Monday, July 26, 2010

மாத்தி யோசிங்க.....

"இந்த உலகம்(பூமி மட்டும்) சுற்றும் திசையில இருந்து மாறி எதிர் திசையில் சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் ?"

 என்ன ஆச்சு? திடீர்னு இப்படி ஒரு "வெட்டி பேச்சு"  அப்படின்னு நீங்க யோசித்தீங்கனு வைங்க..... அப்போ, உலகம் சுற்றும் திசை மாறி போச்சுன்னு நினைக்கிறேன்.... அப்படி நினக்கலைனா, "வெட்டி பேச்சு" ப்லாக்ல, இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக்குவீங்க....

http://madhavan73.blogspot.com/2010/07/blog-post.html 
படித்தீர்கள் என்றால், நம்ம மாதவன் சார் என்னை ஒரு  பதிவுக்கு அழைத்து இருப்பது தெரிந்து இருக்கும்.   அட, பதிவுலக நண்பர், மாதவன் சார்தாங்க..... "அலை பாயுதே";  "3 Idiots" மாதவன் சார் பதிவு எழுத அழைத்திருந்தால், உலகம் சுற்றும் திசை மாறி போச்சுனு அர்த்தம். 

சரி, உலகம் எதிர் திசையில் சுற்றும் போது என்ன நிகழ்வுகள் நடக்கும்?

சு(வ)ணக்கம்.  வால்(தலை)ப்பு  செய்திகள் வாசிப்பது, "தம்பட்டம் தாயம்மா":

தமிழ்நாடு:  

*  நமீதா அவர்கள்,  ல, ள, ழ சொல்ல பழகிவிட்டு சென்னை தொலைக்காட்சி நிறுவனத்தில், தமிழில் செய்திகள் வாசித்து கொண்டு இருக்கிறார். 

*  திருமதி குஷ்பூ அவர்கள், அன்னை தெரசா ஆசிரமத்தில் சேர்ந்து விட்டு, சமூக சேவை செய்து கொண்டு இருக்கிறார்.

*  திரு. சிம்பு அவர்கள், தன் விரல் வித்தை உதவியால்,  கேட்கும் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சைகை மொழியில் பேசி உதவி செய்து கொண்டு இருக்கிறார்.

*  மே  மாதத்தில்,  சென்னையில், இரண்டு அடி அளவு பெய்த பனியால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* முன்னொரு காலத்தில் கூவம் என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படும் நமது "தமிழ்நாட்டு குமரகம்", சிறந்த சுற்றுலா (resort) பகுதி என்று பரிசு பெற்று இருக்கிறது.

*  அரசியலில் இளைஞர்களுக்கும், குடும்ப அரசியல் இல்லாத  புதிய திட்ட வழிமுறைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தனது 65 ஆம் வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர், திரு. கருணாநிதி "கடிதம்" எழுதி உள்ளார்.  அதை,  LIC  இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருக்கும் அவர் மகன், ஸ்டாலின் ஆமோதித்து உள்ளார்.

*  Adayar Cancer Institute க்கு , தன் சொத்து பூராவும் எழுதி விட்டு,   தனது காசி பயணத்தை தொடரப் போவதாக,  செல்வி.ஜெயலலிதா "அறிக்கை" விட்டுள்ளார். 

இந்தியா: 

* போபால் விஷ வாய்வு வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுந்தண்டனை வழங்கியது குறித்து, "நீதி, நேர்மை, நியாயம், தர்மம்"  - இந்தியாவின் நீதி மன்றங்களின்  சிறப்பு அம்சங்கள்  என்று மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடி, நீதிபகளுக்கு பாராட்டு விழா எடுக்க உள்ளனர்.  

*  இந்திய தெருக்களைப் போல சுத்தமாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள சிங்கப்பூர் குழு ஒன்று,  நாளை மும்பை வருகிறது.

*   இந்திய ரயில்வேஸ் தொழில்நுட்பம், ஜப்பான் மக்களுக்கும் பயன்படும் விதமாக ஒரு ஆலோசனை குழு, இன்று மாலை ஜப்பான் செல்கிறது. 

* இந்தியாவில் குறைந்து வரும் ஜனத்தொகையை எப்படியும் அதிகப்படுத்தி, இன்னும் பத்து ஆண்டுகளுக்குள்,  50 கோடியை தொட்டு விடுவோம் என்று தேசிய குடும்ப நல அமைச்சர் கூறி உள்ளார். 

உலக செய்திகள்:  

* "Macro-soft , எந்த கம்ப்யூட்டர் வைரஸ் ப்ரோக்ராம் கொண்டும் ஊடுருவ முடியாதது," என்று "அமெரிக்க அம்பானி" என்றழைக்கப்படும் பில் கேட்ஸ் தெரிவித்தார். 

*   "என்னதான் முயன்றாலும் "quitters" எங்களுக்கு ஈடாகாது  என்று "footbook" கூறி உள்ளது. 

விளையாட்டு செய்திகள்: 

* உலக கால் பந்தாட்ட போட்டியில் இந்தியா, Spain நாட்டை வென்று பரிசு கோப்பையை தட்டி சென்றது.

* கால்பந்தாட்டத்துக்கே எல்லா sponsorship பணமும்,  மக்களின் வரவேற்பும்  சென்று விடுவதால் தான், தங்களை போன்ற  திறமையான விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக, கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு விளையாடும் சச்சின் மற்றும் தோனி வருத்தம் தெரிவித்து உள்ளார்கள். "சேப்பாக்கம் கால்பந்தாட்ட மைதானம்" பிரபலம் ஆகி இருப்பது போல, கிரிக்கெட்க்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆளுனரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக தெரிவித்து உள்ளார்கள். 

*  கில்லி விளையாட்டு,  ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.

வெள்ளித்திரை மற்றும் சின்ன திரை  செய்திகள்: 

*  "மேதை" திரைப்படத்தில் சிறப்பாக  நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது, திரு.ராமராஜனுக்கு வழங்கப்பட்டது.  சென்ற வருடமும் இந்த பரிசு இந்தியாவுக்கே கிடைத்தது.  "உலக கலக்கல் நாயகன்", சாம் அன்டேர்சன்க்கு வழங்கப்பட்டது குறிப்படத் தக்கது.  

*  செம்மொழி தமிழை வளர்க்கும் சன் தொலைகாட்சி நிறுவனம்,  தங்களது கல்வெட்டு ஆராய்ச்சியில் மூலம் தெரிந்து கொண்ட,  சங்ககால கலைநிகழ்ச்சிகளுக்கே  இனி முதலிடம் கொடுப்போம் என்று அறிவித்து உள்ளது.  

* "தொலைக்காட்சி நாடகங்கள் யாவும், அறிவுபூர்வமாகவும் உயர்ந்த நகைச்சுவை தொனியிடனே இருப்பதால், மாறுதல்கள் வர வேண்டும்"  என்று "மினி சீரியல்" நாயகி, தமன்னா கூறினார். 

பதிவுலகம்:  

*   "எங்கள் ப்லாக்" , இனி "எதிர் வீட்டு ஜன்னல்" ப்லாக் என்று அழைக்கப்படும். 

*   "திருக்குறள், என் பார்வையில்" என்ற இலக்கிய புத்தகம் எழுதிய பதிவர்,  தமிழ் காவலர்  "பார்த்ததும் படித்ததும்" ஜெட்லி, தன் அடுத்த தமிழ் இலக்கிய சேவைக்காக, "சங்க கால மனிதர்களும் அவர்களின் "நொறுக்குகளும்" " என்ற  புத்தகம் எழுதப் போவதாக தெரிவித்தார்.

"எந்திரன்" பட பாடல் வெளியீட்டு விழாவுக்காகச் செல்லும்  சித்ராஷ்கானா  வை, பேட்டி எடுக்க விரும்புவதாக "நிறைய வெட்டி பேச்சு" பதிவர், ஐஸ்வர்யா ராய் கூறி உள்ளார். 
  
நன்றி. மீண்டும் வறுபட வருக!  இப்படிக்கு என்றும் "தம்பட்டம் தாயம்மா" 
 
பி.கு.:
படங்கள் அனைத்தையும்  blogspots மற்றும் பிற websites இல் இருந்து எனக்காக "திருடி" ......சாரி, "தேடி"  கொடுத்த Mr.Google Robin Hood க்கு நன்றிகள் பல. 
 
118 comments:

Jey said...

மீ த இ-ஆ ??!!!

இருங்க என்ன வெட்டியா பேசியிருக்கீங்கன்னு படிச்சிட்டு வரேன்.

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு .......வாழ்த்துகள்

எல் கே said...

// "மேதை" திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது, திரு.ராமராஜனுக்கு வழங்கப்பட்டது. சென்ற வருடமும் இந்த பரிசு இந்தியாவுக்கே கிடைத்தது. "உலக கலக்கல் நாயகன்", சாம் அன்டேர்சன்க்கு வழங்கப்பட்டது குறிப்படத் தக்கது. /

ithuthaan toppuu

Jey said...

எக்கா, எல்லாத்தையும் நால்லாத்தான் வறுத்திருகீங்க, ஏதாவது ஒன்னை மட்டும் தனியா சொல்ல முடியலை...
ம்ஹும்.. இதெல்லாம், உண்மையிலேயே நடந்தா எப்பூடி இருக்கும், தூங்கும்போது கனவுல கூட இதுமாதிரி வரமாட்டேங்குதே....

Madhavan Srinivasagopalan said...

கலக்கிட்டீங்கமா கலக்கிட்டீங்க.. இந்த போடு போடுறீங்க.... சரியான ஆளத்தான் தொடர அழைச்சிருக்கேன். தொடர்ந்தமைக்கு நன்றி..

Unknown said...

எப்பிடி எல்லாம் யோசிகிறீங்க ..
சிரிச்ச சிரிப்புல மனைவி எட்டி பாத்து முழுசா லூசா மாறிடீங்கன்னு.. திட்டிட்டு போறாங்க...

தமிழ் உதயம் said...

அள்ளி விடுறதுன்னு சொல்றது இதை தானோ.

Vishy said...

இன்னொன்னை விட்டுட்டீங்களே.. பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரமான சித்ரா - பதிவுலகத்தில் உருப்படியாக ஏதாவது எழுதப்போவதாக உறுதி அளித்தார் :)

vasu balaji said...

/இந்திய ரயில்வேஸ் தொழில்நுட்பம், ஜப்பான் மக்களுக்கும் பயன்படும் விதமாக ஒரு ஆலோசனை குழு, இன்று மாலை ஜப்பான் செல்கிறது. //

மும்பையின் மின்சார ரயில் போக்கு வரத்தின் மேம்பாட்டுக்காக அழைத்த ஜப்பானியக் குழு, வியந்து போய் இதை விடச்சிறப்பாக செயல் படுத்த சாத்தியமேயில்லை என்று குறிப்பெடுத்துக் கொண்டு போனது உண்மையில் நடந்தது.:)

அருண் பிரசாத் said...

யப்பா முடியலை. சிரிச்சி சிரிச்சி வயிறு வலி. சூப்பர் பதிவு

பாலா said...

காணக்கிடைக்காத நமிதாவின் புடவை புகைப்படம் வெளியிட்டதற்கு நன்றி :D
கலக்கல் பதிவு அக்கா !!!

ROFL :)))

தமிழ் அமுதன் said...

பூமி வழக்கம் போல சுத்தினப்போ
வயசு ஏறிகிட்டே போச்சு ..! இப்போ மாத்தி சுத்தினா ஏறுன வயசு கொஞ்ச கொஞ்சமா கொறைஞ்சு மறுபடி
குழந்தையா மாறிட்டா எப்படி இருக்கும்..?

Karthick Chidambaram said...

நமிதாவின் இந்த கற்புக்கரசி படத்தை எங்கே பிடித்தீர்கள் ?
பதிவுலகம் இப்படி ஒரு படத்தை நீங்கள் வெளியிட்டதிற்காக கண்டன பேரணி நடத்துமே என்ன செய்வீர்கள்? உலகத்தை திருப்பி சுத்தவிடுவீங்கலோ ?

சாருஸ்ரீராஜ் said...

நல்லா யோசிச்சு இருக்கீங்க சித்ரா அப்துல் கலாம் இந்தியா வல்லரசு நாடாகும்னு சொன்ன மாதிரி , உங்கள் பேச்சு(வெட்டி)நினைவாக வாழ்த்துக்கள் , நல்ல சுவரசியமாக,நகைசுவையாகவும் இருக்கு

புவனேஸ்வரி ராமநாதன் said...

கலக்கல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஐஸ் பதிவரா.. அதும் அ தி க வெட்டிப்பேச்சா.. சூப்பர்..

settaikkaran said...

நமீதா ழகரம், ளகரம் கூடப் பழகிரலாம்; ஆனா, அவங்க பாந்தமா சேலையுடுத்தி, இதுவும் இருக்கட்டுமுன்னு ஒரு சால்வையைப் போர்த்திட்டிருக்கிறா மாதிரி படம் போட்டிருக்கீயளே...நெசமாவே உலகம் திசை மாறிப் போயிட்டா மாதிரித் தான் இருக்கு!

பின்னோக்கி said...

எப்படித்தான் இவ்வளவு யோசிக்கிறீங்களோ !.

சிம்புவும் ஆண்டர்சன்னும் - சிரிச்சு மாளலை :)

Vidhya Chandrasekaran said...

கலக்கல். சிரிச்சு மாளல..

நாடோடி said...

த‌லையான‌ செய்தி.. நாட்டுக்கு தேவையான‌ செய்தி... ஹா..ஹா..

பித்தனின் வாக்கு said...

enna kodumai ithu??????
enga thalaivi namithavai ippadiya, parkka sakikkamal padam poduvathu.

ulagama marunalum nangalum namithavum maara mattom.

aammaa santhadi sakkula vettipp pachu pathivar iswarya rainnu sollita. ithuthan super comedy.
aamma iswarya rai eppa kundu aananga???.
ippadikku India orgin US president (aakap pokum) pathivar MR. Pitthan.

முனைவர் இரா.குணசீலன் said...

எப்படி சித்ரா?

நீங்க இந்த காலத்துல பிறக்கவேண்டியவே இல்லை..

எதிர்காலத்துல பிறக்கவேண்டியவர்..

விரும்பிப்ப படித்தேன்..

Mahi_Granny said...

எல்லோரும் கேட்பது போல ரூம் போட்டு யோசிப்பிங்களா என்று கேட்கத் தோன்றவில்லை . ஏனெனில் இதெல்லாம் சித்ராவுக்கு chumma . ஒன்றுமேயில்லை

அமுதா said...

/*நன்றி. மீண்டும் வறுபட வருக!*/
வருவேன்... வறுவல் நல்லா ருசியா இருக்கு.

Anonymous said...

செம்ம கலக்கல் சித்ரா ..நமீதா நியூஸ் ரீடரா ஏன் இந்த கொலை வெறி ???
ரசித்தேன் நன்றி

ஜெட்லி... said...

ஆஸ்கார் நாயகன் ராமராஜன் வால்க...
மேதையை இப்படி டேமேஜ் பண்ணா கூடாது..
ஒரு வேளை படம் நல்லா இருந்தா என்ன பண்றது...??

சௌந்தர் said...

சிம்பு உங்களை தேடி கொண்டு US வந்து இருக்கிறார்......ராமராஜன் உங்களுக்கு நன்றி சொல்லி ஓரு பாட்டு பாட போகிறார் .....

Anonymous said...

செம சூப்பர் சித்ரா...
வழக்கம் போல ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க!!!

// LIC இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருக்கும் அவர் மகன், ஸ்டாலின் //
// "மேதை" திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது //
// செம்மொழி தமிழை வளர்க்கும் சன் தொலைகாட்சி நிறுவனம் //

உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் :))

ஜெய்லானி said...

அதுயாருங்க புதுசா சித்ராஷ்கானா ....?

ஜெய்லானி said...

செம கலக்கல் காமெடி...உலகம் பின்னால சுத்தினாலும். இதில உள்ளது நடக்க போவது இல்லை..

சூப்பர் செலக்‌ஷன்..ஒவ்வொன்னும்

Chitra said...

Blogger Jey said...

மீ த இ-ஆ ??!!!

இருங்க என்ன வெட்டியா பேசியிருக்கீங்கன்னு படிச்சிட்டு வரேன்.

...... துண்டை போட்டு இடத்தை பிடித்த Jey க்கு ஒரு ஜே!

Chitra said...

Blogger rk guru said...

அருமையான பதிவு .......வாழ்த்துகள்

...Thank you!

Chitra said...

LK said...

// "மேதை" திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது, திரு.ராமராஜனுக்கு வழங்கப்பட்டது. சென்ற வருடமும் இந்த பரிசு இந்தியாவுக்கே கிடைத்தது. "உலக கலக்கல் நாயகன்", சாம் அன்டேர்சன்க்கு வழங்கப்பட்டது குறிப்படத் தக்கது. /

ithuthaan toppuu

...meethi ellaam dooppu!

(upayam: thani kaattu raja - song )

Chitra said...

Jey said...

எக்கா, எல்லாத்தையும் நால்லாத்தான் வறுத்திருகீங்க, ஏதாவது ஒன்னை மட்டும் தனியா சொல்ல முடியலை...
ம்ஹும்.. இதெல்லாம், உண்மையிலேயே நடந்தா எப்பூடி இருக்கும், தூங்கும்போது கனவுல கூட இதுமாதிரி வரமாட்டேங்குதே....

...... கனவு வரலைனாலும் பரவாய் இல்லை.... nightmare வராமல் இருந்தால் போதும்!

Chitra said...

Madhavan said...

கலக்கிட்டீங்கமா கலக்கிட்டீங்க.. இந்த போடு போடுறீங்க.... சரியான ஆளத்தான் தொடர அழைச்சிருக்கேன். தொடர்ந்தமைக்கு நன்றி..

..... அப்போ வச்ச நம்பிக்கை வீண் போகலனு சொல்றீங்க.... சூப்பர்!

Chitra said...

கே.ஆர்.பி.செந்தில் said...

எப்பிடி எல்லாம் யோசிகிறீங்க ..
சிரிச்ச சிரிப்புல மனைவி எட்டி பாத்து முழுசா லூசா மாறிடீங்கன்னு.. திட்டிட்டு போறாங்க...

..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... இப்படி வேற நடக்குதா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Chitra said...

தமிழ் உதயம் said...

அள்ளி விடுறதுன்னு சொல்றது இதை தானோ.

..... காதுல பூ முடிக்கிறதும் இதுதான்!

Chitra said...

Vishy said...

இன்னொன்னை விட்டுட்டீங்களே.. பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரமான சித்ரா - பதிவுலகத்தில் உருப்படியாக ஏதாவது எழுதப்போவதாக உறுதி அளித்தார் :)

.... அதுதான் intro ல கொஞ்சம் மாத்தி கொடுத்து இருக்கேனே!

Chitra said...

வானம்பாடிகள் said...

/இந்திய ரயில்வேஸ் தொழில்நுட்பம், ஜப்பான் மக்களுக்கும் பயன்படும் விதமாக ஒரு ஆலோசனை குழு, இன்று மாலை ஜப்பான் செல்கிறது. //

மும்பையின் மின்சார ரயில் போக்கு வரத்தின் மேம்பாட்டுக்காக அழைத்த ஜப்பானியக் குழு, வியந்து போய் இதை விடச்சிறப்பாக செயல் படுத்த சாத்தியமேயில்லை என்று குறிப்பெடுத்துக் கொண்டு போனது உண்மையில் நடந்தது.:)

........ அப்படியா? ஜெய் ஹோ!

Chitra said...

அருண் பிரசாத் said...

யப்பா முடியலை. சிரிச்சி சிரிச்சி வயிறு வலி. சூப்பர் பதிவு

..... சிரிச்சதுக்கு தேங்க்ஸ்ங்க.....

Chitra said...

Bala said...

காணக்கிடைக்காத நமிதாவின் புடவை புகைப்படம் வெளியிட்டதற்கு நன்றி :D
கலக்கல் பதிவு அக்கா !!!

ROFL :)))

..... உலகம் ஏற்கனவே மாற்றி சுற்ற ஆரம்பிச்சிட்டோ என்று ஒரு நிமிஷம் போட்டோ பார்த்ததும் நானும் நினைச்சேன்!

Chitra said...

தமிழ் அமுதன் said...

பூமி வழக்கம் போல சுத்தினப்போ
வயசு ஏறிகிட்டே போச்சு ..! இப்போ மாத்தி சுத்தினா ஏறுன வயசு கொஞ்ச கொஞ்சமா கொறைஞ்சு மறுபடி
குழந்தையா மாறிட்டா எப்படி இருக்கும்..?

..... பிறக்கும் போது எல்லோரும் கிழடு தட்டி போய் இருப்பாங்களோ? இது நல்லா இருக்கே!

Anonymous said...

//நமீதா அவர்கள், ல, ள, ழ சொல்ல பழகிவிட்டு சென்னை தொலைக்காட்சி நிறுவனத்தில், தமிழில் செய்திகள் வாசித்து கொண்டு இருக்கிறார். //

//கில்லி விளையாட்டு, ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.//

//"மேதை" திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது, திரு.ராமராஜனுக்கு வழங்கப்பட்டது. சென்ற வருடமும் இந்த பரிசு இந்தியாவுக்கே கிடைத்தது. "உலக கலக்கல் நாயகன்", சாம் அன்டேர்சன்க்கு வழங்கப்பட்டது குறிப்படத் தக்கது. //

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் சித்ரா..

வித்த்யாசமா யோசிச்சிருக்கீங்க.. நடந்தா நல்ல தான் இருக்கும்..

Chitra said...

Karthick Chidambaram said...

நமிதாவின் இந்த கற்புக்கரசி படத்தை எங்கே பிடித்தீர்கள் ?
பதிவுலகம் இப்படி ஒரு படத்தை நீங்கள் வெளியிட்டதிற்காக கண்டன பேரணி நடத்துமே என்ன செய்வீர்கள்? உலகத்தை திருப்பி சுத்தவிடுவீங்கலோ ?

..... கேட்டேன்.... தமன்னா, அனுஷ்கா மட்டும் தான் இப்போ கரண்ட் லிஸ்ட் ல இருக்காங்களாம்!

Chitra said...

சாருஸ்ரீராஜ் said...

நல்லா யோசிச்சு இருக்கீங்க சித்ரா அப்துல் கலாம் இந்தியா வல்லரசு நாடாகும்னு சொன்ன மாதிரி , உங்கள் பேச்சு(வெட்டி)நினைவாக வாழ்த்துக்கள் , நல்ல சுவரசியமாக,நகைசுவையாகவும் இருக்கு

..... நல்லதை நினைப்போம்! கனவு காண்கிறது தப்பு இல்லையே!

Chitra said...

புவனேஸ்வரி ராமநாதன் said...

கலக்கல்.

...Thank you!

Mugilan said...

//திரு. சிம்பு அவர்கள், தன் விரல் வித்தை உதவியால், கேட்கும் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சைகை மொழியில் பேசி உதவி செய்து கொண்டு இருக்கிறார்.//
செம யோசனை! சிம்புக்கு ஃபார்வர்ட் பண்ணுங்க! :)

Chitra said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஐஸ் பதிவரா.. அதும் அ தி க வெட்டிப்பேச்சா.. சூப்பர்..

..... வருவாங்க.... வருவாங்க....

'பரிவை' சே.குமார் said...

கலக்கிட்டீங்க...

எப்பிடி எல்லாம் யோசிகிறீங்க.

Chitra said...

சேட்டைக்காரன் said...

நமீதா ழகரம், ளகரம் கூடப் பழகிரலாம்; ஆனா, அவங்க பாந்தமா சேலையுடுத்தி, இதுவும் இருக்கட்டுமுன்னு ஒரு சால்வையைப் போர்த்திட்டிருக்கிறா மாதிரி படம் போட்டிருக்கீயளே...நெசமாவே உலகம் திசை மாறிப் போயிட்டா மாதிரித் தான் இருக்கு!

..... விலை மதிப்பில்லாத போட்டோ.... பத்திரமாக வைச்சுக்கணும் போல....

Chitra said...

Blogger பின்னோக்கி said...

எப்படித்தான் இவ்வளவு யோசிக்கிறீங்களோ !.

சிம்புவும் ஆண்டர்சன்னும் - சிரிச்சு மாளலை

..... Thats the point! :-)

Chitra said...

வித்யா said...

கலக்கல். சிரிச்சு மாளல..

...Thank you.

Chitra said...

நாடோடி said...

த‌லையான‌ செய்தி.. நாட்டுக்கு தேவையான‌ செய்தி... ஹா..ஹா..

..... எல்லோரும் சிரிக்க வேண்டியது, நாட்டுக்குத் தேவையானது தானே!

Chitra said...

பித்தனின் வாக்கு said...

enna kodumai ithu??????
enga thalaivi namithavai ippadiya, parkka sakikkamal padam poduvathu.

ulagama marunalum nangalum namithavum maara mattom.

aammaa santhadi sakkula vettipp pachu pathivar iswarya rainnu sollita. ithuthan super comedy.
aamma iswarya rai eppa kundu aananga???.
ippadikku India orgin US president (aakap pokum) pathivar MR. Pitthan.

....MR.PRESIDENT!!!!!! SALUTE!!!!

செல்வா said...

அதவிட பதிவுலகுல ஒன்ன மறந்துட்டீங்க ..
(உலகம் எதிர் திசையில் சுற்றினால் )
கோமாளி ப்ளாக் ல இனிமேல் மொக்கையே போடப்படாது ..!!

Chitra said...

முனைவர்.இரா.குணசீலன் said...

எப்படி சித்ரா?

நீங்க இந்த காலத்துல பிறக்கவேண்டியவே இல்லை..

எதிர்காலத்துல பிறக்கவேண்டியவர்..

விரும்பிப்ப படித்தேன்..

..... எதிர்காலத்துல பிறக்கவேண்டியவர்..இப்போதைக்கு என் இம்சை இல்லாமல் இருந்து இருப்பீங்க! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

Chitra said...

Mahi_Granny said...

எல்லோரும் கேட்பது போல ரூம் போட்டு யோசிப்பிங்களா என்று கேட்கத் தோன்றவில்லை . ஏனெனில் இதெல்லாம் சித்ராவுக்கு chumma . ஒன்றுமேயில்லை

..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

Chitra said...

அமுதா said...

/*நன்றி. மீண்டும் வறுபட வருக!*/
வருவேன்... வறுவல் நல்லா ருசியா இருக்கு.

..... Thank you very much! :-)

Chitra said...

sandhya said...

செம்ம கலக்கல் சித்ரா ..நமீதா நியூஸ் ரீடரா ஏன் இந்த கொலை வெறி ???
ரசித்தேன் நன்றி

...... சும்மா ... சும்மா... சும்மா....

Chitra said...

ஜெட்லி... said...

ஆஸ்கார் நாயகன் ராமராஜன் வால்க...
மேதையை இப்படி டேமேஜ் பண்ணா கூடாது..
ஒரு வேளை படம் நல்லா இருந்தா என்ன பண்றது...??

......அப்படினா நிஜமாகவே ஆஸ்கார் அவார்ட் கொடுத்து விட வேண்டியதுதான்!

Chitra said...

சௌந்தர் said...

சிம்பு உங்களை தேடி கொண்டு US வந்து இருக்கிறார்......ராமராஜன் உங்களுக்கு நன்றி சொல்லி ஓரு பாட்டு பாட போகிறார்

.....சான்சே இல்லை.... சூப்பர் கமென்ட்!

சுசி said...

அம்மாடியோவ்.. இம்புட்டு நன்மைன்னா உலகம் மாத்தி சுத்தலாம் போல இருக்கே..

தாயம்மா கலக்கிட்டா வ போ..

Chitra said...

Blogger Balaji saravana said...

செம சூப்பர் சித்ரா...
வழக்கம் போல ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க!!!

// LIC இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக இருக்கும் அவர் மகன், ஸ்டாலின் //
// "மேதை" திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது //
// செம்மொழி தமிழை வளர்க்கும் சன் தொலைகாட்சி நிறுவனம் //

உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் :))

...... எல்லா புகழும் இறைவனுக்கே! :-)

Chitra said...

ஜெய்லானி said...

அதுயாருங்க புதுசா சித்ராஷ்கானா ....?

..... உலகம் மாத்தி சுத்தும் போதுதான் , எல்லோருக்கும் தெரியுமே!

சுசி said...

புது வீடு சூப்பர்..

Chitra said...

Indhira said...

//நமீதா அவர்கள், ல, ள, ழ சொல்ல பழகிவிட்டு சென்னை தொலைக்காட்சி நிறுவனத்தில், தமிழில் செய்திகள் வாசித்து கொண்டு இருக்கிறார். //

//கில்லி விளையாட்டு, ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது.//

//"மேதை" திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, "ஆஸ்கார்" விருது, திரு.ராமராஜனுக்கு வழங்கப்பட்டது. சென்ற வருடமும் இந்த பரிசு இந்தியாவுக்கே கிடைத்தது. "உலக கலக்கல் நாயகன்", சாம் அன்டேர்சன்க்கு வழங்கப்பட்டது குறிப்படத் தக்கது. //

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் சித்ரா..

வித்த்யாசமா யோசிச்சிருக்கீங்க.. நடந்தா நல்ல தான் இருக்கும்..

...... அதானே "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா!

Chitra said...

Mugilan said...

//திரு. சிம்பு அவர்கள், தன் விரல் வித்தை உதவியால், கேட்கும் திறன் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சைகை மொழியில் பேசி உதவி செய்து கொண்டு இருக்கிறார்.//
செம யோசனை! சிம்புக்கு ஃபார்வர்ட் பண்ணுங்க! :)

..... அவர் இ-மெயில் id நேத்துதான் தெரியாம delete பண்ணிட்டேன்.... ஹஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Chitra said...

சே.குமார் said...

கலக்கிட்டீங்க...

எப்பிடி எல்லாம் யோசிகிறீங்க.

...Thank you!

Chitra said...

ப.செல்வக்குமார் said...

அதவிட பதிவுலகுல ஒன்ன மறந்துட்டீங்க ..
(உலகம் எதிர் திசையில் சுற்றினால் )
கோமாளி ப்ளாக் ல இனிமேல் மொக்கையே போடப்படாது ..!!

.....பதிவுலகத்துக்கென்று தனியா ஒரு பதிவு போட்டா போச்சு!

Chitra said...

Thank you, Susi!!!!! Thank you very much!!!

S Maharajan said...

கலக்கிட்டீங்க..

mightymaverick said...

சிம்பு உங்களுக்கு வணக்கம் சொல்லுவதற்காகவே ஒரு விரல் வித்தையை கண்டுபிடித்திருப்பதாகவும், ராமராஜன் "தம்பட்டமே... தம்பட்டமே..." (செண்பகமே செண்பகமே) என்ற ஒரு நன்றி நவிலும் பாடல் ஒன்றை மேதை படத்தில் சேர்த்திருப்பதாகவும் கேள்வி... நமீதாவோ ஒரு படி மேலே போய் நன்றி நவிலும் நேரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்திருப்பதாகவும் கேள்வி... கலைஞர் தனது 83-வது பிறந்தநாளை ஏற்கனவே கொண்டாடி விட்டார்... அதனால், அவரை 20 வயது குறைவாக விருப்ப ஓய்வு பெற்றதாக அறிவித்த தங்களுக்கு ஒரு குட்டு... ஏனெனில் பூமி என்னதான் மாற்றி சுற்றினாலும் அரசியலில் இருப்பவர்கள் எப்போதும் அப்படியே தான் இருப்பார்கள்... ஏனெனில் அவர்களை ஆட்டுவிப்பது பதவியும் பணமும் மட்டும் அல்ல...

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லோரும் பொட்டிய கட்டிர‌வேண்டியதுதான்.. இப்படியெல்லாம் யோச்சிச்சா அப்புறம் யோசீக்க ஒன்னுமேருக்காது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

தம்பட்டம் தாயம்மா.. இன்னும் என்னன்ன சேதியெல்லாம் வச்சிருக்கீக..

அப்புறமா வாரேன்.

சசிகுமார் said...

படத்தில யாரு நம்ம நமிதாவ ஐயையோ நம்ப முடியவில்லை. படத்த ரொம்ப கஷ்ட்டப்பட்டு தேடி இருக்கீங்க போல

பெசொவி said...

super, super,,,,,,,,,supero super!

அமைதி அப்பா said...

நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க மேடம்.

கண்ணா.. said...

யோசிச்சு மாத்துனது ஓக்கேய்...

சிம்பு மேட்டரும் டாப்பு....

ஆமா 2.49க்கெல்லாம் ரிப்ளை போடுறீங்களே.... தூங்கவே மாட்டீங்களா..:)

Prathap Kumar S. said...

எப்பிடி இதெல்லாம்... உக்காந்து யோசிக்கிறதா??? தூங்கிட்டு யோசிக்கிறதா???

திருவாரூர் சரவணா said...

பேராசைப் படுறதுக்கு ஒரு அளவே இல்லையா?

Kousalya Raj said...

எப்படி இப்படி எல்லாம் கற்பனை பண்ணுறீங்க .... சூப்பர் தோழி

க ரா said...

கலாய் கலாய் கலங்கும் வரை கலாய்.. பின்னிட்டீங்க

NADESAN said...

kalakalakalakalakala pathivu

Anbudan

Nellai Nadesan
Dubai

Menaga Sathia said...

ஐயோ சித்ரா செம கலக்கல்ப்பா..மிகவும் ரசித்தேன்...

வால்பையன் said...

உண்மையிலேயே வால் முளைக்கிற மாதிரி ஒரு பீளீங்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி தூங்கினது போதும் எழுந்திரிங்க...

ஹேமா said...

சித்ரா..சித்ரா...எப்பிடிம்மான்னு சிவாஜி ஸ்டைல்லதான் கேக்கணும்.வாசிச்சுக்கிட்டு இருக்கிறப்போ போன் ஒண்ணு வந்திச்சு.அவங்க சொல்றதை விட்டிட்டு நீங்க எழுதியிருக்கிறதைப் பத்தித்தான் சொல்லிச் சிரிச்சேன்.ஏன் சித்ரா...இலங்கையைப் பத்தியும் ஒரு வரி சொல்லியிருக்கலாமே !

நசரேயன் said...

நல்லாவே யோசிக்குறீங்க .. தமிழ் மண கருபட்டைய எங்கே ?

ப்ரியமுடன் வசந்த் said...

superb...

மேதை படிச்சதும் கீழ விழுந்துட்டேன் சிரிச்சு...

நமீதா நியூஸ் ரீடர்

வண்க்கம் மச்சான்ஸ்..சூப்பரா இருக்குமே தினமும் நமீதா தரிசனம் கிடைக்கும்...

சிநேகிதன் அக்பர் said...

கனவுகள் மெய்பட வேண்டும்.

மிக அருமையா எழுதியிருக்கிங்க சித்ராக்கா.

உங்கள் பதிவுகளில் மிகவும் பிடித்ததில் இதுவும் ஒன்று.

சிநேகிதன் அக்பர் said...

எப்படியிருந்த நமிதாக்கா இப்படி ஆயிட்டாங்களே :(

☀நான் ஆதவன்☀ said...

:)))))))) உண்மையாலும் உலகம் ரிவர்ஸ்ல சுத்தாதான்னு ஆசையா இருக்கு போங்க

dheva said...

மாத்தி யோசித்தல் பரிணாமத்தின் அடுத்த படி...! எப்போதும் நடைபெறும் நிகவுகளை விட்டு வேறுவிதமாய் நகர்வதில்தான் வாழ்வின் சுவராஸ்யம் இருக்கிறது.

விளையாட்டாய் நீங்கள் சொல்லி இருந்தலும் இவை எல்லாம் அடிமனதின் ஆசைகள்தானே சித்ரா....? உங்களின் ஒவ்வொரு கூற்றும் ஒரு ஏக்கத்தின் அல்லது இப்படி நிகழாத என்று மாத்தியோசித்ததின் விளைவுதானே....?

ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நாளும் சுவராஸ்யமாக நகர தினம் தினம் மாத்தி யோசிக்கவேண்டும். தினம் அலுவலகம் சென்று திரும்பும் பாதையை நான் மாற்றிக் கொண்டே இருப்பேன்....மாற...மாற ...மனம் புதிது புதிதாய் சிந்திக்கும் ஒரு இன்னோவேசன் கிடைக்கிறது...

சித்ரா சொல்லும் மாத்தி யோசி ஒரு ஃபன் என்று நினைக்காதீர்கள்...ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

அதனால்தான் சித்ரா சொல்வதை வெறும் வெட்டிப் பேச்சாக பெரும்பலும் என்னால் விட முடியவில்லை....!

வாழ்த்துகள் தோழி!

தெய்வசுகந்தி said...

கலக்கிட்டீங்க சித்ரா!!!

Guruji said...

அருமையான பதிவு

http://ujiladevi.blogspot.com

பனித்துளி சங்கர் said...

ஆஹா இதுதான் ஒரே பதிவில் பலருக்கு குத்து என்பதா !?
. ம்ம் கலக்குறிங்க போங்க நீண்ட பதிவு நிதானமாகப் படிக்கணும் . பகிர்வுக்கு நன்றி

ராம்ஜி_யாஹூ said...

தினமும் முப்பத்தைந்து பின்னூட்டங்கள் இடும் சித்ரா மூன்று nபின்னூட்டங்கள் மட்டுமே இடுவார்.

எட்வின் said...

மாத்தி யோசிங்க... யோசிங்க மாத்தி :) நல்லாத்தான் இருக்கும் இப்புடி எல்லாம் நடந்தா. நடக்கனுமே... ம்ம்ம்

"கடிதம்" "அறிக்கை" இரண்டிலும் மேற்கோள் போட்டிருப்பது ஜூப்பரு.

ஸ்ரீராம். said...

ஆஹா.... என்ன கற்பனை..!
கூவம் கற்பனை.. அபபடி ஒரு காலம் வந்தால்...
"கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு விளையாடும்..."......!!!!!!!
ஆஹா... 'எங்கள் ப்ளாக்'கிற்கும் ஆப்பா...!
ராம்ஜி யாஹூ வின் கமெண்ட்... புன்னகை.

மொத்தத்துல கலக்....க்.....க்...கிட்டீங்க...

Unknown said...

அருமையான பதிவு.

HAA. HAAA. HAAAA. HAAAAA......

தாராபுரத்தான் said...

அது சரி..இப்படி யோசிக்க கூடாதா? மாண்பு மிகு .தமிழக முதல்வர்.முத்தமிழ் அரசு.டாக்டர்.வானம்பாடிகள் .அவர்களின் 75 வது பிறந்த நாளை தமிழகமே கோலாகலமாக கொண்டாடவுள்ளது.இதனை மாண்புமிகு .தமிழக செய்தி மக்கள் தொடர்பு அமைச்சர்.வெனா.கானா(வெட்டிப் பேச்சு) சிந்தனைச் செல்வி .சித்ரா..அறிவித்தார்..இப்படியே போய் எனக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுங்களேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

* இந்தியாவில் குறைந்து வரும் ஜனத்தொகையை எப்படியும் அதிகப்படுத்தி, இன்னும் பத்து ஆண்டுகளுக்குள், 50 கோடியை தொட்டு விடுவோம் என்று தேசிய குடும்ப நல அமைச்சர் கூறி உள்ளார். //

நெஜமாவா.. இன்னும் இருபது வருஷம் ஆகுமுன்னு பேசிக்கிறாங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

* உலக கால் பந்தாட்ட போட்டியில் இந்தியா, Spain நாட்டை வென்று பரிசு கோப்பையை தட்டி சென்றது.//

இப்படியெல்லாம் வேற நடக்குதா.. சொல்லவேயில்ல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அக்கா அத்தனையும் அருமை..

இந்த மாதிரி மாத்தி யோசிக்க உங்களால் மட்டும் தான் முடியும்..

Anonymous said...

பதிவுலக சூப்பர்ஸ்டாரினி சித்ரா அவர்களே..இந்த பதிவு அட்டகாசம்

கௌதமன் said...

சூப்பர் கலக்கல் பதிவு. பதிவுலகில், கலக்கப் போவது யாரு போட்டி வைத்தால் முதல் பரிசு உங்களுக்குத்தான் என்று தோன்றுகிறது.

நட்புடன் ஜமால் said...

கால் பந்தாட்ட போட்டியில் இந்தியா வெற்றி ரொம்ப ஆசை தான் (எனக்கும் இருக்கு)

குமரகம்(கூவம்) பேபேபேபேராசை

Riyas said...

எப்பிடி எல்லாம் யோசிகிறீங்க
அருமையான பதிவு .......வாழ்த்துகள்

பழூர் கார்த்தி said...

நல்லா இருக்குங்க :-))

Admin said...

//சேட்டைக்காரன் said...
நமீதா ழகரம், ளகரம் கூடப் பழகிரலாம்; ஆனா, அவங்க பாந்தமா சேலையுடுத்தி, இதுவும் இருக்கட்டுமுன்னு ஒரு சால்வையைப் போர்த்திட்டிருக்கிறா மாதிரி படம் போட்டிருக்கீயளே...நெசமாவே உலகம் திசை மாறிப் போயிட்டா மாதிரித் தான் இருக்கு!//

இப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

Jayanthy Kumaran said...

wat a lovely post dear.
An award waiting for you at my blog, please collect it

மங்குனி அமைச்சர் said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பேராசை மேடம்

RAGUNATHAN said...

வாவ் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த எல்ஐசி ஏஜெண்ட் ஸ்டாலின்...என்ன ஒரு கற்பனை...கைய கொடுங்க சித்ரா... இந்தாங்க ஒரு ரோஜா தோட்டத்தையே புடிங்க... வாழ்த்துக்களுடன் வச்சுக்குங்க...

அன்புடன் நான் said...

நீங்க சொல்லுற அத்தனையும் சிறிப்பு மட்டுமில்லிங்க.... இது எவ்வளவு வேதனை... ஏமாற்றம்.... இயலாமை.... ஏந்தான் நம்ம நாடு இப்படி இருக்கோன்னு நினைக்க வைக்கிறது....

அன்புடன் நான் said...

உங்க கனவுகளில்லாவது இவையேல்லாம் சாத்தியப் பட்டதே... என் பெருமை கொள்ளுங்கள்.

பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் நான் said...

மிக வியக்கும் படி எழுதியிருக்கிங்க.... உங்க எண்ன ஈடேற என் வாழ்த்துக்கள். நன்றி.

ரோஸ்விக் said...

இன்னும் வேகமா சுத்தி மன்னராட்சி வந்ததை நீங்க பாக்கலையா...? அங்க நான் தான் மன்னர்.. ;-)

செந்தில்குமார் said...

நல்லயிருக்கு சித்ரா ம்ம்ம்..

மாத்தியோசிக்கிரன்னு சொல்லிட்டு சும்மா ப்ப்ந்து விளையாடி இருக்கிங்க