மற்றவர்கள் கிட்டேயும் காட்டுற  பிலிம் விட ரெண்டு ரீல் கூடுதலாக  இருக்கும்.   என்னவோ பிறந்து வளர்ந்தது முதல்  ஒவ்வொரு நாளும் இந்தியாவில்  சாப்பிட்டு விட்டு, அமெரிக்கா வந்துதான்  கை கழுவிட்டு போனது மாதிரி "படம்" காட்டுவாங்க.
"இது கூட தெரியாதா?" என்ற சலிப்பு வேறு.

ஈகோ மற்றும் attitude problem காட்டும்  "படம்":

டைட்டில் ரீல்:   "இதெல்லாம் எனக்கு  இந்தியாவிலேயே அத்துப்படி.  அங்கேயே நான் தினமும் ஜப்பான்  வாட்ச்ல டைம் பாத்து,  லண்டன் சோப்பு  போட்டு  முகம் கழுவி,  டாலர் நோட்லதான் முகம் துடைத்து,  சிங்கப்பூர் பவுடர் போட்டு, துபாய் சென்ட் மணக்கத்தான் வந்து பழக்கம்."
காமெடி ரீல்:  "நோ ரூம் சர்வீஸ் #  ஜோக் ஏதாவது  நடக்கும் ....."
இரண்டாம் பாதி ரீல்:  புதிய இந்திய வரவை கண்டு:   "இது கூட தெரியாம, இவனெல்லாம் எதுக்கு அமெரிக்கா வரணும்? What is this? ஒரே  stupid of the idiot of the nonsense of the washbasin of the India வாக  இருக்கு?"  
கிளைமாக்ஸ் ரீல்:  - நானோ வேறு நண்பரோ  அருகில் இருந்தால், கொடுக்கும் "பஞ்ச்":   "நீங்கள் வந்த புதிதில் நடந்த  காமெடி  கதை எடுத்து விடவா?"   - சில சமயம்,  கன்ட்ரோல் இல்லாமல் ஓவரா போகும் போது, நாங்கள் "flash-back" வார்னிங் இல்லாமலே,  அதை போட வேண்டியது வந்து விடும்.
கடைசி ரீல்:   பிலிம் பார்ட்டி,  "கப்-சிப்"  The End.

முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு, விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தானே.  நண்பர்களுக்குள்  என்ன formality பார்க்க வேண்டியது இருக்குது?  தெரிந்து கொண்ட பின், பொறுமையுடன், அடுத்து வரும் புதியவர்களுக்கு  பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன?  

Speak American: A Survival Guide to the Language and Culture of the U.S.A.

94 comments:

எல் கே said...

// தெரிந்து கொண்ட பின், பொறுமையுடன், அடுத்து வரும் புதியவர்களுக்கு பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன? //
அப்புறம் அவங்களுக்கு என்ன மருவாதை?
//நோ ரூம் சர்வீஸ்: # 2://

இதுதான் அருமை

ஆமாம் நீங்க அங்க போனப்ப உங்களுக்கு யாரு சொல்லி கொடுத்தாங்க ????
நல்ல பதிவு . இப்ப உங்க பதிவுல கடைசில ஒரு பன்ச் வச்சி எழுதறீங்க.

"பஞ்ச் சித்ரா "

ஜெட்லி... said...

அந்த சூப் ஸ்பூன் கழுவுன தண்ணி குடிச்சது யாருங்கோ??

Chitra said...

நாம் முன்னமே ஒரு இடுகையில் குறிப்பிட்ட படி, எனது குரு, எனது கணவர்தான். சில விஷயங்களை என் தோழிகள், இருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

Unknown said...

அது சரி

S Maharajan said...

//"sir, you just drank the water from the cup, in which I washed these spoons that I used to serve the soup-samples."
நம்ம ஆளு அசட்டு சிரிப்புடன், கடையை விட்டு வெளியேறி விட்டார்.//

ha haa haaha..
அக்கா அதன் பிறகாவது நீங்கள்
சொல்வதை கேட்டரா? இல்லையா?

Vidhya Chandrasekaran said...

:))

எல் கே said...

//நாம் முன்னமே ஒரு இடுகையில் குறிப்பிட்ட படி, எனது குரு, எனது கணவர்தான். சில விஷயங்களை என் தோழிகள், இருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். ///

hmm ok ok..

ஜெய்லானி said...

சாம்பிள் ஜோக் பயங்கர காமொடி..ஹ....ஹ்...

மாதேவி said...

அனைத்தும் நன்று.

நீங்கள் கூறியதுபோல் கேட்டு அறிவதில் தவறில்லையே.

"ரூம் சர்வீஸ்- 2" சிரித்து அடங்கலை.

நாடோடி said...

இந்த‌ பிலிம் காட்டும் 70MM ப‌ட‌ம் அமெரிக்காவில‌ ம‌ட்டும் ந‌ட‌க்குற‌து இல்ல... சொந்த‌ ஊரை விட்டு வெளியே வ‌ந்த‌வுட‌ன் ஆர‌ம்பித்துவிடுகிறார்க‌ள்... இட‌த்திற்கு ஏற்ப.... கிரைண்ட‌ரை ச‌ர்வீஸ் ப‌ண்ணி வைச்சுக்குங்க‌.. அப்பப்ப‌ சுத்த‌னும்..

கண்ணா.. said...

//LK said...

இப்ப உங்க பதிவுல கடைசில ஒரு பன்ச் வச்சி எழுதறீங்க.

"பஞ்ச் சித்ரா "//

"பஞ்ச் சித்ரா " - ஹா...ஹா..இந்த பட்டம் நல்லாருக்கே....

கண்ணா.. said...

ஹல்லோ.....நாங்கெல்லாம் வந்த புதுசுல சிக்னலில் நின்னுகிட்டு இருந்த பஸ் கதவை தட்டி தகறாறு செய்து வாங்கி கட்டிய பார்ட்டிகள்.... எங்களோட கம்பேர் பண்ணினா நீங்க சொன்ன ஆள்களெல்லாம் ரொம்ப ரொம்ப அப்பாவிங்கதான்

Romeoboy said...

\\அவள்: கேட்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆக இருந்தாங்க. இந்தியன்ஸ் ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.//


இப்படியும் ஒரு அப்ராணியா ??

Jaleela Kamal said...

//இந்த‌ பிலிம் காட்டும் 70MM ப‌ட‌ம் அமெரிக்காவில‌ ம‌ட்டும் ந‌ட‌க்குற‌து இல்ல... சொந்த‌ ஊரை விட்டு வெளியே வ‌ந்த‌வுட‌ன் ஆர‌ம்பித்துவிடுகிறார்க‌ள்... //

அதே அதே

Jaleela Kamal said...

சிலர் காட்டுகிற புளிப்ப சகிச்சிக்கவே முடியாது


அய்யோ தமிழர்களிடம் அமெரிக்கன் இங்கிலிபீசு, பேசு கொண்ணுடுஙக்

சத்ரியன் said...

// நண்பர்களுக்குள் என்ன formality பார்க்க வேண்டியது இருக்குது? //

அதானே!

ISR Selvakumar said...

பயணங்கள் சொல்லிக் கொடுக்கும் முக்கியமான விஷயங்கள் பல.

அதில் முதலாவது இந்த உலகில் நமக்கு தெரிந்ததை விட தெரியாதது அதிகம்.
பிளாஷ்பேக் ரீல் - 15 வருடங்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து மாவுகிரைண்டர் சுற்ற வேண்டுமென்பதால் விட்டுவிடுகிறேன்.

இரண்டாவது, கூச்சம் மற்றும் ஈகோவை விட்டால் நல்ல (உலகின் எந்த மூலையிலும்) நண்பர்கள் மட்டுமல்ல, நல்ல சாப்பாடும் கிடைக்கும்.
பிளாஷ்பேக் ரீல் - இதற்கு ஐரோப்பிய நாடுகளின் வெட் கிரைண்டர்களை சுற்ற வேண்டும் என்பதால் தவிர்க்கிறேன்.

கடைசியாக(இப்போதைக்கு) - ஒரு முறை வெள்ளைக்காரனுடன் கைகுலுக்கிவிட்டால் நமக்கும் அந்த கலர் வந்துவிட்டதாக மிதப்பு வந்து, இந்தியர்கள் அனைவரையும், nonsense of the supid of the idiot of the country fruits என்று நினைக்கத் தூண்டும்.
பிளாஷ்பேக் ரீல் - பல நாடுகளின் கூட்டுத் தயாரிப்பிலான மாவு கிரைண்டரை சுற்ற வேண்டும்.

கடைசி டைட்டில் - பசியும், தண்ணி தாகமும் வறுத்தெடுக்கும்போது, பக்கத்தில் ரெஸ்டாரண்ட் எதுவும் இல்லாதபோதுதான், நாம் அமெரிக்கனோ, இந்தியனோ கிடையாது. கிடைப்பதைத் தின்று வாழப்பிறந்த பேசத் தெரிந்த மிருகங்கள் என்பது தெரியும்.

தமிழ் உதயம் said...

முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு, விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தானே. நண்பர்களுக்குள் என்ன formality பார்க்க வேண்டியது இருக்குது? தெரிந்து கொண்ட பின், பொறுமையுடன், அடுத்து வரும் புதியவர்களுக்கு பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன?
உண்மையிலேயே ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க. கற்று கொள்வதும், கற்று கொடுப்பதும் நல்ல விஷயம் தானே.

யாசவி said...

//அமெரிக்கன் நின்று கொண்டு இருந்தார்.
" Is Jefferson home?"
"Jefferson? Who is Jefferson?"
"He is my friend from school days."
"There is no Jefferson here. Only Indians. No foreigners."
"?????????" //

சிரிப்ப அடக்கமுடியல

என்கிட்டே கூட நிறைய இருக்கு

யாசவி said...

//அமெரிக்கன் நின்று கொண்டு இருந்தார்.
" Is Jefferson home?"
"Jefferson? Who is Jefferson?"
"He is my friend from school days."
"There is no Jefferson here. Only Indians. No foreigners."
"?????????"//

ஆபிஸ்ல மானமே போச்சு சிரிச்சு :)))

Robin said...

//முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் ஈகோவைஒதுக்கி வைத்து விட்டு, விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தானே. நண்பர்களுக்குள் என்ன formality பார்க்க வேண்டியது இருக்குது? தெரிந்து கொண்ட பின், பொறுமையுடன், அடுத்து வரும் புதியவர்களுக்கு பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன? // அதானே!

பித்தனின் வாக்கு said...

நல்லா கிரைண்டர் சுத்துங்கே. எங்களை மாதிரி பீலா பார்ட்டிகளை எல்லாம் டின்னு கட்றீங்க போல. என்ன ஒன்னு நாங்க பீலா விட்டாலும் கடைசியில சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு மாதிரி வராதுன்னு சொல்லி அடக்கி வாசிப்போம்.

ரூம் சர்வீஸ் டூ அற்புதம், அப்புறம் ஒன்னு அந்த வாட்டர் சாம்பிள் எடுத்து குடிச்ச பார்ட்டி நீங்கதான் அப்படிங்கிற இரகசியத்தை நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். ஏன்னா நான் கொடுத்த பிராமிஸ்ஸைக் காப்பதுறவன்.

Chitra said...

ஆளை பாரு....... இப்படி எத்தனை பேரு சொல்லிக்கிட்டு கிளம்பி இருக்கீங்க? ஹா,ஹா,ஹா,....

Anonymous said...

யம்மாடி , சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது

நாஸியா said...

அட அட அட!!

சில பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் கடுப்பைக்கிளப்பும்.. ஊர்ல இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து வந்த சித்தப்பா புள்ளைங்க நம்மோட இருக்கனும்னு ஆசப்பட்டா கூட, 'எதையும் குடுத்துடாதீங்க, தண்ணி மினரல் வாட்டர் தானே?' அப்படியே புள்ளைங்க பக்கம் திரும்பி 'தண்ணி எதுவும் குடிச்சிடாத, எதையும் சாப்பிடாத‌'ன்னு ஒரு கட்டளை வேற..

☀நான் ஆதவன்☀ said...

:)))))))))))))))) கலக்கல்

SUFFIX said...

நல்லாஆஆஆவே இருக்கு...

vasu balaji said...

:)). இந்த வெட்டி பந்தா சிலது வெகேஷனுக்கு இங்க வந்தா வேலங்காட்டுக்கு போன கேஸ் கூட வெஸ்டர்ன் டாய்லட் இல்லைன்னு கெழவன் கெழவிய ஹோட்டல், ட்ரான்ஸிட் ஹோம்னு அலக்கழிச்சி காட்டுற பந்தா இருக்கே யப்பா:))

Sukumar said...

Nice One. Keep Posting!!!

adhiran said...

rasiththu padikkiren. ungal pathivu anaiththaiyum. nanri.

சைவகொத்துப்பரோட்டா said...

ரூம் சர்வீஸ் - 2 , ஹா.......ஹா.........
முடிவில் நீங்க சொன்ன விசயம் நன்று.

Paleo God said...

டிபிகல் சித்ராஜி..:))

Santhappanசாந்தப்பன் said...

கலாய்க்கற வரைக்கும் கலாய்ச்சுட்டு, டயலாக் வேற!வர வர காமெடியோடு தத்துவமும் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க!

Santhappanசாந்தப்பன் said...

உங்காளு யாரு கிட்ட பீலா விட்டாரு? இன்னும் நல்லா கிரைண்டர சுத்தி சொல்லுங்க பார்க்கலாம்.. ஹி ஹி!!

settaikkaran said...

நல்ல வேளை, அமெரிக்காவுக்கெல்லாம் வர்ற வாய்ப்பு எனக்கு கிடைக்காது! இல்லாட்டி நானெல்லாம் பட்டிக்காட்டான் முட்டாய்க்கடை கேசு தான்.

ஹுஸைனம்மா said...

புதிதாக வெளிநாடு வரும் புதுமணப்பெண்கள் நிலைதான் கொஞ்சம் கஷ்டம். உறவினர்கள், நண்பர்கள் என்று யாரும் இல்லாமல், சமையலும் தெரியாமல்... பதினந்து வருடம் முன் நானும் இங்கே வந்தபோது எனக்கு ஆலோசனை செய்து உதவிய இருவரை நன்றியுடன் நினைத்துப் பார்த்து, இப்பவும் நான் சந்திக்கும் அதுபோன்ற புதியவர்களுக்கு (கேட்டால் மட்டும்) ஆலோசனை சொல்வதுண்டு.

இப்போ இணையத்தில் எல்லா விவரங்களும் கிடைப்பதால் அவ்வளவு தடுமாற்றமில்லை முன்போல்.

Ahamed irshad said...

நல்லாயிருக்குதுங்.........

Ahamed irshad said...

///முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் "ஈ"கோவை ஒதுக்கி வைத்து விட்டு,////

எனக்கு தெரிஞ்சி கோவை தெரியும். இப்படி ஏ. பி. சி. டி. ஈ கோவையெல்லாம் தெரியாதுங்கம்மணி.....

எங்கிட்டு போனாலும் வந்துரோவ்ம்ல....

வேலன். said...

நான்,ஜெய்லானி,சசிகுமார் எல்லாம் அங்கு வருகின்றோம். தயங்காமல் உங்களிடம் கேட்கின்றோம் எங்களுக்கு அமெரிக்காவை சுத்தி காண்பியுங்கள்.(அமெரிக்கா சுத்தியை எடுத்து காண்பித்துவிட போகின்றீர்கள்) வாழ்க வளமுடன்,வேலன்.

dheva said...

// Is Jefferson home?"
"Jefferson? Who is Jefferson?"
"He is my friend from school days."
"There is no Jefferson here. Only Indians. No foreigners."
"?????????"//

நம்ம ஆளுங்க எல்லாமே..forginer னாலே அவன் வெள்ளைக்காரன்னு நம்புறாங்க....உண்மைதான் சித்ரா..வெளி நாட்டில் நாமும் foreginer தானு சொன்னா நம்ப மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாங்க....! கலக்கல் சித்ரா!

malar said...

சூப்பர்....

pichaikaaran said...

அங்கே வந்தும், அப்படியேத்தான் இருக்காங்களா.... ஆறுதலா இருக்கு,,,,

ஹேமா said...

ரூம் சர்வீஸ் டூ...அருமையா சொல்ல்யிருக்கீங்க சித்ரா.

சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அழகாய் நகைச்சுவையாய் எழுதமுடிகிறது உங்களுக்கு.அதுவே உங்கள் பதிவுகளின் உயர்வு.

Radhakrishnan said...

பழசை மறப்பது மனிதரோட குணம். நல்ல அழகா சொல்லி இருக்கீங்க.

malar said...

"இது கூட தெரியாம, இவனெல்லாம் எதுக்கு அமெரிக்கா வரணும்? What is this? ஒரே stupid of the idiot of the nonsense of the washbasin of the India வாக இருக்கு?"

ஆஹா..

கிளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கன்னு சொல்ல வேண்டியது தானே....

Prasanna said...

I know very well America.. My country :))

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு டீச்சர்.

//அப்புராணியாய் இந்தியாவில் இருந்து வந்த சிலர், எல்லாம் பழகி கொண்ட பின், இந்தியாவில் இருந்து புதிதாக வரும் சிலரிடம் காட்டும் பிலிம் இருக்கே.//

எல்லா ஊர்லயும் இந்த மாதிரி ஆட்கள் இருக்குறாங்க. பகிர்வுக்கு நன்றி.

Pavithra Srihari said...

hahaha :) very nice post ... innum konjam respect koodi iurkku unga mela :)

நட்புடன் ஜமால் said...

கடைசி வரிகள் அருமை சித்ரா ...


சிரிப்போடு சிந்திக்கவும் வைக்கின்றீர்கள்.

பனித்துளி சங்கர் said...

/////புதிய அறிமுகம்: சித்ரா, நீங்க தயிர் எங்கே வாங்கி வந்தீங்க?

சித்ரா: பக்கத்தில் உள்ள grocery store ல தான்.
அவள்: இந்தியன் கடையா? அமெரிக்கன் கடையா?
சித்ரா: American store தான்.
அவள்: நான் அங்கே தயிர் தேடினேன். கிடைக்கவில்லை.
சித்ரா: அந்த கடையிலேயே யாரிடமாவது கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்களே?
அவள்: கேட்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆக இருந்தாங்க. இந்தியன்ஸ் ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
சித்ரா: ?????????? //////


ஆஹா இப்பவே கண்ணக்கட்டுதே .

ராமலக்ஷ்மி said...

சுத்திய க்ரைண்டரும் முடிவாய் சொன்னதும் அருமை:))!

Menaga Sathia said...

//"sir, you just drank the water from the cup, in which I washed these spoons that I used to serve the soup-samples."
நம்ம ஆளு அசட்டு சிரிப்புடன், கடையை விட்டு வெளியேறி விட்டார்.// ஹா ஹா சூப்பர்ர் காமெடி!!

சாருஸ்ரீராஜ் said...

வழக்கம் போல் கலக்கல் தான்.

"உழவன்" "Uzhavan" said...

ஸ்டேட் விட்டு ஸ்டேட் போகும்போதே சில சமயம் நாம காமெடி பீஸாகிடுறோம் :-)

movithan said...

நாங்களும் எங்க சொந்த அனுபவ ஜோக்ஸ்ச மற்றவர் பெயர்ல தான் வெளிவிடுற.
அரசியல இதெல்லாம் சகஜமப்பா!

Asiya Omar said...

ரொம்ப நல்ல பதிவு.சொன்ன விதம் புதுமையாக இருக்கு.

pattchaithamizhan said...

Naangellaam Usulambatti yilaiye yaarkittaiyum vilaasam kaekkaama Veethi Ulaa poenavanga.....
America engalukku JUJUBI...

Priya said...

//முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு, விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் தானே. நண்பர்களுக்குள் என்ன formality பார்க்க வேண்டியது இருக்குது? தெரிந்து கொண்ட பின், பொறுமையுடன், அடுத்து வரும் புதியவர்களுக்கு பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன?//....சூப்பர்ப் பஞ்ச்!

iniyavan said...

சித்ரா,

யப்பா என்ன போடு போடறீங்க.

என் தங்கை பேர் சித்ரா. இப்போது அவள் உயிருடன் இல்லை. உங்கள் எழுத்துக்களை பார்க்கும்போது அவள் நினைவுதான் வருகிறது.

ம்ம்ம்ம்ம்ம்ம்.

Prasannaakumar MP said...

romba nalla irukku. continue posting

தாராபுரத்தான் said...

வேடிக்கை மனிதர்களின் வாடிக்கைகளை பார்த்து கேட்டு சிரிக்க வேண்டியதுதான்.

அண்ணாமலை..!! said...

"There is no Jefferson here. Only Indians. No foreigners."
ஒவ்வொண்ணும் சும்மா அதிருது....!

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான பதிவு...அய்யோ...இங்கே இப்படி சிலர் அடிக்கின்ற கொடுமை...என்னவென்று சொல்லுவது...ஊருக்கு வருவது என்னவோ முதல் முறையாக இருந்தாலும். எதோ பல முறை வந்தமாதிரி பில்ட் ஆப் எல்லாம்...too...much........

Ananya Mahadevan said...

"Sir,You just drank the water I used to wash the spoons.... " = ULTIMATE, chithra! பெருசா சிரிச்சுட்டேன்!

பத்மா said...

ரொம்ப கொஞ்சமா எழுதிருக்கீங்க
இன்னும் என்னனவோ இருக்கும்ன்னு மனசு சொல்லுது .ஒரு மெயிலாவது தட்டி விடுங்க பா .
தலைப்பு
முதல் முதல் formal wear பார்ட்டி
ஹலோவீன்
தேங்க்ஸ் கிவிங்
இதிலெல்லாம் என்ன செய்வாங்க நம்ம ஆளுங்க ?

ஸ்ரீராம். said...

சிரிப்பாவும் இருக்கு..பாவமாவும் இருக்கு. கடைசி வரிகள் அருமை.

ரிஷபன் said...

நல்ல காமெடி போங்க.. இந்த பிரச்னை வெளிநாடு போனாத்தானா.. வெளி மாவட்டம் போனாலே இருக்கு.. கடைசி பாரா டச்சிங்..

தக்குடு said...

nice post chitra akka!!!!!...;) wash pannina water kudichchathu suuper comedy...;)

மணிஜி said...

நாங்களும் வருவோம்

ஹரீகா said...

அருமையான பதிவு சித்ரா, நிறைய எதிர்பார்கிறோம்

Unknown said...

@Chitra..This truly reflects the actions of some people...They forget their blunders..and make fun of others...

Unknown said...

@Chitra..This truly reflects the actions of some people...They forget their blunders..and make fun of others...

தெய்வசுகந்தி said...

ha ha ha!!!!!! good one chitra

Mythili (மைதிலி ) said...

நீங்க செய்யிற உதவி எப்படின்னு சாம்பிள் பார்த்த உட்னே புரிஞ்சு போச்சுங்க.. நல்லாவே உண்மை பேசியிருக்கீங்க.... இல்லேண்ணா என்னவோண்ணு நினைச்சிருப்போம்ல்ல...

வருண் said...

I literally see your experience and what you are trying to say.

What can I say? Indians have a "strange ego". They want to justify everything and feel superior though westerners call India as a third-world country. If nobody certifies them as great, they themselves claim that they are great.

"I dont know" is a phrase they hardly ever use. You are in a new country, new culture and there is lot to learn! Of course you would not be knowing lot of things BUT YOU CAN easily learn! All you need to say is "I DONT KNOW". There is no need to pretend that YOU KNOW EVERYTHING. That is as simple as that. Yes, things have changed in India but..

prince said...

சிரிக்கவும்! சிந்திக்கவும்! வைத்தீர்கள். உங்க அப்பாவை போல (கலைவாணர் N.S.K அவர்களையும் நியாபக படுத்திவிட்டீர்கள்) நன்றி!

நசரேயன் said...

வீட்டிலே கிரைண்டர் மாவு ஆட்டிகிட்டே இருந்து யோசித்ததா?

நசரேயன் said...

//அவள்: கேட்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆக இருந்தாங்க. இந்தியன்ஸ் ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.//

உண்மையச்சொல்லுங்க கேட்டது யாருன்னு

நசரேயன் said...

//நம்ம ஆளு அசட்டு சிரிப்புடன், கடையை விட்டு வெளியேறி விட்டார். //

சாலமன் அண்ணாச்சியா ?

நசரேயன் said...

//புதியவர்களுக்கு பணிவுடன் சொல்லி கொடுத்தால் என்ன? //

நீங்க ஒரு டீச்சர் ன்னு நிருபிச்சிட்டீங்க

Chitra said...

சாலமன்க்கும் உங்களுக்கும் உள்ள சண்டையை பேசி தீத்துக்கோங்க. அவர் அந்த இடத்திலேயே அப்போ இல்லை, Nasarayen.

Chitra said...

////நீங்க ஒரு டீச்சர் ன்னு நிருபிச்சிட்டீங்க////


.....ha,ha,ha,ha,ha....

R.Gopi said...

//"sir, you just drank the water from the cup, in which I washed these spoons that I used to serve the soup-samples."
நம்ம ஆளு அசட்டு சிரிப்புடன், கடையை விட்டு வெளியேறி விட்டார்//

********

சித்ரா...

இது ஒண்ணு தானா... நாம எல்லாம் எவ்ளோ பார்த்து இருக்கோம்...

R.Gopi said...

மொத்தத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக இருப்பதை விட ஏதும் தெரியாத எல்லப்பனாக இருப்பதே மேல்...

சசிகுமார் said...

// என்னவோ பிறந்து வளர்ந்தது முதல் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சாப்பிட்டு விட்டு, அமெரிக்கா வந்துதான் கை கழுவிட்டு போனது மாதிரி "படம்" காட்டுவாங்க.//

நம்மூர்லயும் இது போல நிறைய பேரு இருக்காங்க, இங்க இருக்கிற தூத்துக்குடிக்கு போயிட்டு வந்து துபாய்க்கே போன மாதிரி சீன் போடறானுங்க நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல தெளிவான நடையில் படிக்க ரொம்ப நல்லாருக்குங்க.இங்க ஃபாரினர்ஸ் யாரும் இல்ல,ஸ்பூன் காமெடி சூப்பர்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சூப்பர் சித்ரா..
எனக்கும் வந்த புதிதில் நடந்த சம்பவம் எல்லாம் நினைவுக்கு வருது :D

எப்பவும் போல அருமையா சொல்லியிருக்கீங்க.. ஜோக்ஸ்..ஹ்ம்ம் ஹ்ம்ம்.. சூப்பர்..

மங்குனி அமைச்சர் said...

//"There is no Jefferson here. Only Indians. No foreigners."
"?????????"///சிரிசுகிட்டே இருக்கேங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் மேடம்

எல் கே said...

//முதல் முறை எந்த நாட்டுக்கு வருகிறவர்களும் ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு,/

entha oorukku ponalum. chennaila kooda sila samayam intha mathiri nadakkum

Muruganandan M.K. said...

சிரிக்கிறேன், சிரிக்கிறேன், சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
எனது ருவிட்ரிலும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Nice one Chitra!

சுசி said...

இங்கவும் அதே கதைதாங்க சித்ரா :))

butterfly Surya said...

நல்லாயிருக்கு சித்ரா.

சூப்பர்.