சில சமயம் யாராவது சில கேள்விகள் கேட்கும்போதோ பதில் சொல்லும்போதோ, "எப்படி, இவங்களால மட்டும், எப்படி?" என்று உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா?
எனக்கு 9th and 10th classes க்கு science teacher ஆக Mrs.மேரி கமலம் என்பவர் இருந்தார். அடிக்கடி மாணவிகளிடம் கேள்வி கேட்கும் வழக்கம் உள்ளவர். அவர் கேள்வி கேட்கும்போதே நான் நெருப்பு கோழி மாதிரி தலையை எதிலாவது புதைத்து கொள்ள வகை தேடுவேன். அவர் கண்களை பாக்க நேர்ந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல அந்த மாணவி தான் எழும்ப வேண்டும். எழும்பியவள் சரியான பதிலை சொல்ல தவறினால், கண்டித்துவிட்டு உட்கார சொல்லும்போது எப்பொழுதும், "sit down, don't show your stupidity in the class" ("உட்கார். உன் முட்டாள்தனத்தை வகுப்பில் காட்டதே") என்பார். அந்த டீச்சரின் punch dialogue ஆக நாங்கள் அதை கருதி நாங்களும் சில சமயம் தோழிகள் நடுவில் விளையாட்டாக சொல்லி சிரிப்போம்.
ஆனால் இன்றும் நான் சொல்ல வேண்டியது வரும் என்று நினைக்கவில்லை. சிலரின் கேள்விகள் அல்லது பதில்களை கேட்கும்போது என்னை அறியாமல் மனம், Mrs.மேரி கமலம் டீச்சரின் வசனத்தை copyright பற்றி கவலை படாது சொல்லி பார்த்து கொள்கிறது. "Sit down, don't show your stupidity." (உட்கார். உன் முட்டாள்தனத்தை காட்டாதே")
சித்ரா (மதுரையில்): என்ன ரோடு ரொம்ப மோசமா இருக்கு? ஆட்டோ போகும்போது ரொம்ப குலுங்கி கஷ்டமா இருக்கு.
அறிவு ஜீவி: என்ன பண்றதுங்க? மூணு மாசம் முந்திதான் ரோடு போட்டான். கவெர்மெண்டு நல்லது செஞ்சாலும் இந்த மழைக்கு பொறுக்கலை. விடாம பெஞ்சு குண்டும் குழியுமா ஆகி விட்டது.
(hello, அறிவு கொழுந்தே, வெயில் மழை எல்லாம் தாங்கிற மாதிரி போடறதுக்கு பேருதான் ரோடு. இவன் போட்ட ரோடு லச்சணத்தை பத்தி பேசாம........ இதுக்குன்னு மழை பெய்யும் போதெல்லாம் ரோடுக்கு குடையா பிடிக்க முடியும்?)
சாத்தூரில் எங்கள் சொந்தக்கார பெண் ஒருவர் காலில் சூடான எண்ணை கொட்டி விட டாக்டரிடம் போய் treatment எடுத்துகொண்டார். எரிச்சல் வலி போக tablets உம் காயத்தில் போட ஒரு ointment உம் டாக்டர் கொடுத்து இருந்தார். ரெண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு அவரை வேறு விஷயமாக பார்க்க வந்த ஒரு பெண், காலில் இவரது காயத்தை பார்த்து விட்டு -
அறிவு ஜீவி: டாக்டர்ட்ட போனீங்களா?
சொந்தக்கார பெண்: ஆமாம், வலிக்கு மருந்தும் காயத்திற்கு தைலமும் தந்தார்.
அறிவு ஜீவி: ஊசி ஏதும் போட்டுக்கலையா?
சொந்தக்கார பெண்: வேண்டாம்னுட்டார்.
அறிவு ஜீவி: எங்க டாக்டர் கிட்ட போங்க. ஒரு ஊசி போட சொல்லுங்க. ஒரே ஊசிதான். உடனே சரியா போயிடும்.
(hello, அறிவு கொழுந்தே, MBBS MD எல்லாம் முடிச்சிட்டு ஒருத்தர் பல்லாங்குழி விளையாடவா போர்டு மாட்டிக்கிட்டு உக்கார்ந்திருக்கார். ஒரு மாய ஊசி போடுங்கனு இவரே treatment சொல்லி டாக்டர் செய்றதுக்கு அவர் ஏன் medical college போயிருந்து இருக்கணும்? இந்த பெண்ணிடம் ஒரு tuition class போயிருந்தாலே போதுமே.)
Texas இல் ஒரு Indian Students' Association orientation meeting போது: நீங்க உங்க இந்தியன் நண்பர்கள் மட்டும் இருக்கும் போது உங்க மொழியில பேசிக் கொள்ளலாம். ஆனால் department or class இல் மற்ற மாணவர்கள் மத்தியில் உங்க சொந்த மொழியில் உங்கள் இந்தியன் நண்பர்களுடன் பேசாமல் Englishil பேசுவது நல்ல பண்பு.
அறிவு ஜீவி: அவங்க மட்டும் அவங்க தாய் மொழியில் பேசும்போது நான் ஏன் என் தாய் மொழியில் பேசக் கூடாது.
(hello, அறிவு கொழுந்தே, பண்புக்கும் வீம்புக்கும் வித்தியாசம் தெரியாதவனே, உனக்கு ஆங்கிலம் தெரியலை என்றால் வேறு விவகாரம். Social ethics தெரியலைனா?)
சித்ரா: grocery store ல தான்.
அறிவு ஜீவி: இந்தியன் store ஆ அமெரிக்கன் store ஆ?
சித்ரா: well, American store தான். அங்கியே யாரு கிட்டேயாவது கேட்டா எங்கு இருக்குன்னு சொல்லி இருப்பாங்களே.
அறிவு ஜீவி: கேக்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆ இருந்தாங்க. இந்தியன்ஸ் ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
(hello, அறிவு கொழுந்தே, அவன் நாட்டில் வந்து உக்காந்துக்கிட்டு அவனையே foreigner ஆக்கிட்டீங்களே? ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின கதையா ....)
சென்னையில் ஒரு அறிவு ஜீவி: சித்ரா, உன் மகன் என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா? நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)
இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இவங்க இப்படி பேசறதுக்கு காரணம்:
Ignorance or Innocence or stupidity?
அறியாமையா? வெகுளித்தனமா? முட்டாள்தனமா?