Tuesday, August 2, 2011

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?

போன பதிவை வாசித்து விட்டு, என்னுடைய பார்வையில் - இந்திய பயண அனுபவங்களை - இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும் என்று ஒரு question paper எடுத்து என் கையில் கொடுக்காத குறையாக நேயர் விருப்பம் கேட்டுப்புட்டாங்க.... (இப்படி உசுப்பேத்தி.....உசுப்பேத்தியே...... ஹி,ஹி,ஹி,ஹி ....... )

இந்தியாவில் அது சொத்தையாக இருந்துச்சு.... இது நொள்ளையாக இருந்துச்சுனு நான் புலம்ப போறதில்லை. என்னவோ, இந்தியாவை இதற்கு முன்னாலே பார்த்திராத ஆளு மாதிரியும் அலம்பல் விடப்போறது இல்லை. பிறந்து வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் - எந்த அளவுக்கு மாறி இருக்கும் என்று தெரியாமலா தாமிரபரணி ஆத்து தண்ணி குடிச்சு வளர்ந்தேன்? சும்மா தமாசு பண்ணாதீங்க....


உப்பு காசுக்கு பெறாத விஷயங்கள் தானே "வெட்டி பேச்சு" கண்ணுக்கு தென்படும். அதை போய் பெருசு படுத்தி பேசினால், நான் தான் ஏதோ வேற்று கிரகத்து ஆளு விசிட் அடிச்ச மாதிரி லுக்கு விடுவாங்க.... அதான் இங்கே இன்னைக்கு பதிவில் கொட்டுகிறேன்.

நெல்லை பக்கம் கமென்ட் அடிப்பாங்க: "பொண்ணு நல்ல கலரா இருக்குது."
அது என்ன நல்ல கலர் - கெட்ட கலர்?
பொண்ணு நிறமும் கலர்னு சொல்லுவாங்க ..... கொக்ககோலா - காளிமார்க் Bovonto வாங்கி வர சொன்னாலும், "நல்ல கலரா" (சோடா) பார்த்து வாங்கி வர சொல்வாங்க...
இதுல உள் குத்து எதுவும் இருக்கா என்று எந்த நெல்லை பொண்ணுக்கும் தெரிஞ்சது இல்லை.
மொத்தத்தில், சிகப்போ வெள்ளையோ மஞ்சளோ இருக்கிற பொண்ணை வச்சு காமெடி பண்ணுவாங்க.

ஊருக்கு போய் இருந்தப்போ ஒரு தமிழ் சினிமா பாட்டு : "உன்னை வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? ......" என்று அடிக்கடி டிவியில போட்டாங்க. யாரு அந்த பொண்ணு என்று கேட்டேன்.
"டாப்சி பன்னு" என்று பதில் வந்துச்சு.
செல் போன் சிம் கார்டுக்குத்தான் அங்கே ஒரு கடையில இப்படி என்னவோ சொன்ன மாதிரி ஞாபகம். பொண்ணு பேரை கேட்டால், எதுக்குடா டெலிபோன் பில்லுக்கு பணத்தை கொடுக்க சொல்ற? என்று அருவாளை எடுக்காத குறையா கேட்டால்...... அதுதான் அந்த பொண்ணோட பேரு என்று விளக்கம் கொடுத்தாங்க...

பக்கத்தில் இருந்த சினிமா பிரியை பெரியம்மா ஒருத்தங்க, " அந்த காலத்துல, தெலுங்கு படத்துல நடிக்கணும்னா அந்த ஊருக்கு ஏத்த மாதிரி ஒரு பேரு.... தமிழ் படத்துல நடிக்கணும்னா இந்த ஊருக்கு ஒரு பேருனு வைப்பாங்க.... இப்போ என்ன பேர் வச்சுட்டும் நடிக்க வந்துடலாம். மவராசி வெள்ளையா இருந்தா போதும்னு" அலுத்துக்கிட்டாங்க.

அந்த பாட்டை மீண்டும் கேட்டேன்.... அந்த ஒற்றை வரிக்கு அர்த்தம் ஆராய்ஞ்சு பார்த்தால் எனக்கு பயமாக இருந்துச்சு. அந்த பாட்டை கேட்கிறதை விட்டுட்டேன்.

ஏதோ சொல்ல வந்துட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டு போறியே என்று நினைக்காதீங்க. ஒரு டிவி ப்ரோக்ராம் பார்க்கிறதுக்குள்ள - எத்தனை தடவை என்னையே வெள்ளாவியில் வச்சு வெளுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கிட்டு "கலர்" தீவிரவாதிகளாக வந்து மாத்தி மாத்தி கலங்கடிக்கிற டிவி விளம்பரங்களை பார்த்து டர் ஆவது? அந்த effect ......

வெயிலில் சற்று கருத்து போவதை தாங்காமல் துடிக்கும் கலர் பொண்ணுங்க இந்த கருமாந்திர கிரீம் பூசினால், பழைய கலர் வந்துடும்னு ஆரம்பிச்ச ஐட்டம் ஒண்ணு ...... எல்லா கருத்தம்மாக்காளையும் வெள்ளையம்மா ஆக்கிடுவதாக நம்ப வச்சு பெரிய பிசினஸ் ஆனது ஊரறிஞ்ச விஷயம். ஒரு கட்டத்தில் திராவிட இனம் அழிஞ்சு எல்லோரும் ஆர்ய இனமா ஆகி விடுவாங்களோ என்று நினைக்க வச்சுட்டாங்க.

பொண்ணுங்க மட்டும் தான் வெள்ளை ஆகணுமா? ஆண்களுக்கு இல்லையா என்று வைக்கால்பட்டியில் இருந்து ஆண்மகன் மொக்கையன் உண்ணாவிரதம் இருந்து போராடிய பின், இப்போ ஆண்களுக்கும் தங்கள் முகத்தில் தனி வெள்ளையடிக்க பெயிண்ட் டப்பா வந்துடுச்சு.

அப்புறம், கருத்த பொண்ணுங்க எல்லாம் சிகப்பழகு கிரீம் பூசி கலராயிட்டாங்க. அதனால் எங்களை இன்னும் அதிக கலரா காட்டுங்க என்று தூங்காவரட்டிபட்டியில் இருந்து , "டான்சி பின்னு" போராட்டம் நடத்திய பின், பேயை கண்டு பயத்துல வெளிறி போய் ரத்தம் வடிஞ்சு நிக்கிற மோகினி மாதிரி வெள்ளை வெளேர் என்று மாற்றி காட்ட இப்போ - face wash - White beauty பவுடர்/கிரீம் - என்று நிறைய வந்துடுச்சு. அவங்க விளம்பரத்தில் காட்டுற வெள்ளாவியில் வச்சு நிஜமாகவே வெளுத்த வெள்ளைக்காரிகளை காட்டும் போது, நான் ஓடி போய் டிவி brightness குறைச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதா போச்சு.... இல்லைனா என் கண்ணு அவிஞ்சு போய்டும் போல இருந்துச்சு.



நீங்களே சொல்லுங்க.... இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளேர்னு ஆகணுமா?

ஒரு நண்பரிடம் (அவர் ஒரு மருத்துவர்) பேசி கொண்டு இருந்த போது, இந்த "வெள்ளாவி கிரீம்" பிசினஸ் பற்றி டாபிக் வந்துச்சு. அவர் சொன்னது, " இந்திய சீதோஷ்ண சூழ்நிலைக்கு வரும் வெயில் மற்றும் வெப்ப கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க melanin (மெலனின்) அவசியப்படுகிறது. அதை இத்தகைய கிரீம் மூலம் மக்க வைக்கும் போது, UV rays தீங்கினால் ஸ்கின் கான்செர் வரும் அபாயம் பெருகுகிறது. " சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாய் ஆயிடும் என்று அதிலுள்ள கெடுதல்களை சொல்லி கொண்டே போனார்.

http://en.wikipedia.org/wiki/Melanin

"The photochemical properties of melanin make it an excellent photoprotectant. It absorbs harmful UV-radiation and transforms the energy into harmless heat through a process called "ultrafast internal conversion". This property enables melanin to dissipate more than 99.9% of the absorbed UV radiation as heat. This prevents the indirect DNA damage that is responsible for the formation of malignant melanoma and other skin cancers."

அதுக்குத்தான் வெயிலுக்கு காட்டாம வளர்க்க - இருக்க சொல்றாங்களோ..... அட....அட... அவங்க கடமை உணர்ச்சியை பாராட்டணும்.

ஒரே வாரத்தில் பொலிவை கூட்ட வைக்கிறாங்களோ இல்லையோ..... ஒரே வாரத்தில், கடும் வியாதியை கொண்டு வந்து மேலுலகத்துக்கு கூட்டாமலோ கழிக்காமலோ அனுப்பி வைக்காமல் இருந்தா சரிதான்.

அடுத்த பதிவில் : நாட்டுக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று இல்லாத மற்றுமொரு டாபிக்கில் உங்களை சந்திக்கும் வரை, வணக்கம் கூறி விடை பெறுவது :

என்றும் அன்புடன் வெட்டி பேச்சு பேசும் சித்ரா !!!!

114 comments:

Prabu Krishna said...

Me the first?

கும்மாச்சி said...

ஊர் வம்பு நிறைய எதிர் பார்க்கிறோம்.

Prabu Krishna said...

சமீபத்தில் ஒரு ட்வீட் பார்த்தேன்....
இந்தியாவில் இப்போதைய மூட நம்பிக்கை "அழகு சாதன கிரீம்களை பயன்படுத்தினால் வெள்ளை ஆகிவிடலாம். "

கருப்பும் ஒரு கலர்தானே.???? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாறச் செய்வார்கள்.

Prabu Krishna said...

வரலாற்றில் இன்று முக்கியமான நாள். என்னானா உங்க பதிவுக்கு நான் இப்போதான் முதல் கமெண்ட். மத்த நாள் எல்லாம் 50 க்கு மேல்தான் ஹி ஹி ஹி

Unknown said...

me the second?

Unknown said...

//எந்த அளவுக்கு மாறி இருக்கும் என்று தெரியாமலா தாமிரபரணி ஆத்து தண்ணி குடிச்சு வளர்ந்தேன்? //
தண்ணியா குடிச்சு வளர்ந்தீங்க? சொல்லவேயில்ல? :-)

போளூர் தயாநிதி said...

இந்த நிறம் நம்மை படுத்தும் பாடு இருக்கிறதே சொல்லி மாலாதுப்பா கலர் என்ன வேண்டி கிடைக்கிறது உள்ளே இருக்கும் ? உள்ளம் தான் பார்க்க வேண்டியதே ஒழிய வெறுமனே இந்த வண்ணம் என்ன செய்யும் அப்பையும் நல்ல நிறம் வேண்டுமானால் நாளும் பழசாருகள் கேரட்,பீட்ரூட் போடறவை எடுங்க அப்பா பாருங்க உங்களின் வண்ணத்தை

rajamelaiyur said...

Tamilmanam vote podaju

Unknown said...

//அது என்ன நல்ல கலர் - கெட்ட கலர்?//
ஒருவேளை
மெரிண்டா கலர் - நல்ல கலர்
கோகோ கோலா கலர் - கெட்ட கலர்?

இந்திரா said...

நீங்கள் சொல்வதும் சரிதான்.
வர வர இந்த விளம்பரங்களி்ல் கூறப்படும் அபத்தங்கள் எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை.
குறிப்பாக அழகு சாதனப் பொருட்களில் அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

வைகை said...

ஒரே வாரத்தில் பொலிவை கூட்ட வைக்கிறாங்களோ இல்லையோ..... ஒரே வாரத்தில், கடும் வியாதியை கொண்டு வந்து மேலுலகத்துக்கு கூட்டாமலோ கழிக்காமலோ அனுப்பி வைக்காமல் இருந்தா சரிதான்.///

ஒருவாரத்துல வெளுப்பா ஆயிரலாம்னா ஏன் ஒரு வாரத்துக்கு மட்டும் வர்ற மாதிரி இல்லாம மேக்ஸ்சிமம் சைசிலே அவங்க ப்ராடக்டட் எல்லாம் விக்கிறாங்க? இதிலே தெரியல அவங்க பித்தலாட்டம்? ( அடுத்த முறை யூ.எஸ்ல இருந்து வரும்போது சீக்கிரமே வெளுப்பா ஆகுற மாதிரி நல்ல கிரீமா எனக்கு வாங்கிட்டு வாங்க..யார்கிட்டயும் சொல்லாதிங்க!)

வெட்டிப்பேச்சு said...

முக்கியமான விஷயத்தைப் பேசியிருக்கீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>"டாப்சி பன்னு" என்று பதில் வந்துச்சு.
செல் போன் சிம் கார்டுக்குத்தான் அங்கே ஒரு கடையில இப்படி என்னவோ சொன்ன மாதிரி ஞாபகம். பொண்ணு பேரை கேட்டால், எதுக்குடா டெலிபோன் பில்லுக்கு பணத்தை கொடுக்க சொல்ற

ஹா ஹா அக்மார்க் யுவர் டச்..

Priya said...

சித்ரா... நல்லா எழுதி இருக்கிங்க..
//இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளேர்னு ஆகணுமா?//.... வெள்ளை அடித்துக்கொள்வோர் யோசிக்க வேண்டும்தான்:)

தக்குடு said...

நம்ப ஊர்ல இப்ப பாதிபயபுள்ளைங்க எழவெடுத்த இந்த கிரீமைதான் பூசிண்டு அலையுதுங்க! இந்தியால இந்த பிஸினஸோட சந்தை மதிப்பு எத்தனையோ ஆயிரம் கோடியாம்!!!

G.M Balasubramaniam said...

Does the colour complex prevail among Americans, including the coloreds.?

இராஜராஜேஸ்வரி said...

ஒரே வாரத்தில் பொலிவை கூட்ட வைக்கிறாங்களோ இல்லையோ..... ஒரே வாரத்தில், கடும் வியாதியை கொண்டு வந்து மேலுலகத்துக்கு கூட்டாமலோ கழிக்காமலோ அனுப்பி வைக்காமல் இருந்தா சரிதான்.//

அதெல்லாம் பாம்பும் சாகாம தடியும் உடையாம பார்த்துக்குவாங்க. வியாபாரம் நடக்கனுமில்லயா.

உணவு உலகம் said...

//ஒரே வாரத்தில் பொலிவை கூட்ட வைக்கிறாங்களோ இல்லையோ..... ஒரே வாரத்தில், கடும் வியாதியை கொண்டு வந்து மேலுலகத்துக்கு கூட்டாமலோ கழிக்காமலோ அனுப்பி வைக்காமல் இருந்தா சரிதான்.//
நியாயமான ஆதங்கம்.

மாணவன் said...

//ஒரே வாரத்தில் பொலிவை கூட்ட வைக்கிறாங்களோ இல்லையோ..... ஒரே வாரத்தில், கடும் வியாதியை கொண்டு வந்து மேலுலகத்துக்கு கூட்டாமலோ கழிக்காமலோ அனுப்பி வைக்காமல் இருந்தா சரிதான்.///

கலரா ஆகனும்னு நினைக்கிறவங்க இதை புரிந்துகொண்டால் சரி...
நல்லா எழுதியிருக்கீங்க மேம்,
பகிர்வுக்கு நன்றி!

சாந்தி மாரியப்பன் said...

//இந்திய சீதோஷ்ண சூழ்நிலைக்கு வரும் வெயில் மற்றும் வெப்ப கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க melanin (மெலனின்) அவசியப்படுகிறது. அதை இத்தகைய கிரீம் மூலம் மக்க வைக்கும் போது, UV rays தீங்கினால் ஸ்கின் கான்செர் வரும் அபாயம் பெருகுகிறது./

people have to think about it... but they don't.
(sorry no tamil fonts :-)

சுதர்ஷன் said...

நல்ல விடயம் எழுதியிருக்கீங்க .. இந்த விளம்பரங்கள் கறுப்பாக இருக்கும் பெண்களை அனைவரும் இளக்காரமாக நினைப்பது போல காட்டுகிறார்கள் . இது அவர்களை மிகவும் மனமுடைய வைக்கும் . வெள்ளையா இருந்தால் நோய்கள் வரும் என்பது உண்மை ..

சேலம் தேவா said...

//ஒரு கட்டத்தில் திராவிட இனம் அழிஞ்சு எல்லோரும் ஆர்ய இனமா ஆகி விடுவாங்களோ என்று நினைக்க வச்சுட்டாங்க.//

ஹி..ஹி...செம நையாண்டி..!!

ஹுஸைனம்மா said...

பெரியம்மா சொன்னது ரொம்ப கரெக்ட். குளோபலைசேஷனின் எஃபெக்ட்டோ என்னவோ, ஃபாரின் ப்ராடக்டுகளை அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்!! ;-)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பிறந்து வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் - எந்த அளவுக்கு மாறி இருக்கும் என்று தெரியாமலா தாமிரபரணி ஆத்து தண்ணி குடிச்சு வளர்ந்தேன்? //

என்ன இருந்தாலும் நீங்க நம்ம தமிழ்நாட்டுப் போண்ணுன்னு நிரூபிச்சுட்டீங்க. நன்றி.

Unknown said...

விளம்பரத்துடன் ஒரு பதிவு ..அமர்களமாய் ஓகே ஒகே ...

Unknown said...

நல்ல சேதிகள் சொல்லி புட்டு வெட்டி பேச்சுன்னு சொன்ன எப்படி ?
நல்ல பதிவு நன்றி

Brinda said...

Neenga choose pannuna topicum,karuthum super!!

சக்தி கல்வி மையம் said...

அக்கா.. தலைப்பு அசத்தல்.. அதைவிட விளம்பரங்களில் வெளிவரும் அபத்தங்களை விளிப்படுகிற மாதிரி பதிவுக்கு நன்றிகள்..

Brinda said...

Neenga yedutha topicum, kodutha karuthum super!!

pudugaithendral said...

சிகப்பழகு க்ரீம்களைத் தொடர்ந்து உபயோகித்தால் 15 வருடங்கள் கழித்து சிவப்பான அந்த முகத்தில் பிக்மண்டேஷன் ஏற்பட்டு கருத்து போகுமாம். தோல் மருத்துவ நிபுணர் சொன்னது இது. பலருக்கும் புரிய வைக்கணும்.

அமுதா said...

நல்ல மெசேஜ்

அருண் பிரசாத் said...

:)

Menaga Sathia said...

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்..

settaikkaran said...

வெள்ளாவி வச்சுத்தான் - அப்படீன்னா என்னான்னே தெரியாத ஒரு கவுஞர் எளுதினதாயிருக்கும்னு நெனக்கேன்.

சுண்ணாம்புக்காளவாயிலே போட்டு நீத்தாகளா-ன்னு கேக்காத வரைக்கும் சவுரியம்!

//இப்போ ஆண்களுக்கும் தங்கள் முகத்தில் தனி வெள்ளையடிக்க பெயிண்ட் டப்பா வந்துடுச்சு.//

நான் கூட கடையிலே இருக்கான்னு கேட்டேன். என்னை ஏற இறங்கப்பார்த்திட்டு ’எம்புட்டு லோடு வேணும்?’னு கேட்டாங்க! :-(

தமிழ் உதயம் said...

ரெம்ப நாளாச்சு... சிரிக்க வைக்கும் பதிவை படிச்சு.
நன்றி சித்ரா.

vanathy said...

skin color is more important in our country. Girls would do any thing to get fair skin.

மொக்கராசா said...

//ஆண்மகன் மொக்கையன் உண்ணாவிரதம் இருந்து போராடிய பின், இப்போ ஆண்களுக்கும் தங்கள் முகத்தில் தனி வெள்ளையடிக்க பெயிண்ட் டப்பா வந்துடுச்சு//

என்னை பற்றி உயர்வாக எழுதியதற்க்கு நன்றி........

மொக்கராசா said...

//வைக்கால்பட்டியில் இருந்து ஆண்மகன் மொக்கையன் உண்ணாவிரதம் இருந்து போராடிய பின், இப்போ ஆண்களுக்கும் தங்கள் முகத்தில் தனி வெள்ளையடிக்க பெயிண்ட் டப்பா வந்துடுச்சு.//

யக்கோவ் என்னை பற்றி உயர்வாக எழுதியதற்க்கு நன்றி ........

நட்புடன் ஜமால் said...

ஒரு கட்டத்தில் திராவிட இனம் அழிஞ்சு எல்லோரும் ஆர்ய இனமா ஆகி விடுவாங்களோ என்று நினைக்க வச்சுட்டாங்க.


இதா வெட்டிப்பேச்சு ...

ISR Selvakumar said...

தங்கை, இந்திய பயணத்தில் நீ வெளுத்துக் கட்ட, உன்னிடம் சிக்கியது வெள்ளாவி பாட்டு மட்டும்தானா...!

கலரே இல்லாத புள்ளைக இருக்கட்டும்.
எங்க புள்ளைக புக்கே இல்லாம பள்ளிக்கோடம் போய் வந்துகிட்டிருக்காக அது தெரியுமா உனக்கு..

Unknown said...

வெள்ளை கலர் கருப்பு கலரை டாமினேட் பண்ணுவது உண்மைதான். கருப்பு எலி கூட வெள்ளெலியை கண்டா ஓடி ஒளியுது. பன்றியாக இருந்தாலும் கூட கருப்பை விட வெள்ளைக்குதான் மவுசு. அப்படி வெள்ளைல என்னதான் இருக்கு?

ஆமினா said...

சண்டே மண்டே ஆரம்பிச்சு ஒரு வாரத்துலையே வெள்ளையாய்டுவாங்களாம்....

இத விட சிறந்த ஜோக் என்னவா இருக்க முடியும்? :)

MANO நாஞ்சில் மனோ said...

பொண்ணுங்க மட்டும் தான் வெள்ளை ஆகணுமா? ஆண்களுக்கு இல்லையா என்று வைக்கால்பட்டியில் இருந்து ஆண்மகன் மொக்கையன் உண்ணாவிரதம் இருந்து போராடிய பின், இப்போ ஆண்களுக்கும் தங்கள் முகத்தில் தனி வெள்ளையடிக்க பெயிண்ட் டப்பா வந்துடுச்சு.//

நான் விஜயகாந்த் மாதிரி வெள்ளையா இருப்பதினால் [[!]] பெயின்ட் தேவை இல்லைன்னு நினைக்கிறேன் ஹி ஹி....[[கல்லெடுத்து எரிஞ்சிராதீங்க சித்ரா ஹி ஹி]]

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க பதிவர் சந்திப்பு பற்றி எழுதாதை நினச்சி நம்ம ஆபீசர் ரூம் போட்டு ஃபீல் பண்ணுராராம் ஹி ஹி...

ஷர்புதீன் said...

மேடம் ஞாபகம் இருக்கா? நெல்லை சந்திப்பில் உங்களுக்கும், மங்குனி அமைச்சருக்கு "தமிழ்மணம் மகுடத்தில் " வருவதில் மாற்றி மாற்றி நடக்குறதே என்றேன், இதோ வந்தவுடன் தெரிந்துவிட்டது நீங்கள் இனி மகுடத்தில் அடிக்கடி வருவீர்கள் என்று, ஆனால் போட்டி உங்களுக்கும் நிரூபனுக்கும் என்று நினைக்கிறேன்!

:-)

சுசி said...

கலர் கலக்கல் :))

M.R said...

ஆமா சகோதரி ,

க்ரீம் என்ற பெயரில் முகத்தில் உள்ள வியர்வை சுரப்பி வாயிலை அடைத்து முகத்தை கெடுத்து கொள்கின்றனர் .

இதை சொன்னால் நம்மளை பைத்தியம் என்பார்கள் .

ஸாதிகா said...

////இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளேர்னு ஆகணுமா?//// என்ன செய்வது?நம் மக்கள்ஸுக்கு கலரில் உள்ள மோகம் தீரவில்லையே.அதை பயன் படுத்தி பெயிண்டு கம்பெனிகள் நன்றாக பிஸினஸ் பண்ணுகின்றார்கள்

மாய உலகம் said...

//இத்தகைய கிரீம் மூலம் மக்க வைக்கும் போது, UV rays தீங்கினால் ஸ்கின் கான்செர் வரும் அபாயம் பெருகுகிறது. " சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதை//

ஆஹா அருமையாக பதிவில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்... இனி க்ரீம் பக்கம் போவாங்க... ஹா ஹா ஹா
பகிர்வுக்கு நன்றி மேடம்

Yaathoramani.blogspot.com said...

இனிப்பு பூசப்பட்ட
இப்போது அனைவருக்கும் தேவையான
கசப்பு மருந்து
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Anonymous said...

ஒரு வாரத்தில் ரிசல்ட் என லைட் அடிச்ச முகத்தை காமிச்சு பல கோடி சம்பாதிச்சிடுறாங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான்தான் ரொம்ப லேட்டா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஓ... இதைத்தான் வெட்டிப்பேச்சுங்குறாங்களா..

இருந்தாலும் சுவாரஸ்யம்....

ஸ்ரீராம். said...

டாப்சிங்கற பேர் எனக்கும் அதே மாதிரிதான் தோன்றியது! கருப்பு கலர்தான் வெய்யிலை நல்லா தாங்கும்னு சொல்லுவாங்க...

Rizi said...

மீண்டும் வந்தாச்சா கலக்குங்க...

Lifewithspices said...

wow good post i njoyed it..

சிவகுமாரன் said...

மாத பட்ஜெட்டில் இதுக்குனே ஒரு தொகை காலியாகுதுங்க.

ப.கந்தசாமி said...

ஒண்ணுமில்லீங்க, சும்மா பாத்துட்டுப் போலாம்னு வந்தேனுங்க.

ஆகுலன் said...

ஊர் பற்றிய செய்தியை தொடருங்கள்.........
வாசிக்கும் போது அழகாக இருந்தது.....

தளத்தின் பெயரும் எனது பெயரும்...........

அன்புடன் அருணா said...

Welcome back Chitra!

நீச்சல்காரன் said...

இயற்கையானவைகளை மாற்ற நினைக்கும் மனோ பாவத்தை மாற்ற வேண்டும்

மோகன்ஜி said...

நல்ல விஷயத்தை நெத்தியடியா சொல்லியிருக்கீங்க சித்ரா!

bandhu said...

எவ்வளவு வெளிப்படையாக நிறவெறியை தூண்டுகிறார்கள்! மாதர் சங்கங்கள் இந்த 'சிகப்பழகு' க்ரீம்களுக்கு எதிராக ஏன் போராட மாட்டேன் என்கிறார்கள்?

ஹேமா said...

அவிச்ச வெள்ளை ஒரு அழகா.நம்ம மாநிறம்போல வருமா சொல்லுங்க சித்ரா !

தமிழ்வாசி பிரகாஷ் said...

வெள்ளாவிக்கு இம்புட்டு விளக்கமா? அதுவும் டிப்ஸ் வேற தந்திருக்கிங்க

Dhiyana said...

//இந்திய சீதோஷ்ண சூழ்நிலைக்கு வரும் வெயில் மற்றும் வெப்ப கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க melanin (மெலனின்) அவசியப்படுகிறது. அதை இத்தகைய கிரீம் மூலம் மக்க வைக்கும் போது, UV rays தீங்கினால் ஸ்கின் கான்செர் வரும் அபாயம் பெருகுகிறது.//

முற்றிலும் உண்மை. ஆனால் ந‌ம் ம‌க்க‌ளுக்கு வெள்ளை நிற‌ம் மேல் ஒரு மோக‌ம் உண்டு.
:-((

வேலன். said...

:)

வாழ்க வளமுடன்.

வேலன்.

NRIGirl said...

Greetings Chitra! Welcome back. I had the pleasure of meeting Victor and Bella at a family wedding last week. When I happend to mention I was a blogger they immediately inquired if I knew you. What a surpirse to know you are friends in Kentucky!

I had sent my greetings thru' them. Hope they have conveyed it to you.

Stay in touch.

~ NRIGirl

Unknown said...

no no no

மீ தி பிஸ்ர்டு

நிரூபன் said...

சிகப்பழகு கீரிம் மோகத்தில் தவிப்போருக்கு விழிப்புணர்வாய் ஒரு பதிவு,

அருமை.

உங்களின் பயண அனுபவத் தொகுப்பினைப் படிப்பதற்காக காத்திருக்கிறேன்.

நாடோடி said...

விளம்பரங்களுக்கு கொடுக்கும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.. face cream களுக்கு அடுத்து முன்னனியில் இருப்பது body spray.

நகைச்சுவையுடன் அருமையான பதிவு..

மனோ சாமிநாதன் said...

Welcome back Chithra!
அர்த்தமுள்ள‌ பதிவுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்!
இனிய வாழ்த்துக்கள்!!

Anonymous said...

;-)

மகேந்திரன் said...

நெல்லை மண்ணுக்கே உரிய நக்கலும் நையாண்டியும்
உங்கள் பதிவில் நர்த்தனமாடுகிறது.
ஆனாலும் நல்ல கருத்தை நடுநாயகமாக வைத்து
எழுதி இருக்கிறீர்கள்.
ஒரு அடுக்கு மேக்கப் போடுபவர்கள்
இதை படித்தாவது நிதர்சனம் புரிந்து கொள்வார்களா????

http://www.ilavenirkaalam.blogspot.com/

ராஜ நடராஜன் said...

சச்சின் தோற்றார் போங்க!மைதானத்துக்கு வந்தவுடனே சிக்ஸரா:)வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

ஹா ஹா

Unknown said...

இப்படி நம்மைப் போல ஏமாறுரவங்க இருக்கற வரயில், இந்த மாதிரி விளம்பரங்கள் மூலமா நம்ம ஏமாற்றத் தான் செய்யறாங்க.நல்ல பதிவு.

மாலதி said...

சிகப்பழகு கீரிம் மோகத்தில் தவிப்போருக்கு விழிப்புணர்வாய் ஒரு பதிவு,

ஆனந்தி.. said...

ம்ம்.....அவசியமான ஒரு விஷயத்தை...அலட்சியமா..அனாயசமா ..குறும்பு தனத்தோட..சொல்லி முடிச்சாச்சு போலே..வழக்கம்போலே..பட்டய கிளப்பிங் அம்மு..:-))

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வு தரும் நல்ல பகிர்வு சித்ரா.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உங்கள் பதிவுகள் மட்டும் இல்ல பின்னூட்டங்களும் ரசிக்க வைக்கும். . RETURNED WITH A BANG
welcome (?) chitra

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நீங்கள் சொல்வது உண்மைதான். துணி வெளுக்க, தோல் வெளுக்க எல்லாம் நிறைய இருக்கு. மனம் வெளுக்க?

vidivelli said...

supper pathivu....
vaalththukkaL..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி..சிகப்பிலும்...வெளுப்பிலும் என்ன இருக்கிறது...ஏதாவது வியாதி வந்தாற்போல்....பயத்தில் வெளுத்த முகம்..!
கறுப்பு தான் அழகு!
காந்தல் தான் ருசி!!!

Anonymous said...

பயனுள்ள பதிவு நண்பரே...

தருமி said...

//வைக்கால்பட்டியில் இருந்து ...//

ம்ம் ... ம் ..

செங்கோவி said...

கலர் குடிச்சா கலர் கூடுமாக்கா?

Vishy said...

There was a discussion in Neeya Naana a few weeks back on the same topic.. it was interesting hear the view points.. Gopinath also put forth a conspiracy theory on crowning indian girls with the Miss Univ/Miss World titles - to gain more business advantage in India.. am not sure how far it is true - but நமக்குள்ள இருக்கிற தாழ்வு மனப்பான்மையை வியாபாரிகள் நல்லா exploit பண்றாங்க..

Unknown said...

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா
என்பது அந்தக் காலம் தற்போது
அதற்கும் விளம்பரம் செய்யும் நிலை
அதன் காரணமாகவே ஆண்களும்
ஆழகு நிலையம் நாடும் அவலம்
வந்து விட்டது
தங்கள் பதிவு வெட்டிப் பேச்சல்ல நாகரீக உலகுக்கு நல்ல
சாட்டை அடி நன்றி!

புலவர் சா இராமாநுசம்

mamtc said...

Indians are obsessed in getting their skin lightened and westerners are obessed in getting their skin tanned.
Have you seen the number of tan booths in US?
The one thing bothers me is, the ads in US doesnt guarantee you a job or a handsome groom if you darken the skin unlike the indian ads where any woman becomes worthy of something only if her skin is lightned.

Unknown said...

உலகமே இன்னைக்கு விளம்பரத்தில தான் ஓடிக்கிட்டு இருக்கு...

அப்புறம் விளம்பரத்தில சொல்லற விசயத்தில 10 % உண்மை இருக்குமா தெரியாது..

நாம தான் உஷாரா இருக்கணும்..

பாட்டியோட பாடி போட்டோ எல்லாம் வீட்டுல மாட்டி வச்சா இது எல்லாம் குறையும்ன்னு நெனைக்கிறேன்...

Anonymous said...

// "பொண்ணு நல்ல கலரா இருக்குது."
அது என்ன நல்ல கலர் - கெட்ட கலர்? //

ஜெயலலிதா மேடம் கலர் நல்ல கலர். அவங்களுக்கு பிடிக்காதவங்க எல்லாம் கெட்ட கலர்.

அமுதா கிருஷ்ணா said...

தூங்காவரட்டிபட்டி ஊரின் பெயர் நல்லாயிருக்கே? நல்ல பதிவு.

Murugeswari Rajavel said...

சித்ரா,
வழக்கமான சிரிப்புடன் கூடியதாய்.

கோமதி அரசு said...

நல்ல பதிவு சித்ரா.

மக்கள் விழித்துக் கொண்டால் நல்லது.

என்று தணீயும் இந்த கலர் மோகம் என்று நினைக்க வைக்கிறது.

Muruganandan M.K. said...

"இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளேர்னு.."
நிஜத்தை உறைக்கச் சொன்னீர்கள். தேவையான பதிவு.

Mythili (மைதிலி ) said...

nalla vizhippunarchchi katturai....

Jayanthy Kumaran said...

haha...lovely post chitra..
color complexion has taken a prime role in girls pride nowadays.
And commercial market is making use of it to its best..!
eager to read all your India visit experiences ..:)
Tasty Appetite

Unknown said...

பதிவுலகிற்கு புதிதாக வந்துள்ள எங்களுக்கு, உங்கள் பதிவுகள் பதிவர்களுக்கான தெளிவுகளை கொடுக்கிறது.

Unknown said...

பதிவுலகிற்கு புதிதாக வந்துள்ள எங்களுக்கு, உங்கள் பதிவுகள் பதிவர்களுக்கான தெளிவுகளை கொடுக்கிறது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சித்ரா,

நம்மில் பலர், பொதுவாக தம்மை 'நிறம் குறைந்தோர்' என்று நினைப்பதால் பல மனத்தேங்கல்களுக்கு ஆளாகின்றனர். இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாது 'குணத்தில் சிறந்தோராய் வாழ்தலே சிறப்பு' என்று செயலாற்ற வேண்டும். எனில், நிறங்கள் எல்லாம், தானே தம்மை தேடி வரும்..!

முக வெளுப்பைவிட
அக வெளுப்பே சிறப்பு.

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.சித்ரா.


அடுத்து...


தங்களுக்கு"நிரூபன்-சித்ரா-ஆஷிக்:-3பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!" ---இதில்
ஓர் அழைப்பு விடுத்துள்ளேன்..!

பதிவுலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, உங்களை அழைத்துள்ளேன்.
தாங்களும் எழுதப்படாத அந்த வரைமுறைகளை பின்பற்றி என் அழைப்பை ஏற்று பதிவை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சகோ.

M.R said...

சகோதரி சித்ராவிற்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

பாலா said...

நானும் பல Fair&Lovely ட்யூப்கல பிதிக்கீட்டேன்.. இப்போ ஆண்களுக்கான ப்ரத்யேக க்ரீம்களும். விளம்பர வெற்றி... ஒரு வேள இந்த க்ரீம் எல்லாம் போட்டுகிட்டு AC ரூம்லயே இருந்தா சிகப்பாயிரலாமா என்னவோ...

கொங்கு நாடோடி said...

சிவாஜியில் ரஜினியையும் விட்டுவைக்கவில்லையே இந்த வெள்ளை அடிக்கற விளையாட்டு...

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரி நல்லதொரு பயனுள்ள பகிர்வைத்
தந்தீர்கள் மிக்க நன்றி.போட்டி போட்டு வளரும் நாகரிக
மோகத்தால் இன்று எத்தனையோ சீரழிவுகளை நாம் தினமும்
சந்திக்கின்றோம்.இதில் இப்போதுள்ள சிக்கலானவிசயமே
இந்த சிவப்பளகைக் கூட்டப் படித்தவரும் படிக்காதவரும்
எடுத்துக்கொளும் அக்கறைதான்.இதனால் வரக்கூடிய
ஆபத்துக்களை யாரும் உணருவதாய்த் தெரியவில்லை.
அப்பேர்ப்பட்டவர்களுக்கு இதுபோன்ற ஆக்கங்கள் சென்றடைய
வாழ்த்துகின்றேன்.மீண்டும் ஒருமுறை நன்றி பகிர்வுக்கு ....

காட்டான் said...

சகோதரி காட்டானுக்கு உந்த கிறீமெல்லாம் தேவையில்லை அவனுக்கு சிவப்பழகு கூடி விட்டது என்றுதான் சூரிய குளியல் செய்கிறான் கொக்கு தடியும் கோவணத்தோடும்...

காட்டான் குழ போட்டான்...

Unknown said...

இயற்கைக்கு முரணான எதுவும் சிக்கல் தான் போல....

Unknown said...

பெண்கள் மட்டுமில்லாது ஆண்களையும் அலைக்கழிக்கும் விஷயத்தை கையிலெடுத்து, தெளிவாக்கி இருக்கிறீர்கள்.

Unknown said...

//வர வர இந்த விளம்பரங்களி்ல் கூறப்படும் அபத்தங்கள் எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை.//

விளம்பரத்தில் சொல்வது போல,எல்லோருக்கும்
ஆறு வாரத்தில் சிவப்பழகு கிடைத்துவிட்டால், கிரீம் விற்பனை அதற்கு பிறகு காலியாகிவிடும் என்பது நமக்கும் நன்றாக தெரிகிறது, கிரீம் விற்பனையாளர்களுக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது தானே.

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா பாட்டுகெல்லாம் அர்த்தம் பார்த்தா.. கண் அவிஞ்சு போச்சா..:))

நெல்லி. மூர்த்தி said...

அவுக வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ இல்லியோ முகப்பூச்சு விளம்பரத்தை நீங்க இப்பதிவு வழியா கிழிகிழின்னு கிழிச்சு வெளுக்க வச்சுட்டீங்க... எப்படியோ நம்ம மக்கள் இத விளங்கிக்கிட்டு வழுக்கிக்காம இருந்தா சரி தான்.

இன்றைய கவிதை said...

சித்ரா

நல்லா சொன்னீங்க இந்த விளம்பரத்தை எல்லாம் பாக்கறப்ப பத்திக்கிட்டு வருது என்ன செய்ய

ஆமாம் இந்தியா வந்திங்கன்னு எழுதியிருக்கீங்க நிச்சயம் சென்னைப்பக்கமும் வந்திருப்பீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பார்த்திருக்கலாமே

அடுத்த முறை சொல்வீங்களா?

நன்றி
ஜேகே

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரி அவசரமாய் என் தளத்துக்கு
நீங்கள் வரவேண்டும். இரண்டாவது அழைப்பு உங்களுக்கு
இந்த ஆக்கம் சிறப்புற நீங்கள் கருது மழை பொழியவேண்டும்...
இது என் அன்புக் கட்டளை ....

Malar Gandhi said...

That ad' was indeed very hilarious.

I thought 'skin color' obsession has come down among our girl these days...but looking at the number of products, it doesn't seem so...