(என்னா பில்ட் அப்பு....... ஒரே அப்பு..... அப்பீட்டு!)
அமெரிக்காவில வேடிக்கையாக எதுவுமே நடக்காதா? வித்தியாசமான நிகழ்வுகளை அவ்வப்போது எழுதுங்களேன் என்று, நம்ம தம்பட்டம் தாயம்மாவின் எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி கேட்டு இருந்தார். இத்தனை நெருங்கிய சொந்தம் கேட்கும்போது, மாட்டேன் என்று சொல்ல நமது இளகிய மனம் மறுத்து விட்டது. அவ்வப்பொழுது, அமெரிக்காவில் இருக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் - ஊர்கள் - festivals பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.
எல்லோரும் டூர் பஸ்ல ஏறியாச்சா? குட்!
போலாம், ரைட்!
இன்று நாம் போற ஊரு பேரு, அரிசோனா (Arizona) மாநிலத்தில் உள்ள ஓட்மன் (Oatman) என்ற ஊரு.
சிறுமலை அடிவாரத்தில் அமைந்த இந்த ஊரில், எந்த பெரிய கட்டடமும் இல்லை. ஊரின், கடைவீதியை கீழே உள்ள படத்தில் காணலாம். நம்புங்க, மக்கா..... இதுவும் அமெரிக்காதான்!
ஊரு பெருமை:
Mining (சுரங்க வேலை) செய்து கொண்டிருந்த காரணத்துக்காக, நூறு வருடங்களுக்கு முன்னர், இந்த சிற்றூர் உருவானது. 1915 ஆம் ஆண்டில், இரண்டு miners (சுரங்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள்), குகைக்குள் $10 million மதிப்புள்ள தங்க சுரங்கம் கண்டு பிடித்த பின், அந்த ஊரின் மக்கள்தொகை 3500 ஆக இருந்தது. (அவ்வளவுதானா? அவ்வளவுதான்!) 1921 ஆம் ஆண்டில், ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டு பலர் தங்கள் கடைகளையும் வீடுகளையும் இழந்தனர். 1925 ஆண்டில், பலருக்கு வேலை தந்து கொண்டு இருந்த முக்கியமான mining company, United Eastern mines , பல்வேறு காரணங்களுக்காக மூடி விட நேர்ந்தது. அதனால், பலர் தங்கள் வேலையை இழந்தனர். இப்பொழுது, இந்த ஊரின் மக்கள் தொகை 159 பேர் மட்டுமே. (அவ்வளவுதானா? அவ்வளவுதான்!)
அங்கு கண்டுப்பிடிக்கப்பட்ட தங்க சுரங்கத்தில், ஒரு ஆண்டுக்கு சுமார் 40,000 0z (ounce) வரை தங்கம் எடுக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு, அந்த சுரங்கம் மூடப்பட்டது. இன்னும், அதில் தங்கம் இருப்பதாகவும், அந்த சுரங்கத்தை பிற்கால தேவைகளுக்காக பத்திரப்படுத்தி மூடி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இன்னும் பழமை மாறாமல், அப்படியே ஊரை வைத்து இருக்கிறார்கள். அதற்கு இந்த சிறு குன்றுக்கு அடியில் இருக்கும் இந்த பெட்ரோல் பங்க் சாட்சி. (சார், பஸ் பத்து நிமிஷம் இங்கே நிற்கும். போய், காபி - டீ குடிக்கிறவங்க குடிச்சிட்டு வாங்க!)
ஊரை சுத்தி காட்டுறோம். அங்கே இருக்கிற திருவிழா காட்டலைனா எப்பூடி?
அமெரிக்காவிலேயே, கோடைகாலத்தில் அதிக சூடாகும் இடம், California மாநிலத்தில் உள்ள Volcano Springs என்ற இடம். 1902 ஆம் வருடம், ஜூன் மாதத்தில் சுமார் 54 டிகிரி (129 degree F) சென்றதாக பதிவு ஆகி உள்ளது. ஓட்மன், அந்த அளவுக்கு சூடாகாத இடம். இருந்தாலும், ஒவ்வொரு வருடமும், அதிகபட்சமாக ஜூலை 4 ல் வரும் அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி சுமார் 41 டிகிரி (106 degree F) செல்லும். (சரி, அதுக்கு என்ன இப்போ? அப்படின்னு நீங்க கேக்குறீங்க. அதுலதான் மேட்டர் இருக்குதுங்க.)
அங்கே என்ன போஸ்டர்? அதாங்க, ஊரு விசேஷத்துக்கு கூப்பிடுறாங்க!
உச்சி வெயில் மண்டையை புளக்கிற நேரத்துல, ரோட்ல அப்படியே முட்டையை உடைச்சு ஊத்தி பொரிச்சு தரணுமாம். வேணும்னா, லென்சு மாதிரி சின்ன solar கருவி துணையுடன் சூடு பிடிக்க வைக்கலாம். யாரு, சீக்கிரமா பொரிச்சு தராங்களோ அவங்க தான் வின்னர். (தமிழ் பட ஹீரோக்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி.)
ஆமா, இப்படி ரோட்ல முட்டையை பொரிச்சா, யார் சாப்பிடுறது? என்ற உங்கள் ஆர்வமான கேள்விக்கு பதில் கேட்க ரெடியா?
அமெரிக்காவிலேயே இந்த ஊரில் மட்டும்தான் சுதந்தரமாக சுற்றித் திரியும் கழுதைகள் தான். நம்புங்க, மக்கா!
சுரங்க வேலை நடந்து கொண்டிருந்தப்போ, பொதி சுமக்க கழுதைகளை அந்த காலத்தில் உபயோகப் படுத்தி இருக்காங்க. அப்புறம், நொடிஞ்சு ஊரை விட்டு விட்டு, மக்கள் போனப்போ கழுதைகளை பக்கத்தில் இருந்த சின்ன மலைப்பக்கம் விட்டு விட்டு போய்ட்டாங்கப்பா. அதுங்க அங்கேயே குட்டி போட்டு, இனம் பெருகி இப்போ wild animals ஆ சுத்தி கிட்டு இருக்குங்க. ஆனாலும், ரொம்ப விவரமான கழுதைங்க. தினமும் காலையில் மலையில் இருந்து இறங்கி, ஊருக்குள்ள சாப்பிட வந்துரும். உங்களை மாதிரி டூரிஸ்ட்களை சுத்தி நின்னு மாமூலுக்கு மொச்சி எடுத்துரும். ஊரு கடைகளில் ஒரு பிசினஸ் ஆக கழுதைக்கு கொடுக்கிற மாதிரி உணவு விக்கிறாங்க.... அதை மக்கள் வாங்கி, கழுதைகளுக்கு சந்தோஷமாக கப்பம் கட்டுறாங்க. ஜூலை மாதத்தில் மட்டும், ரோட்ல போட்ட முட்டை வேற போனஸ். பாருங்க, எப்படி கொழு கொழுன்னு இருக்குதுன்னு!
சரி, டூர் முடிஞ்சுருச்சு..... எல்லோரும் தங்கள் தங்கள் உடமைகளை மட்டும் எடுத்துக்கிட்டு இறங்குங்க.
டொன் போஸ்கோ நிறுவனம் வெளியிடும் சிறுவர்களுக்கான மாத பத்திரிகை: "அரும்பு"
இதில், "Less traveled roads in America" பற்றி மாதம்தோறும் எழுதி வருகிறேன். அந்த விஷயங்களைப் பதிவாகவும் போடலாமே என்ற சகோதர நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில், நீங்கள் வாசிக்கத் தக்கதாக tinkering வேலை பார்த்து இங்கே தந்து இருக்கிறேன். அப்போ அப்போ, வெட்டி பேச்சில் இப்படி டூர் அடிக்கலாமா என்று உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் சொல்ல மறக்காதீர்கள்!
நன்றி!
122 comments:
//எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி//
முடியல ஸ் ஸ்ஸப்பா...
Mee Firstuuuuuuuu........
அருமையா இருக்கு சித்ரா..
தொடர்ந்து எழுதுங்க..
நம்பவே முடியலையே..
அமெரிகால இப்டியா?!!
டூர் பிரமாதம்.
இப்படியே ஒவ்வொரு மாஹாணமா சுத்தி காட்டுங்க.
//(தமிழ் பட ஹீரோக்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி.)//
என்ன ஒரு வில்லதனம்! அக்கா! அமெரிக்காவில இருக்கிறதால ஆட்டோ வராதுன்னு நினைப்பு போல!
நடக்கட்டும் நடக்கட்டும். நான் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில புகார் சொல்றேன்!
//சிறுவர்களுக்கான மாத பத்திரிகை: "அரும்பு", மாதம்தோறும் எழுதி வருகிறேன்.//
கலக்குங்க சித்ரா.. பயபுள்ளைகளுக்கு அறிவு ரொம்ப அதிகமாயிடுமே :))
தொடர்ந்து டூர் கூட்டிட்டு போங்க! நல்லா இருக்கு அக்கா!
அக்காவுக்கு ஓட்டு வேணாமா! போன பதிவிலேயே சொன்னேன். தமிழ்மண ஓட்டுபட்டையை கீழே இன்டிலியோடு கூட சேர்த்து வைங்கன்னு.
சரி! ஓட்டு வேணாம்னா நாம என்ன செய்ய முடியும்?
informative with mixing
nice Chitra
அரிசோனா ஆம்லட்டும் பகிர்வும் அருமை. தொடர்ந்து எழுதுங்க.
தமிழ் மணம், கீழே வர மாட்டேங்குதே..... ஒரே தகராறு!
அமெரிக்காவின் பிரபலமாகதப் பகுதிகளை பற்றியும் சொல்லுங்க. தெரிஞ்சிகறோம். வாழ்த்துக்கள் சித்ரா :)
மம் நல்ல தகவல் ஆனால் இதைப்பற்றி இங்கிருக்கும் எனது அமெரிக்க நண்பர்களிடம் கேட்டால் அவர்கள் போனதே இல்லை என்று கூறுகிறார்கள்.அப்ப நீங்கதான் அதிகமா ஊர்சுத்துரீங்கன்னு நினைக்கிறன்.
Once we drove all the way, from Texas to California, covering all the states, in between. It was so much fun visiting the small towns. :-)
அடிக்கடி டூர் அடிக்கலாம்!!
Arizona பற்றி நானும் கேள்விப்பட்டுருக்கிறேன்........ உங்களின் இந்த பதிவு பல புதிய தகவல்களை எனக்கு அறிமுகம் செய்தது.......
//
அப்போ அப்போ, வெட்டி பேச்சில் இப்படி டூர் அடிக்கலாமா என்று உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் சொல்ல மறக்காதீர்கள்
//
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுங்கள் சித்ரா...........
அக்கா! மெயில் அனுப்பி இருக்கேன்! நான் சொன்னபடி செய்து பாருங்க!
ரொம்ப ஈஸியா இருக்கும்னு நம்பறேன்!
//ஜூன் மாதத்தில் சுமார் 54 டிகிரி (129 degree F) சென்றதாக பதிவு ஆகி உள்ளது//
ஜூன் மாசம் மட்டுத்தானா... இங்க வருசத்துக்கு 10 மாசமும் இந்த சூடுதான்.
ஆச்சர்யமாக இருக்கு இந்த ஊரு... இன்னும் நிறைய எழுதுங்க...:))
நல்ல பகிர்வு... அடிக்கடி ஊர் சுத்த கூட்டிகிட்டு போங்க...
Tour mihavum nantraaga irunthathu chitra.
Hi Akka,
Arumaiyaana tour!!!
Dr.Sameena@
www.lovelypriyanka.blogspot.com
நல்லா ஊர சுத்திக் காட்டுங்க.
அமெரிக்காவும் ரஜினி ஸ்டைல்லே பன்ச் பண்ணுதே
எனக்கு இன்னொரு முகம் இருக்கு அதைப் பார்த்தா தாங்க மாட்டே....
எங்களுக்கு என்ன ஆச்சரியம்னா, அமெரிக்காவுல கூட கழுதைங்க இருக்கு + அதுங்களும் நாலு கால்ல தான் நடக்குது.
இன்னும் அமெரிக்கான்னா ஆஆஆஅன்னு வாயப்பொளந்துகிட்டு பார்க்குறோம். அதுனால இதுமாதிரி வித்தியாசமான விஷயங்களை அடிக்கடி எழுதுங்க...
நல்ல முயற்சி இது போல நிறைய எழுதுங்க, நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல :-)
அப்புறம் பஸ்ஸை விட்டு இறங்கும் முன் ஒரு கேள்வி,
நம்ப நண்பன் ஒருவன் அமெரிக்காவில் இருந்து வரும் போது என்று ROUTE 66எழுதிய பனியனை (அந்த விளம்பரத்தில் உள்ளதுபோல) கொண்டு வந்து கொடுத்தான்! ஒரு வேலை அது இந்த முட்டை போட்ட போட்டியில் கிடைத்ததா?
அமெரிக்காவில் ஒரு சிடியில் விருந்தினருக்கு, மில்க்,தேனீர் ,பட்டர்மில்க் தந்து உபசரிப்பார்களாம் அது எந்த சிடி ?
கலக்குங்க சித்ரா.. :) எங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆவல் தான். தொடருங்க..
THANKS FOR SHARING
Interesting Post.. :)
ஏலே! இது அமெரிக்காவா... நம்ம ஊருலே எல்லாம் சுத்திக்கிட்டு இருக்குமே அது மாறிலா இருக்கு!
ஊரை நல்லா சுற்றிப் பார்த்தோம்.
நன்றி.
உச்சி வெயில் மண்டையை புளக்கிற நேரத்துல, ரோட்ல அப்படியே முட்டையை உடைச்சு ஊத்தி பொரிச்சு தரணுமாம். வேணும்னா///
இங்க அப்படி செய்தால் காக்கா வந்த முட்டைய சாப்பிட்டு விடும்
LK said...
This post has been removed by a blog administrator./////
என்ன lk எங்களுக்கும் சொல்லனும் இல்லையா இப்படி பண்ணா எப்படி
பாஸ்போர்ட் , விசா இல்லாமல் அரிசோனா மாநில ஓட்மன் சுற்றி காண்பித்ததற்கு நன்றி சித்ரா.. :):):):)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
எக்கோ தமிழ்மணத்துல ஓட்டு போட முடியல பட்டையை கீழே கொண்டு வாங்க.
//எல்லோரும் டூர் பஸ்ல ஏறியாச்சா? குட்!
போலாம், ரைட்!//
டிக்கெட் கேட்க மாட்டிங்களே
பயனுள்ள தகவலை கோர்வையாக உங்க பிரத்தியோக பாணியில் சொல்லியிருக்கீங்க.. மக்கா....!
ரோட்ல ஆம்லெட் போடுறத பாத்துதான் நம்ம ஆளுக ஏகத்துக்கும் கற்பனை பண்ணி இருப்பாஙகளோ...! பிரமிப்பான விசங்களை எளிமைய சொல்லியிருக்கும் சித்ரா.... சித்ராதான்...!
தொடர்ந்து எழுதுங்கள்..இது என்ன கேள்வி வேறயா?
//உச்சி வெயில் மண்டையை புளக்கிற நேரத்துல, ரோட்ல அப்படியே முட்டையை உடைச்சு ஊத்தி பொரிச்சு தரணுமாம்//
தெனாலிராமன் கதை தான் ஞாபகம் வருது .
சித்ராவுக்கே உரிய கைவண்ணத்தில் ஆச்சரியங்களை சுமந்த பகிர்வு
//சரி, டூர் முடிஞ்சுருச்சு..... //
இவ்வளவு தானா அடிக்கடி காட்டுங்க நல்லா சுத்தி காட்டுறீங்க நன்றி
nice & well written article.
thanks
டூர் நல்லாருந்துச்சு. அவசியம் தொடருங்கள்.
ரோட்டு மேலே முட்டை போடறது இருக்கட்டும்! தமிழ்மணத்துலே ஓட்டு போட முடியலியே! :-(((
அல்லாருமா சேர்ந்து தமிழ்மணத்தைக் கலாய்ச்சி ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சிடலாமா? :-))
ரொம்ப இண்ட்ரஸ்டிங். :)
'சூப்பர் சித்ரா'அப்படீங்கற....... என்னோட பட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடருங்கள். ஆவலாகக் காத்திருக்கிறோம்........வாழ்த்துக்கள்.
நான் தான் கடைசியா வந்திருக்கேனா? சாரி, கொஞ்சம் வெட்டி பிசி.......ஓட்டுப் பட்டையை சீக்கிரம் ரெடி பண்ணுங்க சித்ரா.....
முடியல ஸ் ஸ்ஸப்பா...
//நம்ம தம்பட்டம் தாயம்மாவின் எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி கேட்டு இருந்தார்.//
ரொம்ப ரொம்ப நெருங்கின சொந்தம் போல...
"நம்ம தம்பட்டம் தாயம்மாவின் எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி கேட்டு இருந்தார். இத்தனை நெருங்கிய சொந்தம் கேட்கும்போது, மாட்டேன் என்று சொல்ல நமது இளகிய மனம் மறுத்து விட்டது. "
ஸ்ஸ் அப்பாடா எவ்ளோ பாசம் பாரேன் ..
இந்த ஊரே பத்தி நீங்க சொல்லி தான் இவ்ளோ விஷயங்கள் பத்தி தெரிஞ்சு கிட்டேன் ..இன்னும் இதே போல நிறையை எழுத அன்புடன் வேண்டிகொள்கிறேன் ..நன்றி தோழி ..
சகோ நானும் டூருக்கு பணம் கட்டியாச்சு.. கண்டிப்பா அனைத்துக்கு வருவேன்...
//சார், பஸ் பத்து நிமிஷம் இங்கே நிற்கும். போய், காபி - டீ குடிக்கிறவங்க குடிச்சிட்டு வாங்க!)///
ஹி ஹி . நான் இன்னும் சாப்பிடவே இல்லை ..!! இங்க சாப்பாடு கிடைக்குமா ..?
// "Less traveled roads in America" பற்றி மாதம்தோறும் எழுதி வருகிறேன்.///
வாழ்த்துக்கள் அக்கா ..!! கண்டிப்பா வெட்டிப்பேச்சில் டூர் போலாம் ..!!
கண்டிப்பா எழுதுங்க.. நாங்க டூர் அடிக்க ரெடி. :)
சுவாரஸ்யம். அமெரிக்காவின் மற்ற பக்கங்களையும் அறிய ஆவல்.
இதத் தான் எதிர்பார்த்தோம். இது மாதிரி இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம்.
நமக்கு தெரியாத எளிய மக்கள் வாழும் அமெரிக்க நாடு இருக்கு போல . எளிய நடையில் , நல்ல எழுத்து , தொடர்ந்து இந்த மாறி வித்தியசமான ஊர்களை பற்றி எழுதுங்கள்
tour romba nalla irrruku,,,,roadla nikura donkey'ss ha paatha nama uura pakkura madhiri irruku...americala ippadi oru uura!!!
அட, ஆம்லெட் வேணும்னா சொல்லுங்க, எங்க ஊர் ரோட்ல எப்ப வேணா போட்டுக்கலாம். பக்கத்தூரான கத்தார்ல ஒரு அம்மிணி (பூட்டின) கார்க்குள்ள குக்கீஸ் செஞ்சுருக்காங்க!! அம்புட்டுச் சூடு இங்க!!
Fantastic tour...loved your post Chitra...very nice presentation...!
New template is simply amazing..!
இப்படி ஒரு தகவல இதுவரை யாருமே சொல்லல அக்கா..அருமை
//வித்தியாசமான நிகழ்வுகளை அவ்வப்போது எழுதுங்களேன் என்று, //
விடாமல் ‘ஓட ஓட’த் துரத்தி சொல்லும் உறவு முறை நம்ம ஊருக்கே உண்டான ஸ்பெஷல் ஆச்சே:)!
அடிக்கலாம் டூர் அடிக்கடி!!
//ஜூலை மாதத்தில் மட்டும், ரோட்ல போட்ட முட்டை வேற போனஸ். //
சித்ரா,
கழுத போட்ட முட்டையா இது? ஆத்தாடி கோழி முட்டை மாதிரியில்ல இருக்குது...!
சித்ரா,
அப்பப்போ டூர் அடிக்கிறதே வெட்டியா பேசறதுக்குத் தானே! நீங்க தைரியமா டூருக்கு ஏற்பாடு பண்ணுங்க.
அரிசோனா மகாணம் கௌபாய் கலாச்சாரத்துக்கு எதுவும் பிரபலமா.
இல்லை காமிக்ஸ் படிச்சப்ப இந்த மகாணம் அடிக்கடி சீன்ல வரும்...மேலும் சிட்டியும் இன்னும் அப்படியே காமிக்ஸ்ல அல்லது படத்துல வந்த மாதிரியேதான் இருக்கு....இன்னும் மாறலையா..
அமெரிக்காவின் இன்னொரு பக்கம் நிஜமாவே சுவாரசியம்.. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்..
super tour...continue...
ரொம்ப அமைதியான ஊரா இருக்கு... :-)
அக்கா!
தமிழ்மண ஓட்டு பட்டை இப்போ சரியா வேலை செய்யுது.
யாரு செய்தா, நீங்களா இல்ல உங்க கணவரா? சரியான முறையில செய்யபட்டிருக்குது.
நான் சொன்ன விளக்கம் எளிதா இருந்ததா அக்கா?
இனி ஓட்டு எல்லாம் நல்ல படியா விழும்.
உங்களை யாரும் அசைச்சிக்க முடியாது இனி!
பதிவு உலக சிரிப்பு ராணியே! உங்களின் புகழ் எட்டு திக்கும் காட்டு தீயை போன்று பரவட்டும்!
என்ன கோபம், மனவருத்தம் இருந்தாலும் சிரித்து விட்டு போய்விட்டால் உடலுக்கும் மனசுக்கும் ஆரோகியம் Guarantee!!!
சுற்று பயணம் அருமை, நல்ல எழுத்து நடை சித்ரா.
அடிச்சு நொறுக்குங்க சித்ரா, நம்ம ஊரில தேடித் பிடிச்சு வயிறு ஒட்டின புள்ளைங்களா பார்த்து படம் பிடிச்சு இது தான் இந்தியான்னு போடுறாங்கல்ல நல்லா வேணும்
ஹாஹா... அருமையா இருக்கு சுற்றுலா. அடுத்த தடவை எங்கே?. ரோட்டில் போட்ட ஆம்லெட்டை வீணாக்காமல் கழுதைக்கு குடுக்கிறார்களே நல்ல விஷயம் தான்.
இந்த லொல்லோட படிக்கும்போது செம ரசனையா இருக்குங்க...... அப்டியே சுத்திக்காட்டின மாதிரி...ஆவலும்கூட...
அக்கா இப்படி ஒரு நல்ல பதிவுக்கு தான் இத்தனை நாள் காத்திருப்பா....
//எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி//
இவ்வளவு ஞாபக சக்தியா?
சித்ரா! செம கும்மி !!
ஆம்லெட் போச்சே... கலக்குறீங்க.
\\அப்போ அப்போ, வெட்டி பேச்சில் இப்படி டூர் அடிக்கலாமா என்று உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் சொல்ல மறக்காதீர்கள்!\\
கண்டிப்பா சித்ரா.நாங்களும் அமெரிக்காவ சுத்தி பாத்தாப்புல ஆச்சு.
நல்லதொரு இடுக்கை..
//ஜூலை மாதத்தில் மட்டும், ரோட்ல போட்ட முட்டை வேற போனஸ். பாருங்க, எப்படி கொழு கொழுன்னு இருக்குதுன்னு//
கழுதைக்கும் ஒரு காலம்வரும்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க:))
உங்கூர்ல இன்னும் ரோட்டுலதான் ஆம்லெட் போடுறாங்களா.. ஏம்ப்பா, நம்ம தமிழ்ப்பட ஹீரோக்களை அங்கே கூட்டிட்டுப்போயி, உங்கூர்காரங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்க வெச்சா என்ன :-))))
சுவாரஸ்யமாக இருக்கு நீங்கள் ஊர் சுற்றிக்காட்டியது..இன்னும் சுற்றிக்காட்டுங்கள் சித்ரா!
சித்ரா...உங்க பாணி மாறி வித்தியாசமான பதிவு.
ரசித்தேன்.அடிக்கடி இப்படியும் எழுதுங்களேன் !
ohh ithu than USA vaa.
nallayirukku tour. enga nan angana vanthurap poren nu solli blog lay suthi katturinga, selavu micham pola.
appadi ellam ninaikkathinga. ippa blogla eluthara idam ellam note panni vachu nallaki vanthu suthi kattach soluvom.
nalla katturai. todarunkal.
அருமையான பதிவு! அதிகம் வெளிவராத தகவல்கள்!!
படங்களைப் பார்த்தபோது ‘கெளபாய் ‘ படங்களைப் பார்ப்பதுபோல பிரமை!!
அந்த விஷயங்களைப் பதிவாகவும் போடலாமே என்ற சகோதர நண்பர்//
மறு படியும் முதல் பாராவான்னு பயந்துட்டன்.
நல்லப்பதிவு பகிவுக்கு நன்றி.
//எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி//
மக்கா நானும் அவுக சொந்தம் தான் மக்கா . . . ரொம்ப நாலு பாக்கலியா அதான் . . . எங்கே எங்கேயோ போறீக . . . நம்ம கடைக்கு ஒரு ட்ரிப் அடிக்கிறது . . . ரொம்ப தூரமில்ல, மதுர தான் . . . .
சித்ரா
அருமை. நல்ல தகவல்.
கண்டிப்பா கூட்டிப் போங்க சித்ரா.. நம்பி வரேன்.. சிரிப்பு மட்டுமில்லை.. உங்களுக்கு பொறுப்பும் இருக்கு..
//எல்லோரும் தங்கள் தங்கள் உடமைகளை மட்டும் எடுத்துக்கிட்டு இறங்குங்க. //
ரொம்ப நல்ல பதிவு மேடம். தொடரட்டும் உங்க தம்பட்டம்!!
நல்ல டூர் சித்ரா! தொடருங்கள்!!
சரி வந்தது வந்தாச்சு, கும்பல்ல ஒரு கோவிந்தா போட்டுக்கிடலாம், நம்மளை யாரு கண்டுக்கிடப்போறாங்க.
கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா
சொந்த ஊரே US தானா? profile ல போயி மாத்துங்க. இதுல மண் வாசனைன்னு வேற இடுகைகள் போடு இருக்கீங்க.
ரொம்ப அருமையான டூர் சித்ரா அக்கா...
அந்த கழுத மேட்டர் சூப்பர்.. அவ்வளவு விவரமாவா இருக்கு.. அப்படி அமெரிக்காவேயே சுத்தி காட்டுங்க ஓசியில டூர் போரண்டா யாருக்குத்தான் பிடிக்காது
எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி//
அம்மாடியோ தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னுல சுத்துது. அது சுத்தும்போது சித்ராவும் சேந்துல்ல சுத்துராவோ .
டூரு..நல்ல டூரு!!!
இது போன்ற டூரை எழுத விரும்பிய
உங்கள் உறவுக்காரப்பெண் தூரத்து உறாவா??
:)
அமெரிக்காவின் இன்னொரு பக்கமா..? போடுங்க ..போடுங்க.. கேக்கவும் பாக்கவும் நல்லா இருக்கு
தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...
http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html
Thanx for dropping by dear...hope you having a great time...waiting for your beautiful next post...:)
நல்லா ஊர் சுத்துனீங்க.
ஆம்லெட்டும் பதிவும் நல்லா இருக்கு சித்ரா..
தொடர்ந்து எழுதுங்க.
//நம்ம தம்பட்டம் தாயம்மாவின் எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி கேட்டு இருந்தார்//உங்களால மட்டும் தான் இப்படி எழுத முடியும்...சூப்பர்ப்..
Very interesting post Chitra.Continue writing about places.
Very interesting post Chitra.Continue writing about places.
நல்லா இருக்குதுங்க உங்க டூர் பதிவு. மீண்டும் ஒரு சுற்றாவளி பயணம் போய் வந்து, உங்க அமெரிக்காவில், எங்க ஊர் போல் சுவரெல்லாம் போஸ்டர்,ரோடெல்லாம் குப்பை, தாறுமாறான போக்குவரத்து,
இதெல்லாம் இருக்கான்னு பாத்து சொல்லுங்க.. அத விடுங்க.. முருகன்சாமி போல பனிரெண்டு கைகளுடன் கைகாட்டும் டிராப்பிக் போலீஸ் உண்டா?
போலாம் ரைட்...
அப்பாடா... ஓசில ஒரு ஊர சுத்திப் பார்த்தாச்சு... ஹிஹி
டூர கண்டினியூ பன்னுங்க ஜி... :)
// (தமிழ் பட ஹீரோக்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். //
ஹீ..ஹீ..அண்ணன் விஜயகாந்த் அமெரிக்கா பஸ் ஏறிட்டாராம்..அண்ணன் சொல்ல சொன்னாக..முட்டை மட்டும் ஒரு லாரி நிறைய வாங்கி வைப்பிகலாம்..அண்ணன் பம்பரம் கொண்டுவராகலாம்..;-))
ஏங்க இப்புடி நடுரோட்டுல halfboil போட்டு இருகீங்க
ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ me the 109அப்புடீனா "1+0+9 = 1"
so me the Firstuuuuuuuuuuuuuuu
FM Radio station மாதிரி, வெட்டி பேச்சுக்கும் சிலர் நேயர் விருப்பம் டாபிக் அனுப்ப ஆரம்பிச்சாட்டங்கப்பா.
//
யாருப்பா அது சொந்த செலவுல சூன்யம் வச்சிகிறது ??1
நம்ம தம்பட்டம் தாயம்மாவின் எதிர் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டீ கடைக்கு மேல குடி இருக்கிறவரோட மாமாவோட தாத்தாவோட சின்ன பாட்டியின் மூன்றாவது பேரனின் பங்காளி மக்காவின் நாத்தானாரின் ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மருமகளின் classmate ஓட பேத்தியின் தோழி கேட்டு இருந்தார்.
////
ம்ம் ரொம்ப தூரத்து சொந்தம் போல ..
அருமையா இருக்கு.தொடர்ந்து எழுதுங்க..
நல்லாயிருக்கு தொடருங்க ..
தகவலுக்கு நன்றி.
உண்மையிலே டூர் போவதை ஒத்த உணர்வு வாசிக்கும் போது ஏற்படுகிறது.
நாங்களும் அமெரிக்காவ தெரிஞ்சுக்க இப்படி ஏதாவது எழுதுங்க. நம்ம ஊரு மாதிரியே ஆடு, மாடு, கழுத எல்லாம் திரியுது.
நான் கிறஸ்தவ பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். அங்கேயும் அரும்பு என்ற புத்தகம் வரும்.
நாங்கல்லாம் அமெரிக்காவ இப்படிதான் பாக்கணும்!!! அடிக்கடி எழுதுங்க அக்கா!!!
ஆஹா.. அமெரிக்க அமெரிக்கா தான்..
அழகாக எழுதியிருக்கிங்க சித்ரா...
superb.. write more
நல்லா உங்க வலைபதிவு வழியாவே ஊரசுத்தி காட்டிய விதம் அருமை..
இப்படியெல்லாம் கூட நடக்குதா !
உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி
சித்ரா ரொம்ப நன்றாக ஒவ்வொன்றும் எழுதறிங்க.
அன்பின் சித்ரா
ஏற்கனவே 120 கமெண்டா - நானும் இப்ப போடணுமா என்ன - இடுகையப் படிக்க எடுத்த் நேரத்த வுட அதிக நேரம் மறுமொழி படிக்க எடுத்துக்கனும் போல - நான் படிக்கலப்பா - ஜூட்
ஆமா நிச்சயம் இத அமெரிக்காலே எதிர் பாக்கலே - கழுத சுதந்திரமா சுத்தி வரதும் - ரோட்ல முட்டை பொறிக்கறதும் - 159 பேருக்கு ஒரு ஊர் இருக்கறதும் - இந்தியா போலதானா அமெரிக்காவும்.
சரி சரி - நல்லாவே எல்லாத்தையும் எழுதிய சித்ரா - தொடர்க தொடர்க
நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
Thank you very much for the good responses. I will try to "arrange" for the tour - at least once a month. :-)
நல்ல தகவல்.அருமையா இருக்கு.
தொடர்ந்து எழுதுங்க..
Post a Comment