குயவன் கையில் களிமண்ணை போல கடவுள் கையில் நாம்.................
எங்கள் ஊரில் இருந்து ஒரு மணி நேரம் கார் பயண தொலைவில் இருக்கும் ஒரு தமிழ் நண்பரை சந்திக்க குடும்பத்துடன் சென்றோம். அவர் இருப்பது ஒரு farming community மத்தியில். நம் ஊரில் இருக்கும் கிராமங்களை போல. ஆமாங்க, அமெரிக்காவிலும் இப்படி இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பாரதி ராஜா, அடுத்த படம் எடுக்கும் போது அமெரிக்கா கிராமங்களையும் நினைவில் வைத்து கொள்ளலாம். "என் இனிய அமெரிக்க தமிழ் மக்களே: ஒவ்வொரு அமெரிக்க கிராமத்திலும் ஒரு guitar, வார்த்தைக்கு வராத சோகத்தில் ஒரு ராகத்தை வாசித்து கொண்டுதான் இருக்கிறது" என்று சொல்லலாம்.
நண்பர் வீட்டை அடைந்தோம். வீடு corn-field (சோளகாடு) பக்கத்தில் இருந்தது. நான் அவரின் அடுக்களைக்குள் ஏதோ எடுக்க சென்ற போது, அங்கு fridge பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் எலிபொறி பார்த்தேன். சோளம் விளை நிலத்துக்கு அடுத்து இருப்பதால் சில சமயம் field rats - சுண்டெலிகள் வந்து விடுவதாக சொன்னார். எலி பொறிக்குள் எட்டி பார்த்தேன். உள்ளே ஒரு நல்ல cheese துண்டு இருந்தது. எலிக்கு என்றார்.
சுண்டெலி சுண்டெலிதான். அது அமெரிக்காவில் இருந்தால் என்ன? இந்தியாவில் இருந்தால் என்ன? Fancy Farms ஊராக இருந்தால் என்ன? பரிசல்பட்டியாய் இருந்தால் என்ன? New York க்காக இருந்தால் என்ன? சென்னையாய் இருந்தால் என்ன? பிரச்சனைதான் - சுண்டெலி; பிடிக்கும் வழிதான் - எலிபொறி. ஒரே முடிவுதான் - எலியின் சாவு. ஆனால் bait இல்தான் விவகாரமே இருக்கிறது. இந்த சுண்டெலிக்கு சாகும் முன் நல்ல துண்டு cheese காத்திருக்கிறது. உலகத்தின் மறுபக்கம் இன்னொரு சுண்டெலிக்கு பொறிக்குள் ஒரு அழுகின தேங்காயோ ஒரு ஊசிப் போன வடையோ காத்திருக்கிறது. அந்த எலி பொறியிலிருந்து தப்பினால் கூட அந்த ஊசி போன வடையை தின்றதினால் நோவு வந்து செத்திரும்.
உயிரின் மதிப்பும் மரணத்தின் வலியும் ஒன்றுதான். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கு பதில்கள், மனித அறிவுக்கு எட்டும் வரைதான் புத்தி விரிவு அடைய வழி வகுக்கும். அதற்கு மேலயும் சில விஷயங்கள் இருக்கு. அதை பார்த்து, யோசித்து யோசித்து மண்டையை சொறிஞ்சு காயப் படுத்திகிறதை விட, "அடங்கேப்பா........" என்று ஏற்றுக் கொண்டால் தான் முடியும்.
மூன்று நாட்கள் கழித்து Shopping mall சென்ற போது "Pet shop" பக்கம் எட்டி பார்த்தேன். தரம் மற்றும் விலை உயர்ந்த நாய்கள், மீன்கள், கிளிகள் மத்தியில் ஒரு சின்ன கூண்டில் ஒரு சுண்டெலி சந்தோஷமாக ஒரு குட்டி சக்கரத்தின் மீது ஏறி விளையாடி கொண்டிருந்தது. ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீரும் ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் தானியமும் இருந்தது. கூண்டின் மேல ஒரு அட்டையில், "On sale! $35" என்று மாட்டி இருந்தது.
அந்த சுண்டெலியை 35 டாலர் கொடுத்து வாங்கி செல்லமாக வளர்க்க போகும் ஆளை பாக்க சந்திக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.
இந்த சுண்டெலிக்கு மட்டும் வந்த வாழ்வை பாரு..........மனித வாழ்க்கையிலும் சில சமயம் இதுதான் நடக்கிறதோ?
87 comments:
எங்கள் வீட்டிலும் எலி மேளா நடந்தேறியது.
பொறி கிறி எதுவும் சரிப்பட்டு வரவில்லை கடைசியாய் ஒரு ச்டிச்கெர் பேப்பர் தரையில் எலிக்கு ரெட் கார்பெட் மாதிரி விரித்து வைத்து விட்டுக் காத்திருந்தோம்...ஈன ஸ்வரத்தில் எலியார் அழைத்தார்....நகர முடியாமல் பசக் ஆகியிருந்தார்.
இந்த பேப்பர் மேட் இன் அமெரிக்காதான்
comment இல் கூட உங்க முத்திரை பதிக்கிறீங்க, Goma மேடம். உங்க அனுபவத்தை படித்து சிரித்தேன்.
////உயிரின் மதிப்பும் மரணத்தின் வலியும் ஒன்றுதான். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கு பதில்கள், மனித அறிவுக்கு எட்டும் வரைதான் புத்தி விரிவு அடைய வழி வகுக்கும். அதுக்கு மேலயும் சில விஷயங்கள் இருக்கு. அதை பார்த்து யோசித்து யோசித்து மண்டையை சொறிஞ்சு காயப் படுத்திகிறதை விட, "அடங்கேப்பா........" என்று ஏற்றுக் கொண்டால் ரசிக்க முடியும். ஏன், சிரிக்க கூட முடியும்.//////
என் அழகான ராட்சசியே....எலிப் பொறிகளுக்குள் வாழ்க்கைத் தத்துவங்களா?? america எலிகளுக்கும் இந்திய எலிகளுக்கும் சில வித்யாசங்கள்..அங்கு மரணத்திற்க்கும் (எலியின்) ஒரு உணவு-cheese..இங்கோ மரணத்தின் வாசலில் நிற்பதே (எலி) நம் விவசாயிகளின் உணவாய்....வாழ்க்கை தன் விரிவுபட்ட ..,பிளவுபட்ட மாயக் கைகளினால் எல்லவற்றையும் வாரிச்சுருட்டிக் கொண்டே போகிறாள்..ஆனால் சில சமயங்களில் சிலவற்றிற்கு சில அன்பளிப்புகளையும் கொடுத்துக் கொண்டே..( இங்கே இந்திய எலி வாங்கியது அழுகிப்போன தேங்காய் சில் ..அங்கே அமெரிக்காவிலோ KRAFT lite or fat CHEESE..)..ம்ம்ம்ம்ம்..அனைத்தையும் எடுத்துக் கொண்டே போக வேண்டியதுதான்..jiddu-சொன்னது-JUST BE..நம் தமிழ் சொல்லித் தந்தது-"சும்மா இரு...சொல் அற..""..
என் சந்தோஷத்தில் சந்தோஷம் காணும் தமிழினி: என் மனதை தொட்டது, pet shop இல் விளையாடி கொண்டிருந்த அதே சாம்பல் நிறத்து சுண்டெலி. ........... அதுக்கு மச்சம் இருக்கு. :-)
/// குயவன் கையில் களிமண்ணை போல கடவுள் கையில் நாம்................. ///
நந்தவனத்தில் ஒரு ஆண்டி,
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டு வந்தானொரு தோண்டி,
அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.....
தெரியாமலா பாடியிருக்கார் சித்தர்.
/// இந்த சுண்டெலிக்கு மட்டும் வந்த வாழ்வை பாரு ////
ஹா.. ஹா.. ஹா..அது சரி !
அது ஒரு வகையான ஆப்பு மக்கா..தமிழ்ப் பெண்களுக்கு நம் PAAVAM THAMIZH PAYYANS தரும்-------kumarans or pothys or rmkvs பட்டு சேலைகள்..லலிதாவின் number போட்ட நகைகள்..அப்புறம் ..platform தேசத்து லொட்டு -லொசுக்கு. இந்த வகையறாக்களுள் இதுவும் ஒன்று..தங்க கூண்டு..வெள்ளி தண்ணீர் கிண்ணம் ...ஆனால் ஆப்பு வைத்ததோ சுதந்திரத்துக்கு...ம்ம்ம்ம்ம்..
//அந்த எலி பொறியிலிருந்து தப்பினால் கூட அந்த ஊசி போன வடையை தின்றதினால் நோவு வந்து செத்திரும்.
//
:))....
மில்லியன் டாலர் கொடுத்து எலியை வாங்க கூட ஆள் இருக்கும்...
எப்படி என்றால் இது மைக்கேல் ஜாக்சன் வீட்டில் அவர் வளர்த்த எலி என்றால் போதும்.
ஒரு சுண்டெலி மேட்டருல வாழ்க்கைத்தத்துவத்தையே சொல்லிட்டீங்களே...
என்ன பதிவுலகத்துலயும் எலி நடமாட்டம் தொடங்கிடுச்சா...என்னொட பதிவை படிச்சுட்டுதானே இந்த மேட்டரு உங்களுக்கு ஞாபகம் வந்தது.
சே...நான் எத்தனை பேருக்குத்தான் இன்ஸ்பிரேஷனா இருக்கேன்... :-)
சரியான comment கேசவன் சார். நன்றி.
//மில்லியன் டாலர் கொடுத்து எலியை வாங்க கூட ஆள் இருக்கும்...
எப்படி என்றால் இது மைக்கேல் ஜாக்சன் வீட்டில் அவர் வளர்த்த எலி என்றால் போதும்.// ......... ஜெட்லி, பத்த வச்சுட்டியே, பரட்டை.
inspiration உக்கு நன்றி, நாஞ்சிலாரே. உங்க குட்டி கதை, நல்லா comedyaa இருந்துச்சு. அதை மாதிரி எழுத எனக்கு தெரியாது.
ஆமா எலிக்கு மச்சம் என்ன கலர்லே இருக்கும்...
//இந்த சுண்டெலிக்கு சாகும் முன் நல்ல துண்டு cheese காத்திருக்கிறது.//
ரசனையான வரிகள், மிகப் பிடித்திருந்தது சித்ரா மேடம்.
சாம்பல் நிற சுண்டெலிக்கும் கருப்பு நிற மச்சம்தான்.
gomaammaa kalukkureenga....romba rasiththaen..indhu sendhil kadhayaalaa irukku..???
நன்றி, சரவணன் சார். வருகைக்கும் கருத்துக்கும்.
Good sense of humour.ithupola naanum ninaippen anaal eli parthu illai car il pogum dog parthu
Kanmani
தெரு நாய்க்கும் கார் நாய்க்கும். சூப்பர், கண்மணி.
இதில் எது ஃபினிஷிங் டச் என்றால் சுண்டெலி விற்பனைதான்.. வாழ்க்கையில் பல நேரங்கள் வினோதமானவைதான்..
நிஜம்தான், ரிஷபன். வாழ்க்கையின் விநோதங்களை நின்று ரசிக்க வேண்டும்.
பதிவு அருமை .. பெங்களூர் நாய்கள் pizza சாப்பிடுகின்றன ..
என்ன பண்றது எல்லாத்துக்கும் ஒரு மச்சம் வேணும் நீங்க சொல்லுற மாதிரி
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
நாய்கள் போலத் தான் சுண்டெலியும் போல
இருக்கு.. பல நாய்கள் தெரு நாய்களாக ...
சில நாய்கள் மட்டும் நடிகை வீட்டு ஏ.சி.
காரில் சொகுசாக.. அது சரி..' குயவன் கையில்
களிமண் போல..கடவுள் கையில் நாம்..'
என்ன ஒரு அருமையான வார்த்தை ப்ரயோகம்!
ராமமூர்த்தி சார், மனித வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளை மிருக உலகத்துக்கும் நாம்தான் அறிமுகப் படுத்திட்டோம்.
செந்தில் சார், ரொம்ப கரெக்ட். மச்சம்தான்......
’நான் அவரின் அடுக்களைக்குள் ஏதோ எடுக்க சென்ற போது,” ஏங்க இந்தியாவுலதான் போற இடத்துல இண்டு இடுக்குல்லாம் போவீங்கன்னா அமெரிகாவிலுமா?
’உயிரின் மதிப்பும் மரணத்தின் வலியும் ஒன்றுதான். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கு பதில்கள், மனித அறிவுக்கு எட்டும் வரைதான் புத்தி விரிவு அடைய வழி வகுக்கும். அதுக்கு மேலயும் சில விஷயங்கள் இருக்கு. அதை பார்த்து யோசித்து யோசித்து மண்டையை சொறிஞ்சு காயப் படுத்திகிறதை விட, "அடங்கேப்பா........" என்று ஏற்றுக் கொண்டால் ரசிக்க முடியும். ஏன், சிரிக்க கூட முடியும்.” ப்ராக்டிக்கலா சொன்னீங்க இந்த விஷயத்துல என்னொட வோட்டு உங்களுக்குத்தான். hats off to chith
//’நான் அவரின் அடுக்களைக்குள் ஏதோ எடுக்க சென்ற போது,” ஏங்க இந்தியாவுலதான் போற இடத்துல இண்டு இடுக்குல்லாம் போவீங்கன்னா அமெரிகாவிலுமா?//
கவுத்துட்டீயே பரட்டை..... சாரி, அண்ணாமலையாரே!
ஒரு கம்யூனிச நாட்டில் வளர்க்கப் பட்ட நாயும், இந்திய நாயும் சந்திச்சதாம்.
கம்யூனிச நாய் சொல்லிச்சாம். அங்கு எனக்கு தினமும் சரியான நேரத்திற்கு (கவனிக்கு சரியான நேரத்திற்கு) நல்ல சாப்பாடு, தங்க இடம், கவனிக்க தனியா ஒரு ஆள், மருந்து எல்லாம் உண்டு அப்படின்னு சொல்லிச்சாம். அப்ப இந்திய நாய் சொல்லிச்சாம், உனக்கு இல்லாத ஒன்று எனக்கு உண்டு. நான் எப்ப குரைக்கணும் நினைக்கின்றேனோ அப்ப குரைக்க முடியும். உனக்கு குரைப்பதற்கு கூட நேரம் வச்சு இருக்காங்க. மனுஷனுக்கு தேவையான சுதந்திரம் இங்கு இருக்குங்க.
கூண்டில் அடைக்கப் பட்ட எலிக்கு, என்னதான் போஷாக்கு கொடுத்தாலும், கூண்டில் அடைக்கப் பட்டது பட்டதுதானே..
// அந்த எலி பொறியிலிருந்து தப்பினால் கூட அந்த ஊசி போன வடையை தின்றதினால் நோவு வந்து செத்திரும்.//
மனுஷனே அதைத் தின்னு இம்யூன் ஆயிட்டான். எலிக்கா எதாவது ஆகப் போகுது
அடேங்கப்பா...... அசத்திட்டீங்க போங்க, Nigeria நண்பரே!
//அந்த சுண்டெலியை 35 டாலர் கொடுத்து வாங்கி செல்லமாக வளர்க்க போகும் ஆளை பாக்க சந்திக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.
இந்த சுண்டெலிக்கு மட்டும் வந்த வாழ்வை பாரு..........மனித வாழ்க்கையிலும் சில சமயம் இதுதான் நடக்கிறதோ//
அனாதையாக விடப்படும் குழந்தைகளின் நிலையும் நீங்கள் சொன்ன சுண்டெலி போலத்தான்...
ஏன் ஒரு சிலர் கஷ்டப் படுறாங்க, ஒரு சிலர் கொழுத்து போய் அலைராங்கனு .........கணக்கு வேற, முடிவு ஒன்றுதான்.
comment sectionஐ ரொம்பவே ரசித்தேன்...முக்கியமாக "நல்ல பதிவு...x-lent...,me the first.." போன்றவை அதிகம் தென்படாதது...விமர்சனங்களே தனி கதையாகி போனது..,சில சமயங்களில் கவிதையாகவும்...nigeria ragavan..,annamalaiyan..,rishaban..,meen thulliyaan..and வழக்கம் போல gomammaa comments அழகானவை...நன்றி அனைவருக்கும்
சித்ரா,
நல்ல நகைச்சுவை கலந்த பதிவு. இக்னேஷியஸ் பள்ளி மாணவி அல்லவா...நகைச்சுவைக்கு கேட்கவா வேண்டும்?
ஆமாம்....ஊசிப் போன வடையையும்,அழுகின தேங்காயும் சாப்பிட்ட நம்மூர் எலி அதிலேயே செத்துப்போகும். சீஸ் தின்ன அமெரிக்க எலி என்னவாகும்? நல்ல கொழுகொழுனு இருக்கும், அப்படித்தானே?
ரொம்ப நன்றி, நானானி madam . Ignatius Convent touch வேற. உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
//ஊசிப் போன வடையையும்,அழுகின தேங்காயும் சாப்பிட்ட நம்மூர் எலி அதிலேயே செத்துப்போகும். சீஸ் தின்ன அமெரிக்க எலி என்னவாகும்? நல்ல கொழுகொழுனு இருக்கும், அப்படித்தானே?//
ஒண்ணு புழுத்து சாகும். ஒண்ணு கொழுத்து சாகும். ஹி,ஹி,ஹி,.....
ஆமாம், தமிழினி. நல்ல discussion area வா comments ஏரியா இருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு.
//ஆமாம்....ஊசிப் போன வடையையும்,அழுகின தேங்காயும் சாப்பிட்ட நம்மூர் எலி அதிலேயே செத்துப்போகும். சீஸ் தின்ன அமெரிக்க எலி என்னவாகும்? நல்ல கொழுகொழுனு இருக்கும், அப்படித்தானே?//
//ஒண்ணு புழுத்து சாகும். ஒண்ணு கொழுத்து சாகும். ஹி,ஹி,ஹி,.....//
எப்படியிருந்தாலும் கூட நம்ம மூக்கும் செத்து போகும் :)
எப்படியோ eli தொல்லை விட்டா சரி.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி, பூங்குன்றன் சார். உங்கள் கவிதைகள் தான் படித்து கொண்டு இருந்தேன். அருமை.
நாஞ்சில் பிரதாப் said...
//ஒரு சுண்டெலி மேட்டருல வாழ்க்கைத்தத்துவத்தையே சொல்லிட்டீங்களே...//
அழகான பதிவுக்கு அழகாய் கருத்து சொல்லியிருக்கிறார் நாஞ்சில் பிரதாப்:)!
ராமலக்ஷ்மி அக்கா, வாங்க. நீங்களும் மலர் தூவுறீங்க. நன்றி அக்கா, நன்றி.
வித்தியாசமான கோணத்தில் எலியைப் பார்த்திருக்கிறீர்கள், பதிவுக்கு நன்றி :). அந்த எலி மனிதர்களைப் பார்த்து என்ன நினைச்சிருக்குமோ :D...
chitra..en friend...
சித்ரா எலிக்கு ஒரு பதிவா, நல்ல நகைச்சுவை,
எலிய வாங்க வந்தாங்களான்னு ஆச்சரியாமா இருந்தது
அங்காவது சீஸ், இந்தியாவில் ஊசிபோன வடை, கருவாடு துண்டு , ஆனால் இங்குள்ள எலிகளுக்கு KFC சிக்கன் வைத்தால் தான் மாட்டுமாம்.
ஹா இத எங்க போய சொல்ல... ஹி ஹி
வாங்க சித்ரா எங்க பகக்மும் வந்து செல்லுங்கள்.
வாழ்க்கையின் விசித்திரமே அதுதான்.
டாமின் கையில் சிக்காமல்
புதுப்புது ஐடியாக்கள் மூலம்
தான் தப்பி
பூனையை மாட்டிவிட்ட
ஜெர்ரியை ரசித்தபின்
தூங்கப் போனேன் -
வடையை பொறியில் வைத்தபின்.
தமயந்தி -------- உனக்கு நான் தோழி என்பது எனக்கு பெருமை. நீ சொல்வது....... என்னை இன்னும் எழுத உற்சாகப் படுத்தும் ஊக்க மருந்து.
பெயர் சொல்ல விருப்பமில்லை., ஐயா நீர் புலவர்............... நான் வெறும் வெட்டி பேச்சு.. - நச் என்று ஒரு கமெண்ட் கொடுத்தீர்கள்.
கண்டிப்பாக, ஜலீலா. இப்படி வெத்திலை பாக்கு வச்சு அழைத்த பிறகு வராமல் எப்படி?
சுடு தண்ணி: //அந்த எலி மனிதர்களைப் பார்த்து என்ன நினைச்சிருக்குமோ :D... //
அடப் பாவி மனுஷி, நான் இங்க உயிரை கையில் பிடிச்சி வச்சிட்டு இருக்கேன், நீ ஹாயா உக்கார்ந்து வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கே, என்னை வச்சு.
ஜலீலா, ஊரு ஊருக்கு வாசப் படி ---- இல்ல எலி பொறி. :-)
நேத்து தான் வீட்டிலே ரெண்டு எலி பிடிச்சேன்
நசரேயன் சார், எலியை பிடிச்சது - அடிக்கவா, அன்பாய் வளர்க்கவா?
என்னமா யோசிக்கிறிங்க!
வால் பையன் சார், எவ்வளுவு தூரம் வெட்டியா இருக்கேன்னு சொல்றீங்க....... புரியுது. அதுக்காக நாங்க விட்டுருவோமா?
மிக நல்ல பதிவு சித்ரா...! சில சிறுவயது ஞாபகங்களைக் கிளறுகிறது...!
நன்றி, கலகலப்ரியா. எலி செய்யும் வேலையை பாருங்கள்....
Koduththuvaitha Eli:(
கருத்துக்கு நன்றி, சுவையான சுவை. :-)
நம்ம ஊருல யாரும் சீஸ் சாப்பிடுறது இல்லையே. அப்படியே சாக போறாதா இருந்தாலும் செத்துத்தானே போகபோது அப்பறம் அது என்ன சீஸ் வேண்டி கேடக்கு என்று கேட்பவர்கள் நமது ஆட்கள்.
என்னமா யோசிக்கிறீங்க, romeoboy. super!
நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.
வாங்க, வாங்க, "நினைவுகளுடன் ". வலது காலை (சாரி, கையை) எடுத்து வச்சு வாங்க!
//அந்த சுண்டெலியை 35 டாலர் கொடுத்து வாங்கி செல்லமாக வளர்க்க போகும் ஆளை//
அட நாமளே வாங்கி வளர்ப்போம் அம்மணி.
($35*Rs45=Rs1575,ஊர்ல சொல்லத்தான் பயமா இருக்கு )
Rs.1500 க்கு வேற ஏதாவது வாங்கி வளர்க்கலாங்க, Perumal Sir.. . அந்த கடையில் சுண்டெலி வச்சு வியாபாரம் பண்ணலாம்னு ஒரு ஆளுக்கு ஐடியா கொடுத்த மூளையை இன்சூர் பண்ண சொல்லணும்.
//உயிரின் மதிப்பும் மரணத்தின் வலியும் ஒன்றுதான்//
unmai..
வருகைக்கு நன்றி, மகா.
பசங்களோட விருப்பத்துக்காக நாங்க 2 வெள்ளெலிகளை வளர்த்தோம்.. எலியை விட கூண்டின் /விளையாட்டு சாமான்களின் விலை அதிகம்..
மிக அழகான எலிகள்... பின் ஊருக்கு போகும்போது கீழே வைத்தோம் நொடியில் மற்ற குழந்தைகள் தூக்கி சென்றனர் வளர்க்க..
தலைப்பு சரிதான்..:)
வெள்ளை எலியோ சுண்டேலியோ, உங்களை மாதிரி "இளிச்ச வாயி" .... சாரி, ரொம்ப சாரி..... "புன்னகை தேசங்கள்" இருக்கும் வரை, எலிகளுக்கு கொண்டாட்டம்தான்.
(சாந்தி, வந்து கமெண்ட் பண்ணியதுக்கு நன்றிமா.)
தலைப்பே சூப்பரா இருக்கே. நான் தான் 50. கமெண்ட் இல்லை. ஃபாலோயர்
பப்பர பப்பர பப்பர பான்...................டம் டம் டம் டம்......... S.A. நவாஸுதீன் சாருக்கு எல்லோரும் ஜோரா கை தட்டுங்க.
சித்ரா முதல் முறையா உங்க வலைத்தளத்துக்கு வர்றேன்..
ஆனா பாருங்க நிறுத்த முடியாம படிச்சுக்கிட்டே இருகேன் மா ...
ரொம்ப அருமை...
வெகுளித்தனமா., முட்டாள் தனமா., கடவுள் மற்றும் சுன்டெலி .,சினிமான்னு கலக்குறீங்க தோழி
வாழ்த்துக்கள்
சித்ரா இண்ணிக்குத்தான் உங்க பக்கம் வ்ந்திருக்கேன்.முதல்ல வணக்கம் சொல்லிக்கிறேன்.
முன்னுக்கு இருந்த இரண்டு பதிவுகளில் மட்டும் மேய்ந்தேன்.இயல்பு நடையில் சாதாரண நிகழ்வுகளைச் சொல்லி அசத்தியிருக்கீங்க.இனியும் வருவேன்.வாழ்த்துக்கள் தோழி.
thank you, தேனம்மை மேடம். Thank you. Thank you. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி. எதையும் சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி......
முதல் வருகைக்கு நன்றி, ஹேமா. சும்மா வந்திட்டு போகாமல், உற்ச்சகப் படுத்தும் வார்த்தைகளையும் சொல்லிட்டு போறதுக்கு, ரொம்ப நன்றி.
thamilini said: "பல்ல காமிக்காத சித்து ..இனி என்கிட்டே சொல்லுவ ..-ஒன் கம்மேண்ட என் blogla ரொம்ப miss பண்றேன்னு ..""""
(via e-mail)
very well expressed. keep writing.
Thank you, very much. Dr.Rudhran.
comment எழுதி, என்னை நெகிழ வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.
எனக்கு நீங்கள் இட்டிருந்த பின்னூட்டத்தின் மூலம் லின்க் பிடித்து இங்கே வந்து, உங்கள் பதிவுகளைப் படித்தேன். ஒரே வரியில் சொல்வதானால், அற்புதம்! முடிந்தால், என் மற்றொரு வலைப்பூவான http://vikatandiary.blogspot.com -ஐயும் பார்த்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
நன்றி, ரவி அண்ணே. அடுத்த ப்லோக்குக்கும் வந்து பின்னுட்டூறேன்.
சித்ரா, அருமையா எழுதியிருக்கிறீங்க. இந்த பதிவு மலையாளத்திலெ ட்ரான்ஸ்லேட் செய்து எனது ப்ளோகில் ப்ரசுரிக்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி கோருகிறேன். அதுமட்டுமல்லாமல் உங்களை மலையாளம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யவும் விரும்புகிறேன்.
இப்படிக்கு,
கெ.பி.சுகுமாரன்,
kpsuku@gmail.com
http://kpsukumaran.blogspot.com
//இந்த சுண்டெலிக்கு சாகும் முன் நல்ல துண்டு cheese காத்திருக்கிறது.//
சித்ரா மேடம், அந்த எலிக்குக் கொலெஸ்ட்ரால் இருந்தால்? அதுவே ஆபத்தாகி விடுமே! எலிக்கு எங்கே போனாலும் கிலி தான்!...
நல்ல எலிதியிருக்கீங்க!சிரித்து ரசித்தேன்.
-- கே.பி.ஜனா
முன்னால் சொன்ன கமெண்ட் பதில்தான் சார். கொழுத்து செத்தால் என்ன, எலி தொல்லை போனால் போதாதா? ஹி,ஹி,ஹி,....
மலையாளத்துல எல்லாம் என்னை கூப்புடுறாக...............யான் எந்து பறையும்?
//இந்த சுண்டெலிக்கு மட்டும் வந்த வாழ்வை பாரு..........மனித வாழ்க்கையிலும் சில சமயம் இதுதான் நடக்கிறதோ? //
ஆமாம்ல. வித்தியாசமான சிந்தனை.
ஆமாம் சித்ரா முதலில் ஆச்சரியாமா இருந்தது துபாயில் எலி, ஆனால் பேக்கரி பக்கத்துல ஆபிஸ், புட் & அகாமடேஷன் ஃபிரியா கிடைக்கவே அங்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு இங்கு வந்து ரெஸ்ட் எடுத்து கொள்ளும், கடைசியா ஒரு வழியா எல்ல்லாத்தையும் ஓட்டிட்டாங்க.
அதே போல் அலஹாபாத் போய் வரும் வழியில் ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு மணி நேரம் வெயிட் பண்ண வேண்டி இருந்தது. அங்கு தண்டவாளத்தில் எலிகள் அடிக்கும் லூட்டிய அரை மணி நேரமா பார்த்து கொன்டு இருந்தேன்
ரசிப்பு தன்மை உள்ளவர்கள் எலியை கூட முடியும். நம்மை சிந்திக்க வைக்க எலியால் கூட முடியும். நன்றி, ஜலீலா அக்கா.
அன்பின் சித்ரா
அழகான் ஐடுகை - வித்தியாசமான சிந்தனை - அமெரிக்க இந்திய எலிகளின் ஒப்பு நோக்கல் - அடடா - இப்படி எல்லாம் இடுகை போட இயலுமா - அதுதான் சித்ராவோ
நெல்லை நட்பு நானானி கோமா ராமலக்ஷ்மி - மறக்காம மறுமொழிகள் போட்டிருக்காங்க
இடுகை எவ்வளவு அருமையோ - வந்திருக்கும் மறுமொழிகள் அத்தனையும் சூப்பர் - நைஜீரியா ராகவனோடது சூப்பரோ சூப்பர்
ந்ல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
அந்த கடையோட முகவரி கிடைக்குமா? சுண்டெலிகளை சப்ளை செய்றதுக்குத்தான். தட்டுப்பாடே இல்லாம சப்ளை செய்ய நான் கியரண்டி.
ஹ ஹா... வாழ்க்கை இப்படித்தான்... சுண்டெலி போல் தான் மனிதர்களும்... எது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்!!!
Post a Comment