Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes.
Sunday, July 31, 2011
நன்றி! மீண்டு வருகிறேன்.
அனைவருக்கும் வணக்கம்.
இந்தியா போனது ஒரு மாதம் என்றால், jetlag மற்றும் ஊரு நினைப்பில் இருந்து மீண்டு வந்து சகஜ நிலைக்கு வரவும், ஒரு மாதம் ஆகி இருக்கிறது. அப்படி ஒரு bonding ...... பாசப் பிணைப்பு....
ப்லாக் பக்கம் வரலாம் என்றால்..... இங்கே பதிவுலகில் ஏகப்பட்ட மாறுதல்கள், குளறுபடிகள் வந்து வந்து வந்து வந்து வந்து போய் கொண்டு இருப்பதாக பதிவுலக நண்பர்கள் சிலரிடம் இருந்து அன்பான "ரிப்போர்ட்". இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து வரலாம் என்றால், மேலும் சில பதிவுலக நண்பர்களிடம் இருந்து அன்பான "கட்டளைகள்" ......."உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை" என்று..... ஹா,ஹா,ஹா,ஹா.....
அப்படி இப்படினு காலைத் தேச்சு ஒரு வழியாக மீண்டு வந்து - மீண்டும் எழுதியே தீருவது என்று முடிவு பண்ணிட்டேன். இது எச்சரிக்கை இல்லை, அறிக்கை. (நானும் தமிழ்நாட்டில் ஒரு மாதம் இருந்து இருக்கேன்ல......)
தமிழ் நாட்டில் இருந்த முப்பது நாட்களில், 26 நாட்கள் ஊர் சுத்தலிலே போய் விட்டன. சந்தித்த பல அற்புதமான மனிதர்கள் - அற்பமான மனிதர்கள்; அடித்த சேட்டைகள் - எடுத்த சாட்டைகள் - பற்றியெல்லாம் எழுதாமல் எப்படி இருப்பது?
இந்த பதிவில், ஊரில் நடந்த வெட்டி பேச்சுக்களில் இருந்து ஐந்து துளிகள்:
கடையில் பரிச்சயமான ஒரு நபர்: "இப்போ எங்கே இருக்கீங்க?"
வெட்டி பேச்சின் பதில் : "அமெரிக்காவில தான்."
அவர்: " அதான் இப்போ வீட்டுக்கு வீடு, ஒரு பிள்ளை - அமெரிக்காவில; ஒரு பிள்ளை - சிங்கப்பூர்ல; ஒரு பிள்ளை - துபாயில னு இருக்கிறாங்களே....."
வெட்டி பேச்சு : "ஆமாங்க. உங்க வீட்டுலயும் மூணு பேர் இருந்தாங்களே..... அவங்க எங்கே எங்கே இருக்காங்க...."
அவர்: "மூத்தவன் அமெரிக்கா போகணும்னு நினைச்சான். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயிட்டான். பொண்ணு, சிங்கப்பூர்ல கட்டி கொடுக்கலாம்னு எல்லாம் அமைஞ்சு வந்துச்சு. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், மாப்பிள்ளை தூத்துக்குடியிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிச்சாட்டார். அடுத்தவன், துபாய் வேலை ட்ரை செய்தான். இப்போ, சென்னையில இருக்கான். "
வெட்டி பேச்சின் பதில் அல்ல, ரியாக்ஷன்: "ஞே!!!!!"
நெடு நாள் கழித்து சந்தித்த உறவினர் ஒருவர்: "சித்ரா, இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கியா?"
வெட்டி பேச்சின் பதில்: "இங்கே இருக்கிற சென்னையில் இருந்து கிட்டு, அமெரிக்காவில் இருக்கிறதாக எல்லோர்கிட்டேயும் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கேன்."
டிவி பார்த்துக் கொண்டு இருந்த ஒரு உறவுக்கார பெண் : "ஹமாம் சோப்பு போட்டு குளிச்சா, 'என் வீட்டில், பத்து ஸ்கின் ப்ரோப்லேம் - நோ டென்ஷன்'ங்கறா. அப்போ, என் வீட்டு மாமியார் தருகிற 'பத்து ப்ரோப்லேம் - நோ டென்ஷன்' ஆக எதை போட்டு குளிக்கிறதுனுதான் தெரியல."
வெட்டி பேச்சின் பதில்: "எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."
நெல்லையில் எங்கள் தெருவில், ஒருவர்: "சித்ரா, என்ன லீவா?"
வெட்டி பேச்சின் பதில்: "லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்."
நெருங்கின உறவினர் ஒருவர்: "வெள்ளிக்கிழமை மதியம், முக்கியமான மீட்டிங்க்கு போகிறேன். எங்க வீட்டுக்கு வரலனு சொன்னியாமே.... என்ன மீட்டிங்?"
வெட்டி பேச்சின் பதில்: "திருநெல்வேலி ஜங்ஷன்ல பதிவர் சந்திப்பு இருக்குது. அதுக்கு போறேன்."
உறவினர்: " நிலம் எதுவும் வாங்கி இருக்கியா என்ன? Registrar சந்திக்க போறேன் என்று சொல்றே."
வெட்டி பேச்சின் பதில்: "மாமா, பதிவர் - blogger - என்று இருக்கிறோம். "
உறவினர்: "பிளாக்கர்னா என்ன செய்றீங்க? "
வெட்டி பேச்சின் பதில்: "இன்டர்நெட்ல ப்லாக் வச்சுருக்கோம். அந்த பதிவர்கள்ல சிலர் இன்னைக்கு மீட் பண்றோம்."
உறவினர்: "அடேங்கப்பா. இப்போ Registrar வேலையை இன்டர்நெட்லேயே முடிச்சிரலாமா?"
வெட்டி பேச்சின் பதில்: "ஆமாம். யாராவது லவ் பண்ணா, நம்ம ஊரு Registrar அவங்களுக்கு பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி - நாங்க இன்டர்நெட்ல யாராவது லவ் பண்ணா, அவங்களுக்கு இன்டர்நெட்லேயே பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."
உறவினர்: "ஞே!!!!"
பதிவர் என்று சொல்லடா ...... மற்றவரை தலை குழம்பி போக வையடா.....
அட போங்கப்பா....... நொந்த yippee noodles ஆயிட்டேன்.... பின்ன எப்படி பதிவர் என்று சொல்லி உடனே பதிவுகள் எழுத ஆசை வரும்?
Subscribe to:
Post Comments (Atom)
115 comments:
வாங்க..வாங்க... welcome
வணக்கம் அக்காசி, மீண்டும் வருகை தரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
கலக்கி இருக்கீங்கன்னு சொல்லுங்க சகோ!
So funny. I enjoyed. Ha....ha....
Why did you come to India? Ha..ha...
Are you a special gust of obama?
Keep it up.
Sorry for my mobile comment.
வாங்க சித்ரா.மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.வழக்கம் போல் கலக்குங்க
பதிவுலகின் விடிவெள்ளி, கலங்கரை விளக்கம், தானைத்தலைவி சித்ராக்காவை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்!
முதல்ல...சித்ராக்கா அப்றம்தான் ஹிலாரி வந்தாங்களாம்!
மீண்டும் வருகை தரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் அக்கா .
வாங்க..வாங்க..
//"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."
//
சரிதான்..
வரவிற்கு வாழ்த்துக்கள்.
//"லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்."//
ஹ ஹ...அந்த ஆளு உடனே என்கவுன்ட்டர் ல உன்னை போட்டு தள்ள யோசிசிருப்பாரே..:-)))
//நெருங்கின உறவினர் ஒருவர்: "வெள்ளிக்கிழமை மதியம், முக்கியமான மீட்டிங்க்கு போகிறேன். எங்க வீட்டுக்கு வரலனு சொன்னியாமே.... என்ன மீட்டிங்?"
வெட்டி பேச்சின் பதில்: "திருநெல்வேலி ஜங்ஷன்ல பதிவர் சந்திப்பு இருக்குது. அதுக்கு போறேன்."
உறவினர்: " நிலம் எதுவும் வாங்கி இருக்கியா என்ன? Registrar சந்திக்க போறேன் என்று சொல்றே."
வெட்டி பேச்சின் பதில்: "மாமா, பதிவர் - blogger - என்று இருக்கிறோம். "
உறவினர்: "பிளாக்கர்னா என்ன செய்றீங்க? "
வெட்டி பேச்சின் பதில்: "இன்டர்நெட்ல ப்லாக் வச்சுருக்கோம். அந்த பதிவர்கள்ல சிலர் இன்னைக்கு மீட் பண்றோம்."
உறவினர்: "அடேங்கப்பா. இப்போ Registrar வேலையை இன்டர்நெட்லேயே முடிச்சிரலாமா?"
வெட்டி பேச்சின் பதில்: "ஆமாம். யாராவது லவ் பண்ணா, நம்ம ஊரு Registrar அவங்களுக்கு பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி - நாங்க இன்டர்நெட்ல யாராவது லவ் பண்ணா, அவங்களுக்கு இன்டர்நெட்லேயே பதிவு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."
உறவினர்: "ஞே!!!!"//
ஹ ஹ...செம செம...திஸ் இஸ் சித்ரா...வெல்கம் பேக் டு ப்லாக் வேர்ல்ட்
வாங்கம்மா.ஊரில போய் ஒரு கலக்குக் கலக்கிட்டுத்தான் வந்திருக்கீங்க!
இடைவெளி விட்டு வந்திருக்கீங்க.
நலம்தானே தோழி???
அம்பேரிக்காவின் விடிவெள்ளி சித்ராவே வருக.. கொண்டாந்த அல்வா, மனோகரம் எல்லாம் தீர்த்தாச்சா :-)))
வாங்க... வாங்க...
ஆரம்பித்துவிட்டது சித்தராவின் அடுத்த இன்னிங்ஸ்...
நெல்லையில் எங்கள் தெருவில், ஒருவர்: "சித்ரா, என்ன லீவா?"
வெட்டி பேச்சின் பதில்: "லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்."//
இதுதான் டாப்பே ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர்....!!!
எங்க அம்மா, பதிவர் சந்திப்புன்னா பணம் குடுப்பங்களோ மக்களே'ன்னு கேட்டு என்னை அலறவச்சாங்க அவ்வ்வ்வ்....
என்னடா ஆளைக்காணோமேன்னு பாத்தேன்!!! அதான் மேட்டரா? வருக வருக என இரு கரம் நீட்டி வரவேற்கிறேன்.
உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை" -
நல்வரவு...
ஹா ஹா வெட்டி பேச்சு எல்லாமே சூப்பர்.
//சில பதிவுலக நண்பர்களிடம் இருந்து அன்பான "கட்டளைகள்" ......."உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை" என்று//
மவனே அவன் மட்டும் என் கையில மாட்டினான் சட்னி தான் ஹீ ஹீ. பதிவர்னு சொன்னா நிறைய பேருக்கு இன்னும் தெரியல என்ன பண்ணலாம் பேர மாத்தி வச்சிடலாமா.
GOOD JOKES MADAM ..
ஆஜர்.
welcome back Chitra:)!
அதுக்குத் தான் நான்லாம் பதிவர்னு வெளியே சொல்லிக்கிறதே இல்லை!
அது ... ... !!
வாங்க வாங்க
நிஜமாகவே நீங்கள் பதிவுலகில் இல்லாத வெற்றிடம்
கண்கூடாகத் தெரிந்தது.வந்து பதிவிட்டு
வெற்றிடத்தை மீண்டும் சிறப்பிடமாக
மாற்றியமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வாங்க..வாங்க... welcome back.
வந்ததில் கொஞ்சம் வருத்தமே
லேட் ஆக வந்ததில் ::)
//நெல்லையில் எங்கள் தெருவில், ஒருவர்: "சித்ரா, என்ன லீவா?"
வெட்டி பேச்சின் பதில்: "லீவு இல்லை. ஒபாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக நம்ம வார்டு கௌன்சிலரை பார்த்து விட்டு வர சொன்னார். அதான் வந்து இருக்கேன்."//
நம்பிட்டாரா? இல்லை நமக்கே அல்வாவான்னு நினைச்சாரோ என்னவோ?
கும்மியடிக்க வாரீகளா?
வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த வலைத்தளத்தில் நான் புதிதாக எதுவும் இடுகையிடப் போவதில்லை...
அப்புறம் எதுக்குன்னு கேக்கறீங்களா?
வருக வருக ..... மீண்டும் உங்கள் பதிவுகளை தருக தருக ......
வாங்க...வாங்க....சித்ரா அக்கா.
பாவம்...ஊருல உங்கக்கிட்ட சிக்கி சின்னாபின்னமானவங்க.
பதிவர் பத்தி சொன்னது கலக்கல்...
நானும் பல தடவ முயற்சி பண்ணி கண்ணு கட்டுற அளவுக்கு போயிருக்கேன் :))
ரொம்ப நன்றீங்க! நீண்ட நாள் ஆச்சி தங்களைப்பார்த்து. வருக வருக!
வருகைக்கு மகிழ்ச்சி.வரவேற்கிறேன்.
Welcome Welcome!!!
Welcome back. :-)
வருக. வருக.
வாழ்த்துக்கள்.
வருக, உங்க பதிவில்லாமால் பதிவுலகம்................ஒன்னும் சரியில்லை, என்னுடைய அடுத்த பதிவ பாருங்க அம்புட்டுதான்
ஆஹா, உங்கள் எழுத்துக்களைப் படிச்சு, சிரிச்சு, எவ்ளோ நாள் ஆச்சு!
வருக வருக வருக,
வழக்கம் போல்
வறுக்க வறுக்க வறுக்க
ஹி..ஹி..ஹி..ஹி
மகிழ்ச்சி... தொடருங்கள்...!
மீண்டும் வந்ததற்கு மகிழ்ச்சி.நலமுடன் தொடர வாழ்த்துகள்.
வாங்க வாங்க ஊரெல்லாம் ரவுண்டு அடிச்சி இன்னும் களைப்பு தீரலையா, ரொமப்லேட்டா வந்துட்டீங்களே???
ஹா ஊரில் நிறைய வெட்டி பேச்சு பேசி கேட்டவர்களுக்கெல்லாம் பல்பு கொடுத்துட்டீங்க போல இருக்கே.
சித்ரா...!
பெண்களுக்கு 33 சதவீதம் மட்டுமல்ல 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பதிவர்களினால்தான் முடிகிறது. ஆனாலும், பெண்கள் வருகிறார்கள். கொஞ்சக்காலத்தில் பலர் காணாமல் போகிறார்கள். அந்த மாதிரி நீங்களும் சென்றுவிடாது. பதிவுலகில் நிலைத்து நிக்க வாழ்த்துக்கள்!
உங்களுடைய பார்வையில் இப்போதைய தமிழகமும் இந்தியாவும் எப்படி இருக்கிறது என்பதை எழுதுங்கள்.
chitra akka is back!!...:))(எவன்டா அங்க! பேக்னு வாசிக்கர்து?)) :)) welcome back akka!
வாங்க..வாங்க... welcome
கடைசி பதிவர் விளக்கம் செம.. தொடர்ந்து கலக்குங்க சித்ரா :)
அடேடே....மீண்டு(ம்) வந்தாச்சா...நெல்லை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட புகைப்படங்களை சில பதிவுகளில் பார்த்தேன். தமிழ்நாட்டு விஜயப் பதிவுகள் இனி அணிவகுக்கும் என்று நினைக்கிறேன.
welcome madam!
வாங்க சித்ரா - யாவும் நலம் தானே
ப்லாக்ர்ன்னா என்னாங்க
//"மூத்தவன் அமெரிக்கா போகணும்னு நினைச்சான். இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயிட்டான். பொண்ணு, சிங்கப்பூர்ல கட்டி கொடுக்கலாம்னு எல்லாம் அமைஞ்சு வந்துச்சு. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம், மாப்பிள்ளை தூத்துக்குடியிலேயே ஒரு பிசினஸ் ஆரம்பிச்சாட்டார். அடுத்தவன், துபாய் வேலை ட்ரை செய்தான். இப்போ, சென்னையில இருக்கான். "//
இவரு கவுண்டமணியோட நண்பரோ? ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்புட்டாக; அமெரிக்காவுல ஒபாமா கூப்புட்டாக; எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டு நான் இங்கே அம்பாசமுத்திரத்துல உக்காந்து ஆவி ஒட்டிக்கிட்டு இருக்கேன்குற மாதிரி?
அட ஏனுங்கோ... இன்டர்நெட்ல இடம் வாங்கினா கூட பதிவு செஞ்சு பட்டா போட்டு தரோம்னு சொல்லி இருக்கலாம்ல? இங்கே தான் ஒரே இடத்துக்கு எத்தனை பட்டா போட்டாலும் யாரும் கேஸ் போட முடியாது...
வாங்க சித்ரா! நீங்க இல்லாம பதிவுலகமே களையிழந்து போயிருந்தது!
அக்கா, நீங்க வரீங்க, நான் ஊருக்கு கெளம்பறேன் :) ஆனா உங்க கிட்ட கேட்டா மாதிரி என்கிட்டே யாரும் சீக்கிரம் வந்து எழுதுன்னு கேக்கப் போறதில்லை.. சோ, நோ ப்ராப்ளம். :)
எனக்கும் எதாச்சும் இனிமையான அனுபவங்கள் கெடச்சா, பகிர்ந்துக்கறேன்..
Welcome.. :)
சரியான போட்டிபோங்க. வெளியூரா உள்ளூரா யாரு அதிகம் ஞே ஆகுவதுன்னு.. :)
வாங்க வாங்க ...கலக்க வாங்க
"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."
அடடா....வாட்ட காமடி...(What a comedy) சிரிக்கிறதோட சிந்திக்கவும் வெக்கிறீங்க...
"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."
அடடா....வாட்ட காமடி...(What a comedy) சிரிக்கிறதோட சிந்திக்கவும் வெக்கிறீங்க...
மீண்டும் வருக............
சென்னை வந்தும் தங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. :((
kalakkal chitra akkaaaaa...
v miss u lottttttttttt....
even i stoped writting... because of your expected comment absence for my posts......
சுவாரசியமான எழுத்து. வாழ்த்துக்கள்!
நீண்ட இடைவெளிக்கு பின்னால் வந்து இருக்கீங்க .இருந்தும் ஆரம்பமே கலக்கலா அமர்க்களமாக இருக்கே. நிறைய சொல்லுங்க பார்த்தது, நடந்தது, கேள்வி பட்டது எல்லாம்.ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன், சித்ரா
அருமை சித்ரா..
வாங்க...ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கின்றிங்க..
ஊரில் நடந்த நிகழ்வு அனைத்து கமெடியாக எழுதி இருக்கின்றிங்க...
வருகைக்கு மகிழ்ச்சி தொடருங்கள்
லேட் டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இருக்கீங்க ... கலக்கல் பதிவு Welcome Back.
வாம்மா..
Welcome mam :)
:-)
வாங்க..வாங்க...தங்கள் வருகையை இருகரம் கூப்பி வரவேற்கின்றோம்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
வெல் கம் பேக்...ப்ளாக்கர்ணா கல்யாணம்லாம் பண்ணி வைப்பீங்கன்னு முன்னமே தெரியாமே போச்சே? மைண்ட்ல வச்சிக்கிறேன் :))
welcome chitra
ஹா...ஹா...ஹா...
வெல்கம் பேக் சித்ரா....
ஊர்லயும் டெர்ரர் தானா? எல்லாரையும் போட்டு கலாய்ச்சு இருக்கீங்க....
ட்ரிப் நல்லா இருந்ததா?
மீண்டும் உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி WELCOME
வழக்கம் போல கலக்குங்கள்
வாங்க வாங்க ... வருகைக்கு மகிழ்ச்சி தொடருங்கள்.. தொடர்கிறோம்
ஊர் பயணம் நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க... குட்..
தொடர்ந்து எழுதி கலக்குங்க... :)
welcome back!!
Chitra, Madurai varumpodhu meet paannalam yendry sonneergal. You didn't mail me. I was really waiting to meet you. Welcome back to the blogging world...
எதிர்பார்த்திருந்த வருகை.மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.ஊர்க்கதைகளை பகிருங்கள்.
எங்கயோ பார்த்த மாதரி இருக்கு... :)))
வாங்க வாங்க :)) மீண்டும் உங்க கலாட்ட வை தொடங்குங்கள்
ரொம்ப லேட்டா வந்துட்டேனோ... சரி விடுங்க இப்பதான ஐக்கியமாகிட்டு இருக்கேன். எப்படியோ... இனி உங்கள் எழுத்தயும் வாசிக்கலாம்.. இனிய மனதோடு வருக வருக என வரவேற்கும் சித்திரன்
http://chithiran-vel.blogspot.com/
வருக! வருக!!
மறு வருகைக்கு வந்தனங்கள்.
ஊர்ல உங்ககிட்ட மாட்னவங்க பாடு கஷ்டம்தான் போல :)
இன்னும் எழுதுங்க.
வாங்க வாங்க ... வருகைக்கு மகிழ்ச்சி தொடருங்கள்..
சும்மா பிரிச்சி பிரிச்சி எழுதி இருக்கீங்க சித்ரா மேடம் .. வாழ்த்துக்கள்
வாங்க, வாங்க வந்து நெல்லை கதையை கொஞ்சம் அளந்து விடுங்க.
வாங்க வாங்க! :-)
வந்தாச்சு வந்தாச்சு சித்ரா வந்தாச்சு !
மீண்டும் வருகை தரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் அக்கா .
உங்கள் பதிவுலக சேவை, தமிழ் நாட்டுக்குத் தேவை" என்று..... ஹா,ஹா,ஹா,ஹா.....//
ஆம் சித்ரா, கண்டிப்பாய் வேண்டும்
உங்கள் சேவை.
ஊரில் எல்லோரும் நலமா?
வாருங்கள்
வாங்க சித்ரா. பதிவுலகம் பிரகாசமாகி விட்டது.
Hearty Welcome chitra.
குறும்பு சகோதரியே இடையில் ஒய்வு மீண்டும் வருகை கலக்குங்கள் பதிவில்.
வாங்க சித்ரா! நானு நூறாவதா வந்து இருக்கேன்.. உங்கள் நகைச்சுவையை ரசித்தேன்.. கலக்குங்க
வலையுலக வரலாற்றிலே முதன் முறையாக சகோதரி வெட்டிபேச்சு,,,,,,,, return,,,,,,,,,,,,
வாங்க ,,,வாங்க,,,,,, இப்பதான் வழி தெரிஞ்சுதா,,,,,,,,,,,,
உள்ளூரிலேயே இருந்துட்டு......... ஒரு எஸ் எம் எஸ் கூட அனுப்பாம ,,,,,,,,,,,,,,,
அடுத்த முறை தமிழ் நாட்டு எல்லையில் பாத்தன்ன..............
சமாதானம்....சகோதரி ........தொடருங்கள்..............
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி
அன்பார்ந்த சித்ரா மேடம்
பதிவுலகில் தங்கள் பின்னூட்ட வாழ்த்துக்களால்
தொடர்ந்து எழுதி வருபவர்கள் நிறைய உண்டு
அதில் அடியேனும் ஒருவன்
தங்களை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகப் படுத்த கிடைத்த
வாய்ப்புக்காக பெரிதும் மகிழ்வு கொள்கிறேன்
congrats...meendum oru valaichara arimukam ..congrats ..
அருமையான தகவல் நன்றி சகோ
பதிவர்-ன்னா, பினாமி பேர்ல எல்லாம் பதிவு செய்விங்களா?
நல்ல வேலை போலி பத்திரப் பதிவர்-ன்னு அம்மா உள்ள தூக்கி போடறத்துக்குள்ள ஊரு வந்து சேர்ந்துட்டீங்க... :)
ஒரே கலக்கல்தான் சித்துவோட விசிட்..ஜமாய்..:)
வாங்க REGISTRAR வாங்க ! ! !
சும்மா நகைச்சவை யில்லை
சுவையான நகைச்சவைப்
பதிவு அருமை!
என் வலை கண்டு வந்து
வாழ்த்துரை வழங்கினீர்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
\\\"எதை போட்டு வேணும்னாலும் குளி. ஆனால், அங்கே கேன்ல இருக்கிற கெரோசின் ஊத்தி மட்டும் குளிச்சுராத."//
-- இந்த பேச்சை கேட்டு எவ்வளோ நாளாச்சு.
welcome back
வாங்க வாங்க சித்ரா...
welcome back akka
ஒபாமா மேட்டரும், கிரெசின் பாத்தும்... தாங்க முடியல...
யாராவது வயித்து வலிக்கு மருந்து கொடுங்களேன்! சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிப்போச்சு.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க... இந்தப் பதிவுலகம் உங்களை மிஸ் பண்ணினதை நல்லாவே உணர முடிகின்றது.
பதிவர் என்று சொல்லடா ...... மற்றவரை தலை குழம்பி போக வையடா.....
அட போங்கப்பா....... நொந்த yippee noodles ஆயிட்டேன்.... பின்ன எப்படி பதிவர் என்று சொல்லி உடனே பதிவுகள் எழுத ஆசை வரும்?
வணக்கம் சித்ரா.உங்க பதிவுகளை நான் விரும்பி படித்து வருகிறேன். ரொம்ப நன்றாக உள்ளது.
நானும் புதியதாக பதிவு ஆரம்பித்து 2 மாதங்களாக எழுதி வருகிறேன்.நேரம் கிடைக்கும் போது என் பதிவுகளை பார்க்கவும்.நன்றி.
கேள்விகளுக்கு
சிறப்பான (சிரிப்பான ) பதில்கள்
பதிவுக்கு நன்றி ....
Post a Comment