Sunday, September 19, 2010

போலீஸ் ...... போலீஸ் .... போலீஸ்.....

வணக்கம்.   எனது முந்தைய இடுகை:  கவர்னர்னா கொம்பா முளைச்சு இருக்குது?   வாசித்து விட்டு சிலர், உணவு பரிமாறிய அந்த பெண்ணுக்கு வேலை போகாமல் இருந்தது குறித்து பின்னூட்டம் இட்டு இருந்தார்கள்.
இங்கு  சட்டம் ஒழுங்கு முறை,  கடமையை செய்வதற்காக  ஒத்துழைக்குமே தவிர, தடை செய்வதற்காக  அல்ல.

  அமெரிக்காவில்,  போலீஸ் துறைதான்  டிராபிக் பொறுப்பையும் பார்த்துக் கொள்கிறது.  (தனியாக டிராபிக் போலீஸ் என்று கிடையாது)    சாலை விதிகளை மீறும் போது, ஓட்டுனர்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பவோ, அபராதம் கட்ட சொல்லி "fine"  டிக்கெட் கொடுக்கவோ அவர்களுக்கு அதிகாரம் உண்டு.  மாட்டிக் கொண்டவர்கள் யாராக  இருந்தாலும்,    போலீஸ் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களே.  "எனக்கு அவரைத் தெரியும், இவரையும் தெரியும்," என்று பெருமை பேசுவது,  போலீஸ் (cop )காரர்களின் எரிச்சலைத் தான் சம்பாதித்துக் கொள்ள வைக்கும்.   தங்களை மறைமுகமாக மிரட்டுவதாகவே  கருதுகின்றனர்.

பெரும்பாலான ஊர்களில்,  போலீஸ்க்கும் அவரது வேலைக்கும் பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்கும் வகையில் - போலீஸ்  யாராவது செல்வந்தர் வீட்டினரையோ   அல்லது அரசியல்வாதிகளின் வீட்டினரையோ  தவறு செய்யும்போது நடவடிக்கை எடுத்ததற்காக, அந்த போலீஸ் தண்டிக்கப்படாமல் இருக்கும்படி சட்டம் உள்ளது.  நடவடிக்கை எடுத்த போலீஸ்க்கு மேலிடத்தில் இருந்து suspension,  transfer or dismissal பிரச்சினை இல்லை.  அதனால் எதை பற்றியும் - யாரைப்  பற்றியும் கவலைப்படாமல் கடமையை செய்ய முடிகிறது.

நிலைமை தலைகீழ்:   
  புஷ் ஜனாதிபதியாக இருந்தபொழுது, அவரின் மகள் ஜென்னா,  21 வயது ஆகும் முன்னே மதுபானம் வைத்து இருந்த குற்றத்துக்காக போலீஸ் துறையினரால் தண்டிக்கப்பட்டார்.
"Jenna W. Bush, one of President Bush's 19-year-old twin daughters, was cited for alcohol possession by a minor Friday morning, the Austin Police Department said."

மேலும், போலீஸ்க்கு லஞ்சம் கொடுக்க முயன்றவர்களை அந்த இடத்திலேயே கைது செய்வர்.  வெறும் அபராத தொகையோடு போய் இருக்க வேண்டியது,  அரெஸ்ட் வரை கொண்டு வரத்தான் லஞ்சம் "உதவி" இருக்கும்.
Fanning என்ற போலீஸ் கூறியுள்ளதை பாருங்கள்:   "Never try to buy off a cop.  In those instances where they've offered me a bribe," Fanning said,  "I loved making those arrests."
http://finance.yahoo.com/family-home/article/110666/what-not-to-say-when-pulled-over-by-a-cop

நேற்று,  நாங்கள் ஒரு கடைக்கு சென்ற பொழுது,  அங்கே வாசலில் ஒரு போலீஸ் நின்று கொண்டு யாரிடமோ பேசி கொண்டு இருந்தார். என் குழந்தைகள் அவரை பார்த்து விட்டு உள்ளே போகாமல்  தயக்கத்துடன் நிற்க,  அவர் புன்னகைத்து விட்டு,  அவர்களுக்கு ஹலோ சொன்னார்.  பிறகு, ஒரு கோமாளி படம் போட்ட ஸ்டிக்கர் ஒன்றை அவர்களுக்கு கொடுத்தார்.  நான் எதற்கு என்று கேட்ட பொழுது,  "குழந்தைகள் போலீஸ் கண்டு பயப்படக் கூடாது.  பின்னால் எதுவும் தேவைப் பட்டால், அவரை அணுகி உதவி கேட்கும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும்.  நான் அவர்களின் நண்பன் தான் என்று காட்டவே அப்படி செய்தேன்," என்றார்.  (பாசக்கார பயபுள்ள!)

விதிவிலக்குக்கு உள்ளானோர் இல்லாமல் இல்லை.....  அப்படிப்பட்ட போலீஸ் பிடிபட்டால்,  தண்டனையில் இருந்தும் தப்ப முடியாது.  சரி....சரி...... இனி, இங்கு நடந்த சில வேடிக்கையான  கைதாகிய சம்பவங்கள்  பற்றி பார்ப்போமா?   சீரியஸ் ஆக வேலை செய்து கொண்டு இருக்கும் போலீஸ்க்கு,   இந்த காமெடி பீஸ்கள் மூலம் சிரியஸ் டைம்க்கு பஞ்சம் இல்லை.
நான் "நம்பிட்டேன்":  

Melvin Jesse Blain, 31,  கடந்த வாரம் North Charleston என்ற ஊரில் உள்ள Wachovia வங்கி கிளைக்கு கொள்ளையடிக்க சென்று,  அங்கு இருந்த கிளார்க்கிடம்  ஒரு துண்டு பேப்பர் நீட்டினார்.   அதில்,  தனக்கு உடனடியாக $30,000 பணத்தை $100 நோட்டுக்களாக எடுத்து தரும் படி மிரட்டி எழுதி இருந்தார்.  அந்த பெண்ணும் பயப்படாமல் சீரியஸ் ஆக முகத்தை வைத்து கொண்டு,  "சாரி. என்னிடம் இப்பொழுது அவ்வளவு பணம் cash ஆக இல்லையே," எனவும்,  மெல்வின் அதை நம்பிவிட்டான்.  அந்த பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு,  (மரியாதை தெரிஞ்ச பயபுள்ள) ,  வங்கியை விட்டு வெளியேறி நடக்கவும், அந்த பெண் போலீஸ்க்கு போன் செய்து விட்டாள்.  உடனே வந்த போலீஸ்,  வெளியே நடந்து கொண்டு இருந்தவனை வங்கியை கொள்ளையடிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்தது.


முகமும் முகவரியும்: 

மேரிலன்ட் (Maryland) மாநிலத்தில் உள்ள Bowie என்ற ஊரில்,   கொள்ளையடிக்க வந்தவன் ஒரு துண்டு சீட்டில் தனக்கு வேண்டிய பணத்தை எழுதி, அந்த அளவு பணத்தை சத்தமில்லாமல் தன்னிடம் தந்து விடுமாறு கிளார்க்கிடம்  சொன்னான்.  அவரும் கொடுத்து விட, சந்தோஷமாக பணத்துடன் நேராக தன் வீட்டுக்கு சென்றான்.  ஆனால் வீட்டுக்குள் நுழையும் முன் போலீஸ் அவனை சுற்றி வளைத்து பிடித்தது. அவனுக்கோ ஆச்சர்யம்!  தன் வீடு எப்படி போலீஸ்க்கு தெரிந்தது என்று......  அவன் கொடுத்த துண்டு சீட்டில் தான் மேட்டர் இருந்தது.  அவன் தனது கொள்ளை மிரட்டலை எழுத உபயோகித்து இருந்தது:    அவன் முகவரி மற்றும் விவரங்களுடன் இருந்த பேங்க் deposit ஸ்லிப்பின் பின்னால்.  ( "புத்திசாலி" பயபுள்ள!)

தர்ம அடி: 

இந்த சம்பவம் நாங்கள் மயாமியில் குடி இருந்த பொழுது நடந்தது.  பாக்கிஸ்தானியர் ஒருவரின் குடும்பத்தினரால் "Miami Subs"  என்ற உணவக கிளை  நடத்தப்பட்டது.   ஒரு நாள், கடையை திறந்து உள்ளே எல்லாம் ஆயத்தப் படுத்தி கொண்டு இருந்த பொழுது, இருவர் கொள்ளையடிக்க வந்தனர்.  ஒருவன், வாசலிலேயே காவலுக்கு நிற்க - கைத் துப்பாக்கி வைத்து இருந்த இன்னொருவன் கடைக்குள் நுழைந்தான்.   உள்ளே நின்று கொண்டு இருந்த கடை உரிமையாளரை மிரட்டி, பணம் கேட்டு இருக்கிறான்.  தன் பின்னால்,  அடுத்த அறையில் இருந்து வந்து கொண்டு இருந்த உரிமையாளரின் தம்பியை அவன் கவனிக்கவில்லை.  தம்பி நிலைமையை புரிந்து கொண்டு,  துப்பாக்கி வைத்து இருந்தவனின் பின் பக்கமாக பாய்ந்து அவன் தலையில் அடித்து விட்டு, துப்பாக்கியை பிடுங்கி  விட்டான். இவனது கூக்குரலை கேட்ட காவலுக்கு நின்று கொண்டு இருந்தவனோ, பயத்தில் ஓடி விட்டான்.  (துப்பாக்கி இருந்தவனுக்கே இந்த நிலைமையா என்று நினைத்தானோ என்னவோ?  பயந்தாங்குள்ளி பயபுள்ள!)

  உள்ளே அகப்பட்டு கொண்டவனுக்கு, அண்ணனும் தம்பியும் மாறி மாறி தர்ம அடி கொடுக்க - வலி தாளாமல், கொள்ளை அடிக்க வந்தவன்,  முழங்கால் படியிட்டு இருவரிடமும், "தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும். நீங்கள் கூப்பிடுகிறீர்களா? இல்லை, நானே போன் செய்து கூப்பிடவா?" என்று கேட்ட பின் தான்,   அடிப்பதை நிறுத்தி விட்டு,  அவனை கட்டி போட்டு விட்டு போலீஸ்க்கு போன் கால் போட்டு இருக்கின்றனர். சில நிமிடங்களில் போலீஸ் வந்ததும்,  அவர்களை கண்டு ரொம்ப சந்தோஷப் பட்டது கொள்ளை அடிக்க வந்தவன்தான்.   "போலீஸ்சில் கூட என்னை அடிக்க மாட்டார்கள். இவர்கள் என்னை பதம் பார்த்து விட்டார்களே," என்றபடி நிம்மதியாக போலீஸ் காரில் ஏறி கொண்டான்.  Miami Herald Newspaper ல இந்த நியூஸ் வந்த பொழுது, அதை படித்து விட்டு, ஒரே சிரிப்புதான்.

நடந்து செல்வதற்கு பதில், சில போலீஸ் உபயோகப் படுத்தும் Segway என்ற வாகனம்:   


அவ்வப்பொழுது,  இப்படி செய்திகளையும் தொடந்து எழுதுகிறேன்.......

91 comments:

Anonymous said...

எழுதுங்க எழுதுங்க... எழுதிக்கிட்டே இருங்க :)

Robin said...

//"தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும். நீங்கள் கூப்பிடுகிறீர்களா? இல்லை, நானே போன் செய்து கூப்பிடவா?" // :)

Anonymous said...

வெளிநாடு, வெளிமாநிலம் போலீஸ் மட்டும்தானா??
நம்ம ஊர் போலீசுகள விட்டுட்டீங்களே சித்ரா????

Unknown said...

Hi Akka,

superb writing...you always pin down the facts!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com

Anonymous said...

மீ த பர்ஸ்ட்? :)

எல் கே said...

ம்ம். நல்ல போலிஸ் போல .. வாழ்க அவர்கள்..

Paleo God said...

அவ்வப்பொழுது, இப்படி செய்திகளையும் தொடந்து எழுதுகிறேன்....//

சூப்பர் ஐடியா. எழுதுங்க. :)

thiyaa said...

நல்ல பதிவு

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

தர்ம அடி: சம்பவத்தை படிக்கும்போது ஏனோ வடிவேல் நினைவில் வருகிறார்..
நல்ல இருந்தது ப‌திவு..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

Anonymous said...

போலீஸ் உங்களின் நண்பன் அப்படிங்கறது நான் வெளிநாட்ல தான் பாக்கறேன். நம்ம ஊர்ல குழந்தைகளைக்கூட போலீஸ் கிட்ட புடிச்சு குடுத்துருவேன்னு பயமுறுத்தி அவங்களை ஏலியன் ஆக்கிட்டோம்.

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரி செய்தியெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்குது சித்ரா மேடம்... நீங்கள் உலகம் சுற்றும் வாலிபியா....

ராமலக்ஷ்மி said...

தர்ம அடி... :))!

செய்திகள் தொடரட்டும்!!

என்னது நானு யாரா? said...

அட! இப்படியும் போலீசா!

நம்ப முடியவில்லை..இல்லை...இல்லை..இல்லை...இல்லை..(எல்லாமே Echo!)

நான் ஒரு முறை தான் சொன்னேன். நிச்சயமா! அட நம்புங்கப்பா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
அட அந்த வண்டி தசாவதாரத்துல வரமாத்ரீயே இருக்கே..

ஜோதிஜி said...

சித்ரா இது போல நீங்க நிறைய எழுத வேண்டும்.

பவள சங்கரி said...

ஆஹா, வழக்க்ம் போல சூப்பர் சித்ரா.எத்தனை விதமான பய புள்ளைகளை சந்திச்சிருக்கீங்க.........அமெரிக்கா போலீஸ் துறையைப் பற்றி என்க்கும் நிறைய ஆச்சரியங்கள் உண்டு. சமீபத்தில் கூட நான் அங்கு வந்திருந்த போது, என் மகனின் குழந்தை 2 1/2 வயது ஆகிறது. படு சுட்டி. தொலைபேசியில் விளையாடுவதே ஐயாவிற்கு பொழுதுபோக்கு. அன்றும் அப்படித்தான், விளையாட்டுத் தனமாக்

Ahamed irshad said...

தொடருங்க..

சசிகுமார் said...

//"தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும். நீங்கள் கூப்பிடுகிறீர்களா? இல்லை, நானே போன் செய்து கூப்பிடவா?" //

இது தான் செம காமடி அக்கா அனைத்தும் அருமை சிரித்தேன்.

பவள சங்கரி said...

இடம் போதவில்லை மன்னிக்கவும். விளையாட்டுத்தனமாக் 911 கால் பண்ணி விட்டான். பிறகென்ன, என் மகன் உடனே திரும்ப கால் செய்து குழந்தை தவறுதலாக கால் பண்ணியதை எடுத்துக் கூறியும் நம்பாமல் நேரில் அடுத்த் 5 வது நிமிடம் வந்து நிற்கிறார்கள். குழந்தைகளிடம் அவர்கள் காட்டும் அக்கறை அபாரம், இல்லையா சித்ரா?

THOPPITHOPPI said...

அது என்னனு தெரியல நம்ம நாட்டுல இருந்து வெளிநாட்டுக்கு போன எல்லாரும் நம்ம நாட்ட குறை சொல்லுரதுல்லையே இருக்கீங்க (ரோடு பலபலுனு இருக்கு, சோறு போட்டு சாப்புடல்லாம், கொழும்பு ஊத்தி சாப்புடலாம், பஸ்சு நல்லா இருக்கு, குப்பத்தொட்டி நல்லா இருக்கு ஐயோ அளப்பர தாங்கல) நீங்கலாம் யா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , ஆப்ரிக்கா போன்ற நாட்டுக்கு போயி நம்ப நாட்டுகூட compare பண்ண மாடிங்கிரிங்க.


ஆமெரிக்கா(கத்ரின புயல்ல செத்தவுங்க பிணம்கூட உடல் உறவு வைத்து கொண்டு சாதனை படைத்தவர்கள் வாழும் நாடு தான நீங்க சொல்லுற அந்த ஆமெரிக்கா? )

தமிழ் உதயம் said...

//"தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும். நீங்கள் கூப்பிடுகிறீர்களா? இல்லை, நானே போன் செய்து கூப்பிடவா?" //


இந்த காட்சிய, வடிவேலு தன் காமெடிக்கு பயன் படுத்திக்கலாம்

வெட்டிப்பேச்சு said...

I am new to the blog world and I didn't know you are so popular. I came to know this recently. I feel guilty that I have started a blog without knowing your's. I am sorry. your blog is such a high spirited one it deserves to be popular.

God bless you.

அருண் பிரசாத் said...

இவ்வளவு முட்டாள் திருடர்களா அமெரிக்க திருடர்கள்...

Jey said...

nice chitra :)

சாந்தி மாரியப்பன் said...

சிரிப்பு போலீஸ் நல்லாத்தான் இருக்கு. திருடனே போலீஸ்கிட்ட போகணும்ன்னு ஆசப்படறானா ஹா..ஹா..ஹா.

முத்துலட்சுமி கேட்டதுதான்.. தசாவதார வண்டி ஜாலியாத்தான் இருக்கும்போலிருக்கு. நடந்து கஷ்டப்படவேணாம் :-))))

வினோ said...

நல்லா இருக்கு சகோ...

சைவகொத்துப்பரோட்டா said...

அட!! சுவராசியமா இருக்கே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல வேலை. என்னை பத்திதான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்...

சிநேகிதன் அக்பர் said...

இங்கு சவுதியிலும் போலிஸைக்கண்டு யாரும் பயப்படமாட்டார்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு...

எழுதுங்க எழுதுங்க...

S Maharajan said...

super akka

Deepa said...

//சில நிமிடங்களில் போலீஸ் வந்ததும், அவர்களை கண்டு ரொம்ப சந்தோஷப் பட்டது கொள்ளை அடிக்க வந்தவன்தான். "போலீஸ்சில் கூட என்னை அடிக்க மாட்டார்கள். இவர்கள் என்னை பதம் பார்த்து விட்டார்களே," என்றபடி நிம்மதியாக போலீஸ் காரில் ஏறி கொண்டான். //

vadivelu nyabagam varuthu! :)))

Anonymous said...

இங்கே பாரேன் இவங்களுக்குல்லேயும் என்னவோ இருந்திருக்கு... அட என்னப்பத்தி சொன்னேனாக்கும்,, ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய் விட்டு சிரிக்க வெச்சிடீங்க

கவி அழகன் said...

சிரிப்பை அடக்க முடியல
எப்படி எல்லாம் மட்டிகொள்ளுறாங்க மொக்கு பயப்பிள்ளைகள்

Vidhya Chandrasekaran said...

செய்திகள் வரவேற்கப்படுகின்றன:))

Vidhya Chandrasekaran said...

செய்திகள் வரவேற்கப்படுகின்றன.

நாடோடி said...

இதுபோல‌ எழுதுங்க‌ள்.. ந‌ல்லா சிரிப்பா தான் இருக்கு.

அன்பரசன் said...

//(பாசக்கார பயபுள்ள!), (மரியாதை தெரிஞ்ச பயபுள்ள), ( "புத்திசாலி" பயபுள்ள!), (பயந்தாங்குள்ளி பயபுள்ள!)//
//"தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும்"//

ஹா ஹா... ரசித்தேன்.

Jaleela Kamal said...

போலிஸ் போலிஸ் உங்கள் தலைப்பு ம்ம்ம்ம்
பிற்கு வரேன் தாயம்மா

அம்பிகா said...

சுவராசியமான செய்தி. தொடருங்கள்.

Zen the Boss said...

சித்ரா நம்மளுக்கும் பாளையம்கோட்டை பய புள்ளைதான் நல்லா எழுதுறீங்க வாழ்த்துக்கள்

Gayathri said...

ரொம்ப அழகா அருமையா நகைசுவைய இருக்கு..ஒரு புறம் அவர்களின் நேர்மை பற்றி நினைக்கும் பொழு நம்ம ஊரும் இப்படி மாறிட்டான்னு ஆசியாவும் இருக்கு..சூப்பர்

pichaikaaran said...

அருமை... இது போல தொடர்ந்து எழுதுங்க

Suni said...

படிக்க ரொம்ப comedya இருந்தது. இன்றைய class க்கு வரவில்லையே

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

செல்வா said...

//பிறகு, ஒரு கோமாளி படம் போட்ட ஸ்டிக்கர் ஒன்றை அவர்களுக்கு கொடுத்தார். //

கோமாளியா ..?

செல்வா said...

//அவன் தனது கொள்ளை மிரட்டலை எழுத உபயோகித்து இருந்தது: அவன் முகவரி மற்றும் விவரங்களுடன் இருந்த பேங்க் deposit ஸ்லிப்பின் பின்னால். ( "புத்திசாலி" பயபுள்ள!)/

ஐயோ சாமி ,.. இவ்ளோ அறிவாளியா இருக்காங்களே ..?

இளங்கோ said...

//அவர்களை கண்டு ரொம்ப சந்தோஷப் பட்டது கொள்ளை அடிக்க வந்தவன்தான்.//
Hahahaha.. :)

Menaga Sathia said...

ம்ம் தொடர்ந்து எழுதுங்க....

"உழவன்" "Uzhavan" said...

//அதை படித்து விட்டு, ஒரே சிரிப்புதான்//
 
இங்கயும் ஒரே சிரிப்புதான் :-)

நட்புடன் ஜமால் said...

நம்பூர்லையும்

போலிஸ் உங்கள் நண்பர் ன்னுதான் எழுதியிருக்காங்க

ஒரு வேலை ஏட்டு!@#$% சுறைக்காய் ...

சுசி said...

அமேரிக்கா சூப்பர் அமேரிக்கா..

எழுதுங்க தொடர்ந்து.. ரொம்ப சுவாரசியமா இருக்கு சித்ரா.

Anonymous said...

சூப்பரான பதிவு.அந்த நாட்டு போலிஸ் பற்றி வியத்தகு செய்திகளாக இருக்கின்றன.இங்க லைசன்ஸ்க்கு போலிஸ் பிடிச்சாலே கவுன்சிலர் மச்சினன் நு சொன்னா போலிஸ் விட்ருது

மாதேவி said...

"தர்ம அடி" :)))

தொடர் சிரிப்புக்கு நாங்க ரெடி.

Prathap Kumar S. said...

ம்ஹும் பொறமையா இருக்குங்க....:(

Madurai pandi said...

கலக்கல் பதிவு!! வாழ்த்துக்கள் !!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எழுதுங்க, எழுதுங்க வரவேற்கிறோம்

தெய்வசுகந்தி said...

:-))LOL!

DR.K.S.BALASUBRAMANIAN said...

அருமையா சுவாரசியமா எழுதுறீங்க ..!
வாழ்த்துக்கள்..!
(காரணம் தாமிரபரணி...?)

புவனேஸ்வரி ராமநாதன் said...

அமெரிக்கத் தொடர் சுவாரசியமா போகுது.

vasu balaji said...

குட் குட்:)

நசரேயன் said...

நல்லா இருக்கு போலீஸ்

Mahi_Granny said...

ஏற்கனேவே சித்ராவுக்கு topic க்கு பஞ்சமில்லை. இப்போது எல்லோரும் கொடுக்கிற உற்சாகத்தில் இது மாதிரி நிறைய எதிர்பார்க்கலாம் . எதிர்பார்க்கிறேன்..

எம் அப்துல் காதர் said...

எம்புட்டு செய்தி. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாம....!! எப்படி சித்ரா மேடம் அசத்துறீங்க!!

வால்பையன் said...

//நாங்கள் ஒரு கடைக்கு சென்ற பொழுது, அங்கே வாசலில் ஒரு போலீஸ் நின்று கொண்டு யாரிடமோ பேசி கொண்டு இருந்தார். என் குழந்தைகள் அவரை பார்த்து விட்டு உள்ளே போகாமல் தயக்கத்துடன் நிற்க, அவர் புன்னகைத்து விட்டு, அவர்களுக்கு ஹலோ சொன்னார். பிறகு, ஒரு கோமாளி படம் போட்ட ஸ்டிக்கர் ஒன்றை அவர்களுக்கு கொடுத்தார். நான் எதற்கு என்று கேட்ட பொழுது, "குழந்தைகள் போலீஸ் கண்டு பயப்படக் கூடாது. பின்னால் எதுவும் தேவைப் பட்டால், அவரை அணுகி உதவி கேட்கும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். நான் அவர்களின் நண்பன் தான் என்று காட்டவே அப்படி செய்தேன்," என்றார். (பாசக்கார பயபுள்ள!) //


அந்த ஊர் போலிஸ் மக்கள் கிட்ட நம்பிக்கையை வளர்க்குது, நம்ம ஊர் போலிஸ் அதை விட்டு தொப்பையை மட்டும் வளர்க்குது!

வால்பையன் said...

// இந்திரா said...
வெளிநாடு, வெளிமாநிலம் போலீஸ் மட்டும்தானா??
நம்ம ஊர் போலீசுகள விட்டுட்டீங்களே சித்ரா???//


சித்ரா இருக்குறது வெளிநாட்டில் தானே!
நம்ம ஊர் கதை தான் நமக்கே தெரியுமே

ராஜவம்சம் said...

இன்னுமா நம்மாளுக லஞ்சம் வாங்க கத்துக்கொடுக்கல

சவுதி போலிஸ்க்கு கேரளா காரங்க எல்லாத்தையும் கத்துகொடுத்துட்டாங்க.

வேலன். said...

ம்...போலீஸ்ன்னா அவங்கதான் போலீஸ்...இங்கேயும் இருங்காங்களே...
வாழ்க வளமுடன்.
வேலன்

vanathy said...

நல்லா இருக்கு. எப்போதும் சிரித்த முகமாகவே மக்களிடம் உரையாடுவார்கள் இங்குள்ள போலீஸ். நானும் நாட்டிற்கு வந்த புதிதில் ஆச்சரியமாக பார்ப்பேன்.

R.Gopi said...

ஹலோ 911.......

ப்ளீஸ் இங்க வாங்க.... என்ன நீங்களும் சிரிப்பு போலீஸா~!!?

ஹா...ஹா...ஹா... போலீஸ் எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி தானா? நாங்க தான் கொஞ்சம் ஜாஸ்தி எதிர்பார்த்துட்டோமோ!!??

ரஹீம் கஸ்ஸாலி said...

//"தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும். நீங்கள் கூப்பிடுகிறீர்களா? இல்லை, நானே போன் செய்து கூப்பிடவா?" //
இதே வார்த்தையை நம்மநாட்டில் சொன்னால் லஞ்சம் வாங்கிக்கொண்டு திருடனை காப்பாற்றிவிடுவார்களோ என்று பொது மக்களுக்கு போலிஸ் மேல் சந்தேகம் வந்துவிடும். அப்படித்தான் இருக்கிறது இந்திய போலிசின் தரம்.

MoonramKonam Magazine Group said...

நல்ல நகைச்சுவை!

GEETHA ACHAL said...

பதிவு சூப்பர்ப்...கடைசி பத்தி படு காமெடி...

பின்னோக்கி said...

ம்ம்ம்.. பெரு மூச்சு.. அவ்வளவு தான்...

thiyaa said...

best

Anonymous said...

அவ்வப்பொழுது, இப்படி செய்திகளையும் தொடந்து எழுதுகிறேன்......//
கண்டிப்பா எழுதனும் ரொம்ப நல்லா இருக்கு

Unknown said...

நகைச்சுவையான பதிவு..

ம்ஹும்.. நம்ம நாட்டுல மக்கள்கிட்ட போலீஸ் அனுசரணையா பேசறது கனவுலதான் நடக்கும்..

suneel krishnan said...

அந்த வங்கி கொள்ளையனிடம் ..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)
நம்ம ஊரில் குழைந்தைகள் ஓட்டும் நடை வண்டிக்கு என்ஜின் பொருத்தி ஓட்றாங்க:)
ஆனாலும் அமெரிக்காவில் சில மெக்ஸிகோ நாட்டு மக்கள் மற்றும் சில கறுப்பின குழுக்கள் நிதம் ஒரு பெரும் குற்றத்தில் ஈடுபடும் என்று என் நண்பன் சொன்னான்

Unknown said...

நல்ல பதிவு...அருமையாக இருக்கிறது.

Thenammai Lakshmanan said...

//"தயவு செய்து 911 call போட்டு போலிசை கூப்பிடுங்க. அவர்கள் வந்து என்னை காப்பாற்றட்டும். நீங்கள் கூப்பிடுகிறீர்களா? இல்லை, நானே போன் செய்து கூப்பிடவா?" // :)

ஹாஹாஹா சித்து இது சூப்பர் டா..

ரிஷபன் said...

அவ்வளவு லூசா.. அந்த ஊர்ல திருடங்க..

Karthick Chidambaram said...

அமெரிக்க போலீஸ் துறை பாராட்டப்படவேண்டிய துறையே ! நானும் பார்த்து உள்ளேன் அவர்களின் கடமை திறனை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெள்ளை வெள்ளிந்தியாய் போலீஸ்
சொள்ளை சோப்ளாங்கியாய் திருடன்ஸ்,
கள்ளைக் குடித்து கிறங்கினார்போலவே,
கொள்ளை போச்சு என் மனசும்!!!


இது வெண்பா அல்ல..
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

Alarmel Mangai said...

இது போன்ற "பய புள்ளகளைப்" புடிக்கும் போது போலிசுக்கே சிரிப்பு வந்துருமே :)

ஹேமா said...

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் சித்ரா.அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.தெரியாதவர்களுக்கு உண்மையில் புதுமையான விஷயம்தான் !

Chitra said...

அனைவருக்கும் நன்றிங்க..... பல விஷயங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பதிவுகள் உதவுகின்றன..... உங்களின் ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்களும், வோட்டுக்களும், பரிந்துரைகளும், தொடர்ந்து வாசித்து வருதலும் எனக்கு அமிர்தம். நன்றி, நன்றி, நன்றி.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இங்கே எப்பதான் இந்தமாதிரி நிலை வரப்போகிறதோ!

ம.தி.சுதா said...

அக்கா பதிவை வாசிக்க கொஞ்சம் பிந்திடுச்சு மன்னிக்கணும்.... நீங்க என்ன சொன்னாலும் நான் அமெரிக்கா வரமாட்டன்... ”அமெரிக்காவில் மாப்பிளைன்னா பொண்ணு...”

ஜெய்லானி said...

//"போலீஸ்சில் கூட என்னை அடிக்க மாட்டார்கள். இவர்கள் என்னை பதம் பார்த்து விட்டார்களே," என்றபடி நிம்மதியாக போலீஸ் காரில் ஏறி கொண்டான்.//

ஹா..ஹா.. தர்ம அடி அப்படி விழுந்திருக்கு போல..ஹா..ஹா..

சிங்கக்குட்டி said...

எந்திரன் அமெரிக்கா பதிவு எங்கே :-)

குந்தவை said...

:)))

சென்னை பித்தன் said...

தர்ம அடி படித்தேன்.கிட்டத்தட்ட அதேதான் டில்லிக் கதையும்!
நம்ம ஊர் போலீஸுக்கு அரசியல்வாதிகள் குறுக்கீடு ரொம்ப அதிகமா இருக்கே!