Tuesday, September 7, 2010

என்ன சொல்றாங்க என்றே தெரியலப்பா.....

  டொடொயிங்..... டோடிங்...... டொடொயிங்......



வணக்கம்.  செய்திகள் வாசிப்பது,  தம்பட்டம் தாயம்மா:

தலைப்பு செய்திகள்:   லாஜிக்கே இல்லாத லாஜிக் செய்திகளுக்கு இந்தியாவின் பிரதம மந்திரியின் அறிக்கைகள் என்றும் குறைவு வைத்ததில்லை. 

 
 தானிய கிடங்குகளில்,  தானியங்கள் கெட்டுப் போகுமுன்  அதை ஏழைகளுக்கு இலவசமாக  வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்  பரிந்துரைத்து உள்ளது.  வறுமை கோட்டின் கீழே இருக்கும்   37 % மக்களுக்கு உணவை அப்படி வழங்குவது சாத்தியப்படாது என்று பிரதமர் தாழ்மையுடன் தெரிவித்து உள்ளார்.  ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் கிடைக்கும் வண்ணம் செய்து இருக்கிறோம்.  அதுவே போதுமானது.  மேலும், இலவச தானியங்கள் கிடைக்கும் படி செய்து விட்டால்,   மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு, அதிகம் விவசாயம் செய்ய ஒரு உந்துதல் இல்லாமல் போய் விடும்.  பிறகு,  உணவே இல்லாது போய்விடும். அப்படி போன பின்,  இலவசமாக வழங்க உணவு இருக்காது என்று கூறி உள்ளார்.  

http://economictimes.indiatimes.com/news/economy/agriculture/Distributing-free-foodgrain-not-practical-PM/articleshow/6506073.cms

இதுல இருக்கிற லாஜிக் யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்க..... நானும் தெளிஞ்சிக்கிறேன்.  சாரி, தெரிஞ்சுக்கிறேன். உணவு தானியங்கள் கெட்டு போனாலும் பரவாயில்லையா?    ஓ!   ஒருவேளை பிரதமர், இப்பொழுதுதான் ரஜினியின் "சிவாஜி" படம் பார்த்து இருப்பாரோ?   எல்லோருமே - குறிப்பாக ஏழைகள் - இலவச தானியம், இலவச கல்வி, இலவச மருத்துவ வசதி பெற்றுகொண்டால்,  ஒரு incentive இல்லாமல்,  சோம்பேறிகளாய் ஆகிவிட்டு, வேலை செய்யாமல் - விவசாயம் பார்க்காமல் - அப்புறம் நாட்டுல எல்லோருக்கும் சோத்துக்கு வழி ஏது?   விவசாயிகளை பட்டினி போட்டாதான் ஒழுங்கா வேலை செய்வாங்க என்பது போல இருக்குதே...... இந்த சுப்ரீம் கோர்ட் வேற ........ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம..... என்னவோ போங்க..... எல்லாமே அந்த "காசிமேடு" ஆதிக்கே வெளிச்சம்! 


வெட்டி பேச்சு சித்ரா:  தாயம்மா, டேக் இட் ஈஸி...... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி டென்ஷன் ஆகுற?  எல்லாம் பார்க்கிற பார்வையில் இருக்கிறது. உனக்கு லாஜிக் இடிக்குது...... பிரதமருக்கு பிரக்டிகல் மேட்டர் இடிக்குது....உனக்கு நான் புரிய வைக்கிறேன், பாரு.
ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா? கண்ணாடியில தன்னை பார்க்கும் போது, ஒரு பொண்ணுக்கு  தன்கிட்ட இருக்கிற குறைகள்தான்  பெருசா தெரியுமாம். ஒரு ஆணுக்கு அப்படி இல்லையாம்.  எல்லாமே லாஜிக் தான்....பிரக்டிகல் தான் ...... அவங்க அவங்களுக்கு.... இருந்தும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தலியா? அப்படித்தான், விவசாயிகளும் பிரதமரும் சேர்ந்து இந்தியாவில எப்படியும் காலத்தை  ஓட்டிருவாங்க .... என்ன நான் சொல்றது?  நீங்களே பாருங்க.......!!!   


 தம்பட்டம் தாயம்மா:   ஆஹா.... நான் என்ன சொல்ல வந்தேன்..... நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கிற? ஏன் இப்படி?
வெட்டி  பேச்சு சித்ரா:  அப்படித்தான்.   நான் இந்தியன் ஆச்சே! 





102 comments:

என்னது நானு யாரா? said...

இத இத இத தான் நான் எதிர்பார்த்தது! ஏமாத்தாம உங்க டச்சோடு சேர்த்து கலக்கிட்டீங்க! சித்ரா அக்கா சூப்பரு!!!
----------------------------------

என்னது நானு யாருன்னு கேட்கறீங்களா?

நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.
என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com
நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

நோயில்லா நாகரீகம் காண்போம்!!!
-----------------------------------

S Maharajan said...

//ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா? கண்ணாடியில தன்னை பார்க்கும் போது, ஒரு பொண்ணுக்கு தன்கிட்ட இருக்கிற குறைகள்தான் பெருசா தெரியுமாம். ஒரு ஆணுக்கு அப்படி இல்லையாம். எல்லாமே லாஜிக் தான்....பிரக்டிகல் தான் ...... அவங்க அவங்களுக்கு.... இருந்தும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தலியா? அப்படித்தான், விவசாயிகளும் பிரதமரும் சேர்ந்து இந்தியாவில எப்படியும் காலத்தை ஓட்டிருவாங்க .... என்ன நான் சொல்றது? நீங்களே பாருங்க.......!!!//

அக்கா இது சூப்பர்

என்னது நானு யாரா? said...

தமிழ்மணம் ஓட்டு பட்டையை கீழே கொண்டு வந்து வைங்க அக்கா! என்னோட வலைபக்கத்திலும் ஓட்டு போட முடியாத மாதிரி சிரமமா இருந்தது.

வாணம்பாடி ஐயா சொன்ன பின்னாடி, ஓட்டு பட்டையை கீழே கொண்டு வந்து வைச்சேன். இப்போ ஓட்டுபட்டை சரியா வேலை செய்யுது!!!

Chitra said...

அதான் இந்த குளறுபடியா? நன்றிங்க.... சீக்கிரம் மாத்துறேன்.... !

Anonymous said...

வெட்டி பேச்சு சித்ரா: தாயம்மா, டேக் இட் ஈஸி...... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி டென்ஷன் ஆகுற? எல்லாம் பார்க்கிற பார்வையில் இருக்கிறது. உனக்கு லாஜிக் இடிக்குது...... பிரதமருக்கு பிரக்டிகல் மேட்டர் இடிக்குது...

இப்படித்தான் இருக்குமோன்னு நானும் நினைக்கிறேன் சித்ரா...

Anonymous said...

ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா? கண்ணாடியில தன்னை பார்க்கும் போது, ஒரு பொண்ணுக்கு தன்கிட்ட இருக்கிற குறைகள்தான் பெருசா தெரியுமாம். ஒரு ஆணுக்கு அப்படி இல்லையாம். எல்லாமே லாஜிக் தான்....பிரக்டிகல் தான் ...... அவங்க அவங்களுக்கு.... இருந்தும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தலியா? அப்படித்தான், விவசாயிகளும் பிரதமரும் சேர்ந்து இந்தியாவில எப்படியும் காலத்தை ஓட்டிருவாங்க .... என்ன நான் சொல்றது? நீங்களே பாருங்க.......!!!

நச்சுன்னு சொன்னீங்க சித்ரா கண்டிப்பா வெட்டிப் பேச்சில்லை இது...

Anonymous said...

/ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா? கண்ணாடியில தன்னை பார்க்கும் போது, ஒரு பொண்ணுக்கு தன்கிட்ட இருக்கிற குறைகள்தான் பெருசா தெரியுமாம். ஒரு ஆணுக்கு அப்படி இல்லையாம். எல்லாமே லாஜிக் தான்....பிரக்டிகல் தான் ...... அவங்க அவங்களுக்கு.... இருந்தும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தலியா? அப்படித்தான், விவசாயிகளும் பிரதமரும் சேர்ந்து இந்தியாவில எப்படியும் காலத்தை ஓட்டிருவாங்க .... என்ன நான் சொல்றது? நீங்களே பாருங்க.......!!!//

நச்சுன்னு சொன்னீங்க சித்ரா கண்டிப்பா இது வெட்டி பேச்சு இல்லை....

a said...

(வெட்டி பேச்சு???) சித்ரா : Super.....

Unknown said...

Hi akka,

It is sometimes difficult to interpret The Pm's speech..it is very true...

Sameena@

www.lovelypriyanka.blogspot.com
www.myeasytocookrecipes.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கிட்டீங்க

Anonymous said...

//நான் இந்தியன் ஆச்சே!//
ஹி ஹி...
சூப்பர் சித்ரா!

Menaga Sathia said...

kalakkal chitra...

சி.பி.செந்தில்குமார் said...

தாயம்மா வை அடிக்கடி வரச்சொல்லுங்க..நல்லநல்ல விசயமெல்லாம் சொல்றாங்க

நாடோடி said...

மேலே சொன்ன‌ த‌லைப்பு தான் என்னுடைய‌ பின்னூட்ட‌மும்.. :)

சி.பி.செந்தில்குமார் said...

உணவு தானிய மேட்டர் பற்றி இதையும் பாருங்கள்..என்ன ஒரு அநியாயம்?
http://sathish777.blogspot.com/2010/09/blog-post_06.html

அருண் பிரசாத் said...

Why Tension?

cool down!
cool down!!
cool down!!!

settaikkaran said...

நக்கல், கலக்கல்..! :-))

சசிகுமார் said...

என்ன நம்ம தலைவர் உடனே கடிதம் எழுத ஆரம்பிக்கவில்லையா,
ஐயா சிங் ,
தானியங்களை அப்படியே வைத்து கொள்ளுங்க, இன்னும் தேர்தல் வர காலமிருக்கு அப்பொழுது ஒரு லோடு அனுப்பி வையுங்க. தேர்தலுக்கு பிரியாணி போட உதவும். கெட்டு போயிருந்தாலும் பரவாயில்லை அனுப்புங்க இவனுங்க எத போட்டாலும் சாப்பிடுவானுங்க.
இப்படிக்கு
Artist

Unknown said...

///ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா?///

நூத்துக்கு நூறு உண்மைங்க சித்ரா.. கருத்துக்களை அப்படியே அசால்டா சொல்லியிருக்கிங்க..

கடைசி லைனும் சூப்பர்..

தமிழ்மணம் லிங்க் வேலை செய்யமாட்டேங்குது.. செக் பண்ணிப் பார்க்கறீங்களா..

ராம்ஜி_யாஹூ said...

nice

தமிழ் உதயம் said...

போட்டோல ரஜினி இளமையா இருக்கார்.

எதையும் ஏட்டிக்கு போட்டியா பேசுறதுல இந்திய அரசியல்வாதிகளுக்கு நிகர் யார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா////
ஆகா அருமைங்க.. விசயம்.. எவ்ளோ விசயம் அலசி ஆராய்ஞ்சி சொல்றீங்க.. இந்த வெட்டிங்கறதை மாத்தனும் முதல்ல..

Ahamed irshad said...

என்னாச்சுங்க சித்.. சீரியஸ் மேட்டரெல்லாம் வெ.பேச்சில் வருது..


டொய்ய்ய்ங்ங்ங்ங்ங்.. வணக்கம்.. செய்தி முடிஞ்சா சொல்லனும்..

கண்ணா.. said...

மன்மோகன் சிங்கின் அந்த பேச்சு.. அநாகரீகமானது.... இவரெல்லாம் பிரதமரா இருக்க தகுதியே இல்லாத ஆளு.... படிப்பு மட்டும் பிரதமருக்கான தகுதியை நிர்ணயிப்பதில்லை.... மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர்தான் வேண்டும்

Anonymous said...

"தம்பட்டம் தாயம்மா: ஆஹா.... நான் என்ன சொல்ல வந்தேன்..... நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கிற? ஏன் இப்படி?
வெட்டி பேச்சு சித்ரா: அப்படித்தான். நான் இந்தியன் ஆச்சே! "

ஒ சித்ரா இந்து நல்ல தமாஷு தான் ..

'தலைப்பு செய்திகள்: லாஜிக்கே இல்லாத லாஜிக் செய்திகளுக்கு இந்தியாவின் பிரதம மந்திரியின் அறிக்கைகள் என்றும் குறைவு வைத்ததில்லை. "

பாவம் இவங்க சோனியா காந்தியின் கைபொம்மை தானே அப்போ இப்பிடி தான் எதா சொல்லி மாட்டுவா..

the difference between women &men ....செம்ம கலக்கல்..

பவள சங்கரி said...

சித்ரா எங்கேயோ போயிட்டீங்க...... இவ்வளவு சீரீயசான செய்தியை உங்களால மட்டும் தான் இவ்வளவு சாதாரணமா சொல்ல முடியும்.....சூப்பருங்க..........வாழ்த்துககள்......தாயம்மாவை விடாதீங்க... உங்ககிட்ட இருந்து நிறைய விடயங்களை வெளியே கொண்டு வரா......தினம் ஒரு தகவல் பிடிங்க.......

லெமூரியன்... said...

ஹி ஹி ஹி ஹி...!
பிரதமர வேணா மாத்தி அறிக்கை விட வெச்சிரலாமா???

சைவகொத்துப்பரோட்டா said...

தேர்தல் நேரங்களில் மட்டும், "இலவசங்கள்" கொடுக்கலாம் போல.

Anonymous said...

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

pichaikaaran said...

சூப்பர்... அரசியல், சினிமா , ஆண்-பெண் சைக்காலஜி எல்லாத்துக்கும் மேல உங்க நகைச்சுவை. மிகவும் ரசித்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்படியே பிரதமர கலைஞர் கிட்ட சொல்ல சொல்லுங்க . இலவசமா கொடுக்க கூடாதுன்னு..

செல்வா said...

அந்த ஆணும் பெண்ணும் விஷயம் நல்ல இருக்கு ..!

வினோ said...

சகோ நானும் ஆஜர்..
என்னடா சீரியஸ் விசயம்ன்னு நினைச்சேன்..
சூப்பர் பகிர்வு..

ஹேமா said...

தம்பட்டம் தாயம்மா எப்பவும்போல அலசல் நகைச்சுவையோடு அற்புதம்.

pinkyrose said...

கண்ணாடியில தன்னை பார்க்கும் போது, ஒரு பொண்ணுக்கு தன்கிட்ட இருக்கிற குறைகள்தான் பெருசா தெரியுமாம். ஒரு ஆணுக்கு அப்படி இல்லையாம். எல்லாமே லாஜிக் தான்...//

ச்சே செம தத்துவம்ப்பா...

boys இதப்படிங்க முதல்ல...

Vidhya Chandrasekaran said...

கலக்கல் வழக்கம்போல்.

நட்புடன் ஜமால் said...

இதென்ன பிரமாதம் சித்ரா

வீட்டுக்கு போனா அவருக்கு சாப்பாடு இருக்கும், இல்லாத நிலை அவருக்கு இல்லாமலே இருந்து இருக்கலாம் அல்லது மறந்திருக்கலாம்

Mahi_Granny said...

சித்ராவின் அரிசி யல் சூப்பர்

Mahi_Granny said...

சித்ராவின் அரிசி யல் சூப்பர்

Anonymous said...

கலக்கிட்டீங்க சித்ரா..

தேர்தல் வேற வருது.. அரசியல்ல குதிக்கப் போறீங்களா????

Anonymous said...

//வெட்டி பேச்சு சித்ரா: அப்படித்தான். நான் இந்தியன் ஆச்சே! //

பஞ்ச் லைன் சூப்பர்

Dr.Rudhran said...

well written chitra.. i am putting a link in facebook.

"உழவன்" "Uzhavan" said...

//விவசாயிகளும் பிரதமரும் சேர்ந்து இந்தியாவில எப்படியும் காலத்தை ஓட்டிருவாங்க //
 
கண்டிப்பா.. ஓட்டித்தான தீரனும் :-)

Unknown said...

பாருங்க சித்ரா, மன்மோகனைப் பத்தி நீங்க எழுதினதும் சதி செஞ்சி தமிழ்மணத்துல ஓட்டுப் போட முடியாம செஞ்சுட்டாங்க..

dheva said...

லாஜிக் இல்லாத மாதிரி தெரிஞ்சாலும் ஏதோ லாஜிக் இருக்குற மாதிரிதான் எனக்கு தெரியுது.....

இலவசங்கள் சோம்பேறிகளை உருவாக்குகிறது. உருவாக்கியிருக்கிறது. இந்த லாஜிக் ஒத்துப் போகிறது...

ஆனால் சாப்பாடே இல்லாமல் உயிர் போகும் நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பதை மறுப்பதில் லாஜிக் இல்லை.....

இதுதான் உண்மை..... ! பெரும்பாலும் இலவசங்களை முந்திப் பெறுபவர்க்ள நல்ல நிலையில் இருப்பவர்கள். இதுக்கு ஒரு ரிசிட்ரிக்ஷன் வச்சு...முரைய ஸ்ட்ரீம் லைன் பண்ணி கொடுக்கலாம் என்பது எனது கருத்து....!

Madhavan Srinivasagopalan said...

சரியான கேள்வி, பிரதமருக்கு.. பதில்தான் வராது..
கார்டூன் சூப்பரு..

ராஜவம்சம் said...

என்ன செய்ரது 60 வயதுக்கு அப்ரமா கொழ்தையாயிடுவாங்க அப்டீம்பாங்க
இவறு லூசாயிட் இருக்கார்


(விவகாரமான விசயத்தையெல்லாம் தொடுரமாதிரி தெரியுது அமெரிக்காவுக்கு ஆட்டோ வராதுங்ர தைரியமா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மக்களை விட நம்ம பிரதமரே ஏழைங்க. பாவம் அவர்...

சுசி said...

//ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா? //

:))))))))))))))

படம் சூப்பர்..

bogan said...

அதாவது பொண்ணுங்க தாங்கள் அப்சரஸ் மாதிரி அழகா இருந்தாலும் அப்படி இல்லைன்னு பீல் பண்ணறாங்க..ஆண்கள் கேனை மாதிரி இருந்தாலும் தங்கள மன்மதன் மாதிரி இருக்கறதா நினச்சுக்கறாங்க அப்படித்தானே.. யாராவது நோட் பண்ணுங்கப்பா..

Alarmel Mangai said...

தம்பட்டம் தாயம்மாவை பிரதமர் உடன் பேச்சு வார்த்தைக்கு அனுப்பிறலாமா?

GEETHA ACHAL said...

உண்மை தான்..ஒரு விசயத்திற்கு ஓவ்வொருத்தரின் பார்வையும் வித்தியசமப்படும்..கடைசி படம் படுசூப்பர்ப்....

Gayathri said...

enakkum andha arikkaila logic irukurapla therila..ennaki naamaa munneri vallarasu aagi....avoma??????

மங்குனி அமைச்சர் said...

இதே டவுட்டு தாங்க எனக்கும். இன்னொரு சென்ட்ரல் மினிஸ்டர் சொல்றார் , "ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்ட்கள் தான் வீணா போச்சு , எல்லாரும் ரொம்ப பெரிசா திரிச்சு சொல்றாங்கன்னு சொல்றாரு" , ஒன்னியும் புரியல

Vijiskitchencreations said...

super சொல்லிட்டிங்க.

ராமலக்ஷ்மி said...

விவசாயிகளுக்கு இலவச இண்டர்நெட். விரைவில் வந்தாலும் வரும். நல்ல கார்ட்டூன்.

VELU.G said...

//என்ன சொல்றாங்க என்றே தெரியலப்பா.....
//

எனக்கும் இந்த சந்தேகம் இருக்குதுங்க

ஒரு வேளை நாமதான் சரியா புரிஞ்சுக்கிலையோன்னு சொல்லி விட்டர்றதுங்து

இப்பதான் தெரியுது நிறையப்பேர் இப்படித்தான் இருப்பாங்க போல

வருண் said...

***The government had taken adequate steps in this direction to make food available to the poor at affordable prices, the prime minister said. He, however, qualified this by stressing that making food available free would destroy incentives to farmers to produce more. If there was no no food available, there would be nothing to distribute, he said. ***

He says, he will give that in an AFFORDABLE price (cheap) but not FREE! Why cant our poor pay a little instead of paying nothing?

You know how it will work when you try distribute things FREE?

There will be all kinds of riots/corruption and everything will start. I dont think there is any nice way to get that done UNLESS Mr. Madhavaraj and Dr. Rudhran take that RESPONSIBILITY and get that done!

I believe our "honorable bloggers" dont pay attention to the PRACTICALITY of this issue as they dont look carefully into this problem!

வருண் said...

Chitra: The fact is all men dont think like Dr. Rudhran or Mr Madhavaraj as for this issue is concerned. Those posts were bothering me but I just let it go.

Also, I dont look at the mirror and think I am fit and handsome either! LOL

திருவாரூர் சரவணா said...

எண்ணெய் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொழுத்த லாபம் அடைவது குறையும் என்று தெரிந்தவுடன் அவர்கள் இஷ்டத்துக்கு விலை ஏற்றலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் வீணாகும் தானிய விஷயத்தில் இப்படி....இதுதான் இந்தியா.

அன்பரசன் said...

இருந்தாலும் அந்த கடைசி படம் கொஞ்சம் ஒவராதான் தெரியுதுங்க.

vasu balaji said...

=)). அது சரி

Prathap Kumar S. said...

சித்ரா எப்டி இதெல்லாம்...????

movithan said...

கடைசிப் போடோ சூப்பர்.

சாந்தி மாரியப்பன் said...

//நான் இந்தியன் ஆச்சே!/

கரெக்டுங்க :-)))))

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// தானிய கிடங்குகளில், தானியங்கள் கெட்டுப் போகுமுன் அதை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் பரிந்துரைத்து உள்ளது. /////

மேடம் ,
பரிந்துரை செய்யவில்லை ...உத்தரவு போட்டிருக்கிறது ....,அந்த ஆளுக்கு இதெல்லாம் விட காமன் வெல்த் கேமுக்கு 40 கோடி ருபாய் பலூன் வாங்க கையெழுத்து போட்டிருக்கு .......,:((

மோகன்ஜி said...

அடடா! தாயம்மா... என்னா கருத்து.. என்னா எகத்தாளம்? நம்ம பிரதமரையே கேள்வி கேக்குராங்களே. தாயம்மா ! எலக்ஷன்ல நில்லு தாயி.. கள்ள ஓட்டு போட்டாவது ஜெயிக்க வைக்கிறோம் உன்னை..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மேடம் ,

பசின்னா என்ன தெரியாத கூட்டம் மேடம் அது ....நானெல்லாம் ரெண்டு நாள் சாப்பிடாம இருந்திருக்கேன்...பசி ஒரு மனிதனை என்ன வேணா செய்ய சொல்லும் என்று உணர்ந்த தருணம் அது .....,கெட்டு போன கோதுமை மாவில் கசக்கும் சப்பாத்தியை சாப்பிட்டு படித்தவன் நான் மேடம் ...அந்த செய்தியை படித்ததும் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை

நசரேயன் said...

//நான் இந்தியன் ஆச்சே//

நானும் தான்

ஜெய்லானி said...

சூடு ஓவரா இருக்கே நியூஸ்ல .. இது அவரா சொன்ன செய்திதானா இல்லை இத்தாலி செய்த சதியா ..?????

:-))

எம் அப்துல் காதர் said...

தாயம்மா சொன்னது நல்லா தானிருக்கு சித்ரா மேடம்!

தாய்ன்னாலும் அம்மான்னாலும் ஒன்னு தானே!! இந்த தாய் + அம்மா யாரு = நீங்களா?

அருமையான பேரு!! கலக்கலான பதிவு. இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை.

எம் அப்துல் காதர் said...

இன்னைக்கி என்ன சித்ரா மேடம் தாயம்மா, வாணி தாய் ரெஸ்டாரண்ட், அன்புடன் ஆனந்தி ஸ்கூல் போகும் குழந்தைக்கி தாய் பாசம், எல்லா தோழிகளிடமும் ஒரு நேர்த்தியான தாய்ப் பாசம் பொங்கி பிராவகமாய் வாழ்க! வளர்க!! தோழிகள் என்றால் எப்படி ஒரு ஒற்றுமை அடடா இப்படித் தானிருக்கணும் வெல்டன்!! ஹா.. ஹா..

velji said...

அவசியமான, நல்ல பதிவு!

சிரமத்த பார்த்தும் சிரிக்க வேண்டியிருக்கு...இப்படித்தான் காலம் தள்ளனும்.. நம்ம ஊர்ல.

Unknown said...

நகைச்சுவை கலந்த நல்ல பதிவு.

Riyas said...

//ஆஹா.... நான் என்ன சொல்ல வந்தேன்..... நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கிற? ஏன் இப்படி?
வெட்டி பேச்சு சித்ரா: அப்படித்தான்//

ஆமாம் ஆமாம் அப்படித்தான்...

Suni said...

ரொம்ப நல்லா நகைச்சுவையா எழுதுறீங்க. தொடரட்டும் உங்கள் சேவை. "சித்ராவின் சேவை நாட்டுக்குத் தேவை"
by
http://tamiltospokenenglish.blogspot.com/
என்னுடய Blogலும் உங்கள் காலடி படட்டும்

GSV said...

Super !!!

இதுக்கு பேருதான் செரிசுகிட்டே ஆடு வெட்டுறதா !!!

ம.தி.சுதா said...

ஃஃஃ...ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் கிடைக்கும் வண்ணம் செய்து இருக்கிறோம்...ஃஃஃ
அக்கா இந்தியாவில ஏதாவது தேர்தல் வருகுதா...?

Karthick Chidambaram said...

//ஒரு பெண்ணும் ஆணும் ஒரே விஷயத்தை வேற வேற மாதிரி பாக்கலியா?//

Very true.

R.Gopi said...

சித்ரா....

இப்போது தம்பட்டம் தாயம்மாவாக அதிரடி வேடம் ஏற்றுள்ளார்....

எதை பற்றி எழுதினாலும், அதில் தலைவர் ஸ்டைல் இருக்கு....

தலைவரை கனெக்ட் செய்தது நன்று..

இந்த பதிவை படிச்சாலே அதிருதுல்ல.

Vishnu said...

//லாஜிக்கே இல்லாத லாஜிக் செய்திகளுக்கு இந்தியாவின் பிரதம மந்திரியின் அறிக்கைகள் என்றும் குறைவு வைத்ததில்லை.//

ஆச்சி,

இதுதான் கூட்டணி தர்மம்ன்றது. காங்கிரஸ் மத்தியில தாணியத்த இலவசமா கொடுத்தா, இங்க நம்ம கலைஞர் என்ன செய்வார்?
இலவசமா கொடுக்க ஒண்ணுமே இல்லையே. அத்தான்...

'பரிவை' சே.குமார் said...

செம கலக்கல்..

மங்கை said...

When we talk about the way men and women think, we are actually talking, how men and women usually think, how men and women can think, and how we think men and women think... சரிதானே சித்ரா...:))

என்ன நினச்சு சொல்லியிருந்தாலும் இப்போ நம்ம மன்னு (மன்மோகன் சிங்) சொன்னதை நான் ஏதுக்கலைங்க்றதை சொல்லிக்கிறேன்....:)))

பின்னோக்கி said...

பிரதமர் சொல்றது உங்களுக்குப் புரியலை. அந்த அளவுக்கு அறிவிஜீவியான ஒரு பிரதமர் இருக்குற இந்த நாட்டுல வாழும்போது புல்லரிக்குது :). கார்ட்டூன் ரொம்ப நல்லாயிருக்கு. உண்மையும் கூட :)

சிநேகிதன் அக்பர் said...

என்னத்த படிச்சு என்ன செய்ய சோத்துக்கு வழி சொல்ல தெரியலையே இவரு என்ன பொருளாதார மேதை?

தெய்வசுகந்தி said...

super chitra!!!!!!

vanathy said...

விடுங்க! அரசியல்வாதிகளுக்கு குழப்புவதே வேலை. இதே ஸ்டேட்மென்ட்டை மறுநாள் பார்த்தா/படிச்சா அவர்களுக்கே புரியுமா என்பது சந்தேகம்.

எல் கே said...

mmm.. enna panna. palagi pocchhu
kavisolaii.blogspot.com

ஸ்ரீராம். said...

இதைத்தான் கொடுக்கவும் மாட்டேன் கொள்ளவும் மாட்டேன் என்று சொல்வார்களோ...!

Matangi Mawley said...

superubbuuuu!!! :D :D namma prathamar etha paththi thaan arikkai vidarathilla? avar vittukittu thaan iruppaaru.. enna nadakkuthu vittapram apdingarathu thaan athula matter! :D athu ennikkum onnum nadanthathilla! so no prob!! :D

அணில் said...

// டொடொயிங்..... டோடிங்...... டொடொயிங்......
ஓ இது நாயகன் மியூசிக்கா. படிச்சதுக்கப்புறந்தான் விளங்குது.

புல்லாங்குழல் said...

என்னமா ஒரு கருத்து படம் போட்டு கலக்கிட்டீங்க தாயம்மா சாரி சித்ராம்மா!

தாராபுரத்தான் said...

இதை வெளியே வேற சொல்லி தம்பட்டமா?

அமைதி அப்பா said...

தலைப்பை பேசாம மாத்திடுங்க. 'கொஞ்சம் பேச்சு' இதுதான் சரி.
வெட்டி எங்க இருக்குன்னு தேடி தேடி கண்ணு போச்சு.

க ரா said...

Really a Great one... Geniune Question..

வேலன். said...

சூப்பர் சகோதரி...ஆமா...என்ன சொன்னீங்க..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Mythili (மைதிலி ) said...

Arasiyalaa?? Please ennai vittudunga !!! Last la sonnathu miga right.

jai said...

Its true that most of the food grains are wasted, I heard it from one of my friend who is working at FCI (Food Corporation of India) and they themselves don’t know what to do with the surplus amount of food grains and the government have no idea on how to supply it.
And still there are a so much of poor people around India who struggle for there daily food needs…
Edhu ellam nama naatla mattum dhan nadakum …

Chitra said...

Thank you all for your support!
I thank the Lord for blessing me with such wonderful friends, who encourage me to write more. :-)

mkr said...

super article.(sorry for english.)

kannan Seetha Raman said...

தோழியே / சகோதரியே வணக்கம்

தற்செயலாக கண்டேன் கத்தாரில் ஆன்லைன்
classroom2007blogspot.com வகுப்பை அரை நேரத்தில் , அடுத்த உடனே உள்ளே வந்து ஐக்கியம் ஆகிவிட்டேன்

சொல்லுங்கள் எதனால் என்று :-)))

பாளையங்கோட்டை மண்ணு

ஆம் யாம் உண்டு உறங்கி தின்று திணறி அங்கும் இங்கும் ஓடி ஆடிய என்னுடைய சொந்தங்களை காணவேண்டி மறு பூமியில் வைத்து

kannan Seetha Raman said...

தோழியே / சகோதரியே வணக்கம்

தற்செயலாக கண்டேன் கத்தாரில் ஆன்லைன்
classroom2007blogspot.com வகுப்பை அரை நேரத்தில் , அடுத்த உடனே உள்ளே வந்து ஐக்கியம் ஆகிவிட்டேன்

சொல்லுங்கள் எதனால் என்று :-)))

பாளையங்கோட்டை மண்ணு

ஆம் யாம் உண்டு உறங்கி தின்று திணறி அங்கும் இங்கும் ஓடி ஆடிய என்னுடைய சொந்தங்களை காணவேண்டி மறு பூமியில் வைத்து