(என் முந்தைய பதிவு: http://konjamvettipechu.blogspot.com/2009/10/thirunelveli-halwa.html -
கிட்ட தட்ட ரெண்டாம் பாகம், இது என்று வைத்து கொள்ளலாம். - ஒ, நீங்க பத்தாம் பாகம்னு வச்சுக்க போறீங்களா? ஒ.கே. உங்க இஷ்டம்.)
- நிச்சயமா கடவுள் சீரியஸ் சாமி கிடையாது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த சில நபர்களை பற்றி நினைக்கும் போது, இந்த காமெடி characters உருவாக்கிய கடவுள் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்று மனதில் எண்ணி கொள்வேன். சினிமா காமெடி மாதிரி , நிஜ வாழ்க்கையில் நடந்தா என்ன பண்ணுவீங்க?
காட்சி 1 - காமெடி 1
கந்தசாமி படத்தில், ஒரு காட்சியில், ஸ்ரேயா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம், பதில் கேள்விகள் கேட்டு கொண்டே இருப்பார். ஸ்ரேயாவுக்கு அது எரிச்சலை தரும்.
காலேஜ் படிக்கும் போது, என் தோழர், தினேஷுக்கு தேவன் என்று ஒரு அறை தோழர் - அதாங்க, காலேஜ் ரூம் மேட் - இருந்தார். அறை தோழர் - கவுண்டமணிக்கு செந்தில் "அறை" (உதை) தோழர். விவஸ்த்தை இல்லாமல், வயசு வித்தியாசம் இல்லாமல், வடிவேலு பலரின் "அறை" (அடி) தோழர். நிஜ வாழ்க்கையில், அருவாள், போலீஸ், அது இதுன்னு பிரச்சினை இல்லைனு வைங்க, நிச்சயமா தினேஷுக்கு தேவன்தான் "அறை" தோழரா இருந்திருப்பார்.
தேவன் ஒரு நல்ல மனுஷன்தான். ஆனால் கேள்வி என்ற ஆயுதத்தை, தன் நாக்கில் வைத்து கொண்டு சில சமயம் போட்டு தள்ளி விடுவார். ஒரு சமயம், அவர் கேள்வி தொல்லை தாங்க முடியாமல், தினேஷ் தேவனிடம், "நீ கொஞ்ச நேரம் கேள்வி எதுவும் கேட்காம இருக்கியா?" என்று கேட்டு கொண்டதுக்கு கூட தேவன் சளைக்காமல், "எதற்கு?" என்று கேட்டார்.
காட்சி 2 - காமெடி 2:
கருணாஸ், பொல்லாதவன் படத்தில் தனுஷ், சந்தானம் மற்றும் சில நண்பர்களிடம், "ஏய் நீ கேளேன், மச்சான் நீ கேளேன் ....." என்று ஆரம்பிப்பார். அந்த காமெடி பீசை பாக்கும் போது, எங்கள் தோழர் ராமநாதனை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
எங்களது அரட்டை நேரத்தில், அவரும் உட்க்கார்ந்து கேட்டு கொண்டு சிரிப்பார். திடீரென்று, தானும் ஜாலியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றி விடும் போல.....
இப்படித்தான், நீ கேளேன் - நீ கேளேன் - என்று ஆரம்பம் ஆகிவிடும். "ஆஆஆ" எங்களிடம் - "ரம்பம்" அவரிடம்.
இப்போ பஞ்ச் லைன் வரும், இப்போ ஜோக் வரும் என்று நாம் காத்து கொண்டிருக்க, அவர் மட்டும் ஏதோ சொல்லிவிட்டு, பெரிதாக சிரித்து கொண்டு இருப்பார். தன் "கடிக்கு" அவரே சிரிப்பார். அவர் மட்டும் சிரிப்பார். நாங்கள் நெளிவோம். முழிப்போம்.
காட்சி 3 - காமெடி 3:
மன்னன் படத்தில் கவுண்டமணியின் அறிமுக காட்சியில், ரஜினி அவரிடம், "என்ன படிச்சிருக்க?" என்று கேட்பார். அதற்கு கவுண்டமணி, "எந்த வேலையும் செய்ய தெரியாத அளவுக்கு படிச்சிருக்கேன்" என்பார்.
ரோகன் என்பவரை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தோம். எங்கே வேலை செய்யுறீங்க என்று கேட்டதற்கு, "நான் US க்கு மேல் படிப்புக்கு வந்தேன். சுமாரா போச்சு. இப்போ வேலைக்கு interviews அட்டென்ட் பண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ இங்கேயே green card வாங்கி settle ஆன doctor பொண்ணு இல்ல dentist பொண்ணு தேடி பாத்தேன். ஒண்ணும் செட் ஆகலை. நர்சு பொண்ணு கூட கிடைக்கலை. ஏன் என்றே தெரியவில்லை. இப்போ ஒரு hospital attendant , green card application போட்டு காத்திருக்கும் நம்மூரு பொண்ணு அமைஞ்சுடிச்சு. அவ சம்பளமே இப்போதைக்கு போதும். அப்புறம் மெல்ல நானும் வேலை தேடிக்குவேன்."
என்ன கொடுமை சார், இது?
காட்சி 4 - காமெடி 4:
கிரி படத்தில், எக்கச்சக்க உதை வாங்கி திரும்பி வந்த வடிவேலுவை பாத்து, "இவ்வளவு அடிக்கிற வரை சும்மாவா இருந்தீங்க?" என்று கேட்டதற்கு, வடிவேலு விளக்கம் சொல்லி விட்டு, " அவன் என்னை பாத்து ரொம்ப நல்லவன் என்று சொல்லிட்டான்." என்பார்.
கல்யாண சுந்தரம் என்ற மனிதரை, நான் மறக்க முடியாது.
"இந்த பர்கர் நல்லா இருக்குமா?"
"எப்படி சார் சொல்ல முடியும்? எனக்கு பிடிக்கும். நீங்க சாப்பிட்டு பாத்தாதான் உங்களுக்கு தெரியும்."
"கரெக்ட். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு taste. இதுக்குதான், ஒவ்வொரு சாப்பாட்டு பொருளுக்கும், 'SWAD' (ஸ்வாத்) என்ற கணக்கில், ஒன்றிலிருந்து பத்துக்குள் நம்பர் கொடுக்க வேண்டும். அவர் அவருக்கு எந்த நம்பர் ஸ்வாத் உள்ள உணவு பொருட்கள் பிடிக்கும் என்று தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நமக்கு பிடித்த SWAD நம்பருடைய எந்த உணவு பொருளையும் தயக்கமின்றி ருசி பாக்கலாம். இப்ப நான் எதுக்கு $7 செலவு செய்ய வேண்டும்?" என்று பேசி கொண்டே .......................என்னை, அமெரிக்காவில் ஆட்டோ இல்லாமலே கூட்டிட்டு போய் கொத்து கறி பண்ணிட்டார். ஸ்வாத் என்றால் ஹிந்தியில் ருசிக்கு பொருந்தும் என்று ஹிந்தி tuition வேறு.
அதுதான், நான் அவருடன் கடைசியாக பேசியது. அலறி அடித்து ஓடியவள், அவர் இருக்கும் திசை இன்று வரை போனதில்லை.........................இவர் என்னிடம், இப்படி சொன்னதை என் நண்பர்களிடம் சொல்லிய போது, "எப்படி சித்ரா, அந்த ஆளு உங்களை இந்த அளவு "அறுக்குறதுக்கு" விட்டீங்க?" என்றார்கள்.
"அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன். எல்லோரும் ஒரு லுக் விட்டாங்க பாருங்க.....
காமெடி காட்சிகளை தொடர்ந்து பார்க்கிறேன் - சிரிக்கிறேன் - திரையிலும் நேரிலும்.
கிரி படத்தில், எக்கச்சக்க உதை வாங்கி திரும்பி வந்த வடிவேலுவை பாத்து, "இவ்வளவு அடிக்கிற வரை சும்மாவா இருந்தீங்க?" என்று கேட்டதற்கு, வடிவேலு விளக்கம் சொல்லி விட்டு, " அவன் என்னை பாத்து ரொம்ப நல்லவன் என்று சொல்லிட்டான்." என்பார்.
கல்யாண சுந்தரம் என்ற மனிதரை, நான் மறக்க முடியாது.
"இந்த பர்கர் நல்லா இருக்குமா?"
"எப்படி சார் சொல்ல முடியும்? எனக்கு பிடிக்கும். நீங்க சாப்பிட்டு பாத்தாதான் உங்களுக்கு தெரியும்."
"கரெக்ட். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு taste. இதுக்குதான், ஒவ்வொரு சாப்பாட்டு பொருளுக்கும், 'SWAD' (ஸ்வாத்) என்ற கணக்கில், ஒன்றிலிருந்து பத்துக்குள் நம்பர் கொடுக்க வேண்டும். அவர் அவருக்கு எந்த நம்பர் ஸ்வாத் உள்ள உணவு பொருட்கள் பிடிக்கும் என்று தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நமக்கு பிடித்த SWAD நம்பருடைய எந்த உணவு பொருளையும் தயக்கமின்றி ருசி பாக்கலாம். இப்ப நான் எதுக்கு $7 செலவு செய்ய வேண்டும்?" என்று பேசி கொண்டே .......................என்னை, அமெரிக்காவில் ஆட்டோ இல்லாமலே கூட்டிட்டு போய் கொத்து கறி பண்ணிட்டார். ஸ்வாத் என்றால் ஹிந்தியில் ருசிக்கு பொருந்தும் என்று ஹிந்தி tuition வேறு.
அதுதான், நான் அவருடன் கடைசியாக பேசியது. அலறி அடித்து ஓடியவள், அவர் இருக்கும் திசை இன்று வரை போனதில்லை.........................இவர் என்னிடம், இப்படி சொன்னதை என் நண்பர்களிடம் சொல்லிய போது, "எப்படி சித்ரா, அந்த ஆளு உங்களை இந்த அளவு "அறுக்குறதுக்கு" விட்டீங்க?" என்றார்கள்.
"அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன். எல்லோரும் ஒரு லுக் விட்டாங்க பாருங்க.....
காமெடி காட்சிகளை தொடர்ந்து பார்க்கிறேன் - சிரிக்கிறேன் - திரையிலும் நேரிலும்.
38 comments:
haa haa nice ones..
ha ha ha .. good joke
சித்ராவுக்கு இருந்தாலும் நம்ம மேலே எவ்வளவு நம்பிக்கை.
நாமெல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு .....
அந்த பட சீனுல்லாம் வர்சையா ஞாபகத்துக்கு வருது...
:)
//எப்படி சித்ரா, அந்த ஆளு உங்களை இந்த அளவு "அறுக்குறதுக்கு" விட்டீங்க?" என்றார்கள்.
"அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன். எல்லோரும் ஒரு லுக் விட்டாங்க பாருங்க.....//
உங்களை மாதிரி ஓரு ஆளைதான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தோம்
ஐ சித்ராவையே கலாய்ச்சு ஓட வெக்கிரளவுக்கு அசகாய சூரர்கள் இருக்காங்களா,
என் காதினில் தேன் பாயுதே........... :-) :-)
அதெப்புடி இவ்வளவு மரண கடி வாங்கினதுக்கப்பரமும் கூட தலைப்புல காமெடிய சேர்க்க முடியுது???
எவ்ளோ கடிச்சாலும் தாங்கி நிக்கிற சிங்கமா நீங்க???
நீங்க நல்லவரா??? கெட்டவரா???? :-) :-)
ஆனாலும் சித்ஸ் மனசுக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு......
எங்க மனசில் உள்ள குமுரலைஎல்லாம்
செயல் படுத்தி காமிக்க அங்கே ஒரு படையே இருக்குனு நெனைக்கும் போது...!
வித விதமான மனிதர்கலாலேயே வாழ்க்கை சுவாரச்யமாகிவிடுகிறது (மொக்கையாக இருந்தாலும் கூட ::))
ஏனுங்க சித்ரா........
காமெடி எல்லாம் கலக்குறீங்க..........
:))
//நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன்//
இது காமெடியா இல்ல உண்மையா :)
இப்படிதான் சித்ரான்னு ஒரு பதிவர் இருக்காங்க...
"ஏய் நீ கேளேன், மச்சான் நீ கேளேன் ..... மாமி நீ கேளேன்..."
ஹா ஹா ஹா. நல்ல பகிர்வு.
//அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன்//
அட அவரு பொய் சொல்றாருனு எங்களுக்கு தெரியாதா...
// அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு //
உண்மையிலே நீங்க ரொம்ப நல்லவருதான். ஆனா நான் நம்ப மாட்டேன். நான் போடுற பதிவ பொறுமையா இது மாதிரி படித்து பின்னூட்டம் இட்டாதான் நம்புவேன்.
// இப்ப நான் எதுக்கு $7 செலவு செய்ய வேண்டும்?" என்று பேசி கொண்டே ....................... //
நல்லவேளை உங்க காசில் சாப்பிடாமல் விட்டாரே. நானா இருந்தா அதைத்தான் பண்ணிருப்பேன்.
// தன் "கடிக்கு" அவரே சிரிப்பார். அவர் மட்டும் சிரிப்பார். நாங்கள் நெளிவோம். முழிப்போம். //
ரொம்ப வலிக்குமா? கொஞ்சம் எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.
நன்றி சித்ரா. இரசித்தேன், புன்னகைத்தேன். நன்றி.
//ரோகன் என்பவரை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தோம். எங்கே வேலை செய்யுறீங்க என்று கேட்டதற்கு, "நான் US க்கு மேல் படிப்புக்கு வந்தேன். சுமாரா போச்சு. இப்போ வேலைக்கு interviews அட்டென்ட் பண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ இங்கேயே green card வாங்கி settle ஆன doctor பொண்ணு இல்ல dentist பொண்ணு தேடி பாத்தேன். ஒண்ணும் செட் ஆகலை. நர்சு பொண்ணு கூட கிடைக்கலை. ஏன் என்றே தெரியவில்லை. இப்போ ஒரு hospital attendant , green card application போட்டு காத்திருக்கும் நம்மூரு பொண்ணு அமைஞ்சுடிச்சு. அவ சம்பளமே இப்போதைக்கு போதும். அப்புறம் மெல்ல நானும் வேலை தேடிக்குவேன்."
என்ன கொடுமை சார், இது?//
யக்கா, அப்படியே எனக்கும் இது மாதிரி பொண்ணு எதாவது பார்த்து சொல்லுங்க
அதுலயும் நான் ரொம்ப்ப்ப நல்லவங்க.....
காமெடி சீனெல்லாம் ரொம்ப சீரியசா பார்த்திருக்கீங்க. இல்லாட்டி இப்படி ஒரு லிங்க் சாத்தியமே இல்லை. வெகு பொருத்தம்.:))
// "அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன். எல்லோரும் ஒரு லுக் விட்டாங்க பாருங்க..... //
இவ்வளவு நல்லவங்களா நீங்க.. அமெரிக்கா வந்தால் உங்களுடன் பேசனுமே...
nice chitra
hahaha
:-)))
// goma said...
சித்ராவுக்கு இருந்தாலும் நம்ம மேலே எவ்வளவு நம்பிக்கை.
நாமெல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு ..... //
அதில் சந்தேகம் வேறயா... நாமெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க..
ஹா.., ஹா.., நல்ல இருக்கு...
நிழல் நகைச்சுவைக் காட்சிகளையும் நிஜ நகைச்சுவைக் காட்சிகளையும் கோத்திருந்த விதம் அருமை! இதற்கெல்லாம் ரொம்பக் கவனம் வேண்டும்!
குட் ஹுயூமர்ஸ்..
:))
காட்சி 1 - காமெடி 1 = செம பஞ்ச் ..
காட்சி 2 - காமெடி 2 = என்னங்க பண்றது இது எல்லாம் ஆர்வக்கோளாறு விடுங்க
காட்சி 3 - காமெடி 3 = செம கேடியா இருப்பான் போல ..
காட்சி 4 - காமெடி 4 = உங்களையும் ஒருத்தர் நல்லவ என்று நம்பிடாரு பாருங்க . அவருக்காக அனுதாப்படுகிறேன், ஊரார் செய்ய முடியாத ஒன்றை ஒத்தை ஆளாக உங்கள் காதுகளை புன்னகியத்தில் கொஞ்சம் சந்தோசமே .. ஹி ஹி ஹி
ஹை...சித்ரா டீச்சர் இந்தப்பதிவை எப்ப போட்டீங்க...?
ஹஹஹ எல்லாம சரவெடி... அதுல பார்த்தீங்கன்னா... டீச்சர் நீங்க கேளுங்களேன், சார் நீங்க கேளுங்களேன்...
ஆகா
haa haa nice ones..
காமெடியுடன் உங்கள் கருத்தையும்
இணைத்து சொன்ன விதம் அழகு
சூப்பருங்க.. நிஜமாவே நீங்க ரெம்ப நல்லவதாங்க.
ஒழுங்கா என்னை மருத்துவர்கிட்ட கூட்டிட்டு போங்க மேடம்..சிரிச்சு வயிறு வலிக்குதுல்ல :)
நல்ல நகைச்சுவைங்க.. எல்லாரோடும் இந்த மாதிரி ஆட்கள் இருந்துகிட்டே இருக்காங்க.. நம்மள சிரிக்கவைக்க.. சில சமயம் நாமும் அவர்களுக்கு.. :)
படிக்க சுவாரசியமா இருந்தது..சூப்பர்!
//திரையிலும் நேரிலும்//
உண்மைதான் சித்ரா. நல்லா சொல்லியிருக்கீங்க.
Hi Chithra,
Comedy superb!
அந்த பெண் பார்க்கும் நண்பர் போல் பல பேர் இங்கே திரிகிறார்கள்:)
Wish you and family Merry Christmas as well as a prosperous happy New year dear.
//நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு//
நம்புறோம் நம்புறோம் நம்பிதான் ஆகணும்!!
காமெடி நல்லா வந்திருக்கு.. அளவா அதே நேரம் ரசிச்சு சிரிக்கற மாதிரி.. நைஸ்
நல்ல பதிவு
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
//என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.........// cha cha...
Post a Comment