Sunday, May 22, 2011

தம்பிக்கு எந்த ஊருங்கோ?

இந்த வார இறுதியில், கோடை   விடுமுறை ஆரம்பம் ஆகிறது.   

அதற்குள் முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ....
பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. 

பதிவுகள் எழுத வந்து  ஒன்றரை வருடங்கள் ஆகி போச்சு.  ஆனால், எழுதி இருக்கும் பதிவுகள்:   இந்த பதிவோடு சேர்த்து 138 தான் ஆகுது....  அதிலேயும்  நான்கைந்து பதிவுகள்,  லீவு லெட்டர்களே பதிவுகளாய்...... ம்ம்ம்ம்.....    அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் பதிவுலக லீவு வேண்டும்ங்க ..... அநேகமாக இனி ஆகஸ்ட் மாதம் தான் சந்திப்பேன் என்று நினைக்கிறேன்.  இந்த ரேட்ல போச்சுனா, நான் 150 வது பதிவு  போடுவதற்குள்  அடுத்த வருடம் வந்து விடும் போல  ...  ஹா, ஹா, ஹா , ஹா.....

சமீபத்தில்,   இங்கே உள்ள அமெரிக்க நண்பர்கள் சிலருடன் ஒரு சந்திப்பு:    சம்மர் லீவுக்கு எங்கே எங்கே போகிறோம் என்று செய்தி பரிமாற்றம் நடந்து கொண்டு இருந்தது.  நான் முகத்தில் ஒரு பிரகாசத்துடன் :  "இந்த வருடம்,  திருநெல்வேலிக்கு போகிறேன்," என்று சொன்னேன். 

உங்களுக்கு எப்படி என்று எனக்குத் தெரியாது.   ஆனால், எனக்கு:   ஒரு ஊருக்கு போயிட்டு வருவது ஒரு வகை சந்தோசம்.  ஆனால், அந்த ஊருக்கு போய் விட்டு வந்ததை டமாரம் அடித்து சொல்வது இன்னொரு வகை சந்தோசம்.    ஹி ,ஹி , ஹி, ஹி,..... 

ஆனால், எங்க  அமெரிக்க  நண்பர் ஒருவர் அவர்  செல்லப் போகிற இடத்தை எப்படி  டமாரம் அடித்து சொல்ல போகிறார் என்று தெரியல.  எனக்கு அவர் எழுதி காண்பித்ததை நான் இன்னும் சரியாக படித்து முடிக்கவில்லை.  நீங்க முயற்சி செய்ங்க:
அமெரிக்காவில் ,  மாசசூஷட்ஸ்  (Massachusetts ) என்ற மாநிலத்தில் உள்ள ஒரு ஏரி உள்ள ஊருக்கு செல்கிறார்.   விடுமுறையில்,  பொழுது போக்குக்காக (Fishing) மீன் பிடிக்க செல்பவர்கள் அங்கே அதிகம்.  

இருங்க ஒரு நிமிஷம், மூச்சு  வாங்கிக்கிறேன்.  அந்த  ஏரியின் பெயர்:


"Lake Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg"  
அதை  சுருக்கமாக :    Lake Chaubunagungamaug
என்று சொல்வார்களாம்.  இந்த பெயரை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்.  "கட் அண்ட் பேஸ்ட் " செய்தாலே ஏழெட்டு spelling mistake வரும் போல.  எங்கே இருந்து வார்த்தை சுத்தமாக வாசித்து காட்டுறது?  ம்ஹூம்......

 http://en.wikipedia.org/wiki/Lake_Chaubunagungamaug 

அர்த்தம் என்னவென்றால்,  "Englishmen at Manchaug at the Fishing Place at the Boundary" 
எளிதாக வெளியூரு மக்கள் சிலர்,   Webster lake என்று சொல்வாங்க என்றார். 

எனக்கு என்னமோ,   "சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா ....சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா...." என்றுதான்  வாசிக்க வருது.


எங்கள் நெருங்கிய நண்பர்  சேவியர், சில வருடங்களுக்கு முன் ஐரோப்பா டூர் சென்று விட்டு வந்தார்.  அங்கே அவர் சென்ற இடங்களிலேயே எங்கள் கவனத்தை அதிகம் பெற்ற இடமும் படங்களும்:  
Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch  என்ற ஊரில் எடுக்கப்பட்டவை. 
  
"லாலாக்குடோல்டப்பிமா" வுக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். 

உலகத்திலேயே நீண்ட பெயரை கொண்ட ஊரு அதுதான் என்றார்.  அவர் காட்டிய படங்களில், ஒன்று அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகை  படம். 



நாங்கள் சொல்வதை எல்லாம், அமைதியாக கேட்டு கொண்டு இருந்த ஒரு நண்பர் - இவர் பாங்காக் (தாய்லாந்து) இல் இருந்து இங்கே மேற்படிப்புக்காக வந்தவர் - "எங்கள் ஊரான பாங்காக்கின் முழுப்பெயர் என்னவென்று தெரியுமா?  இயற்பெயர் நீளமான பெயர்.  ஆனால், பாங்காக் என்றே அதிகாரப்பூர்வமாக மாறி விட்டது " என்று  ஆங்கிலத்தில் சொன்னார். 
கூகுள் உதவியுடன் அவர் வாசித்து காட்டியது: 


"   Krung Thep Mahanakhon Amon Rattanakosin Mahinthara Yuthaya Mahadilok Phop Noppharat Ratchathani Burirom Udomratchaniwet Mahasathan Amon Phiman Awatan Sathit Sakkathattiya Witsanukam Prasit

வீட்டுக்கு வந்து விக்கிபீடியாவில் செக் செய்து விட்டேன்.  பாலி மற்றும் sanskrit கலந்து உருவாக்கப்பட்ட பெயர் என்று விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. 


அப்படியே,  நண்பர் வட்ட பேச்சு, அமெரிக்காவில் இருக்கும் வேடிக்கையான ஊர் பெயர்கள் பற்றி திரும்பியது.  ஏற்கனவே பல ஊர் பெயர்களை:  


குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். 

வித்தியாசமான ஊர் பெயர்களை நாங்கள்  ஒவ்வொருவரும்  சொல்லி - அதிகம் சிரித்தோம்: 


Tarzan -  Texas

Goose Egg -  Wyoming

Buttermilk -  Arkansas

Coffee City -  Texas

Hot Coffee -  Mississippi

Yum Yum -  Tennessee

Ordinary - Virginia

Dead Women Crossing -  Oklahoma

Sweet Lips - Tennessee

Monkey Run - Missouri

Devils Den -  California

Seven Devils -  North Carolina

Pray  -  Montana

Burnt Factory -  West Virginia

Burnt Tree -  Virginia

Mosquitoville -  Vermont

Spider  -  Kentucky

Why -  Arizona

Whynot  - Mississippi

Big Rat Lake  -  Alaska

நல்லா சிரிங்க..... சிரிச்சிக்கிட்டே இருங்க..... அதற்குள் நான் இங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.  விடுமுறைக்கு போவதற்கு முன், உங்களிடம் எல்லாம் கண்டிப்பாக சொல்லி விட்டுத் தான் போவேன். சரியா?  




 நன்றி:  கூகுளூர் (Google images)  :-)






 

96 comments:

test said...

வணக்கம்!

ஆனந்தி.. said...

இந்தியா வரவேற்கிறது...:(((((

ஆனந்தி.. said...

//"கட் அண்ட் பேஸ்ட் " செய்தாலே ஏழெட்டு spelling mistake வரும் போல.//

:)))))))))))))

test said...

முடியல!!
ஒருவேளை டீ.ஆருக்கு தெரிஞ்சிருக்கலாம்! அவரு போட்ட ஆப்பிரிக்கா மியூசிக் மாதிரியே இருக்கு! யப்பா!!
ஒருவேளை அவரு மூசிக்ல இருந்துதான் ...லேய் அமெரிக்காக்காரன் நம்ம டீ.ஆரைக் காப்பி அடிச்சிட்டாண்டோய்!

ஆனந்தி.. said...

/எனக்கு என்னமோ, "சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா ....சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா...." என்றுதான் வாசிக்க வருது//

எனக்கு ஒமாகா சீயா வாகி யாயா...வாகி யாயா...ன்னு வாசிக்க வருதே..ஐயோ...:)))

ஆனந்தி.. said...

வேலை எல்லாம் முடிச்சுட்டு நம்ம ஊரு வந்து சேருங்க மக்கா...அப்புறம் யக்காவ்...வர வர பதிவை விட லிங்க் அதிகம் உங்கள் போஸ்ட் ஐ அடைச்சு கொள்வதால்..."லிங்க் லிங்கம்மா " என்ற பட்டத்தை வழங்குகிறேன்...:)))

முனைவர் இரா.குணசீலன் said...

/பதிவுகள் எழுத வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி போச்சு. ஆனால், எழுதி இருக்கும் பதிவுகள்: இந்த பதிவோடு சேர்த்து 138 தான் ஆகுது..../

என்றாலும் தாங்கள் பெற்ற நண்பர்களை அளவிட முடியாது!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

"லாலாக்குடோல்டப்பிமா" வுக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். ///

ஹி ஹி ஹி ஹி!!!

Unknown said...

ஹிஹிஹிஹி ஹ்ஹெஹெஹிஹி ஹிஹிஹிஹி
என்ன தான் சிரிக்க வைத்தாலும்,இது நீண்ட இடைவேளை...இடைக்கிடையில் வரவும்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வலையுலக வரலாற்றில் அடிக்கடி லீவு எடுப்பவர் என்ற பெருமை உங்களையே சாரும்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்தியா வரவேற்கிறது...:((((( //////


என்னது இந்தியா வர வேர்க்கிறதா? ஆமா இப்போ ரொம்ப வெயில் அடிக்குதுல்ல!

அதுசரி ஆனந்தி, நம்மளையெல்லாம் மறக்க எப்படி மனசு வந்திச்சு? :(((((((((

எல் கே said...

இவ்ளோ பெரிய குழப்பமான பெயர்களா ?? உங்கள் விடுமுறை மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

//அதுசரி ஆனந்தி, நம்மளையெல்லாம் மறக்க எப்படி மனசு வந்திச்சு? :(((((((((//

ஓய்..ராஜீவ்..என்ன இது கலாட்டா..:))) :))) மெயில் பண்றேன்....:))

Madhavan Srinivasagopalan said...

// Chaubunagungamaug //

இதுதான் சுருக்கமா.. வெளங்கிடும்..

goma said...

அடி ஆத்தாடி சித்ராம்மா திருநவேலிக்கு வாராங்ளாம்லே....இருட்டுக்கடை அல்வாவுக்குச் சொல்லி வை...அறுவாளையெல்லாம் ஒழிச்சு வை ஆத்தா பயப்படப் போகுது...

Unknown said...

பகிர்வு பல விஷயங்களை புரிய வைத்தது.......நன்றி.!
சகோ நீங்களும் நம்ம கட்சிதான் போல.......டமாரக்கட்சி ஹிஹி!

Jaleela Kamal said...

/கட் அண்ட் பேஸ்ட் " செய்தாலே ஏழெட்டு spelling mistake வரும் போல//haahaahaa

ஊருக்கா ஜாலியா போய்ட்டு வாஙக் பதிவுலகம் அப்படியே இருக்கும் , நீங்க லீவு போட்டா நீங்க மட்டும் லீவு போடல, எல்லோருக்கும் வெகேஷன் எல்லோரும் ஆகஸ்ட் போல தான் வருவாஙக் , கவல படமா போங்க வந்து ஒட்டு மொத்தமா 200 பதிவு போட்டுடுங்க, என்ன கொஞ்சம் வெட்டி பேச்சு தாயம்மாவ, கொஞ்சம் இல்ல ரொம்ப வே மிஸ் பண்ணுவேன்.

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒரு பிரகாசத்துடன் : "இந்த வருடம், திருநெல்வேலிக்கு போகிறேன்," என்று சொன்னேன்.

வெல்கம் டூ தமிழ்நாடு.. வந்துட்டு அங்கே போய் 10 பதிவுகளாவது தேத்திடுவீங்கன்னு எதிர்பார்க்கிறோம் ஹா ஹா

சென்னை பித்தன் said...

ஏரியுடைய சுருக்கமான பெயரைச் சொன்னாலே மூச்சு வாங்குது!
நல்ல நகைச்சுவைப் பதிவு!
கொஞ்ச நாள் நெல்லை மண் வாசமா!enjoy!

Prabu Krishna said...

ஊர் பேர் சொல்லவே ஒரு மாசம் ஆகும் போல. நம்ம நாட்டுல மாதிரி போஸ்ட் கார்ட் இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு அனுப்பினா ஊர் பேர் மட்டும்தான் எழுத முடியும் போல..

மற்ற நகரங்கள் பற்றி கூறியதும் அருமை.

Prabu Krishna said...

தமிழகம் தங்களை வரவேற்க்கிறது...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெயர்போன பெய்ர் விளக்கங்கள் யாவும் அருமை.

முழுப்பெய்ர்களையும் இழுத்து வர ஒரு பெரிய ரயில்வண்டியே வேண்டும் போல உள்ளது.

இந்தியா உங்களை வ்ருக வ்ருக வ்ருக வென வரவேற்கக் [வேர்க்கக்] காத்திருக்கிற்து.

உங்கள் நெல்லைப்பய்ணம் அல்வா போல இனிக்க வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk

Avargal Unmaigal said...

நீங்க முன்னாலே போனா நான் பின்னால்லே வாரேன்

Avargal Unmaigal said...

எனது அடுத்த பதிவு 150 வது பதிவு

Anonymous said...

//"கட் அண்ட் பேஸ்ட் " செய்தாலே ஏழெட்டு spelling mistake வரும் போல.//

ha ha.

Happy holidays

தக்குடு said...

ஊரு பேர் எல்லாம் டாப்டக்கரா இருக்கு அக்கா! சங்ஷன்ல மேளதாளத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா?? .....:)

மொக்கராசா said...

வாங்க, வாங்க, வந்து அப்படியே நம்ம ஊரு முறுக்கு,புரோட்டா, சால்னா,இட்லி எல்லாம் சாப்பிட்டு தெம்பா அமெரிக்கா போங்க...

சசிகுமார் said...

ஊருக்கு வாரிகளா வாங்க வாங்க உங்களை அன்போடு வரவேற்கிறோம்

நெல்லி. மூர்த்தி said...

உங்கப் பதிவைப் படிச்சுட்டு கொஞ்சம் நேரம் எதுவும் பேசமுடியாம திகைச்சு அமைதியாயிட்டேன். ஹி.. ஹி... வெப்ஸ்டர் லேக்கையும் பாங்காக்கையும் கொஞ்சம் விலாவரியா பிரிச்சுப் படிச்சுத் தான் பார்ப்போமேன்னு முயற்சி செய்ததுல.. வாய் சுளுக்கிகிச்சு....

தமிழ் உதயம் said...

வீம்புக்கென்ற இவ்வளவு நீள பெயரை வைப்பார்கள் போலும். பதிவு சிறப்பு.

தமிழ் உதயம் said...

வீம்புக்கென்ற இவ்வளவு நீள பெயரை வைப்பார்கள் போலும். பதிவு சிறப்பு.

இராஜராஜேஸ்வரி said...

ஊர் பெயரில் நகைச்சுவை விருந்து படைத்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.திருநெல்வேலியும் அல்வாவும் போல் இனிமையான விடுமுறைக்கு வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

all the best.

(டே மங்கு எப்படா நீ இவ்வளவு பொறுப்பான ?)

Yaathoramani.blogspot.com said...

உண்மையில் அந்த ரயில்வே ஸ்டேசன்
பெயர் பலகைப் பார்த்து
அரண்டுதான் போனேன்
நாம இங்கே தொட்டப்ப நாயக்கன்பட்டி
பெயரே பெரிது என
புலம்பிக் கொண்டிருக்கிறோம்
அனேகமாக குறைந்த பதிவாக இருந்தாலும்
கூடுதல் பின்னூட்டங்களும்
தொடர்பவர்களும் உள்ளவர்
நீங்களாகத்தான் இருப்பீர்கள் என
கருதுகிறேன்
அந்த ரகசியம் குறித்து கூட ஒரு பதிவு போடலாம்
வித்தியாசமான தகவல்களுடன் கூடிய
ஸ்வாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

mee the firstu...

ரேவா said...

அந்த ஏரியின் பெயர்:
"Lake Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg" அதை சுருக்கமாக : Lake Chaubunagungamaugஎன்று சொல்வார்களாம்.

இம்ம்க்கும் இத மனப்பாடம் பண்ணவே ஒரு வருஷம் ஆகும் போல, நல்லாத்தான் பேறு வைக்கிறாங்க...சோ சித்ராக்கா, இந்தியா வரேங்களா?.....விடுமுறை சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் ."லிங்க் லிங்கம்மா "ஹ ஹ

Sivakumar said...

நெல்லை அ.தி.மு.க. மகளிர் அணியில் உங்களை சேர்க்க நாஞ்சில் மனோ உறுப்பினர் கார்டுடன் திரிந்து கொண்டு இருக்கிறார். உஷாரு!!

vasu balaji said...

நல்வரவு:)

Kurinji said...

Nice post Chitra. Happy holidays! Welcome to India!
Kurinjikathambam

MANO நாஞ்சில் மனோ said...

திருநெல்வேலி மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

நெல்லை சந்திப்பு பதிவர்களுக்கு அல்வா பார்சல் குடுக்க சொல்லி இருக்கீங்க அவ்வ்வ்வ்வ்....

ராமலக்ஷ்மி said...

ஊர்ப் பெயர்கள் சுவாரஸ்யம்.

விடுமுறை இனிதாக அமையட்டும்:)!

தமிழ்வாசி பிரகாஷ் said...

வரவேற்கிறேன் இந்தியாவுக்கு....


எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

Anonymous said...

///"Lake Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg" // இப்பவே கண்ணை கட்டுதே..

Amudhavan said...

அப்படியே பெங்களூருக்கும் வந்துட்டுப் போங்களேன். இங்கேயும் உங்களுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்.

Amudhavan said...

அப்படியே பெங்களூருக்கும் வந்துட்டுப் போங்களேன். இங்கேயும் உங்களுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்.

கிரி said...

நல்லா நகைச்சுவையாக எழுதி இருக்கீங்க :-)

Unknown said...

இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உங்களை குடும்பத்துடன் எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் said...

நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க அக்கா .... அந்த இங்கிலிபீஸ பார்த்துதான் பயந்துட்டேன் அம்மா கண்ணக்கட்டுதே .....

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன், ஹா..ஹா...

Muruganandan M.K. said...

மனநிறைவான விடுமுறைக்கு வாழ்த்துகிறேன்.

சுசி said...

நல்ல பகிர்வு சித்ரா..

Menaga Sathia said...

இனிய பயண வாழ்த்துக்கள் சித்ரா!!

வைகை said...

திருநெல்வேலி..இதுவும் கொஞ்சம் நீளமா இருக்குபோல?....பேசாம அல்(ரு)வான்னு மாத்துறதுக்கு மனு கொடுத்துட்டு வந்துருங்களே! ஹா..ஹா...

அமுதா கிருஷ்ணா said...

சென்னைக்கு எப்ப வரீங்க?

ஹுஸைனம்மா said...

திருநெவேலி சங்சன் ரயிவ்வே டேசன்ல, சித்ரா தாயி ரயில்லேந்து அமெரிக்கக் களையோட எறங்க, அவியளை அடையாளம் தெரியாம ஊர்க்காரவுக அங்கயுமிங்கயும் அலஞ்சுதேட.. அட அட.. அப்படியே வள்ளிபட சீனுதேன் நாவகம் வருது!!

வெல்கம் டூ ட்ருநெல்வேலி!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

me too
welcome to tirunelveli

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்க இங்க வர்றப்போ ஒரு பிளாகர் மீட் போடலாமே சித்ரா ??

வெங்கட் நாகராஜ் said...

:))))))

Have a nice holiday!!!

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா - வருக வருக தாயகம் வருக ! நெல்லையில் இறங்கி கொசு வத்தி சுத்திட்ட்டு - பிறகு மதுரை வருக - சரியா

ஆமா அதெனன் லீவு - கம்பியூட்டர் இல்லாத காட்டுக்கா வறீங்க - ஒரு லேப்டாப் -ஒரு னெட் கனெக்க்ஷன் - இவ்ளோ தானெ - லீவ் டிக்ளைண்ட் - ஜாயின் டூட்டி அட் நெல்லை - இம்மீடயட்லி

நட்புடன் சீனா

ஸ்ரீராம். said...

பெயர்களைப் படித்து பல் சுளுக்கிக் கொண்டு விட்டது. தாய்நாடு வருகையா...வருக வருக...!

செங்கோவி said...

ஊருக்குப் போயிட்டு, நம்ம ஊரு எப்படி இருக்குன்னு ஒரு பதிவு போடுங்கக்கா!

middleclassmadhavi said...

இந்தியாவுக்கு நல்வரவு!

எவ்ளோ நாள் சிரிச்சிட்டே இருக்கறது?..:-))

மோகன்ஜி said...

வருக வருக! திரும்பியவுடன் நம்ம ஊர்கதை நிறைய சொல்லுங்க!

குதூகலக்குருவி said...

//"லாலாக்குடோல்டப்பிமா" வுக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். //

இன்னும் சிரித்து முடியவில்லை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// அதை சுருக்கமாக //

இதுக்கே கண்ண கட்டுதே...:))


//அர்த்தம் என்னவென்றால்//

அதை இப்படியே சொல்லி இருக்கலாம்... பேரு வெச்சு புண்ணியவான் யாரோ...??


//"சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா ....சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா...." என்றுதான் வாசிக்க வருது.//

ஓ மை காட்... இதை பாத்ததும் எனக்கும் அதான் தோணுச்சு...ஹா ஹா... கிரேட் வுமன் தின்க் அலைக்...:))


//"லாலாக்குடோல்டப்பிமா" வுக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்//

அப்ப நாக்க முக்க'கு ஒண்ணு விட்ட அண்ணன் தம்பி சம்மந்தம் இருக்குமோ...:)


// Krung Thep Mahanakhon Amon Rattanakosin Mahinthara Yuthaya Mahadilok Phop Noppharat Ratchathani Burirom Udomratchaniwet Mahasathan Amon Phiman Awatan Sathit Sakkathattiya Witsanukam Prasit "//

எனக்கென்னமோ நீங்க ஊர் பேரை சொல்ற மாதிரி எங்களை எல்லாம் புரியாத பாஷைல திட்டறீங்களோனு லைட்டா சந்தேகம் வருது...:)))


//அதற்குள் நான் இங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன்//

சீக்கரம் வாங்க... ஊருக்கு ஷாப்பிங் எல்லாம் ஆச்சா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

-

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ராஜாதிராஜராஜகுலோத்துங்கராஜமார்த்தாண்டராஜகம்பீரராஜப்ராக்கிரமராஜகுலத்துசக்கரவர்த்திராஜகுலத்துவிசுவாசிராஜகுலத்துசுகவாசிராஜகுலதிலகஅதிவீரஅதிவிவேகராஜாஎன்றெல்லாம்பொய்சொல்லாமல்சிடிசன்ஆஃப்வேர்ல்ட்முஹம்மத்ஆஷிக்என்றேதன்னைசொல்லிக்கொள்பவன்

says...

"நல்லபகிர்வு"

ஹேமா said...

சித்ரா...அதிசயம் நீங்கள்.எப்பிடித்தான் இப்பிடி முடியுதோ !

ஆகுலன் said...

In Oregon they have a place call selam........

ஊரான் said...

சுவாரசியமானதுதான்!

Mahan.Thamesh said...

ஊரசுத்தி பார்கிறது ரொம்ப ஜாலியான விஷயம் . பாருங்க இந்திய உங்களை வரவேற்கட்டும்.

Mahan.Thamesh said...

நீண்ட இடைவேளையின் பின் பதிவ மறுமடியுமா,?

மாதேவி said...

படிக்கவே மூச்சு நின்றுவிடும்போல இருக்கு :))

logu.. said...

இன்னும் போகலியா?

சிநேகிதன் அக்பர் said...

இம்பூட்டு நீளமாவா பேர் வைப்பாங்க.!

பதிவு அருமை.

இனிமையான பயணத்திற்கு வாழ்த்துகள்.

arasan said...

உங்களை வரவேற்பதில் சந்தோஷம் ..
பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் ...

arasan said...

அந்த ஊருங்க பெயர மட்டும் இனி மறக்க முடியாது ..
திரும்ப சொல்லவும் முடியாது ..

Jana said...

ஒரு ஊருக்கு போயிட்டு வருவது ஒரு வகை சந்தோசம். ஆனால், அந்த ஊருக்கு போய் விட்டு வந்ததை டமாரம் அடித்து சொல்வது இன்னொரு வகை சந்தோசம்

உங்களுக்கு மட்டுமா எங்களுக்கும்தான்...:))

Unknown said...

இந்தியாவிற்கு வரவேற்கிறோம்.
இவ்வளவு நீளமான பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். வித்தியாசமான பெயர்களையும் இந்தப் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.Happy Holidays!!!

நாடோடி said...

சொந்த‌ ஊர் ப‌ய‌ண‌மா?... சூப்ப‌ர்.. ந‌ல்ல‌ப‌டியாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள்.

ஸாதிகா said...

இந்தியா வர்ரீங்களா?வருக!உங்கள் வருகை நல்வரவு ஆகுக!

ADHI VENKAT said...

ஊர் பெயர்கள் வித்தியாசமா இருக்குப்பா.
விடுமுறையை இனிதாக கழிக்க வாழ்த்துக்கள். இந்தியா உங்களை வரவேற்கிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உலகமே வித்தியாசங்கள் நிறைந்தததுதான்...

சில இடங்களின் பெயர் உண்மையிலே நம்மை ஆச்சரியப்பட வைக்கும்..

அது போன்ற தங்களை ஆச்சரியப்படுத்திய இடத்தை நானும் படித்து ஆச்சர்யபட்டேன்...

இந்தியா வந்தாலும் வழக்கம்போல் பதிவிடுங்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தாமிரபரணியின் கீதங்கள் கேட்க தங்களை அன்போடு அழைக்கிறேன்...

செந்தில்குமார் said...

யம்மாடியோவ்...இவ்வளவு சின்ன பெயரா வச்சிருக்காங்க...

கட் அண்ட் பேஸ்ட் " செய்தாலே ஏழெட்டு spelling mistake வரும் போல.

வாங்க..வாங்க...தாய் விட்டிற்க்கு...

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு பெரிய பெயரா!!!

பேரு பெத்த பேருன்னு இத இத இதத்தான் சொல்றாய்ங்களோ ...

விடுமுறை சந்தோஷமாக கொண்டாடுங்க, எதடா வந்து வெட்டியா பேசலாமுன்னு நினைச்சிகிட்டே இருக்காதீங்கோ ... :P

நிரூபன் said...

இந்த வார இறுதியில், கோடை விடுமுறை ஆரம்பம் ஆகிறது.//

ஆஹா...அக்காச்சி ஊருக்கு கிளம்பப் போறாவா...
வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said...

ஊர்களின் பெயர்களை வைத்து, நகைச்சுவையான கட்டுரைத் தொகுப்பொன்றினைத் தந்துள்ளீர்கள். நன்றிகள் சகோ.

எம் அப்துல் காதர் said...

விடுமுறைய சந்தோசமா கொண்டாடி விட்டு வாங்க siss.

போளூர் தயாநிதி said...

ஊர் பெயர்கள் வித்தியாசமா இருக்கு.
//பதிவுகள் எழுத வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி போச்சு. ஆனால், எழுதி இருக்கும் பதிவுகள்: இந்த பதிவோடு சேர்த்து 138 தான் ஆகுது....//உங்கள் விடுமுறை மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்....

கே. பி. ஜனா... said...

எனக்கு என்னமோ, "சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா ....சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா...." என்றுதான் வாசிக்க வருது.// HaHa!

Jayanthy Kumaran said...

ha ha...lovely post dear..! amazing to see the lenggggggggggggggggthy names of such places n how they modified for convenience...very informative..Thanks for sharing..:)

Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

கொங்கு நாடோடி said...

Also add to your list

Intercourse - Pennsylvania
Bird in Hand- Pennsylvania

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE