நம்மூரிலும் ஒரு சிறந்த performance க்கு பாராட்டாக, "இது ஆஸ்கார் விருது"க்கு உரிய நடிப்பு - நடிகர் - என்று சொல்கிறார்கள். அதே வேளையில், வெளிநாடுகளில் - குறிப்பாக - அமெரிக்காவில் இருக்கும் மற்ற சில "சிறப்பு" விருதுகள் புறக்கணிக்கப்பட்டு வருவது வெட்டி பேச்சின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஏன்? நம்மூரிலும் இந்த விருதுகள் கொடுக்கும் அளவுக்கு "திறமைசாலிகள்" இல்லையா?
உறுதிமொழி: இது வேடிக்கை பேச்சு அல்ல. உண்மையிலேயே, இத்தகைய விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகின்றன.
1. The Razzies : The Golden Raspberry Awards:
யார் யாருக்கு கிடைக்கும் : மிகவும் மோசமான முறையில் சினிமாவில் தங்கள் திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு - நடிக நடிகைகள் - டைரக்டர் - தயாரிப்பாளர் - என்று பட்டியல் நீள்கிறது.
பரிந்துரைக்க காரணம்: சினிமாவில் சிறந்த சேவைக்கு மட்டும் விருதுகளும் மரியாதையும் கொடுத்து உற்சாகப்படுத்துவதை போல, நேர் மாறாக தங்கள் "திறமை(குறைவு)களை" வெளிப்படுத்துபவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்.
விருதின் பெயர் காரணம்: 1981 ஆம் ஆண்டு, ஹாலிவுட் திரையுலக புள்ளிகளில் ஒருவரான ஜான் வில்சன் என்பவர், ஆஸ்கார் விருது வழங்கிய நேரம், தான் ஏற்பாடு செய்து இருந்த பார்டியில் அந்த வருடத்தின் worst films and performance குறித்து பேசி, அதற்கு உரியவர்களை தேர்ந்து எடுக்க சொல்லித் தன் விருந்தினர்களை விளையாட்டாக கேட்டு கொண்டார். அந்த ஐடியா, "சூப்பர் ஹிட்" ஆகி விட்டது. இன்று 650 ஆட்கள் கொண்ட நடுவர் குழு, உண்மையிலேயே வோட்டு எடுத்து முடிவு செய்து விருது வழங்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வருடமும், இந்த விருது, ஆஸ்கார் விருது வழங்கப்படும் நாளுக்கு முன் தினம் ஒரு பெரிய விழாவில் வைத்து வழங்கப் படுகிறது.
இந்த விருதுகளை, பெரும்பாலும் பலர் புறக்கணித்து மறுத்தாலும், அதையும் சந்தோஷமாக , தங்களின் திறனை improve செய்து கொள்ள உந்தும் விருதாக கருதி, நேரில் சென்று வாங்கி கொண்டு நன்றி சொல்லும் அளவுக்கு உள்ள Sportive உள்ளம் கொண்டவர்களும் உண்டு.
குறிப்பிடத்தக்கவர்கள்: 2004 ஆம் ஆண்டு Hale Barry என்ற நடிகை, இந்த விருதை நேரில் வந்து வாங்கி கொண்டு, தனது மோசமான நடிப்பு திறமையையும் நன்கு வெளிக்கொண்டு வந்த அந்த பட டைரக்டர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்து கொள்வதாக சொல்லிய போது, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. இவர் 2002 ஆம் ஆண்டுதான் "Monster's Ball" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. The Ig Nobel Prize:
யார் யாருக்கு கிடைக்கும்: அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தங்களது வித்தியாசமான கற்பனைத் திறனை - காரணத்தை - பயன்படுத்தி கொள்பவர். (அதாவது, இதையும் போய் ஆராய்ச்சி பண்ண, ரூம் போட்டு யோசித்தார்களா! என்று மற்றவரை அயர வைப்பவர்கள். )
பரிந்துரைக்க காரணம்: தங்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி கொள்ளாமல், தனக்கு வந்த அசாதாரண ஐடியாவை துணிந்து ஆராய்ச்சி செய்ய முன்வந்தவர்களை அடையாளம் கண்டு "கௌரவிப்பது".
விருதின் பெயர் காரணம்: Ignoble என்ற ஆங்கில வார்த்தையை ஆதாரமாக கொண்டது. (தமிழ் அர்த்தம்: யோக்கியதை அற்ற ..... தரமற்ற....) ....... இப்போ புரிந்து இருக்குமே!
"Annals of Improbable Research " என்ற பத்திரிகை, வருடா வருடம் விருதுக்கு உரியவர்களை தேர்ந்து எடுத்து "அகௌரவப்" படுத்துகிறது. அவ்வ்வ்வ்.......
1995 இல், பிரிட்டிஷ் அரசாங்கம் மூலமாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் யாருக்கும் இது கொடுத்து விடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் அளவுக்கு இது பிரபலமானது.
குறிப்படத்தக்கவர்கள்: Bra ஒன்றையே அவசர கால நேரத்தில், பெண்கள் Gas mask ஆகவும் உபயோகித்துக் கொள்ளும் விதத்தில் கண்டு பிடித்தவர்.
மாட்டுச் சாணத்தில் இருந்து வனில்லா (vanilla) flavoring எடுக்க முயன்றவர்.
3. The Darwin Awards:
யார் யாருக்கு கிடைக்கும்: இதை வாங்க முதலில், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர், அந்த வருடம் இறந்திருக்க வேண்டும். இறந்தவருக்கு எதற்கு விருது என்றா கேட்கிறீங்க?
பரிந்துரைக்க காரணம்: "அவர் எப்படி இறந்தார்?" என்பதை பொறுத்தது. இருப்பதிலேயே மிகவும் முட்டாள்த்தனமான தனது செயலால் - காரணத்தால் - ஒருவர் இறந்து இருக்க வேண்டும். (the most idiotic way of death)
அப்படி இறந்த காரணங்களை பரிசீலித்து, அவரின் முட்டாள்த்தனத்தையும் "கௌரவிக்கும் வகையில்" , posthumous ஆக இந்த விருதுக்கு, அவரின் பெயர் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
விருதின் பெயர் காரணம்: Mr.Charles Darwin அவர்களின், "Survival of the fittest" படி, ஒரு குழு விளையாட்டாக 80 களில் ஆரம்பித்த விருது இது. "To honor the unfortunate people who “do a service to humanity by removing themselves from the gene pool."
குறிப்படத்தக்கவர்கள்: பெட்ரோல் tank ஒன்றில், போதுமான அளவு பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, tank உள் இருட்டாக இருக்கிறதே என்று, கையில் இருந்த சிகரட்டு லைட்டர் கொண்டு பற்ற வைத்து உள்ளே எட்டி பார்த்த ஒருவர், tank வெடித்து சிதறி, அதே இடத்தில் உயிர் இழந்தார்.
24 வது மாடியில் இருக்கும் தனது அலுவலக ஜன்னல் கண்ணாடி, எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்று காண்பதற்காக முழு வேகத்துடன் ஓடி வந்து அந்த கண்ணாடியில் மோதிய ஒரு வக்கீல், கண்ணாடி உடைந்து அவ்வளவு உயரத்தில் இருந்து .............. (கோடிட்ட இடத்தை நிரப்பி கொள்க!)
பதிவுலக மக்களாகிய எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பதிவர்களே - பதிவுகளை தவறாமல் வாசிக்கும் வாசகர்களே! அலை கடல் என திரண்டு வாரீர்! இந்த மூன்று விருதுகளுக்கும், தமிழ்நாட்டில் மிகவும் பொருத்தமானவர்கள் யார் யார் என்று கூறுவீர்!!!! (எங்கே போய் கூறணுமா? மக்கா...... எனது கமென்ட்ஸ் ஏரியாலதான் ...... ஹையோ..... ஹையோ....!)
107 comments:
சித்ரா...பதிவு சூப்பர்... ! நம்ம ஊர்லயும் இப்படி எல்லாம் கொடுத்தா எப்படி இருக்கும்? பதிவ படிச்ச உடனே வந்த பயம்.. இன்னும் ஏராளமா விருது கொடுக்க பதிவர்களுக்கு யோசனையும் சொல்லிட்டீங்களோ....?
புதிய தகவல்கள்.... சேமிப்பு பகுதியில் சேமித்திக் கொண்டேன்... வாழ்த்துக்கள் சித்ரா...!
வெட்டி பேச்சு சித்ரானு யாரும் சொன்னா ....வெட்டிட வேண்டியதுதான்.....ஹா..ஹா..ஹா..!
.......... And the "First Comment" Award goes to DHEVAAAAAAA!!!
Hi Akka,
apdi podunga!!!
sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
Second comment goes to ... கோடிட்ட இடத்தை நான் க்ளிக் செய்தவுடன் bloggerஏ நிரப்பிக் கொண்டால் நன்றாக இருக்கும்.
நம்ம ஊரிலும், இப்போ இது போல alternate விருதுகள் ஒரு கிண்டல் என்ற அளவில் உள்ளன.
புதிய தகவல்கள்.வாழ்த்துகள்
me the third...
no.. me the 6th :(
பின்னூட்டத்திற்கு பரிசு கொடுக்கிறீங்களா....? ஆயிரம் பொற்காசுகளா.....? ரொம்ப நன்றி கூரியர் ப்ளீஸ்....
இது கூட நல்லாயிருக்கு.... பதிவர்களுக்கு கூட இந்த மாதிரி விருது கொடுக்கலாமே... நிறைய பேர் செலக்ட் ஆவாங்க.. அதில நானும் கண்டிப்பா இருப்பேன்...
இந்த மூன்று விருதுகளுக்கும், தமிழ்நாட்டில் மிகவும் பொருத்தமானவர்கள் யார் யார் என்று கூறுவீர்!!!! (
//
இதென்ன கேள்வி...வெள்ள வெட்டி சட்டைகாரங்க தலையில மன்ன போடுறாங்கன்னு தெரிஞ்சும் அவங்க பின்னாடியே போறாங்களே மக்கள் அனைவருக்கும் இந்த விருது கொடுக்கவல்லது
முதல் விருதைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றவை புதியது. படிக்க நன்றாக இருந்தது.
---
உங்க ஐடியா தெரியுது. இங்க இருக்குறவங்க பேர நாங்க சொல்ல, அவங்க ஆட்டோ, கால் டாக்ஸி வீட்டுக்கு அனுப்ப, அடுத்த வருஷம் எங்களை டார்வின் அவர்ட்க்கு நீங்க பரிந்துரைப்பீங்க.. நல்லா இருக்கு உங்க ப்ளான்.. :)
கண்டுபிடிச்சிட்டீங்களா, பின்னோக்கி சார்.... சே.... ஜஸ்ட்டு மிஸ்சு ஆயிடுச்சே!
ada pongappa postai padikkumpothu 2 comments nnu kaattuthu post padichuttu vanthu comenta podalamna 11 pearu alreasy commenttitaangannu kaattuthu
ivangalukkeallam veara veallaiyea illaiya [ennai maathiriyea]
சித்ரா சூப்பரான பதிவுங்க... இப்படி நம்ம ஊர்ல கொடுத்தா வலைப்பூ பக்கம் போகவே முடியாது... எல்லாரும் போட்டு தாக்கி இருப்பாங்க...
முற்றிலும் புதிய தகவல்...
darwin Awards நம்ம எல்லா பதிவர்களுக்கும் தான் பதிவையும் போட்டு தானே வங்கி கட்டிகிறோமே.
தனக்கு தானே சூனியம் அவர்டுனும் வெச்சிக்கலாம்
Nice posting Chitra good thinking....
Siva
இத ஏன் நம்ம நாட்டிலும் அறிமுகப்படுத்த கூடாது?
டார்வின் அவார்ட்ஸ் சூப்பர்ங்க...
புதுசா விசயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது..
படிக்கப் படிக்க நல்லாயிருந்தது..
தகவல்கள் நன்று...
Eppadiyellam yosikkiraanga?!!!!Hmmm!!!!
சூப்பர் அப்பு கலக்குங்க
ஆஸ்கார் அவார்ட் ......சரியா சொன்னீங்க அது மட்டுதானா அவார்ட்...இதுல மூனாவது அவார்ட் இப்ப இந்த பதிவுல வர கடைசி ஆளுக்கு குடுத்திடலாம்... ஹா..ஹா...டீலா..?
இது கருவாடு ச்சீ அவார்டு வாரமா. நம்ம இளைய தளபதிக்கு மூணாவது அவாஎடு கொடுக்கலாம்...
ஹய்யோ... ஹய்யோ...
நல்ல ஆவார்ட்ஸ், டார்வின் அவார்டுக்கு என் கிட்ட சில பதிவர்ஸ் லிஸ்ட் இருக்கு. வெளில சொன்னா அடிப்பாய்ங்க...
சூப்பர் .
இதில் உங்களுக்கு எதுவும் வரலேயே :-)
ஆச்சரியமான தகவலுக்கு நன்றி சித்ரா.
ரசிக்கத்தகுந்த அவார்ட்கள்.சித்ரா இதனை ப்ளாக்கிற்கு அவார்டாக யாராவதுகொடுத்திடப்போறாங்க.
சும்மா இருக்கிறவங்களை கிளப்பிய கதையாகிடாம .
Chitra, first award pattri theriyum. Meethi rendum puthiya thagaval. Nandri...
இதே மாதிரி விருதுகளை நகைசுவையின் பேரில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஹிந்தி படங்களை கேலி பண்ண பயன் படுததியது ஞாபகத்துக்கு வருகிறது.
//உங்க ஐடியா தெரியுது. இங்க இருக்குறவங்க பேர நாங்க சொல்ல, அவங்க ஆட்டோ, கால் டாக்ஸி வீட்டுக்கு அனுப்ப, அடுத்த வருஷம் எங்களை டார்வின் அவர்ட்க்கு நீங்க பரிந்துரைப்பீங்க.. நல்லா இருக்கு உங்க ப்ளான்.. :) //
ஹா.. ஹா.. ஹா..
எல்லாமே அருமையான தகவல்கள்.
சித்ரா முதல் விருது பத்தி நானும் கேள்விபெட்டிரிக்கேன் ..மீதி எல்லாம் புதுசா இருக்கு ...இந்த மாதிரி விருது இங்கேயும் கொடுத்தான் ரொம்ப தமாஷா இருக்கும் இல்லே ...
" இந்த மூன்று விருதுகளுக்கும், தமிழ்நாட்டில் மிகவும் பொருத்தமானவர்கள் யார் யார் என்று கூறுவீர்!!!! :
எழுத ஆசையா தான் இருக்கு ஆனா எல்லோரும் சேர்ந்து என்னே அடிக்க வந்தா நான் என்ன செய்யுவே அதான் வேண்டா ..
பதிவு எப்போதும் போல சூப்பர் நன்றி
///அதையும் சந்தோஷமாக , தங்களின் திறனை improve செய்து கொள்ள உந்தும் விருதாக கருதி, நேரில் சென்று வாங்கி கொண்டு நன்றி சொல்லும் அளவுக்கு உள்ள Sportive உள்ளம் கொண்டவர்களும் உண்டு.//
நிச்சையம் இந்த விருத்த வான்குரவங்களா பாராட்டனும் .. ஏன்னா நீ நல்ல நடிசிருக்க அப்படின்னு ஒரு பரிசு கொடுக்கும்போது அடடா நம்மளுக்கு கொடுக்கலையே அப்படின்னு வருத்தமா இருக்கும் . ஆனா அதே சமயம் இந்த மாதிரி விருது கொடுக்கும் போது எங்க நம்மளுக்கு கொடுத்துருவாங்களோ அப்படிங்கிற பயம் இருக்கும். ஆனா கொடுத்ததுக்கு அப்புறம் அத போயி வாங்குறக்கும் ஒரு பக்குவம் இருக்கணும் ..
பதிவர்கள் குடுக்குற விருதுகள் கூட இப்படித்தான்னு நினைக்கிறேன் ....
அக்கா! உங்க வெடி சிரிப்பை நினைச்சி வந்தாக்கா, இப்படி ஏமாத்திட்டீங்களே!
அடுத்து நல்லா காமெடியா ஒன்னு எடுத்து உடுங்க அக்கா!
உங்க ரசிக பட்டாளத்தை ஏமாத்தாதீங்க, ஆமாம் சொல்லிபுட்டேன்! அம்புடுதேன்.
அட! இது வித்தியாசமா இருக்கே,
கடைசியாக comments போடுறவங்களுக்கு ஏதும் விருது இருந்தால் அதை எனக்கே கொடுத்ருங்க.. ஆமா சொல்லிப்புட்டேன்/
இவ்ளோ வகையான விருதுகளா!!!!!!
ரூம் போட்டு யோசிச்சிங்களோ ..
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
அப்படின்னு யார்ன்னா டெம்ப்ளேட் கமெண்ட் போடுவாங்கன்னு பார்த்தேன், ஒருத்தரும் சிக்கலையா
நெசமாவே பதிவ படிச்சிட்டாங்கப்பா
சூப்பர் இடுகை. படங்களும் சுவாரசியம். :)
சித்ரா நல்ல ஐடியா. மோசமான நடிப்புக்கு இப்பொழுதெல்லாம் ரொம்பப் போட்டி. நிறைய முன்னணி கதாநாயகர்கள் இருக்கிறார்கள். மோசமான சாவுக்கும் பஞ்சமிருக்காது. எப்படியும் பலே சரியானப் போட்டிதான். ஆனால் இதெல்லாம் தேர்வு செய்ய ஒரு ஆயிரம் பேர் அடங்கிய குழு தேவையாக இருக்கும்.
மொக்கையா இடுகையும்... அதுக்கு மொக்கையா பின்னூட்டமும் போடும் நம்ம மாதிரி ஆளுங்களுக்கு எதாவது விருது கொடுத்து கவனிச்சா நல்லா இருக்குமில்ல..
// இந்த மூன்று விருதுகளுக்கும், தமிழ்நாட்டில் மிகவும் பொருத்தமானவர்கள் யார் யார் என்று கூறுவீர்!!!! //
தமிழ் நாட்டில் இருந்து நைஜிரியாவுக்கு ஆட்டோ வரவழைக்காம விட மாட்டீங்க போலிருக்கு..
//Bra ஒன்றையே அவசர கால நேரத்தில், பெண்கள் Gas mask ஆகவும் உபயோகித்துக் கொள்ளும் விதத்தில் கண்டு பிடித்தவர்.//
அதுக்கு gas-ஏ பரவாயில்லையே...ஹிஹிஹி.
கடந்த ஆண்டு சான்ட்ரா புல்லக் கூட மோசமான நடிகைக்கான இந்த விருதை வாங்கினார் என நினைக்கிறேன். நல்ல பதிவு.
எந்த சிட்டில அதிக குப்பை ரோட்ல இருக்கோ அவங்களுக்கு ஒரு "குப்பைத் தொட்டி" அவார்ட்
எந்த ஊருல குண்டு குழி ரோடுல இருக்கோ அவங்களுக்கு ஒரு "சூப்பர் குழி" அவார்ட்
எந்த படம் எடுத்தவுடனே ஊத்திகிச்சோ அதுக்கு "ராவணன்" அவார்ட்....
எந்த நடிகர் அழுவுரதுக்கு மூஞ்சிய பொத்திகிட்டு சிரிக்கராரோ அவருக்கு ஒரு "முத்துராமன்" அவார்ட்...
எந்த புதுமுகம் சரியா நடிக்கலையோ அவங்களுக்கு "சிறந்த யதார்த்த நடிகர்" அவார்ட்...
இப்படியே அடிச்சுகிட்டே போனா... இது ஒரு பதிவாயிடுமோ...... நல்ல பதிவு சித்ரா...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
The Razzies The golden Rasberry Award க்கு தகுதியானவங்க பட்டியல் போட்டால்........ சூப்பர்ங்க .......புதிய புதிய தகவலா புடிச்சிடறீங்க சித்ரா...... வாழ்த்துக்கள்.
Interesting, ha, ha, ha
ஏதோ அவார்டுன்னு சொல்றீங்கலேன்னு நம்மம்ம்பி படிக்க ஆரம்பிச்சேன்.. அவ்வ்வ்வவ்
nice information,thxs for sharing...
சித்ரா நீங்க விருது கொடுக்கறீங்கன்னாலே எல்லாரும் ஓடி ஒழியறாங்க.
தலைப்ப பார்த்துட்டு நமக்கு ஏதாவது விருது இருக்கும்னு ஆசையா வந்தேன்.
இதுலே யார் யாருக்கு என்ன அவார்டு கொடுக்கிறதுன்னு சிபாரிசு பண்ணறதா? என்னை மாதிரி ஆசாமிங்களுக்கு இதுலே ஏதாவது அவார்டு கொடுக்கிறதுக்குள்ளே....எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!
ரொம்ப சுவாரஸ்யமா இருந்ததுங்க
அவார்ட் தகவலெல்லாமே.. இங்க குடுக்க போனீங்கன்ன அவார்ட் கொடுத்து மாளாதுங்க. எவ்ளோ பேருன்னு குடுக்கறது!பசுநேசன் ராமராஜன் பேர்ல ஒரு அவார்ட சேர்த்துக்குங்க!
அட .. இப்படில்லாம் இருக்கா.. சித்ரா ..
அந்த செத்துப்போனவங்க அய்யோ என்ன கொடுமை ..
படிக்கவே க்ர்ன்னு ஆகுது..
புதுத்தகவல் நன்றி.
நம்ம மக்களுக்கு நகைச் சுவை உணர்வு கொஞ்சம் கம்மிதான். இது போன்ற அவார்ட் எல்லாம் கொடுத்தால் அதில் உள்ள நகைச் சுவை/ஆக்க பூர்வ விமர்சனத்தைப் புரிந்து கொள்ளும் அளவு பக்குவம் உள்ளவர்களா என்று தெரியலை.
ஆஸ்கார் விருதுக்கு முழி பிதுங்க முயற்சி செய்து விட்டு, தனக்கு இது போன்ற விருதுகள் கிடைக்காது என்று தெரிந்த பின், அந்த விருதையே குறை கூறும் அறிவு ஜீவிகள் அல்லவா, நாமெல்லாம்?
My two cents ;)))
மேடம் ,
மொத்த அவார்டையும் இங்க நம்ம விஜய்க்கு ஒரு பார்சல் அனுப்புமாறு கேட்டு கொள்ள படுகிறது
தமிழ் நாட்டில் இப்படி விருது கொடுத்தால் விஜய்க்கு தான் கொடுக்கணும் அவ்வ்வ்வ
The Golden Raspberry Award- ஐ நடிகர் விஜய்க்கு கொடுப்பதற்கு நடிகர் ராமராஜன் தவிர வேறு யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
இரண்டாவது அவார்ட் உங்களுக்கே கொடுக்கலாம். மாட்டுச் சாணத்தில் இருந்து வனில்லா (vanilla) flavoring எடுக்க முயன்றதை போல எங்களிடம் இருந்து நல்ல கமென்ட்-ஐ பெற முயன்றதற்காக........
சுவா'ஹாஸ்யமா இருக்குங்க !
டார்வின் அவார்ட் :))))
ம்ம்ம்ம் சூப்பர் அக்கா.
ஆஸ்கார் மட்டுமா விருது..?
வடை போச்சே-ன்னு ஒரு விருது கொடுக்கலாமா? யாருக்கா எனக்குதான்.... விருதை பத்தி படிச்சிட்டு சும்மா போவ முடியும? அவ்வ்வ்.
பின்ன எப்ப வந்து பார்த்தாலும் எனக்கு முன்னாடி ஒரு 100 பேர் பின்னூட்டம் போட்டுடுராங்க.
வர வர நீங்க போற போக்கு ஒன்னும் சரியா இல்ல, பின்ன வெட்டிபேச்சுன்னு விருதைப்பத்தி பேசிகிட்டு இருக்கீங்க.
சித்ரா, இவ்வளோ விருதை சொன்னீங்களே, இங்க அமெரிக்காவில் "ஜாக் ஆஸ்"-ன்னு ஒரு விருது, அலுவலக போட்டிகளில் ரொம்ப பேமஸ், அதையும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்... மேலும் விபரங்களுக்கு...
http://www.awardsmall.com/Jackass-Award_p_295.html
புதிய தகவல்கள். Ungalukku oru awardu kodukkalaam.
அட!
வித்தியாசமான தகவல்கள்!
முற்றிலும் புதிய தகவல்..!
புதுசா விசயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது..
படிக்கப் படிக்க நல்லாயிருந்தது..
இப்படியெல்லாம் இருக்கா? Thanks for sharing
செம கலக்கல் சித்து.. பதிவர்களுக்கும் இந்த விருது உண்டா..:)
செம கலக்கல் சித்து.. பதிவர்களுக்கும் இந்த விருது உண்டா..:)
நீங்க எங்கையோ போயிட்டீங்க
good post.......
அடேங்கப்பா..விருது ஆராய்ச்சியெல்லாம் பலமா இருக்கு போல..
சித்ரா எனக்கு என்ன விருது கொடுப்பீங்க.. ஹி ஹி ஹி ஹி..
இளைய தலைவலிக்கு இன்னுமொரு அவார்டா?
//
போதுமான அளவு பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, ட்யாஂக் உள் இருட்டாக இருக்கிறதே என்று, கையில் இருந்த சிகரட்டு லைட்டர் கொண்டு பற்ற வைத்து உள்ளே எட்டி பார்த்த ஒருவர்,
//
எங்கள் ஊரில் ஒரு பையன் T.V.S 50 பெட்ரோல் டாங்கில் தீகுச்சி கொளுத்தி பெட்ரோல் இருக்கிறதா என்று பார்க்க வண்டி பற்றி எறிந்தது.. நல்ல வேளையாக அந்த பையன் லேசான காயத்தோடு தப்பித்து விட்டான்...
என்ன வம்பிலை மாட்டி விடப்பார்க்கிறீங்க? எங்க ஊரிலை இதெல்லாம் குடுக்க முடியுமா? குடுத்தாலும் வாங்குவாங்களா? குடுத்தவங்க கையை வெட்டிட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க.
இன்றைக்கு நான் நரி முகத்தில் விழித்து இருக்கவேண்டும்.இந்த ப்ளாக் என் கண்ணில் பட்டதிற்கு
வயிறு சிரித்து புண்ணாகி விட்டாலும், நயமாக,நகைச்சுவையோடு சில உண்மைகளை சொல்லி இருக்கிறீர்கள் .
நீங்கள் சொன்ன பரிசுகளில் என்ன கஷ்டம் என்றால் ,அதற்கு தகுதியானவர்கள் கணக்கில் அடங்கோர்.
சிறந்தவர்களை பொறுக்குவது எளிது . . மோசமனவர்களை தேர்ந்து எடுப்பது கஷ்டம்.
இனி தவறாமல் உங்கள் ப்ளாக்க்கு வருவேன்.என் வாழ்த்துக்கள்
அடடே கலக்கலா இருக்கே
நம்ம ஊருக்கும் கொடுத்த என்ன ?!?!?
நீங்களே ஓட்டு நடத்துங்களேன்
""unga pathiva padiththa enakku
enna award koduppeenga?""
எச்சூச்மி கங்ராசுலேசன் அண்ட் நன்றி இந்த மூணு அவார்டும் வாங்கி நம் பிளாக் உலகிற்கு பெருமை தேடித் தந்ததற்கு
அப்படியே பதிவுலகத்திலேயும் இதை அறிமுகப்படுத்தினால் நல்லா இருக்கும் ... :)
அருமையான தகவல்கள் சித்ரா..
நகைச்சுவையோடு தந்தமைக்கு நன்றி..
நல்ல தகவல்கள். கடைசியில் பொருத்தமானவர்களை பரிந்துரைக்கவும் சொல்லியிருக்கிறீர்கள்:)!
இங்கு ஒரு பால்காரர் அதிகாலையில் பால் ஊத்த கிளம்ப முன் வண்டியில்(XL super)பெட்ரோல் இருகிறதா என பார்க்க மனைவியை அழைத்து விளக்கை எடுத்து டேங்க் அருகி்ல் காட்ட சொல்லி இருக்கிறார். பிறகு அவர்கள் இருவருக்கும் உறவினர்கள் அடுத்த நாள் பால் ஊற்றினார்கள்.இவர்கள் முட்டால் தனத்தால் அவர்களின் பையன் ஆனாதையாகி விட்டான்.சரி அதெல்லாம் இருக்கடும்.விருதுக்கு ஆட்களை நாங்கள் தேர்வு செய்து கொடுத்தால்,நாங்கள் அமெரிக்காவில் வசிக்க நீங்கள் எங்களுக்கு விசா வாங்கி தருவீர்களா?.எங்கள் நாட்டை பற்றி என்ன நினைப்பு உங்களுக்கு.
very interesting.. ur explanations are superb
போட்டோக்கள் எல்லாம் பிரமாதம்.வெட்டிப்பேச்சு ரொம்ப ஸ்வாரஸ்யம்
இப்படி எல்லாங்கூட விருதுகளா.. ஆச்சர்யம்..
புதிய தகவல்கள்....ஆச்சர்யம்!!!!
அக்கா சோர விட்டு அடித்தாலும் நல்லா நோகும்படி சுள்ளிட அடிக்கிறிங்கள்....
என் தளத்தையும் ஒரு தளம் என்று முதல் 3 பேருக்குள் ஒடி வந்து பார்க்கும் தங்களின் குணம் மெய்ச்சத்தக்கது...
Are you serious? The "death award" sounds sadistic if it is really happening! :(
Seriously, one need to apply for such award and, to be nominated for such awards or not? Otherwise such organization will be facing lots of law suits!
Present,madam..
ஹாஹா நல்லா இருக்கு
ஆர் வி எஸ் தவிர வேறு யாரும் புதிதாய் பரிந்துரைக்கவில்லை போலும். எனக்கு புதிய தகவல்கள்...
நல்லாவே புகுந்து
விளையாண்டிருக்கீங்க!
:)
awards famous citra,vaazka
சித்ரா....
விருதுகளை அக்குவேறு, ஆணிவேராக பிரித்து மேய்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...
என்னோட ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க... எங்க “கேப்டன்” நடிச்சு அடுத்து வெளிவரப்போற படம் “விருத்தகிரி”.... இதுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா??!!
அடேங்கப்பா...65 ஓட்டா...இன்ட்லில...முதல் முறையா இவ்வளவு ஓட்டை...வாங்கி அதையும் தாண்டி வெற்றிகரமா ஓடிட்டு இருக்கற உங்களுக்கு விருதோட காத்திருக்கோம்...நாங்க...ஆனா உங்க வெற்றி ஓட்டம் நிக்கற மாதிரி தெரியலையே....
உங்க கேப்டனுக்கு ஆஸ்கார் கிடைக்காது...ஆனா அதுல அவரு ரொம்ப ரோசக்காரரா நடிச்சிருக்காருன்னு சொன்னாங்க...அதனால ரோஸ்கார் விருது வேனா கிடைக்கலாம்.....
ரொம்ப சுவாரஸ்யமான தகவலாதாங்க இருந்தது...சீரியஸான பதிவலயும் உறுதிமொழியெல்லாம்...போட்டு சிரிக்க வெச்சிடறீங்களே...கலக்கல்...
அப்புறம் இதோ...இதுல நீங்க இன்னொரு சாதனையும் பன்னிட்டீங்க....100 கமெண்ட் வாங்கிட்டீங்க பாருங்க(கும்மில்லாம் இல்லாமலே) அதுக்கும் எதாவது விருது இனிமேதான்...ஏற்பாடு பண்ணனும் நாங்க...அப்புறம்...நான் தான் இந்த நூறாவது பின்னூட்டத்தைப் போட்டிருக்கேன்...அதுக்கு...எதாவது கிடைக்குமா...
புதுசா இருக்கு இது. 'கொஞ்சம் வெட்டிப் பேச்சு'க்கு கொஞ்சம் லேட்டா தான் வந்திருக்கேன் போல. ஆனா இது வெட்டிப் பேச்சா தெரியல. பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா.
வெட்டி பேச்சு ம்ம்ம் சித்ரா...
அசத்திட்டிங்க ....
இப்படியெல்லாம் கூட விருது தராங்களா....
நம்ம ஊர்ல அறிவித்தவுடனே எல்லா விருதுகளுமே விலைக்குபோய்விடுமே ...சித்ரா
dear madam ur blogger v nice
im right now swiss hospitality industry kitchen art's kuwait \
hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession
வித்தியாசமான தகவல் பதிவுங்க..! அதுவும் அந்த வக்கீல் ஓடிவந்து ஜன்னலில் இடித்துபார்த்து... கோடிட்ட இடத்தை நிரப்பும்போது, நிலைகொள்ளமுடியவில்லை..! ஆனால், இது போன்ற அவார்டுகளும் தேவைதான் என்று தோன்றுகிறது...
-
DREAMER
மீ க்கு என்ன அவார்ட் தர போறீங்க?
அமெரிக்காங்கிறதால, இந்த விருதுகளெல்லாம் சாத்தியப்படுகீறது; இங்க தமிழ்நாட்டில யாருக்காவது இப்படி விருதுகள் கொடுத்தால், அதைக் கண்டித்து சிலபல் பஸ்களும் (பய்னிகளோடு), செய்தியை வெளியிட்டதற்காக நிறுவனத்தையும் (பணியாளர்களோடுதான்) எரித்துக் கொண்டாடுவார்கள்!!
புல்லரிக்குதுங்க ... அப்பா எனக்கும் அவார்டெலாம் கெடைக்கும் ன்னு சொல்ல வரிங்க சுத்தி வளச்சு..!! அப்டி தான ?? ஹஹா ... நல்ல பதிவு மேடம்...
Post a Comment