Sunday, August 21, 2011

மூன்று முடிச்சுகள் - தொடர் இம்சை.
http://pinnoottavaathi.blogspot.com/2011/08/3.html


இந்த பதிவின் மூலம், உலக குடிமகன் , ஆஷிக் : வணக்கம்:

நான் பதிவு எழுத வந்த புதிதில், முதல் பின்னூட்டம் இட்ட பதிவர் - இன்று வரை எனக்கு மறக்காமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் கோமா மேடம் அவர்களுக்கும் : வணக்கம்.
http://haasya-rasam.blogspot.com/2011/08/blog-post_17.html


http://vasagarthevai.blogspot.com/2011/08/3.html

பிரபு எம். முக்கும் வணக்கம்.
இவர்கள் மூவரும் என்னை தொடர் பதிவுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து இருக்கிறார்கள்.

விரும்பும் மூன்று விஷயங்கள்:

1. தமிழ் பதிவுலகில், தொடர் பதிவு இம்சை இல்லாமல் இருக்க விரும்புகிறேன்.

2. நான் சமைக்கும் மட்டன் பிரியாணி, எங்க ஊரு அண்ணாச்சி ஹோட்டல் பிரியாணி மாதிரி வரும்படி விரும்புகிறேன்.

3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(
எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?)


விரும்பாத மூன்று விஷயங்கள்:

1. சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ்.

2. ஜிவ்வென்று ஏறும் தங்கத்தின் விலை.

3. மயாமி பீச்சுக்கு வரும் "போல்ட்ஸ்".


பயப்படும் மூன்று விஷயங்கள்
:

1. அடுத்த தீவிரவாத ஒழிப்பு சீக்ரட் மிஷனுக்கு , ஒபாமா என்னை அழைத்து விடுவாரோ என்று பயப்படுகிறேன்.

2. கருணாநிதி ஐயாவின் நான்காவது திருமண செய்தியும் அதன் மூலம் மேலும் வாரிசுகளும் வந்து மிரட்டுவார்களோ என்று பயப்படுகிறேன்.

3. நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்.


புரியாத மூன்று விஷயங்கள்
:

1. பச்சை வெற்றிலை, வெள்ளை சுண்ணாம்பு, பிரவுன் பாக்கு போட்டால் - எப்படி நாக்கு சிவப்பாக மாறுகிறது?

2. தமிழ் - ஆங்கிலம் தவிர, வேறு எந்த மொழியில் யார் யார் - என்ன பேசினாலும் .....

3. ராக்கெட் சயன்ஸ்.


மேஜையில்
உள்ள மூன்று பொருட்கள்
:

1. computer

2. keyboard

3. mouse


சிரிக்கவைக்கும்
மூன்று விசயங்கள் (அல்லது மனிதர்கள்)
:

1. தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள்.

2. நான் பேசும் ஹிந்தி

3. இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் பட்டிமன்றங்கள் தான், உண்மையான பட்டிமன்ற இலக்கணம் கொண்டவை என்று தமிழ் மக்களை எளிதாக நம்ப வைத்து விட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் தனித்திறமை.


தற்போது
செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்
:

1. தொடர் பதிவுக்கு அழைத்தவர்களை, மனதார திட்டி ....ஆ.....சாரி, வாழ்த்தி நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

2. keyboard தட்டி , இந்த கேள்விக்கு பதில் சொல்ல முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

3. மூன்று விஷயங்கள் குறித்த தொடர் பதிவுக்கு, மூன்று கேள்விகள் மட்டுமே ஏன் கொடுக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறேன்.


வாழ்
நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்
:

1. தமிழ் பதிவுலகம் விட்டு மகிழ்ச்சியாக, இனிய நினைவுகளுடன் விலகி விட வேண்டும்.

2. ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும்.

3. தமிழ்மண மகுடத்தை, இனி தங்கத் தட்டில் வைத்து தான் தர வேண்டும் என்று , அடுத்த முறை பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டும்.


செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள் :

1. ஒரு வழியா இந்த தொடர் பதிவை எழுதி முடித்து விட முடியும் என்று நினைக்கிறேன்.

2. மூன்று விஷயங்களுக்கு மேலாக இன்னும் அதிக விஷயங்களை செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

3. பத்தே நாட்களில், இன்னும் பத்து பவுண்டு எடை கூட செய்து விட முடியும் என்று நினைக்கிறேன்.


கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள் :


1. தமிழ் தொலைக்காட்சிகளில் , விளம்பரங்களில் வரும் ஆங்கிலத்தமிழ் - மற்றும் ஹிந்தித்தமிழ்.

2. "சித்ரா, உங்க அக்கௌன்ட்ல போட வேண்டிய பில்லியன் டாலர் பணத்தை தவறுதலாக , கனிமொழி மேடம் அக்கௌன்ட்க்கு அனுப்பி விட்டோம்."

3. "உங்களுக்கு சிலை வைக்க போகிறோம்."


கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள் :


1. ஜிகிடி, டகால்டி, தில்லாலான்கடி, தக்குடு போன்ற மேலும் பல அரும்பெரும் தமிழ் வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

2. இடத்துக்கு இடம் - ஆளுக்கு ஆள் - தகுந்த மாதிரி அலட்டல் வேலை செய்பவர்களை, நோகாமல் எப்படி நுங்கு எடுப்பது என்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

3. வேலை ஒழுங்கா நடக்க, பாஷா ரஜினி மாதிரி, "உண்மையை" சொல்ல கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.


பிடித்த மூன்று உணவு வகைகள் :

1. நடப்பன ......
2. பறப்பன .....
3. நீந்துவன ......அடிக்கடி முணு முணுக்கும் மூன்று paadalgal:


எனக்கு பாட்டு பாடியோ, பாடல்களை முணுமுணுத்தோ மற்றவர்களை கொடுமை படுத்த வேண்டும் என்ற தீவிரவாத எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. மன்னிக்கவும்.


பிடித்த மூன்று படங்கள்:

1. ரஜினிகாந்த் படம்.

2. சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.

3. ஸ்டைல் மன்னன் ரஜினி படம்.


'இது இல்லாம வாழமுடியாது' என்ற மூன்று விஷயங்கள்:

1. உயிர்.

2. மூளை.

3. இதயம்.


இதை தொடரா பதிவாக மாற்றும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


144 comments:

Unknown said...

ஆகா.............

Romeoboy said...

\\- தொடர் இம்சை//

இதுக்காகவே உங்க பதிவை நான் ரொம்ப ரசிக்கிறேன் :))

Unknown said...

சகோ கலக்கலா சொல்லி இருக்கீங்க.....அதுவும் தாய் நாட்டுக்கு வந்து போனதுல இருந்து உங்களுக்கும் அரசியல் நெடி அடிசிடுசோன்னு ஒரு பயம் வந்துருச்சி ஹிஹி!

Unknown said...

தமிழ் பதிவுலகில், தொடர் பதிவு இம்சை இல்லாமல் இருக்க விரும்புகிறேன். //

நல்லா சொன்னீங்க??. யாருக்கு எழுதணுமோ எழுதுங்க, அடுத்தவங்களை எதுக்கு இம்சிக்கிறீங்க ???????????.

கோமதி அரசு said...

. ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும்.//

ஆஹா! நல்ல முடிவு எடுத்தீர்கள் சித்ரா. பதிவுலகம் என்னாவது? நீங்கள் படவுலகம் போய் விட்டால்.

Unknown said...

mee the firstu,..
kalakkal answers

வெட்டிப்பேச்சு said...

//நான் சமைக்கும் மட்டன் பிரியாணி, எங்க ஊரு அண்ணாச்சி ஹோட்டல் பிரியாணி மாதிரி வரும்படி விரும்புகிறேன். //

அட்ரா சக்கை. இந்த ரிசிபியை ஒரு பதிவா போடுங்களேன். நாங்களும் ட்ரை பண்றோம்.

//கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள் :


1. ஜிகிடி, டகால்டி, தில்லாலான்கடி, தக்குடு போன்ற மேலும் பல அரும்பெரும் தமிழ் வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

2. இடத்துக்கு இடம் - ஆளுக்கு ஆள் - தகுந்த மாதிரி அலட்டல் வேலை செய்பவர்களை, நோகாமல் எப்படி நுங்கு எடுப்பது என்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

3. வேலை ஒழுங்கா நடக்க, பாஷா ரஜினி மாதிரி, "உண்மையை" சொல்ல கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

//

இங்க தாங்க நீங்க நிக்கிறீங்க. இதுதன் உங்க individuality.

உண்மையாலுமே பதிவு நல்லா இருக்குங்க..

வாழ்த்துக்கள்.

S Maharajan said...

//எனக்கு பாட்டு பாடியோ, பாடல்களை முணுமுணுத்தோ மற்றவர்களை கொடுமை படுத்த வேண்டும் என்ற தீவிரவாத எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. மன்னிக்கவும்//

//உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு
'இது இல்லாம வாழமுடியாது' என்ற மூன்று விஷயங்கள்:

1. உயிர்.
2. மூளை.
3. இதயம்.//

எப்படி உங்களால மட்டும் முடியுது.

SURYAJEEVA said...

தொடர் பதிவு எழுதவில்லை என்றால் ரத்தம் கக்கி சாவாய் என்று எழுதாமல் விட்டீங்களே அதுவரைக்கும் நன்றி..

Unknown said...

நல்ல பகிர்வு

தலைப்பு சூப்பர்

Unknown said...

வணக்கம்!

settaikkaran said...

//2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்//

இதை ஆதரித்து நாளைமுதல் நான் சாப்பிடும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். :-)

//தமிழ் பதிவுலகில் பிரபலம் ஆக - அதிகம் ஹிட்ஸ் கிடைக்க சொல்லப்படும் காரணங்கள். //

கொஞ்சம் வெலாவரியா இன்னொரு இடுகை போடுங்களேன். என் கடையிலே ஈ ஓட்டிக்கினுகீறேன்! :-)

வெங்கட் நாகராஜ் said...

சுவையான மூன்று முடிச்சுகள்... பதில்கள் அனைத்தும் ரசிக்கும் படியாய்....

பிடிக்கும் மூன்று உணவு வகைகள்.... :)))

Unknown said...

//சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ்//
அக்கா தமிழ்நாட்டை கேவலப் படுத்தீட்டாங்களா? #டவுட்டு! :-)

Chitra said...

தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை ஏர்போர்ட்டை மட்டும்......

Unknown said...

தானைத்தலைவி..
பதிவுலக விடிவெள்ளி...
தமிழ்மணத்தின் கலங்கரை விளக்கம்....
அமெரிக்க அன்னை...
சித்ராக்கா வாழ்க!

Unknown said...

//Chitra said...
தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை ஏர்போர்ட்டை மட்டும்......//
அய்யய்யோ நான் சும்மாதான் கேட்டேன்! ஸாரி அக்கா! COOOOOL! :-)

நாய் நக்ஸ் said...

Hi...hi.....
Nalla irukku

Chitra said...

அய்யோ..... நான் தப்பா எடுத்துக்கலை.... கடுப்பு, சென்னை ஏர்போர்ட் மேல ..... ஹி,ஹி,ஹி,ஹி....

ஆகுலன் said...

எல்லா விடைகளும் நல்லா இருக்குது அதுல கலைன்ஜர் காமெடி ரொம்ப நல்லா இருக்குது....

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

சேலம் தேவா said...

//நான் பேசும் ஹிந்தி//

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா வா..!! :)

குறையொன்றுமில்லை. said...

முத்தான மூன்று முடிச்சுகள்.எல்லாமே
நகைச்சுவையுடன் நல்லா சொல்லி இருக்கீங்க.

Chitra said...

//நான் பேசும் ஹிந்தி//

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா வா..!! :)


....... அச்சா ஹே ..... :-))))

Anonymous said...

சிரிக்கும்படியும் நச்சுன்னும் இருக்கு சித்ரா.. நலமா? ரொம்ப நாள் ஆச்சி உங்க பக்கம் வந்து..

சசிகுமார் said...

தொடர்பதிவு மகாராணி நீங்களே இப்படி சொன்னா எப்படி.

ஆனந்தி.. said...

லேடி சந்தானம் அவர்களே...:-)))

ஆனந்தி.. said...

//3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன். //
வந்தாலும் நல்லா தான் இருக்கும்...:-)) நாங்க வோட்டு போடுறதுக்கு பதில் நீங்களே வோட்டு போட்ருவீங்களே..:-)) ஆனாலும்..அப்பவும் நாங்க கலாட்டா பண்ண வைப்போம் கருணாநிதியை..அமெரிக்க சீமாட்டியே னு கலாய்க்க சொல்லி ...:-))

Madhavan Srinivasagopalan said...

// இம்சை //

நண்பர் இம்சை
பாபுவை ஞாபகமாக குறிப்பிட்டதற்கு நன்றிகள்

ஆனந்தி.. said...

/3. நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்.//

ஷங்கர் அண்ணா கவனத்துக்கு...:-))))

ஆனந்தி.. said...

/2. கருணாநிதி ஐயாவின் நான்காவது திருமண செய்தியும் அதன் மூலம் மேலும் வாரிசுகளும் வந்து மிரட்டுவார்களோ என்று பயப்படுகிறேன். //

4 only...very bad...:-)))) you take serious...:-))))))))))))))))

ஆனந்தி.. said...

//1. பச்சை வெற்றிலை, வெள்ளை சுண்ணாம்பு, பிரவுன் பாக்கு போட்டால் - எப்படி நாக்கு சிவப்பாக மாறுகிறது?//

வேற ஒண்ணும் பதிலாய் சொல்ல துடிக்குது...:-)) வேணாம்....:-)))

வைகை said...

விரும்பாத மூன்று விஷயங்கள்:

1. சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ். //உண்மைதாங்க..கன்வேயர்ல பேக் வர்ரத பார்த்தா மனசு பக்கு பக்குன்னு இருக்கு! பேசஞ்சர விட ஸ்டாப்ஸ் அதிகமா இருக்காங்க..ஆனா நோ யூஸ் :(

MANO நாஞ்சில் மனோ said...

3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?) //

பாம் போட்டு கொண்டேபுடுவேன் ஜாக்கிரதை, ம்ஹும் அடுத்த முதலவர் நாஞ்சில்மனோ'தான்.....

MANO நாஞ்சில் மனோ said...

1. அடுத்த தீவிரவாத ஒழிப்பு சீக்ரட் மிஷனுக்கு , ஒபாமா என்னை அழைத்து விடுவாரோ என்று பயப்படுகிறேன். //

அப்பிடி ஒரு சம்பவம் நடந்துச்சுன்னா தீவிரவாதியா நான் வந்துருவேன்....

ஆனந்தி.. said...

//3. ராக்கெட் சயன்ஸ். //

அப்போ அம்மினிக்கு ஜெட் சயன்ஸ் புரியுமோ..:-))

நட்புடன் ஜமால் said...

பிடித்த உணவு

ஹா ஹா ஹா

நானும் நடப்பேனுங்கோ :P

MANO நாஞ்சில் மனோ said...

2. நான் பேசும் ஹிந்தி //

ஐயய்யோ பாகோ பாகோ மனோ பாகோ....

ஆனந்தி.. said...

@நாஞ்சில் மனோ //பாம் போட்டு கொண்டேபுடுவேன் ஜாக்கிரதை, ம்ஹும் அடுத்த முதலவர் நாஞ்சில்மனோ'தான்...../

ஹீ...ஹீ...சிப்பு சிப்பா வருது...நீங்கல்லாம் தொண்டன் தல...

Chitra said...

மனோ, பால்கோவா கிண்டுனா அய்யய்யோவா இருக்கும்னு சொல்றாரு!

ஆனந்தி.. said...

///சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ்//
அக்கா தமிழ்நாட்டை கேவலப் படுத்தீட்டாங்களா? #டவுட்டு! :-)//

இல்ல ஜீ..:-)) இது பப்ளிசிட்டி...எல்லாம் ஒரு வெளம்பரம் தான்...:-)))

தமிழ் உதயம் said...

சூப்பர். சித்ரா பதிவு சும்மா அதிருதுல்ல.

அருமை. சிரித்தவாறே ரசித்தோம். வாசித்தவாறே சிரித்தோம்.்தவாறே ரசித்தோம். வாசித்தவாறே சிரித்தோம்.

ஆனந்தி.. said...

//ஐயய்யோ பாகோ பாகோ மனோ பாகோ....//

இல்ல சித்ரா...மனோ "கோ" படம் பாக்க போறாராம்...:-)))

Chitra said...

சனிக்கிழமை, கோகோ விளையாடினேன் என்று சொல்லலியா?

அமுதா கிருஷ்ணா said...

வருங்கால முதல்வரே வாழ்க,வாழ்க..துணை முதல்வர் பதவி எனக்கு தான் இப்பவே சொல்லிட்டேன் சித்ரா.

ஆனந்தி.. said...

1. தொடர் பதிவுக்கு அழைத்தவர்களை, மனதார திட்டி ....ஆ.....சாரி, வாழ்த்தி நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன். //

அப்போ இந்த முக்கியமான ஆளையும் :)) சேர்த்து திட்டி விடவும்..:-))
http://vasagarthevai.blogspot.com/2011/08/3.html

ஆனந்தி.. said...

அநேகமா உன் பதிவை படிச்சுட்டு மனோ ஊமை எதுவும் ஆகிட்டாரோ...அப்டி தான் சிம்டம்ஸ் தெரியுது...:-))

ஸாதிகா said...

சித்ராவுக்கே உரித்தான் நகைச்சுவையுடன் தொடரின் தலைப்பில் இருந்து தொடரின் முடிவு வரை ....அடடா...

//2. கருணாநிதி ஐயாவின் நான்காவது திருமண செய்தியும் அதன் மூலம் மேலும் வாரிசுகளும் வந்து மிரட்டுவார்களோ என்று பயப்படுகிறேன்.
// ஐயோ சித்ரா என்னா கொலவெறி...

ஆனந்தி.. said...

//1. தமிழ் பதிவுலகம் விட்டு மகிழ்ச்சியாக, இனிய நினைவுகளுடன் விலகி விட வேண்டும்.//

அப்போ இன்டிலி அண்ட் தமிழ்மணம் இழுத்து மூடிருவாங்க...ரைட் ட்டு..:-))))

பித்தனின் வாக்கு said...

//எனக்கு பாட்டு பாடியோ, பாடல்களை முணுமுணுத்தோ மற்றவர்களை கொடுமை படுத்த வேண்டும் என்ற தீவிரவாத எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. மன்னிக்கவும்//

//உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு

repeatuuuu

//1. பச்சை வெற்றிலை, வெள்ளை சுண்ணாம்பு, பிரவுன் பாக்கு போட்டால் - எப்படி நாக்கு சிவப்பாக மாறுகிறது?//

வேற ஒண்ணும் பதிலாய் சொல்ல துடிக்குது...:-)) வேணாம்....:-)))

aka aka unmai urankukirathu.

ஆனந்தி.. said...

//3. பத்தே நாட்களில், இன்னும் பத்து பவுண்டு எடை கூட செய்து விட முடியும் என்று நினைக்கிறேன்.
2. "சித்ரா, உங்க அக்கௌன்ட்ல போட வேண்டிய பில்லியன் டாலர் பணத்தை தவறுதலாக , கனிமொழி மேடம் அக்கௌன்ட்க்கு அனுப்பி விட்டோம்."

3. வேலை ஒழுங்கா நடக்க, பாஷா ரஜினி மாதிரி, "உண்மையை" சொல்ல கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.


1. ரஜினிகாந்த் படம்.

2. சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.

3. ஸ்டைல் மன்னன் ரஜினி படம். //


செம க்யூட் ...பதில்கள்...

பித்தனின் வாக்கு said...

மயாமி பீச்சுக்கு வரும் கிழ போல்ட்ஸ்.

nan varalamunu irunthen ippadi sollitingaley.

பித்தனின் வாக்கு said...

பத்தே நாட்களில், இன்னும் பத்து பவுண்டு எடை கூட செய்து விட முடியும் என்று நினைக்கிறேன்.


aiyo kadavuley,,, solaman sir ninachu Eri vidathey please.

flightla rendu ticket edukkanum.

அன்புடன் அருணா said...

ஆஹா!

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ்மண மகுடத்தை, இனி தங்கத் தட்டில் வைத்து தான் தர வேண்டும் என்று , அடுத்த முறை பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்து போராட வேண்டும்.

haa haa peraasai

உணவு உலகம் said...

//பயப்படும் மூன்று விஷயங்கள் :
நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்.//
அப்பவே சொன்னேன். ஆறு மாசமானாலும் அப்படியே இருக்கும் இருட்டு கடை அல்வா பார்சல் போடலாம்னு. கேட்டாத்தானே!

உணவு உலகம் said...

//விரும்பும் மூன்று விஷயங்கள்:
நான் சமைக்கும் மட்டன் பிரியாணி, எங்க ஊரு அண்ணாச்சி ஹோட்டல் பிரியாணி மாதிரி வரும்படி விரும்புகிறேன்.//
அவ்வளவு நல்லாவா இருந்துச்சு! அடுத்த ஃப்ளைட்ல பார்சல் அனுப்பவா?

உணவு உலகம் said...

//ஆனந்தி.. said...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்.
>>>>>>>>>>
ஷங்கர் அண்ணா கவனத்துக்கு...:-))))//
கவனத்தில் எடுத்துகொண்டோம் சகோதரி. இனிமே அமெரிக்காவிற்கு ஆர்டர் கொடுக்குபோதெல்லாம், மதுரைக்கும் ஒரு பார்சல் சேர்த்தேதான்.

மகேந்திரன் said...

முத்தான மூன்று விஷயங்களை...
உங்கள் நடையில் அசத்தி இருக்கீங்க சகோதரி..
நன்று

இந்திரா said...

அடப்பாவிகளா???
இந்தத் தொடர்பதிவு இன்னும் முடியலையா???

குணசேகரன்... said...

அடா பாவமே..இது இன்னும் முடியலயா?

சத்ரியன் said...

//2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன். //

அப்ப நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?

வேனும்னா ஒரு ஒப்பந்தம். அக்கா முதலமைச்சர், நான் எதிர்க்கட்சி தலைவர்.

’ஒரே வார்த்த. ஓஹோன்னு வாழ்க்கை!’

என்ன சொல்றீங்க?

சத்ரியன் said...

//சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ். //

ஐ அப்ரண்டீஸ் சித்ராக்கா.

சக்தி கல்வி மையம் said...

அக்கா, தலைவர் படம்னா உங்களுக்கும் உயிரா?

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல?

சக்தி கல்வி மையம் said...

இங்க மட்டும் இல்லை.. சிஎம் க்கு நின்னாலும் நாங்க ஓட்டு போடுவோம்.

middleclassmadhavi said...

தொடராப் பதிவு - :-)))
ரசித்த பதிவு!!

ஸ்ரீராம். said...

முதலமைச்சரா...பதிவுலகில் புதிய புயலைக் கிளப்புகிறீர்களே...
பட்டிமன்றங்கள் புதிய பாதையில் போவது உண்மைதான்...ஆனாலும் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற சுவாரஸ்யப் பேச்சாளர்களை ரசிக்க முடிகிறது. எப்படியோ தொடர்பதிவை எழுதி முடித்து விட்டீர்கள் போல...!

தமிழ்வாசி பிரகாஷ் said...

இவங்களையும் தொடர் பதிவுக்கு கூப்பிட்டுடாங்களா? செமயா சொல்லியிருக்காங்க

goma said...

அழகா கையாண்டு கலக்கிட்டு அழைத்தவரைத் திட்டினால் எப்படி.?நானும் இப்படித்தான் தொடர் பதிவுக்கு நோ சொல்பவள் ஆனால் அழைத்தது அண்ணாச்சி சகாதேவனாச்சே மறுக்க முடியுமா...பதிவிட்ட பிறகு பார்த்தால் என் ஹையஸ்ட் பின்னூட்ட பதிவாகி விட்டது

செங்கோவி said...

அச்சா ஹை!

Karthik said...

உங்களுக்கு பதிலா தவறுதலா கனிமொழியை ஜெயிலுக்கு அனுப்பிட்டோம்ன்னு சொன்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இதை தொடரா பதிவாக மாற்றும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. ///////

அப்பாடா.......

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
பின்னூட்டங்களும் உங்கள் பதில்களும் அருமை.
வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////1. தமிழ் பதிவுலகம் விட்டு மகிழ்ச்சியாக, இனிய நினைவுகளுடன் விலகி விட வேண்டும். //////

ஏன் இந்த முடிவு?

ஹுஸைனம்மா said...

//தொடர் பதிவு இம்சை//
அவங்க உங்களையும் அழைச்சதலாத்தானே இப்படி (இன்னும்) ஒரு சிரிக்க/சிந்திக்க வைக்கும் பதிவு கிடைச்சிருக்கு!! எனவே அவர்களுக்கு நன்றி. ;-))))

//கிழ போல்ட்ஸ்//
சித்ராவா இப்படி எழுதியது??

//எப்படி நாக்கு சிவப்பாக மாறுகிறது//

the leaves are chewed together in a wrapped package along with the areca nut and mineral slaked lime (calcium hydroxide). The lime acts to keep the active ingredient in its freebase or alkaline form, thus enabling it to enter the bloodstream via sublingual absorption. The areca nut contains the alkaloid arecoline, which promotes salivation (the saliva is stained red),

இப்படித்தானாம்...

//நடப்பன ......
2. பறப்பன .....
3. நீந்துவன //
மனுசனும் நடப்பான், விமானத்தில் பறப்பான், தண்ணியில் நீந்துவான். அப்ப நீங்க......?? ;-))))))))))))

ஆமினா said...

//உலக குடிமகன்//
ஹி...ஹி...ஹி....

பின்னூட்டவாதியாம். அத விட்டுட்டீங்களே.........

ஆமினா said...

//
3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன். //

வருங்கால முதலமைச்சர் வாழ்க வாழ்க

சென்னை பித்தன் said...

//2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன். //
கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்க, அம்மா!

வலையுகம் said...

நல்லது ஆசைகள் முடிந்து விட்டதா இன்னும் பிரதமர் ஜனாதிபதி வேற எதுவும் இருக்க...

சொல்லச் சொல்ல said...

எந்த அரசியலிலும் ஈடுபடாத சித்ரா அக்காவின் பதிவில் புதுசா அரசியல் காத்து வீசுதே. mmm interesting!

arasan said...

சிரிப்பு வருதுங்க மேடம்

vidivelli said...

மூன்று முடிச்சுக்கள் அருமை...
பதிவுக்கு வாழ்த்துக்கள்..

சகாதேவன் said...

//பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?//
எங்கள் ஓட்டு உங்களுக்கே. மாண்புமிகு சித்ரா வாழ்க.
என் 3 தொடர் பாருங்களேன்.
vedivaal.blogspot.com

சகாதேவன்

ILA (a) இளா said...

// மயாமி பீச்சுக்கு வரும் கிழ போல்ட்ஸ்.//
இதுக்கு கண்டனங்கள்.. நமக்கும் வயசாவுமே.. அப்ப கடலுக்கே போவமாட்டாம? வயசான பின்னாடிதான் நல்ல ஓய்வு எடுக்கனும், அது நியாயமா இல்லே சம்பாரிக்க வயசுல ஓய்வு எடுக்கிறோமே. அது நியாயமா?

Chitra said...

உங்கள் பார்வை விரிவடைய வாழ்த்துக்கள். இந்த வரியை வேண்டும் என்றே எழுதினேன். இந்த பதிவு தலைப்புக்கு சம்பந்தமான விஷயம் அல்ல. ஒரு பெண் பதிவர் கண்ணியமாக - கிளீன் ஆக - குறிப்பிட்ட வரைக்குள் இருக்க வேண்டும் என்ற குறுகிய வட்டத்தை போட்டு விட்டு, சில ஆண் பதிவர்களுக்கு தலைப்பை சாராமல், "எதை" பற்றி வேண்டுமானாலும் எழுத இயலும் ஒரு பட்ச உரிமையை தமிழ் பதிவுலகம் தந்து இருப்பதை சுட்டி காட்டவே இதை எழுதினேன். நிச்சயமாக, உங்களை போல ஒரு பின்னூட்டமாவது வரும் என்று காட்டவே அப்படி எழுதினேன்.

vanathy said...

சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ். // haha.. They wouldn't change.

கோகுல் said...

ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும். //

நல்லா கிளப்புராங்கடா பீதிய!

தெய்வசுகந்தி said...

ha ha ha

mamtc said...

Loved all your answers. You never cease to amaze me. Great job Chitra

இராஜராஜேஸ்வரி said...

2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?)

வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

//உங்கள் பார்வை விரிவடைய வாழ்த்துக்கள்//
என் பார்வை கிடக்கட்டும். உங்க பார்வை என்னங்க மேடம்? இதுல க்ளீன் எங்கே வந்துச்சு?
மியாமி ,60 வயதுக்கு மேலேயும் அங்கே வர்ற காரணமே ஓய்வுதான். அதனாலதானே அங்கே அநேகம் settle ஆக (60 வயதுக்கு மேல) நினைக்கிறாங்க? காரணம், அந்த வயசுலதான் ஓய்வு எடுக்க முடியும். இது என்னோட பார்வை? உங்க பார்வை எப்படிங்க மேடம் இப்போ இருக்கு? இது யார் கண்ணியத்தைப் பத்தி பேசுறது. என்னுடைய பின்னூட்டம் ஓய்வு, வயசு பற்றி மட்டுமே இருந்தது. உங்களுடைய பின்னூட்டத்துல அப்படியா இருந்துச்சு.

//குறுகிய வட்டத்தை போட்டு விட்டு//
இதுல குறுகிய மனப்பான்மை யாருக்கு? எனக்கா?

இந்தப் பின்னூட்டம் பிரசுரிக்கப் பட வேண்டும்

TBCD said...

உச் !

DR.K.S.BALASUBRAMANIAN said...

''''பிடித்த மூன்று உணவு வகைகள் :

1. நடப்பன ......
2. பறப்பன .....
3. நீந்துவன ...... ''''

அப்போ பறப்பன போடுறது (முட்டை)!!!!!!!!

KParthasarathi said...

எதை சொல்வது,எதை சொல்லாமல் இருப்பது.இதுவே ஒரு இம்சை தான்.அபாரமா துளிக்கூட சுவை குன்றாமல் எழுதுவது உங்களுக்கு கை வந்த கலை. ஒன்றே ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். 2016 ல் நீங்கள் ஆசைப்படுவது நடந்து விட்டால் நான் எங்கிருந்தாலும் பெருமிதப்படுவேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

2016 இல் தமிழக முதல்வராக விரும்பும் தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ
புதிய கட்சி
’மூ.பொ.போ.மு.க.’ உதயம்”
http://gopu1949.blogspot.com/2011/03/8.html
கதையின் கடைசி வரிகள் ஞாபகம் வந்தன.

ப.கந்தசாமி said...

நானும் ஒரு ஆஜர் போட்டுக்கொள்கிறேன்.

மாய உலகம் said...

உங்களுக்கு சிலை வைக்க போகிறோம்

வேலன். said...

2016 ல் நீங்கள் முதலமைச்சர் ஆகும்போது உங்கள் கட்சிக்கு நான்தான் கொள்கைபரப்பு செயலாளர்.இப்பவே ரிசர்வ் பண்ணிவிட்டேன்.என்னை மறந்துவிடாதீர்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

தாராபுரத்தான் said...

வழக்கம் போலவே..

Philosophy Prabhakaran said...

100

நிரூபன் said...

தித்திக்கும் தீந் தமிழில், முத்தான மூன்று பகுதிகளாக உங்கள் மன உணர்வினை வெவ்வேறு தலைப்பின் கீழ் அழகாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
அருமையான தொகுப்பு

அம்பாளடியாள் said...

அட அட அட நம்ம ஆளு தளத்தில இத்தன நாளாபின்தொடர்ரத இணைக்காமலா இருதேனு.அசட்டு
முண்டம் மன்னிச்சுக்கோங்கோம்மா...
முத்துகள் மூன்று
அசத்தல் இன்னும் தொடருங்க.ஏற்கனவே நானும் மாட்டிக்கிடே
முளிக்குறேனு.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

! சிவகுமார் ! said...

आपका पोस्ट बहुत अच्छा है चित्रा सिस्टर.

! சிவகுமார் ! said...

आपका पोस्ट बहुत अच्छा है चित्रा सिस्टर.

! சிவகுமார் ! said...

आपका पोस्ट बहुत अच्छा है चित्रा सिस्टर.

பாலா said...

/'இது இல்லாம வாழமுடியாது' என்ற மூன்று விஷயங்கள்: /

ரசித்தது :))

M.R said...

முத்தான மூன்றை யதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள்.நன்றி

மாலதி said...

3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?)//ஆகா..........உங்களுக்கும் அரசியல் நெடி அடிசிடுசோன்னு ஒரு பயம் வந்துருச்சி ஹிஹி!

NADESAN said...

சித்ரா அக்கா வந்தாலே ஒரே கலக்கல் தான்
சூப்பர் சூப்பர் சூப்பர்
வாழ்க வளமுடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

Thenammai Lakshmanan said...

ஆ.. ஆ.. ஒண்ணுமில்ல உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.. என் தங்கச்சீன்னு நிருபிச்சுட்டேடி.. சித்து..

Unknown said...

உங்க கமெண்ட்ஸ்கே ஒரு பேஜ் போடலாம் போலிருக்கே

கே. பி. ஜனா... said...

//. ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும். //
ரசித்த பதில்!

Dhiyana said...

வ‌ழக்க‌ம் போல் அனைத்து ப‌தில்க‌ளும் அருமை.

//3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன். //

வாழ்த்துக‌ள்

Sylar said...

nice post :P
+follow

Unknown said...

கருத்துரைக்கு மிக்க நன்றி தோழியே . இன்று தான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் .
மௌனக் கீதம்
மகேஷ் ..

இதழ் சுந்தர் said...

மனசுல இருக்கறத தெளிவா சொல்லிருக்கீங்க.... உங்க writing ஸ்டைல் சூப்பர்

ADHI VENKAT said...

எல்லா பதில்களுமே சூப்பராக இருந்தது.

Unknown said...

காலம் தாழ வந்தமைக்கு
வருந்துகிறேன்
மேலும் உங்களுக்கு வந்துள்ள
கருத்துரைகளைத் தாண்டி வரவும்
சற்று நேரமாயிற்று.
முத்துக்கள் நகைச் சுவை
சத்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

ஜெய்லானி said...

//1. தமிழ் பதிவுலகில், தொடர் பதிவு இம்சை இல்லாமல் இருக்க விரும்புகிறேன். //

அரை மணி நேரமா சிரிச்சிகிட்டு இருக்கேன் ஹா..ஹா..:-))))))

Jaleela Kamal said...

3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?)


சித்ரா நில்லுங்க நில்லுங்க ஏற்கன்வே அமெரிக்காவுல உள்ள எல்லா மூல முடுக்கிலும் போய் பிரசாரம் பண்ணீங்க

அடுத்து இப்ப ஊரிலும் , பதிவுலகிலும் பெரிய படைய திறட்டிட்டீஙக் இன்னும் நாளு வருஷட்துல ..
கண்டிப்பா நில்லுங்க அடுத்த முதலமைசர் நீங்க தான்


வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

இந்த முன்று முடிச்சி தேர்வு நல்ல படிச்சி புதுசு புதுசா பதில் அதிரடியா கண்டு பிடிச்சி முதல் மதிப்பெண் வாங்கிட்டீங்க போங்க

Jaleela Kamal said...

//3. நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்//


பிரீஜரில் போட்டு வைத்து கொள்ளுங்கள்
அடுதத முறை ஊர் போகும் வரை வைத்து கொள்ளலாம்
ஹி

Jaleela Kamal said...

//2. கருணாநிதி ஐயாவின் நான்காவது திருமண செய்தியும் அதன் மூலம் மேலும் வாரிசுகளும் வந்து மிரட்டுவார்களோ என்று பயப்படுகிறேன். //

நெஜமாவா சித்ரா

கோவை நேரம் said...

முத்துக்கள் மூன்று

ChitraKrishna said...

சுவாரஸ்யமான வலைபூ... தொடர்ந்து வாசிக்க முயற்சிக்கிறேன்.

Unknown said...

//3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?) //

சும்மா நச்சுனு இருக்குல கலக்கிடீங்க

raji said...

:-))))

மாதேவி said...

கலக்கல்.

priyamudanprabu said...

3. 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன்.
(எத்தனை வருடங்கள் தான் சினிமா உலகம் மட்டுமே அப்படி ஆசைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? பதிவுலகமும் ஆசைப்பட்டால் என்ன தப்பு?)
\///

:)

priyamudanprabu said...

1. சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ்.
///

me tooo

priyamudanprabu said...

பயப்படும் மூன்று விஷயங்கள் :

1. அடுத்த தீவிரவாத ஒழிப்பு சீக்ரட் மிஷனுக்கு , ஒபாமா என்னை அழைத்து விடுவாரோ என்று பயப்படுகிறேன்.

2. கருணாநிதி ஐயாவின் நான்காவது திருமண செய்தியும் அதன் மூலம் மேலும் வாரிசுகளும் வந்து மிரட்டுவார்களோ என்று பயப்படுகிறேன்.

3. நெல்லையில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள், அடுத்த வாரமே காலியாகி விடுமோ என்று பயப்படுகிறேன்.
///


mmmm :)

priyamudanprabu said...

2. ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும்.
///

ha ha ha

priyamudanprabu said...

பிடித்த மூன்று படங்கள்:

1. ரஜினிகாந்த் படம்.

2. சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.

3. ஸ்டைல் மன்னன் ரஜினி படம்.
,..////

sorry..........

rajamelaiyur said...

கலக்கிட்டிங்க போங்க

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர்.

//
இதை தொடரா பதிவாக மாற்றும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. //

இப்படி சொல்லிட்டா எப்படி. இன்னொன்னு ஆரம்பிப்போமே :)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சித்ரா,

அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக நன்றி சகோ.சித்ரா.

இந்த 'இம்சை(?)யும்' நன்றாக ரசிக்கும் படி உள்ளது.

RAMA RAVI (RAMVI) said...

தொடர் இம்சை.. கலக்கிடீங்க...உங்களுக்கு கிடைத்துள்ள பின்னூட்டங்களை படிக்கவே எனக்கு 1/2 மணி நேரம் ஆச்சு.
// 2016 இல் தமிழக முதலமைச்சராக விரும்புகிறேன். //
எங்க ஆதரவு எப்பவுமே உங்களுக்கு உண்டு சித்ரா.

ரிஷபன் said...

பச்சை வெற்றிலை, வெள்ளை சுண்ணாம்பு, பிரவுன் பாக்கு போட்டால் - எப்படி நாக்கு சிவப்பாக மாறுகிறது?

யோசிக்க வேண்டிய விஷயம்தான்..

ஷங்கரின் அடுத்த படத்துக்கு, ஹீரோயின் ஆக நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு, "சாரி, ஷாங்கர், நான் இப்போ தமிழ் பதிவுலகில் பின்னூட்டம் - வோட்டு - பதிவு போடுவதில் ரொம்ப பிஸி . தப்பா நினைச்சிக்காதீங்க. நீங்க கேட்கிற மாதிரி மாதக்கணக்கில் நேரம் ஒதுக்க முடியாது," என்று சொல்லி மறுத்து விட வேண்டும்.

ப்ளீஸ்.. உங்க முடிவை மாத்திக்குங்க.. அதற்காக 3 பதிவர்கள் 3 நிமிஷம் உண்ணாவிரதம் இருக்கோம்..

Angel said...

/சென்னை விமான நிலையத்தின் கேவலமான சர்வீஸ்//
(same pinch ,same frustrating experience )எனக்கு அவ்வளவு கோபம் சித்ரா .
ஒரு பத்து பேப்பராவது எழுதி கம்ப்ளைன்ட் பெட்டியில் போட்டிருப்பேன் .
பயணம் என்பது இனிமையாக துவங்க/முடிய வேண்டும் .இவ்ளோ கேவலமாகவா பராமரிப்பார்கள் .

Unknown said...

நான் ரசித்து படித்த பதிவு.

Unknown said...

நான் ரசித்து படித்த பதிவு

Unknown said...

:)

Vruksha Financial Planners said...

பதிவுகள் அருமை சித்ரா ஜி,

எனது வலையில்,
தங்கம் மற்றும் வெள்ளி, பண்டக சந்தை தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள எனது இடுகைகளை பார்க்கவும். நன்றி