Saturday, November 14, 2009

revolver rita தான் என் சகோதரியா?



துணிவு, தைரியம், மன பலம் என்கிறோமே அந்த ஆயுதங்கள்,  சிலரிடம் இருக்கும்வரை அவர்களை பொல்லாதவர்கள் ஆக்குகின்றன.  அவர்களை  எதிர்ப்பவனி (ளி) டம் இருந்தால், எதிர்ப்பவனை (ளை)  வல்லவன் (ள்) ஆக்குகின்றன.  இந்த வாழ்க்கை தத்துவம் 10876 ஐ என் சகோதரி, மூலமாக அறிந்து கொண்டேன். 

அவளுடன் சென்ற பஸ் பயணங்களை மறக்க முடியாது. ஒரு முறை,  மிகவும் நெரிசலான கூட்டமுள்ள பஸ் ஒன்றில் போக நேர்ந்தது. இடி மன்னர்களின் சொர்க்க பூமியாக பஸ் மாறியிருந்தது. என்னை மாதிரி சில  பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்து கொண்டு, எப்பொழுதடா நாம் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் என்று காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியாது நின்று கொண்டு பயணித்தோம். ரொம்பவும் அநியாயத்திற்கு ஒருவன், எங்களிடமும் எங்கள் அருகில் இருந்த மற்ற பெண்களிடமும் தன் லீலைகளை தொடர்ந்து கொண்டிருந்தான். 
ரிவால்வர் ரீட்டா, சத்தமாக: "ஏன் இவ்வளவு கஷ்டப் படுறீங்க? நாங்க அந்த டிரைவர் அண்ணாச்சி பக்கம் உள்ள இடத்தில் வரிசையாக நின்று கொள்கிறோம். நீங்க ஆசை தீர, மொத்தமாக  இடிச்சுட்டு  போய்டீங்கன்னா, மீதி தூரமாவது  நாங்க நிம்மதியாய் இருப்போம்" என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டார்கள். டிரைவர் அண்ணாச்சியும் தனக்கு கொடுக்கப்பட்ட புது பொறுப்பில் உச்சி குளிர்ந்து, பெண்களை காப்பற்ற வந்த ஹீரோவாய்,  அந்த இடிராசாவை திட்ட,  அவமானத்தில் தலை குனிந்தவன் அடுத்த நிறுத்தத்தில் முதல் ஆளாய் இறங்கி காணாமல் போனான்.

மற்றொரு முறை, இரவு பயணத்தில், பின் சீட்டுக்காரன்,  அந்த  பஸ்ஸில் போடப்பட்ட குப்பை படத்தின் கனவு கன்னியை நினைத்து கொண்டோ என்னவோ,   எங்கள் இடுப்புகளில் கிடார் வாசித்துக்  கொண்டு இருந்தான். ரிவால்வர் ரீட்டா, தன்  கையில் இருந்த safety pinனை நேராக வளைத்து அவன் கையில் ஆழமாக குத்தி அழுத்தமாக கோடு கிழித்தாள். தூண்டிலில் மாட்டி கொண்ட மீனை போல், இவன் கை, இவள் pin தூண்டிலில் மாட்டி கொண்டது. கையை சட்டென்று எடுக்கவும் முடியவில்லை. ரத்தமும் கொட்ட ஆரம்பித்தாலும், படு பாவிக்கு கத்த முடியாத சூழ்நிலை. இவள் பின்னை எடுத்த பிறகு, கையை தன் அருகில் இழுத்து கொண்டவன், தேள் கொட்டிய திருடனாக இருக்க, நாங்கள் நிம்மதியாக பயணித்தோம். காலையில் அவள் காட்டிய பின்னை வெளிச்சத்தில் பார்த்தோம், அப்படி ஒரு துரு பிடித்த பழைய  பின். ரொம்ப கூலாக, "பின்ன இவனுக்காக நான் கடையில் இருந்து புது பின்னா வாங்கி வர முடியும்?" என்றாள். அதில் இருந்த துருவுக்கு, அவன் tetanus injection, உடனே எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இதை படிக்க நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டான். 

இரண்டு வருடங்களுக்கு முன் கூட இவள் என்னை ஆச்சரியப் படுத்துவதை நிறுத்தவில்லை.  இன்சூரன்ஸ் agent ஆகவும் இருந்த ஸ்கூல் ஆட்டோ டிரைவர், இவள் கொடுத்த இரண்டு மாத premium amount ஐ ஒழுங்காக கட்டாமல் தானே வைத்து கொண்டு, இவள் receipt கேட்கும் போதெல்லாம் வெவ்வேறு காரணங்கள் சொல்லி இழுத்து அடித்தான்.  இவள் கணவரும் திடீரென வேறு ஊருக்கு மாற்றலாகி  போய்விட,  அவன் கேட்க ஆளில்லை என்று தெனாவெட்டாக பதில் சொல்ல ஆரம்பித்தான். இவள் வேறு ஆட்டோவில் ஏறி இன்சூரன்ஸ் ஆபீஸ் போய் விவரம் அறிந்தாள். வந்த ஆட்டோக்காரனிடம் அவன் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஏதோ காரணம் சொல்லி, பணத்தை ஏமாற்றிய அட்டோக்காரனின் வீட்டுக்கு தனியாக சென்று விட்டாள். இவள் போன நேரம், அவனின் மனைவி மட்டும் இருக்க, அவளிடம்: " போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன் பண்ணிட்டு தான் வரேன். அவங்க உடனே arrest பண்ண வறேன்னாங்க. நாந்தான் ஒரு முறை நேரில் கேட்டு பாத்துட்டு சொல்றேன்னு வந்திருக்கேன். அவன் வீட்டில் இல்லையா? நாளை மாலைக்குள் அவன் பணத்தை என்னிடம் கொடுத்து விட்டால், நான் போலீசில் கொடுத்த complain ஐ வாபஸ் வாங்கிக்கறேன்" என்று பீலா விட்டு இருக்கிறாள். பயந்து போன மனைவி, கணவன் வந்ததும் அனுப்பி வைப்பதாக சொல்லிய பின்தான் ரிவால்வர் ரீட்டா வந்திருக்கிறாள். 

மறு நாள் மாலை, வந்த ஆட்டோ டிரைவர், இவளிடம் பணத்தை இன்னும் ரெண்டு வாரத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் போலீஸ் complain அவள் உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்றும் சொன்னான். இவள் அவனிடம், " உன் பேச்சை நான் எப்படி நம்பறது? ரெண்டு வாரத்தில் அந்த அமௌன்டை எழுதி திருப்பி தரேன்னு நான் சொல்ற மாதிரி எழுதி கொடு. நாளைக்கே போய் வாபஸ் வாங்குறேன்" என்றாள். அப்போது தப்பிக்கும் விதமாக அவனும் இவள் சொல்லியபடி எழுதி கொடுத்து விட்டான். இரண்டு வாரமாக இவள் காத்திருக்க, அவன் ஆள் எஸ்கேப். இவள் இன்னொரு ஆட்டோ டிரைவர் மூலமாக, தான் மீண்டும் போலீஸ் போக போவதாக சொல்லி தகவல் அனுப்பி இருக்கிறாள். கடுப்பாகி போன டிரைவர் cum agent, மறு நாளே அவள் வீட்டுக்கு வந்து உதார் விட்டு இருக்கிறான். 

 ஆனாலும், கலவரப் படாமல், ரிவால்வர் ரீட்டா அமைதியாக, "அட முட்டாள் அண்ணே, முதலில் நான் சொன்னப்போ நீ யோசிக்கவில்லை. நான் உன்னிடம் கொடுத்த premium பணத்திற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது. இப்போ நீ எழுதி கொடுத்த பேப்பர் இருக்கிறது. அதை ஏற்கனவே ஒரு வக்கீல் கிட்ட பத்திரமாக கொடுத்து வச்சிருக்கேன். நீ ஏமாற்றினாலோ என்னை காயப் படுத்தினாலோ போலீசுக்கு evidence இருக்கும்" என்று அவுத்து விட்டு இருக்கிறாள். வாயடைத்து போனவன், மறு நாளே பணத்தை திருப்பி கொடுத்து விட்டான். செல்லும் முன், "சின்ன பொண்ணு, ஒண்ணும் தெரியாத பொண்ணுன்னு நினைச்சி ஏமாத்த பாத்தேன். நீ விவரமா என்னை மடக்கிட்டீயே!" என்றான். 

அத்தோட விட்டாளா? இல்லாத பானையில் மோரு என்ன வெண்ணையே எடுத்து காட்டுறேன் என்ற மாதிரி, அவன் எழுதி கொடுத்த தாளை வைத்து, அந்த இன்சூரன்ஸ் company இல் முறை படி action எடுக்க வைத்து அந்த ஆட்டோ டிரைவர் இன் agent அந்தஸ்த்தை cancel பண்ண வைத்து விட்டாள். 
சொல்லுங்க, இவளுக்கு நான் ரிவால்வர் ரீட்டா என்று பட்ட பெயர் வைத்தது சரிதானே?
பயந்து ஒடுங்கும் போது, வாழ்க்கை நம்மை அழ வைக்கிறது. துணிந்து எதிர்த்து நின்றாலோ, வாழ்க்கை நம்மை சிரிக்க வைக்கிறது.  (தத்துவம் # 10877)


4 comments:

அருண். இரா said...

அதிரடியா இருக்கு..
அதே சமயம் சந்தோஷமாவும் இருக்கு..சிறப்பான சகோதரி !!
உங்கள் எழுத்து லாவகம் நன்று !! இப்போ தான் பதிவுகள் பார்க்கிறேன்..நல்லா இருக்கு !

Chitra said...

நன்றி, அருண். பிரச்சினைகள் எல்லாருக்கும் பொதுதான். எந்த attitude உடன் பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
உதை வாங்குவதில் கூட: படங்களில் மன்சூர் அலி வாங்கினால், வில்லனை துவம்சம் செய்யும் serious matter.
வடிவேலு வாங்கினால், காமெடி.

தமிழினிமை... said...

Idhil konjam USUALaana NAYYAANDI NAKKAL...,KOYYAANDI KOKKAL..,Kammidhaan..mayb u thought tragedy ezhudhumpoedhu COMEDY edhukku???while in chennai i 2 had bitter experiences like this..A person called many of my friends daily in the night and talked in a vulgour way..oneday was my day(his question was the same to everyone-HOW MUCH DO YOU CHARGE FOR A NIGHT???)He asked the same question to me-i just gathered myself and said-"What your mother charged in the past and what ur wife,daughter and sister charge in the present"-this MOTHER CONCEPT has always secured me.Any CRIMINAL yields to it.they cannot bear their mother being talked about.AND THEN FINALLY OUR PHONES STOPPED RINGING...

தமிழினிமை... said...

VANAKKAM ARUN....