Thursday, December 17, 2009

குழந்தை கால நட்பு


முதல்   நட்பு




நிலா நிலா ஓடி வா என்றால்

நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
எழுதும் குச்சியை பொம்மை ஆக்குவதோ
எதுவும் இல்லாமல் ஊசி ஆக்குவதோ
என்ற கவலை மட்டும் இருந்த பருவம்.
கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்.
அழ வைக்காமல் இருந்தாலே -
நட்பு என்று புரிந்தும் புரியா பருவம்.
ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு  தெரிந்ததில்லை;
சொல்வது கூட எல்லாம் புரிந்ததில்லை.
பால் வடியும் முகத்துடன் என் அருகில்  இருந்த
பால்ய தோழி, இன்று இருக்கும் -
இடமோ உருவமோ பருவமோ முகமோ  நானறியேன் -
வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,
நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்
நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.
நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க
நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன்.

96 comments:

அண்ணாமலையான் said...

பிள்ளை மனம் வெள்ளை குணம் கள்ளமில்லா நல்ல எண்ணம் கொண்ட சித்ராவின் தோழி எங்கிருந்தாலும் வாழ்க என பதிவுலகம் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்..

Chitra said...

தோழரே, மிக்க நன்றி. பிறரை வாழ்த்தும் உள்ளங்களில் தான் நட்பு தளைத்து வளர்கிறது.

சரவணன். ச said...

//கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்//

இந்த வரியை படித்த அடுத்த நொடி என் மகள்தான் என் மனதில் தோன்றினாள்.

அருமை தோழி சித்தரா

Chitra said...

மிக்க நன்றி, சரவணன். கருத்துக்கும் தோழமையான வார்த்தைகளுக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// அண்ணாமலையான் said...
பிள்ளை மனம் வெள்ளை குணம் கள்ளமில்லா நல்ல எண்ணம் கொண்ட சித்ராவின் தோழி எங்கிருந்தாலும் வாழ்க என பதிவுலகம் சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்.//

ஆமாம் இந்த ஜோதியிலே நானும் சேர்ந்து கூவிக்கிறேன்... ச்சே... வாழ்த்துகிறேன்.

Chitra said...

நன்றி ராகவன் சார். கூவுனதுக்கு ....ச்சே.... வாழ்த்தியதற்கு.

Prathap Kumar S. said...

நானும் வாழ்த்திக்கொள்கிறேன்... எல்லாரும் நல்லாருங்க மக்கா..

Chitra said...

நாஞ்சிலாரே, நலமா? நன்றி, மக்கா

vasu balaji said...

நட்பை வாழ்த்தும்
நட்புக்கு வாழ்த்துகள்..

Chitra said...

பாமரன் சார், ரொம்ப நன்றிங்க. வாழ்த்துக்கும் நட்புக்கும்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
//

ஆம் நிதர்சனமா சொல்லியிருக்கீங்க...

Chitra said...

நன்றிங்க, வசந்த் ............ பிரியமுடன்.

Dr.Rudhran said...

some memories are better that way; meeting a dream may not be poetic

பித்தனின் வாக்கு said...

//கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்

கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.//

அட்டகாசமான வரிகள். இதுக்கு ஆயிரம் விருதுகள் தரலாம்.

//ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு தெரிந்ததில்லை;
சொல்வது கூட எல்லாம் புரிந்ததில்லை.//

மிகவும் அழகு. உண்மை.

// நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க

நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன். //
உங்களைப் போன்றவரை நண்பியாக அடைந்தவருக்கு ஒரு குறையும் வராது. நானும் அவ்வண்ணமே வேண்டுகின்றேன். நல்ல நினைவு கூர்தல். நன்றி.

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு வரியும் அழகு.

//அந்த நட்பின் வெளிச்சத்தில்,
நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்
நல்ல நண்பர்களை கண்டு கொண்டு//

அந்த பால்ய நட்புக்கு நன்றியுடனான மரியாதை. அருமை. நாங்களும் அவரவர் பால்ய நட்புக்களை நினைவு கூர்ந்து வாழ்த்திக் கொள்கிறோம். நல்ல இடுகை சித்ரா.

Thenammai Lakshmanan said...

chitra
its nice and true yaar
we miss our friends too

nayabagam vanthuruchu
ummmmm

goma said...

ஆத்தாடி முளைச்சு மூணு எலை விடலை அதுக்குள்ளே என்னமா போடுது...[நான் பிளாகைச் சொன்னேன்]

சித்ராவின் தேடலை நான் தொடரலாமா?

முகம் தெரியா தோழி ,
என்னைப்போல் அவளும்,
பால்ய தோழியான என்னைத்
தேடிக் கொண்டிருப்பாளே!
நான் நலம் என்று அவளுக்கு
நான் எப்படித் தெரிவிப்பேன்..
அவளும் வலைப்பூ பின்னி
என்னை வலை போட்டுத் தேடுவாளோ
அவள் வலையில் நான் விழுவது எப்போது?
எங்கள் பால பருவத்தை
நினைவில் கொண்டுவந்து
மகிழ்ச்சியில் திளைப்பது எப்போது?

sathishsangkavi.blogspot.com said...

//ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு தெரிந்ததில்லை;
சொல்வது கூட எல்லாம் புரிந்ததில்லை.//

இது தாங்க நட்பு....

நட்பை இந்த அளவிற்கு நேசிக்கும் உங்களுக்கும் உங்கள் தோழிக்கும்
எனது வாழ்த்துக்கள்.....

Chitra said...

Thank you, Dr.Rudhran. I want to keep this special friendship pure and special in my mind as it is.

Chitra said...

//அட்டகாசமான வரிகள். இதுக்கு ஆயிரம் விருதுகள் தரலாம். // .........
.............இந்த பித்தனின் வாக்கும் விருதுதான் எனக்கு. ரொம்ப நன்றி.

Chitra said...

nandri, pulavan pulikesi.

Chitra said...

//ஒவ்வொரு வரியும் அழகு.//
ராமலக்ஷ்மி அக்கா, நீங்கள் பாராட்டியிருக்கும் விதமும் அழகு.

Chitra said...

thenammai akkov, thank you very much for the nice comment.

Chitra said...

கோமா மேடம், ஆமாம், இரண்டு மாதம் கூட ஆகவில்லை. எல்லாம் இறைவன் அருள்.
ப்லாக் ஆரம்பித்ததில் இருந்து உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Chitra said...

வாழ்த்துக்கும் நட்புக்கும் ரொம்ப நன்றிங்க, சங்கவி.

பூங்குன்றன்.வே said...

//வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,
நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்
நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.//

நல்ல மனசும்,நல்ல நட்பும்..
வாழ்த்துக்கள் தோழி.

Chitra said...

நன்றி, நண்பர் பூங்குன்றன்.

பெசொவி said...

பள்ளிக் கால நட்புகளை இப்போது நினைத்தாலும் மனம் மகிழ்ச்சியில் திளைப்பது இயல்புதான். உங்கள் தோழி நலமுடன் இருக்க நானும் இறைவனை வேண்டுகிறேன்.

Chitra said...

கருத்துக்கு மகிழ்ச்சி, பெயர் சொல்ல விருப்பமில்லை.

மகா said...

//அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு தெரிந்ததில்லை;//

உண்மையான அனுபவத்தின் வரிகள் ...

Chitra said...

2009/12/17 Dineshkumar Anbumani

சித்திரையில் பிறந்த என் தோழி
உன் கையில் தமிழ் கணி்னியின் நாழி
உன் திறமை எனக்கு தெரியமால் போனதடி,
நான் பாவி.

Chitra said...

தினேஷ், மின்-அஞ்சல் மூலமாக அனுப்பிய வாழ்த்து புலம்பலுக்கு நன்றி நண்பா..........

Chitra said...

மிக்க நன்றி, மகா.

மீன்துள்ளியான் said...

கவிதை அருமை .... உங்கள் தோழியின் நினைவை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீங்க
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Chitra said...

அருமையாய் வெளிப்படுத்திய கருத்துக்கு நன்றி, மீன்துள்ளியான்.

aazhimazhai said...

குளிந்த மழையின் சாரலை போல உங்க கவிதை மனசுக்கு இதமா இருக்கு

Chitra said...

உங்கள் கவிதை "மழை" எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆழிமழை. ரொம்ப சந்தோஷம், முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

கண்ணா.. said...

//பால்ய தோழி, இன்று இருக்கும் -

இடமோ உருவமோ பருவமோ முகமோ நானறியேன் -

வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,

நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்

நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.

நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க

நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன்//


வித்தியாசமான சிந்தனை...


இந்த சந்தர்பத்தில் நானும் என் பால்ய தோழனுக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்..


“ எங்க இருந்தாலும் நல்லா இருடே....மக்கா..”

கண்ணா.. said...

//பால்ய தோழி, இன்று இருக்கும் -

இடமோ உருவமோ பருவமோ முகமோ நானறியேன் -

வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,

நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்

நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.

நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க

நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன்//


வித்தியாசமான சிந்தனை...


இந்த சந்தர்பத்தில் நானும் என் பால்ய தோழனுக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்..


“ எங்க இருந்தாலும் நல்லா இருடே....மக்கா..”

pattchaithamizhan said...

Arumai...

pattchaithamizhan said...

Akkaa....
arumai

ஹேமா said...

ஆழமான நட்பு அழகான உங்கள் மனதோடு இணைந்திருக்கிறது சித்ரா.

Priya said...

உண்மையிலே குழந்தை கால நட்பு என்பது இறுதிவரை நம்மோடு வரும் நினைவுகள்!

ஸ்ரீநி said...

ஒரு நிறைவு ..

ISR Selvakumar said...

மழை வாசனையுடன் வருமா எனத்தெரியாது. ஆனால் முதல் மழைக்குப் பின் மண்ணிலிருந்து ஒரு வாசம் வரும். அதே போல முதல் வாசிப்பிலேயே சில ஞாபகங்களை கிளறிவிட்டதால் இது சிறந்த கவிதை.

ரிஷபன் said...

கவிதை பால்ய நினைவுகளுக்குக் கொண்டு போனது என்னை..

Chitra said...

நன்றி. நீங்களும் நல்லா இருங்க, கண்ணா.

Chitra said...

தமிழ் தம்பி, உனக்கே இது ஓவரா தெரியல்லை. ஹா, ஹா, ஹா,..... ரொம்ப நன்றிடா.

Chitra said...

ஹேமா, ரொம்ப நன்றி.............. நட்புடன்.

Chitra said...

பிரியா, ரொம்ப நன்றிங்க. என்றும் இனிய நினைவுகள் உங்களுடன் இருக்கட்டும்.

Chitra said...

Thank you, Srini.

Chitra said...

செல்வகுமார் சார், இது ப்லொக்கில் எனது முதல் கவிதை. தங்களின் உற்சாகப்படுத்தும் கருத்துக்கு நன்றி.

Chitra said...

ரிஷபன் சார் - தொடர்ந்து தரும் அருமையான கருத்துக்களுக்கு நன்றி, நண்பா.

அண்ணாமலையான் said...

நம்ப கைராசிய பாத்தீங்களா ? கமெண்ட் கல்கத்தா வரைக்கும் நீளுது...( நமக்கு ஏதாவது கமிசன் உண்டா?)

Chitra said...

நண்பர்களுக்குள் கமிஷனா? அண்ணாமலையான் நண்பரே, கல்கத்தாவில் ஒரு ரசகுல்லா வாங்கி சாப்பிட்டா போச்சு.

suvaiyaana suvai said...

நிதர்சனமா சொல்லியிருக்கீங்க!!!

Chitra said...

நன்றி, susri.

Chitra said...

(via e-mail)

Amudha Thamizh commented on your status:

"ஒன்றை இழந்தோம்..
எங்கோ ஒரு திறந்த கதவின் வழியாய் .
மற்றொன்றை பெறுவதற்கு...
உனக்கும் புரியும்
எனக்கும் புரியும்
இந்தக் கதைகள்...
நீ கன்னக்குழிகளில்
நான் நட்புடன் நீட்டிய கைக் குட்டைகளில்..
i want to quote mydhus poetic lines too here...
///என்ன வாழ்க்கையிது என்று..
ஒரு சமயம் அலுத்து ஓய்ந்திருந்த போது....
மெல்லிய இனிய தென்றல் காற்றை போல் நண்பர்களின் முகங்களும் நினைவுகளும்..
நீர் குமிழிகளாய் ..
என்னை அறியாமலே
நான் என் மனதில் பூட்டி வைத்து விட்டு
சாவியை எங்கோ தொலைத்திருந்தேன்.
சாவியை தேடி அவர்களை விடுதலை செய்தேன்...
நினைவுகள் நிற்கவேயில்லை.///

பின் என்னுடையதும்..
///முடிவாய் முத்தங்கள் ஒன்றும் இடாமல்
மூச்சை மூடி சென்று விட்டாள் அவள்.
கடைசியாய் அவள் எழுதிய கடிதம்
இன்னும் என் ரத்தத்தில் ஒரு வெள்ளணுவாய்..
சீயக்காய் பாக்கெட்டில் கிழித்தெடுத்த ரோஜாப்பூவை ஒட்டி
அன்புள்ள அமுதாவுக்கு என்று ஆரம்பித்திருந்தது அது
முடிவாய் போய்ட்டு வர்ரேன் என்றும் சொல்லியிருந்தது..
மொட்டை நாக்கை வைத்து அவள்
"போய்த்து வர்ரேனென்று "சொல்வது போலிருக்க
மடித்து வைத்து விட்டேன் மடலை
இன்று காலங்கள் ஓடி விட
காணாமல் போன என் பால்ய காலத்து நட்பை
தடவித் தடவித் தேடிக் கொண்டிருக்கிறேன்
என் கணிணியின் கருப்பான தட்டச்சு பொத்தான் களுக்குள்...

மீண்டும் சொல்கிறேன்..
ஒரு வாயில் மூட இன்னொன்று சிரமமில்லாமல் திறந்து கொண்டது..
நட்பாய்.."

ஜெட்லி... said...

பின்னிட்டேள் போங்க....

நல்ல நினைவுகள்.

Chitra said...

Jetli - Blog உலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பனே, ரொம்ப நன்றி.

Mythili (மைதிலி ) said...

kalakkura chitra... unnoda kavidhaiyum.. atharku kidaitha comments um padichchittu pilantha vaayai innum moodala.. Thanks for sharing this. I like goma's comment which is like a continuation to yours

"முகம் தெரியா தோழி ,
என்னைப்போல் அவளும்,
பால்ய தோழியான என்னைத்
தேடிக் கொண்டிருப்பாளே!
நான் நலம் என்று அவளுக்கு
நான் எப்படித் தெரிவிப்பேன்..
அவளும் வலைப்பூ பின்னி
என்னை வலை போட்டுத் தேடுவாளோ
அவள் வலையில் நான் விழுவது எப்போது?
எங்கள் பால பருவத்தை
நினைவில் கொண்டுவந்து
மகிழ்ச்சியில் திளைப்பது எப்போது?"

Thanks to her too...
Yellorudaya ninaivugalaiyum thoondi vittute.. enna nadakka pogutho???

Chitra said...

மைதிலி, போன வாரம், நம்ம தோழர்கள் மத்தியில் விளையாட்டாக கவிதை போட்டி ஆரம்பிச்சது.
இந்த வாரம் ...... இங்கே வரை வந்துடுச்சு. அடுத்த போட்டி என்னனு யோசிச்சிட்டியா?

Romeoboy said...

\\நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க
நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன் //

நானும் தான் .. :(

Chitra said...

Thank you, Romeoboy

அரங்கப்பெருமாள் said...

சில ஞாபகங்களைத் தூண்டி அதில் திளைக்க வைத்தது.ஒவ்வொரு பருவமும் இனிமையானது எனபதை புரிவதற்குள் அந்தப் பருவம் முடிவடைந்து விடுகிறது. 5-ஆம் வகுப்பு படிக்கும்போது 3-ஆம் வகுப்பு பாடம் எளித்தாய் தோன்றும். கடந்த நினைவுகளை அசை போடுதலும் ஒரு சுகமே. அந்த வகையில் இது ஒரு நல்லப் பதிவு அம்மணி.

Chitra said...

மிக்க நன்றி, அரங்கப் பெருமாள் ஐயா.

கலையரசன் said...

யாருங்க அந்த கொடுத்துவச்ச ஆளு?

இதையே ஆல்டர் பண்ணி.. நண்பன் யாருக்காவது பிறந்தநாளுன்னா போட்டுடலாம்!!
டைட்ஸ் ப்லீஸ்...

Chitra said...

கலையரசன் சார், ஐசோ ஐஸ்.......... ஹி,ஹி,ஹி,.....நன்றி..
ஆமாம், என்ன அது டைட்ஸ் ?

Jaleela Kamal said...

உங்கள் பால்ய நட்பு , பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது

என் தோழிகளில் (சித்ரா, கவிதா, ஹசீனா, வள்ளி) கொஞ்ச காலமா ஓவ்வொருவரையும் தேடி போய் பார்த்து வருவேன். ஆனால் இப்ப எல்லாம் சந்திக்க முடியாமல் போய் விட்டது. உங்களிடம் பதிவு போடும் போதெல்லாம் என் தொழி சித்ரா ஞாபகம் எனக்கு வருது சித்ரா

Chitra said...

ஜலீலா அக்கா, you are so sweet. நானும் உங்க தோழிதான் இப்போ.

Anto Rajkumar said...

Chitra...I am a fan of poetry written by our appa in the days of early 1960s. I can see many similarities. you are making our appa proud...Keep writing more poetry

அன்புடன் நான் said...

வேண்டுதல் பலிக்கட்டும்... வாழ்த்துக்கள், உங்களுக்கும்.

லெமூரியன்... said...

ஹேய் சித்ரா......ஏன் இப்டி பீலிங்க்ஸ்???

:-) :-) :-)
அருமையா இருக்கு சித்ஸ்...

கே. பி. ஜனா... said...

ரொம்ப நட்பாகி விட்டேன், 'நட்பு' கவிதையுடன்.

Chitra said...

பீலிங்க்ஸ் இல்ல, லெமூரியன் சார் . ..... திடீர்னு, பள்ளியில் UKG நினைப்பு வந்து ............
sweet memories தான் ..

Chitra said...

நன்றி, கருணாகரசு சார்.

Chitra said...

நண்பர் ஜனார்தனனுக்கு, ரொம்ப நன்றி. :-)

Chitra said...

டேய், அப்பா தன் கல்யாணத்துக்கு முந்தி எழுதிய கவிதை புத்தக collection, உன்ட்டதான் இருக்கா?
நெக்ஸ்ட் டைம், நான் அதை அபேஸ் பன்னுடுறேன், உன்ட்ட இருந்து.
தேங்க்ஸ் டா.

சுசி said...

நல்லா இருக்குங்க.

Chitra said...

Thank you, Susi. red heart nallaa irukku.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா.. கவிதை அற்புதம்! ஒரு நொடி
கண்களை மூடிக் கொண்டேன்!
மனதிலும் வந்து நின்றது கவிதை!!

Chitra said...

மனதார நன்றி சொல்கிறேன், ராமமூர்த்தி சார்.

R.Gopi said...

சித்ரா

இன்று தான் உங்கள் வலைக்கு முதன் முதலாக வருகிறேன்... பதிவு எல்லாம் படிச்சு, கமெண்ட் போடறேன்... (அப்புறமா...).

நீங்கள் ரஜினி ரசிகையென்று அறிந்தேன்... மிக்க மகிழ்ச்சி... என்னோட ப்ளாக்ல அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து எழுதி இருக்கேன்... வந்து பாருங்க...

www.jokkiri.blogspot.com

அப்படியே என்னோட இன்னொரு ப்ளாக்ல வாழ்க்கை பத்தி ஒரு தொடர் எழுதிண்டு வர்றேன்... அதையும் பாருங்க... உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்...

www.edakumadaku.blogspot.com

மறக்காம வந்து பாருங்கோ சித்ரா....

பா.ராஜாராம் said...

நட்பு சிறக்க வாழ்த்துக்கள்,சித்ரா!

திருவாரூர் சரவணா said...

கல்லூரிப் பருவத்துல கிடைத்த நட்புக்கள் காணாமல் போன வலி மறையும் முன்பே ஆழ்மனதில் புதைந்திருந்த பால்ய பருவத்தை தேடிப்பிடித்துக் கொண்டு வந்திருந்தது இக்கவிதை.

எங்க ஊட்டுக்கு வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க.

Chitra said...

மிக்க நன்றி, ராஜாராம் சார்.

Chitra said...

எந்த கால கட்டமாக இருந்தாலும், நண்பர்களை எப்படி மறக்க முடியும்?
நன்றி, சரண்.

ஹுஸைனம்மா said...

இங்கயும் கவிதயா? எல்லாம் நான் கவித எழுத ஆரம்பிச்ச நேரம் போல!!

அழகான கவிதை சித்ரா!!

(சித்ராவை அழகான கவிதை என்று சொல்கிறேனா, சித்ரா எழுதிய கவிதை அழகு என்கிறேனா? எப்படியோ எனக்கும் கவிஞர்தனம் வருகிறது!!)

Chitra said...

அசத்திட்டீங்க, ஹுஸைனம்மா. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.

suvaiyaana suvai said...

கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்

கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்

அழகான கவிதை!!!

Chitra said...

மிக்க நன்றிங்க. , suvai.

அன்புடன் மலிக்கா said...

நட்புன்பது நம்முடன் கூட இல்லபோதும் அதை நினைத்து நம்மனம் வேண்டிக்கொள்ளும், இன்னிலையில் நானும்.. மிக அழகு தோழி நட்புடன் நான் உங்களுடன்..

Chitra said...

மிக்க நன்றி, அன்பு தோழி. ப்லாக் உலகில் எனக்கு பெரிய சொத்தாக எனக்கு கிடைக்கும் புதிய நட்பைத்தான் நினைக்கிறேன்.

Murugeswari Rajavel said...

வாழ்த்தும் உள்ளங்களில் நட்பு தழைக்கிறது,சௌந்தர் அறிமுகப்படுத்து முன்பாகவே சித்ராவைப் பற்றி நாங்கள் அறிந்ததே.
வாழ்த்தும் உள்ளம்!

cheena (சீனா) said...

அன்பின் சித்ரா

நல்லதொரு கவிதை - கொசு வத்தி சுத்த வைக்கும் கவிதை - இளவயது நட்பினை நினைத்து நல்வாழ்த்து கூறும் செயல் நன்று . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா