சில சமயம் யாராவது சில கேள்விகள் கேட்கும்போதோ பதில் சொல்லும்போதோ, "எப்படி, இவங்களால மட்டும், எப்படி?" என்று உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா?
எனக்கு 9th and 10th classes க்கு science teacher ஆக Mrs.மேரி கமலம் என்பவர் இருந்தார். அடிக்கடி மாணவிகளிடம் கேள்வி கேட்கும் வழக்கம் உள்ளவர். அவர் கேள்வி கேட்கும்போதே நான் நெருப்பு கோழி மாதிரி தலையை எதிலாவது புதைத்து கொள்ள வகை தேடுவேன். அவர் கண்களை பாக்க நேர்ந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல அந்த மாணவி தான் எழும்ப வேண்டும். எழும்பியவள் சரியான பதிலை சொல்ல தவறினால், கண்டித்துவிட்டு உட்கார சொல்லும்போது எப்பொழுதும், "sit down, don't show your stupidity in the class" ("உட்கார். உன் முட்டாள்தனத்தை வகுப்பில் காட்டதே") என்பார். அந்த டீச்சரின் punch dialogue ஆக நாங்கள் அதை கருதி நாங்களும் சில சமயம் தோழிகள் நடுவில் விளையாட்டாக சொல்லி சிரிப்போம்.
ஆனால் இன்றும் நான் சொல்ல வேண்டியது வரும் என்று நினைக்கவில்லை. சிலரின் கேள்விகள் அல்லது பதில்களை கேட்கும்போது என்னை அறியாமல் மனம், Mrs.மேரி கமலம் டீச்சரின் வசனத்தை copyright பற்றி கவலை படாது சொல்லி பார்த்து கொள்கிறது. "Sit down, don't show your stupidity." (உட்கார். உன் முட்டாள்தனத்தை காட்டாதே")
சித்ரா (மதுரையில்): என்ன ரோடு ரொம்ப மோசமா இருக்கு? ஆட்டோ போகும்போது ரொம்ப குலுங்கி கஷ்டமா இருக்கு.
அறிவு ஜீவி: என்ன பண்றதுங்க? மூணு மாசம் முந்திதான் ரோடு போட்டான். கவெர்மெண்டு நல்லது செஞ்சாலும் இந்த மழைக்கு பொறுக்கலை. விடாம பெஞ்சு குண்டும் குழியுமா ஆகி விட்டது.
(hello, அறிவு கொழுந்தே, வெயில் மழை எல்லாம் தாங்கிற மாதிரி போடறதுக்கு பேருதான் ரோடு. இவன் போட்ட ரோடு லச்சணத்தை பத்தி பேசாம........ இதுக்குன்னு மழை பெய்யும் போதெல்லாம் ரோடுக்கு குடையா பிடிக்க முடியும்?)
சாத்தூரில் எங்கள் சொந்தக்கார பெண் ஒருவர் காலில் சூடான எண்ணை கொட்டி விட டாக்டரிடம் போய் treatment எடுத்துகொண்டார். எரிச்சல் வலி போக tablets உம் காயத்தில் போட ஒரு ointment உம் டாக்டர் கொடுத்து இருந்தார். ரெண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு அவரை வேறு விஷயமாக பார்க்க வந்த ஒரு பெண், காலில் இவரது காயத்தை பார்த்து விட்டு -
அறிவு ஜீவி: டாக்டர்ட்ட போனீங்களா?
சொந்தக்கார பெண்: ஆமாம், வலிக்கு மருந்தும் காயத்திற்கு தைலமும் தந்தார்.
அறிவு ஜீவி: ஊசி ஏதும் போட்டுக்கலையா?
சொந்தக்கார பெண்: வேண்டாம்னுட்டார்.
அறிவு ஜீவி: எங்க டாக்டர் கிட்ட போங்க. ஒரு ஊசி போட சொல்லுங்க. ஒரே ஊசிதான். உடனே சரியா போயிடும்.
(hello, அறிவு கொழுந்தே, MBBS MD எல்லாம் முடிச்சிட்டு ஒருத்தர் பல்லாங்குழி விளையாடவா போர்டு மாட்டிக்கிட்டு உக்கார்ந்திருக்கார். ஒரு மாய ஊசி போடுங்கனு இவரே treatment சொல்லி டாக்டர் செய்றதுக்கு அவர் ஏன் medical college போயிருந்து இருக்கணும்? இந்த பெண்ணிடம் ஒரு tuition class போயிருந்தாலே போதுமே.)
Texas இல் ஒரு Indian Students' Association orientation meeting போது: நீங்க உங்க இந்தியன் நண்பர்கள் மட்டும் இருக்கும் போது உங்க மொழியில பேசிக் கொள்ளலாம். ஆனால் department or class இல் மற்ற மாணவர்கள் மத்தியில் உங்க சொந்த மொழியில் உங்கள் இந்தியன் நண்பர்களுடன் பேசாமல் Englishil பேசுவது நல்ல பண்பு.
அறிவு ஜீவி: அவங்க மட்டும் அவங்க தாய் மொழியில் பேசும்போது நான் ஏன் என் தாய் மொழியில் பேசக் கூடாது.
(hello, அறிவு கொழுந்தே, பண்புக்கும் வீம்புக்கும் வித்தியாசம் தெரியாதவனே, உனக்கு ஆங்கிலம் தெரியலை என்றால் வேறு விவகாரம். Social ethics தெரியலைனா?)
சித்ரா: grocery store ல தான்.
அறிவு ஜீவி: இந்தியன் store ஆ அமெரிக்கன் store ஆ?
சித்ரா: well, American store தான். அங்கியே யாரு கிட்டேயாவது கேட்டா எங்கு இருக்குன்னு சொல்லி இருப்பாங்களே.
அறிவு ஜீவி: கேக்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆ இருந்தாங்க. இந்தியன்ஸ் ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
(hello, அறிவு கொழுந்தே, அவன் நாட்டில் வந்து உக்காந்துக்கிட்டு அவனையே foreigner ஆக்கிட்டீங்களே? ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின கதையா ....)
சென்னையில் ஒரு அறிவு ஜீவி: சித்ரா, உன் மகன் என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா? நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)
இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இவங்க இப்படி பேசறதுக்கு காரணம்:
Ignorance or Innocence or stupidity?
அறியாமையா? வெகுளித்தனமா? முட்டாள்தனமா?
24 comments:
மேரிக்கமலம் எனக்கும் ஆசிரியையாக இருந்திருக்கிறார்கள். நான் நெருப்புக் கோழியா நேராப் பார்க்கும் கோழியா என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்:))!
word verification-யை சீக்கிரமா நீக்கிடுங்க சித்ரா.
அடுத்த வாரம் சரி பண்ணிடுறேன். ஊருக்கு திரும்பி வந்த உடனே.....
//hello, அறிவு கொழுந்தே, அவன் நாட்டில் வந்து உக்காந்துக்கிட்டு அவனையே foreigner ஆக்கிட்டீங்களே? //
//அவன், அவனோட அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா? நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?//
ஹி ஹி....
நீங்க முதல்ல வெகுளியா?? இல்ல அறிவாளியா??
//word verification-யை சீக்கிரமா நீக்கிடுங்க சித்ரா.
//
repeat...
//அடுத்த வாரம் சரி பண்ணிடுறேன். ஊருக்கு திரும்பி வந்த உடனே.....
//
entha oorukku?? yaen ippa irukkura oorla remove panna mudiyathaa??
ராமலஷ்மிக்கு நன்றிநானும் இரண்டு முறை சொல்லிப் பார்த்து விட்டு விட்டேன்.அந்த நெருப்புக்கோழி தலையை குனிந்து கொண்டது.....
ஜெட்லி சார், ஹி, ஹி,ஹி, .....வெகுளியான அறிவாளின்னு வச்சுக்கலாமா?
Ramalakshmi madam and Goma madam, Couple of blogger friends received junk comments (like lottery winning and other randomly generated computer program matters). To prevent such things, I have the word verification. Since, I moderate comments now, I think I can remove it now. I will do so soon.
illa sir, travelling ..... valiyila quickaa check pannen. chciago reach pannavudane.....
makkale, remove pannitten..............
hey chitra..marykamalam miss used to call me scientistda..naadu oru scientistai ezanthuruchu..
aamaa..gomaakaa,ramalakshmikaa,,,enga en blog pakkam kaanave kaanom
She is a legend............... Mrs.Mary Kamalam........... :-)
ஆஹா பின்னூட்ட பெட்டியின்’ கோட்டைக் கதவு’ அனைவருக்கும் திறந்து விடப்பட்டு விட்டது.
aamaa..gomaakaa,ramalakshmikaa,,,enga en blog pakkam kaanave kaanom
ஆமா ராமலஷ்மி
நம்ம வீட்டுக்கு தமாக்கா எத்தனை வாட்டி வந்திருப்பாங்க...பார்த்துச் சொல்லும்மா
goma said...
//நம்ம வீட்டுக்கு தமாக்கா எத்தனை வாட்டி வந்திருப்பாங்க...பார்த்துச் சொல்லும்மா//
அதைப் பற்றியெல்லாமும் கவலைப் படாம தாமிரபரணிக் கரையோரக் கதைகள் வரும்போதெல்லாம் குதித்து குதித்துப் போய் சந்தோஷமா கமெண்டுறோமே:)? உண்டா இல்லையா தமயந்தி:)?
CHITHTHU.....DAEI....
modhalla my comments on the SKIN or the TECHNICAL IMPROVISATIONS you can make...
The eastman colours used are sometimes subduing the essence of the context
can well try to change the colours according to the person whospeaks...
example-சித்ரா: grocery store ல தான்.
அறிவு ஜீவி: இந்தியன் store ஆ அமெரிக்கன் store ஆ?
சித்ரா: well, American store தான். அங்கியே யாரு கிட்டேயாவது கேட்டா எங்கு இருக்குன்னு சொல்லி இருப்பாங்களே.///- in this try to use a diffy colour of font forஅறிவு ஜீவி and a diffy one for சித்ரா...
alternate the colours for the speakers and a different one-mayb for ur personal comments..
SEE the mess it tries to make though the content is of excellence..the whole lot tries to become a mass.
my recommended pattern can bring a visual clarity..otherwise the names can alone be in colour to single them out....give a try.. i personally feel that ur earlier ones in black were more splendid in revealing what they want to reveal..
INGU ALAYUM colourHALAI DHAYAVU SENJU KONJAM FORMAT PANNU-
WONT CALL IT AS A MERE suggestion but its a COMMAND 4m me...ROCK RAE..
நன்றி, தமிழினி. நான் நிச்சயமா முயற்சி பண்றேன். நான் இன்னும் கத்துக்குட்டி, bloggingla. எல்லா கருத்துக்களும் அறிவுரைகளும் உதவிகளும் வரவேற்க படுகின்றன. நீ அதில் எப்போதுமே தனிதான், தமிழினி. நான், உனக்கும் , அம்முவுக்கும், சாலமனுக்கும் தமயந்திக்கும் ஜெட்லி சார் உக்கும் ரொம்ப நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்.
I am always very thankful to Ramalakshmi madam and Goma madam, who read my blogs regularly and give comments to encourage me.
சித்ரா,
மேரி கமலம் மிஸ் - மறக்க
முடியுமா அவங்களை? கான்வென்டில் அப்பப்போ சில பயங்கரவாதிகளும் ஆசிரியைகளாக வருவதுண்டு. இப்போ யோசிக்கும் போது அவங்க
கண்ணை சந்தித்து விட்டால் மட்டுமே எழுப்பியதால் அவங்க அவ்வளவு பயங்கரவாதி இல்லை என்றும் தோணுது. கண்களைச் சந்திக்காமல் விளையாட்டுக் காட்டும்
மாணவிகளை எழுப்பி கிண்டல் செய்யும் ஆசிரியைதான் (உதாரணம் ஏசுவடியாள்) நிஜமான
பயங்கரவாதியா
இப்போ தோணுது.. ஆனால் ஏசுவடியாள் மிஸ்ஸுக்கு சில மாணவிகள் மத்தியில் நல்ல பேர். காலம் எப்படி பயங்கரவாதிகளை மிதவாதியாகவும், மிதவாதிகளை பயங்கரவாதியாகவும் காட்டுது பார்த்தீங்களா?
அம்மு
Hello Chtra,
Mary Kamalam Miss..... Thanks chitra for remembering those days. Santhoshama irunthathu.
Soma. (via e-mail)
//அறிவு ஜீவி: கேக்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆ இருந்தாங்க. இந்தியன்ஸ் ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
(hello, அறிவு கொழுந்தே, அவன் நாட்டில் வந்து உக்காந்துக்கிட்டு அவனையே foreigner ஆக்கிட்டீங்களே? ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின கதையா ....)//
உண்மையிலேயே வாயைதொறந்து நல்லா சிரிச்சுக்கிட்டேன்...
//அறியாமையா? வெகுளித்தனமா? முட்டாள்தனமா? //
தனியா தனியா ஏன் சொல்றீங்க... இந்த மூணும்தான் இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேட்கவைக்குது... ஒண்ணும் பண்ண முடியாது.
ஐயோ , ஐயோ ...... ஒண்ணும் பண்ண முடியாது. நான் போய் முட்டிக்க வேண்டியதுதான்.....
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு //அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா? நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)//புவஹா ஹாஹா
சித்ரா நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நல்ல நகைச்சுவையுடன் கலக்கி இருக்கீங்க, நல்ல சிரிச்சாச்சு. சில பேருக்கு தான் வாழ்க்கைச்சம்பவங்களை நகைச்சுவையோடு அள்ளி வழங்க முடியும், இன்னும் உங்கள் எல்லா பதிவையும் படிக்கல நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.
ரொம்ப நன்றி, ஜலீலா அக்கா. என்னை ரொம்ப புகழ்ந்தா வெக்கம் வருது. ஹி,ஹி,ஹி,......
தொடர்ந்து படிங்க. ஆதரவு கொடுங்க.
Post a Comment