நாங்கள் வழக்கமாக செல்லும் ஆலயத்தில், ஒரு விழா. அங்கே Buffet style dinner இருந்தது. நாங்களும் மற்றவர்களுடன் வரிசையாக நின்று கொண்டு இருந்தோம். நீண்ட வரிசையில், மிகவும் பின்னால்தான் நாங்கள் நின்று கொண்டு இருக்க, எதேச்சையாகத் திரும்பி பார்த்தேன். எங்கள் பின்னால், எங்கள் 'பங்கு கோயில் தந்தை' (Parish Priest) மற்றும் Diocese Bishop இரண்டு பேரும் உணவுக்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களது humility பார்த்து அசந்து விட்டு, ஊரு பழக்கத்திற்கு மரியாதையுடன், "Father, why don't you sit down? We can bring some food and serve you, " என்று சொன்னதும் ஆச்சர்யமுடன் பார்த்தார்கள். "Thank you. We are fine. we will serve ourselves," என்று சொல்லிவிட்டு எங்களுடன் மிகவும் சாதரணாமாக உரையாட ஆரம்பித்தார்கள்.
அடுத்த அதிசயமாக, நாங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு, dessert (இனிப்பு) சாப்பிட ஆரம்பித்த வேளையில், எங்களுக்கு முன்பே சாப்பிட்டு முடித்து விட்டிருந்த Parish Priest, ஒவ்வொரு டேபிள் ஆக சென்று சாப்பிட்டு முடித்தவர்களின் தட்டுக்களை எடுக்க ஆரம்பித்து விட்டார். ஒரு பெரிய basin உள் எல்லாவற்றையும் வைத்து எடுத்துக் கொண்டு போய், கழுவும் இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டு வந்து கொண்டு இருந்தார்.
எந்த வித மரியாதையும், சேவையையும் எதிர் பார்க்காமல், தன் பங்கு கோயிலின் வேலைகளை முடிந்த அளவு தானே செய்து கொண்டு இருந்தவரை பாராட்டி விட்டு பேச்சு கொடுத்தோம். தன்னடக்கத்துடன் சிரித்துக் கொண்டு, எங்களிடம் சொல்லிய விஷயங்கள், எங்களை ஆச்சர்யப் பட வைத்தன.
"எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான். அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு, அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல், பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான் பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும். நீங்கள் இந்தியாவில் இருந்து வந்து இருப்பதால், இங்கு நடந்த ஒரு கதை உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சொல்கிறேன்.
கிறிஸ்டியன் ஹெர்டர் (Christian Herter) என்பவர், Massachusetts மாநிலத்தில் கவர்னர் ஆக இருந்து விட்டு, இரண்டாம் முறையாகவும் அந்த பதவிக்காக தேர்தலில் நின்றார். காலையில் இருந்து சாப்பிடாமல், தேர்தல் விஷயமாக அங்கும் இங்கும் வேலை நிமித்தம் அலைந்து கொண்டு இருந்தவர், மதியம் மிகுந்த பசியுடன், ஒரு ஆலயத்தில் நடந்து கொண்டு இருந்த Barbecue உணவுக்கு வந்தார். வரிசையில் நின்று, தன் முறை வரும் வரை காத்து இருந்தவர், மற்ற சைடு டிஷ் வாங்கி கொண்டு, தன் தட்டை கோழி பரிமாறி கொண்டு இருந்த பெண்ணிடம் நீட்டினார். Barbecue chicken piece ல் ஒரு துண்டு மட்டும் வைத்து விட்டு, அடுத்தவருக்கு பரிமாற அந்த பெண் முனைந்தார்.
மிகுந்த பசியுடன் இருந்த கவர்னர், " Excuse me. எனக்கு இன்னொரு துண்டு சிக்கன் தர முடியுமா?" என்று கேட்டார்.
அந்த பெண்ணும், " மன்னிக்கவும். ஒரு ஆளுக்கு ஒரு சிக்கன் பீஸ் தான் தர வேண்டும் என்று எனக்கு உத்தரவு இருக்கிறது," என்றாள்.
பொதுவாக எளிமை விரும்பியான கவர்னர், பசியினால் தனது பதவியின் பலத்தை பார்க்க முடிவெடுத்தார்.
"நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நான் தான் இந்த மாநிலத்தின் கவர்னர்."
அந்த பெண்ணும் விடாமல், " நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கோழி ரோஸ்ட்டை சரியாக பரிமாற அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள பெண். இப்பொழுது அடுத்தவர்க்கு வழி விடுங்க, " என்றார்.
("Do you know who I am? I am the lady in charge of the chicken to be served. Now move along, mister!")
கவர்னர் ஆக இருந்தாலும், அந்த இடத்தில் அவருக்கு அதிகாரமோ சலுகையோ இல்லை. அந்த பெண்ணின் பொறுப்புக்கும் கட்டளைக்கும் கட்டுப்பட்டவர் தான் கவர்னர் என்பதை புரிந்து கொண்டவர், தனக்கு கொடுக்கப்பட்ட உணவுடன் மறு பேச்சு பேசாமல் சென்றார்.
அவரவர் தங்கள் பணியில், தங்களுக்கு கொடுத்து இருக்கும் கடமைகளை தாழ்மையுள்ள மனசாட்சியுடன் செவ்வன செய்ய வேண்டும். இதில் ஆணவம் எதற்கு? பதவி தரும் மரியாதையில் மயங்கியவர்கள், பதவி போன பின், மன உளைச்சல்க்கு தான் ஆளாக வேண்டும்," என்று சொல்லி முடிக்கவும், எனக்கு தலை சுற்றி கீழே விழாத குறை.
என்னங்க...... ஒரு பந்தா செய்யத் தெரியாத அரசியல்வாதியா? நிஜமா - இதற்காகவே ஒரு பாராட்டு விழா எடுத்து, பெரிய மாலை போட்டு, பொன்னாடை போர்த்தி, தங்க கேடயம் கொடுத்து, ஜால்ரா அடித்து - சே, ச்சே, தப்பு ....தப்பு...... வாழ்த்தி பேசி, முதலிடம் முன்னுரிமை கொடுத்து, காலில் விழுந்து, தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, ............. ஓ!
ஆமா, நம்மூரில் அரசியல் வாதிகளுக்கு இம்பூட்டும் பண்றாங்களே, இது தனிப்பட்டவரின் மனிதாபிமானத்துக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, அவரின் பதவி செல்வாக்குக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, அவரின் பண பலத்துக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, இத்தனையும் பண்ணலைனா, வூட்டுக்கு ஆட்டோ வருமே, அந்த பயத்துல பண்ற மரியாதையா? இல்லை, இப்படி பண்ணா, நமக்கும் சந்தடி சாக்குல கொஞ்சம் ஏதாவது பலன் கிடைக்குமே என்று நினைத்து கொடுக்கிற மரியாதையா? ம்ம்ம்ம்ம்ம்......... என்னவோ போங்க...... அந்த காலத்துல இருந்து அரசனை துதி பாடி..... துதி பாடி............................. ஜனநாயக நாட்டிலேயும் ஜால்ரா அடிக்கிறதே புளப்பா போச்சு!
இந்த மாதிரி, நம்ம ஊரிலேயும் இருந்த நல்ல அரசியல்வாதிகள் பத்தி - நடந்த சம்பவங்கள் பற்றி மக்கள் மறந்து போகாம இருக்க நிறைய எழுதுங்கப்பா ..... இல்லைனா, இப்போதைக்கு:
"கடமை (குடும்பத்துக்கு மட்டும்)
கண்ணியம் (அப்படினா கிலோ என்ன விலை?)
கட்டுப்பாடு (ஹா, ஹா, ஹா, ஹா, ..... செம.....)"
என்று சொல்றவங்களை மட்டும் தெரிஞ்சுக்கிட்டு, மக்கள் நொந்து நூடுல்ஸ் ஆகித்தான் இருப்பாங்க....என்ன என்னவோ கொள்கை, கோட்பாடு, தேர்தல் அறிக்கைகள் கொடுத்தாலும், எந்த அரசியல்வாதியும் சொல்ல வருவது என்னவென்றால், " நான் காமெடி பீஸ் ஆவதை தடுக்க, மக்களை காமெடி பீஸ் ஆக்கிடுவேன்."
ஹையோ, ஹையோ...... சர்ச்க்கு போனோமா - சாமி கும்பிட்டோமா - சாப்பிட்டு விட்டு வந்தோமானு இல்லாம, ப்லாக் இருக்கிற தைரியத்துல, இப்படி புலம்ப வச்சுட்டாங்களே!
122 comments:
உங்களின் இடுகையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்
http://blogintamil.blogspot.com/
ம். தமிழ்நாடா இருந்தா, அந்த பெண்ணோட வேலை காலி ஆகி இருக்கும்
வெட்டிப்பேச்சு எங்கள் மனதில் ஒட்டிப் போச்சு
"நான் காமெடி பீஸ் ஆவதை தடுக்க, மக்களை காமெடி பீஸ் ஆக்கிடுவேன்."
நல்ல கொள்கை!!
:-)
பொதுவாக எளிமையான அரசியல்வாதிகள் இந்தியாவில் ரொம்பக் கம்மிதான் என்பது நிஜமான ஆதங்கம். நகைச்சுவையாக இல்லாமல் போனால் என்ன, இது போன்ற இடுகைகளும் அவ்வப்போது எழுதுங்கள் - என்னை மாதிரி குண்டுச்சட்டியிலே குதிரை ஓட்டுறவங்க படிச்சுத் தெரிஞ்சுப்போமில்லே? :-)
Hi akka,
lovely lovely...keep writing...
Dr.Sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com
உருப்படியான பேச்சு.. இதைப்போய் வெட்டிப்பேச்சுன்னு சொல்றீங்களே :-))
இந்தியாவைப்பொறுத்தவரை நாமெல்லாம் எப்பவோ காமெடி பீஸ் ஆகியாச்சு :-)))))
good one chitra
வெட்டிப் பேச்சு - டக்கர்..
//பிடிக்காதவங்க, "அபௌட் டர்ன்," ப்ளீஸ்.//
எனக்குபுரியுது 'உள்குத்து'
நல்லவேளை, இதை மொதல்ல போட்டீங்க.. இல்லேன்னா நெறையபேரு இந்த பதிவ படிக்காமப் போயிருப்பாங்க..
//எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான். அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு, அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல், பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான் பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும். //
very true.
நம்ம நாட்டுல அமைச்சர் சென்னையில இருப்பாரு.. கன்னியாக்குமரில இருக்குற அவரோட உறவினர் (அதாங்க தூரத்து சொந்தக்காரரு) கூட அலப்புற அளப்பு பாருங்க.... ஸ்.. ஸ்.. ஸ்.. அப்பப்பா .. தாங்க முடியாது..
நீங்க அமெரிக்கால இருக்கீங்க. அதனால தைரியமா பதிவு போடலாம். நாங்க அடக்கி தான் வாசிக்கணும் இல்ல அடக்கம் பண்ணிடுவாங்க.
நீங்க அமெரிக்கால இருக்கீங்க. அதனால தைரியமா பதிவு போடலாம். நாங்க அடக்கி தான் வாசிக்கணும் இல்ல அடக்கம் பண்ணிடுவாங்க.
காமராஜரின் எளிமை குறித்து படித்திருக்கிறேன். இப்ப உள்ளவங்களில் இது மாதிரி யாரும் இருக்காங்களான்னு லென்ஸ் வச்சுதான் கண்டு பிடிக்கணும் :))
வாழ்க ;-)
chitra.. great to read this. as here parish priests are worse than politiacians. they eat selling Jesus.
"எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான். அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு, அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல், பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான் பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும்...........நம் அரசியல் வாதிகளுக்கு இதெல்லாம் எங்கே புரிகிறது? காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழி இவர்களுக்காகவே இருப்பதாக நினைத்துக் கொண்டு, பணம் பதவி கொடுக்கும் அதிகாரம் எல்லாவற்றையும் அப்பொழுதே அனுபவித்துவிட வேண்டும் என்ற பேராசை மட்டுமே உள்ளது....பிறகெங்கே சேவையைப் பற்றியெல்லாம் எண்ணம் வரப் போகிறது.........நல்ல பகிர்வு சித்ரா. வாழ்த்துக்கள்.
ஹையோ, ஹையோ...... சர்ச்க்கு போனோமா - சாமி கும்பிட்டோமா - சாப்பிட்டு விட்டு வந்தோமானு இல்லாம, ப்லாக் இருக்கிற தைரியத்துல, இப்படி புலம்ப வச்சுட்டாங்களே
athae athae athaethaaaaaaaaaaaaaan
நல்ல பகிர்வு
டாப் டக்க்ர் வெட்டி பேச்சு,
உங்க வெட்டி பேச்சுக்கு தான் நிறைய அவர்டு கொடுக்கனும், படிக்க படிக்க சலிக்காத வெட்டி பேச்சு.
நிறை குடம் எப்போதும் தழம்புவது இல்லைத்தானே அக்கா... உங்களுக்கென்ன நிங்க அமெரிக்கா ஆனால் நாங்க இலங்கை அதுவும் யாழ்ப்பாணம்.... எழுதக் கூடியதை மட்டும் எழுத வேண்டியது தான்...
என்னன்னு சொல்றது..
நம்ம ஊர்ல வட்டங்களே கொம்பு முளைச்ச ரேஞ்சுல இருக்குது.
அருமை அனைத்தும் உண்மையா!!!!!!!!!!! ஆச்சர்யமாக உள்ளது. நம்ம ஊரிலும் இது போல் இருந்தால் எப்படி இருக்கும்.
super
நல்ல பதிவு சித்ரா!
தமிழ்நாட்டுல உள்ள அரசியல் வியாதிகள் எப்போ இந்த மாதிரி மாறப் போராங்களோ?
ஆண்டவனுக்கே வெளிச்சம்..
அடடா இதே நம்ம ஊரை கொஞ்சம் நினச்சு பார்த்தேன் தலை சுத்துது
ம்கும். டமிலன் கவர்னருக்கு மட்டுமில்ல கவ்னர் பீடிக்கும் பயப்படுவான்..சிங்கம்ல:))
இந்த link-யை நிதி குடும்பத்துக்கு அனுப்பவும்..
ம்ம்ம்...நல்ல பகிர்வு
உருப்படியான பேச்சு.. இதைப்போய் வெட்டிப்பேச்சுன்னு சொல்றீங்களே?????
நம்ம ஊற இருந்த அந்த பெண் பாவம்..அந்த பாதேருக்கு எத்தனை பொறுமை..வியக்க வைத்துவிட்டது உங்க பதிவு...இதெல்லாம் படிக்கும் பொழுது நம்ம இந்தியாவும் இப்படி ஆகாதான்னு ஆசையா இருக்கு..
வாழ்த்துக்கள்
பாராட்டப்பட வேண்டிய பெண்..
நம்ம நாட்டில அரசியல்வாதிகளை பகைச்சுக்கறது.. சாக்கடைக்குள்ள தலைகீழா குதிக்கறதுக்கு சமம்..
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
பெரிய பதவிகள்ல இருப்பவர்கள், அவங்களே சும்மா இருந்தாலும் அவங்க வகிக்கிற பதவி அவங்களை சும்மா இருக்கவிடாது.
ஆனா சிலர் ரொம்பவும் வரம்புமீறி நடந்துவிடுவார்கள்.
அரசியல்ல இதெல்லாம் சகஜம்மா.. :))
நல்ல பகிர்வு சித்ரா..
இது நம்ம ஊருக்கு ஒத்து வராதுங்கோ....
\\ அமைதிச்சாரல் said...
உருப்படியான பேச்சு.. இதைப்போய் வெட்டிப்பேச்சுன்னு சொல்றீங்களே \\
:-)))
// ம்ம்ம்ம்ம்ம்......... என்னவோ போங்க...... அந்த காலத்துல இருந்து அரசனை துதி பாடி..... துதி பாடி............................. ஜனநாயக நாட்டிலேயும் ஜால்ரா அடிக்கிறதே புளப்பா போச்சு!//
ஹி....ஹி....... பழகிபோச்சிடா செல்லம்...
\\இந்த மாதிரி, நம்ம ஊரிலேயும் இருந்த நல்ல அரசியல்வாதிகள் பத்தி - நடந்த சம்பவங்கள் பற்றி மக்கள் மறந்து போகாம இருக்க நிறைய எழுதுங்கப்பா ..//
உண்மை ..நல்லவிசய்ங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்.. ( புதுசா நல்லது நடக்கலன்னா என்ன செய்யறது பழய நல்லதுயாச்சும்)
சித்ரா! அருமையான ஒரு விஷயத்தை எடுத்து சொல்லிட்டீங்க!
எல்லோருமே தலைகணம் இல்லாம இருக்கணும்னு ஒரு கலாச்சாரம் அமெரிக்காவில இருக்கு! அதனால தான் அது பல மோசமான விஷயங்கள் அதிகம் இருந்தாலும் அது இன்னமும் முன்னனியில இருக்கிற நாடா இருக்கு!
சரி சித்ரா! பதிவு போட்ட 2 மணி நேரத்தில எப்படி 37 கமெண்ட்ஸ்.
எனக்கு அந்த ரகசியத்தை சொல்லி தரக்கூடாதா?
இந்தியாவில் நடக்கும் வெட்கக்கேடான விசயங்களை பற்றியும்,வெளிநாடுகளில் இருக்கும் நல்ல விசயங்களைப் பற்றியும் பேசினாலும்,எழுதினலும் சில நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கு கோவம் கோவமாக வருமே?
எப்படி தப்பிக்க போகிறீர்கள்.
தமக்கு கொடுத்த பொறுப்பு மிக சிறிதாக (V.A.O போல) இருந்தாலும்,அதை அதிகாரமாக்கி,பின்னர் (தமது மக்கள் மேலேயே)துஷ்பிரயோகம் செய்வதர்க்கு உலகிலேயே இந்தியர் போல எவருமிலர்.
பகிர்வுக்கு நன்றி
இங்கு உள்ள அவல நிலையை இதை விட அழகாக எழுத முடியாது.
இவ்வளவு நாசூக்காக சொல்ல வேண்டியதை சொல்லி இருப்பதையும் கண்டு. அசந்து போய்விட்டேன் பாராட்டுகள்
தலைப்பை பார்த்து அதானே!சொல்ல நினைச்சா இப்ப பெருமூச்சு வருது!
இடுகை அச்சு ஊடகத்தின் கண்ணுல பட்டா மகிழ்வேன்.
ஒரு காலத்தில் காமராஜரும் கக்கனும் வாழ்ந்த நம் தமிழ்நாடு இப்போது இந்த நிலைமைக்கு வந்துவிட்டது
கை தட்டல் சத்தம் கேட்டுதா சித்ரா..
ஹூம்.. புலம்புறதைத் தவிர என்ன செய்ய முடியுது?
இவ்வளவு ஏன், வெளிநாடுகள்ல Mr. President, Mr. Prime minister or Mr. Obama இப்படி அவங்களை நாம அழைக்க முடியும். (அப்படி அழைக்கும்போதே ஒரு உரிமை, நெருக்கம் வரும்)ஆனா, நம்மூருல, தலைவரே, வீரத்தளபதியே, அம்மா, ஐயா, சின்னத் தலைவரே, கேப்டன் இப்படித்தான் கூப்பிடணும்!! ஆரம்பமே இப்படி இருக்கையில, எங்க சட்டதிட்டம் பேசுறது!! போங்க, போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்க!!
Nice article..
அட...
இங்க கவர்னரோட பிஏ சிக்கன் கேட்டாலும் அந்த பொண்ணு கொடுத்து தான் இருக்கனும்... இல்லைனா அந்த பெண்ணின் வேலை அம்பூட்டுதான்..
உங்களின்பதிவு அருமை.. நமது நாடும் இந்த நிலைக்கு வந்தால் நல்லா தான் இருக்கும்..
//ஹையோ, ஹையோ...... சர்ச்க்கு போனோமா - சாமி கும்பிட்டோமா - சாப்பிட்டு விட்டு வந்தோமானு இல்லாம, ப்லாக் இருக்கிற தைரியத்துல, இப்படி புலம்ப வச்சுட்டாங்களே!//
இதனாலதான் நாங்கல்லாம் கோயில், குளம்னு போறதில்ல.
ஆத்தாடி இப்படியுமா? நம்ம ஊரில் எக்ஸ் கவுன்சிலர் பண்ற பந்தாவே தாங்கமுடியாது....என்னவோ சொல்றீங்க போங்க சித்ரா....
நம்ம ஊர் அரசியல்வாதிகளும் இப்படி இருந்தா சந்தோசம் தான் . அதவிட நாம அவுங்கள எதிர்க்கும் போது அந்த கவர்னர் மாதிரி தொடர்ந்து நம்மளோட வேலையா செய்ய விடனும் ..!
...நல்ல பகிர்வு
மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். எங்கள் நாடுகளில் அத்தகையவர்களை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடியும்.
எனக்கு உங்க வெட்டி பேச்சு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சித்ரா ..இந்த பதிவு ரொம்பவே சூப்பர் ..
சித்ரா நம்மூரு நல்ல ஊருதான், கக்கன், அழகேசன் போன்ற அமைச்சர்கள் பந்தா இல்லாம இருந்த ஊருதான், அப்புறம் வந்த அல்லக்கைகள் பண்ற லூட்டியிலே தான் இப்போ சொம்பு கூஜா எல்லாம் அல்லாடுது. .
வெட்டியான விஷயம் எதுவும் இல்லாமல் கெட்டியாக மனதில் பதியும் நல்ல பதிவு...
************
சே, ச்சே, தப்பு ....தப்பு...... வாழ்த்தி பேசி, முதலிடம் முன்னுரிமை கொடுத்து, காலில் விழுந்து, தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, ............. ஓ, இது தமிழ் நாடு இல்லையோ?
*****************************
*தமிழ்நாட்டை கொச்சைபடுத்திதான் உங்கள் பதிவில் நகைச்சுவை சேர்க்க வேண்டுமா? இந்த வரியை படிக்கும்போது எனக்கு கோபம் வந்தது, ஆனால் என்ன செய்வது சிலர் செய்யும் தப்புக்கு எங்கள் தமிழ் நாட்டின் மானம் கப்பல் ஏறுகிறது.
-தவிர்க்கவும்
*நல்ல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
-ஆப்பு
**************************
என்னது நானு யாரா? said...
சரி சித்ரா! பதிவு போட்ட 2 மணி நேரத்தில எப்படி 37 கமெண்ட்ஸ்.
எனக்கு அந்த ரகசியத்தை சொல்லி தரக்கூடாதா?
***************************
"என்னது நானு யாரா?" இந்த இடத்தில் சித்ரா,ரம்யா, திவ்யா என்று ஏதோனும் ஒரு பெண் பெயர் போட்டு பாருங்கள் உங்களுக்கும் விழும் ஓட்டு(37 கமெண்ட்ஸ்.),
-ஆப்பு
உண்மையான பக்தி உள்ளவர்களுக்கு
தலைக்கனம் இருக்காது என்பது உண்மையே.
நேர்மையாக நடப்பவர்கள் எந்த அதிகாரிக்கும் அடிபனியமாட்டார்கள் இதுவும் ஒரு இறைநம்பிக்கையே.
பகிர்வுக்கு நன்றி.
எளிமையய் பற்றி எளிமையாய் ஒரு பதிவு
நல்லாயிருக்குங்க
இன்றைக்கு எளிமை என்பது அரசியைலில் இருப்பவர்களுக்கு இருக்க கூடாத தகுதி .(இந்தியாவில்), கடைசியாக வாழ்ந்த மனிதர் காமராஜர் ,கக்கன் தான் நம்மளை தான் குறை சொல்லிக்கணும் :(
வீட்டுக்கு ஆட்டோ இல்ல. இல்ல.. லாரி அனுப்பணும்.. அட்ரஸ் ப்ளீஸ்..!
அருமையான பகிர்வு...
அருமையான பகிர்வு...
அங்கே எல்லோரும் க.க.க. கடைபிடிக்கராங்களோ. ரொம்ப ராங் ஆச்சே சித்ரா...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கிருத்தவத்தின் அடிப்படையே மற்றவர்க்கு சேவை செய்வதுதானே.
இங்கு நமது கலாச்சாரம் சற்று மாறுபட்டதுதான்.
இயல்பாய் சொல்லியிருக்கிரீர்கள்
வாழ்த்துக்கள்
இதுதான் நம்மநாடும்....வெளிநாடும்.
உங்க பாணியில சொல்லி அசத்திட்டீங்க சித்ரா !
இப்பவெல்லாம் ஆட்டோ போய்...ஷேர் ஆட்டோவே வருது....சாதாரண வார்டு கவுன்சிலர் கூட கலக்டரையே மிரட்டி பேசமுடியும்
athu oru azakiya kana kazam.
நல்லா இருக்கு சித்ரா இந்த பதிவும் அதில் இருந்த விஷயமும்.
எப்படிபட்ட பதவியில் இருந்தாலும் எளிமையாக இருப்பது நல்லது உங்க கோயில் பங்குதந்தை போல!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
நானும் பல முறை இதை நேரில் பார்த்திருக்கின்றேன். வியந்திருக்கின்றேன்.
நம்ம ஊர்ல, பங்குத் தந்தைகள் என்றால் அரசர்கள் மாதிரிதான். especially in villages.
இருப்பார்கள். மேற்றானியர்களை (பிஷப்ஸ்) கேட்கவே வேண்டாம்.
"ஆமா, நம்மூரில் அரசியல் வாதிகளுக்கு இம்பூட்டும் பண்றாங்களே, இது தனிப்பட்டவரின் மனிதாபிமானத்துக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, அவரின் பதவி செல்வாக்குக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, அவரின் பண பலத்துக்கு கொடுக்கிற மரியாதையா? இல்லை, இத்தனையும் பண்ணலைனா, வூட்டுக்கு ஆட்டோ வருமே, அந்த பயத்துல பண்ற மரியாதையா? "
சித்ரா,
அப்படியே குஷ்புவுக்குக் கோயில் கட்டி யும், இன்னும் பல சினிமா நடிகர்களுக்குப் பாலாபிஷேகமும், கற்பூர ஆர்த்தியும் செய்து பக்தி/மரியாதையைக் காட்டும் கலாசாரத்தையும் சுட்டிக் காட்டிப் பதிவு போடுங்கப்பா...
ரசிகர்களிடம் இருந்து ஆட்டோ வந்தால், என்னைக் காட்டிக் கொடுத்துராதிங்க, ;))))
நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் மேடம் , ஆனாலும் இந்தியாவிலும் அந்த மாதிரியான அரசியல் வாதிகள் கொஞ்சம் இருக்கிறார்கள் , நமது பக்கத்து மாநிலங்களான பாண்டிச்சேரி , கேரளா இரண்டிலும் முதலமைச்சர்களை மிக சாதாரணமாக யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் , பாண்டிச்சேரி முதல்வர் ஒரு முறை பாண்டிச்சேரி பஸ்டான்ட் அருகில் முகச்சிறு டீ தடை ஒன்றை திறந்து வைத்து , டீ சாப்பிட்டார் வேறு யாரும் அவருடன் வரவில்லை (ஒரே போலீஸ் வண்டி அதுவும் தூரமாக நின்றது ) நாங்களும் டீ சாப்பிட்டு விட்டு என்னடா இவரு முதலமைச்சர் மாதிரி இருக்காரேன்னு கேட்ட பிறகு தான் எங்களுக்கே அவர் முதலமைசேர் என்று தெரிந்தது , (எனக்கு முதல்லே டவுட் இருந்தது , ஆனா ஒரு முதலமைச்சேர் டீ கடைக்கு வருவாரான்னு நம்பள ) . அதே போல் கேரளா எந்த அமைசர், அரசியல் வாதிகளும் தனியாகத்தான் வருவார்கள் , யார் நினைத்தாலும் நினைத்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்க்கலாம் , எந்த தடையும் கிடையாது . ஆனால் தமிழ் நாட்டில் ????????????????
அப்படியே சிறுவர்களை தகாத முறையில் பயன்படுத்தும் பாதிரிகளையும் குறிப்பிட்டு இப்படி நல்ல பாதிரிகள் இருக்குற ஊர்லதான் இப்படி கழிசடைகளும் இருக்குதுனு எழுதியிருந்தா இன்னும் நேர்மையா இருந்திருக்கும்..
கவர்னர பத்தி நீங்க சொன்ன கதை நல்லா இருந்துச்சி.
கமெண்ட் குமியறதுக்கு என்ன வைத்தியம் வச்சிருக்கீங்க? சொல்லித்தாங்களேன்..
//தமிழ்நாடா இருந்தா, அந்த பெண்ணோட வேலை காலி ஆகி இருக்கும் // repeat...
//எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான்.//
உண்மையான வார்த்தைங்க... எத்தன அரசியல்வாதிங்க இதை புரிஞ்சிருக்கானுங்கன்னு தெரியல... தன்னோட அதிகாரத்த துஷ்பிரயோகம் பண்ண முயன்ற அல்லது ஒப்புக்காக முயன்ற அந்த கவர்னர் கூட மதிக்கத்தக்கவராகவே இருக்கிறார் இந்திய வியாதிகளுடன் ஒப்பிடுகையில்..
சூப்பர் பதிவு சித்ரா....
இந்தப்பதிவு அனைத்து அரசியல்வியாதிகளுக்கும் பார்சல்ல்ல்ல்ல்......
Tamil Nada irundha..eppadi podhu makkal sapidaratha edathulaya poi thalaivarkal sapeduvangha!!!
எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான். அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு, அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல், பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான் பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும். // ethu purinjaa..namma arisiyal thalaivarkal ellam engayo poiduvanga..
சிலதெல்லாம் இங்கே பாக்கறப்போ, நம்ம ஊரை நெனைச்சு பெருமூச்சுதான் விட முடியுது!!!
தமிழ் மணம் மகுடம்........வாவ்....வாழ்த்துக்கள் சித்ரா.. GOD BLESS YOU!
தெய்வமே உங்களை அந்த கர்த்தர் ஆசிர்வதிக்கட்டும்.
எப்படி இப்படி திடீர் இம்புட்டு சீரியஸ் ஆஆஆஆஆஆஆ
ரொம்ப சரி! இருக்கிற இடத்திலே இருந்தாதான் யாருக்கும் மதிப்பு! தன்னியிலேதான் முதலைக்கு பலம்! தரையிலேதான் யானைக்கு பலம்...
நல்ல பகிர்வு சித்ரா.
Christian Herter??
இது எப்போ நடந்ததுங்க, சித்ரா?
///Christian Herter (b. 1895, d. 1966, Republican) ///
இவர் அறுபதுலயே போய் சேர்ந்துட்டாராம்.
ஏங்க, கவர்னர் பேரை வேணும்னே மாத்திக் கொடுத்து இருக்கீங்களா, சித்ரா?
இந்த லின்க் பாருங்க!
http://www.nndb.com/gov/911/000051758/
இந்த மாதிரி, நம்ம ஊரிலேயும் இருந்த நல்ல அரசியல்வாதிகள் பத்தி - நடந்த சம்பவங்கள் பற்றி மக்கள் மறந்து போகாம இருக்க நிறைய எழுதுங்கப்பா .....
..... Varun Sir,
"இருந்தார்" ....என்று சொல்லி இருக்கிறேனே.... தெளிவாக இல்லை என்பதற்கு வருந்துகிறேன். இத்துடன், நாங்கள் சந்தித்த பழைய Texas கவர்னர் பற்றியும் எழுத நினைத்து இருந்தேன். பதிவின் நீளம் கருதி, எழுதவில்லை.
May be it is my fault that I did not read the story carefully- I thought it happened recently. Take it easy, Chitra :)
//ம். தமிழ்நாடா இருந்தா, அந்த பெண்ணோட வேலை காலி ஆகி இருக்கும் //
LK sir,நம்ம ஊர் எண்டா அந்த பெண்ணே காலியாய் இருக்கும்.
X:"why don't we dismiss this lady by saying her documents are scam?"
Y:"why don't we change Massachusetts as Tamil Nadu?"
//இன்று பெருசா காமெடி எல்லாம் இல்லைங்க..... பிடிக்காதவங்க, "அபௌட் டர்ன்," ப்ளீஸ். //
அபௌட்டர்னா? யு-டேர்னா? (அட நீங்க திரும்பி பார்க்கரத சொல்லுலீங்க சித்ரா) வெட்டியிலிருந்து வெரைட்டிக்கு மாறின டேர்ன சொன்னேன். ப்ளீஸ் போட்டா அப்படியே போயிடுவோமா என்னா? படிச்சிட்டுதான் போவோம்.
இனிவரும் காலங்களில் நல்ல நல்ல அரசியல்வாதிகள் வருவார்கள் என்று நம்புவோமாக..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/
கடமை...
கண்ணியம்..
கட்டுபாடு....
சர்ச்க்கு போனாலும் அருமையாக செய்துள்ளீர்கள்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
//எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான். அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு, அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல், பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான் பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும். // அருமை. இவரைப் போன்றவர்களால்தான் கிறிஸ்தவம் வாழ்கிறது.
Impressive writing. Loved this piece.
மிகவும் வித்தியாசமான பதிவு. அட டா இப்படிகூட நல்ல மனிதர்கள் இருகிறார்கள்.
சூப்பப்ர்...ஆமாம் சித்ரா..இங்க இருப்பவங்க எல்லொரும் அவங்க அவங்க கடமைகளை சரியாக செய்வாங்க..
பூந்தோட்டம்!
LK said...
ம். தமிழ்நாடா இருந்தா, அந்த பெண்ணோட வேலை காலி ஆகி இருக்கும்//
LK சொன்னது உண்மை சித்து..:))
எளிமையா இப்ப எந்த அரசியல்வாதி இருக்காங்க :(
Very interesting...here sure that girl would have lost her job...
Nice writeup dear..
Tasty Appetite
ஹ்ம்ம்.சர்ச்சுக்கு போக் சாப்பிட்டு விட்டு இப்படி ஒரு புலம்பல்.
ஆத்தி இது எந்த ஒலகம்? நம்ம ஊர்ல கெவர்னரு மச்சானோட மச்சினிச்சிக்கும்ல பயப்பட வேண்டியிருக்கு!
நாமதான் கடைசி வரைக்கும் பதவியை விடமாட்டோமே அப்புறம் எப்படி பதவி போகும்.
//எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான். //
நிச்சயமா இது கோடியில் ஒரு வார்த்தை மேடம்.
சித்ரா உஙக பேச்சு சூப்பர். எல்லாரும் சொல்வது ஒரு உண்மை.இந்தியாவிலே நாம் இந்த மாதிரி பேசினால் பின்னாடியே வீடு இருந்த இடம் இல்லாமல் பன்னினாலும் பன்னுவாங்க.நமக்கு இந்தியாவில் எப்போதுமே மௌனமாக இருக்கனும் இல்லை எல்லாவற்றிர்கும் ஆமாம் சாமி போடனும்.அப்படி இருந்தால் தான் நமக்கு வாழமுடியும். தமிழ் உதயம் சொல்வது தான் நானும் சொல்கிறேன்.
மற்றபடி உங்க பேச்சு சூப்பர் + உங்களை யாராவது அரசியலுக்கு அழைக்கபோறாங்க.
வாஸ்தவம் தான்! நான் சின்னபிள்ளையா இருக்கும் போதிலிருந்து அடைமொழில்லாம் தனக்கு தானே வைத்துகொண்ட 'வெண்ணை' ஒருத்தன் படா அரசியல்வியாதி இப்ப எம் எல் ஏ ஆன ஒருத்தன் கார் கதவை திறந்து விட்டு கூழை கும்பிடு போட்டான். இது ஒரு வாரம் முன்னே நடந்தது. காறி என் மூஞ்சிலயே துப்பிகிட்டேன். வேற என்ன செய்வது!
இது வெட்டிப் பேச்சல்ல..
அங்கேயும் அப்படித்தானா..!
-
DREAMER
super akkaa
Thank you everyone! You are encouraging me to try out different topics. Thank you very much.
My heartfelt thanks to all the people, who read my posts - your comments and votes.
Thank you for the people, who follow my blog too.
Praise the Lord for His mercies! May God bless you all!
நம்ம நாட்டுல இப்படியெல்லாம் நடக்கணும்னு பேராசையெல்லாம் படக்கூடாது.
நல்ல,அருமையான பகிர்வு...
//அவரவர் தங்கள் பணியில், தங்களுக்கு கொடுத்து இருக்கும் கடமைகளை தாழ்மையுள்ள மனசாட்சியுடன் செவ்வன செய்ய வேண்டும். இதில் ஆணவம் எதற்கு? பதவி தரும் மரியாதையில் மயங்கியவர்கள், பதவி போன பின், மன உளைச்சல்க்கு தான் ஆளாக வேண்டும்," //
என்னவோ போங்க... வெட்டிப் பேச்சுன்னு தலைப்பு வெச்சிட்டு ஊடால நறுக்குன்னு நல்ல செய்தியும் சொல்றீங்க சித்ரா... வாழ்த்துகள்!!
நேற்று சீனியர் மேலாளர்களுக்கு மனோதத்துவ வகுப்பெடுத்தபோது எளிமை பற்றி பேச்சு வந்தது. உங்க கவர்னர் கதையைத் தான் சொன்னேன் சித்ரா மேடம். ரசித்தார்கள். வாழ்க..
நல்ல ஒரு மெசேஜ் சித்ரா!!
"எந்த ஒரு பதவியும் - அது தரும் மரியாதையும் மதிப்பும் அந்த பதவி உள்ள வரைதான். அதை யாரும் மறக்காமல் இருந்து கொண்டு, அந்த பதவியில் இருக்கும் போது கர்வம் இல்லாமல், பொறுப்புடன் தங்கள் கடமையை செய்தால்தான் பதவி போன பின்னும் மக்கள் மனதில், தனி அன்பும் மதிப்பும் இருக்கும்."
அருமையான பகிர்வு!
இந்த மாதிரி நம்மூரிலா?
திரு.அப்துல் கலாம் சொன்ன புகழ்பெற்ற வாக்கியமான ‘ கனவு காணுங்கள் ”தான் நினைவுக்கு வருகிறது!
சித்ரா, உண்மை தான். இங்கு அரசியல்வாதிகள் பந்தா பண்ணுவதில்லை. விமான நிலையத்தில் சாதரண பொது மக்களோடு மக்களாக நின்று, அவர்களும் செக்கிங், மெட்டல் டிடெக்டர் என்று எல்லா சம்பிரதாயங்களும் முடித்தே செல்கிறார்கள். நம்ம நாட்டில் என்றால் செக் பண்ணிய அதிகாரி வீட்டுக்கு போக வேண்டியது தான்.
பதவி வரும் போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா...ன்னு கண்ணதாசன் எழுதியதுதான்....
எவ்ளோ பெரிய ஆளாயிருந்தாலும் அது அந்த அந்த இடத்துக்குதான்...
//என்னவோ போங்க...... அந்த காலத்துல இருந்து அரசனை துதி பாடி..... துதி பாடி............................. ஜனநாயக நாட்டிலேயும் ஜால்ரா அடிக்கிறதே புளப்பா போச்சு!
//
வேற வழி... அவன் அவன் வயித்துப் பிழைப்புக்கு...போடுற கூத்துதான்... ! ஒரு விஜய்படத்துல வடிவேலு சொல்லிக்குவாறே.. சின்ன பகவதின்னு.....அப்டிதான்...கூட ஒட்டிக்கிட்டே...ஓட்டவேணாம பொழப்பை....?
இந்த கொம்ப இருக்கு? அப்படீன்றத எல்ல எடத்துலயும் அகங்காரம் இருக்கவங்க கிட்ட எடுத்து தைரியமா நாம கேள்வி கேட்கலாம்...!
Well said chitra!
அவங்களுக்கு மட்டுமா மரியாதை கொடுக்கணும் அவங்க கட்டி கிட்டது , வெச்சி கிட்டது , பேத்து போட்டது எல்லாத்துக்கும் சேத்து ல மரியாதை கொடுக்கணும் --- என்ன கொடுமை சரவணா இது ---nice post serious matter ha kuda comedy kalandhi eldhuringha..cheers
இந்தியாவிலும் அதுபோன்ற Church உண்டு
நேரமிருந்தால் கீளே உள்ள தளத்தைப் பார்க்கவும்
www.cfcindia.com
//ஹையோ, ஹையோ...... சர்ச்க்கு போனோமா - சாமி கும்பிட்டோமா - சாப்பிட்டு விட்டு வந்தோமானு இல்லாம, ப்லாக் இருக்கிற தைரியத்துல, இப்படி புலம்ப வச்சுட்டாங்களே!//
ஹா..ஹா.. இதான் சூப்பர் டச்..!!
Cartoons speak louder than the words or words speak more louder?
Post a Comment