Sunday, November 1, 2009

இட்லிக்கு அஞ்சலி

சென்னையில் இருந்து ஒரு செய்தி:

வாசிப்பவர்: Mrs. அலட்டி பந்தாகிருஷ்ணன்.

வாசித்த இடம்: மால்குடி உணவகம் in Hotel Savera,  சென்னை.

பல upper middle class வீடுகளில் இட்லி என்ற சிற்றுண்டி இனம் அழிந்துவிட்டது. அதை காப்பாற்றும் முயற்சியாக ரத்தம் ஏற்றுவது போல இட்லியுடன் red food coloring chemical கொஞ்சம் சேர்த்து இட்லியின் தன்மையான தென்னிந்திய ருசியை எடுத்து விட்டு சைனீஸ் டிஷ்ஷாக சில்லி இட்லி என்று plastic surgery செய்தும் பயன் இல்லை.
இன்றைய இளைய தலைமுறைக்கு pizza மற்றும் burger, breakfast ஆக கூட  சாப்பிடும் அளவுக்கு இருக்கும் ஆசை இட்லி சாப்பிடுவதில் காட்டாததால் என் (அலட்டி)  வீடு உட்பட பல வீடுகளில் இட்லிக்கு மங்களம் பாடப் பட்டு விட்டது.
15 வயது அமர்க்களா, நுனி நாக்கு டமிலுலும் stylish Englishilum சொல்லியதாவது: "You know, idlies were never popular among younger generation. oh, no. அத எப்டிதான்  சாப்பிட்டன்களோ? idlies are DEAD. you know, it is simply dead and gone."  இத்துடன் இன்றைய காலை உணவு செய்திகள் முடிவடைந்தது.

WHOA!  WHAT DID SHE JUST SAY?
ஆமாங்க, BELIEVE IT OR NOT, இது நிஜமாவே எங்கள் தமிழ்  நண்பர் ஒருவரின்  மனைவியும் அவர் மகளும் சொல்லியவை. அமெரிக்காவில் இருந்து வந்த பட்டிக்காடு, தன்  மகளுக்கு இட்லி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது சொல்லப்பட்ட இந்த செய்தி அதிர்ச்சியை தந்தது.
சென்னையில் சில வீடுகளில் இட்லி இறந்த (or கொல்லப்பட்ட) செய்தியை கேட்டு மனம் வருந்துகிறேன். இன்று இட்லிக்கு அஞ்சலி செய்யும் விதமாக நீண்ட வெட்டி பேச்சை சுருக்கியிருக்கிறேன்.  கட்டி தேங்காய் சட்னி,  சூடான சாம்பார், நேத்து வச்ச மீன் குழம்பு எல்லாம் வேறு துணை  தேட வேண்டிய நேரமிது...........இட்லி பொடி பெயரையே மாற்ற நேரிட அநாதையானது.........நல்லவேளை, தமிழ்நாட்டில் இன்னும் சில பழங்குடியினர் வாழ்ந்து வருவதால், அவர்கள் வீட்டில் இட்லி தஞ்சம் புகுந்து இன்னும் அழிந்து போகாமல்  உள்ளது.

15 comments:

goma said...

just have look at this link.A mega story on IDLI is served with spicy chutny and sambar

http://haasya-rasam.blogspot.com/2007/11/blog-post_14.html

Chitra said...

Goma madam, arumaiyaai eludhi irukkeenga. nalla dhamaash! idliyin arumai perumai therindhavargal naam. Londonaa irundhaal enna, americavaa irundhaa enna chennaiyaa irundhaa enna? adhu puriyaama, silar pannra alattal kooththai thaanga mudiyalai......adhaathaan naan solli irundhen.

Chitra said...

unga blogil idli anubavam ovvoru paagamum nalla sirippu.

Alarmel Mangai said...

ithenna idlikku vantha sothanai :(((((((

Chitra said...

Ammu, indha maadhiri pesaradhu stylenu sila peru ninaichikkuraanga.....

தமயந்தி said...

அட‌ க‌ட‌வுளே! இட்லிக்குமா ஆப்பு வ‌ச்சிட்டாங்க‌?

Chitra said...

Dhamayanthi, our friend's wife appadi snnappo, enakku eppadi react pannannu theriyaama naan mulichEn paaru..........

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

கவலைப் படாதீங்க சித்ரா. ஒருசில வீடுகளில் இருக்கலாம் அப்படி. எனக்குத் தெரிந்தவரை இன்னும் இட்லி விரும்பப்படும் காலை உணவாகவே இருந்து வருகிறது. [நான் வீட்டில்தான் அரைத்துக் கொள்வேன்:)!] இங்கே பெங்களூரில் சூப்பர் மார்க்கெட்களில் ஹாட் சேல் ரெடிமேட் இட்லி பாட்டர்தான். இந்த ஒரு சாட்சி போதாதா:)?

பிஸ்ஸா பர்கர் ஒன்ஸ் இன் எ வொய்ல் ஓக்கே. இட்லிதான் வெகுநேரம் பசிதாங்கும் என்ப் புரிந்து கொண்டிருக்கிறது இளைய தலைமுறையும்:)!

இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறதா:))?

Chitra said...

nanri, Ramalakshmi akka. ivangellam unmaiyaa pesuthunnu ninaikkireenga. ippadi pesaradhu stylenu solli alattal pannudhunga. yaar kandaa? annaikku kaalaiyil avanga veettilum idli irundhaalum irundhirukkum. ha,ha,ha.....

ராமலக்ஷ்மி said...

//annaikku kaalaiyil avanga veettilum idli irundhaalum irundhirukkum.//

இருந்திருக்கும்:))!

Sakthi said...

funny

Chitra said...

Thank you, Sakthi.

Vijiskitchencreations said...

Hi Chithra.
I just saw your link one of my friends blog.
It's intersting your blog. Just now some of them
I read. I will come again. Until then.

பாலா said...

//இன்று இட்லிக்கு அஞ்சலி செய்யும் விதமாக நீண்ட வெட்டி பேச்சை சுருக்கியிருக்கிறேன்.//
இட்லி செத்து போச்சுனே முடிவு பண்ணிடீங்களா??? So Sad !!
இன்றைய young அஞ்சலிகளுக்கு இட்லி செய்வது எப்படின்னு சொல்லி குடுங்க... :)))))
வாழ்க இட்லி ! வளர்க பொடி !