Monday, February 21, 2011

டிவி பார்க்குற ரவுசு

சொந்த செலவுல, என்  தமிழ் ஆர்வத்துக்கு  சூனியம் வச்சிக்கிட்ட மாதிரி, ஆகி போச்சு.... 
அமெரிக்காவுல இப்போ, விஜய் டிவி - ஜெயா டிவி - கலைஞர் டிவி எல்லாமே டிஷ் நெட்வொர்க்கில் தெரியுதுன்னு சொல்லி, ஒரு ஆர்வ கோளாறுல  நானும் தமிழ் மெகா பாக் ஆர்டர் பண்ணிட்டேன்.  ரெண்டு நாளா,  எங்க வீட்டு குட்டீஸ்கிட்ட - அம்மா மட்டும் தான் டிவி பார்க்கலாம்.... நீங்க ரெண்டு பெரும் விளையாட போங்க - அப்படியே டிவி பார்க்கணும்னா, அம்மா பார்க்கிற ப்ரோக்ராம் தான் பார்க்கணும் - என்று அம்மா பவர் use பண்ணி புது ஆர்டர் தெரியாமல் போட்டுட்டேன் ...  இப்போ "பே" னு முழிக்கிறேன்.



 "நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."
"பத்து ஸ்கின் ப்ரோப்ளம் - நோ டென்ஷன்!"

அப்படின்னு புது தமிழில் என்னை நானே கரைத்துக் கொண்டிருந்த நேரத்துக்கு -  வந்துச்சே,  complete ஸ்டாப்.

 என் எட்டு வயது பொண்ணு,  என்ன மாதிரி அமெரிக்கன் டிவி சேனல் தேர்ந்து எடுக்கிறாள், என்ன மாதிரி அமெரிக்க டிவி நிகழ்ச்சிகள் பார்க்கிறாள் என்று மிகவும் கவனமாக இருக்கும் நான், தமிழ் டிவி விஷயத்தில் மட்டும்,  மூளையை அடகு வச்சுட்டேன்.  ஆனால், அவள் அப்படி இல்லையே..... நான் போட்ட ரூல்ஸ் எல்லாத்தையும்,  எனக்கே திருப்புறா!

இக்கரைக்கு அக்கரை "பச்சை":

 
சினிமா காமெடி சீன்:

"ஏம்மா, இந்த ஆளு அடி வாங்கிகிட்டு இருக்காரு?  அடிக்கிறது தப்பில்லையா?"
"இது காமெடி!"
"ஒரு ஆளை அடிக்கிறதுதான் காமெடியா?"
"இந்த ஆளு அடி வாங்குறதுதான் காமெடி."
"அவர் bad guy யா?"
"இல்லை, அவர்  good  guy ."
"அப்போ,  அவரை அடிக்கிறவங்க bad guys ஆ?"
"இல்லை,  அவங்களும் good guys ."
"நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க..."
"......................???????!!!!!!!!!.........."

சினிமா பாடல்கள்: 

"அம்மா,  இப்படித்தான் இந்தியாவில எப்போ பார்த்தாலும் guys ,  yucky ட்ரிங்க்ஸ் (டாஸ் மார்க் ஐட்டம்ஸ்)  ரோடுலேயே எடுத்துக்கிட்டு,  பொண்ணுங்களை disturb பண்ணிக்கிட்டே இருப்பாங்களா?" 
"...............????????!!!!!!!........."
 

 "எங்க எழுந்து போற?"
"தம்பியோட விளையாட போறேன். நீங்கதானே அமெரிக்கன் டிவி சேனல்ஸ்ல MTV எல்லாம்  நான் பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க.... நீங்க,  இந்தியன் MTV songs பார்த்துக்கிட்டு இருக்கீங்க.... நான் தான் பார்க்க கூடாதே...." 
"..............????????!!!!!!!!!........"

விளம்பரங்கள்: 

"அம்மா, இந்தியாவில லுக் (look ) க்குத்தான் அதிகம் importance  கொடுப்பாங்க போல..."
"அப்படியெல்லாம் இல்லை.... எதற்கு அப்படி சொல்றே?"
 " எப்போ பாரு..... ஷாம்பூ, சோப்பு,  டூத் பேஸ்ட், fairness cream commercials (விளம்பரங்கள்) தான் மாத்தி மாத்தி வந்து கிட்டே இருக்குது." 
"............????????!!!!!!!!......."


டிவி ஹோஸ்ட்:

"அம்மா,  தமிழ்ல பேசு ... நல்லா தமிழ்ல பேசுன்னு என்கிட்டே சொல்றீங்களே.... பாருங்க..... அவங்களுக்கும் நல்லா தமிழ் பேச தெரியல...."
"..............???????????!!!!!!!!!........."


 ரியாலிட்டி கேம் ஷோ:

" அம்மா,  அவங்களோட talents க்கு challenging (சவாலாக) கேம்ஸ் வைக்காமல்,  எதற்கு அவங்களை silly  யாக  (சின்ன புள்ளத்தனமாக)  காட்டுற மாதிரி கேம்ஸ் கொண்டு வராங்க?"
"..............??????????!!!!!!!!!........" 


ரெண்டு நாளா, தாங்க முடியல என் ரவுசு - புலம்புனாங்க குட்டீஸ் நல்லா. 
எனக்கு வீட்டு ப்ரோப்ளம் - நோ டென்ஷன்.
ஆனால் ஆக்குமே,  குட்டீஸ் அப்பாக்கிட்ட கம்ப்ளைன் - எஸ் டென்ஷன். 
பண்ணிட்டாரே சப்போர்ட், குட்டீஸ்க்காக, என் கணவர். 
ஆக.... கட் ஆயிடுச்சு, என் தமிழ் டிவி  டைம். 
சொல்லிட்டாரே,  குட்டீஸ் முன்னால, நோ தமிழ் டிவி. 

அதுவரை, நான் என்ன பண்றது?  முன்பு ஒரு பதிவில நான் சொல்லி இருந்த மாதிரி: 

எழுதுவேன் பாரதியார் பாடல்களை நான் இப்படி:

தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;

சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....

பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!

கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?

கொலை பண்ண உனக்கு பாரதியார் பாட்டுத்தான் கிடச்சுதானு, யாரும் என் கிட்ட கேட்காதீங்க.
"முதல்ல,  அவங்கள நிப்பாட்ட சொல்லுங்க.... அப்புறம், நான் நிப்பாட்டுறேன்!"


என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல.... வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ?  நிச்சயமாக தமிழ் மொழி வளர்ப்பு திட்டம் இல்லை - தமிழ் கலாச்சாரம் காப்பு திட்டமும் இல்லை.  தனியார் தொலைக்காட்சி எல்லாம் அரசியல் கட்சிகள் பிடியில் இருக்கிறதன் காரணம் மட்டும் புரியுது....  தமிழ் மக்கள், தங்கள் பொழுதை எல்லாம் இப்படி கழிச்சிட்டாங்கன்னா, அவங்க நிம்மதியா அரசியல் பண்ணலாம் பாருங்க... எந்த தமிழ் மகனும் கேள்வி கேட்க மாட்டாங்க.....நாட்டு நிலைமையை கண்டு பொங்கி எழ மாட்டாங்க......  ஜூப்பரு!

  
என்ன சொல்ல வர்ற?  ஒண்ணும் புரியல என்று  நினைக்கிறவங்களுக்காக:
எனக்கும் இந்த போஸ்டர்ல இருக்கிற மாதிரி,  தமிழ் டிவி நிகழ்ச்சிகள் பற்றி ஒண்ணும் புரியல:  (கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.  அதற்கு உங்கள் மம்மி டாடி பர்மிசன் தேவையில்லைங்கோ!"



பி.கு. 
தமிழர் என்பதன் முதல்  அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ? 

165 comments:

எல் கே said...

இங்கயே அப்படிதான் சித்ரா, திவ்யாக்கு நோ டிவி , கொஞ்ச நேரம் கார்ட்டூன் சேனல் அதுவும் காலையில் மட்டுமே

pudugaithendral said...

இதுதான் நிதர்சனமான உண்மை சித்ரா,

சேனல்களுக்கு சென்சார் போர்டு வேணும்னு அதனாலதான் பதிவெழுதினேன்.

:(

ஆர்வா said...

எங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு அவ்ளோ காமெடியா இருக்கா.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. எங்க டாக்டர் முதலமைச்சரா ஆகட்டும். அப்புறம் இருக்கு உங்களுக்கு எல்லாம்

S Maharajan said...

//என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல.... வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ? நிச்சயமாக தமிழ் மொழி வளர்ப்பு திட்டம் இல்லை//

நிச்சயம் தமிழ் வளர்ப்பு திட்டம் இல்லை
//"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா.""பத்து ஸ்கின் ப்ரோப்ளம் - நோ டென்ஷன்!"
அப்படின்னு புது தமிழில் என்னை நானே//

அக்கா நீங்க வேணுமுன்னா மக்கள் டிவி கனக்சன் வாங்கி பாருங்களேன்.செந்தமிழ் இருக்கும் ஆனா புரியாது............

Chitra said...

மக்கள் டிவி இன்னும் இங்க டிஷ் நெட்வொர்க்ல வரல.

Anonymous said...

இது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விசயம் தான் சித்ரா..
இப்போதுள்ள குழந்தைகள் வெளியில் சென்று கெட்டுப்போகத் தேவையில்லை.. வீட்டிலுள்ள டிவி நிகழ்ச்சிகளையும் சினிமாவையும் பார்த்தாலே போதும்.. நாடகங்களில் ஆரம்பித்து 10 நொடிகளில் வரும் விளம்பரங்களில் கூட ஆபாசங்கள்..
போற காலத்துக்கு, சுட்டி டிவியும் போகோ டிவியும் இந்த நிலைமைக்கு ஆளாகாம இருக்கணும்..

G.M Balasubramaniam said...

பொழுதுபோக்க டீவீயே கதி என்பதுதான் தற்போது தமிழ், நோ,இந்தியர்களின் கதி. கௌச் பொடாடோஸ் .வாழ்க்கையில் வேல்யூஸ் என்பதே இந்த டீவி சனியனால் தொலைந்துவிட்டது. ஏதோ ஒரு சில நிகழ்ச்சிகள் இந்தியா இன்னும் உயிரோடு உள்ளது என்றுகாட்டுவதே டீவீக்களால் காணும் பலன்.

Unknown said...

//என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல.... வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ? //
அதே தான்,
வேறென்ன நோக்கம் இருக்கப் போகுது?

ISR Selvakumar said...

நித்யானந்தா சாமியாரின் சிடியை காட்டும் சாக்கில் உலகத் தமிழர்கள் அனைவரையும், குடும்பத்தோடு அமர்ந்து நீலப் படம் பார்க்க வைத்த பெருமை நமது தமிழ் தொலைகாட்சிகளுக்கு உண்டு.

இது குறித்து அந்த சேனல்களுக்கும் உறுத்தல் இல்லை. தமிழ் குடும்பங்களுக்கும் உறுத்தல் இல்லை.

வாழ்க்கையையே ஒரு டிவி நிகழ்ச்சி போல, விளம்பர இடைவேளைகளுடன் வாழும் கமர்ஷியல் உலகத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

சுயம் இழந்த நிலை குறித்து அமைந்திருக்கும் இந்த கட்டுரை மிகவும் பாராட்டுக்குறியது.

தமிழ் உதயம் said...

தூர்தர்ஷனின் டிடிஹெச் அங்க கிடைக்காதா.

குறையொன்றுமில்லை. said...

ஆமாங்க சித்ரா நீங்க சொல்லிட்டீங்க மத்தவங்க மென்னு முழுங்கராங்க அவ்வளவுதான்.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால பதில் சொல்லி மாளாது. நமக்கே தலை கால் புரிய மாட்டேங்குதே.

Chitra said...

இல்லீங்க.... தூர்தர்ஷன் வரல.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவர்களுக்கு தேவை பணம்...
நாடு நாட்டு ம க்கள் என்ன ஆனாலும் இவர்களுக்கு கவலை இல்லை...

நல்ல சமுஅக்கறையுள்ள பதிவு..
வாழ்த்துக்கள்..

NILAMUKILAN said...

தமிழ் டிவி எப்படி கேட்டு பொய் இருக்குன்னு நல்ல தெரியுது. உங்க கொழந்தைங்க கேட்ட கேள்விகள் தப்பே இல்லீங்க சோ ஸ்வீட்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

dheva said...

ஹேட்ஸ் அப்... சித்ரா...!

பசங்க எல்லாம் சடனா பாக்கும் போது தோண்ற அபத்தமான எதார்த்த உண்மைகள பளீச்சுன்னு சொல்லியிருக்கீங்க....!

இப்டியே பழகிப்போயி பாத்துட்டு இருக்கவங்களுக்கு ஒண்ணும் தோணுறது இல்லை.. பட்.. ஆல் தே ஆஸ்க்ட் வாஸ்.. கிரேட் பிரில்லியண்ட் கொஸின்ஸ்....


//"ஏம்மா, இந்த ஆளு அடி வாங்கிகிட்டு இருக்காரு? அடிக்கிறது தப்பில்லையா?"
"இது காமெடி!"
"ஒரு ஆளை அடிக்கிறதுதான் காமெடியா?"
"இந்த ஆளு அடி வாங்குறதுதான் காமெடி."
"அவர் பட் குய் யா?"
"இல்லை, அவர் கோட் குய் ."
"அப்போ, அவரை அடிக்கிறவங்க பட் குய்ச் ஆ?"
"இல்லை, அவங்களும் கோட் குய்ச் ."
"நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க..."
"......................???????!!!!!!!!!........//


ரியலி யோசிக்க வேண்டிய விசயம்.. .அடுத்த்வன் அடிவாங்குறத பாக்குறதுல என்னாட உங்களுக்கு நகைச்சுவை இருக்கு... ? அப்டீன்னு கேக்குறாங்க...ரைட்.. கிரேட்...

செமயா இருக்கு சித்ரா...! ரொம்ப நாளைக்கு அப்புறம் சமூக பிரஞை கலந்த உங்கள் பாணி.. சூப்பர்ப்!

ஆனந்தி.. said...

ரெண்டு நாளா, தாங்க முடியல என் ரவுசு - புலம்புனாங்க குட்டீஸ் நல்லா.
எனக்கு வீட்டு ப்ரோப்ளம் - நோ டென்ஷன்.
ஆனால் ஆக்குமே, குட்டீஸ் //ப்பாக்கிட்ட கம்ப்ளைன் - எஸ் டென்ஷன்.
பண்ணிட்டாரே சப்போர்ட், குட்டீஸ்க்காக, என் கணவர்.
ஆக.... கட் ஆயிடுச்சு, என் தமிழ் டிவி டைம்.
சொல்லிட்டாரே, குட்டீஸ் முன்னால, நோ தமிழ் டிவி. //

Chitra...are you alright??:)))

இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் பார்த்துட்டு மனச குழப்பிக்க கூடாதுமா..குழப்பிக்க கூடாது......ரெஸ்ட் எடு மா...எல்லாம் சரியா போய்டும்..:))(சிவாஜி ஸ்டைல் இல் வாசிக்கவும்) :)))

Rathnavel Natarajan said...

சித்ராம்மா. வாழ்த்துக்கள்.
தங்களது பதிவு இப்பொழுது தான் படிக்கிறேன். தாங்கள் எல்லா பதிவுகளுக்கும் முன்னூட்டம் எழுதுவதை தொடர்ந்து படித்து வருகிறேன்.
நாங்கள் பொதிகை தொலைக்காட்சி தவிர இங்கு வேறு எதுவும் பார்ப்பதில்லை. எல்லாம் அபத்த சினிமாவும் அர்த்தமில்லாத ஜோக்குகளும் தான். இலங்கை தமிழர்கள் எழுதும் தமிழ் அருமை, நம்மை அவர்களது அழகு தமிழ் தலைகுனிய வைக்கிறது.
வணக்கம்.

Chitra said...

தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ?

sathishsangkavi.blogspot.com said...

அதுவும் இந்த குழந்தைகள் சேனல் எல்லாம் கொடுமை.. அதில் வரும் பேச்சுக்கள் எல்லாம் குழந்தையின் உச்சரிப்பையே மாற்றுகின்றன...

Prabu M said...

ஹாய் அக்கா....
நான் முன்னாடியே ஒருமுறை பின்னூட்ட‌த்துல‌ சொல்லியிருக்கேன்... இந்திய‌ தொலைக்காட்சிக‌ள் பேக்கேஜ் ம‌ட்டும் வாங்குற த‌ப்பை செஞ்சுடாதீங்க‌ன்னு..... விதி வ‌லிய‌து...!! :))

ப‌ட் ரொம்ப‌ ந‌ல்ல‌துக்கா... ஏன்னா இந்த‌ மாதிரி விஷ‌ய‌ங்க‌ளை எல்லாம் "விடுங்க‌ பாஸ் இவ‌னுங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான்"னுதான் எல்லாரும் போயிட்டு இருக்கோம்....எடுத்து எழுதின‌து யோசிக்க‌ வைக்கும்... குட் அக்கா :)

சாந்தி மாரியப்பன் said...

அந்த ரவுசுதானே காமெடி :-)))

இதுக்கு ஜூனூன் தமிழ்ன்னும் இன்னொரு பேரு இருக்கு :-)))))

Chitra said...

தம்பி சொன்னதை கேட்காமல் போயிட்டேனே! ஊரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்... ஏதோ ஊரு நினைப்புல.... connection வாங்கிட்டேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பசங்க கிட்ட செமையா பல்பு வாங்கிருக்கீங்க. ஹாஹா

நல்ல விஷயம் சொன்னதுக்கு நன்றி

Asiya Omar said...

வழக்கம் போல் இண்ட்ரெஸ்டிங் மேட்டர்.
சித்ரா மகன் ஸ்டடி ஹாலிடேய்ஸ் என்பதால் வீட்டில் இருந்து படித்து கொண்டிருந்தார்,நானும் நேற்று ஹாலில் கே.டிவியில் ஓடிய சிவாஜி படம் ஒன்றை சும்மா பார்த்து கிட்டிருந்தேன்,அங்கே வந்த மகன் இவர் யாருமா? என்றாரே பார்க்கலாம்,எனக்கு தூக்கிவாரிப்போட்டது,இவர் தான் நடிகர் திலகம் சிவாஜி என்று சொன்னேன்,அப்படியா? நான் இதுவரை பார்த்ததில்லைன்னு சொன்னவுடன் எனக்கே பாவமாக போய்விட்டது.ப்ள்ஸ் 2 படிக்கிற பையனுக்கு நம்ம ஊர் சிவாஜியை தெரியலையேன்னு எனக்கு இருந்துச்சு,அவரவர்க்கு அவரவர் கவலை.

Kurinji said...

சூப்பரா சொல்லி இருக்கீங்க சித்ரா !

குறிஞ்சி குடில்

Avargal Unmaigal said...

தமிழ் டிவிகளை பார்த்தால் உங்கள் குழ்ந்தைகள் கெட்டுப்போயிடுவது மல்லாமல் உங்கள் கணவரின் உடலும் கெட்டுப்போகும் ஏன்னு கேட்கிறீங்களா....இனிம உங்களுக்கு தான் சமைக்கவே டைம் கிடைக்க போறதில்லையேயயயயயய் அதுமட்டுமல்லாமல் வெட்டிப்பேச்சு பதிவின் பேரை மாற்றி லூசுபேச்சுன்னு மாத்திட போறிங்க என்னா நீங்க ரொம்ப நேரம் பாத்தா லூசாத்தன மாறிப்பீடுவிங்க....கடவுள் மட்டும்தான் இனிமே உங்களை காப்பாற்ற முடியும்...எப்பவும் நீங்க வெட்டிப் பேச்சாகவே உங்களை பார்க்க விரும்பும் Madurai Tamil Guy

வெட்டிப்பேச்சு said...

ரொம்பவே சீரியசான பதிவு..

ஜூப்பருங்கோ..

கும்மாச்சி said...

போட்டுட்டேன் நானும் பின்னூட்டம்
பார்க்கமாட்டேன் தமிழ் சானல் நான்
எழுதியிருக்கீங்க சித்ரா நல்லா.

ஸாதிகா said...

இதாங்க..மொத்தத்தில் நான் டிவியே பார்க்கறதில்லை.

அஞ்சா சிங்கம் said...

அம்மா பவர் use பண்ணி..................////////////////////

இது ரொம்ப பெரிய பவர் ஆச்சே ...

HVL said...

கரெக்டா சொல்லியிருக்கீங்க!
எங்க வீட்டுல எந்த தமிழ்நாட்டு சானலுமே கிடையாது. ஒன்லி லோக்கல் சானல்.
அதையும் அநாவசியமா பாக்கறது கிடையாது!
எல்லாம் பிள்ளைங்க கிட்ட ஒரு பயம் தான்.

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

மக்கள் டிவி இன்னும் இங்க டிஷ் நெட்வொர்க்ல வரல......///////

வராம இருக்குற வரைக்கும் நல்லது சுழியம் சுழியம்ன்னு சொல்லுவாங்க அதுக்கு அர்த்தம் தெரியாம நான் பல நாள் அழுதிருக்கேன் .

goma said...

இதுக்கு பேர்தான் செல்ஃப் ஆப்ப்ப்ப்ப்ப்பு

அஞ்சா சிங்கம் said...

G.M Balasubramaniam said...பொழுதுபோக்க டீவீயே கதி என்பதுதான் தற்போது தமிழ், நோ,இந்தியர்களின் கதி. கௌச் பொடாடோஸ் .வாழ்க்கையில் வேல்யூஸ் என்பதே இந்த டீவி சனியனால் தொலைந்துவிட்டது.............../////////////

இந்த டிவி யை விட்டு ஜனங்க மனச திசை திருப்பி ஆக்கபூர்வமான் செயலுக்கு பயன் படுத்த அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் .

அனால் அவங்களே இலவசமா டிவி தராங்க சாராயம் விக்குறாங்க இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .
பீ.எஸ்.வீரப்பா உண்மையில் ஒரு தீர்க்கதரசி தான் ...........................................

Jaleela Kamal said...

ம்ம்ம் என்னத்த சொல்வது/.
பிள்ளைகளை வச்சிகொண்டு படமோ, சீரியலோ, பாடலோ பார்த்தா அவ்வளவு தான் அவர்கலுக்கு பதில் சொல்லி மாளமுடியாது.,

அதான், ஒரு நாளில் அரை மணி நேரம் மட்டும் தான் எனக்கு என்று ஒதிக்கி கொண்டு மற்ற நேரம் அவர்கலுக்கு பிடித்த கார்டூனை போட்டு விடுவது, என் பெரிய பையன் இப்ப வந்தாலும் அவனுக்கு உட்கார்ந்து கார்டூன் பார்க்க பிடிக்கும்.

ஆனால் எனக்கு பழைய பாட்ட கேட்டா அவ்வளவு தான் அவனுங்க ஒரே ஓட்டம் தான்.... ஹிஹிஹிஹி

தமிழ்க்காதலன் said...

அன்பு அக்கா, உங்க பதிவில் இது எனக்கு மிகப் பிடிச்ச பதிவு. சரியான சாட்டையடியை உங்களின் கலகலப்பான கைவண்ணத்தில் கொடுத்து கலக்கி விட்டீர்கள். நாம் வெட்கப் படவும், வேதனைப் படவும் இதுப்போல் நிறைய உண்டு. என்றுதான் நாம் சுயமாய் யோசித்து நம் சமூக முன்னேற்றம் காண்போமோ...........
நம்மிடம் நம்மைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லைக்கா..
உங்களிடம் ஒரு விண்ணப்பம்... தொடர்ந்து அவ்வப்போது நம் சமூகப் பிரச்சனைகளை எழுதுங்கள். பிரபல பதிவர்களின் மூலமாகவாவது ஒரு மாற்றம் வரட்டும்....

RVS said...

ப்ளட்டுல ஊறிப் போனதால நமக்கு அது வித்தியாசமா தோனலையோ..
ஆனா சமீப காலங்கள்ல டி.வீ வன்முறை ஜாஸ்திதான்.. ஒரே நாஸ்திதான். ;-)

சௌந்தர் said...

ஓஹ ரெண்டு நாளைக்கே இப்படி யா ...சூப்பர் சூப்பர்...


"அம்மா, தமிழ்ல பேசு ... நல்லா தமிழ்ல பேசுன்னு என்கிட்டே சொல்றீங்களே.... பாருங்க..... அவங்களுக்கும் நல்லா தமிழ் பேச தெரியல...."
"..............???????????!!!!!!!!!......../////

ஆமா ஆமா இப்போ எல்லாம் டிவில எங்க தமிழ் பேசுறாங்க....அதுவும் விஜய் டிவி சுத்தம்.....


ஒருத்தன் அடி வாங்கினா அது தான் சிரிப்பு என்று ஆகி விட்டது..மாறனும்

சசிகுமார் said...

உண்மை அக்கா அமெரிக்காவில் இருந்தாலும் நீங்கள் தமிழில் பேச வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் ஆனால் நம்ம ஊர்ல மாடு மேய்க்கிறவன் கூட நாம் தமிழ்ல பேசினால் ஒரு மரியாதையும் அதையே அவனுக்கு புரியாத ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக பேசினால் ஒரு மரியாதையும் தரும் நிலைமை உள்ளது. அரசியல் வாதிகளோ தமிழ் தமிழ் என்று பெயரளிவிலே சொல்லிவிட்டு அவனுடைய மகன்களை ஆங்கிலம் கற்க வைக்கின்றனர். தாய்மொழியை பேசினால் தாய்நாட்டிலே மரியாதை கிடைக்காத அவல நிலைமையில் உள்ளது இந்த தமிழகம். இதே நிலை தொடர்ந்தால் செம்மொழி தடவேண்டிய மொழியாகிவிடும்.

கிறுக்கன் said...

discovery channel tamila parpathu uthammamnu ninaikuren based on program certificate for age.

Nalla pathivu

raji said...

இந்த விஷயத்துல தூர்தர்ஷனை நாம்
நல்ல பக்கத்துல சேர்த்துக்கலாம் சித்ரா

பல இசை மேதைகள்,எழுத்தாளர்கள்.டாக்டர்கள்
போன்றவர்களின் பேட்டிகள், கருத்தரங்குகள்,தேர்வு சமயத்தில்
மாணவர்களுக்கான பாட சம்பந்தமான நிகழ்ச்சிகள்
போன்ற தரமான நிகழ்ச்சிகள் இன்னும் தூர்தர்ஷனில் தொடர்கின்றன.
(என்ன ஒரு விஷயம்னு கேட்டிங்கன்னா, எதிரொலினு வாசகர் கருத்துகள்
பத்தின நிகழ்ச்சிக்கு மட்டும் இன்னும் புதுமையா எதயுமே யோசிக்க
மாட்டேங்கறாங்க)

'பரிவை' சே.குமார் said...

இதுதான் நிதர்சனமான உண்மை.

Unknown said...

///தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ? ///


அது என்ன பொங்கல் ?

நோ நோ எங்களுக்கு அப்படியெல்லாம் செய்யத்தெரியாது

செங்கோவி said...

தமிழைக் கொலை பண்றதுக்குன்னே இவங்க காம்ப்பியரிங் ஆட்களைச் செலக்ட் பண்ணுவாங்க போல..பாரதியார் பாவம்..சீரியல் தனிக் கொடுமை..பிள்ளைங்க இருக்கும்போது பார்க்கவே முடியாது..எப்பவும் யாராவது சதித்திட்டம் தீட்டிக்கிட்டே இருக்காங்க..!

Anonymous said...

//நான் போட்ட ரூல்ஸ் எல்லாத்தையும், எனக்கே திருப்புறா!//
உங்க பொண்ணுக்கா. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்து நமக்கு ஹார்ட் அட்டாக் வரலாமல் இருக்கறதே பெரிய விசயம்.


http://reap-and-quip.blogspot.com/2010/04/2.html

arasan said...

அனைத்தையும் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் தமிழன்
இதை மட்டும் என்ன விதி விலக்கா?????

இன்னும் சில வருடங்களே தமிழ் மொழி இருந்த இடமே தெரியாமல்
அழிந்து விடும் ... தொலைகாட்சிகள் எதை மனதில் வைத்து இந்த மாதிரி
வேலைகள் பண்ணுகிறது என்று தெரியவில்லை..

ஊடகத்தின் பணி சிறப்பா இருந்தால் தான் அதை சார்ந்த மக்களின் மொழியும் , பண்பாடும்
வளரும் ...
தமிழர்கள் புரிந்து கொள்ள நெடு காலம் ஆகும் என்று எனக்கு தோன்றுகிறது ...

Thenammai Lakshmanan said...

நோ டென்ஷன் சித்து.. ஜுனோன் தமிழ் எல்லாம் கடந்து வந்தவங்க நாங்க.. அதுவே அழிக்க முடியாததை.. தமிழங்க செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.. தமிழ் மறு உருமாற்றத்தோடு செயல்படும்.. மாற்றம் என்பது மாற்ற இயலாதது..

Anonymous said...

அப்படின்னு புது தமிழில் என்னை நானே கரைத்துக் கொண்டிருந்த நேரத்துக்கு//
அட..ஆமா இல்ல..!

Anonymous said...

நாங்களும்தான் டிவி..பார்க்கிறோம்..ஆனா ஸ்டைலா பேசுறதுன்னு நினைச்சேன்..

தேவன் மாயம் said...

டி.வி தடை உங்களுக்குமா?

middleclassmadhavi said...

தமிழ் நாட்டில் நிறைய பேர் இப்போ discovery சானலுக்கு மாறிட்டாங்க!

எனக்கு ரொம்பப் பிடிச்சது. வாய் நிறைய உங்கள் குழந்தை கூப்பிட்ட 'அம்மா' என்ற தமிழ் வார்த்தை!

ஹுஸைனம்மா said...

நானும் சில சமயம் டிவியை - பழைய தமிழ்ப்படங்களை மிஸ் பண்ணுவேன். ஆனா, எம்ஜியார்-சரோஜாதேவி-மஞ்சுளா டைப் படங்களை நினைச்சுப்பார்த்து, நல்லவேளை டிவி சேனல்கள் இல்லைன்னு ஆறுதல் படுத்திக்குவேன்.

ஹுஸைனம்மா said...

தொடர...

சி.பி.செந்தில்குமார் said...

>>"இல்லை, அவங்களும் good guys ."
"நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க..."
"......................???????!!!!!!!!!.........."

haa haa ஹா ஹா செமயா மாட்டீகீட்டீங்க போல உங்க பொண்ணு கிட்டே..குழந்தைகளிடம் தோற்றுப்போவதும்,அவர்களிடம் நாம் சரண்டர் ஆவதும் வாழ்வியலின் சந்தோஷ தருணங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>>தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ?

பதிவு முழுக்க காமெடி மழையை தூவிட்டு கடைசில ஒரு பன்ச் வெச்சீங்க பாருங்க.. ம் ம்

vinu said...

naangellam ippudi unarchchi vasappadurathai vuttu pala naalu aachchungooooooooooooow;


ungalukku romba bore adichchaaa....

nammaa voottaanda vanthu "muthal kadiththam" padichchu thamil valarththukkungoooooooooooooo

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்று ஒரு பழமொழி அந்தக் காலங்களில் சொல்லுவார்கள்

அது டிவி கண்டு பிடிக்காத காலம்.

ஏற்கனவே அநேகமாக எல்லா வீடுகளிலும் புகுந்து விட்ட இந்த டிவியை யாராலும் இனி வெளியேற்ற முடியப் போவதில்லை என்பதே உண்மை.

ஆனாலும் ஒரு சில சேனல்களில் எவ்வளவோ நல்ல நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

நல்லவை மட்டும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் கண்களில் தென்படட்டும், என பிரார்தித்ப்போம்.

வேறென்ன நாம் பெரிதாகச் செய்து மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும்?

நல்லதொரு பதிவுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்று ஒரு பழமொழி அந்தக் காலங்களில் சொல்லுவார்கள்

அது டிவி கண்டு பிடிக்காத காலம்.

ஏற்கனவே அநேகமாக எல்லா வீடுகளிலும் புகுந்து விட்ட இந்த டிவியை யாராலும் இனி வெளியேற்ற முடியப் போவதில்லை என்பதே உண்மை.

ஆனாலும் ஒரு சில சேனல்களில் எவ்வளவோ நல்ல நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

நல்லவை மட்டும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் கண்களில் தென்படட்டும், என பிரார்தித்ப்போம்.

வேறென்ன நாம் பெரிதாகச் செய்து மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும்?

நல்லதொரு பதிவுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

வைகை said...

இது கொஞ்சம் சீரியஸா இருந்தாலும்..வேறு வழியில்லை உங்களுக்கு... உங்கள் குழந்தைகளுக்கு நமது நாட்டின் உண்மை முகத்தை இவைகளை கொண்டுதான் காட்டவேண்டும்.. இல்லையென்றால் தாய்நாட்டுக்கு வரும்போது அன்னியப்பட்டு நிற்ப்பார்கள்.. எளிதாக ஏமாற்றப்படுவார்கள்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்திய நாடு எந்நாடு... பாரினில் சிறந்த நாடு என்று சொல்வதால் பிரயோஜனம் இல்லை :))

திருவாரூர் சரவணா said...

//வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ? //

வெளி நோக்கமே அதுதான்.

//தமிழ் மக்கள், தங்கள் பொழுதை எல்லாம் இப்படி கழிச்சிட்டாங்கன்னா, அவங்க நிம்மதியா அரசியல் பண்ணலாம் பாருங்க... எந்த தமிழ் மகனும் கேள்வி கேட்க மாட்டாங்க.....நாட்டு நிலைமையை கண்டு பொங்கி எழ மாட்டாங்க...... //

அமெரிக்காவுக்கு எல்லாம் ஆட்டோ அனுப்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டுதானே இப்படி எல்லாம் உண்மையை எழுதுறீங்க.

கோலா பூரி. said...

இந்த அவஸ்தைக இல்லாமா குழந்தைகள் மாதிரிபோகோவும், கார்ட்டூன் நெட் ஒர்க்கும் மிச்டர் பீன்சுமே பரவால்லை/

Madhavan Srinivasagopalan said...

// தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ? //

well said :-)

மொக்கராசா said...

//அம்மா பவர் use பண்ணி புது ஆர்டர் தெரியாமல் போட்டுட்டேன் ...இப்போ "பே" னு முழிக்கிறேன்.

பெத்த புள்ளைகிட்ட தானே...அரசியல்ல இதல்லாம் சாதரணமப்பா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொடுமைதாங்க..:)
அதும் வித்யாபாலன் ஒரு விளம்பரம் ல வராங்க.. அந்த விளம்பரம் வந்ததும் நாங்கள்ளாம் முகத்தை சுளிக்க ஆரம்பிச்சிடுவோம்..

Sivakumar said...

//நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."
"பத்து ஸ்கின் ப்ரோப்ளம் - நோ டென்ஷன்//

!!! இந்த மாதிரி எழுதுற கூட்டம் கைல சிக்குனா உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். அமெரிக்கா திகார் ஜெயில்ல போட்ருங்க!

Jana said...

//தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ?//

இதுவே நிதர்சனம். இதை சொல்லி சொல்லியே எழுதி எழுதியே தொண்டை தண்ணியும், விரலும் வீங்கிப்போனதுதான் மிச்சம். இவர்களிடம் ஒரே ஒரு கேள்வி..B.H.Abdhulஹமீத் பேசும்போது அதைக்கேட்க கஸ்டமாகவா இருக்கு?

ராமலக்ஷ்மி said...

குழந்தைகளின் கேள்விகளில் எத்தனை உண்மைகள் பாருங்க. நல்ல பதிவு சித்ரா.

மாணவன் said...

உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கலந்து சிந்திக்க வேண்டிய தகவல்களை சொல்லியிருக்கீங்க மேடம் சூப்பர்...

உங்கள் பசங்க கேட்ட கேள்விகள் அனைத்தும் நிதர்சனமான உண்மை...

வாழ்த்துக்கள் :)

இளங்கோ said...

// தமிழ் மக்கள், தங்கள் பொழுதை எல்லாம் இப்படி கழிச்சிட்டாங்கன்னா, அவங்க நிம்மதியா அரசியல் பண்ணலாம் பாருங்க... எந்த தமிழ் மகனும் கேள்வி கேட்க மாட்டாங்க.... //

இப்படி டிவி சேனல் ஆரம்பிச்சது கூட இல்லாம, இலவசமா டிவி கூட குடுக்குறாங்க நம்ம அரசியல்வாதிகள்.

பவள சங்கரி said...

சரியா சொன்னீங்க சித்ரா........இப்போல்லாம் டிவி குறிப்பிட்ட ஏதோ சில நேரம்தான்....அதற்கு மேல் உட்கார்ந்தால் மண்டை காய்ச்சல்தான்...

settaikkaran said...

யூ ஸீ, நாமல்லாம் டமிலியன்ஸ்! யூ நோ, நமக்கு ஒரு அல்சர், ஐ மீன், ஒரு கல்சர் இருக்கு! நாம நம்ம டமிலை இப்படியெல்லாம் ’கில்’ பண்ணாம அதை டெவலப் பண்ணி என்லார்ஜ் பண்ணனும்..!

இது உங்க இடுகையைப் படிச்சதாலே எழுதினதில்லே; நேத்து கைபேசி கட்டணம் சம்பந்தமா ஒரு புகாரோட ஏர்-டெல் ஆபீஸுக்குப் போயி அங்கே தமிழும் இங்கிலிபீஸும் கலந்து ஒரு குருமா போட்டாங்க பாருங்க, அதோட பின்விளைவு!

இங்கே தமிழ் என்னமோ அப்படித்தானிருக்குங்க! :-(

settaikkaran said...

நீங்க எழுதின பாரதி பாட்டை வாசிச்சதும் எனக்கு சிவாஜி சைக்கிள் மிறிச்சுக்குனே பாடிட்டு வர்ற அந்தப் பாட்டு ஞாபகத்துக்கு வந்தது.

"ஹ்யூமன் சேஞ்சி விட்டான்
ட்ரீயில் கிளைம்பி விட்டான்
ஓ..ஓஓ..ஓ...ஓஓ..ஓஓஓஓ..ஓஓஓஓ!"

கலக்கறீங்க! :-))

போளூர் தயாநிதி said...

இந்த குழந்தைகள் சேனல் எல்லாம் கொடுமை.. அதில் வரும் பேச்சுக்கள் எல்லாம் குழந்தையின் உச்சரிப்பையே மாற்றுகின்றன...
இந்த கட்டுரை மிகவும் பாராட்டுக்குறியது.

சென்னை பித்தன் said...

மெல்லத் தமிழினிச் சாகும்?
நம் தமிழ் சான்ல்களின் ’தர’த்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்

ADHI VENKAT said...

எங்க வீட்டிலும் இதே கதை தான். மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கார்ட்டூன் போட்டு விட்டால் அதிலும் ஒரு சிலது மட்டம் தான். என்ன செய்வது!

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு.

test said...

இதுக்கே இப்பிடீன்னா நம்ம டாகுடர் விஜய் முதல்வரானா என்ன பண்ணுவிங்க? அப்பறம் நியூஸ் கூட பல்லைக்கடிச்சிட்டுத்தான் வாசிப்பாய்ங்க! (முதல்வர் ஸ்டைல்ல!)

MANO நாஞ்சில் மனோ said...

//நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க..."
"......................???????!!!!!!!!!.........//

இதான் பிள்ளைங்க கிட்டே வாய் கொடுத்துட்டு தப்ப முடியாதுப்பா...

ambicks said...

very very nice blog well said.. u have told all that i wanted to say abt changing india and tamil ..

Ram said...

ரொம்ப உணர்ச்சிவசபட்டு எழுதுறீங்க போல.!!

Nagasubramanian said...

குழந்தைங்க புத்திசாலிங்க. அவங்கள ஏமாத்தவே முடியாது.

Menaga Sathia said...

இந்த காலத்து பிள்ளைகங்க எவ்வளவு தெளிவா இருக்காங்க...அவங்களுக்கு பதில் சொல்லதான் நம்மிடம் பதில் இல்லை...

ஈரோடு கதிர் said...

யோசிக்கவேண்டிய விசயம்தான்

Malar Gandhi said...

Chitra, I share the same sentiments with you regarding Tamizh channels. I wish they have censor board for TV too. And majority of our movies are so silly and doesn't show the reality of life.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

உங்கள் பகுதியை இப்போதுதான் முதல் முறையாய் பார்க்கிறேன்.
குழந்தைகளின் எதிர்கால தமிழ் நிலை என்ற உங்களின் ஆதங்க பூர்வமான கவலை.
உங்களின் இறை பற்று அவர்களின் தமிழ் பற்றை காப்பாற்றட்டும் .
மற்றபடி உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துக்கள் .


--
என்றென்றும் அன்புடன் ,
சுகி .

vanathy said...

நல்லாச் சொன்னீங்க. இதனால் தான் நான் இந்த தமிழ் சானல், பாட்டுகள், காமடி சீன்கள் பிள்ளைகள் இருக்கும் போது பார்ப்பதில்லை. எதற்கு வம்பை விலை கொடுத்து, பிறகு அதுங்களுக்கு விளக்கம் சொல்லி... இதெல்லாம் தேவையான்னு நினைச்சு விட்டாச்சு.

R. Gopi said...

பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகள் இப்படித்தான். என்ன செய்வது என்றுதான் தெரியலை. தொடர்கள் எல்லாத்துக்கும் மேல

vasu balaji said...

கட்டஞ்சரியில்லன்னா இப்படியெல்லாம் கனெக்‌ஷன் எடுக்கத் தோணும்:)). பொங்குறதா? அதான் டாஸ்மாக்குல பீர்பாட்டில் தொறந்து பொங்குதுல்ல. அப்புறம்வேற எங்க பொங்ங்ங்ங்ங்ங்குறது:))

வெங்கட் நாகராஜ் said...

தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மொழி ஊடகமாக இருந்தாலும் இப்படித்தான்! மஹா கேவலமான விளம்பரங்கள், தொடர்கள், சினிமா நிகழ்ச்சிகள் என்று ரொம்பிக் கிடக்கிறது! டி.வி. பார்ப்பதே தேவையில்லை என்ற எண்ணத்தினை உண்டாக்கிவிட்டது.

சுபத்ரா said...

அக்கா, என்ன இப்படி இருக்கீங்க???
நம்ம ஊர்ல இருந்தப்போ நீங்க டிவி பார்க்குற பழக்கம் இருந்ததா?
எல்லாமே க்ராஜுவல் சேஞ்சஸ் தான்.. பை த வே, குட்டீஸ் ஒரு ஹாய் சொன்னேன்னு சொல்லிடுங்க. அவங்கள ரொம்ம்ம்ம்ப நல்லவங்களா வளர்த்திருக்கீங்க...! குட் :-)

அமுதா said...

சூப்பரா கேள்வி கேட்டுட்டீங்க... என்னத்த சொல்ல... நான் டி.வீயே பார்க்கறது கிடையாது. சுட்டியோ, சித்திரமோ ஓடட்டும்னு விட்டா, அங்கேயும் ”உன்னைப்பார்த்தாலே பட்டாம்பூச்சி பறக்குது” னு டயலாக்ஸ். அதையும் கொஞ்சம் க்ண்ட்ரோல் பண்ணிட்டேன். கலாச்சாரத்தை தமிழ்நாட்ல வளர்க்கறது தான் ரொம்ப கஷ்டம் ;அமெரிக்காவில் அது நல்லாவே செழிக்கும்னு நினைக்கிறேன் :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Chitra said...

;தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ?ஃஃஃஃ
உண்மைதான் சித்திராக்கா...
எனது குட்டிப்பொண்ணு கேட்பா பொலிஸ்க்கு அடிக்க கூடாது ஏன் கீரோ அடிக்கிறார்.....????? நல்லதா ஏதும் விளக்கம் கூறினா சொல்லுவா பிழைசெயிறவங்களா அடிக்க தான் பொலிஸ் அவங்களை அடிக்க கூடாது அதுவும் பொலிஸ் உடுப்பு போட்டிருக்காரே எப்படி அடிக்கலம் என்று கேள்விக்கு மேல கேள்வி கேட்பா....இந்த காலத்து பிள்ளைங்க நம்ம விட அறிவாளிங்க...

தூயவனின் அடிமை said...

ஆஹா ஆஹா சரியான போட்டி நடக்கட்டும் வாழ்க தமிழ்.

FARHAN said...

சித்ரா அக்கா தமிழ் சேனல்கள பார்த்து ரொம்ப நொந்து நூடில்ஸ் ஆகிட்டிங்க போல

நட்புடன் ஜமால் said...

Tamil 'MTV' ha ha ha :(

paarkathey nee tv ...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சாரி மேடம் ரொம்ப லேட்டாகிடுச்சு! நல்லதொரு விஷயத்த நகைச்சுவை கலந்து எழுதியிருக்கீங்க! அருமையா இருக்கு! தமிழ் திரைப்பட காமெடி குறித்து கேள்வி கேட்ட அந்தச் சுட்டிப் பொண்ணுக்கு வாழ்த்துக்கள்!!

ம.தி.சுதா said...

சுட்டிப் பிள்ளையை தான் பெற்றுருக்கிறீர்கள்... அம்மாவை இப்புடித் தான் கேட்கணும்...

ம.தி.சுதா said...

ஏன்டா தமிழ் சனல் என்பது போல இருக்குமே...

சித்தாரா மகேஷ். said...

தமிழ் எங்கும் வாழும் பாத்திங்களா இந்தச் சின்ன பிள்ளையில் எப்படி வாழுது...

எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

நீச்சல்காரன் said...

நல்லவேளை இந்த கேபிள் டிவிகள் நூறு வருசத்துக்கு முன்னாடியில்லை, இருந்திருந்தால் தமிழ் பேசும் தமிழ் நாடு என்ற மாநிலமே உருவாகிருக்காது.

யாசவி said...

சிரிப்பை தொடர்ந்து கவலை படர்கிறது.

சிங்கையில் உள்ள சேனல்கள் ஏற்கனவே விஜய் டிவியால் கெட்டிப்போய்விட்டது.

suneel krishnan said...

உங்க பசங்க தெளிவா தான் கேக்குறாங்க :) உண்மையா சொல்லனும்ன தமிழ் சேனல் எல்லாமே மொக்கை ,தொலைகாட்சிய குழந்தைங்க கண்ணுல காட்டாம வளத்தா நல்லதுன்னு தோணுது ..

Unknown said...

//டிவி ஹோஸ்ட்:

"அம்மா, தமிழ்ல பேசு ... நல்லா தமிழ்ல பேசுன்னு என்கிட்டே சொல்றீங்களே.... பாருங்க..... அவங்களுக்கும் நல்லா தமிழ் பேச தெரியல...."
"..............???????????!!!!!!!!!........."//
உண்மை

Unknown said...

//டிவி ஹோஸ்ட்:

"அம்மா, தமிழ்ல பேசு ... நல்லா தமிழ்ல பேசுன்னு என்கிட்டே சொல்றீங்களே.... பாருங்க..... அவங்களுக்கும் நல்லா தமிழ் பேச தெரியல...."
"..............???????????!!!!!!!!!........."//
உண்மை

கோமதி அரசு said...

//என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல.... வியாபாரம் மட்டும் தான் உள்நோக்கமோ? நிச்சயமாக தமிழ் மொழி வளர்ப்பு திட்டம் இல்லை - தமிழ் கலாச்சாரம் காப்பு திட்டமும் இல்லை. தனியார் தொலைக்காட்சி எல்லாம் அரசியல் கட்சிகள் பிடியில் இருக்கிறதன் காரணம் மட்டும் புரியுது.... தமிழ் மக்கள், தங்கள் பொழுதை எல்லாம் இப்படி கழிச்சிட்டாங்கன்னா, அவங்க நிம்மதியா அரசியல் பண்ணலாம் பாருங்க... எந்த தமிழ் மகனும் கேள்வி கேட்க மாட்டாங்க.....நாட்டு நிலைமையை கண்டு பொங்கி எழ மாட்டாங்க...... ஜூப்பரு!//

இது தான் உண்மை சித்ரா.

சுந்தரா said...

சரியா சொல்லியிருக்கீங்க சித்ரா.

வளரும் குழந்தைகளோட பேச்சு மட்டுமில்ல,பல பெண்களோட இயல்பும்கூட மாறிப்போச்சு. இப்பல்லாம்,அவங்கவங்க கவலையோட, சீரியல் மக்களுக்கும் சேர்த்துக் கவலைப்படுறாங்க.

அதுமட்டுமில்லாம, நகைச்சுவை சேனல்களைத் தொடர்ந்து பாக்க ஆரம்பிச்சாங்கன்னுவைங்க, அவங்க ஒருத்தரையொருத்தர் திட்டுறதுகூட அதே சாயல்ல இருக்கும்...
என்னத்தைச்சொல்ல :(

சிநேகிதன் அக்பர் said...

நோ ஃபீலிங் வீ இம்ரூவ் அவர் தமில்.

சுசி said...

நான்(ங்க) ரொம்ப பொறுமைசாலி(ங்க) சித்ரா.. எங்க வீட்ல இப்போதும் டமில் டிவி இருக்கு :)

எம் அப்துல் காதர் said...

// மக்கள் டிவி இன்னும் இங்க டிஷ் நெட்வொர்க்ல வரல.//

இடையில் இங்கேயும் ஸ்டாப் செய்திருந்தார்கள். இப்ப தொடர்ந்து வருது. நல்ல தரமான நிகழ்ச்சி தான்.

// இவர் யாருமா? என்றாரே பார்க்கலாம்,எனக்கு தூக்கிவாரிப்போட்டது,இவர் தான் நடிகர் திலகம் சிவாஜி என்று சொன்னேன்,அப்படியா? நான் இதுவரை பார்த்ததில்லைன்னு சொன்னவுடன் எனக்கே பாவமாக போய்விட்டது.ப்ள்ஸ் 2 படிக்கிற பையனுக்கு நம்ம ஊர் சிவாஜியை தெரியலையேன்னு எனக்கு இருந்துச்சு,அவரவர்க்கு அவரவர் கவலை.//

உண்மை நிலையும் இது தான். பழைய நடிகர்கள் யாரென்பது இருக்கட்டும். புதிய சமுதாயம் அவர்களை ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்லை என்பது தான் நிதர்சனம்.

Pranavam Ravikumar said...

I liked the way you explained everything.. Hope we can practice something better..! (I read two times :-))

இராஜராஜேஸ்வரி said...

இக்கரைக்கு அக்கரை "பச்சை"://
பச்சை பச்சை மயமே
பச்சை மயமே
சிந்தை கெடுக்கும் பச்சைமயமே
தொல்லைக்காட்சி தரும் தொல்ல்லை
இல்லை ஒரு நிம்மதியே!1

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

பதிவு அருமை முக்கியமாக பி. கு.

Yaathoramani.blogspot.com said...

பிள்ளைகள் சொல்வது மிகச் சரியாகத்தானே உள்ளது.
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா மாதிரி
பிள்ளைகள் மூலமாகவாவது நாம் நம் தமிழ்
தொல்லைகாட்சிகளைப் பார்ப்பதை
குறைக்கிறோமா ! பார்போம்
மிகச் சிறந்த பதிவு.வாழ்த்துக்கள்

தக்குடு said...

டிவி பாக்கர்தை நிப்பாட்டி 2 வருஷம் ஆயாச்சு அக்கா!!

உங்க ஜூனியரோட கேள்வி எல்லாம் நியாயமானதே!!..:)

மோகன்ஜி said...

நகைச்சுவையாய் நீங்கள் பட்ட பாட்டை சொல்லியிருக்கிறீர்கள். குட்டீஸ்க்கு ஏன் அன்பு.

GEETHA ACHAL said...

//எப்போ பாரு..... ஷாம்பூ, சோப்பு, டூத் பேஸ்ட், fairness cream commercials (விளம்பரங்கள்) தான் மாத்தி மாத்தி வந்து கிட்டே இருக்குது.//என் கணவர் சொல்லும் அதே கமெண்ட் தான் உங்க பொன்னும் சொல்கின்றாள்...

சரியாக சொன்னீங்க சித்ரா...உண்மையை யார் சொன்னா என்ன...நல்ல பகிர்வு...

Unknown said...

very intersting post.first time here.lovely,glad to follow u

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சிரித்துகொண்டே படிச்சேன் - மீ :))

அதுவும் அந்த போஸ்டர், அதுக்கு மம்மி டாடி பர்மிஷன் - முடியல.. :)

ஒரு தடவ நீயா நானா பார்த்து கடுப்பானேன்.. அவ்வளவு ஆங்கிலக் கலப்பு.. அதுக்கு ஆங்கிலத்துலயே பேசிட்டுப் போக வேண்டியது தானே..

கண்டிப்பா லுக்குக்கு நம்ம ஊருல முக்கியத்துவம் அதிகமாகிட்டுத் தான் வருது..

நல்லவேளை நான் தமிழ் சினிமா பார்ப்பதோட நிறுத்திக்கறேன்..

Chitra said...

இப்போதைக்கு நானும் அதேதான்... எப்பொழுதுதாவது சினிமா பாடல்களும். ஹி,ஹி,ஹி,ஹி....

Anonymous said...

நீங்கள் சொல்ற மாதிரியெல்லாம்... டி.வி யில போடறாங்களா?
சினிமாவில இப்படியெல்லாம் இருக்குதா?
அட..பரவாயில்லையே... நான் அந்த பக்கம் தலை கூட வைத்து படுப்பதில்லை.

Santhappanசாந்தப்பன் said...

உண்மையிலேயே நல்ல பதிவு சித்ரா... நகைச்சுவையோடு நச்‍னு ஒரு கருத்தையும் சொன்னீங்க பாருங்க! நீங்க தான் அடுத்த கலைவாணர்(ணீ?)

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

டி.வி.யில் ஜுனூன் தமிழ் என்று ஒரு தமிழ் வந்து கலக்கியது நினைவுக்கு வந்தது. மொத்தத்தில் ‘தமிழனென்று சொல்லடா...தலை குனிந்து கொள்ளடா’என்றுதான் சொல்லத் தோன்றுகிறது...

Jayanthy Kumaran said...

Hope you haven t seen chutti tv yet..really children are learning all local words in the name of comedy..!
Tasty appetite

செல்வா said...

//"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."
"பத்து ஸ்கின் ப்ரோப்ளம் - நோ டென்ஷன்!//

ஹி ஹி .. இதெல்லாம் இங்க சாதாரணம் அக்கா ..கொடுமை கொடுமை கொடுமையிலும் கொடுமை ..

செல்வா said...

ரியாலிட்டி ஷோக்களிலும் நிறைய இங்கிலீசு தான் ..
மாண்ட மயிலாட சீசன் ஆறு .. இப்படி சொல்லுவாங்க ..
இன்னும் நிறைய இருக்கு

VELU.G said...

நல்ல வேளை எங்க வீட்ல டி.வி இல்லாததால இந்த தொந்தரவு இல்ல

எங்கம்மிணி இதில மட்டும் ஸ்டிரிக்டா சொல்லிட்டாங்க

புள்ள படிச்சுட்டு இருக்கறதால வீட்டுக்கு டி.வி வேண்டாம்னு

எம் புள்ள எத்தனை வருஷம் படிக்கப்போகுதோ தெரியலையே சொக்கா....

vinu said...

me watching; daily nicoloden eve 6-7 oggy and cocroaches; 7-7:30 disney; veryy occasionaly vijay tv; daily night 11-12 SCV musics;

intha maathiri ethaiyum plan panni paaakanum

jayakumar said...

super chitra soranai ullavanga keppanga...

ஸ்ரீராம். said...

எங்களுக்கு பழகிப் போச்சு...மேலும் நாங்கள் சீரியல் பார்க்கறதில்லை..விளம்பரம் வந்தால் மாற்றிடுவோம்...

Anisha Yunus said...

ஹ ஹா... இதுக்குத்தேன் பசங்க தூங்கறப்ப மட்டும் டீவி பாக்கணுங்கிறது. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்கு சொல்லித் தர்ற ரூல்ஸ் நாமளும் ஃபாலோ செய்யக்கூடியதா இருக்கணும்... இல்லன்னா இப்படித்தேன்... ஹெ ஹெ.. அப்ப இனிமே தமிழ் வளராதா....ஆ...!!

Anisha Yunus said...

//தமிழர் என்பதன் முதல் அடையாளமே, தமிழ் மொழிதானே.... அது படுகொலை செய்யப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமே..... பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு பொங்கி எழப் போகிறோமோ? //

கிழிஞ்சது போங்க. முத்துக்குமார் செத்தது அரசியலா போச்சு. ஜெயக்குமார் சாவு கேட்பாரற்று போச்சு, பிரபாகரன் அம்மாவை உள்ளேயே வரக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டதுக்கும் நாம் ஒன்னும் சொல்லலை...இதுக்கெல்லாமே ரியாக்‌ஷன் காட்டாத நாம் இதுக்கு மேலா எதுக்காவது எரிமலையாகப் போறோம், அடுத்து ஒரு பத்து கோடி கோடி ஊழல்ன்னாலும் பேப்பரை கடாசிட்டு போயிட்டே இருக்கப்போகிறோம்.. !!

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

வேலன். said...

வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் நமது பழைய இந்திய கலாச்சாரத்திற்கு மாறுகின்றார்கள்.இங்கோ டி.வி.முதல்கொண்டு எல்லாம் வெளிநாட்டுகலாச்சாரத்திற்கு மாறிவருகின்றது. உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நீங்களும் தமிழ் டிவி நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்(செய்திகள் உட்பட)
வாழ்க வளமுடன்.
வேலன்.

mamtc said...

this is pretty interesting post actually and ur daughter sounds like a prodigy in the making.

When I happen to watch "three stooges" I think ok these guys have said goodbye to slapstick comedy longtime but we guys still consider act of beating and kicking as funny.

In office as well I had noticed that our guys find it quite hard to catch any joke which isnt coupled with funny/monkey face or awkward tone comparing to other non-indian co-workers.
We need more comedians like Michael Cera - poke face deliveries yet funny to the core:)

mamtc said...

Me and my hubby personally run heels over head when we happen to hear soap-operas/megaserials in India.
My mom was here and she was watching some "kumkumkum or kudubam" serial, and in that one school kidoo shares sweets with her classmates and another classmate of hers tell her that she is celebrating the arrival of her half-brother but her step-mother is soon to turn evil.
My hubby "hello aunty,these guys havent spared even the 10year olds nowadays? they also start these conspiracy plot rite from these characters?"

Chitra said...

Oh MY!!!! That is scary... I do not have any intention of watching those serials. I wonder how people can take it so easily.

Chitra said...

////In office as well I had noticed that our guys find it quite hard to catch any joke which isnt coupled with funny/monkey face or awkward tone comparing to other non-indian co-workers.//////

..... I have noticed that too. Very few understand the genuine sense of humor.

Priya dharshini said...

Enga Tv yela pala perachanaikal than....Serial pakkatha ala naanga eruthallum,entha ADS yum ,chutti Tv nu perula nadakura pirachinaikal athigam....
Chutti tv yil, oru cartoon padam trailer husky voice yil "Than Son Sight aditha pennaiye santhu gappil correct pannum oru thanthai yin kathai" (Something Something remake cartoon)....Ethula ovu oru 10 nimisa edaiyila,Cinema trailor in kids channel...Ethula kevalam kutti tv la ,dhanush adukalam trailer " naama rendu perum kiss adichukalama"....En pennu,etha ellam pathu pesa araipichutta...Thedi kandupeduchu ella channel layum lock pannom...Naanga Vittula tamil than pesuvom..Ava school teacher last week koppittu,Athukum periya aapu vachachu...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள், தொலைதூர தேசத்தில் வளரும் தலைமுறை சொல்லும்போதுதான் நமக்கு செவிட்டில் அறைவது போல இருக்கிறது!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள், தொலைதூர தேசத்தில் வளரும் தலைமுறை சொல்லும்போதுதான் நமக்கு செவிட்டில் அறைவது போல இருக்கிறது!

calmmen said...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.ஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலேயே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என பல நோய்களால் அவதியுறுகின்றனர்.

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1ExFZDu9g

Priya said...

//என்ன நினைப்புல டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்கள் என்று தெரியல....//.. உண்மை:(

ரொம்ப நன்றாக சொல்லி இருக்கிங்க சித்ரா.

முகவை மைந்தன் said...

பதிவு பிடித்திருந்தது. நன்றி.

Suni said...

பாவம் நிம்மதியா TV கூட பார்க்க முடியலை.

செந்தில்குமார் said...

சரியாக சொன்னிங்க சித்ரா...

டிவிக்கு முன்னாடி உக்காரும் போது பொழுது போக்கைவிட பொருமைதான் தேவைப்படுகிரது....

சிவகுமாரன் said...

நான் இப்பெல்லாம் ஜெட்டிக்ஸ், சுட்டி டிவி , போகோ இது மட்டும் தான் பாக்குறது. மத்த டிவி பாக்குறதெல்லாம் தப்பு. ( வேற வழி??)

priyamudanprabu said...

முதல்ல,  அவங்கள நிப்பாட்ட சொல்லுங்க.... அப்புறம், நான் நிப்பாட்டுறேன்முதல்ல,  அவங்கள நிப்பாட்ட சொல்லுங்க.... அப்புறம், நான் நிப்பாட்டுறேன்

priyamudanprabu said...

முதல்ல,  அவங்கள நிப்பாட்ட சொல்லுங்க.... அப்புறம், நான் நிப்பாட்டுறேன்


Vaaipe illa

Sriakila said...

பிள்ளைகள் மனதில் பளிச்சென்று படும் பல விஷயங்கள் வளர்ந்தவர்களுக்கு தெரிவதில்லை.

சன் மியூசிக் ஆரம்பிப்பதற்கு முன்னால் அது SCV சேனலாக இருந்தது. அப்போது அதில் தொடர்ந்து பாடல்கள் மட்டுமே ஒளிபரப்புவார்கள். ஆனால் இன்று அதையே காம்பயரிங் என்ற பெயரில் தமிழைக் கொலை செய்து பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரி சலிப்பைத் தந்து விடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழில் பேசுவதைக் கேவலமாக நினைக்கிறார்கள்.

//""நல்ல பிள்ளைனா, யாரையும் அடிக்க கூடாதுன்னு சொன்னீங்க...""//

இந்த அறிவுரையை நாம் வாயால் சொல்கிறோம், அதை தப்பில்லை என்று செயலால் அத்தனை காமெடி சேனலிலும் காட்டுகிறார்கள். குழந்தைகளின் கேள்வி நியாயம்தானே!

நவீன உலகில் அத்தனை விஷயங்களும் கமெர்ஷியலாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்கு எந்தக் கேள்வியும் கேட்கத் திராணியில்லாத நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியதுதான்.

Sukumar said...

ஒண்ணு மட்டும் நிச்சயம்.. உங்க குட்டீஸ் பிளாக் மட்டும் ஆரம்பிச்சா.. உங்களை விட பயங்கரமா இருக்கும் போல.. ஹி..ஹி..

வலையுகம் said...

அருமையான பதிவு

வாழ்த்துக்கள் சகோ

தி. ரா. ச.(T.R.C.) said...

தமில் வால்க !

Lingeswaran said...

தமிழை கொலையாக கொல்லுகிறார்கள் என்பதை உங்கள் தமிழ் நடையின் மூலமாகவே வெளிப்படுத்தியவிதம் மிக அருமை..

Unknown said...

hahaha..nanthan firstu...

Unknown said...

எக்கோவ்
உங்க பொண்ணு என்ன மாதிரயே செம டலேன்ட் :) nambanum sariya..
உங்களுக்கு செம மெமரி பவர் அக்கா
வாழ்க வளமுடன்
அணைத்து விசியங்களும் அலசி இருக்கீங்க
எல்லாம் சொல்லிட்டாங்க நா வேற என்ன சொல்ல
அருமை

மாதேவி said...

குட்டீஸ் நன்றாகத்தான் கேட்டிருக்காங்கள்.

Muruganandan M.K. said...

வியாபாரம், அதிக லாபம் பெறுதல் இவற்றிக்காக குப்பைகளையும், ஆபாசங்களையும் அள்ளிக் கொட்டுகின்றன பல சனல்கள்.
சமூக அக்கறையோட சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

இன்றைய கவிதை said...

சித்ரா

நொந்து போயிருக்கீங்கனு தெரியுது இதெல்லாம் அரசியல்ல சகஜம்தானே

லூஸாவுடுங்க

ஜேகே

Unknown said...

உங்கள் பதிவுக்கு இணையாக, சில பின்னூட்டங்கள் மிக அழுத்தமானதாக, யோசிக்க வைப்பவையாக இருக்கின்றன..
Thanks

மைதீன் said...

தொலைக்காட்சிகளின் விளம்பரங்களின் வாயிலாக நம் குழந்தைகளின் மனதில் விஷ விதைகள் தூவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் அறியாமலே.கறுப்பானவர்கள் அழகில்லாதவர்கள் கிரீம்கள் பூசுங்கள் என்பதில் தொடங்கி பொருட்கள் விற்ப்பதற்க்காக என்னனவோ வித்தைகள் செய்கிறார்கள் விளம்பரத்தில்.அவைகளால் கடன்கள் கூடிக்கொண்டிருக்கிறது நடுத்தர வர்க்க குடும்பங்களில்.சீரியல் பார்க்கும் ஆர்வத்தால் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தராமல் டியுசனுக்கு அனுப்பிகொண்டிருக்கிறார்கள் நம் தாய்மார்கள். பல குடும்பங்கள் கவனிக்க படாமலே போய்க்கொண்டிருக்கிறது. இது எங்கு பொய் முடியும் என்று தெரியவில்லை. எனிவே,உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

நிரூபன் said...

இன்றைய தமிழ் தொலைக்காட்சிகளின் தொல்லைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மெல்லத் தமிழ் இனி வாழுமா? இல்லைச் சாகுமா?

நசரேயன் said...

//பிறகு எப்படி மற்ற விஷயங்களுக்கு
பொங்கி எழப் போகிறோமோ?//

பொங்க வச்சா பொங்கும்

mamtc said...

thnx for comments Chitra!

ரிஷபன் said...

சிரிச்சுகிட்டே அடி பின்னிட்டிங்க
எவ்வளவோ பார்த்துட்டோம் இத தாங்கிக்க மாட்டோமா