Monday, June 7, 2010

நல்லது, கெட்டது தெரியுமா?

"சின்ன புள்ளைக்கு என்ன தெரியும்? நல்லது கெட்டது நாமதான் சொல்லி தரணும்," என்று என் தோழியின் அம்மா, என் தோழியை சத்தம் போட்டு கொண்டிருந்த  "நல்ல" நேரத்தில், அவள் வீட்டினுள் அடி எடுத்து வைத்தேன்.


  அவள் அம்மாவை சமாதானப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு "ஆமாம்" போட்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தேன். நான் வரும் போது, அம்மாவின் அர்ச்சனையில்  உர் என்று இருந்த  என் தோழி,  கொஞ்ச நேரத்தில்,
முகத்தை திருப்பி கொண்டு சிரிப்பதை பார்த்த பின் தான், நான் என்னையும் அறியாமல் விளாயாட்டுத்தனமாக பேசி கொண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன். ஆனாலும், என் தோழியை சிரிக்க வைத்து விட்டோமே என்ற சந்தோஷம் எனக்கு.

அதன் பின், என் மனதில் தோன்றிய கேள்விகள்....

குழந்தைகளுக்கு  நல்லது கெட்டது சொல்லி கொடுக்கிற வயது என்ன?
குழந்தைகளுக்குரிய innocence,  எப்பொழுது தொலைகிறது?
அல்லது, தொலைக்க வைக்கப்படுகிறது?
குழந்தை மனதில்,  உலகத்தை குறித்த பார்வை என்ன வென்று தெரிந்து கொள்கிறோமா?
உலகத்தை குறித்த நம் பார்வை என்னவென்பதைத்தான்  குழந்தைகளின் மனதில் விதைக்கிறோமா?
குழந்தையின் வெள்ளை மனதுக்கும் (child-like),  சின்ன புள்ளத்தனத்துக்கும் (childish) உள்ள வித்தியாசம் எப்பொழுது பிள்ளைகளிடம் எதிர்ப்பார்க்கப்படுகிறது?

இது நடந்து, இரண்டு வருடங்கள் ஆயிற்று. 

என் மகளுக்கு,  பிறந்த நாள் பரிசாக, ஒரு நண்பர்,   "தீயதை பார்க்காதே; தீயதை பேசாதே; தீயதை கேட்காதே" என்ற பொம்மையை (figurine) கொடுத்தார்.

 அவளிடமும் அதை பற்றி சிறிது விளக்கினார். நன்றி சொல்லி பெற்று கொண்ட அவள், பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த தன்  தம்பியிடம் காட்டினாள்.
 
"தம்பி, இந்த மங்கி என்ன செய்யுது?"
"(flying) kiss தா"
"இந்த மங்கி?"
"peek-a-boo" (கண்ணா மூச்சி விளையாட்டு)
"இந்த மங்கி?"
"எட் போன் பாட்டு"  (head phones ல பாட்டு)


 கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை.   என் மகன்  சொல்வதை திருத்த யாருக்கும் மனம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாளைக்கு, அவன் விளையாட்டு பார்வையில் உலகத்தை பார்க்கட்டுமே......

ஒரு நாள், நல்லது கெட்டது அவனுக்கும் தெரியும். அன்று அவனும், "தீயதை பேசாதே; தீயதை பார்க்காதே; தீயதை கேட்காதே" என்று சொல்லி கொண்டு இருப்பான். 
 

ம்ம்ம்ம்ம்ம்..........  ..... Once innocence is lost, நல்லது கெட்டது புரிந்து விடுகிறது.  இல்லை, நல்லது கெட்டது தெரிவதற்காக, innocence தொலைத்து விடுகிறோமா?   ம்ம்ம்ம்ம்ம்ம்.......

இந்த வாரம், என் மகன் செல்வம், தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறான்.  :-)

(படங்கள்: கூகிள்)

77 comments:

Ananya Mahadevan said...

//"தம்பி, இந்த மங்கி என்ன செய்யுது?"
"(flying) kiss தா"
"இந்த மங்கி?"
"peek-a-boo" (கண்ணா மூச்சி விளையாட்டு)
"இந்த மங்கி?"
"எட் போன் பாட்டு" (head phones ல பாட்டு)// so sweet!!!

Many Many more happy returns to your son Selvam.
:))

எல் கே said...

அவர்கள் குழந்தைகளாகவே இருக்கட்டும். உங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

S Maharajan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வத்துக்கு

Mahi_Granny said...

convey my greetings to selvem. many more happy returns from granny.

Jaleela Kamal said...

சித்ரா உங்கள் செல்ல மகனுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்வில் எல்லா நலன்களளும் இனிதாஅய் பெற்று நீங்கள் எண்ணிய வண்ண வளற வாழ்த்துக்கள்,

Unknown said...

எல்லோருக்கும் பகுத்தறியும் ஆற்றல் இருக்கிறது, ஆனால் ஒரு அதீத ஆர்வம் அல்லது எதிர் விளையாட்டு ஆர்வம் வெட்டி வாதங்களின் மீது கவனத்தை அதிகபடுத்தி விடுகிறது, சமீபத்தில் நடந்த பதிவுலக விசயங்களை வரிசைக் கட்டிப் பார்த்தால் வக்கிரம் மெல்லக் கூடி உச்சத்துக்கு வந்தததை அறிவோம்..
கொஞ்சம் நிதானமாக அல்லது மறுநாள் மீண்டும் யோசித்துப் பார்த்தால் சம்பந்தப் பட்டவர்களுக்கே அபத்தமாக தெரியும்..

செல்வத்துக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்...

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான்.
குழந்தைகள் உலகத்திற்குச் செல்ல பெரியவர்களுக்கு அனுமதி கிடையாது.

முனைவர் இரா.குணசீலன் said...

செல்வத்துக்குப் பிறந்த நாள் வாழத்துக்கள்.

ISR Selvakumar said...

குழந்தைகளுக்கான உலகத்தை சுருக்காமல் மேலும் நீட்டிப்பதே பெற்றோர்களின் கடமை! அதுவே குழந்தை வளர்ப்பின் முதல் படி!

ஒரு உளவியலாளர் போல, அழகாக கட்டுரையை எழுதியிருக்கின்ற தங்கை சித்ராவுக்கு பாராட்டுகள்!

dheva said...

சித்ரா...@ அப்பட்டமான ஆழமான உண்மை சித்ரா....வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் அந்த அந்த தருணங்களில் சரியாக போதித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஒன்று...

மனிதர்கள் படிக்க மறக்கிறார்கள்....

இரண்டு....

படித்தும் மறக்கிறார்கள்....


ஒரு குழந்தை தன்னுடைய முதலடியை எடுத்து வைத்து நகரும் போது விழுந்து விடுவோம் என்று தெரியும் போது ஏதோ ஒன்றை பிடிக்கத் தேடுகிறது அல்லது... உட்கார்ந்து விடுகிறது. காப்பாற்றிக் கொள்ளுதல், நல்லது கெட்டதை உணர்தல்...எல்லா உயிரின் ஜீன்களிலும் பொதிந்துள்ளது...

இன்னும் சொல்லப்போனால் உங்கள் மகள் பார்ப்பது போலவே வாழ்க்கை முழுதும் ஒரு பார்வை கிடைக்கப் பெறுமானால்...அது தான் சொர்க்கம்.


சிரிச்சுகிட்டே....போகிற போக்கில் மனிதர்கள் மனதிற்குள் பற்ற வைக்கிற திறமை யாருக்கு வரும்...தோழி சித்ராவை தவிர....!

எதார்த்தமாய் நிறைய உண்மைகள் இருக்கிறது....இந்தப் பதிவில்....!


(விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்கடா...... சித்ரா.... ! விடுமுறைக்கு பிறகு கொடுத்துள்ள ஒரு சூப்பர் ஷாட்.....ஹா...ஹா..ஹா.... நீங்க.. அசத்துங்க..!)

நாஸியா said...

ஐ... அந்த மங்கி மேட்டர் சூப்பரு!! :))

இப்பல்லாம் பிள்ளைங்க அதுகளோட இயல்பை மீறி பெரிய மனுஷத்தனமா பேசுறத பெரியவங்களும் என்கரேஜ் பண்றாங்க. வயசுக்கு மீறி என்னமாச்சும் பேசினா அதை கண்டிக்காம, பெருமை பட்டுக்குறாங்க.. :( குழுந்தைகள், குழந்தை மாதிரி இருந்தா தான் அழகு!

நாஸியா said...

Happy birthday Selvam!

Karthick Chidambaram said...

செல்வத்துக்கு ... பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாடோடி said...

செல்வ‌த்துக்கு வாழ்த்துக்க‌ள்... குழ‌ந்தைக‌ளை குழ‌ந்தைக‌ளாக‌ இருக்க‌ விடுவ‌தே ந‌ல‌ம்..

mightymaverick said...

அறிவியல் ஆய்வுகள், ஏழு மாத கருவாக இருக்கும் போதே குழந்தைகளுக்கு கவனிக்கும் சக்தி வந்து விடுவதாக சொல்லுகிறது... அப்படிப்பார்த்தால், அந்த சமயத்தில் இருந்தே, பெற்றோரும் சுற்றத்தாரும் எது சரி எது தவறு என்று சொல்லுகிறார்களோ அதுவே அந்த ஜீவனுக்குள் உரமாகிப்போகிறது. அதற்குப்பின் விதைக்கும் எந்த விசயத்திலும் இந்த உரத்தின் பாதிப்புகள் இருக்கும்... விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணு முளைக்காது... தங்கள் செல்ல மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கண்ணகி said...

குழந்தைகள் குழந்தைகள்தான்...அந்தப்பருவத்தை அவர்கள் கொண்டாடட்டுமே....அழகு...

மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தமிழ் உதயம் said...

குழந்தைகள் உலகம் தனி. அங்கே இருக்கும் வரை அங்கே இருக்கட்டும். நாம் நம் பக்கம் இழுத்து, அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.

sathishsangkavi.blogspot.com said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த வாரம், என் மகன் செல்வம், தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறான். :-) //

பையனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

SUFFIX said...

உங்கள் அன்பு மகன் செல்வத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

vasu balaji said...

குழந்தைக்கு வாழ்த்துகள்:)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இரண்டாவது பிறந்த நாள் கொண்டாடும் செல்வம், செல்வம் பல பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

SUFFIX said...

சிறு குழந்தைகளுக்கு கேட்பதைவிட பார்ப்பது சட்டென மனதில் பதிந்து விடுகிறதாம்.

அன்புடன் அருணா said...

Belated Birthday wishes to your son Chitra!

தாரணி பிரியா said...

செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

ராமலக்ஷ்மி said...

செல்வத்துக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

அண்ணாமலை..!! said...

innocence போகும்போது சிறுவன் இளைஞனாகி விடுகிறான்!

அன்பு செல்வத்துக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஹுஸைனம்மா said...

இந்த மாதிரி இயல்பான குழந்தைத்தனம் ரசிக்க வைக்கும். ஆனா இன்னிக்கு திறமையை வளர்க்குறோம்கிற பேர்ல குழந்தைகளோட இயல்பைச் சீக்கிரமே தொலைக்க வச்சிடறோமோ!!

செலவத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!

க.பாலாசி said...

சரிதான்... மழலைகளுக்கு வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...

செல்வத்துக்கு,பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

@Chitra....Good one..
Children attain this stage at various ages, based on how much exposure they have, and how much decisions they are allowed to take.. and other factors..

And Happy Birthday to Selvam.

Eppadikku

GH

ஸ்ரீராம். said...

பையனுக்கு வாழ்த்துக்கள்....நாம் நம் குழந்தைத் தனத்தை என்றைக்குத் தொலைத்தோம் என்று நினைவு படுத்திக் கொள்ள முடியுமோ?

பெசொவி said...

குழந்தைகளை புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டம், இருந்தாலும் சமயத்தில் அவர்கள் செய்யும்/சொல்லும் விஷயம் நம்மை பரவசப் படுத்தும்.
ஒரு முறை என் அக்கா பெண்ணுக்கு (அப்போது LKG படித்துக் கொண்டிருந்தாள்) எண்களை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு fifty வரை எழுதத் தெரியுமாதலால், இங்க பாரு அறுபதுக்கு six பக்கத்தில ty சேரு. அப்புறம் seven பக்கத்தில ty seru. என்று சொல்லிக் கொடுத்தேன். புரிந்து கொண்ட அவள் எழுதினாள் : 60 - sixty
70 - seventy
80 - eightty
90 - ninety
100 - tenty

movithan said...

குழந்தையின் உலகத்தை மங்கி ஜோக் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

ஸாதிகா said...

ரசித்தேன் இடுகையை.உங்கள் செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

////"தம்பி, இந்த மங்கி என்ன செய்யுது?"
"(flying) kiss தா"
"இந்த மங்கி?"
"peek-a-boo" (கண்ணா மூச்சி விளையாட்டு)
"இந்த மங்கி?"
"எட் போன் பாட்டு" (head phones ல பாட்டு)//

Awwwwww... cho chuweet...

Happy Birthday to the little one. May all his dreams come true. =))

Asiya Omar said...

செல்வத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சூப்பரான விளக்கம் தந்த செல்வத்திற்கு என் அன்பான பாராட்டுக்கள்.

Anitha Manohar said...

செல்வத்திற்கு மலர்ந்தநாள் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

நல்லது, கெட்டது தெரிவதற்காக innocence இழப்பதில்லை.

ஆளும் வளரணும்..அறிவும் வளரணும்..அதுதாண்டா வளர்ச்சி...

It's all about reaching maturity.

முதிர்ச்சி அடைந்த பிறகும் innocent ah இருக்கக்கூடாது இல்லையா.:)

வாழ்க்கையில் ஒன்றைத் தொலைத்துத்தான் இன்னொன்றை அடைகிறோம்.

குழந்தைகளிடம் இருக்கும் innocence ஐ களங்கம் கற்பிக்காமல், ரசிக்கத் தெரிந்தவர்கள் பேறுபெற்றவர்கள்!!!

பிரேமா மகள் said...

உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

ஹேமா said...

சின்னக்குட்டிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

சந்தர்ப்பத்துக்கேற்ற இடங்களில் சின்னச் சின்ன விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதும் நல்லது சித்ரா.

சத்ரியன் said...

சித்ரா அக்கா,

சிங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வத்துக்கு

GEETHA ACHAL said...

உண்மை தான்...குழந்தைகளாகவே தங்களுடைய பொறுப்பு தெரியும் வரை குழந்தகளாக இருக்கட்டும்...எதற்கு அவர்களை இதனை செய்ய்...அதனை செய்யு என்று சொல்லுறே...அவ என்ன இன்றைக்கே IAS ஏக்ஸாமா எழுத போறா...போக போக அவளே எல்லாம் புரிந்து செய்துவிடுவா என்று என் கணவர் அடிக்கடி சொல்லுவாரு...ஆனால் குழந்தைகளை கட்டுபடுத்தாமல் வளரவிடுவதால் 90% நல்லது என்றாலும் 10% பிரச்சனை இருக்க தான் செய்கின்றது...இந்த 10% நல்லது கெட்டது சொல்லி கொடுப்பது மிகவும் அவசியம் அல்லது...அப்ப அப்ப இரண்டு தட்டி உட்காரவைத்து சரி செய்துவிடலாம்...

Athiban said...

குழந்தைகளின் குறும்புத்தணமே நம் வாழ்க்கையில் சுவாரசியத்தை கொடுக்கிறது.

செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்க செல்வம் க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நீங்க சொன்னது சரிதான் நாம சொல்லாமலே ஒரு நாள் அவங்களக்கு நல்லது கெட்டது தெரிய தான் போறது .

"உழவன்" "Uzhavan" said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Prasanna said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

நட்புடன் ஜமால் said...

அன்புடன் வாழ்த்துகள்!

-------------------

சிலது தெரிந்துவிட்டால் கஷ்டம்தான் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ...

சுசி said...

தொலைக்க வைக்கப்படுகிறார்கள்.. :((((

செல்வத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))))

ஜெயந்தி said...

குழந்தைகளுக்கு பெற்றோரே ரோல் மாடல்கள். நாம் எப்படி வாழ்க்கையில் நடந்துகொள்கிறோமா அதுதான் அவர்களுக்கு படிப்பினை. நாம் நல்லவர்களாக இருந்தால் குழந்தையும் நன்றாக வளர்ந்து நிற்கும்.

மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அ.ஜீவதர்ஷன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

goma said...

குழந்தைகளிடம் நாம் கற்ருக் கொள்ள வேண்டிய விஷய்ம் எக்கச்சக்கம்

பத்மா said...

அருமையான இடுகை ..பையனுக்கு வாழ்த்துக்கள்

அன்புத்தோழன் said...

Adade... eppo vandheenga.... kolandha chooo chweeet.... ungal chella maganukku.... ennoda ullam kanindha pirandha naal vazhthukkal....

Jayanthy Kumaran said...

Hy Chitra,
Wonderful post...My advance loving wishes to your cute kid.

Menaga Sathia said...

செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Prathap Kumar S. said...

செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செல்வம். வாழ்த்துக்கள் செல்வம்!

Unknown said...

செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

குட்டிப்பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இயல்பான குழந்தைத்தனம் அழகாய் இருக்கிறது.

prince said...

நானும் குழந்தையாக மாறிடவே ஆசைப்படுகிறேன். என்ன இந்த உருவம் தான் கொஞ்சம் காட்டிக்கொடுத்துவிடுகிறது.(ஒரு சின்ன விசயத்திற்குள் எவ்வளவு ரகசியங்கள் புதைந்துகிடக்கின்றன).
Happy Birthday to the coolest kid around. Happy Birthday "CHELLAM"

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நம் பார்வைக்கு தவறாய் படுவது, குழந்தைகள் பார்வையில் சரியாய் இருப்பது போல் இருக்கும்..

ரொம்ப சின்ன வயசிலேயே ரொம்ப தத்துவம்ஸ் திணிக்காம குழந்தைய குழந்தையாய் இருக்க விடனும்..

மங்கி விளக்கம் அருமை.. :D :D

செல்வத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

எட்வின் said...

தலையங்கத்த பாத்தா எங்கள பாத்து கேக்கிற மாதிரி இருக்குதே...(திட்டுற மாதிரி கூட இருக்குது ம்ம்ம்ம்) காமெடி கீமடி பண்ணலயே.

செல்வத்திற்கு வாழ்த்துக்கள்.

குழந்தை குழந்தை தனமாவே இருக்கட்டும். அது தான் அதற்கு அழகும் கூட. நீங்கள் சொல்வது போன்று நல்லது கெட்டது கண்டிப்பா ஒருநாள் தெரியவரும்.

தாராபுரத்தான் said...

நலமா வளர்க..என வாழ்த்திகிறேன் அம்மா.

வருண் said...

****அவளிடமும் அதை பற்றி சிறிது விளக்கினார். நன்றி சொல்லி பெற்று கொண்ட அவள், பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த தன் தம்பியிடம் காட்டினாள்.

"தம்பி, இந்த மங்கி என்ன செய்யுது?"
"(flying) kiss தா"
"இந்த மங்கி?"
"peek-a-boo" (கண்ணா மூச்சி விளையாட்டு)
"இந்த மங்கி?"
"எட் போன் பாட்டு" (head phones ல பாட்டு)***

ஒரிஜினாலிட்டி எனபதே நம்மகலாச்சாரத்தில் கிடையாதுங்க.
இயற்கையாக இடது கை பழக்கம் உள்ளவர்களைக்கூட நம்ம அடிச்சு, டார்ச்சர் செய்து வலதுகைபழக்கம் உள்ளவர்களாக்கிவிடுவது ஒரு உதாரணம்.

மத்தவங்க சொல்லிக்கொடுப்பதை கேட்டு அதை அப்படியே சொல்வது செய்வதுதான் நம்ம கலாச்சாரம்.

உங்க பையனுடைய இண்டெர்ப்ரெடேஷன் தான் ஒரிஜினல்.
He is interpreting beautifully based on what he knows. He is not influenced by anybody.

-------------

உங்க பொண்ணுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்ங்க! :)

Chitra said...

Hello, everyone! Thank you for wishing my son. He will be 2 this week.
HAPPY BIRTHDAY, SELVAM!

Anonymous said...

சோ ஸ்வீட். குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

உங்களின் செல்ல மகனுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சித்ரா!

மழைத்துளி போல பரிசுத்தமானது குழந்தை மனது!
அது மண்ணில் வந்து விழும்வரை தொடரும் அந்த பரிசுத்தம்!
இருக்கவே இருக்கிறது மண்ணில் வந்து கலந்ததும் அதன் நீண்ட நெடும் பயணம்!
அதுவரை அந்த பரிசுத்தத்தை அனுபவியுங்கள்!!

நசரேயன் said...

செல்லத்துக்குசெல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வருண் said...

***Chitra said...
Hello, everyone! Thank you for wishing my son. He will be 2 this week.
HAPPY BIRTHDAY, SELVAM! ***

So, it is your son's birthday which coming soon? :)

Happy Birthday Selvam! :)

Chitra said...

Yes, Varun.... Thank you for your wishes for him.

He commented this during his sister's birthday but I thought of sharing this around his birthday time. :-)

I feel so blessed. Praise the Lord!

malarvizhi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

எப்போது பிறருக்கு அறிவுரை கூற ஆரம்பிக்கிறோமோ. அதிலிருந்து நமது தவறுகளும் ஆரம்பமாகிற‌து.

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா

மழலைகள் தெரிந்து கொள்ளும் நேரத்தில் தெரிந்து கொள்ளட்டும் -பொறுத்திருப்போம்.

செல்வத்துக்கு - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சித்ரா

நட்புடன் சீனா

Radhakrishnan said...

//ஒரு நாள், நல்லது கெட்டது அவனுக்கும் தெரியும். அன்று அவனும், "தீயதை பேசாதே; தீயதை பார்க்காதே; தீயதை கேட்காதே" என்று சொல்லி கொண்டு இருப்பான். //

வெகு அருமை.

Matangi Mawley said...

monkey-ky unga son koduththa explanation excellent!

happy b'day avanukku...

chinna pullainga parents-a think panna vekkaraanga-ngarathukku this is the best example!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், சித்ரா, தங்கள் மகனுக்கு!
குழந்தைகள் மொட்டு விரிந்த பூக்கள்.
குழந்தமை என்கிற நறுமணம் வீசட்டும், அவர்களிடம்!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.