இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த ஒரு அவசர பதிவு.
இதை காமெடியா எழுதி, எப்படி சிரிக்கிறது? மத்தவங்க நம்ம பார்த்து சிரிக்காம இருக்கணுமே ..... மனசு கேட்கலைப்பா.....
இதை காமெடியா எழுதி, எப்படி சிரிக்கிறது? மத்தவங்க நம்ம பார்த்து சிரிக்காம இருக்கணுமே ..... மனசு கேட்கலைப்பா.....
சென்ற வாரம் மட்டும், மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம், இந்திய வெளிநாட்டினரின் பார்வையில் வேறு விதமாக பார்க்கப்பட்டு வந்து இருக்கிறது.
ஒரு பக்கம், உக்ரனியன் ( Ukranian) பெண்கள் , இந்தியாவுக்கு எதிராக போர் கொடி - நிஜமாகவே தேசிய கொடியை - தூக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவுக்கு முதல் முறையாக வந்த அமெரிக்க டிவியில் முத்திரை பதித்துள்ள பெண்மணி - பெரும்புள்ளி - ஓப்ரா - Oprah Winfrey - இந்திய வருகையின் போது, சில விஷயங்களில் கடுப்பாகி அதுவே, இந்தியாவுக்கு முதலும் இறுதியுமான வருகை என்று சொல்லி இருக்காங்க.
அப்புறம் , நோர்வே நாட்டில் இருந்து கொண்டு, இந்திய முறைப்படி குழந்தை வளர்ப்பில் ஈடுபட்ட இந்திய தம்பதியினரிடம் இருந்து அவர்களது இரண்டு குழந்தைகளையும் , நோர்வே அரசாங்கமே வாங்கி வேறு குடும்பத்தினரிடம் வளர்க்க சொல்லி விட்டது. இப்பொழுது, இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் , குழந்தைகளை அதன் பாட்டி தாத்தாவிடம் ஒப்படைக்க சொல்லி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது வரை, இந்தியாவின் கலாச்சாரத்தை ... இல்லை, இல்லை, தமிழ்நாட்டு கலாச்சாரத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து கொண்டு மற்ற நாடுகளை - அவர்களின் பழக்க வழக்கங்களை - எண்ணங்களை - சுதந்தரத்தை - கலாச்சாரத்தை குறை கூறி கேட்டதுண்டு.
ஆனால், சென்ற வாரம் தான், பல வெளிநாட்டினர் , இந்தியாவின் கலாச்சாரத்தை - மக்களின் நடவடிக்கைகளை - பின் தங்கி இருக்கும் சில பழக்க வழக்கங்களை - அலசி ஆராய்ந்து பேசியதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், செய்திதாட்களிலும் ஆங்கில பதிவுகளிலும் முதன் முறையாக பார்த்தேன்.
அவற்றில் குறிப்பாக, வெளிநாட்டினரால் எழுப்பப்பட்ட கேள்விகளை , இங்கே தொகுத்து தந்து இருக்கிறேன்.
வெளிநாட்டினரும் மதித்து வந்த இந்தியாவின் பாரம்பரியம், திடீர் என்று வில்லங்கத்தனமாக பார்க்கப்படுவது ஏன்? இது வரை இருந்து வந்த புரிதலை தவறாக, இந்தியர்களே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால் தானா?
இந்தியர்கள், இந்திய நாட்டில் கூட சரியாக கடைப்பிடிக்காத பழக்க வழக்கங்களை, வெளிநாட்டில் வந்ததும் கடைப்பிடிப்பதன் காரணம் என்ன?
David Hawks என்பவர் எழுப்பிய கேள்வியில், இந்தியர்கள் Developed countries வந்த பின்னும் Developing countries உள்ளது போலவே உள்ள அணுகுமுறையில் , தங்களை மாற்றி கொள்ளாமல் இருப்பது எதனால்?
பெரும்பாலான இந்தியர்கள், "the glass is half full" - என்ற மனப்போக்குடன் இந்தியாவையும் - " the glass is half empty" - என்ற மனப்போக்குடன் வெளிநாட்டினரையும் மதிப்பிடுவது எதற்கு?
இந்தியர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு என்று ஒரு இந்தியாவை அங்கே உருவாக்கிக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர, இருக்கும் நாட்டின் நல்ல கருத்துக்களை - பண்புகளை - ஏற்று கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்?
"ஊரோடு ஒத்து வாழ்" என்ற முறையை இந்தியாவில் கடைப்பிடித்தாலும், அதையே வெளிநாட்டில் வரும் போது அங்கே உள்ள விதிமுறைகளை, குறிப்பாக , அரசாங்க விதி முறைகளை தெரிந்து கொள்ள - புரிந்து கொள்ள - எந்த வித முயற்சியும் எடுக்காமல், கிணற்றுத் தவளைகள் ஆகவே இருப்பதன் காரணம் என்ன?
பரந்த மனப்பான்மையுடன் இல்லாமல், ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தங்களை வைத்துக் கொள்வதேன்?
இந்தியர்களுக்கு தங்கள் நாடு பெருமையானது என்பது போல், மற்றவர்களும் தங்கள் நாட்டை பெருமையாக நினைப்பார்கள் என்பதை மறந்து, அவர்களை கேலி பேசுவதேன்?
பெரும்பாலான இந்தியர்கள், hypocrites (இதற்கு தமிழ் வார்த்தை தேடினால், ஆசாரகள்ளன் என்று ஆங்கில - தமிழ் அகராதி காட்டுகிறது) ஆகவே இருக்க வேண்டிய அவசியம் ஏன்?
இப்படியாக நிறைய விவாதித்துக் கொண்டே போனாங்க....
திருவிளையாடல் நக்கீரன் மாதிரி ஒரே பீலிங்க்ஸ்சு ஆஃப் இந்தியாவா ஆயிடுச்சு.... ..... இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில், யாராவது குறைவாக குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்..... ஃபீல் பண்ண போற அடுத்த ஆள், நீங்க தான்னு தெரியும்..... அதான் உங்க காதுல விஷயத்தை போட்டு விட்டேன்.