வேலைப்பளு காரணமாக சனி ஞாயிறு பதிவுலகுக்கு வராமல் விரதம் இருப்பது தெரிந்ததே.... இந்த வாரம், அது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.
Valentine's Day Special ஆதரித்தும் - எதிர்த்தும் தமிழ் நாட்டில் சில விஷயங்கள் நடந்ததை கேள்விப்பட்டேன்....
கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு.... ஆனால், எனக்கு ஒரு டவுட்டு! அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே follow பண்ணிடுறாங்க?
நம்ம ஊரில் பேசப்படுற அளவுக்கு இங்கே பெரிய ஸ்பெஷல் இல்லை... அதுவும் இந்த வருடம், வார நாளில் (திங்கள்) வந்ததால் - சும்மா கடைகளில் greeting cards - ரோஜா மலர்கள் - heart shaped balloons - chocolates மட்டும் நல்லா sales ஆச்சு ... இதெல்லாம் commercial கண்ணோட்டத்தோட கொண்டாடப்படுகிறது என்று ஆகி போச்சு.... Valentine's Day , சனி - ஞாயிறு வந்தால் மட்டும் கொஞ்சம் களை கட்டும்.... அம்புடுதேன்!
Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்......
சரி, ரெண்டு நாள் கழிச்சு வந்துட்டு என்ன புளிச்சு போன மாவுல இட்லி அவிக்கிற? என்று புலம்பாதீங்க.... "எது மாதிரியும் இல்லாத புது மாதிரி நியூஸ்க்கு "கொஞ்சம் வெட்டி பேச்சு" என்று ஆன பிறகு, பேரை காப்பாத்திருவோம்ல.... பில்ட் அப்பு! பில்ட் அப்பு!
அமெரிக்காவில், Valentine's Day ஒட்டி வருகிற ஞாயிற்றுக் கிழமை - (February மாதத்தில் - இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை) உலக திருமண நாள் ஆக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில், இது விசேஷம். நம்ம ஊரிலும் கொண்டாடப்படும் என்று நினைக்கிறேன்.
World Marriage Day
- http://wmd.wwme.org/purpose-history.html
பெண்ணின் ரோல் என்னன்னு சொல்றாங்களாம்?
கல்யாணம் வரை - காதலி;
கல்யாணத்திற்கு பின் - மனைவி;
குழந்தைகளுக்கு பின் - தாய் தான்... ஆனால், கணவருக்கு?????
அவரையும் கவனிச்சுக்கிற ஆயாதான். காதலியாக கவனிக்கப்பட்டு - வர்ணிக்கப்பட்டு;
மனைவியாக கொண்டாடப்பட்டு ;
அப்புறம் அன்னையாக ஆனதும், "உன் வழி - குழந்தைகள் வழி ... தாண்டாதே" என்று அடக்கி விடப்படுவதால் தான் பல குடும்பங்களில், கணவர் மனைவிக்கிடையே ஒரு புரிதல் இல்லாமல் போய் விடுகிறது... காதலிச்சு கல்யாணம் செய்தவர்கள் கூட, கல்யாண வாழ்க்கை கசந்து - பெரிய சண்டைகள் இல்லை என்றாலும், சள்ளு புள்ளு என்று ஒருத்தர் மேல ஒருத்தர் எரிஞ்சு விழுந்துக்கிட்டே - குழந்தைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது என்று நான் சொல்லல, ஆய்வு (research) சொல்லுது.
http://www.itwire.com/science-news/health/24374-married-couples-less-happy-with-children
சிலரால் மட்டும் எப்படி திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆனாலும், காதல் குறையாமல் கொஞ்சி கொண்டே இருக்க முடியுது? என்று வேறு ஒரு ஆய்வு நடத்துனாங்களாம். அதில், கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல், காதலோடு தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சொல்லப்படாது....
பொதுவாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் வேலைப்பளு அதிகம் இருப்பதால், எல்லா கவனமும் அவர்களிடம் மட்டும் சென்று விடுவதால், களைப்பு தான் மிஞ்சும். மாறி வரும் கால கட்டத்தில், அது மன சோர்வைத் தான் கொண்டு வருமாம். அவர்கள் உணர்வுகளும் நாள் ஆக ஆக மரத்து போக ஆரம்பிக்குமாம். எத்தனை நாளைக்குத்தான் தாக்கு பிடிக்க முடியும்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், தன் தனித்தன்மையை (special quality) அடையாளம் கண்டு பாராட்டும் அல்லது பாராட்டுகிற மாதிரி பேசும் இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிக்குதாம். இந்த பீலிங்க்ஸ் எல்லாமே வேண்டாத affair ஆக மாறுவதில்லை.... ஆனால், ஒரு வீக் மொமென்ட்ல மாறவும் செய்யுமாம். இது குடும்ப தலைவிகளுக்கு மட்டும் அல்ல, குடும்ப தலைவர்களுக்கும் இதே டென்ஷன் - இதே கண்டிஷன் - இதே மனநிலை - இதே effect தானாம். இந்த சூழ்நிலை, அதிகமாக 32 - 52 வயதுக்குள் இருக்கும் தம்பதியினர் மத்தியில் காணப்படுகிறதாம்.
இதையெல்லாம் தவிர்க்க, கணவனும் மனைவியும் தனியாக - மாதத்தில் ஒரு நாளாவது தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டுமாம். அது ஒரு புத்துணர்வையும் - திருமண வாழ்க்கையில் ஒரு புது ஈடுபாட்டையும் கொண்டு வருமாம்... அப்போதான், குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதோ - இல்லை வேறு எந்த குடும்ப பிரச்சனைகளும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்காதாம். தாயாக தியாக உள்ளத்தோட செய்யும் காரியங்களை விட, காதல் உள்ளத்தோடு குடும்பத்தில் வேலைகளை செய்யும் போது, உற்சாகமாய் - அழகாய் - புது பொலிவோடு இருக்குமாம்.
காதல் கொண்ட நெஞ்சங்கள் - எல்லா தடைகளையும், பிரச்சனைகளையும் சமாளிக்க எப்படி முடியுதுன்னு எத்தனை தமிழ் படங்கள்ல பார்த்து இருக்கோம்.... அதான்..... தியாக தீபங்களை விட, காதல் ஜோதிகள் - கஷ்டங்களை ஈஸியாக கையாண்டு கொள்ளுமாம்.
நாங்க போற கத்தோலிக்க ஆலயத்தில், அருகில் உள்ள பல்கலைகழகத்தில் உள்ள Catholic Students' Association இல் உள்ள மாணவர்கள் - மாணவிகள் - ரொம்ப ஆக்டிவ் ஆக ஆலய காரியங்களில் பங்கு கொள்வாங்க... அவர்களில் சிலர் உலக திருமண நாள் ஒட்டி வந்த வெள்ளிக் கிழமை மாலை, தங்களின் Valentine's Day weekend mood எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, volunteers ஆக வந்து 6 p.m. to 9 p.m. - சர்ச் ஹால் இல் வைத்து, எங்கள் ஆலயத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் (Registered Members) குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக அறிவித்து இருந்தார்கள். அந்த நேரத்தில், குழந்தைகள் படமும் - பாப் கார்ன் - ஐஸ் கிரீம் - board games - எல்லாம் உண்டு என்று சொல்லி இருந்தாங்க... அதற்கு அவர்கள் சார்ஜ் எதுவும் வாங்கவில்லை.
சமூதாயத்துக்கு, அக்கறையோட தங்களால் செய்யக்கூடிய பங்கு என்று சொல்லிட்டாங்க....
அதற்காக free சர்வீஸ் என்று மக்களும், "ஹி, ஹி, ஹி,... தேங்க்ஸ் " என்று மட்டும் சொல்லிட்டு போகவில்லை.
""Thank You" greeting cards - வீட்டில் செய்த cookies அல்லது சின்ன பரிசு - அந்த மாணவர்களுக்கு கொடுத்து விட்டு நன்றி சொன்னது, அருமையாக இருந்துச்சு... கல்லூரி மாணவர்கள் செய்கிற உதவியை, appreciate பண்ணிய விதம் பிடித்து இருந்துச்சு.
குழந்தைகளை அங்கே விட்டு விட்டு, தனியாக அந்த நேரத்தில், Flame of love புதுப்பித்துக் கொள்ள, அந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்ளும் படி பரிந்துரைக்கப் பட்டது. வீட்டு வேலைகளை - ஷாப்பிங் வேலைகளை - அந்த நேரத்தில் செய்யாமல், டிவி - சினிமா என்று இங்கே உட்கார்ந்து கிட்டு, அங்கே பே என்று பார்த்துக் கொண்டு இருக்காமல், இருவர் மட்டுமே தங்கள் அன்பை- காதலை - ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் விதமாக அந்த நேரத்தை செலவிட வேண்டும் என்று சொன்னாங்க...
Restaurant இல் வைத்து dating மாதிரி ஒரு ஸ்பெஷல் டின்னெர் - அல்லது
ஒரு ஜாலி கார் டிரைவ் - அல்லது
இயற்கையை ரசித்துக் கொண்டு ஒரு வாக் - அல்லது
மனம் விட்டு பேசி, ஒருவருக்கொருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்று சில வழிமுறைகளும் காதல் உறவைப் புதிப்பித்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டன.
அமெரிக்காவில் திருமண தோல்விகள் நிறைய இருப்பதற்கும், விவாகரத்து அதிகம் இருப்பதையும் சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு - அதற்கு என்னவெல்லாம் செய்து அதை மேற்கொள்ளலாம் என்று முயற்சி எடுக்க ஆரம்பித்து இருக்காங்க....
அப்புறம் ஞாயிற்றுக் கிழமை அன்று பாதிரியார், Sunday Mass time ல எல்லாத் தம்பதியினரையும் எழுந்து கொள்ள சொன்னாங்க...
புதுசா கல்யாணம் ஆன ஜோடியில் இருந்து, கல்யாணம் ஆகியே அறுபத்து இரண்டு வருடங்கள் ஆன ஜோடி வரை எழுந்து நின்னாச்சு....
கணவரும் மனைவியும் வலது கரங்களை பிடித்து கொள்ள சொன்னாங்க.....
இருவரும், ஒருத்தரை ஒருத்தர் கண்களை பார்த்து புன்னகைக்க சொன்னாங்க....
அப்புறம் திருமண நாளில் சொல்லிய உறுதி மொழியை (wedding vows) புதுப்பித்துக் கொடுத்தார்.
அப்புறம், அப்புறம் என்ன..... இங்கே உள்ள வழக்கப்படி - இச் ..... இச்... கொடுக்க சொன்னாங்க...
எனக்கு அந்த டைம்ல நிஜமாவே வெட்கம் வந்துடுச்சுப்பா.....ஆமாம்ப்பா...
சர்ச்ல அமர்ந்து இருந்த அத்தனை பேரும் கைதட்டி வாழ்த்து சொன்னாங்க... குழந்தைகளும் சேர்த்து.....
புதுசா கல்யாணம் ஆன பீலிங்க்ஸ் தான்.....
எல்லா வேலையையும், இனி ஒரு துள்ளலோட செய்ய சொல்லுது ......
இதெல்லாம், அமெரிக்காவுக்குத்தான் தேவை..... தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை என்று சொல்லாதீங்க... Self-Denial இல்லாமல், யோசித்து பார்த்தால் - இந்தியாவிலேயும் எத்தனையோ நகரத்துப் பிரச்சனைகளில் stress மிகுந்த வாழ்க்கைதான் அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவும் விரைவில் தேவைப்படலாம்....
எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை.... இப்படியும் அமெரிக்காவில் நடக்குதுன்னு காதில போட்டாச்சு.... அப்புறம் உங்கள் இஷ்டம்.... அது வரை, காதலர் தினம் மட்டும் தானோ?
162 comments:
Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்......
/////
MMMMM ATHUTHAN KURAIYE..
உங்கள் பதிவு என்னை கல்யாணம் செய்து கொள்ள தூண்டுகிறது
ஆமா கல்லாணம் கட்டிகிட்டா நிம்மதிக்கு உத்திரவாதம் உண்டா:)
கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல், காதலோடு தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம்.
///////
NOTED...
நாங்கல்லாம் பெரிய வட்டம் கோஷ்டிக்கா!..
////கல்லாணம் கட்டிகிட்டா நிம்மதிக்கு உத்திரவாதம் உண்டா:) ////
அது ஒரு வழி சாலை இல்லை.... நீங்களும் எப்படி நடந்துக்கிறீங்க என்பதை பொறுத்தது... :-)
Well Said Chitra!
-Shankar
//எனக்கு ஒரு டவுட்டு! அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே follow பண்ணிடுறாங்க? //
அப்படிக் கேளுங்க! வேலன்டைன் தினத்தின் மையக்கருவை திரித்து, அதைக் காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாடுவதும், அதை ஒரு சாரார் எதிர்ப்பதும், அவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்து, வருடாவருடம் காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக அறிக்கைவிடுவது.....முடியலே! :-(
//இந்தியாவிலேயும் எத்தனையோ நகரத்துப் பிரச்சனைகளில் stress மிகுந்த வாழ்க்கைதான் அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவும் விரைவில் தேவைப்படலாம்....//
இது நிச்சயமாத் தேவை! இதை விட்டுவிட்டு நிறைய பேரு தும்பை விட்டு வால்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
செமத்தியான பதிவு!
//"எது மாதிரியும் இல்லாத புது மாதிரி நியூஸ்க்கு "கொஞ்சம் வெட்டி பேச்சு" என்று ஆன பிறகு,//
உண்மைதான், பில்ட் அப்பு இல்லே:)!
//உலக திருமண நாள் ஆக//
புது நியூஸுதான். நல்ல பதிவு.
Nice one! But need to think twice before getting into a commitment. Prevention is better than cure..!
My wishes
//உங்கள் பதிவு என்னை கல்யாணம் செய்து கொள்ள தூண்டுகிறது
//
உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு கண்டுப்பிடிச்சிட்டேன்
:)
உலகத் திருமண நாள்- இதுவரைக்கும் கேள்விப்படாத ஒன்று.
நம்ம மக்களுக்கு ரொம்ப ரொம்ப அவசியமும்கூட.
உலகத் திருமண நாள்- இதுவரைக்கும் கேள்விப்படாத ஒன்று.
நம்ம மக்களுக்கு ரொம்ப ரொம்ப அவசியமும்கூட.
உலக திருமண நாள் கொண்டாட்டம்
அருமையான யோசனையா இருக்கே...
சூப்பர் அக்கா....
//கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல், காதலோடு தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம். //
இது தான் உண்மை..இந்தப் பழக்கம் தான் நம்ம ஆக்கள்கிட்ட இல்லையே...
அருமை... அவ்வளவுதாங்க .. வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல ..
வாழ்கைய வாழனும் .. நகர்த்தகூடதுன்னு அழகா சொல்லிட்டிங்க ..
>>>அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்......
ஹா ஹா கரெக்ட்டா போட்டு தாக்கறீங்களே..?
மொக்கராசா said...
உங்கள் பதிவு என்னை கல்யாணம் செய்து கொள்ள தூண்டுகிறது
ஆமா கல்லாணம் கட்டிகிட்டா நிம்மதிக்கு உத்திரவாதம் உண்டா:)
////
ATHELLAM ANUPAVIKKANUM.....
வாழைப்பழத்தில் லேசா ஊசி ய வச்சு குத்துரமாதிரியான செமத்தியான பதிவு சித்ரா....அக்கு வேறு ஆணி வேறா உளவியல் ரீதியா சொல்லி இருக்கீங்க....
இந்தப்பதிவுல காமெடி கம்மி.. சீரியஸ் பதிவு. ஆனா மனோதத்துவ ரீதியிலான அலசல்.. ஆங்காங்கே ஆங்கில பதங்கள் என்னை மாதிரி ஆட்களை கஷ்டப்படுத்தும்னு நினைக்கறேன்..
/குழந்தைகளை அங்கே விட்டு விட்டு, தனியாக அந்த நேரத்தில், Flame of love புதுப்பித்துக் கொள்ள, அந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்ளும் படி பரிந்துரைக்கப் பட்டது. வீட்டு வேலைகளை - ஷாப்பிங் வேலைகளை - அந்த நேரத்தில் செய்யாமல், டிவி - சினிமா என்று இங்கே உட்கார்ந்து கிட்டு, அங்கே பே என்று பார்த்துக் கொண்டு இருக்காமல், இருவர் மட்டுமே தங்கள் அன்பை- காதலை - ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் விதமாக அந்த நேரத்தை செலவிட வேண்டும் என்று சொன்னாங்க...//
ஹீ..ஹீ...நீங்க சொன்னமாதிரி நம்ம ஊரில் அந்த volunteers செஞ்சால்...ஹீ..ஹீ..போங்க சொல்லவே வெக்கமா இருக்கு...:) வெளக்கு பிடிக்கிரிங்கலானு கேப்பாங்க...:)))
//Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்...... //
அதே..அதே...நம்ம இந்தியா எப்பவும் தனித்தன்மை யா யோசிப்பாங்க இல்லையா...:)))))
/பொதுவாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் வேலைப்பளு அதிகம் இருப்பதால், எல்லா கவனமும் அவர்களிடம் மட்டும் சென்று விடுவதால், களைப்பு தான் மிஞ்சும். மாறி வரும் கால கட்டத்தில், அது மன சோர்வைத் தான் கொண்டு வருமாம். அவர்கள் உணர்வுகளும் நாள் ஆக ஆக மரத்து போக ஆரம்பிக்குமாம். எத்தனை நாளைக்குத்தான் தாக்கு பிடிக்க முடியும்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், தன் தனித்தன்மையை (special quality) அடையாளம் கண்டு பாராட்டும் அல்லது பாராட்டுகிற மாதிரி பேசும் இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு ஏற்பட ஆரம்பிக்குதாம். இந்த பீலிங்க்ஸ் எல்லாமே வேண்டாத affair ஆக மாறுவதில்லை.... ஆனால், ஒரு வீக் மொமென்ட்ல மாறவும் செய்யுமாம். இது குடும்ப தலைவிகளுக்கு மட்டும் அல்ல, குடும்ப தலைவர்களுக்கும் இதே டென்ஷன் - இதே கண்டிஷன் - இதே மனநிலை - இதே effect தானாம். இந்த சூழ்நிலை, அதிகமாக 32 - 52 வயதுக்குள் இருக்கும் தம்பதியினர் மத்தியில் காணப்படுகிறதாம்.//
பெரும்பாலும் இது தான் உண்மை...அது சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகள் னு இல்லை சித்ரா...தன் மேலே தன் துணைக்கு கவனம் இல்லைன்னு தோணும் எந்த சூழ்நிலையிலும் அந்த depression பெரும்பாலும் வந்து...யாரவது ஒருத்தவங்க சாப்டியான்னு கேட்டால் கூட தன் துணை யை compare பண்ணும் மன அழுத்தத்துக்கு வந்து விடுறாங்க...
மேரேஜ் டே நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதேயில்லை. பகிர்விற்கு நன்றி.
//வேலைப்பளு காரணமாக சனி ஞாயிறு பதிவுலகுக்கு வராமல் விரதம் இருப்பது தெரிந்ததே.... இந்த வாரம், அது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.//
விரதம் இருங்க சித்ரா அப்டியே..அப்புறம் அதுக்கும் சில அன்பு (?!)நண்பர்கள் உங்களுக்கு எதாவது புது மேனியா(?!) ன்னு சொல்லிருவாங்க...:)) டோக்சா மாதிரி விரதக்ஷா னு...:)) ஹாய்...இது நல்லா இருக்கே...:)))
அருமை..
எப்படி இவ்ளோ பெருசா எழுதறீங்க??
சமீபத்திய வாலண்டைன் டே அன்று
என் தம்பி வீடு போனேன். அவனுக்கு 20 வயதில் காலேஜ் படிக்கும் பெண் இருந்தா. அன்று காலை ஒயிட் ரோஸ் என்கையில் கொடுத்து ஹேப்பி வாலண்டைன் டே என்றா. அத்தை இது ஒன்லி லவ்வர்ஸ்டே கிடையாது அன்பை அன்பானவர்களிடம் வெளிப்படுத்தும் தினம் என்று சொன்னா. நம்ம பக்கம் இதை காதலர் டென்னு முத்திரை குத்திட்டாங்க என்கிரா.
அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்...... ///
இங்க எல்லாம் அதை காதலர் தினமா மாத்திட்டாங்க வாழ்த்து சொன்ன கூட தப்பா நினைக்குறாங்க
சரி, ரெண்டு நாள் கழிச்சு வந்துட்டு என்ன புளிச்சு போன மாவுல இட்லி அவிக்கிற? என்று புலம்பாதீங்க.... ////
ஹா ஹா ஹா ஏன் சிரிக்கிறேன் சொல்லுங்க
எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை....///
கல்யாண நாள் வந்தாலே எதுவும் வாங்கி தருவது இல்லைன்னு அடி வாங்குறாங்க இதுல இந்த தினம் வேற கொண்டாடினா இன்னொரு அடி சேர்ந்து கிடைக்கும்...
சித்ரா இரண்டு நாள் விரதா, ஆகா உடம்பு ந்ல்ல இருக்கா?
விரதம் இருந்தாலும் , உலக திருமன்நாளுடன் சூப்பர் பதிவு
பெண்களுக்கு தான் அதிக டிப்ரெஷன், அதுக்கு உஙக்ள் பதிவு ஒரு நல்ல மருந்து
சித்ரா
கலக்கிட்டீங்க, இதுக்கு நான் கவிதையாய்வோ பாட்டாவோ சொல்ல முயற்சிக்கிறேன் இன்றைய கவிதையில் ,
ஆனா வெட்டி பேச்சுன்னு சொல்லி இம்மாம் பெரிய விஷயத்தை ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்களே
அன்னியோன்யம் காதல் வருகையில் முன்னால் இருக்கிறது இங்கு சந்ததி வர பின்னால் செல்கிறது
முதுமையில் நாம் மொத்தமா மறந்தே விடுகிறோம்
இதற்க்கு எனக்கு தெரிந்த காரணம்
நாம் நம்மையும் நம் மறு பாதியையும் காதலித்த சமயம் இருந்த முகத்தை தான் பார்க்க நினைக்கிறோம் அது கொஞ்ச நாளில் அடி வாங்கி அடி வாங்கி மாறுபட்ட முகத்தை ஏனோ ஏற்க மறுக்கிறோம் இது இது தான் ஒரு பெரிய தடை கல் என்று நினைக்கிறேன், ஆக அன்னியோன்யத்திற்க்கு காதலை போல் இருப்பதை இருப்பது போல் எடுத்துக்கொண்டால் அழகாய் அமெரிக்கையாய் அருமையாய் காதல் ஆரம்பத்த தினம் போல் என்றும் இருக்கும்
நல்ல பதிவு
நன்றி சித்ரா
ஜேகே
உண்மையில் அந்த சர்ச்சில் நடந்த நிகழ்வுகள்
இப்பொழுது இந்தியாவுக்குதான் தேவை
************************
அப்பிடி அந்த சர்ச்சில நடந்தாப்ல நம்ம ஊருல நடக்க ஆரம்பிச்சா
நம்ம ஊர் தங்க்ஸ் அந்த இச் இச் காகவே ரொம்ப குஷியாய்டுவாங்க
இல்லையா சித்ரா(வெக்கமெல்லாம் நமக்குத்தான்)
பூங்கொத்து!
//பெண்ணின் ரோல் என்னன்னு சொல்றாங்களாம்?
கல்யாணம் வரை - காதலி;
கல்யாணத்திற்கு பின் - மனைவி;
குழந்தைகளுக்கு பின் - தாய் தான்... ஆனால், கணவருக்கு?????
அவரையும் கவனிச்சுக்கிற ஆயாதான்.
காதலியாக கவனிக்கப்பட்டு - வர்ணிக்கப்பட்டு;
மனைவியாக கொண்டாடப்பட்டு ;
அப்புறம் அன்னையாக ஆனதும், "உன் வழி - குழந்தைகள் வழி ... தாண்டாதே" என்று அடக்கி விடப்படுவதால் தான் பல குடும்பங்களில், கணவர் மனைவிக்கிடையே ஒரு புரிதல் இல்லாமல் போய் விடுகிறது... காதலிச்சு கல்யாணம் செய்தவர்கள் கூட, கல்யாண வாழ்க்கை கசந்து - பெரிய சண்டைகள் இல்லை என்றாலும், சள்ளு புள்ளு என்று ஒருத்தர் மேல ஒருத்தர் எரிஞ்சு விழுந்துக்கிட்டே - குழந்தைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது என்று நான் சொல்லல, ஆய்வு (research) சொல்லுது.
சிலரால் மட்டும் எப்படி திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆனாலும், காதல் குறையாமல் கொஞ்சி கொண்டே இருக்க முடியுது? என்று வேறு ஒரு ஆய்வு நடத்துனாங்களாம். அதில், கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல், காதலோடு தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம்//
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !
இவ்வளவுக்கும் பிறகு அமெரிக்காவில் மண முறிவுகள் குறைஞ்சிருக்கா என்பதை பத்தி நீங்க சொல்லல. ஒரு வேளை இந்தியாவில் இந்த தினம் கொண்டாடப்பட துவங்கினா மற்றொரு "அட்சய திருதி" யாக்கி நகைக்கடைக்காரங்க சம்பாதிப்பாங்க. மற்றப்படி சண்டை போடும் தம்பதியினர் சண்டை போட்டு கொண்டே தான் இருப்பாங்க. எத்தனை கவுன்சிலிங் பண்ணாலும்.
///இவ்வளவுக்கும் பிறகு அமெரிக்காவில் மண முறிவுகள் குறைஞ்சிருக்கா என்பதை பத்தி நீங்க சொல்லல.///
.....பெரிய நகரங்களில் இதன் பாதிப்பு பற்றி எனக்கு தெரியல... நான் இருக்கும் சிறு டவுன் ஏரியாவில் வேறு வழியே இல்லை என்றால் தான் விவாகரத்து என்ற அளவில் மாறுதல் வந்து கொண்டு இருக்கிறது.... குறிப்பாக ரெகுலர் ஆக சர்ச் போகும் மக்களிடையே...
எல்லாத்தையும் அர கொறையா புரிஞ்சிகிட்டு இங்க என்ன வரத்து வராங்க தெரியுமா ?
வேலைப்பளு காரணமாக சனி ஞாயிறு பதிவுலகுக்கு வராமல் விரதம் இருப்பது தெரிந்ததே.... இந்த வாரம், அது மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.
வன்மையாக கண்டிக்கிறேன்!
நம்ம ஊரில் பேசப்படுற அளவுக்கு இங்கே பெரிய ஸ்பெஷல் இல்லை...
நம்ம அளவுக்கு அமெரிக்க காரனுக்கு ரசனை இல்லைங்க மேடம்! விடுங்க!!
//கணவன் மனைவி இருவரும், எந்த சூழ்நிலையிலும் தாங்கள் பெற்றோர்கள் மட்டும் அல்ல - கணவன் மனைவி என்ற நினைப்ஸ் மறக்காமல், காதலோடு தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, அன்னியோன்யம் வளர்த்துக் கொண்டே இருப்பவர்களால் தான் அப்படி இருக்க முடியுமாம்.//
இது போன்ற ஒரு தம்பதிதான் என் கதை மனிதர்கள்--http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_14.html,
//தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை என்று சொல்லாதீங்க... Self-Denial இல்லாமல், யோசித்து பார்த்தால் - இந்தியாவிலேயும் எத்தனையோ நகரத்துப் பிரச்சனைகளில் stress மிகுந்த வாழ்க்கைதான் அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவும் விரைவில் தேவைப்படலாம்....//
வழிமொழிகிறேன்.
நல்ல பதிவு.
தியாக தீபங்களை விட, காதல் ஜோதிகள் - கஷ்டங்களை ஈஸியாக கையாண்டு கொள்ளுமாம்.
ஹி.... ஹி..... ஹி... பாக்குறோம்ல!
எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை.... இப்படியும் அமெரிக்காவில் நடக்குதுன்னு காதில போட்டாச்சு.... அப்புறம் உங்கள் இஷ்டம்.... அது வரை, காதலர் தினம் மட்டும் தானோ?
எங்க மேடம் காதலர்த்தினத்துல இருக்குற ஒரு எபக்ட் கல்யாண தினத்துல கிடைக்குமா என்ன? இருந்தாலும் கொண்டாடிடுவோம்!
////காதலர்த்தினத்துல இருக்குற ஒரு எபக்ட் கல்யாண தினத்துல கிடைக்குமா என்ன?////
...அது அந்த அந்த ஜோடியை பொறுத்தது என்று நினைக்கிறேன்.... அந்த ஈர்ப்பு (effect) குறைந்தால் தான் கவலைப்படணும்.
ஏதோ கல்யாணம் அது இது னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு எழுதியிருக்கீங்க சித்ரா மேடம்! எனக்கும் என்னோட தம்பி சி பி செந்தில்குமாருக்கும் இதெல்லாம் புரியாதுங்க! ஏன்னா நாம ரொம்ப சின்னப் பசங்க! தம்பி செந்தில் வாடா நம்ம போயி பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்டலாம்!!
மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
ஏதோ கல்யாணம் அது இது னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு எழுதியிருக்கீங்க சித்ரா மேடம்! எனக்கும் என்னோட தம்பி சி பி செந்தில்குமாருக்கும் இதெல்லாம் புரியாதுங்க! ஏன்னா நாம ரொம்ப சின்னப் பசங்க! தம்பி செந்தில் வாடா நம்ம போயி பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்டலாம்! ///
நீங்க ரொம்ப மோசம்.. இன்னோரு தம்பியை விட்டுட்டீங்களே.. எனக்கு லாலிபாப்..
அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்...... //////
உண்மைதான்...இதைதான் அன்றைய தினம் என் பதிவிலும் சொல்லியிருந்தேன்!
தமிழ் நாட்டுல பண்ணுனா கலாச்சாரதுக்கு காது குத்திட்டோன்னு ப்ரச்னை செய்வங்க..
ம்ம்ம்ம் சரிதான்.. Valentines day ஸ்பெஷலா.. நல்லாவே எழுதியிருக்கிங்க..
\\"எது மாதிரியும் இல்லாத புது மாதிரி நியூஸ்க்கு "கொஞ்சம் வெட்டி //
ரொம்ப உண்மை..
மகரிஷியோட மனவளக்கலை மன்றத்துல.. மனைவிநலவேட்பு நாளில் இதே மாதிரி பூ கொடுத்து முகம் பார்த்து சிரிச்சு இதே மாதிரி செய்வதாக கேள்விபட்டிருக்கிறேன்..
அவசியம் தான் நம்ம நாட்டுக்கு. பட் இதுல எதாவது பிசினஸ் ஆப்பர்சுனிட்டி இருக்கா.. இருந்தா தானே ஃபேமஸ் ஆகும்..:)
அந்த இளைஞர் பாராட்டுதலுக்குரியவர்கள்..
காதலை பத்தி என்னமோ சொல்றீங்க. சரி. சின்னைபையன் எனக்கு ஒன்னும் புரியல..
வழக்கம் போல் very interesting -ன்னு எப்படி சொல்லிட்டு போறது,சுவாரசியமான விஷ்யங்களை அழகாக சொல்லியிருக்கீங்க,வயது ஆக ஆக மனசு இன்னும் இளமையாத்தான் இருக்கு.அதனுடைய ரகசியத்தை உங்க பதிவில் தெரிஞ்சிகிட்டேன்.வாழ்த்துக்கள்.
//இந்தியாவிலேயும் எத்தனையோ நகரத்துப் பிரச்சனைகளில் stress மிகுந்த வாழ்க்கைதான் அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவும் விரைவில் தேவைப்படலாம்....//
உண்மைதான். நல்ல, அவசியமான பகிர்வு சித்ரா.
சகோ சித்ரா
இரு நாட்கள் முன்புதான் நண்பர்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் போது "காதலர் தினம், அன்னையர் தினம், தொழிலாளர் தினம்னு பலதினங்கள் கொண்டாடுறவங்க கல்யாண தினம்னு ஒன்னு கொண்டாடுனாதான் என்னவாம் " அப்படின்னு சொன்னேன்.
அதற்கு ஒருவர் அதுதான் வருஷா வருஷம் கல்யாண நாள் வருதுல்ல அப்ப கொண்டாட வேண்டியதுதானே என்றார்.
இப்ப உங்க பதிவில் இப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவதைதெரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் கடைபிடிக்க வேண்டியதுதான்.
திருமண தின வாழ்த்துகள் !
மிக நேர்த்தியான பதிவு.
சகோ சித்ரா
இரு நாட்கள் முன்புதான் நண்பர்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் போது "காதலர் தினம், அன்னையர் தினம், தொழிலாளர் தினம்னு பலதினங்கள் கொண்டாடுறவங்க கல்யாண தினம்னு ஒன்னு கொண்டாடுனாதான் என்னவாம் " அப்படின்னு சொன்னேன்.
அதற்கு ஒருவர் அதுதான் வருஷா வருஷம் கல்யாண நாள் வருதுல்ல அப்ப கொண்டாட வேண்டியதுதானே என்றார்.
இப்ப உங்க பதிவில் இப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவதைதெரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் கடைபிடிக்க வேண்டியதுதான்.
திருமண தின வாழ்த்துகள் !
மிக நேர்த்தியான பதிவு.
அட உலக திருமண நாள் நம்ம ஊருல ஆரம்பித்து வைத்தல் போச்சி
Chitra madam nalla irukku pathivu. arumaiyaana vidayangal vaazhthukkal !
//குழந்தைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது என்று நான் சொல்லல, ஆய்வு (research) சொல்லுது.//
இதை நான் பல வீடுகளில் பார்த்துருக்கிறேன். உண்மைதான்...
நல்ல விரிவாக ஆய்வு..
Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க
சில காதலர்கள் செய்யும் அறைகுறை வேலைகளால்தான் காதலர் களுக்காக தரம் இந்தியாவில் குறைந்து விட்டது..
காதல் என்பது 20-க்கும் 18-க்குமான ஒரு உணர்வு என்பதை மாற்றி 60 வரைக்கும் அதை உணர்ந்தால் காதலர் தினம் அனைவராலும் கொண்டாடக் கூடிய ஒரு விழாவாக மாறிவிடும்
நல்ல செய்தி.. நல்ல பார்வை..
கல்யாண நாளை கொண்டாடுவது, கல்யாணத்தன்றைய நினைவுகளை அசைபோடுவது போல்தான். குழந்தைகள் மெல்ல மெல்ல வளர்ந்து விட்ட பிறகு அவர்கள் இஷ்டம் போல் அந்த நாளை ரொம்ப விஷேசமாக கொண்டாட ஆசைப் படுகிறார்கள். அவர்களாகவே மெனு போட்டு சென்ற வருடம், எல்லோ ரையும் அழைத்து, பார்க்கவே இதுவும் ஒரு வித்தியாசமான தருணமாய் தான் தெரிகிறது.
//ஒரு புத்துணர்வையும் - திருமண வாழ்க்கையில் ஒரு புது ஈடு பாட்டையும் கொண்டு வருமாம்.//
மிகவும் உண்மையான வார்த்தை. அவங்க இங்கே என் கூட வந்து தங்கிய பிறகு இந்த மாதிரியான ஈடு பாட்டை உணருகிறேன்.
திருமண நாள் புதுசா இருக்கு சித்ரா ! ரொம்ப நல்ல பகிர்வு!
குறிஞ்சி குடில்
பதிவு நேர்த்தியாய் மனதை வருடியது. அதனால் நானும் மனதை திறந்து விட்டேன் ஹா ஹா ஹா ஹா ஹா !!
வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து வாழத் தலைப்பட்டால், மிகவும் ரகளையான , ரம்யமான மனிதப் பிறப்பின் அருமை புரியும். எல்லோரும் , ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு தேடுவது போலல்லவா ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ரசிக்க எங்கே நேரம் ? இந்த பரிதாப நிலை மாற வேண்டுமாயின் கொண்டாட்டங்கள் அவசியம். Life is a celebration...Very nice article !!
உலகத் திருமண நாள்- இதுவரைக்கும் கேள்விப்படாத ஒன்று.
சித்ரா...
பதிவு படு சூப்பர்....
கூடவே இந்த பின்னூட்டத்திற்கான உங்களின் இந்த பதிலும்...
Chitra said...
////கல்லாணம் கட்டிகிட்டா நிம்மதிக்கு உத்திரவாதம் உண்டா:) ////
அது ஒரு வழி சாலை இல்லை.... நீங்களும் எப்படி நடந்துக்கிறீங்க என்பதை பொறுத்தது... :-)
//சரி, ரெண்டு நாள் கழிச்சு வந்துட்டு என்ன புளிச்சு போன மாவுல இட்லி அவிக்கிற? என்று புலம்பாதீங்க//
புளிச்சு போன மாவுலதான் தோசை ருசியா இருக்கும்:)
//Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... ம்ம்ம்ம்...... //
மன்மதனும் ரதியும் நம்மூர்க்காரர்கள் என்ற புரிதல் இல்லாமல் இந்தியாவில் இதுதான் பிரச்சினையே மேடம்!
என்னைப்பொறுத்த வரையில் எதிர்ப்பவர்கள் மனதளவில் அடிப்படைவாதிகள் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.
உலகமயமாக்கலில் அந்நியத்துவம் என்று எதுவுமே இல்லை.
நல்ல பகிர்வு. இங்க காதலர் தினத்துக்காக போடற ஆட்டம் தாங்கலை. ரோஜாக்களின் வியாபாரம் பயங்கரமா இருந்ததாம். உலக திருமணதினம் பற்றி இப்ப தான் கேள்விப்படறேன்.
உண்மை சித்ரா...தாங்கள் கணவன் மனைவி என்பதை மறக்காமல் இருந்தாலே காதலுடன் வாழ்ந்துகொண்டிருக்க முடியும் !
என் தங்கைக்கு மட்டும் எழுதுவதற்க்கான விஷயங்கள் எங்கிருந்துதான் வருகின்றனவோ.. சூப்பர்!
இப்போதான் இந்தியாவில் இருந்து திரும்பி இருக்கிறேன். என்னத்தைச் சொல்ல?
சுற்றத்தில் நிறை பேர் ஐ . டில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லும் சேதி (பி.டி. சாமி பாஷையில்) திடுக்கிட வைக்கிறது. திருமணம் ஆகி ஆறே மாதத்தில் விவாகரத்து (பெண் பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வேலை மாற்றம் செய்து வர மாட்டேன் என்று பிடிவாதம்), இரண்டு வாரத்தில் விவாகரத்து என்று எல்லாம் அலற வைத்தார்கள். இந்த லட்சணத்தில் நிறைய காதல் திருமணங்களும், குறைந்த ஆயுளில் முடிந்து போகிறது.
இந்தியாவில் இருந்த நேரம், இது எனக்குத் தெரிந்த இந்தியா அல்ல என்றுதான் தோன்றியது. அமெரிக்காவில் இருந்து கொண்டு, நாம் இன்னும் இந்திய கலாசாரத்தை எப்படியும் பற்றிக் கொண்டு இரட்டைக் குதிரையில் சவாரித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அங்கு மேற்கத்திய கலாச்சாரம் படு ஸ்பீடாக நடை போடுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள நல்ல விஷயங்களை (அயராத உழைப்பு, காலந் தவறாமை, மற்றவர் மனம் புண் படாமல் பேசுவது, பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்வது ) எடுத்துக் கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரத்தின் உடை, உணவு மற்றும் பாப்புலர் கலாச்சாரத்தை மட்டும் இந்திய இளைய தலை முறை எடுத்துக் கொள்வது கலாச்சார குழப்பத்துக்கு வழி வகுக்கும்.
சமுதாய மாற்றங்களைத் தடுக்க முடியாது. இந்தியா மிக வேகமாக வளரும் நாடு. அதிகப் பணப் புழக்கம் சில கலாச்சார சீரழிவுகளையும் உண்டு பண்ணும், பொறுத்திருந்து பார்ப்போம்...
அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .
எல்லாவற்றிலும் இது மிகவும் பிடித்திருக்கிறது :) சரியான பார்வை :)
congrats chitra such a wonderful post
விவாகரத்துக்கள் மலிவாகப்போயுள்ள இந்தக்காலத்தில், (ஏன் சில இடங்களில் இது ஒரு பாஸனாகவும் ஆகிவிட்டது) கணவன் மனைவி பற்றிய புரிந்துணர்வுகளின் அவசியங்கள், தமக்கான வாழ்தலின் தேவைகள் பற்றி யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்.
இன்றும் சில வயதான தம்பதியர்களின் அன்னியோன்யத்தை கண்டு நான் அதிசயிப்பது உண்டு, அவர்களின் ஒருவரை ஒருவர் பிரியாத தன்மைகள், விட்டுக்கொடுப்புக்கள், நேசங்கள் விபரிக்கமுடியாதவையாக இருக்கும்.
அவர்கள் வாழ்க்கையின் வெற்றியாளர்களாகவே எனக்கு தென் படுகின்றனர். அத்தோடு அவர்கள் கௌரவிக்கப்படவேண்டியவர்களும்கூட, பலருக்கும் மன்னுதாரணமாக திகழ்கின்றார்கள்.
"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
சிறப்பான பார்வை.
சிலரால் மட்டும் எப்படி திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆனாலும், காதல் குறையாமல் கொஞ்சி கொண்டே இருக்க முடியுது//
அதெல்லாம் சொல்லி புரிவதில்லை சித்துக்கா. அன்றுபோல் என்றும் வாழ்வோம் [அதாவது கைப்பிடித்த அன்றுபோல்]அப்படின்னு நினைத்துக்கொண்டிருக்கோம்.
டூயட்தானே அதெல்லாம் பேஷா பாடிடலாம்....
//Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல்,//
சபாஷ் சித்ரா..
//குழந்தைகளுக்காக மட்டுமே சேர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது என்று நான் சொல்லல, ஆய்வு (research) சொல்லுது.//
மிகச் சரி..
// தாயாக தியாக உள்ளத்தோட செய்யும் காரியங்களை விட, காதல் உள்ளத்தோடு குடும்பத்தில் வேலைகளை செய்யும் போது, உற்சாகமாய் - அழகாய் - புது பொலிவோடு இருக்குமாம்.
//
so nice..mudiyumannu thaan theriyalai da..
இப்படி பதிவை சிறப்பா சிரமில்லாமல் கொண்டு செல்வதில் உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை சித்ரா..
ம்ம்ம்.. நல்லாத்தான் சொல்றீங்க...ஆனாலும் குழப்பமா இருக்கே! :-)
சபாசு
இன்றைய காலகட்டத்துக்கு தேவையான அவசியமான ஒன்றை தெளிவான பார்வையுடன் சிறப்பாக பதிவு செஞ்சீருக்கீங்க மேடம்...
சூப்பர் :)
//எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை.... இப்படியும் அமெரிக்காவில் நடக்குதுன்னு காதில போட்டாச்சு.... அப்புறம் உங்கள் இஷ்டம்.... அது வரை, காதலர் தினம் மட்டும் தானோ? //
மாறி வரும் உலகில் இந்த மாற்றமும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும் :))
சரியான நேரத்தில் சரியான பதிவு ...
தொடர்ந்து கலக்குங்க ...
வாழ்த்துக்கள்
சகோ சித்ரா அவர்களுக்கு
//கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு.... ஆனால், எனக்கு ஒரு டவுட்டு! அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே follow பண்ணிடுறாங்க?//
நல்ல நக்கலான வார்த்தைகள்
அருமையான பதிவு
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க! இந்த தினத்திலேயும் வியாபாரம் பூந்துடாம இருக்கணும்! பகிர்வுக்கு நன்றி.
//காதலை பத்தி என்னமோ சொல்றீங்க. சரி. சின்னைபையன் எனக்கு ஒன்னும் புரியல.//
உனக்கு என்னிக்கு தான் புரிஞ்சிருக்கு ..சீக்கிரம் கல்யாணத்த பண்ணு எல்லாம் புரியும் .
அக்கா நீங்க எது எழுதினாலும் வித்தியாசமான நியூசாதான் இருக்குது
good one. Super.
உண்மையிலேயே நல்ல பகிர்வு. விவாகரத்துகளும், மிகுந்த பிரச்சினைகளும் உள்ளடங்கிய இந்த காலத்தில் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் அதுவே சொர்க்கம். பகிர்வுக்குநன்றிங்க.
உலக திருமணநாள் இங்கே எப்படி கொண்டாடுவார்கள் தெரியுமா ?
விட்டுப்போன சீர் செனத்தி கேட்டு படுத்திடுவாங்க...
[பொது நடப்பு இது .சொந்த அனுபவமான்னு கேட்டு விடாதீர்கள்..]
பகிர்விற்கு நன்றி.
//நம்ம ஊரில் பேசப்படுற அளவுக்கு இங்கே பெரிய ஸ்பெஷல் இல்லை... அதுவும் இந்த வருடம், வார நாளில் (திங்கள்) வந்ததால் - சும்மா கடைகளில் greeting cards - ரோஜா மலர்கள் - heart shaped balloons - chocolates மட்டும் நல்லா sales ஆச்சு ... இதெல்லாம் commercial கண்ணோட்டத்தோட கொண்டாடப்படுகிறது என்று ஆகி போச்சு.... Valentine's Day , சனி - ஞாயிறு வந்தால் மட்டும் கொஞ்சம் களை கட்டும்.... அம்புடுதேன்!//
இங்கேயும் அம்புட்டேதான்..
உலக திருமண நாள் பத்தி கேள்விப்பட்டதே இல்லைப்பா.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி..
எனக்கு சம்பந்தமே இல்லாத காதல், திருமணம் பற்றி பேசியிருப்பதால் முழுசா படிச்சாலும் படிக்காத மாதிரியே டாடா சொல்லிகிடுறன்..
அட்டகாசமான செய்தி! விளக்கங்களுடன்.. வெட்டிப்பேச்சுங்ர பேரை மாத்திடுங்களேன்!! ;-)
தினம் தினம் காதல் செய்பவர்களுக்கு காதலர் தினம் என்ற ஒன்று தனியாக தேவையே இல்லை.
பதிவு அருமை! இந்தப் பதிவை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் ஒரு 'இச்..இச்'.
மிக நல்ல தேவையான தகவல்கள்
திருமண நாள் புதுசா இருக்கு.
தொடர்ந்து கலக்குங்க ...
வாழ்த்துக்கள்
chitra akka post always speclthaan...:) americakaaran kalyana day celebrate pannaraannu solliyaassu illaiyaa, inimey namba payapullaikalum celebrate panna aarambichuduvaanga...:)
நல்ல அலசல். ஆனால், திருமண நாள் இந்தியாவுக்கும் இறக்குமதியானால், அது இன்னொரு அக்ஷய திருதியையாகவோ (தமிழ் உதயம் சொன்னதுபோல்) அல்லது விட்டுப் போன சீர்களை வாங்குவதற்கோ (கோமாக்கா சொன்னது) தான் என்றாகிவிடும்.
அம்முவின் அலசலும் சரிதான். விடுமுறையில் இந்தியா போனால், இது நம்ம ஊர்தானா என்ற திகைப்பும், அதிர்ச்சியும்தான் ஏற்படுகிறது.
ம்ம்...
வித்தியாசமான தகவல்கள் சித்ரா.. ஒருகை ஓசையா இல்லாம ரெண்டுபேரும் துணையை கொண்டாடும் வீடுகளில் தெனமும் திருமணதினங்கள்தான் :-)))))
அருமையான பதிவு சித்ராக்கா. நல்ல விஷயம்தான். கணவன் மனைவி உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாக்களுக்கும், இந்த மாதிரி விஷயங்களுக்கு, அரசும், சமூகமும் மென்மேலும் ஆதரவு தரணும். அப்பத்தேன் இந்த கள்ள உறவெல்லாம் அடங்கும். விவாகரத்துக்களும், குழந்தைகள் மேல் வன்முறையும் குறையும். இதனால குழந்தைகளுக்கும் நல்லது நடக்குமே. இது மாதிரி இந்தியாவுல மட்டுமல்ல, எல்லா இடத்திலும் வரணும். காமெடியா எழுதினாலும், நல்ல கருத்துக்கள். :)
//////கல்லாணம் கட்டிகிட்டா நிம்மதிக்கு உத்திரவாதம் உண்டா:) ////
அது ஒரு வழி சாலை இல்லை.... நீங்களும் எப்படி நடந்துக்கிறீங்க என்பதை பொறுத்தது... :-)//
ஹெ ஹெ... நச் பதில். உண்மையும் அதுதேன். Hats Off..!! :))
அனைத்து நாட்களும் நன்னாள் தான், நாம் நாம் ஆக நடந்து கொண்டால்.பிறகு எதற்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள்.
சில சமயம், ஒரு boredom வராமல் இருக்க ஒரு refreshing charge தேவைப்படலாம். மேலும், பொதுவாக people start taking each other for granted. It is good to have little bit appreciation, now and then - whoever it may be. இந்த ஸ்பெஷல் நாட்கள், அதற்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர, வியாபார உள்நோக்குக்கு ஆதாரமாக அல்ல.
Enna periya valentinu. Nalla Kathalukkaga uyirayum vidalam thaye.Good posting.samy.
கணவன் மனைவிக்கு அவங்களுக்குன்னு ஒரு நாள் நல்ல விஷயம் தான்.. ஒண்ணா கொண்டாடும் போது நிறைய பேருக்கு வாழ்க்கையில உற்சாகம் வரும்..
ஈசல் காதல்களுக்கு இந்த நாள் ஒரு இனிய நாள்.. அது தான் பிடிக்கல :)
Wow, well-written script.
நல்ல பதிவம்மா..அம்புட்டுத்தானா..என கேட்க சொல்லுது.
அப்படின்னா வர்ற ஞாயித்துக்கிழமை கொண்டாட்டம் தான் போல... வாழ்த்துக்கள் மேடம்...
Feb. 13th was Second Sunday.
அருமையான போஸ்ட்
வழக்கம் போல் கலக்கல். கல்யாணம் பதிவுல... டூயட் எங்க வீட்டுலயா? சூப்பர்.
எப்பவுமே நாம அரை குறைதானே..எதை முழுசா செய்யுரோம் .. கடைசி பாராவும் தலைப்பும் பிரம்மாதம் :-)
Belated Valantines day Wishes.
"எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை...."//
உலகத் திருமண நாள் - புதிய விஷயம்தான். சீக்கிரமே இங்கும் வந்துடும்.
இந்தியாவில் இதை அறிமுகப் படுத்தினால் 'கப்'பென்று பிடித்துக் கொள்வார்கள். பதிவர்கள் இந்தத் தலைப்பை அந்த நாளுக்கு முன்னாலிருந்தே 'தொடர் பதிவு' எழுதச் சொல்லி நினைவு படுத்தலாம்!!
//அவரையும் கவனிச்சுக்கிற ஆயாதான்// ஆயா வேணும்ணா அந்த மூஞ்சிங்களுக்கு எதுக்கு கல்யாணம்.. ஆயா மட்டுமில்லம்மா பாயாவும் இருக்க்ணும்..
//கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு....//
எல்லாமுமே அங்கேருந்துதானே இம்போர்ட் பண்ணுறாங்க :)
//ஆனால், எனக்கு ஒரு டவுட்டு! அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே follow பண்ணிடுறாங்க?//
எதையுமே அறைகுறையா தெரிஞ்சுகிட்டு அலப்பறை பண்றதுதான் எங்களுக்கு வழக்கம்!
// ... இதெல்லாம் commercial கண்ணோட்டத்தோட கொண்டாடப்படுகிறது என்று ஆகி போச்சு...//
இதான் விஷயமே!!
//Valentine's Day - அன்பு என்ற பெரிய வட்டத்தில் பார்க்காமல், காதலர் தினம் என்ற குறுகிய வட்டத்தில் தானே இந்தியாவில் கொண்டாடுறாங்க .... //
லவ்வுன்னாதானே பர்ஸ தொறக்குதுங்க. அன்புன்னா ஆப்புதான்..
எனக்குத் தெரிந்து, இந்த தினத்துக்கும் சரியான பொருள் தருவது சிங்கப்பூர் (அன்பர்கள் தினம்)!!
எதையுமே 'தினம்' என்று குறுக்கிவிடாமல் இருந்தால் வியாபாரம் அங்கே வராது...
சித்ரா, நீங்கள் சொன்னமாதிரி ”உலகசமுதாயசேவா சங்கத்தில்” நடைபெறுகிறது.
மனைவியை மதிக்கும் நாள் என்றும்,மனைவி நல வேட்பு நாள் என்றும் கொண்டாடப் படுகிறது.
கணவனும் மனைவியும் நேருக்கு நேராய் உட்கார்ந்துக் கொண்டு இரண்டு பேரும் கைகளை இணைத்துக் கொண்டு ஒருவர் வலது கண்ணை ஒருவர்ப் பார்த்துக் கொண்டு மனைவியை வாழ்த்தி கணவர் கவி பாட ,பின் மனவிக்கு மலர் கொடுப்பார் கணவர், மனைவி பழம் தருவார்
கணவர் மனைவிக்கு தலையில் பூ சூட்டி விடும்போதும், கணவனுக்கு பழத்தை கொடுக்கும் போதும் மனைவி படும் வெட்கம்,காதல் எல்லாம் பார்க்க மிகவும் நன்றாக இருக்கும். திருமணத்தின் போது பால்,ப்ழம் சாப்பிட்ட நினைவு ஒவ்வொருவருக்கும் வரும் நிச்சியமாய்.
நல்ல பதிவு கொடுத்தீர்கள்.
உலக திருமண நாளுக்கு வாழ்த்துக்கள்.
காதலோடு பேச நேரம் ஒதுக்க வேண்டும் முக்கியமாய். கணவன் மனைவி இடையே ஒற்றுமையும், அன்பும் வளரும்.
நானும் அதை வழி மொழிகிறேன்.
நன்றி சித்ரா.
முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரைகூட வரும்.
சர்ச்சில் நடந்த நிகழ்வு தொடர்ந்தால் மனமுறிவு குறையும்.
குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்.
'உலக திருமண நாள்' - ஐயோ, நம்மை நோக்கிதான் வருது..ஓடுங்க, ஓடுங்க.. (சும்மா கெடக்க மாட்டீங்களா சித்ரா நீங்க?) ;-)
இதெல்லாம் விடுங்க.. எப்படி இவ்ளோ கமென்ட் வாங்குறது? யூஸ் ஆகுறத சொல்வீங்களா?.. ;-)
கலக்கல் பாஸ்!
உதவியை, appreciate பண்ணிய விதம் பிடித்து இருந்துச்சு.//
அருமையான, கருத்துக்கள்.
''சுற்றத்தில் நிறை பேர் ஐ . டில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லும் சேதி (பி.டி. சாமி பாஷையில்) திடுக்கிட வைக்கிறது. திருமணம் ஆகி ஆறே மாதத்தில் விவாகரத்து (பெண் பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வேலை மாற்றம் செய்து வர மாட்டேன் என்று பிடிவாதம்), இரண்டு வாரத்தில் விவாகரத்து என்று எல்லாம் அலற வைத்தார்கள். இந்த லட்சணத்தில் நிறைய காதல் திருமணங்களும், குறைந்த ஆயுளில் முடிந்து போகிறது.
இந்தியாவில் இருந்த நேரம், இது எனக்குத் தெரிந்த இந்தியா அல்ல என்றுதான் தோன்றியது. அமெரிக்காவில் இருந்து கொண்டு, நாம் இன்னும் இந்திய கலாசாரத்தை எப்படியும் பற்றிக் கொண்டு இரட்டைக் குதிரையில் சவாரித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், அங்கு மேற்கத்திய கலாச்சாரம் படு ஸ்பீடாக நடை போடுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள நல்ல விஷயங்களை (அயராத உழைப்பு, காலந் தவறாமை, மற்றவர் மனம் புண் படாமல் பேசுவது, பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்வது ) எடுத்துக் கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரத்தின் உடை, உணவு மற்றும் பாப்புலர் கலாச்சாரத்தை மட்டும் இந்திய இளைய தலை முறை எடுத்துக் கொள்வது கலாச்சார குழப்பத்துக்கு வழி வகுக்கும்''.
உலக திருமண நாள் பத்தி கேள்விப்பட்டதே இல்லை
நன்றி .........
நண்பர்களே நேரம் இருந்தால் கொஞ்சம் வந்துட்டு போங்க
"அர்த்தம் விளங்கா (காதலர் தின) போராட்டம் ".......
http://redhillsonline.blogspot.com/2011/02/blog-post_15.html
என்னைப்பொறுத்த வரையில் எதிர்ப்பவர்கள் மனதளவில் அடிப்படைவாதிகள் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.
வாங்க அய்யா உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். இங்கே ஏற்கனவே ஒவ்வொருத்தனும் காதல்ன்னா என்னவென்றே தெரியாமல் .......... அலைந்து கொண்டு இருக்கானுங்க. நீங்க என்னமோ பெரிதாக தத்துவம். வச்சுக்கிறேன் வாங்கப்பூ.
அப்புறம் சித்ரா அன்பைப்பற்றி எழுத நீங்க முழுமையான தகுதியானவரே. ஒரு பெரிய கூட்டத்தையே அன்புகடலில் மூழ்க வைத்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பதால்.
நான் வாழ்த்துகள் சொல்ல மாட்டேன்.
அன்பு என்பது உணர்தல்.
அற்புதமான பதிவு சித்ரா! கொண்டாடிட வேண்டியது தான்.
***கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு.... ஆனால், எனக்கு ஒரு டவுட்டு! அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே follow பண்ணிடுறாங்க? ***
நான் பார்த்தவரைக்கும் இந்தியா அமெரிக்காவை ஓவெர்டேக் பண்ணி ப்ல வருடங்களாயிடுச்சு!
அவங்கல்லாம் பட்டணத்துவாசிகள் மாதிரி, என்னை மாதிரி அமெரிக்கவில் வாழும் அகதிகலெல்லாம் பட்டிக்காடு! :)
சரி, ரொம்பப் பேசவேணாம்னு விட்டுடுறேன் :)
இது அமெரிக்காவுக்கும் மட்டுமல்ல எல்லாருக்குமே அத்தியாவசியமான விஷயம்....
படங்கள் எதுவுமே தெரியவில்லையே? (கூகிள் க்ரோம் பயன்படுத்துகிறேன்)
காரணம் தெரியலியே... Chrome பயன்படுத்தும் வேறு யாருக்காவது இந்த பிரச்சனை இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
இப்போது படங்கள் தெரிகின்றன.
பிரார்த்தனைக் கூடத்திற்குச் சென்று, பலர் முன்னிலையில், இராணுவக் கட்டளை போல, ஒருவர் சொல்ல மற்றவர்கள், செயல் வடிவம் கொடுக்க, இப்படி நடந்து கொண்டால் தான் அன்புள்ளதாக அர்த்தமாகுமா !
அதெல்லாம் இல்லாமலேயே இலைமறை காய்மறையாக இங்கு நாங்களும் அன்பு காட்டி இங்குள்ள கலாச்சாரப்படி, இனிமையான இல்வாழ்க்கை நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
மறைத்தலில் நான் கவர்ச்சியும் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் !
தங்கள் பதிவு பல தகவல்களைக் கொடுத்து, எல்லோருக்குமே ஒரு ’கிக்’ ஏற்படுத்துவதாக உள்ளது என்பதென்னவோ மறுப்பதற்கில்லை.
நான் சொல்ல வந்த கருத்து.... பல குடும்பங்களில், இன்றைய stressful சூழ்நிலையில் கணவன் மனைவி, தங்கள் காதலை மறந்துடுறாங்க என்பது உண்மை. குடும்ப சூழ்நிலைகள், எல்லோருக்கும் இதமாக அமைந்து விடுவதில்லை...
பிரார்த்தனை கூடத்தில் கட்டளைக்கு பயந்து செய்த காரியம் இல்லை... திருமண நாளை (wedding நடந்த நாளை ) நினைவு படுத்தி, அன்று இருந்த காதல் மயக்கத்தை இன்றும் புதுப்பிப்பதே நோக்கம். நம்ம ஊரிலும் கூட, அறுபதாம் கல்யாணம் எல்லாம் செய்து, புது மண தம்பதியர் போல சீண்டி விட்டு மகிழும் போதும், மற்ற இளைய தம்பதியனருக்கும் ரோல் மாடல் ஆக இருக்குமே...
மறைத்தலில் கவர்ச்சியும், மலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டு ...உண்மை.. ஆனால், அடக்கி வைத்தலில்? மற்ற பிரச்சனைகளுக்கு காரணம் ஆகி விடுகிறதே...
இந்த பதிவு மூலம் கிக் ஏறியதோ இல்லையோ, ஒரு சிலராவது... கணவன்/மனைவி காதலை புதுப்பித்துக் கொண்டால் சந்தோஷமே!
//திருமண நாளை (wedding நடந்த நாளை ) நினைவு படுத்தி, அன்று இருந்த காதல் மயக்கத்தை இன்றும் புதுப்பிப்பதே நோக்கம்.//
நோக்கம் நல்ல நோக்கம் என்பதில் எனக்கும் கருத்து வேற்றுமை எதுவும் இல்லை.
பதிவை முழுவதும் படித்துப் புரிந்து கொண்டேன். மேலும் தங்களின் விளக்கத்திற்கும் மிக்க நன்றி.
உலகத் திருமண நாள்னு இப்பத்தான் கேள்விப்படறேன்.
//எப்போ நம்ம ஊரில், உலக திருமண நாளை கொண்டாடப்போறாங்க என்று தெரியவில்லை//.
...ஏப்ரல் ஒண்ணாம் தேதி கொண்டாடுனா பொருத்தமா இருக்கும்!
அக்கா உடனே வந்து வாசிக்க முடியவில்லை மன்னிச்சுங்கோ...
ஃஃஃஃஃகழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு....ஃஃஃஃ
பெரிய குசும்பா தான் ஹ...ஹ..ஹ..
அருமையாக நகர்த்தியிருக்கிறிர்கள்...
// அது எப்படி சரியா இந்த Valentine Day மாதிரி விஷயங்களை மட்டும் கரெக்ட் ஆக - அரைகுறையாக தெரிஞ்சு வச்சுக்கிட்டு அங்கே follow பண்ணிடுறாங்க? //
நியாயமான கவலைதான்.
//ரெண்டு நாள் கழிச்சு வந்துட்டு என்ன புளிச்சு போன மாவுல இட்லி அவிக்கிற? //
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள்..
//உலகத் திருமண நாள்//
ரைட்டு.. இனி இதுக்கும் துணி, நகைக்கடைகளில் தள்ளுபடினு ஆரம்பிச்சுடுவாங்க..
புதிய செய்தி.ஆமாம் இனிய வாழ்க்கைக்கு காதல் அவசியம்.
நல்ல விஷயமா இருக்கு சித்ரா..
மனங்கவர்ந்த பதிவு
இன்றைய காலகட்டத்தில்
அவசியம் சொல்லவேண்டிய
விஷயத்தை ஆணித்தரமாகவும்
அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
தொடர வாழ்த்துக்கள்
அடுத்த வருடம் கொண்டாடிற வேண்டியது தான்.
Yes. Its really require for all.
Let me spice up my life :-)
me 149thu
me 149thu
ooooo parents signature problemmaa; ok ok appa naamathaan 150thumm
ரொம்ப நல்ல பதிவுங்க.. தொடர்ந்து இந்த மாதிரி எழுதுங்க
அப்பப்பா... இவ்வளவு விஷயங்களா? அடடா... எவ்வளவு ரகசியங்கள்.
அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு ( மதுரைக்கார மொழியில் விவரிக்க வேண்டுமானால் ` அசால்ட்டாக' சொல்லப்பட்ட அற்புதமான விஷயம் ! ). வலைத் தளத்தின் பெயரை கொஞ்சம் வெட்டிப் பேச்சு ' என்பதற்கு பதிலாக நிறைய உபயோகப் பேச்சு' என்று மாற்றிக் கொள்ளலாம்... நெசந்தான். உதட்டிலிருந்து வரும் வார்த்தை அல்ல இது, உள்ளத்திலிருந்தாக்கும் !
Arumaiyaana padhivu :)
Dear Chitra,
There is only one power that wants to be shared fully, freely and unconditionally, and love is still a good name for it...
Tasty appetite
கல்யாண நாள் கொண்டாடுவதுதான் இந்திய கலாசாரத்திற்கு பெருமை
மனைவி அமைவதுமட்டுமல்ல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்.ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமுயற்சித்து,விட்டுக்கொடுத்துப்போவதால்ஒன்றும் தப்பில்லை.விட்டுக்கொடுப்பவரே வெற்றிபெற்றவராவார். அதனால் குழந்தைகளே கணவரிடமும் அவர் குடும்பத்தாரிடமும் ஒற்றுமையாய் இருந்து வாழ்க்கையில் முதன்மை பெறுங்கள்.வாழ்த்துக்கள்.நல்லது.
//நான் போட்ட ரூல்ஸ் எல்லாத்தையும், எனக்கே திருப்புறா!//
அது தானே.. ஆளுக்கொரு ஞாயமா?
//***கழுதை கெட்டால் குட்டி சுவரு - இந்தியா கெட்டால் அமெரிக்கா என்று ஆகி போச்சு...//
ha ha ha
உண்மைதான் சித்ரா....
குறுகிய வட்டத்தில் இன்னும் நிறைய ...மக்கள்...வாழ்ந்துகொண்டுதான் இருக்கிரார்கள்....
சித்ரா அக்கா நீங்க அமெரிக்காவுல உளவியல் டாக்டரா இருக்கிங்களா?உங்க சேவைக்கு இந்தியர்,அமெரிக்கர் என்ற பேதம் தேவையில்லை.நீங்கள் தாரளமாக உலக மக்கள் அனைவருக்கும் உளவியல் தீர்வு சொல்லலாம்.அந்த தன்மையை உங்க மண்ணு உங்களுக்கு வழங்கிருக்கு.வாழ்த்துக்கள் .
//கீழே விழுந்த வேற்று கரக வாசியையும்//
வேற்று கரக வாசி அல்ல..வேற்று கிரகவாசி.
பிரபல பதிவர்கள் பிழை இன்றி எழுதினால்தான், புதிய பதிவர்கள் சிறப்பாக எழுத உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். சரிதானே.
இந்தியாவிலும் இருக்கிறார்கள்.. ஆத்மார்த்தமாய் நேசிக்கிற தம்பதிகள்
ஆனால் அவர்களுக்கு விளம்பரம் கிடைப்பதில்லை.
Post a Comment