Sunday, March 6, 2011

என் பேரைச் சொல்லவா ....


இது வழக்கமான பதிவு இல்லைங்க...  இது ஒரு சுய  பெயர் புராண  பதிவு.  இப்போ அதற்கு என்ன அவசரம் என்று கேட்கிறீங்களா?  நம்ம பதிவுலக நட்பு வட்டத்தில் இருந்து,  ராஜியும் இளங்கோவும்  "பெயர் காரணம் தொடர்பதிவு"  என்ற பெயரில்,   என்  பேருக்கு கேள்விகள் கேட்டு இருக்காங்க.... 
என்ன பதிவு,  ஒரு பேருக்காவது  ஒப்பேத்த என்ன பதிவு போடலாம் என்று  நினைத்த பொழுது, இந்த பேர் பதிவே சரியாக இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன்.  


 
ராஜி:   வணக்கம்,  சித்ரா. 
 சித்ரா:  வணக்கம், ராஜி. 

இளங்கோ:  வணக்கம், சித்ரா.    நாங்க இரண்டு பேரும், ஒவ்வொரு கேள்வியிலும் "பேரு" வைத்து கேட்கப் போறோம். நீங்க பதில் சொல்லணும்னு கேட்டுக்கிறோம்.
சித்ரா:  வணக்கம், இளங்கோ.   சரிங்க...


ராஜி:  சித்ரா என்பது உங்கள் சொந்த பெயரா? இல்லை பதிவிற்காக வைத்த பெயரா
சித்ரா: சித்ரா, என் சொந்த பெயர். அதுவே நல்லாத்தானே இருக்குது -   பதிவுக்கென்று ஒரு பெயர் எதற்கு வாடகைக்கு  எடுக்கணும் என்று சித்ரா என்ற என் சொந்த பெயரிலேயே எழுதுகிறேன். 


இளங்கோ:  உங்களுக்கு சித்ரா என்ற பெயர் வைக்க தனிப்பட்ட காரணம் உண்டா? 
சித்ரா:  விசேஷமான சித்ரா பௌர்ணமி அன்று நான்  பிறந்ததால்,  எங்க வீட்டில் எனக்கு சித்ரா என்றே  பெயர்  வைத்து விட்டதாக  எங்க அப்பா சொல்லி இருக்காங்க. 
நிறைய குழந்தைகளுக்கு  நட்சத்திரம் பார்த்து  பேரு வைப்பாங்களாம்.  எனக்கு நிலவு பார்த்து பேரு வச்சிட்டாங்க.... 

ராஜி:   பெயர் காரணத்துக்கும்  ஒரு பில்ட் அப்பு..... சரியா போச்சு!   உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில், உங்கள் பெயர்
சித்ரா: சித்து.

இளங்கோ: இதுதான் நீங்கள் பதிவுலகிற்கு தரும் முதல் பேர் சொல்லும்  பேட்டியா?
சித்ரா:  இல்லை... முன்பு ஒன்றிரண்டு  மொக்கை பேட்டி கொடுத்து இருக்கேன்.

ராஜி: உங்களுக்கு நிறைய பட்டப் பெயர்கள் உண்டு என்று கேள்விப்பட்டேன். அவற்றில் உங்களுக்கு வித்தியாசமாக தோன்றும் பெயர் எது?
சித்ரா:   குயீன் குல்னார்.  (Queen Gulnar) இந்த பெயர் எனக்கு ஏன் வந்துச்சு ....எதுக்கு வந்துச்சுன்னு தெரியல... ஆனால், சின்ன வயசுல இருந்து என் கூடவே இருக்குது... 

இளங்கோ:  பதிவுலகில் நல்ல பெயர் வாங்க ஏதாவது டிப்ஸ் கொடுக்க முடியுமா? 
சித்ரா:         நான்  பத்து டாலர் டிப்ஸ் ஆக கொடுத்தால்  போதுமா?  
 
 ராஜி:   பதிவுலகில்,  கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு பேர் பெற்று இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? 
சித்ரா:  ஒருவர்,  தன் பதிவில் வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரத்தின் எல்லை கோடு,  அடுத்தவரின் சகிப்புத்தன்மையை பொறுத்தது என்ற வரைமுறைக்குள்  இருக்கிறது. 
 
 
இளங்கோ:  இப்போ நிறைய பதிவர்கள் வந்து இருக்காங்க.  அவர்கள் சார்பாக ஒரு கேள்வி:  
எப்பொழுது ஒரு பதிவர்,  பிரபல பதிவர் என்று பேரு எடுத்துட்டார்னு  தெரிந்து கொள்வது? 

சித்ரா:  தமிழ்மணத்துல விரைவில்,  பிரபல பதிவர்களின் பெயர்கள்  பட்டியல்கள் வாரா வாரம் வெளியிடப் போவதாக ஒரு ரகசிய செய்தி வந்து உள்ளது.   அதன்படி, இனி
இந்த வார முன்னணி  ப்ராப்ள (problem) பதிவர் பட்டியல்  :  அந்த அந்த  வாரம் பதிவுலக சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு பிரபலமாகும்  பதிவர்களின் பெயர்கள் இருக்கும்.
இந்த வார  முன்னணி "ப்ரா"பல பதிவர் பட்டியல்:            அந்த அந்த வாரம் நடிகைகளின் படங்களை போட்டு,  அவர்களின் ப்ரா பலத்தில் பிரபலமாகும் பதிவர்களின் பெயர்கள் இருக்கும். 
   வேறு எந்த எந்த பிரிவில் எல்லாம் பிரபலப் பதிவர்கள் பட்டியல் போடணும் என்று புதிய பதிவர்கள், தமிழ்மணத்துக்கு "பரிந்துரை" செய்து எழுதி அனுப்பலாம்.  அப்படி வரும்  பட்டியல்களில் ஒன்றிலாவது  உங்கள் பெயர் அங்கே இருந்தால் மட்டுமே,  நீங்கள் பிரபலமான பதிவர்  என்று தெரிஞ்சுக்கலாம்...ராஜி:  அந்த கேள்விக்கு,  உங்களுக்கு பதில் தெரியாது என்பதை நேரிடையாகவே  சொல்லி இருந்து இருக்கலாம்...   ம்ம்ம்ம்.....  நீங்க நிறைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுறீங்க.  ஆனால், சர்ச்சைக்குரிய பதிவுகள் என்றால் அப்பீட்டு ஆகிவிடும் பதிவர் என்று பேர் எடுத்து இருக்கீங்களே.... 

சித்ரா:  சர்ச்சைக்குரிய பதிவுகள் - பிரச்சனைகள் என்றால் நானும் ஜீப்ல ஏறிடுவேன்.  இந்த பக்கம் வம்பு தும்பு வந்தால்,  அந்த பக்கமாக எஸ்கேப் ரூட் போட்டு தப்பிச்சு  போய்டுவேன்.  பின்ன என்னங்க?  நான் என்ன ....இந்தியா -  பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்?  நாலு பதிவுகள் வாசித்தோமா -  நாலு வோட்டுக்கள்  போட்டோமா -  அருமை,  :-) ,  சூப்பர்,  வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல,  வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ  பதிவுகள்  போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  இளங்கோ:  பேருதான் பெத்த பேரு கேள்விகணைகளில்  உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி.    நீங்கள் பிரபல பதிவரா? இல்லையா?
சித்ரா:  ஆ .... ஆ......  ஆஆஆ ......  (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.) 
139 comments:

சமுத்ரா said...

உங்க பேர் தான் எல்லாருக்கும் தெரியுமே?:)
have a nice week ahead

Nagasubramanian said...

ஆ .... ஆ...... ஆஆஆ ...... (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.)

Jaleela Kamal said...

இன்றாவது வடை கிடைக்குமான்னு நினைத்தேன்

Jaleela Kamal said...

பேரைச்சொல்ல்வா
ஸ்ரீ தேவி பாடும் பாடல் ஞாபகம் வந்துடுச்சி

ஆனந்தி.. said...

ஹ ஹ....அம்மு...இன்னும் சிரிக்கிறேன் இந்த பதிவை படிச்சு....:))) காமடியோட உள்குத்த்து பதிவு கொடுத்த பிரபல பெண் பதிவாளர் ,பதிவுலகின் சூப்பர் ஸ்டாரினி,smiley புகழ் சித்ரா வாழ்க...ஹ ஹ.....

Chitra said...

சே...சே.... உள்குத்து எதுவும் இல்லைப்பா... நீங்க வேற...

ஆனந்தி.. said...

is it ammu?? :)))))

வேடந்தாங்கல் - கருன் said...

ஒரு பெயரில் இவ்வளவு இருக்கா..
பதிவு படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
பதிவிற்கு நன்றி..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இனிமே நான்ும் உங்க ரூட்டை ஃபாலோ பண்றேன்..பேட்டி ரொம்ப நல்லா வ்ந்திருககு

தமிழ்வாசி - Prakash said...

ஆ .... ஆ...... ஆஆஆ ......

நாயகன் கமல் ஸ்டைலில் தாங்க சொல்றேன்... நல்ல பதிவுக்கு வேற எப்படி சொல்ல?


எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பேர் போன பதிவர்னா அது நீங்கதான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எப்படியோ நீங்களும் சர்ச்சைல் மாட்டிக்டீங்க....ஆனந்தி கமெண்ட் பார்த்தா அப்படித்தான் தெரியுது

அமைதிச்சாரல் said...

//ஒருவர், தன் பதிவில் வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரத்தின் எல்லை கோடு, அடுத்தவரின் சகிப்புத்தன்மையை பொறுத்தது என்ற வரைமுறைக்குள் இருக்கிறது//

'உன் சுதந்திரம் எனது மூக்கு நுனிவரை மட்டுமே' என்ற வாக்கியத்தை நினைவுபடுத்தறீங்க..

'குயின் குல்நார்'.. ஹை.. சூப்பரான பேரு :-)))))

ரஹீம் கஸாலி said...

present

asiya omar said...

பேட்டி சுவாரசியம்.நல்வாழ்த்துக்கள்.
கமல் ஸ்டைலில் சொல்லிட்டீங்களா?ரஜினி ஸ்டைலிலும் சொல்லியிருக்கலாம்,சிட்டின்னு நான் உங்களுக்கு பேர் வச்சிட்டேன்.

கக்கு - மாணிக்கம் said...

உண்மையில் இது நல்ல தீர்மானம்தான்,

//பிரச்சனைகள் என்றால் நானும் ஜீப்ல ஏறிடுவேன். இந்த பக்கம் வம்பு தும்பு வந்தால், அந்த பக்கமாக எஸ்கேப் ரூட் போட்டு தப்பிச்சு போய்டுவேன்.//

ஆனால் சில நேரங்களில் இப்படி இருக்க முடிவதில்லை. ஒரு நிலைக்கு பிறகு நேர்மையாக கேள்வி கேட்க அல்லது பதில் சொல்லாமல் அனைத்துமே ஆபாசமான இடத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும் போக்குதான் காணபடுகிறது.

எல் கே said...

பின்னூட்டப் புயல் என்ற பெயரை விட்டு விட்டீர்களே

தமிழ் உதயம் said...

சித்ரா பௌர்ணமின்னு கூட ப்ளாக் "பேரு" வைச்சிருக்கலாம்.

பிரபு எம் said...

ஆ..ஆஆ..ஆ.... நாயகன் கமல்....ஹஹஹா.. சூப்பர்க்கா... :)

தமிழ் உதயம் said...

சித்ரா பௌர்ணமின்னு கூட ப்ளாக் "பேரு" வைச்சிருக்கலாம்.

விக்கி உலகம் said...

நல்ல சம்பாழனை

சரியான பதில்கள் பகிர்வுக்கு நன்றி சகோ

சேட்டைக்காரன் said...

//நீங்கள் பிரபல பதிவரா? இல்லையா?//

நாமென்ன சொல்றது? அதான் நாடே சொல்லுதே-ன்னு "பாட்ஷா" படத்து வசனத்தை எடுத்து வுட்டிருக்க வாணாமா? :-))

VELU.G said...

//விசேஷமான சித்ரா பௌர்ணமி அன்று நான் பிறந்ததால்,
//

நல்ல வேளைங்க நான் அம்மாவசையன்னைக்குன்னு நெனைச்சிட்டிருந்தேன்

Balaji saravana said...

//குயீன் குல்னார் //
இப்போ "ப்ளாக் (Blog) குயீன்" ஆயிட்டீங்க சித்ராக்கா!
//நான் என்ன ....இந்தியா - பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்? //
ஹா ஹா! :)

பார்வையாளன் said...

பெயர் காரணம் சூப்பர் . செல்ல பெயர் சூப்பரோ சூப்பர்

நா.மணிவண்ணன் said...

நல்ல கேள்விகள் ,நல்ல பதில்கள் ,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி: சித்ரா என்பது உங்கள் சொந்த பெயரா? இல்லை பதிவிற்காக வைத்த பெயரா?
சித்ரா: சித்ரா, என் சொந்த பெயர். அதுவே நல்லாத்தானே இருக்குது - பதிவுக்கென்று ஒரு பெயர் எதற்கு வாடகைக்கு எடுக்கணும் என்று சித்ரா என்ற என் சொந்த பெயரிலேயே எழுதுகிறேன். //

அப்டின்னா வேற பேர்ல பதிவு எழுதுற பிரபல பதிவர்கள் பேர் கேவலமாவா இருக்கு. நாராயணா நாராயணா

ஸாதிகா said...

உங்களுக்கே உரித்தான் நகைசுவையுடன் சூப்பர்தான் போங்கோ.

middleclassmadhavi said...

சித்ரா பௌர்ணமியன்று கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வருவீர்கள்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இளங்கோ: உங்களுக்கு சித்ரா என்ற பெயர் வைக்க தனிப்பட்ட காரணம் உண்டா?
சித்ரா: விசேஷமான சித்ரா பௌர்ணமி அன்று நான் பிறந்ததால், எங்க வீட்டில் எனக்கு சித்ரா என்றே பெயர் வைத்து விட்டதாக எங்க அப்பா சொல்லி இருக்காங்க.
நிறைய குழந்தைகளுக்கு நட்சத்திரம் பார்த்து பேரு வைப்பாங்களாம். எனக்கு நிலவு பார்த்து பேரு வச்சிட்டாங்க.... //

அப்டின்னா நிலவுக்கு ராயல்டி கொடுத்தாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜி: பெயர் காரணத்துக்கும் ஒரு பில்ட் அப்பு..... சரியா போச்சு! உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில், உங்கள் பெயர்?
சித்ரா: சித்து.//

u mean சித்து + 2

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இளங்கோ: இதுதான் நீங்கள் பதிவுலகிற்கு தரும் முதல் பேர் சொல்லும் பேட்டியா?
சித்ரா: இல்லை... முன்பு ஒன்றிரண்டு மொக்கை பேட்டி கொடுத்து இருக்கேன். //

நீங்களே மொக்கை பேட்டி என்று சொன்னதால் ரைட்டு..

மைந்தன் சிவா said...

//
இந்த வார முன்னணி ப்ராப்ள (problem) பதிவர் பட்டியல் : அந்த அந்த வாரம் பதிவுலக சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு பிரபலமாகும் பதிவர்களின் பெயர்கள் இருக்கும்.
இந்த வார முன்னணி "ப்ரா"பல பதிவர் பட்டியல்//
ஹிஹிஹி இதில உள்குத்து இல்லையே??

http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html

Chitra said...

அப்டின்னா நிலவுக்கு ராயல்டி கொடுத்தாங்களா?


.....நட்சத்திரத்திற்கு உள்ள ராயல்டி கணக்கு வழக்கே இன்னும் முடியலியாம். அது முடிஞ்சதும், இதை கவனிச்சுக்கலாம் என்று சொல்லிட்டாங்க... ஹி,ஹி,ஹி,ஹி...

அஞ்சா சிங்கம் said...

எப்படி பிரபல பதிவர் ஆகிறது? அப்படிங்கற என் சந்தேகத்துக்கு சுலபமான வழி சொல்லீட்டீங்க .......

இப்போ நான் யார் கூடையாவது சண்டை போடணும் ..................

யாராவது ப்ரீயா இருந்தா சொல்லுங்கப்பு www.sandaikaaran.blogspot.com ஜாலியா சண்டைபோட்டு ரெண்டு பேறும் பிரபல பதிவர் ஆகிடலாம்..

goma said...

நிறைய குழந்தைகளுக்கு நட்சத்திரம் பார்த்து பேரு வைப்பாங்களாம். எனக்கு நிலவு பார்த்து பேரு வச்சிட்டாங்க....

அசத்தல்

Gayathri Kumar said...

Queen Gulnar per romba nalla irukku..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

சென்னை பித்தன் said...

உங்க ஸ்டைலே தனிதான்!

! சிவகுமார் ! said...

சுவாரஸ்யமான பேட்டி

raji said...

ராஜி: நீங்கள் பிரபல பதிவரா? ப்ராப்ள பதிவரா?

(நாயகன் படத்தில் வரும் நீங்க நல்லவரா கெட்டவரா ஸ்டைலில் படிக்கணும்)

சித்ரா: தெரியலையேம்மா..... :-(

(இதையும் நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்)


********************************************************

சித்து, கலக்கல் பதிவு.கங்க்ராட்ஸ்

Kurinji said...

Very interesting post Chitra!

சி.பி.செந்தில்குமார் said...

இப்பத்தான் நல்ல நேரம் சதீஷ் ஃபோன் பண்ணி சொன்னார்.சித்ரா ஒரு பதிவு போட்டு எல்லாரையும் தாக்கி இருக்கு போய் பார்யான்னு... நான் கேட்டேன்.. யார் யாரை எல்லாம் தாக்கி இருக்கு?ன்னேன். நடிகைகள் பேரை டைட்டிலில் வைக்கறவங்க எல்லாரையும் தாக்கி இருக்குன்னாரு...நான் சொன்னேன்... அப்போ நான் போய் கமெண்ட் போடவா?வேணாமா?என் பேர் கெட்டுடுமா?ன்னேன். அதுக்கு அவர் சொன்னாரு.. அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க?பேர் இருக்கறவங்க தான் அதைப்பற்றி கவலைப்படனும்.. தாராளமா போய் கமெண்ட் போடுங்கன்னாரு. ஹி ஹி

அம்பிகா said...

பெயர் காரணம் சூப்பர் . செல்ல பெயர் சூப்பரோ சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

1.நடிகைகள் பெயரை டைட்டிலில் வைத்தால் தப்பா?

2.எந்த சர்ச்சைலயும் சிக்காத சித்ராவா இப்படி ஒரு பதிவு போட்டிருக்கு? யப்பா..

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான முறையில் பேரைச் சொல்லி இருக்கீங்க! நல்ல முயற்சி!

சி.பி.செந்தில்குமார் said...

2011-ல் வந்த சிறந்த உள்குத்துப்பதிவாகவும்,டீசண்ட்டா தாக்கி எழுதப்பட்ட ஒரு பெண் பதிவரின் முதல் சர்ச்சைக்குரிய பதிவு எனவும் வரலாறு இதை குறித்து வைத்துக்கொள்ளும்.

S Maharajan said...

Present Sister

சி.பி.செந்தில்குமார் said...

>>>உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் பிரபல பதிவரா? இல்லையா?

நேற்று வரை நார்மல் பதிவர். இன்று முதல் பதிவுலகில் உள்ள சிலரை நார் நாராக கிழித்துக்காயப்போட்ட பதிவர். ஹிஹி ..ரொம்ப அடிபட்டுடுச்சு.. ஹாஸ்பிடல் போயிட்டு வர்றேன்.. பை பை// ஹி ஹி

Chitra said...

///டீசண்ட்டா தாக்கி எழுதப்பட்ட ஒரு பெண் பதிவரின் முதல் சர்ச்சைக்குரிய பதிவு எனவும் வரலாறு இதை குறித்து வைத்துக்கொள்ளும். ///

....... இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று எனக்கு புரியல.... இதில் என்ன இண்டீசென்ட் ஆக இருக்கிறது என்றும் தெரியல.
ஒரு ஆண் பதிவர் என்ன படம் வேண்டுமானாலும் போடலாம்.... எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு பெண் பதிவர், தனக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் கொண்டு பதிவு எழுதினால், தவறு என்று வரலாறு சொல்லாது - சில ஆண் பதிவர்கள் வேண்டுமானால் சொல்லலாம்.

மாணவன் said...

நல்லாருக்குங்க மேடம், நகைச்சுவை கலந்து சுவாரசியமாக இருந்தது உரையாடல்கள் :)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!

இரவு வானம் said...

பெயர் காரணம் பதிவு சூப்பர்க்கா, பின்னூட்டத்தை பார்த்தாதான் பயமா இருக்கு, அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சிட்டாங்களோன்னு...

சி.பி.செந்தில்குமார் said...

>>>இரவு வானம் said...

பெயர் காரணம் பதிவு சூப்பர்க்கா, பின்னூட்டத்தை பார்த்தாதான் பயமா இருக்கு, அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சிட்டாங்களோன்னு...


அடப்பாவிகளா? நான் காமெடியாக போட்ட பின்னூட்டங்கள் அவை..

துளசி கோபால் said...

ஒரு + குத்து:-)))))

தங்கம்பழனி said...

ஸ்ஸோ.. அப்பா.. இப்பவே.. கண்ணக்கட்டுதே..!

MANO நாஞ்சில் மனோ said...

//குயீன் குல்னார். (Queen Gulnar)//

ஒ இப்பிடியும் ஒரு பெயர் இருக்கா உங்களுக்கு.....ம்ம்ம்ம்...

ஹுஸைனம்மா said...

ஒருவரியில காரணம் அமைஞ்சாலும் அழகா சுவையா எழுதிருக்கீங்க. ஆனா, அம்மு & குல்நார் என்ற பேர்களுக்குக் காரணம் சொல்லவேயில்லையே?

இந்தப் பதிவால, அமாவாசைங்கிற பேருள்ள ஆண்களின் பெயர்க்காரணமும் புரியுது!! ;-))))))))

r.selvakkumar said...

ஹா..ஹா..ஹா...
பேட்டி எடுத்தவர் ரொம்ப பொறுமைசாலி.

MANO நாஞ்சில் மனோ said...

//ராஜி: அந்த கேள்விக்கு, உங்களுக்கு பதில் தெரியாது என்பதை நேரிடையாகவே சொல்லி இருந்து இருக்கலாம்... //

லொள்ளை பாருங்கைய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

//சித்ரா: ஆ .... ஆ...... ஆஆஆ ...... (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.)//

ஹா ஹா ஹா ஹா கலக்கல்...

இரவு வானம் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>>இரவு வானம் said...

பெயர் காரணம் பதிவு சூப்பர்க்கா, பின்னூட்டத்தை பார்த்தாதான் பயமா இருக்கு, அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சிட்டாங்களோன்னு...


அடப்பாவிகளா? நான் காமெடியாக போட்ட பின்னூட்டங்கள் அவை..


ஓகே கூல் தல :-)))))

இளங்கோ said...

நல்ல கேள்வி-பதில் சிரிப்பலை. (இப்போ எல்லாம் அலை அப்படின்னாலே ராஜா தான் நினைவுக்கு வர்றார்).

இப்படி எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நிறைய கேள்வி கேட்டிருக்கலாம், மிஸ் ஆயிடுச்சு. :)

நல்லா எழுதி இருக்கீங்க.

Madhavan Srinivasagopalan said...

// உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில், உங்கள் பெயர்?
சித்ரா: சித்து.//

அதான், சிக்ஸரா அடிச்சுத் தள்ளுறீங்க..

சுந்தரா said...

பேர்க்காரணமும் பதிவும் சூப்பர் சித்ரா :)

Anonymous said...

இந்தப் பக்கத் வந்து ரொம்ப நாளாச்சு.. எப்படி இருக்கீங்க சித்ரா???

பேருக்கு பதிவு போடாட.. பேர் சம்பந்தப்பட்ட பதிவா போட்ருக்கீங்க போலயே..
அந் நாயகன் கமல் ஸ்டைல் பதில்...
ஹிஹிஹி

வைகை said...

நீங்க சொல்ல வந்தத தவிர மத்தத பூராம் நம்ம ஆளுங்க புடிச்சிகிறாங்க... ஒரு வேளை எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லணுமோ?

FOOD said...

சித்திரை நிலவொளி முத்திரை பதித்துவிட்டது சகோதரி. ஹாட்ஸ் ஆப்!

G.M Balasubramaniam said...

பதிவு எழுத பல தலைப்புகள் அதில் இதுவும் ஒன்று.பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தெரிகிறது நீங்கள் ஒரு பிரபல பதிவர் என்றூ.

Ramu said...

இதோ இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் என் பெயர் காரணத்தைப் பற்றி எழுதிய பதிவு...
http://sivakaasikaaran.blogspot.com/2009/04/blog-post_24.html
ஆரம்ப காலத்தில் எழுதிய பதிவு என்பதால் கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கும் :-(

ஹேமா said...

சிரிப்புச் செல்லம் சித்ரா...இதுவும் நல்லாருக்கு சித்ரா !

கோவை2தில்லி said...

சித்ரா பெளர்ணமியில் பிறந்ததால் சித்ராவா! பேரைச் சொல்லவா நல்ல பகிர்வு.

மைதீன் said...

ஒருவர், தன் பதிவில் வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரத்தின் எல்லை கோடு, அடுத்தவரின் சகிப்புத்தன்மையை பொறுத்தது என்ற வரைமுறைக்குள் இருக்கிறது.

அருமையான பதில்
http://tmaideen.blogspot.com/2011/03/blog-post.html

ஜெய்லானி said...

//ஆ .... ஆ...... ஆஆஆ ...... (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.) //

ஆ..ஆ...ஆஆஆஆஆஆ...முடியல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-)))

இம்சைஅரசன் பாபு.. said...

நல்லா எழுதிகிட்டு நீங்களே ஏன் மொக்கைன்னு சொல்லுறீங்க ...

சௌந்தர் said...

பேர் சொல்லும் பிள்ளை......ரொம்ப நல்லா இருக்கு....!!!!

S.Sudharshan said...

சித்திரா பௌர்ணமி அன்றா பிறந்தீங்க :o ..சுவாரசியமான பேட்டி :)

ஆயிஷா said...

சுவாரசியமான பேட்டி....ரொம்ப நல்லா இருக்கு...

Anonymous said...

உங்க ஜீப் பயணம் தான் பேட்டியின் முத்திரை
அது போதும் சித்திரை
நமக்கு வரும் நல்ல நித்திரை
இது சரியான... மாத்திரை

தம்பி கூர்மதியன் said...

என்னது உங்க உண்மையான பெயரே சித்ராவா.??? வித்யாசமா இருக்கே.!!(ஹி ஹி..)

Jana said...

Queen Gulnar!
:)

ராஜவம்சம் said...

இதையே சீரியஸா எழுதுனா எப்படி இருக்கும்ன்னு யோசித்தேன் இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம் தான் குயீன் குல்னார்.

Gopi Ramamoorthy said...

:-)

கிரி said...

நல்லா இருக்கு :-)

tamilbirdszz said...

nice nice

S.Menaga said...

சூப்பர்ர் சித்ரா!! வழக்கம் போல கலக்கிட்டீங்க...

பலே பிரபு said...

//பத்து டாலர் டிப்ஸ் தரேன்//

முருகன் டாலர், அம்மன் டாலர், ஐயப்பன் டாலர்,..... இந்த மாதிரிதானே.

கோமதி அரசு said...

நாலு பதிவுகள் வாசித்தோமா - நாலு வோட்டுக்கள் போட்டோமா - அருமை, :-) , சூப்பர், வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல, வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன். ஹி,ஹி,ஹி,ஹி.....

ஆஹா! நல்ல பதில்.

நல்ல பதிவு சித்ரா.

akulan said...

"நாலு வோட்டுக்கள் போட்டோமா - அருமை, :-) , சூப்பர், வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா"

ஆ அருமை சூப்பர் :):)

Matangi Mawley said...

Ai! Ithu nallaa irukke, post-u! :)

GEETHA ACHAL said...

உங்க பேருக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா...

vanathy said...

உங்க சுயபுராணம் நல்லா இருக்கு.

கும்மாச்சி said...

அம்மணி லொள்ளு நொம்ப அதிகம்.. அதென்னங்க குறுக்கால குயீனு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேர வெச்சே இவ்வளவு பீலா விடமுடியுமா?

ஜோதிஜி said...

நகைச்சுவைக்கு மரியாதை அவஸ்யத்திற்கு கொடுத்துள்ள ஆங்கில வரிகள் அற்புதம்.

Riyas said...

அருமை, :-) , சூப்பர், வாழ்த்துக்கள்

ஆங் பின்னூட்டம் போட்டாச்சு..

Anonymous said...

ஆ .... ஆ...... ஆஆஆ ...... (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.)

super...

செங்கோவி said...

//நான் என்ன ....இந்தியா - பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்? நாலு பதிவுகள் வாசித்தோமா - நாலு வோட்டுக்கள் போட்டோமா - அருமை, :-) , சூப்பர், வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல, வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன்.// சூப்பர்...இப்படித்தான் இருக்கணும்...!

கே. பி. ஜனா... said...

உங்களுக்குள்ளே இத்தனை பேரா? பிரமாதம்!

மோகன்ஜி said...

பெயர்ப்பதிவு அருமை..
இன்னும் இரண்டு பெயரையும் சேர்த்துக்குங்க..

1.வலையுலகத் தாரகை
2.பின்னூட்டப் புயல்

அன்பரசன் said...

//how to become a famous blogger//

செம செம..

வருண் said...

:-)

***நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி**

நாயகன் பார்க்காதவங்கள் எல்லாம்? :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சர்ச்சைக்குரிய பதிவுகள் - பிரச்சனைகள் என்றால் நானும் ஜீப்ல ஏறிடுவேன். இந்த பக்கம் வம்பு தும்பு வந்தால், அந்த பக்கமாக எஸ்கேப் ரூட் போட்டு தப்பிச்சு போய்டுவேன். பின்ன என்னங்க? நான் என்ன ....இந்தியா - பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்? நாலு பதிவுகள் வாசித்தோமா - நாலு வோட்டுக்கள் போட்டோமா - அருமை, :-) , சூப்பர், வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல, வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன். ஹி,ஹி,ஹி,ஹி..... //

:) good decision though..

நட்புடன் ஜமால் said...

interesting nice & useful replies

aaaaaaaaaaa

சுசி said...

சூப்பர் பெயர் புராணம் சித்ரா.

ராஜ நடராஜன் said...

பேரு எடுக்குற பதில் சிகரம்:)

savitha ramesh said...

Romba nalla irukku.Very intersting post.

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, கழுவுற தண்ணீரிலை நழுவுற மீன் போல இருந்தது உங்களின் பதில்கள். அதுவும் நாசுக்காக ஒரு சில பதில்களை உறைக்கும் படி சொல்லியுள்ளீர்கள். ஒரு சில இடங்களில் எவரையும் குறி வைத்துத் தாக்காது சமயோசிதமாக பதிலளித்து இலாவகமாக தப்பியுள்ளீர்கள். ரசித்தேன்.
உங்களின் பெயருக்குப் பின்னாலுள்ள விளக்கங்களையும் விடயங்களையும் அறிந்து கொண்டேன்.
என் பேரைச் சொல்லவா...
பதில்கள் செம Clever அல்லவா.

tamilbirdszz said...

என்ன பெயரில் பதிவு எழுதுறது என்பது முக்கியம் இல்ல என்ன சொல்ல வாறது எண்டுறது தான் முக்கியம் .சித்திர அக்கா உங்கள் பதிவு நசைச்சுவையாக இருக்கிறது...நாங்களும் பிரபல பதிவர் ஆகுறதுக்கு ட்ரை பண்ணுவமல்லோ ஹ ஹ

தக்குடு said...

யக்கா! நமக்கு இந்த பிரபலபதிவர் ஆகும் பைத்தியமே புடிக்க கூடாது அக்கா. உங்களை மாதிரி நாலு பேரை வாரினோமா, வந்த காரியத்தை பாத்தோமானு இருக்கனும்!!...;))

தோழி பிரஷா said...

சிரிப்பூட்டும் பதிவிடும் திறமை
சித்திராக்காவுக்கே உரிய தனித் திறமை.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ssuperb chithra

தாராபுரத்தான் said...

பேரு சொல்ல ஒரு பிள்ளை..

ஸ்ரீராம். said...

//"பத்து டாலர் டிப்ஸ் கொடுத்தால் போதுமா"//

ஹா...ஹா..

சர்ச்சைக்குரிய பதிவுகள் பதில் பிரமாதம்.

ஒரே நாளில் ஐம்பதுக்கும் மேல வாக்குகள் பெற்று நூறு கமெண்ட்ஸ் வாங்கிட்டு, பிரபல பதிவரான்னு கேட்டா கமல் உதவியை நாடுவது என்ன நியாயம்..!! எல்லோரும் அவரவர்கள் பெயர் புராணம் பாடும்போது நீங்கள் வழக்கம் போல வித்தியாசம் காட்டி விட்டீர்கள்.

அரசூரான் said...

நிலா... சித்து... குயின்... ஒரு பெயர், பல பட்டப் பெயர்.

நான் மட்டும் புதுசா என்ன சொல்லப்போரேன்....

ஆ .... ஆ...... ஆஆஆ ...... (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.)

Rathnavel said...

வாழ்த்துக்கள் சித்ராம்மா.
நல்ல பேட்டி. நிறைய கருத்துக்கள் ஒத்துப் போகின்றன. சர்ச்சைக்குரிய பதிவுகளை படிப்பதோடு சரி.
நன்றி.

பிரியமுடன் பிரபு said...

நான் என்ன ....இந்தியா -  பாக்கிஸ்தான் எல்லையில சண்டை போடவா பதிவுலகுக்கு வந்தேன்?  நாலு பதிவுகள் வாசித்தோமா -  நாலு வோட்டுக்கள்  போட்டோமா -  அருமை,  :-) ,  சூப்பர்,  வாழ்த்துக்கள் என்று நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல,  வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ  பதிவுகள்  போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன்.  ஹி,ஹி,ஹி,ஹி.....  
/////////

It's true.....

பிரியமுடன் பிரபு said...

அப்ப நனெல்லம் பிரபல பதிவர் இல்லையா.....

பிரியமுடன் பிரபு said...

ஆ .... ஆ...... ஆஆஆ ...... (நாயகன் கமல் ஸ்டைலில் ஆ க்களை வாசித்து கொள்ளவும். நன்றி.)

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

பேரை சொல்ல வந்தா.... இங்க என்னென்னமோ ந்டக்குதே... சித்திரா..

இராஜராஜேஸ்வரி said...

அருமை, :-) , சூப்பர், வாழ்த்துக்கள்

komu said...

குயீன் குல்னார் பேட்டி சூப்பர்.பேரை நன்னாவே சொல்லி இருக்கீங்க.

எம் அப்துல் காதர் said...

குயீன் குல்னார் அவர்களே! நீங்கள் கேள்விக்கு பதில் சொல்லிய விதம், கமல் மாதிரியாகவும், கழுவிய மீனில் நழுவிய மீனாகவும் அவ்வ்வ்வவ்... இருந்தது. ஆகவே ஹி..ஹி.. நான் பின்ன வந்து கண்டுக்கிறேன்.

அரசன் said...

பதிவு செம அருமையா இருந்தது மேடம் ,,,
இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

ஒரு பெயரில் இவ்வளவு இருக்கா..
பதிவு படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.நல்ல கேள்விகள் ,நல்ல பதில்கள் ,
பதிவிற்கு நன்றி..

aranthairaja said...

மகளிர் தின வாழ்த்துக்கள் தோழியாரே...

பாரத்... பாரதி... said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

சிவகுமாரன் said...

சாதிக்கப் பிறந்த சகோதரிக்கு
மகளிர்தின வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Very interesting Chitra.

ஜெரி ஈசானந்தன். said...

ஒரு கமென்ட் போடுற ஆர்வத்தில எங்க ஊருக்கு போற கடைசி பஸ்சையும் விட்டுட்டேனே..127 ஐயும் தாண்டி வர்றதுக்குள நாக்கு தள்ளிப்போச்சு.

Malar Gandhi said...

Enjoyed reading your answers, kool. Thats a sweet name too:)

அப்பாவி தங்கமணி said...

//பதிவுக்கென்று ஒரு பெயர் எதற்கு வாடகைக்கு எடுக்கணும்//
அதானே... வாடகை என்ன கம்மியாவா இருக்கு...:))

//நிறைய குழந்தைகளுக்கு நட்சத்திரம் பார்த்து பேரு வைப்பாங்களாம். எனக்கு நிலவு பார்த்து பேரு வச்சிட்டாங்க//
நீங்க மதவங்கள்ள இருந்து வித்தியாசமானவங்கன்னு அப்பவே உங்க அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சுருக்குமோ...:))

//முன்பு ஒன்றிரண்டு மொக்கை பேட்டி கொடுத்து இருக்கேன்//
இதான் சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்டுறதா... பாத்து கத்துக்கோ அப்பாவி...:))

//Queen Gulnar //
இல்ல நீங்க கண்டுபிடிச்சு சொல்லியே ஆகணும்...ரெம்ப வித்தியாசமா இருக்கே... ஹ்ம்ம்...என்னவா இருக்கும்...எவ்ளோ யோசிச்சும் என் சிற்றறிவிற்கு ஒண்ணும் எட்டலை...உங்க பேரறிவிக்கு எதுனா எட்டுனா சொல்லுங்க சித்ரா...:)

//நான் பத்து டாலர் டிப்ஸ் ஆக கொடுத்தால் போதுமா? //
ஹா ஹா ஹா...செம..:))

//சுதந்திரத்தின் எல்லை கோடு, அடுத்தவரின் சகிப்புத்தன்மையை பொறுத்தது என்ற வரைமுறைக்குள் இருக்கிறது//
அட்டகாசமான விளக்கம்...

ஓ...இதுக்கு பேரு தான் படம் போடறதா (ஏதோ How to become a famous blogger னு படம் போட்டு விளக்கி இருக்கீங்களே அதை கேட்டேன்ப்பா...:)))

//அந்த கேள்விக்கு, உங்களுக்கு பதில் தெரியாது என்பதை நேரிடையாகவே சொல்லி இருந்து இருக்கலாம்//
சேம் ப்ளட்...நானும் இப்படி தான் ஆன்சர் தெரியலைனா கேள்வி கேக்கறவங்கள நல்லா குழப்பி விட்டுடுவேன்...ஹா ஹா...:)))

//நீங்கள் பிரபல பதிவரா? இல்லையா?//
அ ஆ...அப்பறம் இ ஈ....அதெல்லாம் சொல்லணுமில்லங்க சித்ரா...இப்படி பாதீல உட்டு போட்டு போனா எப்படிங்க...:))

இருவர் said...

super interview madam.......

next enna interview????????????

Jay said...

Fantastic post..enjoyed reading..:)
Tasty appetite

பாலா said...

//
நான் பத்து டாலர் டிப்ஸ் ஆக கொடுத்தால் போதுமா?
//

ஆள வுட்ரா சாமி...
:))))))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்தப்பதிவு வித்யாசமானதாக (கேள்வியும் நானே பதிலும் நானேவாக)இருந்தது.

வெகு அழகாகவும் இருந்தது சித்ராப்பெளர்ணமி நிலவு போலவே!

வாழ்த்துக்கள், மேடம்!!

ரிஷபன் said...

நாலு பின்னூட்டங்கள் போட்டோமா - என் ப்லாக்ல, வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கத்தானே வந்தேன். //

நிஜமாவே உங்களைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு. எந்தப் பதிவுக்குப் போனாலும் உங்க பின்னூட்டம் இருக்கு.. எப்படித்தான் உங்களால முடியுதோ.. கூடவே அமர்க்களமா உங்க பதிவுகளூம்..
காட் பிளஸ் யூ

அன்னு said...

டீவி நிலையத்தாருக்கு வணக்கம்.

தங்களின் பேரை சொல்லவா பேட்டி கண்டேன். பேட்டியும் அருமை, நடு நடுவில் வந்த விளம்பரப்படங்களும் மிக அருமை.

இப்படிக்கு
ஹெ ஹெ ஹெ.. :)

பூந்தளிர் said...

வலைச்சர அறிமுகம் பார்த்து உஙுக பக்கம்வந்தேனு வாழ்த்துகள்