Wednesday, April 21, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவு


எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவுக்கு சைவகொத்து பரோட்டா அவர்கள் கூப்பிட்டு இருக்காக......
 
விதிகள்: 
(பல  தமிழ் படங்கள் பார்த்துட்டு விதியை நொந்துருக்கேன். )

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே  
(சே, ரஷ்ய படங்கள்,  பிரெஞ்சு படங்கள், ஜப்பானிய படங்கள் எல்லாம் ஜஸ்ட் missed ஆச்சு)
 
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டு  டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
(ஜக்குபாய் படம் எல்லாம் தமிழ் படங்கள் லிஸ்ட்ல சேரணும் என்று எப்படியெல்லாம் ரூல்ஸ் போடுறாங்கப்பா..)
 
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
(கந்தசாமியில் ஷ்ரேயா , மத்த ஹீரோயினி அக்காஸ்,  ரசிகா அக்கா, மமைத்கான் அக்கா வெல்லாம் - என்ன அழகா "twinkle twinkle little star " பாட்டுக்கு ஒவ்வொரு படத்திலேயும்  சின்ன பாப்பாவா  ஆடுறாங்க......)

VCD மற்றும் DVD தீஞ்சு போகும் அளவு பார்த்த இந்த ரஜினி படங்களை லிஸ்ட்டில் இருந்து எடுத்துட்டு  பத்து படங்கள் எழுதுறதுன்னு முடிவு பண்ணினேன்.  ரஜினி நடித்த படங்கள் பெயரில் வந்த போலிகளை கண்டு ஏமாறுவதில்லை.

முள்ளும் மலரும்,  தில்லு முல்லு,   சிவாஜி ,   பாட்ஷா,  வீரா ,  படையப்பா,
அண்ணாமலை,   அவள் அப்படித்தான்,    நெற்றிக்கண் ,  கழுகு, ராணுவ வீரன்,
நினைத்தாலே இனிக்கும் ,  பொல்லாதவன்,   தீ,  தம்பிக்கு எந்த ஊரு
எங்கேயோ கேட்ட குரல்,   தனிக் காட்டு ராஜா,  மூன்று முகம் ,   மன்னன் , 
நல்லவனுக்கு நல்லவன்   தர்மதுரை ,  படிக்காதவன் , மாப்பிள்ளை ,   தளபதி.

1. உலகம் சுற்றும் வாலிபன்: 
 2.  Mask of Zorro - தமிழ் டப்பிங் செய்யப்பட்டது.
ஆமாம், தமிழ் படங்கள் என்ற விதியில் டப் செய்யப்பட்டு வரும் ஆங்கில பெருங்காய டப்பா படங்கள் சேருமா? 
 இல்லை, நாட்டு சரக்கு தான் என்று தமிழ் டப்பிங்கில் வரும் தேமே ஹிந்தி படங்களும் கலர்புல் தெலுங்கு படங்களும் சேருமா? 
இல்லை,  லாஜிக் மீறுவது என்று ஆச்சு. இதுல "made in china" ரேஞ்சுல மீறுவோமே என்று தமிழ் டப்பிங்கில் வரும் Kung Fu chinese படங்களும் சேருமா? 

தொடர் பதிவுகள் எழுதணும்னு அழைப்பு விடுறாங்கப்பா. 
சந்தேகம் வந்தா யாரை கூப்பிடுவது என்று போடமாட்டேங்குறாங்கப்பா. 

எந்த பத்து படங்களை தேர்வு செய்யலாம் என்று யோசித்து (??!!) கொண்டிருந்த போது,  Fast Food Joint ஒன்று செல்ல வேண்டியது இருந்தது. அங்கும் படங்கள் ஞாபகம்....... junk food பாத்தா என்று கேட்கப்படாது .....
  
அப்போ,  எங்களுக்கு பரிச்சயம் இல்லாத  ஒரு இந்தியர் உள்ளே வந்தார். ஆளு ஊருக்கு - சாரி, நாட்டுக்கு புதுசு போல. உணவு ஆர்டர் செய்ய அவ்வளவு யோசித்து முடிவு எடுத்த பின், (அவரையும் யாரோ தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டாங்க போல......)  கவுன்ட்டர் பக்கம் நெருங்கி, தயக்கத்துடன்: 

நம்ம ஆளு:  "One cheeseburger combo meal, please"
கவுன்ட்டர் ஆளு:  "For here or to go?"
நம்ம ஆளு:           "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."
கவுன்ட்டர் ஆளு:   "O.K.  Now,  what do you want me to do with your cheeseburger combo meal?"

அப்பொழுதுதான், நம்ம ஆளுக்கு கவுன்ட்டர் ஆளு, தன்னை பற்றி விசாரிக்க "for here or to go?" என்று கேட்கவில்லை.  சீஸ் பர்கரை தான் அங்கேயே வைத்து சாப்பிட போகிறாரா  இல்லை,  pack செய்து எடுத்துக் கொண்டு போக போகிறாரா  என்று தெரிந்து கொள்ள, "for  here or to go?" என்று கேட்டு இருக்கிறார் என்று விளங்கி, அசடு வழிய........... 
  
படங்களின் லிஸ்ட் போடுவதை அப்படியே விட்டு விட்டு,  "இது நம்ம ஆளுக்கு" ஒரு ஹலோ சொல்ல கிளம்பினேன்.  ............  வர்ட்டா.......!



75 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

எல் கே said...

//நம்ம ஆளு: "One cheeseburger combo meal, please"
கவுன்ட்டர் ஆளு: "For here or to go?"
நம்ம ஆளு: "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."
கவுன்ட்டர் ஆளு: "O.K. Now, what do you want me to do with your cheeseburger combo meal?" /

super comedy chitra

Chitra said...

அப்போ எனக்கு, பாவமா இருக்குனு சொல்லவா இல்லை, சிரிக்கவா என்று தெரியவில்லை, LK)
(பி.கு. இது நிஜமா நடந்த சம்பவம்)

ஜெட்லி... said...

வழக்கம் போல் நிபந்தனையில்யே உங்க ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணீட்டிங்க

vasu balaji said...

அய்ய! இதென்ன போங்காட்டம்:))

Ahamed irshad said...

:)>>

Chitra said...

பாலா சார், நிஜமா, எனக்கு ரூல்ஸ்ல பல doubts . படிக்கும் போது வராத டவுட் எல்லாம், படம்னு சொன்ன உடனே வருதுப்பா....

கண்ணா.. said...

//வானம்பாடிகள் said...

அய்ய! இதென்ன போங்காட்டம்:))//

அக்கா என்னைக்கு ஓழுங்கா ஆடிருக்காங்க....

பேட்டிங்கே பண்ணாம எல்லா பாலையும் சிக்ஸர் அடிக்குறதுதான் எப்பிடின்னு தெரியலை :)))))))))))))

Anonymous said...

:))

தமிழ் அமுதன் said...

///வானம்பாடிகள் said...

அய்ய! இதென்ன போங்காட்டம்:))///

அதே...!

நாடோடி said...

விதிமுறையிலேயே பிர‌ச்ச‌னையா? அய்யோ...அய்யோ....

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆமாம், தமிழ் படங்கள் என்ற விதியில் டப் செய்யப்பட்டு வரும் ஆங்கில பெருங்காய டப்பா படங்கள் சேருமா?//

த‌லைப்பு த‌மிழ்ல‌ இருந்தாலே அது த‌மிழ்ப்ப‌ட‌ம் தான்!!!

Unknown said...

ஒத்துக்க படாது...இது போங்காட்டம்...

//படிக்கும் போது வராத டவுட் எல்லாம், படம்னு சொன்ன உடனே வருதுப்பா...//


அல்லாருக்கும் அப்டித்தான...

settaikkaran said...

கந்தசாமி ஷ்ரேயாவைப் பற்றிக் குறிப்பிட்டதற்காக, அகில உலக ஸ்ரேயா தலைமை ரசிகர் மன்றம் சார்பாக பொன்னாடை அணிவிக்கப்படுகிறது. அத்துடன் பின்னூட்டமும், ஓட்டும் வழங்கப்படுகிறது.

உ.சு.வா- தலைவர் படத்துலே எனக்குப் பிடிச்ச படங்களிலே ஒண்ணு! (மின்னலையே தலைவர் குளிசைக்குள்ளே அடக்கிருவாரு! தலைவரா கொக்கா?)

எல் கே said...

//அப்போ எனக்கு, பாவமா இருக்குனு சொல்லவா இல்லை, சிரிக்கவா என்று தெரியவில்லை, LK)
(பி.கு. இது நிஜமா நடந்த சம்பவம்)//
ithu sagajam chitra. slang and the use of words differ.

சிநேகிதன் அக்பர் said...

//(கந்தசாமியில் ஷ்ரேயா , மத்த ஹீரோயினி அக்காஸ், ரசிகா அக்கா, மமைத்கான் அக்கா வெல்லாம் - என்ன அழகா "twinkle twinkle little star " பாட்டுக்கு ஒவ்வொரு படத்திலேயும் சின்ன பாப்பாவா ஆடுறாங்க......)//

i like it. (i like your answer not about film)

ஆனா இது செல்லாது. பத்து படங்கள் கண்டிப்பா சொல்லியாகணும்.

S Maharajan said...

//தொடர் பதிவுகள் எழுதணும்னு அழைப்பு விடுறாங்கப்பா.சந்தேகம் வந்தா யாரை கூப்பிடுவது என்று போடமாட்டேங்குறாங்கப்பா//

யாரங்கே யாரடா அங்கே!
லகுடபாண்டிகளா!
நம்ம சித்ரா அக்காவுக்கு சந்தேகமாம்!
கிளப்புங்கள் வண்டியை...

Prabu M said...

//விதிகள்:
(பல தமிழ் படங்கள் பார்த்துட்டு விதியை நொந்துருக்கேன். )//

haaa haaa dhool kaa :)

நீங்க சொன்ன ரஜினி படங்கள் எல்லாமே நம்மள் மாதிரி ரஜினி ஃபேன்ஸுக்கு ஆல் டை ஃபேவரைட்ஸ்.....

விதிகளுக்குக் கொடுத்த கமெண்ட்ஸ் எல்லாமே அசத்தல்...
கலக்குங்க அக்கா... :)

சைவகொத்துப்பரோட்டா said...

ரூல்ஸ் பக்கத்துல உங்களோட கமெண்ட்ஸ் படிச்சி
சிரிப்ப அடக்க முடியல :))
இந்த "விதி"களை உருவாக்கியவர் எங்கப்பா.............

பித்தனின் வாக்கு said...

தலைவரு படம் எல்லாம் சூப்பரா சொல்லிவிட்டாய் அம்மா? என்னது அடல்ஸ் ஒன்லி கிடையாது என்று சொல்லி உலகம் சுற்றும் வாலிபன் போட்டியிருக்கின்றாய். கடல் ஓரம் வாங்கிய காற்றில் மஞ்சுளாவைப் பார்க்க வில்லையா?

கடைசி பேரா காமெடி சூப்பர். இங்க சிங்கப்பூரிலும் வாங்கிக் கொள்கின்றாயா? என்பதுக்கு கேனா கேனா என்பார்கள். இங்க சாப்பிடுகிறாயா அல்லது பார்சலா என்பதுக்கு ஹாவிங் ஒரு ஈட் என்பார்கள். புரியாமல் முழித்த அனுபவம் உண்டு.

Having oru take away என்று கேப்பார்கள்.

பனித்துளி சங்கர் said...

///////தொடர் பதிவுகள் எழுதணும்னு அழைப்பு விடுறாங்கப்பா.
சந்தேகம் வந்தா யாரை கூப்பிடுவது என்று போடமாட்டேங்குறாங்கப்பா. ///////


அதுக்குத்தானங்க உங்களை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்காங்க

ஜெய்லானி said...

இனிமே எஸ்கேப ஆவது எப்படின்னு உங்ககிட்ட டியூஷன் எடுத்தால்தான் சரிப்படும். அதுக்காக இப்படியாஆஆஆஆஆஆஆ

Anonymous said...

////நம்ம ஆளு: "One cheeseburger combo meal, please"
கவுன்ட்டர் ஆளு: "For here or to go?"
நம்ம ஆளு: "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."
கவுன்ட்டர் ஆளு: "O.K. Now, what do you want me to do with your cheeseburger combo meal?" ///

Ha ha ha

அகல்விளக்கு said...

நிபந்தனையிலயே ஆரம்பிச்சுட்டீங்களா....

ஓக்கே... ஸ்டார்ட் மியூசிக்...

ஹுஸைனம்மா said...

:-))))

காலேஜில அஸைன்மெண்ட்டுக்கும் இப்படித்தான் ரூல்ஸ் பேசி பாதியோடக் கொண்டு கொடுப்பீங்களா? ;-))))

ஹேமா said...

ச்ச...என்ன சித்ரா !

க ரா said...

இதுலயும் குசும்புத்தானா. கலக்குங்க.

ராமலக்ஷ்மி said...

எப்படியோ லிஸ்ட் போடும் வேலையிலிருந்து தப்பிச்சாச்சு:))!

அன்புடன் மலிக்கா said...

தர்மதுரை. நமக்கு பிடித்தது. மற்றவைகளும்.

காமெடி கலக்கல்

நேரம்கிடைக்கும்போது இதையும்
எட்டிப்பார்க்கவும்

http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html

இதையும்
http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_18.html

மங்குனி அமைச்சர் said...

காட் மஸ்ட் டு பி கிரேசி

"உழவன்" "Uzhavan" said...

அவரு கவுண்டருனு எப்படிங்க நீங்க கண்டுபிடிச்சீங்க? :-))

க.பாலாசி said...

//என்ன அழகா "twinkle twinkle little star " பாட்டுக்கு ஒவ்வொரு படத்திலேயும் சின்ன பாப்பாவா ஆடுறாங்க.....//

குட் கொஸ்டின்... இந்த மாதிரி கேள்வி கேட்கத்தாங்க ஆயில்ல... :-))

நசரேயன் said...

தெய்வமே எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க

dheva said...

// படங்களின் லிஸ்ட் போடுவதை அப்படியே விட்டு விட்டு, "இது நம்ம ஆளுக்கு" ஒரு ஹலோ சொல்ல கிளம்பினேன். ............ வர்ட்டா.......!//


கிரேட் எஸ்கேப்....ஹா ஹா ஹா!

Chitra said...

மக்களே, நான் ஒரு வருஷத்தில எத்தனையோ தமிழ் படங்கள் பார்க்கிறேன். அந்த அந்த நேரத்துக்கு எத்தனையோ படங்கள் பிடிக்கும், பிடிக்காம போய் இருந்திருக்கும். முதலில் பிடிக்காம போய் இருந்திருக்கும், பிறகு பிடிக்கும்..... பத்து எண்களில், பட்டியல் போடுறது ரொம்ப கஷ்டமப்பா. ரஜினி படங்கள், பத்துக்கு மேலேயே சொல்லி இருக்கேன்..... ஆளை விடுங்கப்பா.....!

தமயந்தி said...

தொட‌ர் ப‌திவை கூட‌ வித்யாச‌மாய் எழுதிய‌ எங்க‌ள் தானைத் த‌லைவி வாழ்க‌!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

Paleo God said...

ஹும் இனிமே யாராவது தொடர் பதிவுக்கு கூப்பிட்டீங்க, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

:))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

// படங்களின் லிஸ்ட் போடுவதை அப்படியே விட்டு விட்டு, "இது நம்ம ஆளுக்கு" ஒரு ஹலோ சொல்ல கிளம்பினேன். ............ வர்ட்டா.......!//

இப்படி ஒரு ஆளு சொந்த செலவில சூனியம் வைச்சா நாமளா விடுற ஆளு?

அன்புத்தோழன் said...

// "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India.//

Enna kashtamo...Cha pavam.... :-)

அன்புத்தோழன் said...

vara vara unga kusumbukku alave illama pochunga.... Thodar padhivukku koopitta kothuparotavin vidhigalaiye kothu poratta pottu.... :-) rende padam mattume varisai paduthi escaaaapppeeee......

Menaga Sathia said...

ஹா ஹா...

அன்புடன் அருணா said...

பர்கர் அசத்தல்ஸ்!

நட்புடன் ஜமால் said...

சந்தடி சாக்குல

அக்காஸ்-ன்னுட்டீங்க ;)

எத சொன்னாலும் அடிச்சி ஆடுறீங்களே எப்படிங்க சித்ரா ...

(இனி யாராவது உங்கள கூப்பிடுவாங்க தொடருக்கு ...(இத இத இதத்தானே எதிர்ப்பார்த்தீங்க ) )

முகுந்த்; Amma said...

Meethi ettu padam enga pochchu. Only 2 films thaana. Nalla comedy thaan ponga

Chitra said...

நான் சூப்பர் ஸ்டார் இல்லைங்க...... ஒரு படம் சொன்னா, நூறு படங்கள் சொன்ன மாதிரி இருக்கிறதுக்கு.
நான் ரெண்டு படங்கள் சொன்னா, பத்து படங்கள் சொன்ன மாதிரி - ஒரு சின்ன அளவுதான் என்று விட்டு விட்டேனோ?

தமிழ் உதயம் said...

நா ரெம்ப ஆவலோட வந்தேன். ஏமாத்திட்டிங்க.

மின்மினி RS said...

ரஜினி ரசிகை சித்ராக்கா வாழ்க வாழ்க..

movithan said...

நம்ப வச்சி கழுத்தறுத்திட்டீன்களே,சூப்பர் படம் போடுவீங்க எண்டு நினைச்சேன்

sathishsangkavi.blogspot.com said...

கலக்குங்க சித்ரா.... கலக்குங்க....

Mythili (மைதிலி ) said...

தொடர் பதிவு எழுதணுமேன்னு நொந்து போய் எழுதின மாதிரி இருக்கு... அதுனால தானே ரெண்டு படத்தோட விட்டுட்ட?? ரஜினி ரசிகையே வாழ்க.

சுசி said...

சூப்பர் செலக்‌ஷன்..

கும்மாச்சி said...

என்ன சித்ரா ரஜினி படம் இன்னும் எவ்வளவு இருக்கு, போடாம ஏமாத்திட்டிங்களே. படையப்பா, சந்திரமுகி, பாட்ஷா இன்னும் எழுதிக்கொண்டு போகலாம்.

தலைவர் படத்துக்கு முன்னாலே மத்ததெல்லாம் ஜூஜூபி.

எட்வின் said...

இந்த பதிவிலயும் குசும்பு தானா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Madumitha said...

சரி விடுங்க.
எப்ப பத்துப் படம்?

'பரிவை' சே.குமார் said...

கிரேட் எஸ்கேப்...
நடக்கட்டும் நடக்கட்டும்.
அதான் பத்துக்கும் மேற்பட்ட ரஜினி படத்தை சொல்லாம சொல்லியாச்சே... அப்புறம் என்ன...?
நம்ம ஆள் பேசினது நல்ல இருந்துச்சு... ஆமா... நம்ம் கதை இப்புடித்தானே சொல்ல வேண்டியிருக்கு.?

prince said...

மனசுக்கு சரின்னு பட்டதை தயங்காம செய்றீங்களே..இந்த ஒரு விஷயம் தான் உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

Gurusamy Thangavel said...

//நம்ம ஆளு: "One cheeseburger combo meal, please"
கவுன்ட்டர் ஆளு: "For here or to go?"
நம்ம ஆளு: "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."
கவுன்ட்டர் ஆளு: "O.K. Now, what do you want me to do with your cheeseburger combo meal?" //


அனுபவிச்சு சிரிச்சேன். இதுக்கு பயந்துக்கிட்டுத் தான் நான் இங்க வந்ததிற்குப் பிறகு வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுகிறேன்.

Priya said...

//தொடர் பதிவுகள் எழுதணும்னு அழைப்பு விடுறாங்கப்பா.
சந்தேகம் வந்தா யாரை கூப்பிடுவது என்று போடமாட்டேங்குறாங்கப்பா.//....உண்மைதான் சித்ரா! சீக்கிரத்தில‌ இதற்கு ஒரு முடிவு கட்டணும்;)

தாராபுரத்தான் said...

அந்த ஒருபடம் பத்து படத்திற்கு சமமா?

தாராபுரத்தான் said...

அந்த ஒருபடம் பத்து படத்திற்கு சமமா?

வருண் said...

ரஜினியோட பெஸ்ட் 10 படம் (உங்க செலெக்ஷன்) பார்க்கலாம்னு வந்தேன். பத்தோட நிக்காம போயிக்கொண்டே இருக்கு :)

உ சு வாலிபன் நல்ல பொழுதுபோக்குப் படம்தான். பாடல்கள் அனைத்தும் நல்லாயிருக்கும்!

மாஸ்க் ஆஃப் ஸோரோ பார்த்ததில்லை. Antonio Banderas நடிச்சபடம்னு தெரியும்!

சைவகொத்துப் பரோட்டாவிலே ஆரம்பிச்சு, சீஸ் பர்கர்ல முடிச்சுட்டீங்க போல :)

Chitra said...

வருண், சூப்பர்! கரெக்டா கண்டுபிடிச்சது நீங்கதான். congratulations!

Pavithra Srihari said...

hahhaaa ... indha nakkalukkae post padikkanum ... why dont you post daily? naan post for the day padichittu appadiyae day evlo superaa start pannuvaaen.

Thanks for dropping by at my space chitra.Its an honour for me.

R.Gopi said...

சித்ரா

கலக்கல்... நான் கூட கடைசி வரைக்கும் அந்த 10 படம் லிஸ்ட் தேடி நொந்து பூட்டேன்...

//என்னது அடல்ஸ் ஒன்லி கிடையாது என்று சொல்லி உலகம் சுற்றும் வாலிபன் போட்டியிருக்கின்றாய். கடல் ஓரம் வாங்கிய காற்றில் மஞ்சுளாவைப் பார்க்க வில்லையா? //

ஹலோ பித்தனின் வாக்கு... இன்னா மேட்டரு... எந்த ஊர்ல இருக்கீங்க.. உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்தீங்களா இல்லையா... பெரிய டகால்டி வுட்டு இருக்கீங்க... கடல் ஓரம் வாங்கிய காற்று இந்த படம் இல்ல, அது ரிக்‌ஷாகாரன்... ஓகேவா..

Asiya Omar said...

ரஜினி படங்களோட லிஸ்டாக இருக்கும்னு வந்தேன்,இருந்தது.வழக்கம் போல கலக்கல் காமெடி.சித்ரா உங்க்ஜளுக்கு காமெடி குயீன் பட்டம் தந்திருக்கேன்.சித்ரா நீங்க எப்படி முதல்ல எல்லாருக்கும் கருத்து சொல்றீங்கன்னு அந்த ரகசியத்தை சொல்லுங்க,நானும் ட்ரை பண்றேன்,முடியலை.இதுக்கும் schedule போடணும்?

damildumil said...

//நம்ம ஆளு: "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."//

though sounds little exaggerated, it was fun to read

சசிகுமார் said...

படங்கள பத்தி எழுத சொன்னா சிறு புள்ள தனமா என்னனமோ எழுதி இருக்கீங்க. நிபந்தனையை மீறியதால் உங்களை ஆட்டத்தில் இருந்து கழட்டி விடுகிறேன் ஹி ஹி ஹி

கவிதன் said...

நல்ல காமெடியா எழுதிருக்கீங்க.... லிஸ்ட் எங்கெங்கேயோ போகுது .....

"For here or to go?"நம்ம ஆளு: "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."

இதுதான் hightlight comedy.... Superb chitra.....

ஸ்ரீராம். said...

என்னங்க பாதிலேயே பாதை மாறிட்டீங்க...ஆனாலும் உ.சு.வா படம் ஒண்ணு போதுமே...!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Romba nallathu.. aasaiya list paakaa vandhaaa..ippadiyaa kalaaikirathu...

mudhalla 10 padaththa podungappaaa :P :P

(As usual.. i liked it so much.. great going chitra) :) :)

Aba said...

அக்கா... என்னக்கா இது... அடுத்த பதிவ நீங்க எழுதரத்துக்குள்ள உங்க கொள்ளுப்பேத்திக்கு வளைக்காப்பு நடந்திடும் போலிருக்கே!

பார்த்து... வேகமா எழுதுங்க...

இப்படிக்கு,
என்றும் உங்கள் ரசிகன்,
கரிகாலன்...

SUFFIX said...

என்னவோ போங்க....

வெங்கட் said...

அடடா..,
என்னாமா எஸ் ஆனீங்க..

இங்கயே இத்தனை Doubt
கேட்கறீங்களே..
உங்களுக்கு சொல்லி குடுத்த
வாத்தியார் என்ன ஆயிருப்பார்..?

யாசவி said...

//நம்ம ஆளு: "One cheeseburger combo meal, please"
கவுன்ட்டர் ஆளு: "For here or to go?"
நம்ம ஆளு: "I came here to do my Master's Degree. Then, I will try to find a job for me. If I get it, I will be here. If not, I will go back to India."
கவுன்ட்டர் ஆளு: "O.K. Now, what do you want me to do with your cheeseburger combo meal?" //

இனிமே ஆபிஸ்ல உங்க ப்ளாகை படிக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்