எங்களின் முதல் அமெரிக்க பயணத்துக்கு முன், என் அப்பாவிடம் ஒரு நாள் வழக்கம் போல பேசி கொண்டு இருந்தது, இன்று நினைவுக்கு வந்தது.
"அப்பா, காந்தி தாத்தாகிட்ட அவங்க அம்மா சத்தியம் வாங்கின மாதிரி, வெளிநாடு போகப் போற என்கிட்டே சத்தியம் எதுவும் வாங்கலியா அப்பா?"
"ஏலே, நீ இந்திய மண்ணை விட்டு தானே போற? இந்திய அடையாளத்தை விட்டு விட்டா போற? சத்தியம்லாம் எதுக்குல?"
"ஆனாலும், என் மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை, அப்பா."
"உங்க அம்மாவும் நானும் வளர்த்ததுல, எங்களையே குத்தம் கண்டுபிடிக்க சொல்றீயால?"
"இல்லைப்பா. அறிவுரைனு......"
"ஆமால. நான் பத்து வாட்டி அமெரிக்கா போயிட்டு வந்துட்டேன் - உனக்கு அறிவுரை சொல்றதுக்கு. இங்கே இருக்கிறதை வச்சுக்கிட்டு, அங்கே இருக்கிறதுக்கு என்னத்தல சொல்ல? நீ அங்கே எப்படி எப்படி நடந்துக்கணும்னு கடவுள் புத்தி தருவாரு."
"சித்ராமா, வருஷத்துக்கு ஒரு முறையாவது வர முடியுமாலே?"
"தெரியலப்பா. போய் பார்த்த பின் தான் சொல்ல முடியும். அமெரிக்காவுக்கு போறதற்கே வருஷத்துக்கு ஒரு வாட்டி வான்னு சொல்றீங்களே. எத்தனை தமிழ் படம் பார்க்கிறீங்க. சின்ன வயசுல ஒரு பொண்ணு, "கை வீசம்மா கை வீசு" ஸ்டைல்ல அப்படியே டாட்டா காட்டிட்டு ட்ரைன்ல கிளம்பி, இந்தா இருக்கிற சென்னைக்கு படிக்க போனா அப்புறம், காலேஜ் முடிச்சு வர வரைக்கும் ஊர் பக்கமே எட்டி பார்க்காம - வராம இருப்பாளே. அவள் குடும்பத்து மக்களுக்கே அவ எப்படி இருப்பான்னு தெரியாம வளர்ந்து, ஹீரோயின் ஆக வந்து நிப்பாளே!"
(இந்த படம் பாருங்க... இதில் ட்ரைன் எங்கே இருக்குதுனே தெரியல. அவ எப்படி இடம் பிடிச்சு, அதில் ஏறி வர முடியும்? அதான், வரலியோ?)
"ஆமாலே, அவ படிக்கிற ஸ்கூல்ல லீவு கூட கிடையாது. போனவ என்ன ஆனா என்று யாரும் கவலை பட்டதாவே தெரியாதுல."
"அதானே, அதையும் படம்னு - கதைனு - பார்த்தோம்ல - அதை சொல்லணும்."
"ஹா, ஹா, ஹா, ஹா, ஹா..... சென்னைக்கு போயிட்டே அரையும் குறையுமாத்தான் டிரஸ் பண்ணிட்டு வருவாளுக. அமெரிக்கா போய்ட்டுனா? கிராமத்துல நாட்டமை குடும்பம் அப்படி ஒரு கௌரவம் - கலாச்சாரம் பார்க்கும். பொண்ணு மட்டும் - கயித்த அத்துதான் கழுதை - எடுத்துதான் ஓட்டம்னு - பாஞ்சிக்கிட்டு இருக்கும்."
"ஹா, ஹா, ஹா, ஹா, ஹா..... மக்களை முட்டாளா ஆக்குறதுக்குன்னே கதை எழுதுவாங்க போல, அப்பா."
"என் நண்பர் ஒருத்தர் சொன்னது ஞாபகம் வருதுல. அமெரிக்காவுல ஒரு சமயம் ஒரு தமிழ் டாக்டரை , பெரிய விருந்துக்கு அழைச்சாங்களாம். அவர் மனைவிக்கு கூட போக முடியல. கணவர் வந்ததும், விருந்து பத்தி கேட்டுருக்காப்புல. எல்லாத்தையும் சொல்லி இருக்காரு. அப்புறம், அவரு மனைவி ஆசையாய், வந்த பொண்ணுங்க போட்டு இருந்த டிரஸ்சு - நகைங்க - பத்தி கேட்டாளாம்.
அதுக்கு அவரு, " நான் டின்னெர்க்கு போனப்போவே எல்லோரும் டேபிள் சுத்தி உட்கார்ந்துட்டாங்க. டேபிள்க்கு மேல, தெரிஞ்ச அவங்க தோள் பகுதி எல்லாம் ஏதும் போட்டு இருந்தாப்புல தெரியல. டேபிள்க்கு கீழே குனிஞ்சு என்ன போட்டு இருந்தாங்க என்று பார்க்க எனக்கு தைரியம் இல்லை. அதனால், எனக்கு எதுவும் தெரியாது. ஒண்ணும் கேட்காத," என்றாராம்."
"ஹா, ஹா, ஹா,...... சரியா போச்சு, அப்பா! குளிச்சிட்டு அப்படியே துண்டை கட்டிக்கிட்டு வந்தாலும் யாருக்கும் தெரியாது போல."
" அவங்க ஊரில தானே அப்படி இருக்காங்க. இருந்துக்கிட்டு போகட்டும். "
"ஆமாம், அப்பா. இன்னும் கொஞ்ச வருஷத்துல தமிழ் பொண்ணுங்க கூட அப்படியெல்லாம் டிரஸ் பண்ணிக்கிட்டு இங்கேயே சுத்தப் போகுதுங்க."
"இப்போவே அவன் அவன் ஒரு தினுசா ஆகாயத்துல பிறந்து, லண்டன்ல வளர்ந்து, உலகத்தை சுத்திட்டு, தப்பான ஸ்டாப்ல தமிழ்நாட்டுல இறங்கிட்ட மாதிரிதாம்ல நடந்துக்கிறாங்க. அதுக்காக அவங்களை எல்லாம் நாடா கடத்திட்டோம்? சும்மா இருலே!"
(கீழே படத்தில், அப்பாவின் நினைவஞ்சலி நாளில் (நவம்பர் 28) நடந்த "ஆதலால் காதல் செய்வீர்!" புத்தக வெளியீட்டு விழாவில், அப்பா எழுதிய பல புத்தகங்களை கொண்ட மேடை அலங்காரம். படத்தை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும். அவர், பட்டிமன்றங்களுக்கு - வழக்காடு மன்றங்களுக்கு - நடுவராக இருந்தவரும் கூட.)
இப்படியே எங்கள் பேச்சு கலகலப்பாக நீண்டு கொண்டே போனது. எங்க அப்பா, எங்களை விட்டு பிரிந்து, ஒரு வருடம் ஆனாலும், அவரை நாங்கள் நினைக்காத நாளு இல்லை. அவரிடம் பேசும் கருத்துக்களை மிஸ் பண்ணாத நாளும் இல்லை. ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர். அப்போ அப்போ உங்கள் கிட்ட பகிர்ந்துக்க, எடுத்து விடுறேன். எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது. அது ஆசிர்வாதமே! இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.
104 comments:
//ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர். அப்போ அப்போ உங்கள் கிட்ட பகிர்ந்துக்க, எடுத்து விடுறேன். எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது. அது ஆசிர்வாதமே!//
Super Appa! :-)
சொந்த ஊரோட ஞாபகம் வந்திட்டுதோ! உங்க அப்பாவை பற்றி எங்களுக்கு தெரிய வைத்ததற்கு நன்றி.
சுவாரசியமான மனிதர். அறிமுகத்துக்கு நன்றி:)
மனித உறவுகளுக்குள்ளே, நினைவுகளை தவிர மிஞ்சி இருப்பது எது. தந்தையின் நினைவு பகிர்வு ப்ரியங்களுடன் மலர்ந்துள்ளது.
//எங்க அப்பா, எங்களை விட்டு பிரிந்து, ஒரு வருடம் ஆனாலும், அவரை நாங்கள் நினைக்காத நாளு இல்லை. //
அப்பா அனைவரும் அன்பாக உச்சரிக்கும் சொல்...
"இப்போவே அவன் அவன் ஒரு தினுசா ஆகாயத்துல பிறந்து, லண்டன்ல வளர்ந்து, உலகத்தை சுத்திட்டு, தப்பான ஸ்டாப்ல தமிழ்நாட்டுல இறங்கிட்ட மாதிரிதாம்ல நடந்துக்கிறாங்க. அதுக்காக அவங்களை எல்லாம் நாடா கடத்திட்டோம்? சும்மா இருலே//////////
உண்மைதான் அக்கா!! ஆனா நாங்கல்லாம் அப்படி இல்லை!! ஒரு வேளை அப்படி இல்லாததால்தான் நாடு கடத்தப்பட்டமோ?!!
எல்லா பெண்களுக்குமே அப்பாவுடனான ஒட்டுதல் கொஞ்சம் அதிகம்தான், இன்று என் பெண் உட்பட. உங்கள் தந்தையின் நினைவு நாள் அன்று அந்த நல்லவர் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அக்கா எனக்கு ஊர் ஞாபம் வருதுக்கா
அப்பாவை பற்றி படிக்கும் போது
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு சித்ரா.
மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் புத்தகங்களின் வடிவில்
நல்ல பதிவு..
தங்களின் தந்தை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிங்க...
நெகிழ்வான பதிவு
அந்த டின்னருக்கு டிரஸ் போட்டுக்கிட்டு வந்தது நல்ல ஜோக்.
என்றுமே எங்குமே தந்தை மகளுக்கிடையே எப்போதுமே நட்பின் வட்டம் தான். ;-)
Hi Akka,
VEry touching post...I cried after reading it...
Dr.Sameena@
http://www.myeasytocookrecipes.blogspot.com
// இங்கே இருக்கிறதை வச்சுக்கிட்டு, அங்கே இருக்கிறதுக்கு என்னத்தல சொல்ல? நீ அங்கே எப்படி எப்படி நடந்துக்கணும்னு கடவுள் புத்தி தருவாரு." //
இதுதாங்க சத்தியமான உண்மை..
வாழ்த்துக்கள்.
நல்லவர்களை பேசுவதும், கேட்பதும் படிப்பதும் என்றும் இனிமையானவை...
பகிர்வுக்கு நன்றி...
ஆனால், ஒரு குறை.
அமெரிக்கா செல்லும் முன் அவர் உங்களிடம் மூன்று சத்தியங்கள் வாங்கி இருந்தால், பதிவுலகம் மகிழ்ந்து இருக்கும்..
அவையாவன...
1 மொக்கை பதிவுகள் போட கூடாது..
2 மொக்கை பதிவுகளை படிக்க கூடாது..
3 பதிவை விட பின்னூட்டம் போட அதிக நேரம் செலவழிக்க கூடாது
அப்பா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது சுகம். இனிய நல்ல மனிதர் என்று தெரிகிறது. அவ்வப்போது எழுதுங்கள்.
திரைப் படத்தில் அமெரிககா போய் வந்தால் எப்படிக் காட்டுவார்கள் என்பது பற்றி எழுதி இருக்கிறீர்கள். எனக்கு பழைய சிவாஜி படமான 'அவன் ஒரு சரித்திரம்' நினைவு வந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பும் காஞ்சனாவை மாடர்ன் உடையில் எதிர்பார்க்கும்போது இழுத்து மூடிய சேலையில் வந்து 'வணக்கம் பலமுறை' என்று பாடுவார்.
நான் திருநெல்வேலி தமிழைப் பத்தி எழுதினது(http://salemdeva.blogspot.com/2010/09/blog-post_21.html) சரியாத்தான் இருக்கு..!! வானத்தைப்போல படம் பாத்த மாதிரியே இருந்துச்சுங்க..!!
எப்போதும் இறந்தவரின் நினைவுகளே...நமக்கு அவர்கள் கூடவே இருப்பதாக உணர்த்தும்
அறிமுகத்துக்கு நன்றி:)
விந்தை விளக்க சிந்தை செழிக்க
விழியாகி வழியாவான் தந்தை.
-
கிறுக்கன்
உண்மை சித்ரா. அப்பாவின் நினைவுகள் என்றும் உங்களுடன் இருந்து, உங்களை ஆசீர்வதிக்க வாழ்த்துகிறேன்.
ஆமாப்பா, ஒரு படம் தவறாம சென்னைக்குப் படிக்கப் போன மகளையே அடையாளம் கண்டுபிடிக்க முடியாம திணர்ற பெற்றோர்களைப் பார்க்கும்போது வருமே ஒரு வெறி....
Appaa the great for all
//ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர். அப்போ அப்போ உங்கள் கிட்ட பகிர்ந்துக்க, எடுத்து விடுறேன். எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது. அது ஆசிர்வாதமே!//
உண்மைதான் சித்ரா.
தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரத்தில் அவரைப்பற்றியும் அவரின் பேச்சு மற்றும் எழுத்து திறமைப் பற்றி தெரியாதவர் இருக்க முடியாது. எனவே மக்களே, சித்ரா புலியின் குட்டியாக்கும் .
சித்ரா,உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் ஒரு நெகிழ்ச்சியான சமபவத்தை பதிவிட்டு மனதை டச் பண்ணி விட்டீர்கள்.
அப்பாக்கள் என்றாலே ஒரு தனி பாசம் தான், கிரெட் அப்பாக்கள்.
என்றும் அவர் உஙக்ள் கலகலப்பில் தான் இருக்கிறார்
அப்பா எனும் அஸ்திவாரம்
நெகிழ்ந்தது மனம்
தங்கள் அப்பாவின் மேல்
உங்களின் பாசம் கண்டு
என்னை கேட்டால் உங்கள் பேச்சில் கலகல்ப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று உஙக்ள் பதிவுகள் சொல்லுது சித்ரா
ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர்//
இவர் போன்றவர்கள் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை
நிச்சயமாக உங்கள் அப்பா ஒரு "GOD FATHER"
po.ma rasamani yin mynthara thangal? valthukkal
நெகிழ்ச்சியான ஒரு பதிவு..
நல்லா எழுதி இருக்கீங்க.. வழக்கம் போல..
//எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது. அது ஆசிர்வாதமே!//..மிகவும் கொடுத்து வைத்தவர் நீங்கள்!
--செங்கோவி
நானும் ஹாலிவுட் பாலாவும்
தங்கள் தந்தையை பற்றி பகிர்நதுகொண்டதில் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அப்பாவின் நினைவுகள் என்றும் உங்களுடன் இருந்து, உங்களை ஆசீர்வதிக்க வாழ்த்துகிறேன்.
அப்பாவை பற்றி படிக்கும் போது எனக்கு ஊர் ஞாபம் வருதுக்கா.
சித்ரா,என் அப்பாவும் கண் ஓரத்தில் கண்ணீர் துளிர்க்க சிரிக்க சிரிக்க பேசுவார்கள்.அப்பாவிடம் பயம் இல்லாமல் அரட்டை அடிக்கலாம்.நீங்கள் சொன்னமாதிரி அது ஆசிர்வாதமே!
என் அப்பாவுக்கும் நாளை நினைவு நாள்.
நல்ல அப்பாவைப் பற்றி தெரிந்து கொண்டோம்.
அவருக்கு எங்கள் வணக்கம்.
நல்ல பதிவு நானும் கூட அப்பாவின் துணுக்குகள் ராணி குடும்ப பத்திரிகை யில் படித்ததாக நியாபகம் அப்பாவிற்கு நினைவஞ்சலி
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்
என்றுமே அப்பா அப்பா தான்...
பேச்சு நடையை கேக்கும் போதே அப்பாவின் சுபாவம் தெரிகிறது. கிடைத்ததற்கு புண்ணியம் செய்வர் நீங்கள்....
//எங்க அப்பா, எங்களை விட்டு பிரிந்து, ஒரு வருடம் ஆனாலும், அவரை நாங்கள் நினைக்காத நாளு இல்லை. அவரிடம் பேசும் கருத்துக்களை மிஸ் பண்ணாத நாளும் இல்லை. ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர். அப்போ அப்போ உங்கள் கிட்ட பகிர்ந்துக்க, எடுத்து விடுறேன். எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது. அது ஆசிர்வாதமே! //
நெகிழ்வான பகிர்வு மிகவும் சுவாரசியமாக சிறப்பாகவும் பகிர்ந்துள்ளீர்கள் அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
really a touching description ! you and father are great!
நெகிழ்ச்சியான பதிவு.
அப்பாவை நினைவுபடுத்தும் பதிவு சித்ரா.
அமெரிக்கவுல அப்படி எல்லாம் கூட பிறந்தநாள் ஆடை உடுத்துவன்களோ சரி இருக்கட்டும் இங்க அப்படி எல்லாம் வராது வரகூடாது . அமெரிக்காவுல இருந்தும் அப்பாநினைவு பாராட்டுகள் .
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பந்தம் மிகப் பற்றுதலானது. பகிர்வுக்கு நன்றி.
'அபியும் நானும்' மாதிரி 'சித்ராவும் ராசமணியும்' படிக்கையில் நெகிழ்ச்சியாக இருந்தது.
Nalla pathivu chitra...lovely Dad:-)
நெகிழ்வான பதிவு.
gr8 Appa...
Kurinji
அப்பாவுக்கும் மகளுக்குமான உறவில் எப்போதும் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கிறது. இங்கும் அதுவே வெளிப்பட்டிருப்பதாக உணர்கிறேன். நல்ல பதிவு.
நல்ல பதிவு, சித்ரா.
அப்பாவின் நினைவுகளை அழகாச் சொல்லி இருக்கீங்க.
அப்பாவைப்பற்றி ஒரு நல்ல அறிமுகம்.
திருநெல்வேலி வாசம் வீசுகிறது சித்ரா அக்கா... :)
படிக்கையில், அப்பாவின் பல பட்டிமன்ற பேச்சுக்களும்(நகைச்சுவை துணுக்குகளும்) ,
பாளை புனித சவேரியார் பள்ளிக்கூடம், மாவட்ட நூலகம், சவேரியார் கல்லூரி வாயில் எல்லாமே நினைவிற்கு வந்து விட்டன.
வீட்டிலும் அப்பா நகைச்சுவை யோடு இருப்பாரா. எங்கிருந்து நகைச்சுவை துணுக்குகள், செய்திகள் அப்பாவிற்கு. இவை பற்றி பதிவிட வேண்டுகிறேன். அம்மா எப்படி
May the good soul, rest in peace. We girls are always 'Pappa's Darlings' aren't we? Your father was a very friendly person...you should be proud of him, and I must say...you turned out as a strong person...you kept this whole post hilarious and with that nativity touch, very touchy 'Anjali' to your Pappa, hats off.
அக்கா,,,, எனக்கு அப்பா நாயகத்தை ஏற்படுத்தி விட்டிர்கள் அக்கா
அருமையா பதிவு அக்கா
அப்பா மகள் உறவு தாய்பால் போல ரொம்ப தூய்மையானது
திருநெல்வேலி "ஸ்லாங்" லதான் பேசுவீங்களா? நான் இப்போத்தான் முதல் முதலா அப்பா-பொண்ணு இப்படி பேசுவதை கேட்டு இருக்கேன். "குஷி" படம் ஞாபகம் வந்தது!
நல்ல நினைவுகள்! :)
ராம்ஜி_யாஹூ said...
வீட்டிலும் அப்பா நகைச்சுவை யோடு இருப்பாரா. எங்கிருந்து நகைச்சுவை துணுக்குகள், செய்திகள் அப்பாவிற்கு. இவை பற்றி பதிவிட வேண்டுகிறேன். அம்மா எப்படி
.......ஆமாங்க. சில சமயங்களில் அமைதியாக இருந்து யோசித்து கொண்டு இருப்பார். சில சமயங்களில், பத்திரிகைகளுக்கு எழுதி கொண்டு இருப்பார். சில சமயங்களில், கூட்டங்களுக்கு பேச பேச்சு தயார் செய்து கொண்டு இருப்பார். அவருக்கு நிறைய visitors ம் உண்டு. இத்தனை வேலைகளையும் முடித்த பின், எங்களோடு எதை பற்றியாவது கலகலப்பாக பேசி கொண்டே இருப்பார்.
நிறைய செய்திகளையும், இலக்கியங்களையும் வாசிப்பார். அவரது நகைச்சுவை உணர்வு - கடவுள் அவருக்கு கொடுத்த வரமே. தான் அறிந்து கொண்ட - புரிந்து கொண்ட விஷயங்களுக்கு - தனது நகைச்சுவை வண்ணம் தீட்டி வழங்கியதே அவரது சிறப்புகளுள் ஒன்று. அவரது துணுக்குகளை மற்றவர்கள் எடுத்து, அப்பாவுக்கு acknowledgement கொடுக்காமல், பேசுவதுண்டு. நாங்கள் அதை கேள்விப்பட்டு கோபப்பட்டாலும் சிரித்து கொள்வார். originality மேல் அவ்வளவு நம்பிக்கை. "அவருக்கு, இந்த துணுக்கு தான் தெரியும். நமக்கு யோசித்தா, இன்னொன்னு சொல்ற அளவுக்கு கடவுள் வச்சுருக்காருல," என்று தான் பதில் சொல்வார்.
உங்கள் தந்தையை எங்களுக்கு அறிமுகப்படுத்திய முறை அருமை.
சித்ரா,
அப்பாவுடைய நினைவுகள் எப்போதும் உங்களுடன் இனிதே கலந்திருக்கும்.
எங்களுடனும் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
உங்க அப்பாவைப் போலவே நீங்களும் சுவாரசியமா பேசுவதில் கெட்டிக்காரி. ரொம்ப பெருமையா இருக்கு சித்ரா. வாழ்த்துகள் மேன்மேலும் புகழடைய.
ரொம்ப டச்சிங்கா இருந்ததுங்க.. உங்க அப்பாவைப் பற்றி நாங்களும் நன்றாகத் தெரிஞ்சுக்கிட்டோம்..
arumai.romba rasichen.tamil typing problem.
என் அப்பாவையும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள் சித்ரா.
நெருங்கிய தோழமையாய் இருப்பார் !
// எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது. அது ஆசிர்வாதமே!//
கண்டிப்பா இது ஆசீர்வாதம்தான் சித்ரா.
அப்பா
மிகவும் நெகிழ்வான பதிவு...அப்பா...
fine keep writing
அருமையான அப்பா..
///எங்க அப்பா, எங்களை விட்டு பிரிந்து, ஒரு வருடம் ஆனாலும், அவரை நாங்கள் நினைக்காத நாளு இல்லை. அவரிடம் பேசும் கருத்துக்களை மிஸ் பண்ணாத நாளும் இல்லை. ஒரு தோழராய், தன் பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதில் சமர்த்தர். அப்போ அப்போ உங்கள் கிட்ட பகிர்ந்துக்க, எடுத்து விடுறேன். எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேச முடிந்தது.///
நல்ல அப்பா....
அப்பா'வுக்கு ஏற்ற பிள்ளை குட்....
//இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும். //
ஆமாம்.
நன்று சித்ரா. சிறந்த இலக்கியவாதியாக மட்டும் இல்லாமல் சிறந்த தந்தையாகவும் இருந்திருக்கிறார்.
memorable!!
அருமையான அப்பாக்கள் அமைவது பெரிய வரம் சித்ரா.
நினைவுகளில் நிறைந்து என்றைக்கும் வழிகாட்டட்டும்.
நெகிழ்ச்சியான பதிவு.
// நான் டின்னெர்க்கு போனப்போவே எல்லோரும் டேபிள் சுத்தி உட்கார்ந்துட்டாங்க. டேபிள்க்கு மேல, தெரிஞ்ச அவங்க தோள் பகுதி எல்லாம் ஏதும் போட்டு இருந்தாப்புல தெரியல. டேபிள்க்கு கீழே குனிஞ்சு என்ன போட்டு இருந்தாங்க என்று பார்க்க எனக்கு தைரியம் இல்லை. அதனால், எனக்கு எதுவும் தெரியாது. ஒண்ணும் கேட்காத," என்றாராம்."//
அட பாவமே ..! ஹா ஹா ஹா ..! சூப்பர் அகக்க ..!!
//டேபிள்க்கு கீழே குனிஞ்சு என்ன போட்டு இருந்தாங்க என்று பார்க்க எனக்கு தைரியம் இல்லை. அதனால், எனக்கு எதுவும் தெரியாது. ஒண்ணும் கேட்காத," என்றாராம்."//
சூப்பர் ..சூப்பர்...:))) நம்ம ஊருலயும் இதெல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு சித்து...:)
அற்புதமான அப்பா டா...எனக்கு இந்த முறை பொறாமை இல்லை....ரொம்ப பெருமையாகவும்,ஆச்சர்யமாகவும் பார்க்கிறேன்...
அப்பா என்பவர் நமது முதல் குரு,ஆசான் மற்றும் நல்ல வழிகாட்டி. அதுவும் ஒரு நல்ல தோழனாக அமைந்துவிட்டால் அதைவீட சிறப்பு இருக்க முடியாது, அப்படி உங்களுக்கு அமைந்து இருப்பதுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு. அப்பா ஒரு நல்ல தோழனாகவும் கிடைத்தற்க்கு நாம் தான் நன்றி சொல்லவேண்டும்.
நல்ல நெல்ல பாஷயிலே எழுதிட்டிங்க.
எங்களோட பகிர்ந்ததுக்கு நன்றி சித்ரா.
அருமையான அப்பா. எனக்கும் என் அப்பாவின் நினைவு வந்துவிட்டது
எந்த விஷயமாக இருந்தாலும் எப்படி இப்படி சுவைபட எழுதுகிறீர்கள் என்று இப்போது தான் புரிகிறது. எல்லாம் அப்பாவோட ஜீன்தான் சரியா? .
உங்களை மகளாய் பெற்றதற்கு உங்கள் தந்தையும் - அவரை தந்தையாய் பெற்றதற்கு நீங்களும் மகிழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
//"உங்க அம்மாவும் நானும் வளர்த்ததுல, எங்களையே குத்தம் கண்டுபிடிக்க சொல்றீயால?"//
இது அறிவுரையல்ல, அப்பா தன் பிள்ளைக்கு தந்த அங்கீகாரம்.ரொம்ப நெகிழ்வான பதிவு!!
தந்தையை தோழனாகவும் ,அவர் தமிழ்வளத்தை ஆசீர்வாதமாயும் பெற்று விட்டாய் சகோதரி.
உங்கள் தந்தையின் நினைவு நாளுக்கு, இந்தப் பதிவு ஒரு இனிமையான, அன்பான சமர்ப்பணம்!
உங்கப்பா ரொம்ப இன்ஸ்பயர் பண்றாரே .
ரெண்டு மூணு பதிவு படிச்சாச்சு.பொண்ணுங்களுக்கு,இப்படிப்பொண்ணுங்களுக்கு அப்பாவாப்பொறக்கணும்.
நல்ல பகிர்வு. விளையாட்டை பல விஷயங்கள் பகிர்ந்துள்ளார் உங்கள் தந்தை. அவரது அந்தக் கலை உங்களுக்கும் இருக்கிறது.
சித்ரா நீங்கள் பொ.ம. ராசமணியின் மகளா? அவரது சிந்திக்க வைக்கும் தொடரை தேவியில் தொடர்ந்து வாசித்தவள் நான். அதே நேரம் தேவியில் எனது தொடரும் வந்து கொண்டிருந்தது. அதானே பார்த்தேன். என்னடா இவ்ளோ நகைச்சுவை உணர்வென்று. ரத்தம்தான்!
நன்றி சித்ரா. உலகம் சிறியதுதான். சமூக வலைத்தளங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இதுவரை வெளிப்படாத புதுப் பரிமாணம். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தவமா உங்கள் தந்தை? நெகிழ வைத்தது கொஞ்சம்.
அப்பாவின் நூல்கள் ஆன்லைனில் வாங்க இயலுமா?
பிரதி இருந்தால் இரவல் தரவும்...
. .
முதல் முறையாக சித்ராவின் பதிவை படித்து முடித்தபின் லேசான கனம் மனசுக்குள்
உண்மைதான் சித்ரா மகன் அப்பாவுடன் வைத்திருக்கும் நட்பைவிட அப்பா மகள் நட்பு பினைப்பானது
இங்கே விருது வழங்கியிருக்கிரென் வந்து பெற்றுக்கொள்ளவும்.
http://naanentralenna.blogspot.com/2010/12/blog-post.html
தந்தையின் நினைவுகளை அருமையாக எழுதியுள்ளீர்கள்.
என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள் ..
சாரி ஃபார் லேட்
அன்புள்ள அப்பா படத்தில் வருவது போல் ...
பொதுவா பெண்ணுக்கு அப்பாவும் பசங்களுக்கு அம்மாவும் பிடிக்கும்னு சொல்வாங்க.
டைட்டில் கூட ரொம்ப நல்லாருக்கு
இண்ட்லில 67 ஓட்டா ?அடேங்கப்பா?சித்ராவை ஓட்டுல பிடிக்க்றது ஜென்மத்துலயும் நடக்காது போல.
100
ரிமைண்டர் 1
பதிவு போட்டு 5 நாள் ஆச்சு
( அது எனக்கு தெரியாதா? அப்படின்னு கேக்கறீங்களா?)
அம்மா அப்பாவின் நினைவுகள் என்றும் நம்மை விட்டு பிரியாது.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் சித்ராம்மா.
வலைச்சரத்தில் தங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்,நெகிழ்வாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியிருக்கின்றீர்கள்.பெற்றவரின் பிரிவு எதைக் கொண்டும் ஈடு செய்யமுடியாதது.படத்தில் உங்க அப்பா எழுதிய புத்தகங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
வணக்கம்.
திரு.பொ.ம ராசாமணி சார் தான் எங்கள் வகுப்பாசிரியர் (9 மற்றும் 10ம் வகுப்பு டி பிரிவு-தூயசவேரியார் மேனிலைப் பள்ளி). மிகவும் ஜாலியாக இருக்கும். இன்றும் மனதில் பசுமை போல இருக்கு. அவர் பிள்ளையாரைப் பற்றி சொன்ன ஒரு சிறு கவிதை(அல்லது பாடல்) இன்றும் ஞாபகம் இருக்கு. மறக்கமுடியாத ஒரு ஆசிரியர். 1991ல் நாங்கள் 440க்கும் மேல் மதிப்பெண்கள் எடுக்க ஊக்கமளித்தவரும் அவரே. ஏதோ தேடுதலில் உங்கள் ப்ளாக் வந்தது. அனைத்தையும் விரைவில் படித்துவிடுவேன். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்.
ஷங்கர்
வான்கூவர்-கனடா.
Post a Comment