Monday, May 9, 2011

பூசணிக்காய் ஆரோக்கியமும் புடலங்காய் கேசரியும்

 
 (Thanks to "Tasty Appetite Jay" for this Rava  Kesari photo through  Google Images)
 
அன்னைக்கு ரவா கேசரி, நிறைய நெய் ஊற்றி கிண்டி கொண்டு இருந்தேன். நெருங்கிய உறவினர் இந்தியாவில் இருந்து அழைத்து இருந்தார்.  
 
"என்ன பண்ணிட்டு இருக்கீங்க, சித்ரா?"
"ரவா கேசரி கிண்டிக்கிட்டு இருக்கேன்."
 "அப்படியா.... எனக்கு கேசரி ரொம்ப பிடிக்கும். முன்பு அடிக்கடி சாப்பிடுவேன். உங்க பக்குவம் சொல்லுங்க."
 
" ரவா கேசரியில் என்ன பக்குவம் வேண்டி கிடக்கு. கொஞ்சம் ரவா......"
" ரவையில் ,  ராகி - பார்லி மாதிரி அதிகம் சத்து கிடையாது தெரியுமா? ரவை நிறைய சேர்த்துப்பீங்களோ?  சரி, அப்புறம் சொல்லுங்க...."
"நெய்......"
"நான் (diet ) டயட் ல இருக்கேன். இப்போல்லாம் நெய் சேர்த்துக்கிறது இல்லை.  அதுல எவ்வளவு கொழுப்பு இருக்கிறது தெரியுமா?  அப்புறம்...."
"சீனி ....."
"சீனியா?  அதில் வெறும்  எம்ப்டி கலோரீஸ் (empty calories) தான் இருக்குது.   நான் sweetener தான் தேவைப்பட்டால் கொஞ்சம் உபயோகிப்பேன்.  சீனி சேர்த்துக்க மாட்டேன்."
 
 " அப்படியா?   அப்போ ஒண்ணு பண்ணுங்க.... டயட் (diet) ல இருக்கிறவங்களுக்கு ஏத்த மாதிரி ரவா கேசரி செய்ய  பக்குவம் சொல்றேன்.  ரவைக்கு பதிலாக, சத்து அதிகம் உள்ள  ராகி கொஞ்சம் எடுத்துக்கோங்க.  நெய் வேண்டாம்.  அதுக்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட மோர் எடுத்துக்கோங்க. சீனி வேண்டாம். ஒரு பின்ச் உப்பு போட்டு நல்லா கலக்குங்க....."
 
"சித்ரா, என்ன இது?  ரவா கேசரி பக்குவம்னு பார்த்தால்,   இது ஏதோ ராகி/கேப்பை கூழ் மாதிரி சொல்றீங்க..."
"புரிஞ்சிடுச்சா?.... நல்லது. "

ஊரு உலகத்துல இந்த டயட் இருக்கிறவங்க தொல்லை தாங்க முடியல. அவங்க இருக்கட்டும். வேண்டாங்கல. அதற்காக, ஒழுங்கா -  நல்லா சாப்பிடுறவங்க எல்லாம் ஏதோ வாழ்க்கையில் தப்பு பண்றவங்க மாதிரி ஒரு பில்ட் அப் கொடுக்கிறாங்க பாருங்க...... அந்த கொசுக்கடி தொல்லை, தாங்க முடியல.
 
நானும் முன்னொரு காலத்துல அந்த தப்பு செய்ஞ்சு இருக்கேன்.  அதாங்க, இந்த டயட்ல இருக்கிறது. 
 
டயட்ல இருக்கிறதுனா என்னன்னு கேட்கிற பாவப்பட்ட ஜீவராசிகளுக்காக ஒரு சின்ன குறிப்பு: 
 
 
  வேற ஒண்ணும் இல்லை.  வாய்க்கு ருசியாக என்னவெல்லாம் இருக்குதோ, அதெல்லாம் கொழுப்பு சத்துக்கு ஒட்டி பிறந்த தம்பின்னு நினைச்சு சாப்பிடாம ஒதுக்கி வச்சுடணும்.   ஆடு கோழியை தம்மு கட்டி அதுவரைக்கும் சாப்பிட்டுகிட்டு இருந்ததை விட்டுட்டு,  பரிகாரமாக - ஆடு கோழிங்க  சாப்பிடுகிற ஐட்டம் எல்லாம் அப்படியே  நீங்க மேயணும்.  சாரி,  சாப்பிடணும்.  அப்படி "கொத்தி கொத்தி" சாப்பிடும் போது,  எப்படியும் வயிறு முட்ட சாப்பிட தோணாது.  கால் வயித்துக்கு நிரப்புறதுக்குள்ளேயே,  போதும் போதும்னு ஆயிடும்.  கண்டிப்பா,  எப்படியும் வெயிட் குறைஞ்சுடும்.   
 
அப்புறம்,  நாம ஒதுக்கி வச்சு - அழகு பார்த்து - பெருமூச்சு விடுற ஐட்டத்தை எல்லாம்  மத்தவங்க சாப்பிடும் போது, உள்ளுக்குள்ள வயித்தெரிச்சல் பட்டுக்கிட்டு - காது வழியா வருகிற பொறாமை  புகையை மறைக்க - அவங்க சாப்பிடுறது எல்லாம்,  "மண்டையோடு பிளஸ் X மாதிரி எலும்பு துண்டுகள்" இருக்கிற label வச்சு வருகிற விஷ பாட்டில்ல வந்து இறங்கின சரக்குகள் மாதிரி "உவ்வே" காட்டி ஒரு நீள lecture (லெக்சர்) அடிக்கணும்.  
 
டயட் என்றால்  அம்புட்டுதேன், மக்காஸ்!   அப்படி நான் இருந்தப்போ, நான் எதிர்பார்த்த அளவுக்கு அங்கே வெயிட் குறையல..... வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்து,  டயட்ல இருந்து பார்த்தாலும் வெயிட் குறையல.  ஒரு நாள் வெறுத்து போய், வந்து எங்க அப்பா முன்னால வந்து உட்கார்ந்தேன். 
 
"என்ன ஆச்சு, சித்ராம்மா?" 
"நானும்,  ஒரு வாரமா இலை தழைனு  மாடு மாதிரி சாப்பிடாத குறையா டயட்ல இருக்கேன். இன்னும் கழனி பானையை மட்டும் தான் தேடி போகல. வெயிட் குறைவேனாங்குது." 
" ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு,  புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி?  நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?" 
(எங்க வீட்டிலே எல்லோரும் கொஞ்சம் chubby சைடு தான்..... ஹி, ஹி, ஹி....) 
" இருந்தாலும் அப்பா, நான் ட்ரை பண்ணுவேன்."
 
"ஏலே,  ஒல்லியாய் இருக்கிறதோ குண்டா இருக்கிறதோ முக்கியம் இல்லை. உடம்புல நோய் கீய் இல்லாம இருக்குதா என்று பார்ப்பதுதான் முக்கியம்."
"போங்கப்பா ...... நானே வீட்டுல fry பண்ணிக்கிட்டு இருக்கிற கோழி வாசனையை மோப்பம் மட்டும் பிடிச்சிக்கிட்டு,  கடுப்புல இருக்கேன்....."
 
அன்னைக்கு எங்க அப்பா சொன்னது எனக்கு புரியல.  ஒரு வேலை விஷயமாக,  சமீபத்தில் மெடிக்கல் செக் அப் செய்ய வேண்டியது வந்தது.  அதில் cholesterol டெஸ்ட்ம்  எடுத்தார்கள்.   எல்லாத்தையும் இப்போ பிரிச்சு கட்டி ஒரு வெட்டு வெட்டுற எனக்கு,  நார்மல் என்று ரிசல்ட்  வந்து விட்டது. (சரி...சரி..... கொழுப்பு, வெட்டி பேச்சில் மட்டும் தான் போல.... )  ஆனால், என்னுடைய தோழிக்கு அந்த கொடுப்பினை இல்லை. 
 
cholesterol அதிகம் இருந்த அவளிடம், டாக்டர்: " நீங்க ஏற்கனவே  வெயிட் குறைவுதான்.  ஆனாலும், உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாறுதல் வேண்டும் என்று நினைக்கிறேன்.  ரெட் மீட் (red meat) சாப்பிடுவதை விட்டுடுங்க."
"டாக்டர்,  நான் முட்டை கூட சாப்பிடாத வெஜிடரியன். "
"உடற்பயிற்சி செய்வீங்களா?"
"தினமும் அரை மணி நேரம் வாக்கிங் போவேன்." 
"பழங்கள் காய் கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்."
"salad - பழங்கள் தான் பொதுவாக இரவு நேர உணவாக சாப்பிடுவேன்."
"lunch?"
"சாதம்,  பருப்பு, காய் என்று......"
"ஹாங்...... உங்களுக்கு வெள்ளை சாதம் ஆகாது என்று நினைக்கிறேன்.  இனி,  பார்லி,  சோயா,  ராகி, ஓட்ஸ் என்று சாப்பிடுங்க. உங்களுக்கு cholesterol problem - hereditary  (பரம்பரை) என்று நினைக்கிறேன். அதான், நீங்க எவ்வளவு கவனமாக டயட் இருந்தாலும் உங்களுக்கு cholesterol அளவு அதிகம் வந்து விட்டது."
"ஞே.......!!!!"


வாழ்க்கையே வேடிக்கையானதுதான்.  அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை.  ஆரோக்கியத்துக்காக டயட் இருக்க வேண்டியதுதான். வேற வழி இல்லை. அழகுக்காக??????   ம்ம்ம்ம்..........!!!   "Fair and lovely" மாதிரி "ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா?  கிடைச்சா சொல்லுங்க.... முதல் tube எனக்குத்தான். ஹி, ஹி, ஹி, .....

படங்கள் :  நன்றி கூகுள் லேடி.


119 comments:

test said...

வணக்கம்! :-)

அஞ்சா சிங்கம் said...

எனக்கு முன் ஒருவன் .......

Unknown said...

நச் பதிவு சகோ...இந்த டயட்டு சொல்றவங்க தொல்ல தாங்கல....
உண்மைதானுங்க!

test said...

டயட் பற்றிய உங்கள் விளக்கம் அருமை! இதுவரை நான் கேள்விப்படாதது! :-)

arasan said...

வணக்கம் மேடம் ..
பகிர்வுக்கு நன்றி ..
தலைப்பே கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு ...
செய்திகளுக்கு நன்றி ..

test said...

படத்துல இருக்கிறது கேசரியா? ஏதோ Fry பண்ண ஐட்டம் மாதிரி இருந்துச்சு!
ஆமா, நீங்க பண்ணதா? :-)

Chitra said...

இல்லைங்க, "Tasty Appetite" Jay செய்தது. :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்லா சொன்னீங்க சித்ரா, இந்த டயட் இருக்கிறவங்க கொசுத்தொல்லை நிஜமாவே தாங்க முடியல! படங்களும் அழகா இருக்கு.

பாலா said...

பயந்துட்டேன், எங்க நீங்களும் சமையல் குறிப்பு எழுதீடீங்களோன்னு :)

அது சரி.. கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டீவீ நீயா நானா ல இந்த டாப்பிக் பத்தி பேசினாங்க. டயட்ல இருக்குரவங்க எல்லாம் ஏதோ சபர்மதி ஆசிரமத்தில இருந்து வந்தவங்க மாறி இருந்தாங்க... மனம் போல் சாப்பிடுபவர்கள் பக்கம் ஏக குதூகலமாய் காணப்பட்டார்கள்.

கலோரி கணக்கெல்லாம் பாக்குறதுக்கு முன்னாடி கொஞ்ச வியாதி தான் இருந்தது... கலோரி கணக்கு பாக்க ஆரம்பிச்ச உடனே வியாதிகளும் கணக்கு வழக்கில்லாம வர ஆரம்பிச்சாச்சு...

சௌந்தர் said...

இந்த டயட் எல்லாம் தேவை இல்லாத ஒண்ணு என் பிரெண்ட்ஸ் யாராவது டயட் இருக்க போறான் சொன்னா நான் நல்லா திட்டுவேன் :)

சிங்கக்குட்டி said...

என்ன ஒரு வியப்பு சித்ரா பகுதியில் சமையல் குறிப்பா? என்று வந்தேன் :-)

//ரவா கேசரியில் என்ன பக்குவம் வேண்டி கிடக்கு// படித்தவுடன்தான் நிம்மதி.

தமிழ் உதயம் said...

ஆரம்பத்திலே இருந்து எதுலயும் அளவை கடைபிடித்து வந்தா - டயட்ங்கிற வார்ததைக்கே வேலை இல்லை.

பொன் மாலை பொழுது said...

படதைம் பார்த்துவிட்டு வேகமாக வந்தால் இதென்ன சுக்கு கஷாயம் ? டயட் எல்லம் ரொம்ப ஹம்பக் சித்ரா. ஆனால் நாம் நமக்கே சில வரைமுரைகளுடன் இருந்தாலே போதும். அந்த awareness இருந்தாலே போதும்.

பொன் மாலை பொழுது said...

ஆமாம், அடுத்தவாரம் பிறந்தநாள் வருகிறதே என்ன ஸ்வீட் ஸ்பெஷல். ??
ஆளுக்கு ஒரு கடலை மிட்டாய்? ----டயட்-----

எல் கே said...

பொதுவா இரவு நேரத்தில் அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல் வேண்டும். நான் என்ன சாப்பிட்டாலும் உடம்பு ஏற மாட்டேங்குது அதுக்கு என்ன பண்ணலாம் சித்ரா ?

Chitra said...

அடுத்த வாரம் இல்லை. இன்னும், இரண்டு நாட்களில். கேக் ல இருந்து எல்லாம் உண்டு. :-)

Chitra said...

எல் கே, இரவு நேரத்தில் அரிசி சம்பந்தப்பட்ட உணவு சாப்பிட்டு பாருங்க... அப்போ உங்களுக்கு வெயிட் ஏறலாமோ என்னவோ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Prabu M said...

வழக்கம்போல் செம பதிவு அக்கா.... ஆனால் தலைப்பையும் படத்தையும் பார்த்து " நான் எங்கே இருக்கேன்"னு ஒரு நிமிஷம் குழம்பிட்டேன் :-)

வெல்.... டயட்-டை வலியுறுத்தும் நண்பர்கள் மிகவும் நல்லவர்கள்...... நான் அவர்களை ஒருபோதும் விட்டுவிலகிப் போனதில்லை... அந்த அற்புதமான மனிதர்களை அழைத்துக்கொண்டுதான் எப்போதுமே ஹோட்டலுக்குப் போவேன்.... ரெண்டு இட்லி ஒரு எண்ணெய் இல்லாத (?) வடையை அவங்களுக்கு ஆர்டர் பண்ணிட்டு நம்ம ஃபுல் கட்டு கட்டுற சுகம் இருக்கே!!!! ஆஹா.... ட்ரை பண்ணிப் பாருங்க....... இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா நம்மள பாத்து அவங்களுடைய வய்ற்றெரிச்சல்ல எவ்வளவு சாப்பிட்டாலும் நம்ம உடம்புல அவங்க அடிக்கடி உபயோகிக்குற வார்த்தையான "Bad Fat" சேராது!!! :-)))

இனிமேலாவது டயட் நண்பர்களை ஒதுக்காதீங்க அவங்களோட பழகுறதாலயோ ஒரே தட்டுல சாப்பிடுறதாலயோ அவங்களுடைய மனநோய் நமக்குப் பரவுறதில்ல‌.... அவங்களையும் அரவணைச்சு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க!!!

சென்னை பித்தன் said...

//"நானும், ஒரு வாரமா இலை தழைனு மாடு மாதிரி சாப்பிடாத குறையா டயட்ல இருக்கேன். இன்னும் கழனி பானையை மட்டும் தான் தேடி போகல.//
சிரிப்பை அடக்க முடியவில்லை! சூப்பர் சித்ரா!

அமுதா கிருஷ்ணா said...

டயட்டா அப்படின்னா?

CS. Mohan Kumar said...

பொண்ணுங்க எப்பவுமே அப்பா செல்லமா தான் இருக்காங்க

Asiya Omar said...

சூப்பர் காமெடி சித்ரா,நொறுங்க திண்ணால் நூறு வருஷம்.அப்ப நீங்க நான் எல்லாம் நூறு வருஷம் கன்ஃபர்ம்ட்..கொஞ்சம் குட் கொலஸ்ட்ரால் இருக்கனுமே.அப்பா சொன்னது தான் சரின்னு மனசை தேத்திப்போம்.

இராஜராஜேஸ்வரி said...

ஊரு உலகத்துல இந்த டயட் இருக்கிறவங்க தொல்லை தாங்க முடியல. அவங்க இருக்கட்டும். வேண்டாங்கல. அதற்காக, ஒழுங்கா - நல்லா சாப்பிடுறவங்க எல்லாம் ஏதோ வாழ்க்கையில் தப்பு பண்றவங்க மாதிரி ஒரு பில்ட் அப் கொடுக்கிறாங்க பாருங்க...... அந்த கொசுக்கடி தொல்லை, தாங்க முடியல.//

ரொம்ப டயட் சொல்லியே நோகவைப்பார்கள்.

ரேவா said...

சகோ எல்லாரையும் மாதிரி நானும் கொஞ்சம் கொழம்பிட்டேன்...என்னடா வெட்டிப் பேச்சுல சமையல் அஹ னு? வந்து பாத்த சூப்பர் போங்க....டயட் டயட் னு எல்லாபக்கமும் ஒரே வெட்டி பேச்சு தான் போங்க... ஆனா கொஞ்சம் வெட்டி பேச்சுல வழக்கம் போல உங்கள் ஸ்டைல்....ஹி ஹி... "Fair and lovely" மாதிரி "ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா? கிடைச்சா சொல்லுங்க.... முதல் tube எனக்குத்தான். ஹி, ஹி, ஹி, ..... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

Jaleela Kamal said...

என்னாடா இது ஐ ஒரு வேலை பூசனிக்கா கேசரியா இருக்குமோன்னு வந்தேன்
சிதரா ரெசிபியும் செய்து பார்க்கலாமே
ந்னுதேன்

Kurinji said...

//"ஏலே, ஒல்லியாய் இருக்கிறதோ குண்டா இருக்கிறதோ முக்கியம் இல்லை. உடம்புல நோய் கீய் இல்லாம இருக்குதா என்று பார்ப்பதுதான் முக்கியம்."//

Really true.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் டயட்ல்ல இருக்கேங்க...

காலையில் 4 இட்லி
னாலையிலே 2 பூரி
காலையிலே 1 பொங்கல்
காலையிலே 2 வடை
காலையிலே கொஞ்சம் வேற ஏதாவது...

இதற்கு மேல் நான் காலையிலே சாப்பிடறது இல்லை....

போங்க மதியம், இரவு பத்தியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்..
நீங்க கண்ணு வச்சிடுவிங்க...

எப்பூடி..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உடலின் ஆரோக்கியம் குறையும் போது டயட் அவசியம் தேவைப்படும். நோய் இல்லாத வரை சரி. சிலருக்கு உண்டால்தான் நோய். சிலருக்கு கண்டாலே வந்து விடுகிறதே.

Anonymous said...

டயட் பற்றிய நல்லதொரு தகவல்.
பகிர்வுக்கு நன்றி சித்ரா.

Anonymous said...

எதிலேயும் அளவோட இருந்தால் நல்லது தான். வாய்க்கு ருசியாக சாப்பிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் ஓடியாடி வேலை/உடல்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாக இருக்கும். சேப்பாக இருக்கறதுக்காக அல்லாவிடினும் ஆரோக்கியமாக இருக்க உதவும். பசிக்கு சாப்பிடாம இருக்கறவங்க வாயில இருந்து ஒரு நாத்தம் வரும் பாருங்க. ஒரு ஐஞ்சு மீட்டருக்கு கிட்ட போகவே முடியாது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த டயட்ல் இருக்கறதுன்னு பாலன்ஸ் டயட்டுன்னு அர்த்தம். அதை பட்டினி இருப்பதுன்னு மாத்தினவங்களுக்கு மூஞ்சில ஓங்கி எல்லோரும் ஒரு குத்து விடலாம். ஹி ஹி.

Jayanthy Kumaran said...

Nice post Chitra..enjoyed it..:)
Tasty Appetite

MANO நாஞ்சில் மனோ said...

//ஏலே, ஒல்லியாய் இருக்கிறதோ குண்டா இருக்கிறதோ முக்கியம் இல்லை. உடம்புல நோய் கீய் இல்லாம இருக்குதா என்று பார்ப்பதுதான் முக்கியம்."//

கரெக்ட்டு....

MANO நாஞ்சில் மனோ said...

//வாழ்க்கையே வேடிக்கையானதுதான். அதில் டயட் வேற இருந்து காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இப்போ இல்லை. //

ஹா ஹா ஹா ஹா சரி சரி...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழகத்தின் ஆட்சி மாற்றமே உங்க பிறந்தநாள் அன்றுதான்...!!!
ஹே ஹே ஹே ஹே ஹே....

சிநேகிதன் அக்பர் said...

செம காமெடியா எழுதியிருக்கிங்க.

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னையெல்லாம் பார்த்தா பொறந்ததிலிருந்தே டயட்ல இருக்கிறவன் மாதிரிதான் தோணும் :) (இப்போ பரவாயில்லை)

Anudeepa Kadiresan said...

super title and superb recipe...I don't know can i cut into cubes if i try to make this...

ஹேமா said...

நீங்க சொன்னமாதிரி குண்டாயிருந்தா என்ன ஒல்லியா இருந்தா என்ன நோய் இல்லாமல் இருந்தாலே போதும்.
எல்லாம் சாப்பிடணும்...
ஆனா அளவோட !

நட்புடன் ஜமால் said...

but diet is really good

diet in a correct way

:)

GEETHA ACHAL said...

கரக்டாக சொன்னீங்க சித்ரா...அது ஒவ்வொருத்தர் உடல் வாகு...

குண்டாக இருந்தால், நோய் இல்லாமல் இருந்தால் நல்லது...அதற்காக ஒல்லியாக இருப்ப்வர்கள் எல்லாம் helathy யாக இருக்காங்க என்று நினைக்க கூடாது...

டயடினை பற்றி நல்லா எழுதி இருக்கின்றிங்க...

சுசி said...

//" ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு, புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி? நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?"//
ஹிஹிஹி.. எங்க குடும்பமும் அந்த லிஸ்ட் தான்..
அப்பா கரெக்டா சொல்லி இருக்கார்..

//அழகுக்காக??????//
எதுக்கு இப்டி கஷ்டப்படறாங்கன்னு பரிதாபமா இருக்கும்.. :)

//"ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா? கிடைச்சா சொல்லுங்க.... முதல் tube எனக்குத்தான்."ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா? கிடைச்சா சொல்லுங்க.... முதல் tube எனக்குத்தான்.//
ஹஹாஹா.. எனக்கும் ஒரு டியூப் :)

சிராஜ் said...

:-)

G.M Balasubramaniam said...

எலே, குண்டா இருக்கற்தோ ஒல்லியா இருக்கறதோ முக்கியமில்ல. நோய் கீய் இல்லாம இருக்கறதுதான் முக்கியம். அப்பா சொன்னதுதான் சரி.இருந்தாலும் உடலுக்கேற்ற பருமன் அழகுதான் சித்ரா.
நோயில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,சுவர் இருந்தால்தான் சித்திரம்.

Unknown said...

ஆஹா உங்கள் வலையில் சமையல் குறிப்பானு ஆச்சிரியமாக வந்தேன்...!உங்களின் நகைச்சுவை உணர்வு ரசிக்கும் படி இருக்கு...// "பூசணிக்காய் ஆரோக்கியமும் புடலங்காய் கேசரியும்"// ருசி நன்றாக இருக்கு... tube கிடைத்தால் இங்கு ஒன்னு அனுப்புங்க...

Gayathri Kumar said...

Very interesting post! Naanum dietla irundhudhan paarkindren, slim aagave mudivadillai. So dieta vittutten..

சுந்தரா said...

வழக்கம்போலவே கலகலப்பான பதிவு சித்ரா. ஆனா, தலைப்பு சூப்பர் :)

தான் டயட்ல இருக்கிற வருத்தத்தை அடுத்தவங்களுக்கு அட்வைஸ்பண்ணியே தீர்த்துக்கிறாங்க சிலர்.

goma said...

ஒல்லி அண்ட் லவ்லி ஒரே ஒரு ட்யூப் கைவசம் இருக்கு .......எப்படி அனுப்பலாம்...

Lifewithspices said...

wonderful nakkals on diet...

கோமதி அரசு said...

ஒல்லியாய் இருக்கிறதோ குண்டா இருக்கிறதோ முக்கியம் இல்லை. உடம்புல நோய் கீய் இல்லாம இருக்குதா என்று பார்ப்பதுதான் முக்கியம்."//

என்னோட கருத்தும் அதுதான் சித்ரா. அவர் அவர் உடலுக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதை சாப்பிட வேண்டும்.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு சித்ரா, எனக்கும் அந்த டியூப் கிடைத்தா கொடுங்க...

Malar Gandhi said...

I have done done rigorous dieting and exercise when I was in sports! However, too much of control will lead to over-indulgence one day. Its always safe to enjoy the food that we like (portion control)and exercise a lot! The serious culprit is lack of activity these days!

VELU.G said...

யப்பா ஒரே sweet ஐட்டமா கலக்கிட்டீங்க

உங்கள ஒல்லி ஆக்கற "ஒல்லி and lovely" எனக்கு தெரிஞ்சு இல்லைங்க மேடம்

ராமலக்ஷ்மி said...

ஆரோக்கியத்துக்காக டயட். ரைட். சிலவற்றை ஒதுக்கலாம். சிலவற்றைத் தவிர்க்கலாம். எல்லாவற்றையும் இல்லை:)! கூகுள் லேடி கொடுத்த இலைதழை கேரட் டயட் படம் சூப்பரா இருக்கு:)!

தெய்வசுகந்தி said...

சித்ரா, நானும் டயட் எல்லாம் முயற்சி பண்ணி எதுவும் நடக்காம இப்போ எல்லாத்தையும் விட்டாச்சு. நிம்மதியா சாப்பிட்டு இருக்கிறேன்.

@LK, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் வீட்லயே ஒரு ஆளை வச்சு பொறாமைப்பட்டுட்டு இருக்கேன்.

Chitra said...

Hello chitra siss,

(உங்களின் ப்ளாகில் கமெண்ட்ஸ் போடமுடியல, என் சார்பாக இதை அதில் எடுத்து போட்டு விடுங்கள்)

// ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு, புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி? நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?" //

அப்பா சொன்னது அழகான செய்தியா இருக்கே டீச்சர்.

//வாய்க்கு ருசியாக என்னவெல்லாம் இருக்குதோ, அதெல்லாம் கொழுப்பு சத்துக்கு ஒட்டி பிறந்த தம்பின்னு நினைச்சு சாப்பிடாம ஒதுக்கி வச்சுடணும். ஆடு கோழியை தம்மு கட்டி அதுவரைக்கும் சாப்பிட்டுகிட்டு இருந்ததை விட்டுட்டு, பரிகாரமாக - ஆடு கோழிங்க சாப்பிடுகிற ஐட்டம் எல்லாம் அப்படியே நீங்க மேயணும். சாரி, சாப்பிடணும்.//

ஆஹா ஆஹா இதை நானும் வழிமொழிகிறேன்.
அப்புறம் பேச்சு பராக்கில் சொல்ல வந்த செய்திய மறந்துடப் போறேன். வெள்ளிக் கிழமை பர்த்டேக்கு இது தான் ஸ்வீட்டா? இல்ல வேற ஸ்வீட்டோட வேறு பதிவா? (இருந்தாலும் அட்வான்ஸ் HAPPY BIRTHDAY :-)))

அன்புடன் எம் அப்துல் காதர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//" ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு, புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி? நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?" //

ஆஹா, அப்போ நீங்களும் நம்ம சொந்தக்காரங்க தான். அதானே பார்த்தேன்.

Vijiskitchencreations said...

நல்ல நகைசுவையோடு நல்ல பதிவு.
டயடை பற்றி நல்லா எழுதியிருக்கிங்க.

mightymaverick said...

அதென்னமோ தெரியல... அல்வா ஊருகாரங்கல்லாம் கேசரி பிரியர்களாய் இருக்கீங்க (நம்ம அம்மாஞ்சி கூட கேசரி பிரியர் தான்)... பாத்துங்க... அங்கே பக்கத்துல தான் இருக்கார்... என்னிக்காவது குழந்தைங்களுக்கு கேசரி கிண்டி வச்சிருந்து இவர் வந்தா கண்ணுலேயே காட்டாதீங்க...

எல்லோரும் Diet என்பதை தப்பாகத்தான் இன்னும் புரிஞ்சிக்கிட்டு இருக்காங்க... உண்மையில சொல்லனும்னா, சரியான சத்து உள்ள சாப்பாட்டை சரியான நேரத்துக்கு சாப்புடுறது தான் diet. நானும் ஒரு காலத்துல சாப்பாடு சரியா சாப்பிடாம இருந்து அல்சர் வந்தது தான் மிச்சம்... அன்னிக்கு முடிவெடுத்தேன்... முதல் வேலையா அல்சரை சரி பண்ணுறது... அப்புறம் சாப்பாட்டை நல்லா வெளுத்து வாங்கிட்டு, சரியான அளவு உடற்பயிற்சி செய்யிறது... இதோ, இன்னிக்கும் நான் நினைச்ச எடையை மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருக்கேன்... விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?

ஆடு மாடு கோழி சாப்புடுறதை எல்லாம் அதுக்கு கொடுக்காமல் நாம சாப்பிட்டா, ஒரு கட்டத்துல அதுங்க எல்லாம் மாமிச பட்சியாக மாறி நம்மை சாப்பிட ஆரம்பிச்சா என்ன ஆகுறது?

Chitra said...

ஆடு மாடு கோழி சாப்புடுறதை எல்லாம் அதுக்கு கொடுக்காமல் நாம சாப்பிட்டா, ஒரு கட்டத்துல அதுங்க எல்லாம் மாமிச பட்சியாக மாறி நம்மை சாப்பிட ஆரம்பிச்சா என்ன ஆகுறது?


...... நியாயமான கேள்விங்கோ..... உங்க சமூக அக்கறை கண்டு "நெகிழ்ந்தேன். " ...ஹா,ஹா,ஹா,ஹா....

நெல்லி. மூர்த்தி said...

ஊஹூம்.... என்னால் இந்தக் கருத்துக்கு கண்ணை மூடிகிட்டு "ஓ" போட முடியலை! ஒரே கம்பெனி, ஒரே வருடத்தில் உற்பத்தியான ஒரே மாதிரியான மகிழ்வுந்துகளில் சில வண்டி லிட்டருக்கு 12 கி.மீ தூரம் செல்லும். மற்றவை 7கி.மீ கூட செல்லாது. இயந்திரங்களைப் போலவே ஒவ்வொரு மனிதனுக்கும் வளர்சிதை மாற்றம் (METABOLISM)வேறுபடுகின்றது. ஆதலால் தான் சைவமே உண்பவர்களுக்கும் கொழுப்பு கூடுகின்றது. அசைவமாக வெட்டுபவர்களுக்கு இயல்பாய் இருக்கின்றது. 'டயட்' என்ற பெயரில் அடிக்கும் அலப்பறைகளில் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆனால் அதே நேரத்தில் உணவினை தத்தமது உடல்நிலைக்கேற்ப ஒழுங்குக் நிலைக்கு கொண்டுவராமல் போனால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை என் அனுபவத்தில் கண்கூடாகக் காண்கின்றேன்.

உண்ணும் உணவில் கடும் பத்தியம் என்றெல்லாம் தன்னையே வருத்திக் கொள்ளாமல், கவனமுடன் உண்டு "நோயற்ற வாழ்வுடன் நோகாமல் செல்வம்" பெறுவோம்!

Chitra said...

அதேதாங்க..... moderation என்று இல்லாமல், கண்ணை மூடிக் கொண்டு போகும் extreme diet பற்றித் தான் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆரோக்கியமாக உண்கிறோமா என்று பார்ப்பதை விட்டு விட்டு, crash diet இருப்பதில் ஒரு பலனும் இல்லை.

ராஜ நடராஜன் said...

Welcome back to blog!

Anonymous said...

எங்க வீட்ல அம்மா கொஞ்சம் அதிகமாகவே காய்கறி சாப்பிடுவாங்க. ஆடுமாடுகள நிம்மதியா சாப்பிடவிடறாளா உங்க அம்மான்னு அப்பா கிண்டல் பண்ணுவார்.

மலர் காந்தி அவர்கள் சொல்லுவதை நான் வழிமொழிகிறேன்.

நசரேயன் said...

//ஒரு வேலை விஷயமாக, சமீபத்தில் மெடிக்கல் செக் அப் செய்ய வேண்டியது வந்தது.//

டீச்சர் உங்களுக்கு வேலை கொடுக்கிறவங்க நிலைமை?

அம்பாளடியாள் said...

கொஞ்சம் அரட்டை என்று கொடுத்துவிட்டு
நல்ல விசயங்களை அழகாக எளிமையாக
பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துகள் சகோதரி.....

Avargal Unmaigal said...

///ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு, புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி? நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?" //////

வாய் விட்டு சிரிக்க வைத்த வரிகள்/

பிரதீபா said...

"அப்ப நான் எப்படித் தான் கொஞ்சமாச்சும் உடம்பு குறையிறது ?" - அப்பாவி அக்கா தான் கேக்கச் சொன்னாங்க. :)

ரிஷபன் said...

வளைச்சு கட்டி சாப்பிடற எங்க சித்தி படு ஒல்லி. சுமாரா சாப்பிடற எங்கம்மா குண்டு..
இளைக்கறதும் குண்டாவறதும் சினிமாக்காரங்களுக்கு மட்டும்தான் சாத்தியம் போலிருக்கு!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

டயட் பற்றிய விளக்கம் அருமை!

துளசி கோபால் said...

ஏங்க சாப்பிடன்னு தனியா ஒரு பிறவி எடுத்து வரமுடியுமா?

ஆசைப்பட்டதையும் வாய்க்கு ருசியா இருப்பதையும் ஏன் தள்ளனும்? நானும் எதையும் தள்ளமாட்டேன். மாடரேஷன்ன்னு ஒன்னு இருக்குல்லே:-)

டயட்லே இருக்கும் பேர்வழிகளின் கண்ணுலே தெரியும் பசியைப் பார்த்துருக்கீங்களா?

சசிகுமார் said...

பதிவு அருமை

நிரூபன் said...

மனிதர்கள் எப்படி டயட்டை மெயிண்டெயின் பண்ண வேண்டும் என்பதை அழகான காமெடிக் கருத்தாக விலங்குகளின் உணவுப் பழக்கத்துடன் ஒப்பிட்டி விளக்கியுள்ளீர்கள்.

ஓயாமல் மில்லில் மா அரைப்பது போல அனைத்து விதமான உணவுகளையும் உண்ணும் மனிதர்களையும் விளக்க நம்ம ஊரில் ஒரு பழ மொழி சொல்வார்கள்.

‘கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்
கண்டதைத் தின்றவன் வண்டியன் ஆவான்!

நாடோடி said...

ட‌ய‌ட்டு என்று சொல்லி ந‌ம்மையும் சாப்பிட‌விடாம‌ல் ப‌ண்ணிவிடுவார்க‌ள்...

ந‌கைச்சுவையும் ரெம்பா அழ‌கா சொல்லியிருக்கீங்க‌... :)

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா அப்பாவுடனான உங்கள் உரையாடல் அழகு.

>>"ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா? கிடைச்சா சொல்லுங்க.... முதல் tube எனக்குத்தான். ஹி, ஹி, ஹி, .

இது செம

Padhu Sankar said...

Very well written .Btw Arisi Paruppu sadam tastes totally different from Ven Pongal .Do try that simple recipe and enjoy.Have a good day

தமிழ்வாசி பிரகாஷ் said...

டயட்டா? போதும்....போதும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரவா கேசரில ஆரம்பிச்சு ராகி/கேப்பை கூழ்ல வந்து நின்னது சூப்பர்...ஹா ஹா...I curse health geeks but I envy them too...:))

//"ஒல்லி and lovely " அழகு கிரீம் எங்கேயாவது கிடைக்குமா?//
ஹா ஹா ஹா...செம... ஆனா நல்ல மனசு இருந்தா தான் குண்டா இருக்க முடியும் யூஸ் பண்ணிக்கலாம் யு சி...:)))

Unknown said...

//" ஏலே, பூசணிக்காய்க்கு விதையை போட்டு விட்டு, புடலங்காயை எதிர்பார்த்தால் எப்படி? நம்ம குடும்பத்தில் பிறந்துட்டு ஒல்லியாய் இருக்கணும்னு நினைச்சா எப்படி?" //

இது தான் கம்பெனி சீக்ரெட்டா? இப்படி சபையில சொல்லிட்டீங்களே?

மோகன்ஜி said...

டயட்டை விட, உடற்பயிற்சி தான் சிறந்தது. பிடிச்சதை சாப்பிடுங்க.. வாக்கிங்,ஜிம்முன்னு பட்டயகிளப்புங்க !

சந்திர வம்சம் said...

டயட்டாவது என்னவெனில் விரும்பியதை மூச்சுமுட்ட தின்னுபுட்டு பிறகு மருத்துவர் கூறியபடி மாத்திரை சாப்பிட வேண்டும்.HA!HA!HA!

Yaathoramani.blogspot.com said...

பூசனிக்காய் விதையை போட்டுவிட்டு
புடலங்காய் எதிர்பார்த்தால் எப்படி...
இடத்துக்கு தகுந்தாற்போலவும் இயல்பாகவும்
இருந்த வரிகள் படித்து ரசித்தேன்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

சித்ரா பதிவு சூப்பர். குண்டாக இருப்பவர்கள்மனது வெள்ளையாக இருக்குமாம் தெரியுமோ.

Thenammai Lakshmanan said...

பரிகாரமாக - ஆடு கோழிங்க சாப்பிடுகிற ஐட்டம் எல்லாம் அப்படியே நீங்க மேயணும்.//


சரியா சொன்னார் அப்பா.. பூசணி வி்தை போட்டு புடலங்காய் காய்க்க முடியுமா.. நம்மள நாமே சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான்லே..:))

mamtc said...

So, u cook as well. Is there anything u cant do?

velanblogger said...

இனிய பிறந்தநாள்(13.05.2011)நல்வாழத்துக்கள் சகோதரி....
http://vazthalamvanga.blogspot.com/2011/05/blog-post_11.html

வாழ்க வளமுடன்.
வேலன்.

Angel said...

Happy Birthday to you Chitra

Unknown said...

Happy birthday chitra akka..ungalukga oru post potu eruken..

sorry for belated wishes..

have a beautiful day..

belated happy birthday wishes to you..

ஸ்ரீராம். said...

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு என்று தனியாக சுவை மாறாமல் இருக்கும் என்று ஸ்வீட் ஸ்டால்களில் விளம்பரம் செய்து விற்கிறார்கள். மதுரையில் காந்தி மியூசியத்தில் ஒரு குழு இருந்தது. பச்சைக் காய்கறிகள் பெருமையைச் சொல்லும் அந்தக் குழு அழைப்பவர்கள் வீட்டுக்கு வந்து ஒரு நாள் சமையலாக எப்படி தீயில் வேக வைக்காத உணவை சமைப்பது என்று டெமோ காட்டினார்கள்.
பிறந்த நாள் வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்புடன் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குணசேகரன்... said...

"ராகி/கேப்பை கூழ் மாதிரி சொல்றீங்க"--its very nice ...

செங்கோவி said...

பிறந்த நாள் வாழ்த்துகள். (மறந்துட்டேன்க்கா..நான் பவுர்ணமி அன்னிக்கே அட்வான்ஸா சொல்லிட்டேன்,ஆமா!)

vinu said...

back with banggggggggg sister?

ம.தி.சுதா said...

////எனக்கு கேசரி ரொம்ப பிடிக்கும். முன்பு அடிக்கடி சாப்பிடுவேன். உங்க பக்குவம் சொல்லுங்க./////

அவரு கதையும் சரியா.. இனி கடையில கூட கேசரீன்னா சித்திரா கேசாரியா என பெயர் சொல்லித் தான் கேட்பாரு... ஹ..ஹ..

Muruganandan M.K. said...

சுவையாக எழுதியிருக்கறீர்கள். ஆனால் தேவையற்று வாயைக் கொடுத்து எல்லோரிடமும் வாங்கிக்கட்டப் போகிறேனோ தெரியவில்லை. கொலஸ்டரோலுக்கு உணவு தவிர வேறு காரணங்களும் உண்டு. இவற்றின் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75% மும், உணவு சார்ந்த காரணிகள் 25% ஆகும். ஆனால் தனி ஒரு அலகாகப் பார்க்கும்போது ஏனைய எந்த ஒரு அலகும் உணவு சார்ந்த காரணிகளான 25%யை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளாவன

1. பரம்பரை 15%
2 அதிகரித்த எடை 12%
3 ஹோர்மோன்களும், நொதியங்களும் 8%
4 உயர் இரத்த அழுத்தம் 8%
5 அதிக மது பாவனை 2%
6 மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8%
7 நீரிழிவு 7%
8 உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6%
9 புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6%
10 பால், வயது, மருந்துகள், ஏனைய காரணிகள் 5% இது பலரது தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்தும் என நம்புகிறேன். டயற்றிங் என்ற சொல்லே தவறு. தவிர்ப்பது தேவையல்ல. பலவற்றையும் அளவோடு சமச்சீராக உண்டால் சரி.

Muruganandan M.K. said...

நெல்லி. மூர்த்தி கருத்துகளுடன் உடன்படுகிறேன்.

Chitra said...

தெளிவான கருத்துக்களையும் விளக்கங்களையும் தந்தமைக்கு, நன்றி டாக்டர்.

சக்தி கல்வி மையம் said...

யக்கோ.. போன வாரம் வலைச்சரம் பிசிக்கா ... அத்தான் வரமுல்ல..
எப்புடி மெட்ராஸ்(சென்னை) தமிழு..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனசுலதான் ஆரோக்கியம் இருக்கு சித்ரா. அருமையான சுவாரஸ்யமான பதிவு.

உங்க அப்பா மா.பொ.ராஜாமணின்னு இப்போத்தான் பார்த்தேன். அப்போல்லாம் திருநெல்வேலி மாவட்டத்துல கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை மன்னன். பல கூட்டங்களை நேரில் கேட்டிருக்கிறேன்.கடந்த காலம் மனதில் காற்றாய்த் திரும்பியது. அது சரி. அதான் உங்க எழுத்திலயும் அந்த ஜாடை தெரியுது.

பிறந்த நாள் வாழ்த்துக்களும் சித்ரா.

நிழற்குடை said...

//ஊரு உலகத்துல இந்த டயட் இருக்கிறவங்க தொல்லை தாங்க முடியல. //

சரியா சொன்னீங்க மேடம்.

Deepa said...

:))))

Reading your blog is such a stress buster Chitra. Making a point to visit here regularly.

போளூர் தயாநிதி said...

உங்களின் குறிப்புகள் பாராட்டத்தக்கன பண்டித தனமான கருத்துகளை பாமரத்தனமாக சொல்லுவது தனிக்கலை உளம் கனிந்த பாராட்டுகள்.

Murugeswari Rajavel said...

பூசணிக்கு விதை போட்டு புடலங்காயா வரும்?
வாசித்த என் பெண் கிண்டலாக எனைப் பார்த்து சிரிக்கிறாள்.

NRIGirl said...

Loved it! Laughed a lot!! Thank you!

NRIGirl said...

Chitra! Did you notice one thing?! I am your 700th follower!! A great mile stone - for me :))) sorry, you!

Congrats and keep writing!

~ NRIGirl

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அவசரத்துல பொ.ம.ராஜாமனியைத் தவறுதலா மா.பொ.ராஜாமணியாக்கிவிட்டேன். சாரி சித்ரா.

மாலதி said...

டயட் பற்றிய உங்கள் விளக்கம் அருமை! இதுவரை நான் கேள்விப்படாததுசெய்திகளுக்கு நன்றி ..

சிவகுமாரன் said...

நல்ல பதிவு சித்ரா மேடம். எனக்கு சென்ற வருடம் சுகர் வந்துருச்சு, அப்பா கொடுத்த சொத்து. டயட்ல தான் இருக்கேன். ஆனாலும் அடுத்தவங்களை தொந்தரவு செய்யிறதில்லை.

Chitra said...

Thank you everyone for your support!

Special thanks to NRI girl !!! :-)))

மங்குனி அமைச்சர் said...

உள்ளேன் டீச்சர் ........... (ரொம்ப ஆணி மேடம் .......... நீங்களும் பிசியா ?)

Unknown said...

இப்படி டயட்ல இருக்கேன்னு சொல்லிக்கிட்டு நம்ம ஊர்ல சுத்திக்கிட்டு இருக்காங்க.முடியலைங்க உணமையிலேயே.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

!? கோவை சாட்டை ?! said...

அன்பு சகோதரி உங்களை போல எனக்கும் நிறைய பதில் வர நான் என்ன செய்ய வேண்டும்

Chitra said...

எல்லா புகழும் இறைவனுக்கே!


உண்மையில் எனக்கே பதில் தெரிந்தால், அதையே ஒரு பதிவாக போட்டு இருப்பேனே... :-))))

"தாரிஸன் " said...

ம்ம்ம்.... செம காமெடி போங்க....

மனோ சாமிநாதன் said...

"வேற ஒண்ணும் இல்லை. வாய்க்கு ருசியாக என்னவெல்லாம் இருக்குதோ, அதெல்லாம் கொழுப்பு சத்துக்கு ஒட்டி பிறந்த தம்பின்னு நினைச்சு சாப்பிடாம ஒதுக்கி வச்சுடணும். ஆடு கோழியை தம்மு கட்டி அதுவரைக்கும் சாப்பிட்டுகிட்டு இருந்ததை விட்டுட்டு, பரிகாரமாக - ஆடு கோழிங்க சாப்பிடுகிற ஐட்டம் எல்லாம் அப்படியே நீங்க மேயணும். சாரி, சாப்பிடணும். அப்படி "கொத்தி கொத்தி" சாப்பிடும் போது, எப்படியும் வயிறு முட்ட சாப்பிட தோணாது. கால் வயித்துக்கு நிரப்புறதுக்குள்ளேயே, போதும் போதும்னு ஆயிடும். கண்டிப்பா, எப்படியும் வெயிட் குறைஞ்சுடும்"

சிரிப்பு தாங்கவில்லை சித்ரா! நகைச்சுவையாக, மிக அழகாக எழுதி வருவதற்கு அன்பு வாழ்த்துக்கள்!!

Jayanthy Kumaran said...

waiting for your new post..:)

Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

mamtc said...

sometimes I think anorexia as some sort of gift rather than not able to eat anything.
It is not like healthy diet gives you good life span for yourself but it does affect your next generation as well, like your friend maybe she has to blame her parents for their lousy lifestyle which affected her even when she maintained good lifestyle.

VijiParthiban said...

hello akka ,
very well.

VijiParthiban said...

Hello Akka,
very well your diet story.

அனைவருக்கும் அன்பு  said...

படிக்க படிக்க சிரிச்சதில் நோய் கொஞ்சம் குறைஞ்சிதான் போனது தோழி என்னமா காமெடி பண்ணுறீங்க என்னால முடியல .............வாழ்த்துக்கள்