Monday, February 28, 2011

வேகம் - வேகம் - போகும் - போகும் - மேஜிக் ஜர்னி


 1947 ல - இந்தியா சுதந்திரம் வாங்கிச்சு.  (அப்போ அப்போ இதையும் ஞாபகத்தில் வச்சுக்க வேண்டியது இருக்கிறது... நம்ம நாடு ஜனநாயக நாடுங்கறது எத்தனை பேருக்கு மறந்து போச்சுன்னு தெரியல...இல்லை, மறக்க வச்சுட்டாங்களா என்றும் தெரியல. )
சரி, மேட்டர்க்கு வாரேன். 


நம்ம நாடு "வெள்ளையனே வெளியேறு!" என்று புரட்சி செய்து விடுதலை வாங்கிய அந்த பொன்னான வருடத்தில தான், அமெரிக்காவுல ஒரு அபூர்வமான விஷயம் நடந்துச்சுன்னு சிலர் நம்புறாங்க.... 
குறிப்பாக,  நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள ஒரு சின்ன ஊரு - ராஸ்வெல் (Roswell) -  சுமார் 45,000 மக்கள் மட்டுமே வாழும் அந்த ஊரில் கண்டிப்பாக நம்புறாங்க...  


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஒரு பக்கம் பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்குறப்போ,  இந்த ஊரு மக்கள்,  வேற்று கிரகத்துல மக்கள் (aliens) இருக்காங்க இல்லையா என்று இன்னொரு பஞ்சாயத்து,  அந்த வருஷம்தான் ஆரம்பிச்சு வச்சாங்க. 


ராஸ்வெல் ஊருக்கு 75 மைல்களுக்குத் தள்ளி,  பறக்கும் தட்டு (UFO)  ஒன்று சொயிங்னு வந்து இறங்கிச்சுனு (crash landing)  அந்த ஊர் மக்கள் சொல்றாங்க.  அதை பத்தி, அந்த ஊரில் பக்கத்துல ஆராய்ச்சிக்காக - மற்றும் ட்ரைனிங்க்காக - டென்ட் போட்டு இருந்த Roswell Army Air Field ல போய் சொல்ல,   அவங்கதான் அதை பத்தி விசாரணை நடத்துனதாக சொல்றாங்க... 


ஆனால்,  1941 - 1967 வரை, அங்கே இருந்த Air Force Base ஆட்கள், அந்த விஷயங்களை மூடி மறைச்சுட்டதாகவும் சொல்றாங்க.. அந்த தட்டில் இருந்து கீழே விழுந்த வேற்றுகிரகவாசியையும்,  எங்கோ ஒரு இடத்தில் ஆராய்ச்சிக்காக ஒளித்து வைத்து இருப்பதாகவும் சொல்றாங்க.

மத்தவங்களோ, "அதெல்லாம் இல்லைப்பா,  Air Force ஆளுங்க தங்களுடைய புது புது Fighter Air-crafts  எல்லாம், அந்த ஏரியாவில் தான் சோதனைக்கு அனுப்பி பார்ப்பாங்க.... அதில ஒண்ணு தான் தரையில் விழுந்ததை, மக்கள் பார்த்துட்டு UFO னு நம்ப ஆரம்பிச்சிட்டாங்க, " என்று எதிர் வாதம் பண்றாங்க...  

"நீங்க சொல்றதை சொல்லிக்கிட்டு இருங்க.... நாங்க நம்புறதை நம்பிக்கிட்டு இருக்கோம்"னு  ராஸ்வெல்  மக்கள் வேற்றுகிரக வாசிகள் மேல ஒரு தனி பக்தி, மரியாதை, பாசத்தோட சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க....  


இந்த ஊரில்  இருக்கிற McDonald's Fast Food Restaurant கூட ஒரு UFO வடிவத்தில் அமைக்கப்பட்டு கட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவில,   நியூ யார்க் மாதிரி நகரத்தை மட்டும் பார்த்து -  வாய் புளந்துட்டு -  அமெரிக்காகாரன் ராக்கெட் விடுறதை மட்டும் பெரிசுபடுத்தி பார்க்கிறோம்.  ஆனால் இங்கேயும் சின்ன கிராமத்தில,  வேற்று கிரகத்துல இருந்து ராக்கெட் விட்டு, தங்க வீட்டு கொல்லைப்புரத்துல இருந்த மாட்டு கொட்டகைக்கு பக்கத்துல விழுந்துடுச்சுன்னு நம்புற சனங்க  இருக்காங்கப்பா. 

தமிழ்சினிமாபட்டியாய் இருந்தால் என்ன?  அமெரிக்கபட்டியாய் இருந்தால் என்ன?  அந்த அந்த ஊருக்கு ஒரு நம்பிக்கை - நாட்டாமை - சொம்பு - பறக்கும் தட்டு - கொள்ளி வாய் பிசாசு - வேற்றுகிரக வாசினு வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும் போல...

அந்த ஊருக்கு நாங்க போனதை மறக்கவே மாட்டேன்.... முதலில், ஏதோ "ஸ்டார் வார்ஸ்"  (Star Wars)  படத்துக்குள்ள நுழைஞ்சிட்டேனோ என்று பார்த்தேன்...  ஊரு முழுக்க அப்படி ஒரு பில்ட் அப்பு.   

Alien Autopsy Exhibit at the Roswell UFO Museum: 


அங்கே Aliens - UFO க்கு என்று  ஒரு museum கட்டி வச்சுருக்காங்க.... பத்தாதற்கு, வருஷத்திற்கு ஒரு வாட்டி UFO திருவிழா வேறு நடக்குதுங்கோ. ஜூலை மாதம் முதல் வாரம்,  நடக்கும் மூன்று நாள் கொண்டாட்டம் பார்க்க வேடிக்கையாக இருந்துச்சு. வேற்றுகிரகவாசிகள் மாதிரி உடை அணிந்து கொண்டு, சிறுவர்களும் பெரியவர்களுமாக வலம் வந்து கொண்டு இருக்கிறதை பார்க்கும் போது, இது அமெரிக்காவா இல்லை,  செவ்வாய் கிரகமா என்பது போல இருந்துச்சு.  அந்த திருவிழா நேரத்து படங்கள் தான், கூகிள்கிரகவாசியின் உதவியோடு பதிவு பூரா விதைச்சு வச்சுருக்கேன்.


பாருங்க :  பூலோக மக்களை மட்டும் அல்ல, வேற்று உலக மக்களையும் வரவேற்கும் பலகை: 

திருவிழாவில் Aliens' Parade , ரொம்ப விசேஷமானது.  இங்கே மாறு வேடப் போட்டி நடத்தி,  சிறப்பாக Aliens மாதிரி உடை அணிந்து வருபவர்களுக்கு பரிசும் உண்டு. குழந்தைகளுக்காக,  மார்வெல் காமிக்ஸ் (Marvel Comics)  ஹீரோக்களின் பவனியும் உண்டு.  Iron Man, Spider Man, Super Man போன்று நிறைய பேர்களின் அணிவகுப்புகளும் உண்டு. 


இதில சுவாரசியமான விஷயம் என்னன்னா,  சில பேரு தாங்கள் (UFO)  பறக்கும் தட்டுக்களை இன்னும் அவ்வப்போது பார்ப்பதாகவும், தங்களை வேற்றுகிரகவாசிகள் (Aliens) பூலோக மனிதர்களை குறித்த ஆராய்ச்சிக்காக கடத்தி சென்று சில நாட்கள் வைத்து விட்டு, திரும்ப வந்து விட்டு விட்டதாகவும் அங்கே வந்து சொற்பொழிவு ஆற்றிய போது,  நான் "ஞே" என்று முழிச்சேன்.   இந்த சிரியஸ் விஷயத்தை, சிரிக்காமல்  சீரியஸ் ஆக   அந்த நாலு பேரும் சொன்னாங்க.  தங்கள் தலையில் ஏதோ chip போல ஒரு electronic device பொருத்தி தங்கள் நடவடிக்கைகளை அந்த Aliens கவனித்து வருவதாக நினைக்கிறாங்களாம்.  கேக்குறவன் கேனையனாய் இருந்தால்,  நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு கூசாம சொல்லுவாங்க போல! 


அந்த அம்மா, வீல்  சேர்ல உட்கார்ந்து கிட்டே அந்த அணிவகுப்புல கலந்துக்கிட்டாங்க.... அவங்க உடம்பை கிழிச்சிக்கிட்டு alien வெளியே வரப்பார்க்குதாம். அவ்வ்வ் ........

 தட்டு...தட்டு.... பறக்கும் தட்டு.... உங்கள் பக்கத்துல இருக்கிறது பக்கத்து ஊரு ஆளா இல்லை, பக்கத்து கிரகத்து ஆளா என்று பார்த்து பழகுங்க.... ஹா, ஹா, ஹா, ஹா, ..... 
  மேலும் ஒரு வித்தியாசமான கருத்து அல்லது செய்தியுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.


125 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு..?

சி.பி.செந்தில்குமார் said...

ஏலியன்ஸ்.. சயின்ஸ் ஃபிக்‌ஷன் சம்பந்தப்பட்ட இந்தப்பதிவுக்கு அஞ்சலி பட பாட்டின் சரணத்தை டைட்டிலாக வைத்த உங்க ஐடியாவுக்கு ஒரு ஷொட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>>கேக்குறவன் கேனையனாய் இருந்தால், நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு கூசாம சொல்லுவாங்க போல!


ஹா ஹா இது செம காமெடி.. என்னடா பதிவு சீரியஸா ஒரு பயணக்கட்டுரை மாதிரி போகுதே சித்ராவோட காமெடி டச் இல்லையேன்னு பார்த்தேன்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>திரும்ப வந்து விட்டு விட்டதாகவும் அங்கே வந்து சொற்பொழிவு ஆற்றிய போது, நான் "ஞே" என்று முழிச்சேன்.


ராஜேந்திரகுமாருக்கு “ஙே” உங்களுக்கு “ஞே”வா? ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

பதிவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாத்தான் இருக்கும்..

தமிழ் அமுதன் said...

வித்யாசமான தகவல்..!

Unknown said...

அதுக்குள்ளே பறந்து வந்திடுவாரு சி பி

Unknown said...

அவங்க மொழி கூட எனக்கு தெரியும்னா பாத்துக்கோங்க!!
யாராச்சும் அவங்கள கண்டா என்னை கூப்பிடுங்க கதைக்க..

S Maharajan said...

//கேக்குறவன் கேனையனாய் இருந்தால், நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு கூசாம சொல்லுவாங்க போல!//


ஹாஹாஹாஹாஹாஹா
செம காமெடி அப்போ அங்கேயும் மூட நம்பிக்கை இருக்கு.
வித்யாசமான தகவல் அக்கா

Prathap Kumar S. said...

நமமூரு குடிகாரனுங்களும், வெள்ளைக்காரனுங்களும் ஒரே கேட்டகரி....
இவனங்களுக்கு குடிக்கிறதுக்கு ஏதாச்சும் காரணம் வேணும், அவனுங்களுக்கு ஜாலியா கூத்தடிக்க ஏதாச்சும் ஒரு காரணம் வேணும்... :))

நிலாவுக்கு ராக்கெட் விட்டவனுங்க ஊர்லயா இதெல்லாம் நடக்குது....:)) அவவ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sathishsangkavi.blogspot.com said...

//வேற்று கிரகத்துல இருந்து ராக்கெட் விட்டு, தங்க வீட்டு கொல்லைப்புரத்துல இருந்த மாட்டு கொட்டகைக்கு பக்கத்துல விழுந்துடுச்சுன்னு நம்புற சனங்க இருக்காங்கப்பா. //

அப்ப நம்மாளுகன்னு சொல்லுங்க...

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தகவலை உங்கள் பாணியில் அழகா சொல்லி இருக்கீங்க...

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த விஷயத்தில் எப்போதும் குழப்பம்தான் போல....
நல்லாத்தான் அலசியிருக்கீங்க.....
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்

a said...

வந்துட்டேன்....

VELU.G said...

நமக்கு ஊட்டுக்குள்ள பறக்கற தட்டு தான் பார்த்திருக்கிறேன்

அதுக்கப்புறம் ஆஸ்பிட்டல் போய் கட்டுப்போட்டுட்டு வந்து ..... அதெல்லாம் விடுங்க

வெட்டவெளியில பறக்கற தட்ட நான் பார்த்ததில்லைங்கோ

ம.தி.சுதா said...

இது இப்போ தீரப் போற சந்தேகமில்லை... எப்பவுமே தொடருமக்கா.. நம்ம நாட்டில கூட இரக்கிறதா சொல்லறாங்க.. அனா சில உளவு செய்மதிகளும் இதே போர்வையில் திரிவது பலருக்குத் தெரியாது....

ஆனந்தி.. said...

என்னப்பா...செம லூசு ஊரா இருக்கும்போலே...:)) அதுக்கு நம்ம ஊரு சாமி ஆடுறது...கூழ் ஊத்துறது எல்லாம் எவ்வளவோ பெட்டெர் போலே...அதுவும் alien இவனுங்களை கூட்டிட்டு போயி..சை கடத்திட்டு போயி டெஸ்ட் பண்றதை சீரியஸ் ஆ சொன்ன விஷயம் எல்லாம்...அட..அப்பப்பா...முடியல சாமி...நீங்க அடுத்த வாட்டி போகும்போது ரெண்டு லாரி கொண்டு போயி ஊரில் அத்தன பேரயும் அள்ளிட்டு வந்து கீழ்பாக்கத்தில் தள்ளி விடுங்க சித்ரா...ஹ ஹ...

ஆனால் ஒன்னு யோசிக்கும்போது....இப்படியும் சில கிராமம்...இப்படியும் சில மக்கள்...எப்படியும் வித்யாசமா யோசிக்கிராங்க்னு ஆச்சரியாம இருக்கு...அவங்களுக்கு அடுத்த வேளை சோறு பற்றி எந்த கவலையும் இல்லை போலே...:))) அப்புறம் அந்த alien biopsy புகை படம் பார்த்தேன்...யம்மா..சாமி...ரொம்ப வித்யாசமான பதிவு...என்னை ஆச்சர்ய பட வைத்த பதிவு அம்மு...

Gayathri Kumar said...

Very interesting..

ம.தி.சுதா said...

அக்கா புருசன் பொண்டாட்டி சண்டயில பறக்கும் தட்டில இவங்க வரமாட்டாய்ங்களா ?

Chitra said...

அமெரிக்காவுக்கும் பல முகங்கள் உண்டு. நான் கண்ட வரை, வித்தியாசமாக இருப்பவற்றை பகிர்ந்து கொள்ள விருப்பம் உண்டு. :-)

settaikkaran said...

//அந்த அந்த ஊருக்கு ஒரு நம்பிக்கை - நாட்டாமை - சொம்பு - பறக்கும் தட்டு - கொள்ளி வாய் பிசாசு - வேற்றுகிரக வாசினு வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும் போல..//

இந்த மாதிரி நம்பிக்கையெல்லாம் ரஷியாவிலும் இருப்பதாக வாசித்திருக்கிறேன். பிரிட்டிஷாரின் சில மூட நம்பிக்கைகள் குறித்து பல நகைச்சுவைத் துணுக்குகளும் கேள்விப்பட்டிருக்கிறேன். :-)

//கேக்குறவன் கேனையனாய் இருந்தால், நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு கூசாம சொல்லுவாங்க போல! //

அப்படீன்னா, நமீதாவுக்கு கொள்ளுத்தாத்தாவே கிடையாதா? :-))

படங்களும் தகவல்களும், சொன்ன விதமும் அமர்க்களம்; படு சரளம்.

mamtc said...

UFOs always gave me creeps.looking at title I was thinking tht u were going to pull ET:)
We have so many things running around us,still this Mayan 2012 theory and UFo-blah -give me a break!
If aliens were real there shuld be a good reason for them not trying to contact us, so leave it ppl.
Already every continent is running out of space we dnt need more immigrants

Nagasubramanian said...

நல்லா சொல்றாங்கியா detail ........

Unknown said...

romba useful a irundhuchi unga post.Neraya matter a therinjikkirom,inga vandhu.mikka nadri.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு. மிகவும் சுவாரஸ்யமாக ஒரு முறைக்கு இரு முறை நிறுத்தி நிதானமாகப் படித்து மகிழ்ந்தேன். நகைச்சுவையுடன் நீங்கள் சம்பவங்களை வர்ணிப்பதில் தங்களின் தனித்திறமை பளிச்சிடுகிறது. உங்களின் குழந்தைத் தனமான பேச்சுக்களை/எழுத்துக்களை நான் மிகவும் ரஸித்த இடங்கள்:

//..... வந்து சொற்பொழிவு ஆற்றிய போது, நான் "ஞே" என்று முழிச்சேன்..//

//....நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு.....//

//அவங்க உடம்பை கிழிச்சிக்கிட்டு alien வெளியே வரப்பார்க்குதாம். அவ்வ்வ் .......//

இது போன்ற ஸ்வாரஸ்யமான அடுத்தப் பதிவுக்காக ஏங்கிக் காத்திருக்கும் vgk

தமிழ் உதயம் said...

ஒரு சுவராசியமான தகவல்.

RVS said...

இதைப் படிக்கும்போது மேலே ஏதோ பறந்தது.. பயந்துட்டேன்... என்னைக் கடத்திக்கிட்டு மேலே போய்டப் போறாங்கன்னு..
அட்டகாசமான சரளமான நடையில் நேரே உட்கார்ந்து பேசியது போல...... ;-)

Saraswathi Ganeshan said...

Not only for time pass but informative tooo, enjoyed reading it...

அஞ்சா சிங்கம் said...

இதை பற்றி நிறைய ஆவன படங்கள் பார்த்திருக்கிறேன் ..............

சுவாரசியமாக இருக்கும் ............ இந்த முட்டாள் தனமான நம்பிக்கை அவர்கள் வாழ்கையை சுவாரசியம் ஆக்குகிறது ........
ஹாலிவூட் காரர்களுக்கு பல கோடி டாலர் சம்பாதித்து குடுக்கிறது ...... எல்லாமே பிசுனஸ் தான் .............

மொக்கராசா said...

தகவலுக்கு நன்றி....
யக்கோவ்!! நல்லா ஊரை சுத்துறங்க... பூமியில் உள்ள மனிசனுக்கே சக மனிதனால் 1008 problem.

இதில அவங்க(aliens) வேற இங்க வரனுமா,கஷ்ட காலம்டா சாமி....

'பரிவை' சே.குமார் said...

வித்யாசமான தகவல்..!

Unknown said...

/நமக்கு ஊட்டுக்குள்ள பறக்கற தட்டு தான் பார்த்திருக்கிறேன்

அதுக்கப்புறம் ஆஸ்பிட்டல் போய் கட்டுப்போட்டுட்டு வந்து ..... அதெல்லாம் விடுங்க//

சேம் பிளட் வேலு...

middleclassmadhavi said...

அமர்க்களம்!

Anonymous said...

மற்றவர்களுக்கு எப்படியோ, என்னைப் பொறுத்த வரையில், தங்களது வலைப்பதிவு ‘அமெரிக்க நாட்டின் தமிழ் சுற்றுலா மற்றும் கலாச்சார கையேடு’. :)

Your blog is 'The world's biggest American Travel & Culture Guide in Tamil Language'

I like your blog very much! B)

கோமதி அரசு said...

//கூகிள்கிரகவாசியின் உதவியோடு பதிவு பூரா விதைச்சு வச்சுருக்கேன்.//

சித்ரா நீங்கள் விதைச்ச படங்கள் எல்லாம் அழகு.

நகைசுவை உணர்வுடன் பதிவு அருமை.

நட்புடன் ஜமால் said...

உங்கள் பக்கத்துல இருக்கிறது பக்கத்து ஊரு ஆளா இல்லை, பக்கத்து கிரகத்து ஆளா என்று பார்த்து பழகுங்க.

:)
ullur aalukku enge mathippu

சென்னை பித்தன் said...

//தமிழ்சினிமாபட்டியாய் இருந்தால் என்ன? அமெரிக்கபட்டியாய் இருந்தால் என்ன? அந்த அந்த ஊருக்கு ஒரு நம்பிக்கை - நாட்டாமை - சொம்பு - பறக்கும் தட்டு - கொள்ளி வாய் பிசாசு - வேற்றுகிரக வாசினு வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும் போல... //
சரியாச் சொன்னீங்க!எல்லா நாட்டிலும் இந்த மாதிரி நம்பிக்கைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன!
சுவாரஸ்யம்!

சிநேகிதன் அக்பர் said...

ஏலியன் இருக்கா இல்லையா? நம்பலாமா நம்பக்கூடாதா?

இந்த நம்பிக்கைகள் கலவரத்துல கொண்டுபோய் விடாத வரைக்கும் சந்தோசம்தான் சகோ.

நல்ல பகிர்வு.

Pranavam Ravikumar said...

மறக்க வச்சுட்டாங்க! My wishes!

Unknown said...

மறுபடியும் ஒரு வித்தியாசமான தகவல், பகிர்வுக்கு நன்றி அக்கா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

good info

சாந்தி மாரியப்பன் said...

இதே கான்செப்டை அடிப்படையா வெச்சுத்தான் 'இந்தியில் கோயி மில் கயா'ன்னு ஒரு படம் எடுத்தாங்க :-))

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள் சித்ராம்மா.
உங்களது பதிவு படித்தேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. எனது மூத்த மகன் 2004-2008 அங்கிருந்தான். வரும்போது இதைமாதிரி கதைகள் நிறைய சொல்லுவான்.
எனது திருமுக்குளம் பற்றிய பதிவு படித்தீர்களா?
rathnavel-natarajan.blogspot.com
rathnavel.natarajan@gmail.com
நன்றி.

Anonymous said...

ஹை எனக்கு ரொம்ப பிடிச்ச மேட்டர்

Anonymous said...

ஏலியன்ஸ் படங்கள் பற்றி நிறைய எழுதலாம் ஏலியன்ஸ் கற்பனை கதைகள் இன்னும் சுவை

Lifewithspices said...

Interesting post!!

Cheers!!

FARHAN said...

இந்த மாதிரி வித்தியாசமான மூடநம்பிக்கைக்கு அமரிக்காவ அடிச்சிக்க ஆள் இல்லை

எம் அப்துல் காதர் said...

// நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு கூசாம சொல்லுவாங்க போல! //

இதெல்லாம் எப்படி?? முடியல!! ஹா ஹா ஹா

நல்ல பதிவு. புதிய தகவல் டீச்சர்!!

சசிகுமார் said...

எப்பவும் போல உங்களின் எளிய நடையில் ஒரு வினோத கட்டுரை நன்றி

Kurinji said...

Eppadi evvalavu alga eluthi athukku meela romba alga peyar vaikkareenga Chitra? konjam sollithaanga!

kurinjikathambam

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல பதிவு சித்ரா. அவர்கள் சில விடயங்களை மிகைப் படுத்தி விட்டாலும் அந்த ஆண்டில் சில வினோதங்கள் நடந்தது உண்மை என்று பலர் நம்புகிறார்கள்.லண்டனில் நான் ஒரு TV ப்ரோக்ராம் பார்த்தேன். அதில் பலரை நேர்கண்டபோது அவர்களின் பிரத்தியேகமான புகைப் படங்களையும்
ஆதாரங்களையும் காண்பித்தார்கள்,
மக்கள் திகில் அடையாமல் இருக்கும் வண்ணமோ வேறு ஏதோ காரணத்தால் பல தகவல்கள் வெளி வராமல் மறைக்கப் பட்டதாகவும் சொன்னார்கள்.
நிச்சயமாக காதில் பூ வைக்கும் எண்ணத்தில் அந்தப் ப்ரோக்ராம் அமைக்கப் பட்டிருக்க வில்லை..

வைகை said...

கேட்க்கவும் பார்க்கவும் வித்தியாசமாக இருக்கிறது..

இராஜராஜேஸ்வரி said...

நீங்க சொல்றதை சொல்லிக்கிட்டு இருங்க.... நாங்க நம்புறதை நம்பிக்கிட்டு இருக்கோம்//
நம்பிக்கைதானே வாழ்க்கை! ஓவரா நம்பி
சுவாரஸ்யமா கொண்டாடிக்கிறாங்க!!

ADHI VENKAT said...

படங்களும், தகவல்களும் நல்லா இருக்கு. நீங்க சொல்ற விதமும் அருமை. வேகம் – வேகம் - போகும் மேஜிக் ஜர்னி பாட்டு ஞாயிறு அன்று தான் ராஜ் டீவியில் அஞ்சலி படத்தில் பார்த்தாள் மகள்.

பித்தனின் வாக்கு said...

good and nice post.
but ethukkaka neenga nan glass potta photo ellam podak koodathu. ha ha ha

i very happy to see your dear friend comment in this post.

உணவு உலகம் said...

தலைப்பில் உள்ள வேகம், பதிவிலும் விறு விறு. வாழ்த்துக்கள்.

Anonymous said...

செம சுவாரசியமான விஷயம் சொன்ன பதிவு சித்ராக்கா, உங்க கலக்கல் நகைச்சுவையுடன் :)

மைதீன் said...

தெரியாத ஒரு விஷயத்தை கூறியிருக்கிறீர்கள் மிக்க நன்றி!இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் மாநிலமான கேரளாவில்தான் பேய்,பிசாசு,பில்லி சூனியம் ,மாந்திரீகத்தில் நம்பிக்கை அதிகம்.படிப்புக்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்ல போல.

மாணவன் said...

புதுமையான தகவல்களை ரொம்பவும் சுவாரசியமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மேடம்...

:)

மாணவன் said...

படங்கள் அனைத்தும் விசித்திரமாக உள்ளது

சௌந்தர் said...

பாருங்க : பூலோக மக்களை மட்டும் அல்ல, வேற்று உலக மக்களையும் வரவேற்கும் பலகை: ///

ரொம்ப பாசகார பசங்க போல

அந்த அம்மா, வீல் சேர்ல உட்கார்ந்து கிட்டே அந்த அணிவகுப்புல கலந்துக்கிட்டாங்க.... அவங்க உடம்பை கிழிச்சிக்கிட்டு alien வெளியே வரப்பார்க்குதாம். அவ்வ்வ்///

பார்த்தா ரெண்டு ஆள் மாதரி தான் இருக்கு.....:)


தட்டு...தட்டு.... பறக்கும் தட்டு.... உங்கள் பக்கத்துல இருக்கிறது பக்கத்து ஊரு ஆளா இல்லை, பக்கத்து கிரகத்து ஆளா என்று பார்த்து பழகுங்க.... ஹா, ஹா, ஹா, ஹா, ....////


இந்த பதிவை ஒரு Alien படித்து விட்டு அவர்கள் தலைவர் இடத்தில் புகார் செய்து உள்ளதாம் எந்த நேரம் என்றாலும் சித்ரா கடத்தப்பட்டு.....சிப் வைத்து கண்காணிக்கப் படுவார்.....உளவு துறை தகவல் சொல்கிறது...!!!!

Priya said...

சித்ரா சில தெரியாத தகவல்களை தெரிஞ்சிக்கிட்டேன். இயல்பான உங்க நடையில் எழுதிய விதம் நன்றாக இருக்கிறது.

G.M Balasubramaniam said...

PEOPLE ALL AROUND THE WORLD LIKE FANTACIES. THESE FANTACIES SLOWLY GAIN CREDENCE. AND PEOPLE START BELIEVING THAT. IN THE MIDST SOME PEOPLE GET THE IDEA FOR MAKING A QUICK BUCK. WHATEVER BE THAT I LIKE YOUR LUCID STYLE IN PRESENTING INTERESTING INFORMATIONS.

நிரூபன் said...

நம்ம நாடுகளில் தான் இந்த மூட நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்றால், மேற்கத்தைய நாடுகளிலுமா? உடலுக்கை பறக்கும் தட்டு மனிதர் இருப்பதாக சொல்லுவ்து ‘நல்ல மாஜிக் தான்.

உங்களின் பயணக் கட்டுரையும், அதனை எமக்காக தொகுத்தளித்த விதமும் அருமை.

இளங்கோ said...

// தட்டு...தட்டு.... பறக்கும் தட்டு.... உங்கள் பக்கத்துல இருக்கிறது பக்கத்து ஊரு ஆளா இல்லை, பக்கத்து கிரகத்து ஆளா என்று பார்த்து பழகுங்க.... //

ஹாஹாஹாஹா... :D

mamtc said...

Superman is an alien, he is from krypton.
If you think abt it , aliens maynt be so bad.
So,u know maybe in future they may be in high demand.
I wouldnt mind to trade my hubby to be superman's girlfriend :)
I dont need to pay airline charges, and no need for bulletproof vest, without oxygen tank or snorkelling I can go scuba diving deep under the ocean, endless possibilities..

vasu balaji said...

சீப்பா ஒரு தட்டு வந்தா புடிச்சி போடுங்க. ஊருக்கு வர போக வசதி:))

vanathy said...

People still believe in aliens in this country. I have watched so many aliens story on TV. I do not know whether to believe it or not!!!!

Malar Gandhi said...

Psychic unity of mankind throughout the world' modern or primitive society is filled with mysticism and faith! Coz' we all love stories, rituals...attention:)

Mahi_Granny said...

ஐம்பது மாநிலத்தின் வித்தியாசமான பழக்கவழக்கங்களையும் தகவல்களையும் வைஐத்து ஒரு p .hd க்கு apply பண்ணலாம் சித்ரா

அன்பரசன் said...

வித்தியாசமான தகவல்..

Chitra said...

MAHAVIJAY has left a new comment on your post "வேகம் - வேகம் - போகும் - போகும் - மேஜிக் ஜர்னி":

தமிழ்சினிமாபட்டியாய் இருந்தால் என்ன? அமெரிக்கபட்டியாய் இருந்தால் என்ன? அந்த அந்த ஊருக்கு ஒரு நம்பிக்கை - நாட்டாமை - சொம்பு - பறக்கும் தட்டு - கொள்ளி வாய் பிசாசு - வேற்றுகிரக வாசினு வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும் போல...


super chitra

America வா இது!!!!

நம்பவே முடியல

நீங்க அங்க இருக்குறதாலா இந்த விஷயம் எல்லாம் தெரியுது..

வெங்கட் நாகராஜ் said...

பறக்கும் தட்டு! நிறைய வீட்டுல இப்படி பறக்கறது உண்டே… புதிய பல தகவல்கள். நன்றி.

செங்கோவி said...

நீங்க அவங்களுக்கு பகுத்தறிவை ஊட்டியிருக்கலாம்ல?

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் சுவாரஸ்யம் சித்ரா.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் சுவாரஸ்யம் சித்ரா.

Asiya Omar said...

எதையும் சுவாரசியமாக சொல்றீங்க சித்ரா.அதிலே தான் தனித்து நிற்கிறீங்க.

Romeoboy said...

இது என்னங்க காமெடியா இருக்கு... உலகத்துக்கே அண்ணாச்சின்னு சொல்லிடு திரிஞ்சாலும் அங்க நடக்கும் சம்பவங்களை பார்த்தா கேண பசங்கன்னு சொல்லாம இருக்க முடியல ..

Menaga Sathia said...

சூப்பர்ர் பதிவு,நல்லா எழுதிருக்கீங்க..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதிய தகவல்களுடனான பதிவு.

raji said...

//கேக்குறவன் கேனையனாய் இருந்தால், நமீதாவின் கொள்ளுதாத்தாதான் திருவள்ளுவருனு கூசாம சொல்லுவாங்க போல! //

haa haa haa

super comedy

தூயவனின் அடிமை said...

நல்ல பகிர்வு.

பறக்கும் தட்டு என்றால் என்ன.....ஹி.....ஹி காமெடி எதுவும் பண்ணலையே.

ரகோத்மன் said...

yeah..it can be true also..bcoz some ppl believe nasa got lot of information from this alien for space research and then only it was possible to land on moon...:)

Anisha Yunus said...

நம்ம இட்டிலிய வேணா அங்க காமிச்சு கடை போட்டுரலாமா? அதுதேன் ஏலியன்ஸ் சாப்பாடுன்னு சொல்லி, ஹி ஹி ஹி... எதெதுக்கு திருவிழா நடத்தறதுன்னு விதிமுறையே இல்லாம போச்சு இங்கே. அமெரிக்கா யாராவது சுத்திப் பாக்க ஆசைப்பட்டா முதல்ல உங்க வலைப்பூவைத்தான் படிக்கணும். :)

priyamudanprabu said...

வித்யாசமான தகவல்..!

priyamudanprabu said...

Angeyum bloggers irupangala ......

தாராபுரத்தான் said...

அமர்களம்.

ஜெய்லானி said...

இனியாவது அமெரிக்கான்னு தலையை சிலிப்பிகிட்டு இருக்கிற நம்ம மக்கள் இதையும் பார்த்து திருந்தனும் ... அமெரிக்காவின் அடுத்த பக்கத்தையும் காட்டிட்டீங்களே ஹா..ஹா..

எனக்கும் ஒரு ஏலியன்ஸை சந்திக்க ஆசைதான் ..சில பல சந்தேகங்கள் இருக்கு :-)))))))))))

Unknown said...

நல்லாதான் இருந்திச்சு. எல்லாம் தெரியாத புதிய தகவல்கள். உங்களுக்கும் ஒரு தகவல். நான் தினமும் என் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லும்போது உங்களை போலவே ஒரு பெண்ணைப்பார்க்கிறேன். அதே ஹேர் ஸ்டைல் கிட்டதட்ட அதே முகம். அவர்களை பார்க்கும்போது உங்கள் ஞாபகம் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

Yaathoramani.blogspot.com said...

சொல் புதிது சுவை புதிது என
பாரதி சொன்னதைப் போல
தங்கள் பதிவு எப்போதும்
புதிய விஷயத்தை தருவதாகவும்
சுவைகூட்டுவதாகவும் உள்ளது.
இதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும்
முயற்சிகளை எண்ணிப்பார்க்க
கொஞ்சம் மலைப்பாகத்தான் உள்ளது
நனறி.தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

நீங்க வெலி நாட்டில் வசித்தாலும் நம்ம மண்ணை மறக்கக்கூடாது இல்லியா?அதனாலதான் இதுபோல விஷயங்கள் உங்களைத்தேடி வந்து மாட்டுது. நல்ல வேளை கனி மொழி உங்க பதிவை இன்னும் பாக்கலை.

Riyas said...

ம்ம்ம்ம் நல்லாயிருக்கு..

முத்துசபாரெத்தினம் said...

ம்ம் ரொம்பத்தான் வேகம்போகுது.அனுபவம். நல்லாஇருந்துச்சும்மா.அமெரிக்காவிலே இப்பிடின்னா நம்மஊரு எந்தமட்டுக்கு?
ஆமா முகப்புத்தகத்துல [என் மகன் வாங்கித்தந்த புகைப்படக்கருவியில் நான் எடுத்த புகைப்படங்களை எனக்கு வெளியிடத் தெரியாததால் துபாயிலிருந்தே டீம் வியூவர்மூலம் வெளியிட்டார்] சொர்ணலிங்கம் புகைப்படங்களைப் பார்க்கவில்லையா? தேனு அப்பா படமும் வந்திருக்கிறது. நல்லது.

pichaikaaran said...

அடுத்த வாரம் சந்திக்கிறேன். "

y long gap ???

Sriakila said...

யப்பா! எவ்வளவு புதுபுது விஷயங்களை சொல்றீங்க..உங்க பதிவின் மூலம் நிறைய வித்தியாசமான விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறோம். இது போன்ற தகவல்களை நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

Thenammai Lakshmanan said...

அட இந்த அமெரிக்காக்காரங்களும் அம்புட்டுத்தானா..:)

அன்புடன் நான் said...

வியப்பான தகவல்... படங்களும் மிரட்டலாவே இருக்கு.....

Jana said...

தாமத வருகைக்கு மன்னிக்கவும்

Battle of: Lost angles வெளியாப்போகும் நேரத்தில் சிறப்பான தகவல் பதிவு

Anonymous said...

இங்கே...பறக்கும் தட்டு பற்றி பேசினால்... சாப்பாட்டு தட்டு பறக்கும். அருமையான பதிவு, இந்தியாவில் பறக்கும் தட்டு இறங்கிய படமும்,அதுவும் அரசியல் வாதிகள் மீது இறங்கியதாக இருக்க வேண்டும்.தயவு செய்து படம் போடவும்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எங்கே இருந்துப்பா கிடைக்குது பதிவுக்கு கருத்து. மண்டை காய்ஞ்சு போய் நிற்கும் நாய்க்குட்டி வவ்!!வவ் !!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இது கேள்விப்படாத மேட்டர்... பகிர்ந்ததுக்கு நன்றிங்க... புதுசு புதுசா கொண்டாடுறாங்களே...ஹ்ம்ம்...:)

மோகன்ஜி said...

வீட்டுக்குவீடு வாசப்படி.. தலைப்பு அசத்தலாய் இருக்குங்க.

அரசூரான் said...

ஜர்னி தொடரட்டும்...

வேலன். said...

என்ன சகோதரி..திடீர்ன்னு சயின்ஸ் -வரலாறு பதிவுகளையெல்லாம் போட ஆரம்பித்துவிட்டீர்கள்...பதிவு அருமை..
வாழ்க வளமுடன்.
வேலன்.

vinu said...

vara vara oru nallaa compirer aagittu vareeenga sagoo........

vinu said...

vara vara oru nallaa compirer aagittu vareeenga sagoo........

Unknown said...

பகிர்வுக்கு நன்றி சகோ
அட அட அட என்னமா யோசிக்கிறாங்கப்பா ஹி ஹி!

Jayanthy Kumaran said...

very interesting post..beautiful clicks and enjoyed your humourous write up..:D
Tasty appetite

movithan said...

புதுமையான தகவலுக்கு நன்றி.தொடர்ந்து அசத்துங்கள்.

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல் சுவாரஸ்யமான வித்தியாசமான பதிவு! தலைப்பு அதை விட அருமை!!
படிக்கும்போது 'சிட்னி ஷெல்டனின்' The doomsay Conspiracy ஞாபகம் வந்தது!!

Unknown said...

///தட்டு...தட்டு.... பறக்கும் தட்டு.... உங்கள் பக்கத்துல இருக்கிறது பக்கத்து ஊரு ஆளா இல்லை, பக்கத்து கிரகத்து ஆளா என்று பார்த்து பழகுங்க.... ஹா, ஹா, ஹா, ஹா, ../////
super...

சுந்தரா said...

நாட்டுக்குநாடு இதுமாதிரி மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்யுது.

சுவாரஸ்யமான பதிவு சித்ரா.

Jaleela Kamal said...

அட அங்கஏயுமா

Jaleela Kamal said...

தட்டு சூப்பரா பறக்குது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னங்க அசத்தியிருக்கிங்க..
நான் இன்னிக்குதான் இதை பார்க்குறன்...
தாமதத்திற்கு வருந்துகிறேன்..

வாழ்த்துக்கள்..

Lingeswaran said...

சின்ன வயசுல Unidentified Flying Objects பத்தி படிச்சுருக்கேன்.......ரொம்ப நாளைக்கப்புறம் ஞாபகப்படுத்டிங்க...Thanks.

Lingeswaran said...

சின்ன வயசுல Unidentified Flying Objects பத்தி படிச்சுருக்கேன்.......ரொம்ப நாளைக்கப்புறம் ஞாபகப்படுத்டிங்க...Thanks.

Muruganandan M.K. said...

வித்தியாசமான தகவல். சுவையான நடை. சிரிக்கவும், சிநதிக்கவும்...

ஸ்ரீராம். said...

மற்றுமொரு சுவாரஸ்யப் பதிவு. ஒரு காலத்தில் இந்த மாதிரி பறக்கும் தட்டு சமாச்சாரங்களை தேடித் தேடிப் படித்ததுண்டு...௦"ஙே" என்றுதானே விழிக்க வேண்டும்.... ஏன் "ஞே" என்று விழிக்கிறீர்கள்!!

போளூர் தயாநிதி said...

வித்தியாசமான அனுபவமாத்தான்சொல்லுவாங்க போல!

ரிஷபன் said...

உள்ளுர்லையே நம்மள வேற்று கிரக வாசி மாதிரிதான் பாக்குறாங்க.
சுவாரசியமான பதிவு.

ஆகுலன் said...

122 கருத்துரைக்கு பிறகு கருத்துரை இடுவது ஒருமாதிரி இருக்குது.. இருந்தாலும் நல்ல பதிவு...

இப்ப கிட்டடியில Oregonக்கு ஒண்டு வந்ததாம் எண்டு newsல சொன்னாங்க...

இன்றைய கவிதை said...

அருமை சித்ரா ufo பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா இவ்வள்வு சீரியஸா யோசிப்பாங்கன்னு நினைச்சது இல்ல

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க எல்லாம் வித்தயாசமான டாபிக்

நன்றி சித்ரா

ஜேகே

Sathish said...

என்னத்த சொல்ல.. இதை உண்மைன்னு நம்பித்தான் நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன்..ஆனா நிஜமாவே அவர்கள் இருபது உண்மையென்று நான் நம்புகிறேன்..அவர்கள் நம்மோடு மனிதர்களாகவும் வாழ்கிறார்கள். நிச்சயம் ஒருநாள் வெளிவருவார்கள்.. மனிதனுக்கும், அவர்களுக்கும் நேரடித்தொடர்பு ஏற்படும்போது, மனித இனமஅழிய தொடங்கும்.