Tuesday, August 9, 2011

நெல்லை பதிவர்களின் தானை தலைவர் வாழ்க!


இது
பதிவுலக அரசியல் பதிவு இல்லைங்கோ.....

நான் நெல்லைக்கு வந்த போது,
"நெல்லை பதிவர்கள் சங்க முன்னேற்ற கழக" தலைவர் : "உணவு உலகம் " புகழ் - அண்ணன் குல மாணிக்கம் - திரு. சங்கரலிங்கம் அவர்களையும் ,
மகளிர் அணித்தலைவி - சமூக சேவகி - "மனதோடு மட்டும்
" கௌசல்யாவையும் நான்கைந்து முறைகள் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

எங்க ஊரில பெரிய ஆபிசர் ஆச்சே..... பந்தா எப்படி இருக்குமோ - அலுவலகத்தில் ஏழு பியூன் தாண்டி, ஏழு கிளெர்க் தாண்டி , ஏழு மணி நேரம் காக்க வைத்து appointment தருவார் என்று ஒரு எண்ணத்தில் தான் சென்றேன். அண்ணன் படு கூல் ஆக , அலுவலகத்துக்கு வெளியிலேயே கௌசல்யாவுடன் , காத்து இருந்தது, சந்தோஷ அதிர்ச்சி.

தான்
ஒரு பெரிய அதிகாரி என்ற அகங்காரம் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.






நடக்கவிருந்த நெல்லை பதிவர் சந்திப்பு மீட்டிங் பற்றி ஏற்பாடுகளை உறுதி செய்யத்தான், இந்த குட்டி மீட்டிங். ஒரு சின்ன அலுவலக அறை. குட்டி மீட்டிங்க்கு குட்டி பில்டிங் ...என்னே ஒரு symbolic shot .....!

காளி மார்க் கடலை மிட்டாய், சூடான அல்வா, மிக்சர் சகிதமாக வரவேற்றார். முதன் முறையாக பதிவுலக சொந்தங்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் வந்துச்சோ இல்லையோ, ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு. அப்போ, கொடுத்த ஒரு ஆத்மார்த்தமான கடலை மிட்டாய் போஸ் ஒன்றை , அண்ணன் கிளிக்கி கொண்டார். அப்புறம் தான் சொன்னாங்க.... நெல்லை பதிவர் சந்திப்புக்கு advertisement ஆக அதை போட்டோ ஷாப் மாற்றி விட்டார். அவ்வ்வ்வ்......

எல்லாவற்றிலேயும் பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிக்க வேண்டும் என்றே கர்மமாக தான் இருப்பதை சொல்லாமல் சொன்னார்.

அடுத்த முறை சந்தித்தது நெல்லை பதிவர் சந்திப்பின் போதுதான். சங்கரலிங்கம் அண்ணன், சான்சே இல்லை..... ஏற்பாடுகளில் அமர்களப்படுத்தி இருந்தார். அவரது, ஆட்பலம் - பவர் பலம் எல்லாம் தெரிந்தன. ஆனால் அவரோ சந்திப்பை ஒளிபரப்ப டைரக்ட் ஆக ஆன்லைன் வீடியோ வரவில்லையே என்று பதிவுலக நண்பர் , நிரூபன் அவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று டென்ஷன் ஆகி கொண்டு இருந்தார்.

தன்னடக்கத்துடன் , சக பதிவரின் கருத்துக்காக மரியாதை கொடுக்கும் குணத்தை சொல்லாமல் சொன்னார்.

அங்கே, பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல விரும்பும் கருத்தாழமிக்க பதிவர்களையும், தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பை பற்றி சொல்ல, தனி பதிவு வேண்டும்.......

"ஆண்டவா
..... அங்கே இருந்த மாதிரியே, கமென்ட் அடிக்காமல் என் வாயை பொத்தி கொண்டு, இந்த பதிவை எழுதி முடிக்க உதவி செய்யும். ஆமென்."
(அதற்காக, பின்னூட்டத்தில் அதை இதை சொல்லி , என்னை உசுப்பேத்தி அடுத்த பதிவு அதை பத்தி எழுத வச்சுறாதீங்க, மக்காஸ்! எழுதுனாலும் எழுதிடுவேன். மி த பாவம்! )

அப்புறம், ஒரு orphanage சென்று பள்ளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்புக்கு ஒரு நாள், அண்ணன் ஏற்பாடு செய்து இருந்தார். அந்த குழந்தைகளின் நிலை, மனதை உருக்குவதாக இருந்தது. அந்த ஆசிரமத்துக்கும் பள்ளிக்கும் அண்ணனும் கௌசல்யாவும் செய்து வரும் உதவிகள், பல.

http://unavuulagam.blogspot.com/2011/06/blog-post_4498.html


சமூக அக்கறையோடு அரசாங்க அதிகாரிகள் செயல்பட்டால், எந்த அளவுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை சொல்லாமல் சொன்னார்.

பயணங்கள் மற்றும், என் குடும்ப சூழ்நிலை காரணமாக நிறைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் நேரம் அமையவில்லை. (என் அப்பாவின் மறைவுக்கு பின், நான் இந்தியா சென்ற முதல் ட்ரிப். நெல்லையில், எங்கள் வீட்டில் அந்த சோகத்தின் சாயல் இன்னும் பரவி இருந்தது. அம்மா கூடவே இருந்து அவர்களை உற்சாகப் படுத்துவதில் நிறைய நேரம் சென்றது. பலனும் கிடைத்து இருக்கிறது. இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.)

அதனால், கடைகளுக்கு செல்லவும் முடியாமல் இருந்தேன். நெல்லை ட்ரிப் மறக்க முடியாதபடி செய்த அண்ணனை சந்தித்து விடை பெற்று கொண்டு வரலாம் என்று நினைத்து, ஊரை விட்டு கிளம்பும் முன் போன் செய்தேன். தன் அலுவலகத்தில் தான் இருப்பதாக சொன்னார். ஐந்து நிமிடங்கள் செல்லலாம் என்று முடிவெடுத்து வந்தேன். அப்பொழுது, என் நேரப் பற்றாக்குறையை புரிந்து கொண்டவர், எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்தார்.

நான் முதலில் அவரை சந்தித்த குட்டி அலுவலக கட்டிடம் இடிந்து போய் இருந்தது. காரணம் கேட்டேன். "உங்கள் முதல் சந்திப்புக்கு மறு நாள் தான் இப்படி ஆகி போச்சு. சிரிச்சே அந்த கட்டிடத்தை இடிந்து விழ வச்சாச்சு!" என்றார்.
தற்காலிக அலுவலக கட்டிடமாக, பக்கத்தில் இருந்த ஒரு பழைய கல்யாண மண்டபம் இயங்கி கொண்டு இருந்தது. "அண்ணா, நான் வந்த வேளை. உங்களுக்கு பெரிய அலுவலகம் கிடைச்சுடுச்சு." என்றேன்.
"இந்த முறை வந்துட்டு போறீங்க .... என்ன ஆகுதுன்னு பார்க்கிறேன், " என்றார்.

(கொசுறு செய்தி: இப்பொழுது சுகாதார துறையில் இருந்து உணவு துறை பிரிந்து வந்து, தனி துறையாக ஆக்கப்பட்டு, 300 பயனுள்ள பதிவுகள் கொடுத்த அண்ணனுக்கு பெரிய position கிடைச்சுடுச்சே!)

பக்கத்தில் இருந்த ஒரு பெரிய அட்டை பெட்டியை என்னிடம் கொடுத்தார். "பலகாரங்கள் வாங்க கூட, நேரம் இல்லாமல் சுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாயே. இதில், முறுக்கு, தட்டை, சீடை, மனோகரம், மிக்சர், அல்வா எல்லாம் இருக்குது. அமெரிக்காவுக்கு எடுத்து கொண்டு போக," என்றதும், நிஜமாக என் கண்களில் நீர்.

பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை.
அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார். (அத்தோட பலகார பெட்டியும், ஹி ...ஹி....ஹி....ஹி.....)

ஏதோ அவரது பதிவுகளில், பின்னூட்டத்தில் விளையாட்டாக அண்ணன் என்று சொல்ல ஆரம்பித்தேன். அதை கருத்துடன் ஏற்று கொண்டு அவர் காட்டிய அன்பு, மதிப்பு மிகுந்தது. என் கணவர், " ஏதோ பதிவுலக அண்ணன் பார்த்து விட்டு வருவதாக சொல்லிட்டு போனே. வரும் போது, பொங்கல் சீர் பெட்டி மாதிரி ஒன்றை தூக்கி கொண்டு வந்து இருக்கிற. கரும்பும், எனக்கு பட்டு வேட்டி - சட்டையும் மட்டும் தான் மிஸ்ஸிங்," என்று கமென்ட் அடித்தார். அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு , அவருக்கும் ஒரு முறை கிடைத்து இருந்தது. மச்சான்ஸ் இரண்டு பேரும் இப்போ க்ளோஸ் தோஸ்த்து ஆகிட்டாங்க.

இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!




127 comments:

ம.தி.சுதா said...

/////அமெரிக்காவுக்கு எடுத்து கொண்டு போக," என்றதும், நிஜமாக என் கண்களில் நீர். ////

அக்கா அனைவரது பதிவிலும் தங்கள் மீதான பாச வரிகளை கண்ணூடு காணக்கூடியதாக இருந்தது அக்கா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

சேலம் தேவா said...

//நெல்லை பதிவர் சந்திப்புக்கு advertisement ஆக அதை போட்டோ ஷாப் மாற்றி விட்டார். அவ்வ்வ்வ்...... //

பிரபலமானவர்களை பிராண்ட் அம்பாசிடர்களாக உபயோகப்படுத்துவது வழக்கம்தான் சித்ராக்கா..!!இதுமாதிரி நெறய விளம்பரத்துல பாக்கலாம்ன்னு சொல்லுங்க..!! :)

settaikkaran said...

ஹும், காளிமார்க்! பாளையங்கோட்டை நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

//பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை. அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார்//

மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார்! இப்படியான கருத்துக்களைக் கொண்டுள்ள பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிக நல்ல அறிகுறி!

//இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ! //

கரெக்டா சொல்லிட்டீங்க! அரசியல் இல்லாத இடம் எதுவும் கிடையாது. ஆனால், அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிற பெருந்தன்மையை பதிவுலகம் நிச்சயம் கற்றுக் கொடுக்கிறது.

நெல்லை சந்திப்பை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஹி ஹி ஹி சரி சரி விடுங்க..

பாலா said...

பெரிய அளவில் அறிமுகம் இல்லாவிட்டாலும் இதைப் போன்ற பதிவுகளைப் பார்க்கும் போது கடல மிட்டாய் முறுக்கு சாப்பிட்டு வேடிக்கை பார்க்கவாவது வர வேண்டும் என்று தோன்றுகிறது :)

தினமும் நிறைய பதிவுகள் படித்தாலும் ஏனோ உங்கள் பதிவகளுக்கு மட்டும் தான் ரெகுலர் பின்னூட்ட அட்டெண்டன்ஸ் :)

சி.பி.செந்தில்குமார் said...

>
எங்க ஊரில பெரிய ஆபிசர் ஆச்சே..... பந்தா எப்படி இருக்குமோ - அலுவலகத்தில் ஏழு பியூன் தாண்டி, ஏழு கிளெர்க் தாண்டி , ஏழு மணி நேரம் காக்க வைத்து appointment தருவார் என்று ஒரு எண்ணத்தில் தான் சென்றேன்.

உண்மைதான் சாதாரண கவ்ர்மெண்ட் ஸ்டாஃப் பியூன் கூட படம் காண்பிக்கும் கால கட்டத்தில் அண்ணன் ரொம்பத்தான் அடக்கி வாசிக்கிறார்,..

ஸாதிகா said...

//இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!
// சரியாக சொல்லி இருக்கீங்க சித்ரா.

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமா திங்கள்கிழமைதானே பதிவு போடுவீங்க?ஏன்? புதன்னு கேட்கலாம்னு நினைச்சேன்.ஆனா அது என் சுதந்திரம், இதை எல்லாமா கேப்பாங்க?அப்டின்னு அடுஇத்த மீட்டிங்க்ல பல்பு குடுப்பீங்க. அதனால அதுல நான் தலையிடலை.. ஹா ஹா

test said...

//முதன் முறையாக பதிவுலக சொந்தங்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் வந்துச்சோ இல்லையோ, ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு//
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! :-)

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் சொல்வது மிகச் சரி
நான் ஒருமுறை பின்னூட்டதில்
சென்ற மாதம் டெல்லி வந்து போன
விஷயத்தை ஒரு தகவலாக மட்டும்
குறிப்பிட்டிருந்தேன்
உடனடியாக வெங்கட் நாகராஜ் அவர்கள்
தகவல் தெரிவித்திருந்தால் சந்தித்திருக்கலாமே
என பின்னூட்டம் இட்டிருந்தார்
உறவினர்கள் கூட இத்தனை உரிமையோடு
பாசத்தோடு இருப்பார்களா எனச் சொல்லமுடிவதில்லை
தங்கள் அண்ணன் கொடுத்த சீராக அந்தத்
திண்பண்டங்களை அமெரிக்கா கொண்டு செல்வதாகக்
குறிப்பிட்டது உங்கள் உள்ளத்து உயர்வைச் சொல்கிறது
பதிவுலக் பாச உணர்வினைஎடுத்துக்காட்டும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

என்ன சொல்வது ...
திரு சங்கர லிங்கம் அண்ணன் அவரகளை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

உடனே கடலைமிட்டைக்கும் ஹல்வா சாப்பிட என்று நினைக்காதீங்கோ

உணர்வான பதிவு
உங்கள் அன்பின் வெளிப்பாடு இந்த பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்போ சண்டை வருமா வராதா?

சிபி உங்களைபத்தி சொன்னதெல்லாம் உண்மையா? #நாராயணா நாராயணா

test said...

காலி மார்க் கலர் கேள்விப்பட்டிருக்கேன் முன்பு இலங்கை வானொலில சொல்வாங்க! கடலை மிட்டாயுமா? :-)

சந்திப்பை இனிதாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

test said...

காளி மார்க் கலர் கேள்விப்பட்டிருக்கேன் முன்பு இலங்கை வானொலில சொல்வாங்க! கடலை மிட்டாயுமா? :-)
சந்திப்பை இனிதாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

test said...

//// சி.பி.செந்தில்குமார் said...
>>தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஹி ஹி ஹி சரி சரி விடுங்க..///

வேணாம் பாஸ்!
பொங்கிடாதீங்க!
பொறுமை! பொறுமை! :-)

GEETHA ACHAL said...

ரொம்ப நல்ல அனுபவம்..

கடைசி வரிகள் உண்மை...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ஷர்புதீன் said...

இப்படி பாராட்ட வேண்டிய வார்த்தைகளை இப்பவே முழுதும் குத்தகைக்கு எடுத்துட்ட அப்புறம் அடுத்த வருஷம் எத சொல்லி பாராட்டுறது!

வெட்டிப்பேச்சு said...

உங்களது அனுபவப் பகிர்வு மகிழ்ச்சியைத் தருகிறது.

வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

பாசம்னாலே நம்ம ஆபீசர்தான், அவரை பார்த்தாலே போதும் மனசுக்கு ஆறுதல் கிடைத்து விடும் அளவுக்கு அன்பு கொண்டவர்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ! //

கரிக்டுங்கோ.......!!!

S Maharajan said...

//முதன் முறையாக பதிவுலக சொந்தங்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் வந்துச்சோ இல்லையோ, ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு.//

இதுதான் சித்ரா அக்கா,டச்..


//இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான்//

சத்தியமான வார்த்தைகள் அக்கா..

CS. Mohan Kumar said...

Nice to know about a good human being.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சித்ரா அடுத்தமுறை தில்லிக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப்போங்க.. :)ப்ளீஸ்

Unknown said...

ஒரு நாள் இந்த மாதிரி சந்திப்பில் சந்திக்க ஆவல் வருது ....

ஆனந்தி.. said...

போனமாசம் காளிமார்க் கடலை முட்டாய் கம்பெனியை மூடிட்டாங்கனு கேள்வி பட்டேன்..ஓ..இப்ப தான காரணம் புரியுது...:-))))

ஆனந்தி.. said...

சங்கரலிங்கம் அண்ணா..உங்களை பத்தி சித்ரா ஏற்கனவே எக்கச்சக்காமாய் புகழ்ந்து காதில் ரத்தம் வராத குறை..:-))) ஸோ ஸ்வீட் ஷங்கர் அண்ணா நீங்க...அடுத்தவாட்டி சித்ரா பாப்பா இந்தியா வரும்போது மதுரையில் பதிவர் சந்திப்பு போடுங்க...எனக்கும் அப்படியே சித்ரா சொன்ன சீர் ஐடம்ஸ் பார்சல்..

கோமதி அரசு said...

//இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ! //

சித்ரா அருமையாக சொன்னீர்கள்.

அண்ணனின் பாசத்தில் நெகிழ்ந்த தங்கையை கண்டோம் மகிழ்ச்சி.

நம் ஊர் கடலை மிட்டாய் தனி ருசிதான்.

இம்சைஅரசன் பாபு.. said...

நெல்லை சந்திப்பு முடிஞ்சு ..நாங்க பல சதிப்புகள் நடத்தியாசு ...நீக இப்ப தான் எழுதுறீங்க ..டூ ...லேட்

Unknown said...

சார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லி இருக்கீங்க

ஏற்கனவே ரெண்டு மூணு பேரு திகட்ட திகட்ட நெல்லை பதிவர் சந்திப்பை பத்தி சொல்லி புல்லரிக்க வச்சு இருந்தாங்க..

நீங்களும் எங்க தொடரும்ன்னு போட்டு இன்னும் கொஞ்சம் எழுதுவீங்களோன்னு பயந்துட்டேன்...

ஆனந்தி.. said...

அண்ணே...சித்ரா பாப்பா வேணும்னால் ஏமாறும் அல்வா சீரில்..நாங்க மதுரை தங்கச்சி ல...பத்து பவுனு நகையா கொடுத்திருங்க சீர் ஐடெம் ல..:-)) உங்க மாப்பிளைக்கு அரை பவுனு மோதிரம் போட்ருங்க..:-)))

ஆனந்தி.. said...

//நெல்லை சந்திப்பு முடிஞ்சு ..நாங்க பல சதிப்புகள் நடத்தியாசு ...நீக இப்ப தான் எழுதுறீங்க ..டூ ...லேட் //

பாபு...சித்ரா மேடம் லேடி சூப்பர் ஸ்டாரினி ல...!! டூ லேட் ஆ இருந்தாலும் நமக்கு டூ லேட்டஸ்ட் தான்..:-)))

மகேந்திரன் said...

இப்படி ஒரு பதிவர் சந்திப்பை நான் தவற விட்டது எனக்கு
வேதனை அளிக்கிறது.
அடுத்த பதிவர் சந்திப்பில் இறைவன் அருளால் கலந்துகொள்ள
வாய்ப்பிருக்கும் என இறைஞ்சுகிறேன்

Madhavan Srinivasagopalan said...

பதிவுலகம்னா என்னா ? (டவுட்டு)

தமிழ் உதயம் said...

சித்ரா அக்காவை வரவேற்க்க நெல்லை சீமையே காத்திருந்திருக்கிறது. வாழ்த்துகள்.

ராம்ஜி_யாஹூ said...

nice post

அஞ்சா சிங்கம் said...

:)))


.
.
.
இனிமேல் நானும் இந்தமாதிரியே கமண்ட்டு போடுறேன் .யாராவது எனக்கு காளிமார்க்கு சோடாவாவது வாங்கி தராங்கலான்னு பார்க்குறேன் ......

rajamelaiyur said...

//
"நெல்லை பதிவர்கள் சங்க முன்னேற்ற கழக" தலைவர் : "உணவு உலகம் " புகழ் - அண்ணன் குல மாணிக்கம் - திரு. சங்கரலிங்கம் அவர்களையும் ,
மகளிர் அணித்தலைவி - சமூக சேவகி - "மனதோடு மட்டும் " கௌசல்யாவையும் நான்கைந்து முறைகள் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

//

நீங்க பெரிய அரசியல் வாதியா வர நல்ல வாய்ப்பு உள்ளது

சக்தி கல்வி மையம் said...

இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!///// கரெக்டா சொல்லி இருக்கீங்க..

சக்தி கல்வி மையம் said...

//பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை. அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார்//

அவர் நிச்சயமாக பாராட்ட பட வேண்டியவர்,,,

சக்தி கல்வி மையம் said...

சந்திப்பை இனிதாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Unknown said...

, தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. //
யப்பா நானில்லை. தப்பித்தேன்.

தக்குடு said...

//பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை.
அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு//

100% சரியான வரிகள். அதனாலதான் ப்ளஸ்/மைனஸ் ஓட்டு அக்கப்போருக்கே இது வரைக்கும் போகலை. நெல்லைல இருந்திருந்தா நானும் வந்துருப்பேன்.....:(

M.R said...

சிரிச்சே அந்த கட்டிடத்தை இடிந்து விழ வச்சாச்சு!"

சிரிச்சா நோய் விட்டு போகும் ,கட்டிடம் கூடவா விட்டு போகும். ஹாஹாஹா பதிவின் கடைசியாக நீங்கள் சொல்லியிருப்பது உண்மை தாங்க .பதிவுலகத்தார் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் சகோதரி .

Unknown said...

பகிர்வு அருமை சகோ...அண்ணனின் பணி தொடர வாழ்த்துக்கள்...நன்றி!

'பரிவை' சே.குமார் said...

உங்கள் அன்பின் வெளிப்பாடு இந்த பதிவு.

'பரிவை' சே.குமார் said...

உங்கள் அன்பின் வெளிப்பாடு இந்த பதிவு.

நட்புடன் ஜமால் said...

சரிங்கங்கோ ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கடைசியாக வந்ததினால்
ஏதும் சொல்வதிற்கில்லை....

அப்படியே கிளம்பிக்கிறேன்..

சேக்காளி said...

படிக்கும் போதே சந்தோசமா இருக்கு.
//இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான்//
இதில், முறுக்கு, தட்டை, சீடை, மனோகரம், மிக்சர், அல்வா எல்லாம் இருக்குதுங்கறது எழுத மறந்திட்டியா?.இல்ல நாங்களும் பங்கு கேப்பமுன்னு எழுதாம விட்டுட்டியா?.
ஒரு மாச சம்பளத்த லக்கேஜுக்கு கட்டிட்டன்னு மச்சான் ரெண்டு நாளா உம்முனு இருந்தாராம்ல. நெசமாவாக்கா.அடுத்த தடவ அப்டில்லாம் நடக்காதுன்னு சமாதானப் படுத்து.அண்ணங்கிட்ட(சங்கரலிங்கம்) சொல்லி ரெண்டு மாச சம்பளத்துக்கு வேட்டு வச்சிருவோம்.சொன்ன சொல்ல காப்பாத்தணுமில்லா.

ஆமினா said...

மன நிறைவை கொடுத்த சந்திப்பு அனுபவங்கள் ;)

குறையொன்றுமில்லை. said...

சித்ரா தின்பண்டங்கள் எல்லாம் அமெரிக்கா கொண்டு செல்லும் வரை
காலி செய்யாமல் கொண்டு சென்றீர்களா
வழியிலேயே காலியா.இப்போ நெல்லையில் பாலா கடலை மிட்டாய்
தான் கிடைக்கிரது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இனிய சந்திப்பின் நினைவலைகள்.

Anonymous said...

வேண்டும் என்றே பதிவுலக "செல்லங்கள்" மனோ மற்றும் சிபியை பற்றி எழுதாமல் இருந்ததற்கு கண்டனத்தை பதிவு செய்கிறோம்! (பதிவுலக உள்/வெளிக்குத்து)

அம்பாளடியாள் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
//பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை. அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார்//

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.அந்த நல்ல மனதைப் பாராட்டுகின்றேன் .நன்றி சகோதரி பகிர்வுக்கு .மீண்டும் உங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றேன்.

arasan said...

நல்ல விடயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க மேடம் ...
சாருக்கும் வாழ்த்துக்கள்

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

//பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை.
அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார்.//

உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை...!

சசிகுமார் said...

என்னடா இன்னும் போடளிஎன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்

Unknown said...

நல்ல அனுபவம்.இனிய சந்திப்பு.
வாழ்த்துக்கள்.

mamtc said...

Congratulations. What an honor. Hats off Chitra!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீசர் எல்லார் மனசிலேயும் ரொம்ப உயர்ந்துட்டார்.....!

ADHI VENKAT said...

சித்ரா எப்படி இருக்கீங்க? ஊர் ட்ரிப்பெல்லாம் நல்லா இருந்துச்சா?

பதிவுலகம் நல்ல நட்புக்களையும், உறவுகளையும் ஏற்படுத்துகிறது.

சுசி said...

வாழ்க உங்கள் பாசம் :)) வளர்க பதிவர்கள் புகழ் :))

ப.கந்தசாமி said...

ஆஜர்.

Prabu Krishna said...

நல்ல பதிவு.

என்னை பொறுத்த வரை எனக்கு எல்லோரும் உறவுகளே.... எனக்கு இந்த உறவுகளின் உரிமை பிடித்து இருக்கிறது.

மாய உலகம் said...

//அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார். //

ஆஹா அருமை சகோதரி

ஆனந்தி.. said...

////ஆனந்தி.. said...
அண்ணே...சித்ரா பாப்பா வேணும்னால் ஏமாறும் அல்வா சீரில்..நாங்க மதுரை தங்கச்சி ல...பத்து பவுனு நகையா கொடுத்திருங்க சீர் ஐடெம் ல..:-)) உங்க மாப்பிளைக்கு அரை பவுனு மோதிரம் போட்ருங்க..:-)))//
யாரங்கே,கல்யாணி கவரிங் கடையை சீக்கிரம் திறக்க சொல்லுங்கப்பா. //

ஷங்கர் அண்ணா...:-)) நீங்க பாஜ மலரு ஜிவாஜி...பத்து பவுனுன்னு ரொம்ப குறைச்சலா சொல்லிட்டேன்னு எல்லாம் இப்பிடி கோவிக்க படாது...உங்க வசதிக்கு தகுந்த மாதிரி கூட பத்து கூட சேர்த்து போடுங்க...எனக்கு எங்க அண்ணன் கெவுரவம் ரொம்ப முக்கியம்..:-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காளி மார்க் கடலை மிட்டாய், சூடான அல்வா, மிக்சர் சகிதமாக வரவேற்றார். முதன் முறையாக பதிவுலக சொந்தங்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் வந்துச்சோ இல்லையோ, ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு. //

நாக்கில் நீர் ஊற வைத்து விட்டீர்களே!

நல்ல அருமையான பதிவு.

உங்களைப்பார்க்க கோபு மாமாவும் சீர் பக்ஷணங்களுடன் நெல்லைக்குப் புறப்பட்டு வந்திருக்கலாம்.

நீங்களாவது எனக்கு மெயிலில் வாக்களித்தபடி திருச்சிக்கு வர முயற்சித்திருக்கலாம்.

பிராப்தம் இருந்தால் அடுத்தமுறையாவது சந்திக்க முயற்ச்சிப்போம்.

அன்புடன் vgk

Unknown said...

கண்காணத நாட்டில் இருந்தாலும்
இருந்தாலும் நாளும் கணமுன்
வந்து கருத்துரைத் வழங்கும்
நன்றி! வணக்கம்! வாழ்த்து!
நெல்லை மணம் வீசும்
எழுத்தும் வெள்ளை மனமும்
வாழ்க! வளர்க!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

//அம்மா கூடவே இருந்து அவர்களை உற்சாகப் படுத்துவதில் நிறைய நேரம் சென்றது. பலனும் கிடைத்து இருக்கிறது. இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.//பதிவு உணர்வு பூர்வமாக இருந்தது.
வாழ்த்துக்கள்.

KParthasarathi said...

"பதிவுலகம் என்றால் அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான்" சீடை,முறுக்கு அல்வா நிறைந்த பெட்டியும் கூட சேர்த்துதான்!!
நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை

Anonymous said...

தன்னை பிரபலமாக நினைத்து கொண்டு, பில்ட் அப்பு கொடுத்த சில பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஹி ஹி ஹி சரி சரி விடுங்க//
அழகா சொல்லிட்டீங்க ஹிஹி

KANA VARO said...

பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை.
அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார்.//

உண்மை அக்கா! நல்ல படியா சந்திப்பு முடிந்திருக்கு போல!

Anonymous said...

ஆண்டவா..... அங்கே இருந்த மாதிரியே, கமென்ட் அடிக்காமல் என் வாயை பொத்தி கொண்டு, இந்த பதிவை எழுதி முடிக்க உதவி செய்யும். ஆமென்." //
அதான் சொல்லிட்டீங்களே

Anonymous said...

அருமையான மனிதர் உணவு உலகம் எனும் ப்ளாக் மூலம் பல விசயங்களை உண்மைகளை விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்....என் நன்றியும்..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பாச மலர்களுக்கு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பதிவர் சந்திப்புக்கு நாங்கள் வராவிட்டாலும், அது பற்றிய குறிப்புகள் உங்கள் பதிவில் இருந்து பெற முடிந்தது. மிக்க நன்றி...

Anonymous said...

நெகிழ்ச்சி...அடுத்த முறை எங்களையும் அழையுங்கள்...

Dhiyana said...

//"அண்ணா, நான் வந்த வேளை. உங்களுக்கு பெரிய அலுவலகம் கிடைச்சுடுச்சு." என்றேன்.//

எங்க‌ள எப்ப‌ வ‌ந்து பார்க்க‌ வ‌ர்றீங்க‌?

இராஜராஜேஸ்வரி said...

இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!//


முத்தாய்ப்பான முத்தான கருத்துக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Karthikeyan Rajendran said...

அது எப்படி சகோதரி உங்களுக்கு மட்டும் பின்னூட்டங்கள் மழை போல வந்து விழுகிறது. எனக்கும் அந்த ரகசியத்தை சொல்லுங்களேன்,
என் போஸ்ட்டையும் பாருங்கள் http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html#
,
பதிவர்கள் சந்திப்பு பட்டையை கிளப்புது , தொடருங்கள் சகோ!!!!!!!!

கவிதை பூக்கள் பாலா said...

பதிவர் சந்திப்புக்கு கலந்துக்கனும் அப்படின்னு நினைக்கிறேன் ஆனால் எப்ப எங்க நடக்குதுன்னு தெரிய மாட்டேங்குது . சென்னையில ஏற்பாடு செய்யுங்களேன் நண்பர்களே ! நலமாக இருக்கும் .

கே. பி. ஜனா... said...

நெகிழ வைத்த பதிவு !

கே. பி. ஜனா... said...

நெகிழ வைத்த பதிவு !

சாந்தி மாரியப்பன் said...

படிக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

@சங்கரலிங்கம் அண்ணா.. கல்யாணி கவரிங் மாதிரி பெரிய கடைகளுக்கு கூட்டிட்டுப்போயி உங்களுக்கு செலவு வைக்கமாட்டோம்.. ஏதோ செவாமி ஜூவல்லர்ஸாமே??.. நெல்லையப்பர் கோயிலுக்க கிட்ட சின்னதா ஒரு கடை வெச்சிருக்காங்களாம். அங்கே ஒரு அம்பது+50 பவுன்ல வாங்கி சீர் செஞ்சாப்போதும்.

மறுக்கா சொல்லிக்கிறேன்.. நாங்க எங்களுக்காக கேக்கலை,.. உங்க கவுரவம் குறைஞ்சுடப்டாது பாருங்க, அதுக்குத்தான் :-)))))))))))))))))

செங்கோவி said...

ஆஃபீசரின் எளிமை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது தான்..அந்த சந்திப்புக்காக அவர் எடுத்த முயற்சிகளும் பெரிய விசயம் தான்.

செங்கோவி said...

//ரொம்ப நாள் கழிச்சு , காளி மார்க் ஸ்பெஷல் கடலை மிட்டாய் பாக்கெட் கையில் கிடைத்ததும் வந்துச்சு.//

ஆஹா...ஊரை ஞாபகப்படுத்திட்டீங்களே..

நிரூபன் said...

அப்போ...நான் தான் லாஸ்ட்டா வந்து நூறு அடிக்கப் போற ஆளா...

நிரூபன் said...

"நெல்லை பதிவர்களின் தானை தலைவர் வாழ்க!"//

தலைப்பைப் பார்த்தால்...ஆப்பிசர் பதவி உயர்வு பெற்றுப் போறார் என்று பொய் சொல்லிட்டு, ஏதோ ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து ஓட்டுக் கேட்கப் போறார் போல இருக்கே.

நிரூபன் said...

தான் ஒரு பெரிய அதிகாரி என்ற அகங்காரம் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார். //

பழகுவதற்கு இனிமையான மனிதர் என்பதை, அவர் வாயிலிருந்து வரும் மென்மையான வார்த்தைகளே காட்டி விடும்.

வாழ்க ஆப்பிசர்...

போனில் பேசும் போது கூட...
சிக்னல் கிடைக்கலை என்றாலும் கடுப்பாகாமல் காத்திருந்து பேசும் பண்பு ஆப்பிசருக்கு உண்டு.

ஹா...ஹா...

நிரூபன் said...

கொசுறு செய்தி: இப்பொழுது சுகாதார துறையில் இருந்து உணவு துறை பிரிந்து வந்து, தனி துறையாக ஆக்கப்பட்டு, 300 பயனுள்ள பதிவுகள் கொடுத்த அண்ணனுக்கு பெரிய position கிடைச்சுடுச்சே!)//

அவ்...............அவ்..............

வாழ்க ஆப்பிசர்.

நிரூபன் said...

இதனால், பதிவு லோகத்துக்கு சொல்லப்படுவது என்னவென்றால், பதிவுலகம் என்றாலே கோஷ்டிகள், உள்குத்துகள், சண்டைகள், சச்சரவுகள் என்று அரசியல் மேட்டர் மட்டும் இல்லை. இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!//

இந்த வசனம் யாருக்குங்க..

பெண்களே உள்குத்துப் பதிவு போட ஆரம்பிச்சிட்டாங்களோ....

ஐயோ....நாடு தாங்காது அக்காச்சி,

நிரூபன் said...

ஆப்பிசர் எப்போதுமே கனிவான குணமுடையவர் என்பதற்கு அடையாளமாக இருப்பது,
நெல்லைப் பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பானது தடைப்பட்ட வேளையிலும் சினம் கொள்ளாது சந்தோசமாக போன் பேசினார் பாருங்க................

கிர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கோமதி அரசு said...

(என் அப்பாவின் மறைவுக்கு பின், நான் இந்தியா சென்ற முதல் ட்ரிப். நெல்லையில், எங்கள் வீட்டில் அந்த சோகத்தின் சாயல் இன்னும் பரவி இருந்தது. அம்மா கூடவே இருந்து அவர்களை உற்சாகப் படுத்துவதில் நிறைய நேரம் சென்றது. பலனும் கிடைத்து இருக்கிறது. இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.)

அம்மா இயல்பு நிலைக்கு திரும்பியது அறிந்து மகிழச்சி.
இறைவனுக்கு நிச்சியம் நன்றி சொல்ல வேண்டும்.

சத்ரியன் said...

//ஏழு பியூன் தாண்டி, ஏழு கிளெர்க் தாண்டி , ஏழு மணி நேரம் காக்க வைத்து...//

அக்கா,
உங்க நெனப்பு அப்பிடி இருந்திருக்கு.
இங்க நான் எத்தன ‘கமெண்ட்டு’கள தாண்டி வந்திருக்கேன் தெரியுமா? மொதல்ல ஒரு கடலை மிட்டா பொட்டலத்த குடுங்க. சாப்டுக்கிட்டே பின்னூட்டம் போடறேன்.

சத்ரியன் said...

சித்ராக்கா,

வலையுலகம் .... அன்பு நிறைந்ததாய் இருக்குதுங்க.

நாடோடி said...

நல்ல அனுபவம் தான்.. இந்த நட்புகள் வளரட்டும்..

ஸ்ரீராம். said...

//"அம்மா கூடவே இருந்து அவர்களை உற்சாகப் படுத்துவதில் நிறைய நேரம் சென்றது. பலனும் கிடைத்து இருக்கிறது. இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்"//

கிரேட்.

விவரங்கள் ரொம்பக் கம்மியாக இருப்பதால் இது பற்றி மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கிறோம்! உங்களாலும் சும்மா இருந்துவிட முடியாது என்றும் அறிந்தே வைத்திருக்கிறோம்...!(பின்னூட்டப் பக்கம் திறக்காமல் சண்டி செய்தது. எப்போது திறக்குமோ என்று காத்திருந்து....! எல்லா ப்ளாக்கிலும் இதே கதி!)

மாலதி said...

இந்த பதிவர்களும் கூட்டம் நடக்கும் பொது வர எண்ணினேன் இயலவில்லை அந்த செய்தியை தீர்த்து விட்டீர் பாராட்டுகள்

ராஜ நடராஜன் said...

மறுபடியும் மகுடத்தில் போய் உட்கார்ந்துகிட்டீங்க!

Jayanthy Kumaran said...

last lines are very impressive chitra..
Tasty Appetite

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு சகோ...

மேலும் எழுதுங்கள்.

aotspr said...

"நல்ல பதிவு".
பாராட்டுகள்.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

nellai ram said...

உங்களது அனுபவப் பகிர்வு மகிழ்ச்சியைத் தருகிறது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//தான் ஒரு பெரிய அதிகாரி என்ற அகங்காரம் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.//

//தன்னடக்கத்துடன் , சக பதிவரின் கருத்துக்காக மரியாதை கொடுக்கும் குணத்தை சொல்லாமல் சொன்னார்.//

//சமூக அக்கறையோடு அரசாங்க அதிகாரிகள் செயல்பட்டால், எந்த அளவுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை சொல்லாமல் சொன்னார்.//

//அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார்.//

நன்று... நன்று... நன்று...!

பாராட்டப்பட்டவருக்கும்
பாராட்டியவருக்கும் என்
பாராட்டுக்கள்
உரித்தாகுக..!

Anonymous said...

///இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ!///

இப்படியான அனுபவங்கள், சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

கலக்கிட்டீங்க!

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு சித்ரா.

வேலன். said...

/பதிவுலகத்தில் கிடைக்கும் ஹிட்ஸ், பின்னூட்டங்கள் , வோட்டுக்கள் எல்லாம் முக்கியமில்லை. அப்பழுக்கில்லாத உண்மையான பாசம் தான் நமக்கு கிடைக்கும் பரிசு என்பதை சொல்லாமல் சொன்னார்ஃஃ

வலை பதிவர்கள் பாசத்தில் நானும் மூழு்கிஇருக்கின்றேன்.நன்றி சகோதரி..
வாழக் வளமுடன்.
வேலன்.

Unknown said...

Hi Chitra, long time no see - thanks for your sweet comment :) always a pleasure!!! wish I were more proficient in Tamil would be at your blog so often!

Jaleela Kamal said...

present teacher apparam vareen

காட்டான் said...

நான் கொஞ்சம் லேட்டா வந்திட்டேங்க..

வாழ்த்துக்கள் சகோதரி..

காட்டான் குழ போட்டான்..

காட்டான் said...

நான் கொஞ்சம் லேட்டா வந்திட்டேங்க..

வாழ்த்துக்கள் சகோதரி..

காட்டான் குழ போட்டான்..

M.R said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ

Murugeswari Rajavel said...

இது போன்ற நிகழ்வுகள் என்றும் நெகிழ்வுகள்.அதனைச் சித்ரா பதிவு செய்யும் விதம் எப்போதுமே சிறப்பு.

Unknown said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

Unknown said...

அப்பா! ஏகப்பட்ட கருத்துரைகள்
வாழ்த்துக்கள்
வலைப் பக்கம் வரலியே!

புலவர் சா இராமாநுசம்

Jeyanthi said...

//இந்த மாதிரி அன்பு, பாசம், பரிவு, சொந்தம் எல்லாம் நிறைந்து கிடைக்கும் செண்டிமெண்ட் லொள்ளும் கூட இருக்கும் இடம் தான் என்று தெரியப்படுத்திக் கொள்றோமுங்கோ! //

நன்றி சித்ரா அக்கா for ஷேரிங் திஸ் பதிவு
நான் பதிவுலகத்துக்கு ரொம்ப புதுசு !
இது எல்லாம் கேட்கும் போதும் பாக்கும் போதும் இன்னும் எழுதனும் தோணுறத விட நண்பர்கள் கிடைக்கணும் தோணுது !
நல்ல யோசிச்சு பார்த்த...கடைசியா எல்லார் மனமும் பாசத்த தான் தேடுது :)

நன்றி,
மயில்

டக்கால்டி said...

ஆபிசர் சார் அருமையான மனிதர்...அவரைப் பற்றிய உங்கள் இடுகைக்கு நன்றி

அம்பாளடியாள் said...

இன்றும் ஒரு வித்தியாசமா ஆக்கம் என் தளத்தில் உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

goma said...

தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் முத்தான மூன்று.
தட்டி விடுங்கள் உங்கள் கருத்துக்களை

Thenammai Lakshmanan said...

மிக அருமை சித்து..:)

ஸ்ரீதர் said...

அருமையான படைப்புகள் உங்களுடையது!
எனது தளத்துக்கு ஒரு முறை வந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் அக்கா!

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம்.ஏம்மா நானுந்தான் ஒனக்காக எங்கஊர் சீப்புச்சீடையும் வெள்ளைப் பணியாரமும் வச்சுக்கிட்டு காத்திருந்தேன்
ஒனக்குத்தான் வரநேரங் கெடைக்கல அடுத்தமுறையாவது வாம்மா. நல்லது.ஆசீர்வாதங்கள்

அம்பாளடியாள் said...

என்ன நடந்தது சகோ உங்கள் அடுத்த ஆக்கங்களைத் தொடரவில்லையா?..
இன்று உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் .முடிந்தால் வாருங்கள் .

ரிஷபன் said...

நான் முதலில் அவரை சந்தித்த குட்டி அலுவலக கட்டிடம் இடிந்து போய் இருந்தது. காரணம் கேட்டேன். "உங்கள் முதல் சந்திப்புக்கு மறு நாள் தான் இப்படி ஆகி போச்சு. சிரிச்சே அந்த கட்டிடத்தை இடிந்து விழ வச்சாச்சு!" என்றார்.

சிரிப்பினூடே முழு பதிவிலும் நிறைந்திருந்த வாத்சல்யம் மனசை சந்தோஷப் படுத்தியது..