நேற்று, ஒரு தோழியின் அம்மாவுடன் போன்ல பேசி கொண்டு இருந்தேன்.... தனது மகளின் பிரசவ கால உதவிக்காக வந்து இருக்கிறார். Ultrasound Exam ல் ஏற்கனவே பார்த்து, பிறக்க போவது பெண் பிள்ளைதான் என்று தெரிந்து கொண்டார்கள். அவர்களுடன் பேசி கொண்டு இருந்த சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றியது.
தோழியின் அம்மா: என் மகள் எனது பேச்சு கேட்கவே மாட்டேங்குறா..... பொண்ணு பிறந்து ரெண்டு மூன்று வருடங்களில், சென்னை வந்து செட்டில் ஆகி விடுங்கள் என்று சொல்கிறேன். அமெரிக்காவில பெண் பிள்ளைகள் வளர்வது குறித்து எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது. நீயே சொல்லும்மா..... உனக்கும் ஒரு பொண்ணு இருக்கே, பயமாக இல்லையா?
நான்: "இல்லை... கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு நல்ல விஷயங்களை சொல்லி வளர்க்கிறேன். நான் சொல்ற விஷயங்களுக்கு பலன் இருக்கா, இல்லை அது எல்லாம் வெட்டி பேச்சா என்று அவளின் டீன் ஏஜ்ல தான் எனக்கு தெரியும். இந்த ரிஸ்க், எந்த நாட்டில் இருந்தாலும் "அலைபாயுமே"..... இதில் ஆண் குழந்தை என்ன? பெண் குழந்தை என்ன? என் மகளை இந்தியாவிலேயும், என் மகனை அமெரிக்காவிலும் வளர்க்க, என்னால் எப்படி முடியும்?
தோழியின் அம்மா: Bore அடிக்கும் போது, அப்போ அப்போ உன் ப்லாக் படிப்பேன்..... (நல்ல வேளை ....அப்போ அப்போ உன் ப்லாக் படிச்சிட்டு bored ஆக பீல் பண்ணுவேன் என்று அவங்க சொல்லல........ தப்பிச்சேன்!) அமெரிக்காவை பற்றி நிறைய எழுதுறியே. எப்படி தெரியும்?
நான்: "என் கணவரின் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊர்களிலும் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது.... என் நட்பு வட்டத்தை தமிழ் மக்கள் மட்டும் இருக்கும் வட்டத்துக்குள் குறுக்கிக் கொள்ளாமல், எல்லா நாட்டினருடனும் பேசி பழகுவேன். பல விஷயங்களை பற்றி தெரிந்து கொள்கிறேன். மேலும், நான் volunteer ஆக மருத்துவமனையிலும் கோயிலில் உள்ள சில குழுக்களிலும் இருந்து வருகிறேன். . இந்த சமயங்களில், ஏழை - பணக்காரர் - குழந்தைகள் - வயோதிகர் - அமெரிக்கர் - அமெரிக்கர் அல்லாதோர் போன்ற பலருடன் பேசி அவர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிடைத்து வருகிறது.. அமெரிக்கா என்றால் இப்படித்தான் - இந்தியா என்றால் அப்படித்தான் என்று prejudiced ஆக இருந்த நான், என்னை மாற்றி இருக்கிறேன்..... எந்த நாடும் 100% ideal நாடு கிடையாது...... நிறை குறைகள் எங்கும் உண்டு. இதில் ஒரு நாட்டை உயர்த்தியோ ஒரு நாட்டை தாழ்த்துவதால், என்ன பயன்? நாட்டுக்கு நாடு வாசப்படி .....சாரி, வீட்டுக்கு வீடு வாசப்படி........
தோழியின் அம்மா: ..... என் பொண்ணு சொன்னா...... உங்களுக்கு ரோடு ட்ரிப் பிடிக்கும் என்று......
நான்: "ஆமாம்.... நியூ யார்க் - டிஸ்னி வேர்ல்ட் - நயாகரா மாதிரி முக்கிய இடங்களுக்கு செல்ல அவ்வளவாக விருப்பம் இல்லை..... அந்த மாதிரி இடங்களை, "family tour packages" என்று அழைப்போம்..... மற்ற குடும்பத்தினர் அல்லது நண்பர் குழுவுடன் சுற்றி பார்க்கவே வைத்து இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும், இரண்டு வாரங்கள் பெரிதாக எந்த பிளான் எதுவும் இல்லாமல் காரில் குடும்பத்துடன் பயணிப்போம். வழியில் வரும் சின்ன சின்ன ஊர்கள் - லோக்கல் உணவு விடுதிகள் - அந்த ஊருக்கு என்று இருக்கும் பெருமை உள்ள இடங்கள் என்று செல்வோம். லோக்கல் restaurants போகும் போது, அங்கே இருக்கும் waiter / சர்வர் உடனும் பக்கத்து டேபிள் ஆட்களிடமும் பேசி பார்த்தாலே, நிறைய விஷயங்கள் - கருத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆர்வத்துடன் பேசுவார்கள். இந்தியாவை பற்றியும் நிறைய கேள்வி கேட்பார்கள். அவர்களிடம், நமது நாட்டை பற்றி பெருமையுடன் பேச பிடிக்கும். பெரும்பாலான இடங்களில் நல்ல வரவேற்பு இருக்கும். சில மிக சிறிய ஊர்களில், அவர்கள் பார்த்த முதல் அமெரிக்கர் அல்லாத ஆட்கள் நாங்களாக தான் இருந்து இருப்போம். எங்களை, ஏதோ வேற்று கிரகத்து ஆட்கள், வழி தவறிப் போய் planet மாறி, அந்த ஊரில் வந்து இறங்கி விட்டது போல சந்தேகத்துடன் குறுகுறு வென பார்த்து கொண்டே இருப்பார்கள். பேசவே மாட்டார்கள்..... அந்த மாதிரி இடங்களில், சீக்கிரம் சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவோம். எல்லாமே ஒரு அனுபவம்தான்.
தோழியின் அம்மா: உங்கள் ரோடு ட்ரிப்ல, உன்னால் மறக்க முடியாத இடங்கள் என்ன?
நான்: "நிறைய மாநிலங்களுக்கு இன்னும் போனதே இல்லை. சென்ற வரையில்,
Truth or Consequences,
Michigan மாநிலத்தில் உள்ள Paradise என்ற ஊர் மற்றும் Hell, Saline,
Arizona மாநிலத்தில் உள்ள Tuscon என்ற நகருக்கு அருகில் உள்ள Biosphere 2 (http://www.b2science.org/) -
மற்றும் Globe,
California மாநிலத்தில் உள்ள Julian என்ற ஊர் மற்றும் Big Sur,
Colorado மாநிலத்தில் உள்ள Climax,
Florida மாநிலத்தில் உள்ள Okahumpka மற்றும் Yeehaw Junction,
Illinois மாநிலத்தில் உள்ள Normal,
Indiana மாநிலத்தில் உள்ள Santa Claus, Turkey Run,
Kansas மாநிலத்தில் உள்ள Buttermilk,
Kentucky மாநிலத்தில் உள்ள Breeding மற்றும் Hazard, Ready,
Louisiana மாநிலத்தில் உள்ள Pumpkin Center,
Maryland மாநிலத்தில் உள்ள Boring,
Minnesota மாநிலத்தில் உள்ள Bombay மற்றும் Outing,
Mississippi மாநிலத்தில் உள்ள Askew,
Missouri மாநிலத்தில் உள்ள Enough மற்றும் Licking, Success,
New Jersey மாநிலத்தில் உள்ள Hopatcong,
New York மாநிலத்தில் உள்ள Flushing, Buffalo,
North Carolina மாநிலத்தில் உள்ள Welcome,
Ohio மாநிலத்தில் உள்ள Chagrin Falls,
Oklahoma மாநிலத்தில் உள்ள Kremlin மற்றும் Straight,
Pennsylvania மாநிலத்தில் உள்ள Intercourse,
South Carolina மாநிலத்தில் உள்ள Ninety Six,
Tennessee மாநிலத்தில் உள்ள Disco மற்றும் Nameless,
West Virginia மாநிலத்தில் உள்ள Paw Paw ,
Texas மாநிலத்தில் உள்ள Sweetwater , Post, Lubbock (லபக்), Comfort, Best, Ding Dong, Cash, Earth, Echo, Friendship, Happy, Humble, Spur, Uncertain ......... இப்படி ........
(நம்பினால் நம்புங்க..... இதெல்லாம் அமெரிக்காவில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் - இதில் கொசுறு செய்தி, நாங்கள் லபக் என்ற ஊரில் தான் ஐந்து வருடங்கள் போல இருந்தோம்..... நண்பர்கள், செல்லமாக என் கணவரை: "லார்ட் லபக்தாஸ்" என்று அப்பொழுது அழைத்தது உண்டு. ஹா,ஹா,ஹா,ஹா..... )
தோழியின் அம்மா: இந்த பெயர்களை கேட்டாலே சிரிப்புதான் வருகிறது...... இந்தியாவிலும் இப்படி சுற்றி பார்த்து இருக்கிறாயா?நான்: " இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு அதிகம் போனது இல்லை.... மொழி பிரச்சினைதான். லோக்கல் மக்களோடு பழக தடையாய் இருக்கும். தமிழ் நாட்டில், மதுரைக்கு தெற்கே உள்ள ஊர்களுக்கு, இப்படி ட்ரிப் அடித்து இருக்கிறோம்..... இந்தியாவுக்கு வர குறைந்த நாட்களே விடுமுறை கிடைப்பதால் - உறவினர்களுடன் அதிகம் நேரம் செலவிட பிடிக்கும். இருந்தும், ஒன்றிரண்டு நாட்களாவது இப்படி பயணம் செய்வோம். இன்னும் மண்ணின் குணம், உணவு முறை மாறாமல் இருக்கும் மக்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். "
தோழியின் அம்மா: அமெரிக்கா கலாச்சாரம் பற்றி, நீ என்ன நினைக்கிற?
நான்: "எதுங்க அமெரிக்க கலாச்சாரம்? அமெரிக்காவில் Las Vegas - New Orleans - Miami போன்ற பெரிய நகரங்களில் ஓவர்லோட் ஆன விஷயங்கள் நிறைய இருக்கும். ஆனால் அது மட்டுமே அமெரிக்கா இல்லை..... சின்ன ஊர்களில் - கிராமங்களில் - நிறைய conservatives இருக்கிறார்கள் - குடும்பம் - கோவில் - குழந்தைகள் என்பதே அவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது....... நான் முதலில், இந்தியாவில் இருந்து Miami க்கு தான் வந்தேன். "அமெரிக்கா என்றாலே எல்லோரும் அவுத்து போட்டுட்டு ஆடுறது...... யார் கூடனாலும் கையை பிடிச்சுக்கிட்டு ஓடுறது ........ " இதுதான் வாழ்க்கையா என்று அந்த காட்சிகளே கண் முன் தெரிந்தது..... ஐயே ஐயே என்று புலம்பி கொள்வேன் - திட்டி கொள்வேன்.
என்னை தோழமையுடன் வரவேற்ற ஒரு தமிழ் குடும்பத்துடன், கடுமையாக இந்த கலாச்சாரத்தை சாடி பேசிக் கொண்டு இருந்தபொழுது...... அந்த குடும்ப தலைவி பொறுமையுடன் எனக்கு சொல்லிய அறிவுரையை நான் மறக்க மாட்டேன்.
"சித்ரா, நான் சொல்வதை தப்பாக எடுத்து கொள்ளாதே. இந்த காட்சிகள் மட்டும் உனக்கு தெரிகிறது என்றால், அதை தாண்டி நீ பார்க்கவில்லை என்று தெரிகிறது..... எந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டின் வரலாறு தெரியாமல் - மக்களின் பூர்வீகம், பழக்க வழக்கங்கள், மனப்பக்குவம், சூழ்நிலை, எதிர்பார்ப்புகள், கோட்பாடுகள், தெரியாமல் - எப்படி நம்மூரு கலாச்சார அளவுகோலை கொண்டு குறை சொல்ல முடியும்? இந்தியாவோ அமெரிக்காவோ - எந்த ஊரில் - எந்த நாட்டில் இருக்கிறோமோ - அந்த நாட்டின் மண்ணின் வாசனையை தெரிந்து கொள்ள வேண்டும் - அந்நாட்டு மக்களின் சுதந்தரத்தை மதிக்க கற்று கொள்ள வேண்டும் . வேண்டாததை ஒதுக்கி வைக்க தெரிய வேண்டும். பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு வந்து இருக்கும் நம் நிலைமை, ஒரு மருமகளை போன்றது. பிறந்து வீட்டு பேரையும் பெருமையையும் மறக்க கூடாது. புகுந்த வீட்டிலும் நல்ல புரிதலுடன் நடந்து கொண்டு, பேர் எடுக்க வேண்டும். - நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும்..... நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே...... இரண்டு நாடுகளிலும் ஆதங்கம் இருக்கலாம் - அதிருப்தி இருக்கக் கூடாது; ஏக்கங்கள் இருக்கலாம் - வெறுப்பு இருக்க கூடாது. நல்ல முடிவு எடுத்தால்தான், இங்கே இருக்கும் போதும் பயம் இல்லாமல் இருக்க முடியும் - இந்தியா போகும் சமயங்களிலும் பயணங்கள் இனிதாக இருக்கும். "
தோழியின் அம்மா: என்னை narrow minded ஆளுன்னு சொல்லாமல் சொல்றே......
நான்: "அப்படி நான் சொல்வதாக நீங்கள் எடுத்து கொண்டால் ......... நான் ஒன்றும் செய்ய முடியாது....... நீங்கள் பெரியவங்க........
தோழியின் அம்மா: ஹா, ஹா, ஹா, ஹா, ........ உண்மையில் நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்.... ரொம்ப குழம்பி போய் இருந்தேன்..... உன்னிடம் பேசிய பிறகு, கொஞ்சம் தெளிவு கிடைத்து இருக்கிறது.....
"அதிலும் கொஞ்சம் தானா? அவ்வ்வ்வ்....... "
136 comments:
// நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே...... இரண்டு நாடுகளிலும் ஆதங்கம் இருக்கலாம் - அதிருப்தி இருக்கக் கூடாது; ஏக்கங்கள் இருக்கலாம் - வெறுப்பு இருக்க கூடாது.//
அருமையான பகிர்வு சித்ரா.
//எந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டின் வரலாறு தெரியாமல் - மக்களின் பூர்வீகம், பழக்க வழக்கங்கள், மனப்பக்குவம், சூழ்நிலை, எதிர்பார்ப்புகள், கோட்பாடுகள், தெரியாமல் - எப்படி நம்மூரு கலாச்சார அளவுகோலை கொண்டு குறை சொல்ல முடியும்? //
சரி தான்..
உண்மையில் இந்த கலாச்சார கருத்து பிரச்சினை இருந்து வருகிறது. என் ஆசிரியர் ஒரு முறை சொன்னது. அவர்கள் கலாச்சாரம் நமக்கு தவறாக தெரிவது போல் அவர்களுக்கும் நம் கலாச்சாரம் தவறாக தெரியலாம். இருபக்கமும் மற்றவர் பழக்க வழக்கங்களை மதிப்பதே அந்த கலாச்சாரத்திற்கு கொடுக்கும் மரியாதை.
// நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே...... இரண்டு நாடுகளிலும் ஆதங்கம் இருக்கலாம் - அதிருப்தி இருக்கக் கூடாது; ஏக்கங்கள் இருக்கலாம் - வெறுப்பு இருக்க கூடாது. ///
unmaithaan
எம்மடியோவ்.. இத்தனை ஊரும சுற்றி பார்க்க சித்ரா sis தான் guide எனக்கு..
கலக்கல் பதிவு சகோ..
அறிவுரையை அழகா சொல்லிருக்காங்க. தொடர் சூப்பரா போகுது.
வெட்டி அரட்டையில்லாமல் உங்கள் இருவரின் அலசல் நிறைய விஷயங்களை எங்களுக்கும் பகிர்ந்திருக்கு சித்ரா...இந்த புரிதல் தெளிவு நேர்த்தி எல்லாம் வியப்படையவும் செய்கிறது...ஏதோ வெளி நாட்டுக்கு போனோம் இருந்தோம் வாழ்ந்தோம் என இல்லாமல்...ரியலி யூ மேக் மீ வெண்டர்..இது உங்க எல்லா பதிவுக்கும் பொருந்தும் சித்ரா....(உங்கள் புன்னகையின் ரகசியம் என்னங்க)
//தோழியின் அம்மா: Bore அடிக்கும் போது, அப்போ அப்போ உன் ப்லாக் படிப்பேன்..... (நல்ல வேளை ....அப்போ அப்போ உன் ப்லாக் படிச்சிட்டு bored ஆக பீல் பண்ணுவேன் என்று அவங்க சொல்லல........ தப்பிச்சேன்!) //
சித்ரா டச்....
நல்ல பேட்டி.தோழியின் அம்மா உங்கள் மூலம் அவங்க தெளிவாகிருப்பாங்க போல.யு.எஸ் சுற்றும் வாலிபி ! !அருமையான விளக்கம்.
//நான் volunteer ஆக மருத்துவமனையிலும் கோயிலில் உள்ள சில குழுக்களிலும் இருந்து வருகிறேன்.//
அப்போ அடுத்த Peace Pilgrim ஆகுறது வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க!
நீங்க Peace Pilgrim ஆனா எப்படி இருக்கும்னு கற்பனை செய்றேன். அவ்வ்வ்வ்வ்.......
ஒரே காமெடியா இருக்கும்னு நினைக்கிறேன்.
//பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு வந்து இருக்கும் நம் நிலைமை, ஒரு மருமகளை போன்றது. பிறந்து வீட்டு பேரையும் பெருமையையும் மறக்க கூடாது. புகுந்த வீட்டிலும் நல்ல புரிதலுடன் நடந்து கொண்டு, பேர் எடுக்க வேண்டும்.//
உங்க தோழி என்ன அருமையா சொல்லி இருக்காங்க! She seems to be Very matured person. Hats off to her!
சித்ரா நேர்மையா பேசி இருக்கீங்க.. புரிஞ்சுக்காம நாம ஒருத்தங்க கலாச்சாரத்தையே கேவலமா பேசி
இருந்தாலும்
ஒருத்தங்க அட்வைஸ் பேரில் அதை
உணர்ந்துகொண்டேன்னும் அதே சமயத்தில்
எது சரியான புரிதல்ன்னும் அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க..
நிச்சயம் அவங்க நல்லாவே தெளிவாகி
இருப்பாங்க ஆனா என்னதான் தங்கள் கண் முன் வளர்வது போல வருமா அதனால் பலரும் இதுமாதிரி வருத்தப்படுவது
நடந்துகொண்டு தான் இருக்கும்
இத்தனை ஊருகளை அழகா சுத்தி வந்ததுக்கு
பாராட்டுக்கள்.
தொடருங்கள்..நன்றி..
ஊர்களுக்கு பேரு வைக்கிறதில ஏன் மாங்க மடையன்களா இருக்காங்க! அந்த பேரு எல்லாம் ரொம்ப காமெடி! எல்லோரையும் இந்தியாவுக்கு தான் ட்யூஷனுக்கு அனுப்பனும் போல!
ஒவ்வொரு நாட்டிற்க்கும் ஒரு கலாச்சாரம் உண்டு , என் ஒவ்வொரு ஊருக்கும் கூட , அதை நாம் வளர்ந்த சூழலில் பார்த்தல் அது தவறாக தான் படும் .அவர்களின் நம்பிக்கைகளை மதித்து ஏற்றுக்கொண்டு இருந்தால் நிச்சயம் வாழ்கை வளமாக இருக்கும்
இவ்வளவு ஊர் பெயரை சொல்லுறீங்களே? ஹூம்.........நான் அமெரிக்காவை மேப்புலதான் பார்க்கிறேன்.எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்.
ஆனா, நான் தினமும் அந்த நாட்டு டாலரை கைநிறைய பார்ப்பேன். என் வேலை அப்படி. அய்யய்யோ கள்ள நோட்டு அடிக்கற வேலையில்லங்க...கரன்சி என்னற வேலை. ஆம், மலேசியாவில் உலக நாட்டு கரன்சிகளை மாற்றிக்கொடுக்கும் MONEY EXCHANGE- இல் வேலை.
// "அமெரிக்கா என்றாலே எல்லோரும் அவுத்து போட்டுட்டு ஆடுறது...... யார் கூடனாலும் கையை பிடிச்சுக்கிட்டு ஓடுறது ........ "//
அமெரிக்காவுல மட்டுமில்லைக்க இப்ப நம்ம நாட்டில் நகரங்களில் இதே வாழ்க்கை தான். இதிலிருந்து ஒன்று புரிகிறது அனைத்து நாடுகளிலும் நல்ல கலாசாரம் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அருமையான பதிவு. எனக்கும் பல உடன்பாடுகள் உங்களோடு. அறிவுரை தெளிவு. நிறைய வரிகள் மனதுக்குள் இருப்பு. என்வாழ்க்கையின் அனுபவங்களாய் இருப்பது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள் தொடர்ந்திருங்கள். தொடருகிறோம். தலைப்பே தலையாகிறது மனதில்.
நல்ல பகிர்வு சித்ரா.
எல்லா ஊர்களைப் பற்றியும் தனித்தனியா எழுதுங்கள். ஊர்சுற்றி பார்த்த மாதிரி இருக்கும்:))
Hi Akka,
very interesting conversation with your friend...
Akka,the site you were talking about must have been the full page advertisement..you can skip the ad and it will take you rite back to my blog...nothing to worry!
Dr.Sameena@
www.lovelypriyanka.blogspot.com
www.myeasytocookrecipes.blogspot.com
//பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு வந்து இருக்கும் நம் நிலைமை, ஒரு மருமகளை போன்றது. பிறந்து வீட்டு பேரையும் பெருமையையும் மறக்க கூடாது. புகுந்த வீட்டிலும் நல்ல புரிதலுடன் நடந்து கொண்டு, பேர் எடுக்க வேண்டும். - நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும்..... நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே.//
இதில் நாடுகள் என்ற இடத்தில் மாநிலங்கள்ன்னும் போட்டுக்கலாம்.அதுவும் ரொம்பவே பொருந்தும்.
இந்தியாவுக்குள்ளயே வேற மாநிலத்தில் இருக்கிறதையே, வேற நாட்டுல இருக்கிறமாதிரி ஃபீல் செஞ்சு ஊருக்கு வந்துடு,வந்துடுன்னு நச்சரிக்கிறவங்க இங்கியும் இருக்காங்க :-))))
ரியாத்தில் அமெரிக்கன் இண்டர்நேஸனல் ஸ்கூல் உள்ளது அங்கு வேலைசெய்யும் நண்பர் சொன்னார் எத்தனை லட்சம் கடன் வாங்கி வேண்டாலும் மகனை இங்கு படிக்கவைக்கலாம் அனால் இலவசக்கல்வி என்றாலும் மகளை சேர்க்ககூடாது என்று.
அவர் புரிதலில் தவறோ?
நல்லா ஊர்சுத்திருக்கீங்க. அத அப்படியே சொல்லிருக்கீங்க. நல்ல தகவல்கள்.
//"நிறைய மாநிலங்களுக்கு இன்னும் போனதே இல்லை. //
இவ்வ்வ்வ்வ்ளோ பெரிய லிஸ்ட் கீழ இருக்கு...
ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்திங்க....
:-)
நல்ல பகிர்வுங்க. தன்னிலை விளக்கம்னு ஒத்துக்கிறோம் :)))
ப்ராக்டிக்கலான விஷயங்களை தெளிவான விளக்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.
//அமெரிக்காவில் Las Vegas - New Orleans - Miami போன்ற பெரிய நகரங்களில் ஓவர்லோட் ஆன விஷயங்கள் நிறைய இருக்கும். ஆனால் அது மட்டுமே அமெரிக்கா இல்லை.....//
மிகச்சரியான வரிகள்..!
மேலும் அந்த குடும்பத்தலைவியின் அறிவுரையும் சூப்பர்... இது பல பேருக்கு ஒரு தெளிவு ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்!
-
DREAMER
//எந்த நாடும் 100% ideal நாடு கிடையாது...... நிறை குறைகள் எங்கும் உண்டு. இதில் ஒரு நாட்டை உயர்த்தியோ ஒரு நாட்டை தாழ்த்துவதால், என்ன பயன்? நாட்டுக்கு நாடு வாசப்படி .....சாரி, வீட்டுக்கு வீடு வாசப்படி...//
Super! :)
தான் பிறந்த தேசத்தின் கலாச்சாரத்தையே (உண்மையான கலாச்சாரம்; புனைந்து கூறப்பட்டது/கூறப்படுவது அல்ல) புரிந்து கொள்ளாது, பிற நாட்டின் கலாச்சாரத்தை பற்றி குறை கூறும் பல நபர்களுக்கு உங்கள் பதிவு ஒரு நல்ல பாடமாக அமையும்...
//இந்தியாவோ அமெரிக்காவோ - எந்த ஊரில் - எந்த நாட்டில் இருக்கிறோமோ - அந்த நாட்டின் மண்ணின் வாசனையை தெரிந்து கொள்ள வேண்டும் - அந்நாட்டு மக்களின் சுதந்தரத்தை மதிக்க கற்று கொள்ள வேண்டும்//
உண்மை
அருமையான பதிவு அக்கா
மிக அருமையான பதிவு சித்ராக்கா!
நேர்த்தியான நடை.. :)
கலக்கல்!
அடேங்கப்பா,எவ்ளவ் தகவல்கள்?டைப் பண்ணவே 2 மணி நேரம் ஆகி இருக்குமே?நல்லபதிவு
// ..... எந்த நாடும் 100% ideal நாடு கிடையாது...... நிறை குறைகள் எங்கும் உண்டு. // எப்படி நம்மூரு கலாச்சார அளவுகோலை கொண்டு குறை சொல்ல முடியும்?//
அருமை. Open mind is the best mind.
பகிர்வுக்கு, பதிவுக்கு நன்றி
அன்பன்
வெதாந்தி.
தன்னிலையை முன்னிலைப் படுத்தாத தன்னிலை விளக்கம். நல்லா இருந்தது சித்ரா..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
@ Mrs. லார்ட்லபக் தாஸ்
உங்க அறிவுரை அருமை. நானும் இதை மைண்ட்ல வெச்சிக்கிறேன்.
உங்களை மனக்கண்ணை திறந்த அந்த குடும்ப தலைவிக்கு நன்றி சொல்லுங்கள். உண்மையிலேயே இது ஒரு மிக சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்,
one of the best posts .. simply super
சிதரா அருமை....அருமையம்மா.....யதார்த்தத்தை பிட்டு பிட்டு வைத்திருக்கிறாய்.இதே உரையாடல் அப்படியே டிட்டோ.......நானும், என் மகளும்......உன் இடுகை என் குழப்புத்திற்கும் ஒரு தெளிவைக் கொடுக்கிறது சித்ரா நன்றிம்மா.
அருமையான பகிர்வு சித்ரா.
// நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே..// அருமையாக சொல்லியிருக்கிங்க சித்ரா
1) மனிதர்களுக்கு எப்போதும் புரிவதில்லை நாம் மட்டுப்பட்டு நின்று கொண்டிருப்பது மாயையின் ஆட்சிக்குள் என்று....
2) விதிமுறைகள் திணிக்கும் மனிதர்கள் தங்களின் செளகர்யத்துக்காக மாற்றானின் செளகர்த்தை குறை கூறுதல்.. விசாலமற்ற குறுகிய பார்வை.
3) கோவிலில் வளரும் குழந்தை கெடவும் வாய்ப்பு இருக்கிறது.. & தியேட்டரில் வளரும் குழந்தை நன்றாக வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
4) உலகத்தில் படைக்கப்பட்ட எல்லாம் அதன் அதன் அழகில் அழகாயிருக்கிறது. அதை மிகைத்தலும் பழித்தலும் அறியாமையிலிருந்து வரும் .. என்ணங்கள்...!
5) ஒரு கட்டுரை படித்து விட்டு சார்த்தை விளங்காமல் நமது வசதிக்கேற்ப கருத்துக்கள் சொல்கிறோம்...
வாழ்கையும் அப்படித்தான்... நமது வசதிக்காக.. ... அது யாரையும் பாதிக்காத வகையில்...
MY LIFE...! MY WAY.....!
I REALLY TAKE THIS CHANCE TO APPRECIATE YOU EFFORT AND GR8 WISDOM ABOUT LIFE!!!
”தம்பட்டம் அல்ல.....தன்னிலை விளக்கம்."
ஹிஹிஹி
நம்பிட்டேன்..
இவ்வளவு இடங்கள் பார்த்து விட்டீர்களா?.. ஹா. ஹா..
நல்ல விசயங்கள் பல சொல்லியுள்ளீர்கள்..வாழ்த்துக்கள்.
அக்கா உங்கட பாதிவின் மூலம் தான் அமெரிக்காவின் பல இடங்களை அறிந்து கொண்டேன்... ஆனால் உங்களுக்கு அங்கெல்லாம் செல்ல நேரம் கிடைக்குமா...
இண்ட்ரெஸ்ட்டிங் & இன்ஃபர்மேட்டீவ்
அமெரிக்கா வந்தா ஒரு நல்ல கைடு :p இருக்கீங்க
Very interesting post!
Do write detailedly about your road trips.
What your friend has said is very true. Liked it.
சின்ன ஊர்களில் - கிராமங்களில் - நிறைய conservatives இருக்கிறார்கள் - குடும்பம் - கோவில் - குழந்தைகள் என்பதே அவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது.....//
நன்றாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்!
நல்ல புரிதலுடன் கூடிய தோழியை பெற்றதில் மகிழ்ச்சி.(என்னைய சொன்னேன்)
நல்ல புரிதலுடன் கூடிய தோழியை பெற்றதில் மகிழ்ச்சி.(என்னைய சொன்னேன்)
கலாசாரம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.. பிரான்சில் பதிமூன்று வயதில் மகனுக்கோ, மகளுக்கோ காதல் வரவில்லை என்றால் அவர்கள் அப் நார்மல் எனக்கருதி மருத்துவரிடம் அழைதுபோவார்கள்..
இந்தியாவில் அந்த வயதில் காதல் வந்தால் வெட்டி போடுவார்கள் ....
உங்க தோழியின் அம்மா உங்கிட்ட டெலிபோன் இன்டர்வியு நடத்துனமாதிரியே இருக்கு :))
//இந்திரா said...
”தம்பட்டம் அல்ல.....தன்னிலை விளக்கம்."
ஹிஹிஹி நம்பிட்டேன்..//
நானும் நம்பிட்டேன்...:))
நல்ல ஆய்வாளர்தான்.ஊர்களைப் பற்றி அழகாகக் குறிப்பீட்டு அங்கு வாழும் மக்களின் மன ஓட்டத்தையும் விரட்டிப் பிடித்து எழுதியிருக்கிறீர்கள்.அருமை
நான் கேட்ட ஊர் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே [போன பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன்]
அமெரிக்காவில் ஒரு சிடியில் விருந்தினருக்கு, மில்க்,தேனீர் ,பட்டர்மில்க் தந்து உபசரிப்பார்களாம் அது எந்த சிடி ?
இதுதான் ரோட்டிலே முட்டை போட்ட பதிவில் கேட்ட கேள்வி
அது எல்லாம் வெட்டி பேச்சா என்று அவளின் டீன் ஏஜ்ல தான் எனக்கு தெரியும். //
உண்மை..
மிகத்தெளிவான கருத்து!! வாழ்த்துக்கள் சித்ரா.
மிக அருமையான பதிவு!
அமெரிக்காவை இந்தியக் கண் கொண்டு பார்ப்பதும், இந்தியாவை அமெரிக்கக் கண் கொண்டு பார்ப்பதும் ஒப்பிடுவதும் அபத்தம்! நிறைய விஷயங்களில் உடன்படுகிறேன்.
லார்ட் லப்பக் தாஸ் ... ஹஹஹா :)
மின்னசோட்டா வந்துட்டு எப்புடி 'ஹார்மனி' ய மிஸ் பண்ணீங்க?
பட்டேல் பாய்ண்ட்ஸ் மட்டும் போயிட்டு போட்டோ போஸ்ணு பந்தா பண்ணாம, இவ்வளவு வித்தியாசமான பெயர்கள் உள்ள ஊர்களுக்குச் சென்றிருப்பது, சிறப்பு!
நல்லா இருக்கு. ஓசில அமேரிக்கா சுத்தி பாத்தா மாதிரி பீலிங்
அருமையான பகிர்வு
அறிவுரையை அழகா சொல்லிருக்காங்க. தொடர் சூப்பரா போகுது...
அருமையான பகிர்வு.
நல்ல பகிர்வு நிதான பதில்கள்.
// எல்லா நாட்டினருடனும் பேசி பழகுவேன்//
மிக சரி, இல்லேன்னா தலைவர் பாபா - வில் சொன்ன மாதிரி, குண்டு சட்டில குதிரை ஓட்டினா பிச்சைதான் எடுக்கணும் :-).
//பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு வந்து இருக்கும் நம் நிலைமை, ஒரு மருமகளை போன்றது. //
ஆமாங்க. நம்ம நிலையைவிட மருமகள்கள் நிலைமைதான் கஷ்டம்.
ஆமா, அமெரிக்கால ஏன் ஊர்ப்பேருங்கல்லாம் இப்படி இருக்கு? அங்க நம்ம நாட்டைப் போல தலைவர்கள்லாம் கிடையாதா?
///Minnesota மாநிலத்தில் உள்ள Bombay //
அப்படின்னா இன்னொரு பாம்பே இருக்கா ..?
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கலாசாரம் .. நல்லதை மட்டும் எடுத்துகொள்வது நம்ம கைகளில் தான் இருக்கிறது ..!!
நல்ல கருத்துக்கள்!
விஷயங்களை சுவராசியமாய் சொல்கிறீர்கள்.
இந்தியாவ விட அமெரிக்காவுல நிறைய இடம் பார்த்துவிட்டீர்கள் போல. கலாச்சாரம் பற்றிய உங்கள் பார்வை அருமை
//”தம்பட்டம் அல்ல.....தன்னிலை விளக்கம்."\\ - அனுபவத்தின் வெளிப்பாடு நல்ல பதிவு
//”தம்பட்டம் அல்ல.....தன்னிலை விளக்கம்."\\ - அனுபவத்தின் வெளிப்பாடு நல்ல பதிவு
வினோதமான ஊர் பெயர்கள் புன்னகைக்க வைத்தன. தோழமைக் குடும்பத்தலைவி சொன்ன வார்த்தைகள் அட்சரலட்சம் பெறும்.
Nice post.
அருமையான பகிர்வு
//Minnesota மாநிலத்தில் உள்ள Bombay மற்றும் Outing,//
போன சனிக்கிழமை, நா கூட 'bombay'ல தானுங்கோ இருந்தேன். (விசா இல்லாமலேய பாம்பே போகலாமே..)
// நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே../
பாலோ ப்ண்ணிரலாம்..
\\ இரண்டு நாடுகளிலும் ஆதங்கம் இருக்கலாம் - அதிருப்தி இருக்கக் கூடாது; ஏக்கங்கள் இருக்கலாம் - வெறுப்பு இருக்க கூடாது\\
உண்மை
அருமையான பதிவு
//எந்த நாடும் 100% ideal நாடு கிடையாது...... நிறை குறைகள் எங்கும் உண்டு. இதில் ஒரு நாட்டை உயர்த்தியோ ஒரு நாட்டை தாழ்த்துவதால், என்ன பயன்? //
அது!
அப்புறம் என்ன சொல்றீங்கன்னு இரண்டாவது பின்னூட்டதுல!
//சில மிக சிறிய ஊர்களில், அவர்கள் பார்த்த முதல் அமெரிக்கர் அல்லாத ஆட்கள் நாங்களாக தான் இருந்து இருப்போம். //
This is what you call it a trip!
சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...
சித்ரா....ஒரு stateயையும் கூட விட்டு வைக்கவில்லை போல...சூப்பர்ப்..உங்கள் பயணம் தொடரட்டும்...
புதிய பார்வை!Keep roaming!
அழகான் தெளிவான உரையாடல் .நீங்கள் வாழ்க்கையை தெரிந்து கொண்டு வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
very interesting conversation..Nice sharing Chitra..You have an awesome travel experience...
Tasty Appetite
கலாச்சாரத்தைப் பற்றிய நல்லா பதிவு..
எந்த நாடும் 100% ideal நாடு கிடையாது...... நிறை குறைகள் எங்கும் உண்டு. //
100% unmai..
உங்க interview கலக்கல்...
அருமையான பகிர்வு!!
நல்லாயிருந்துச்சு இந்த உரையாடல்!
:)
//கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு நல்ல விஷயங்களை சொல்லி வளர்க்கிறேன். நான் சொல்ற விஷயங்களுக்கு பலன் இருக்கா, இல்லை அது எல்லாம் வெட்டி பேச்சா என்று அவளின் டீன் ஏஜ்ல தான் எனக்கு தெரியும். இந்த ரிஸ்க், எந்த நாட்டில் இருந்தாலும் "அலைபாயுமே"..... இதில் ஆண் குழந்தை என்ன? பெண் குழந்தை என்ன?//
இதேதான் சித்ரா நானும் எங்க வீட்ல சொல்லிட்டு இருக்கிறேன். அருமையான பதிவு.
வெட்டி பேச்சு தாயம்மா, தம்பட்டம் தாயம்மா,.
போன பதிவிலேயே இத சொல நினைத்தேன்,
அமெரிக்காவுல ஒரு தொகுதியில் உங்கல் நிக்க வைத்தா ஓட்டு குமியும் என்று ஆனால் இத்தன ஊரு போய் வந்து இருக்கீங்க ஏது ஏது அடுத்த ஒபாமாவுக்கு பதில் உங்கள நிகக் வைக்க சொல்லிடலாம்.
உங்கல் தோழியின் அம்மா உங்களிடம் பேட்டி எடுத்த்து நல்ல் தா போச்சு .
அப்ப அப்பா இத்தனை விழியங்கள்
கலசாரம் அவங்க அவங்க ஊரில் அவரவர் இழ்டம், நம்ம ஊர் ஆளுங்களும் அங்கு போய் அவங அவங்க கலச்சாரத்த பின்பற்றினலெ போதும்.
பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு வந்து இருக்கும் நம் நிலைமை, ஒரு மருமகளை போன்றது. பிறந்து வீட்டு பேரையும் பெருமையையும் மறக்க கூடாது. புகுந்த வீட்டிலும் நல்ல புரிதலுடன் நடந்து கொண்டு, பேர் எடுக்க வேண்டும். - நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும்//
உங்க தோழி சரியாக சொல்லி இருக்காங்க
இது வெட்டி பேச்சே இல்ல எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷியம்.
அப்ப உங்க கணவர் லாடு லபக் தாஸ், ஒகே ஒகே நான் போன் பண்ணி அப்ப கேட்கிறேன்.
ஆமா, அமெரிக்கால ஏன் ஊர்ப்பேருங்கல்லாம் இப்படி இருக்கு? அங்க நம்ம நாட்டைப் போல தலைவர்கள்லாம் கிடையாதா?
அதா பா இப்ப தான் சித்ரா ஒரு விசிட் அடிச்சி இருக்காங்க இனி தலைவர்கள் வந்துடுவார்கள்.
ம்ம்ம்ம்... அமெரிக்காவில் இத்தனை ஊர்கள் இருப்பதையே இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.
பயணம் ஒரு ஆசான். அது நாம் முற்றிலும் எதிர்பார்க்காத பல விஷயங்களை சொல்லித் தரும். இதை நான் ஸ்திரமாக நம்புகிறேன்.
எழுதிய விஷயங்களும், எழுதப்பட்ட விதமும் அருமை!
****நான்: "இல்லை... கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு நல்ல விஷயங்களை சொல்லி வளர்க்கிறேன். நான் சொல்ற விஷயங்களுக்கு பலன் இருக்கா, இல்லை அது எல்லாம் வெட்டி பேச்சா என்று அவளின் டீன் ஏஜ்ல தான் எனக்கு தெரியும். இந்த ரிஸ்க், எந்த நாட்டில் இருந்தாலும் "அலைபாயுமே"..... இதில் ஆண் குழந்தை என்ன? பெண் குழந்தை என்ன? என் மகளை இந்தியாவிலேயும், என் மகனை அமெரிக்காவிலும் வளர்க்க, என்னால் எப்படி முடியும்?****
God always helps- that is the advantage in believeing in him/her or not? :)
Anyway, when you live in America if you are ready to become "american" (I mean start watching Dallas Cowboys (they are doing badly 0-2 this season though)and super bowl, NOT CRICKET and sun tv) you would be fine.
I want "money" and "comfort" and "no-trouble from others" but I would bring up my children as "Indian" kind of "closed-minded attitude" is what most of the Indians here have. And they try to do "something" and FAIL! Even if they fail, they are not going to admit that they failed, as they are "Indians"! LOL
I believe, bringing up children in this country is greatest challenge. It is more challenging than keeping a job and getting a pay-check every month and making your partner happy. Because you can only GUIDE them and tell them what is right and wrong. You cant make them pick the right one. They might choose the wrong one and learn that they made a mistake and come back to right one. Not much you have under yuor control. One need to be really "brave" and "open-minded" and prepared to face any consequences when they really want to settle in US and bring up their children in a completely different culture.
I know in India, a doctor son is directed to become a doctor- with serious guidance - by hook or crook they try to achieve that. But here they want their children to do what they are best at!
What is success for an Indian? Making your children a doctor or engineer and they could afford a BMW! That is what Indians think as success! Actually that is NOT it.
What is it? May your God help figure out what it is and make your children succeed, Chitra! Of course I am trying to figure out that too :)
// நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே...... இரண்டு நாடுகளிலும் ஆதங்கம் இருக்கலாம் - அதிருப்தி இருக்கக் கூடாது; ஏக்கங்கள் இருக்கலாம் - வெறுப்பு இருக்க கூடாது.//
சூப்பர் பதிவு.. சித்ரா அக்கா. மேடம். டீச்சர்.இதெல்லாம் சொல்லுவேன் நெனச்சீகளோ அஸ்கு புஸ்கு
[சொன்னபுறவும் சொல்லுவேனா.] அதான் மொத்தமா..
சித்ரா,
உங்கள் மற்ற பதிவில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு இருக்கு இந்த பதிவு.
உண்மையா சொல்லப்போன நானும் அந்த அம்மாவை போல முன்பு கொஞ்சம் குழப்பமா தான் இருந்தேன்.
பிறகு மெல்ல தெளிவு பெற்று வந்தேன்.
நல்ல பதிவு பாராட்டுகள் உங்கள் அனுபவத்தை பகிர்த்து கொண்டதுக்கும் பாராட்டுகள்.
வாழ்த்துகளுடன்
கார்த்தி
பிள்ளைகளை நல்ல முறையில், நம் கலாச்சாரத்தை திணிக்காமல் மெல்ல புரிய வைத்து,கொஞ்ச வருஷம் கைபிடித்து நடத்தி விட்டால் போதும். அங்குள்ள பிள்ளைகள் மோசம் என்றோ , இந்தியாவில் உத்தம ரத்தினங்கள் என்றோ பொதுப் படுத்தி விட முடியாது. "எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே... அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே"
சித்ரா வாழ்த்துகள்.உங்கள் எழுத்து நகைச்சுவை தாண்டி விரிவடைந்து வருகிறது.அருமையாய் இருக்கிறது இந்தப்பதிவு.
நல்ல பகிர்வு.
nice post
ரொம்ப நல்லா இருக்கு.
Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
உங்க தோழியின் அம்மாவுக்கு மட்டும் இல்லாமல் எங்களுக்கும் நிறைய விசயங்களை தெளிவுபடுத்தியிருக்கீங்க..
நல்ல பதிவு..
ஒரு சமூகத்தை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? வாழ்வியலின் அவசியம்... யென நிறைய விசயங்கள் விளாசி இருக்கிறீர்கள். விசாலமான அறிவுக்கு இதுவே சாட்சி...! நல்ல தெளிந்த அறிவை உங்கள் பயணங்கள் உங்களுக்கு தந்திருக்கின்றன. சூழல் மனித வாழ்வை பாதிக்கும் மிக மிக்கிய அம்சமாக இருக்கிறது. கலாச்சாரம் மனதில் காக்கப் படும் வரை வாழ்க்கையும் தடம் புரளாமல் இருக்கும். இந்த சமூகத்துக்கு சொல்ல வேண்டியதை உங்கள் உரையாடல் மூலம் "தெளிவாக" சொல்லி விட்டீர்கள். மிக்க நன்றி சித்ரா அக்கா.......என்றும் அன்புடன் தமிழ்க் காதலன். நேரமிருந்தால்......எனது பிளாக் பக்கம் வந்து போங்கள்..( ithayasaaral.blogspot.com ).
சிகப்பு எழுத்துகளில் பதிந்துள்ள வார்த்தைகள் உண்மையில் அவைவரும் சிந்திக்க தக்க வார்த்தைகள் தான். உங்கள் நல்ல பதிவுகளுக்கு நன்றி சிதரா
உங்களின் பரந்த, முதிர்ந்த பார்வையும், நகைச்சுவையான எண்ணங்களும், எழுத்தும் 'ரெம்பவே' அருமை. அடுத்தவர்களின் அபிப்பிராயங்களுக்காய்/அபிப்பிராயங்களால் வாழ்கின்ற பலரின் மத்தியில், உங்களின் பார்வை உங்களுடையதாய். உங்களின் பின்னோட்டங்களை, அநேகமாக் பலர் பிளாக்குகளில் படித்திருக்கிறேன். பதிவை முதன் முதலாய்.
யாதும் ஊரே...யாவரும் கேளிர்.எல்லா நாட்டிலும் நல்லவிஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுவது நல்ல கருத்து....
வாழ்க வளமுடன்.
வேலன்.
உங்கள் நகைசுவை பதிவுகளை விட , இந்த பதிவு மிக மிக அருமையாக இருக்கிறது...
ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்பது , சிந்திப்பது எல்லாம் நகைசுவை எழுத்துக்களில் ஆங்காங்கு எட்டி பார்க்கும்.. அதாவது சைட் டிஷ் மாதிரி அவை வரும்..
ஆனால் இந்த பதிவு புல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருந்தது..
இது போல அவ்வப்போது எழுதுங்கள்..
அவ்வளவும் நல்ல தகவல்கள்.
அருமையா ரொம்ப யதார்த்தமா சொல்லியிருக்கீங்க...
சிறப்பான பதிவு...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
வாழ்க வளமுடன்
அருமையான எழுத்துகளுடன் கருமையாக சொல்கீறீர்கள் வாழ்த்துகள்
நல்ல பதிவு, சித்ரா..
விசித்திரமான பெயர் கொண்ட ஊர்கள்.
Saline - இப்படியெல்லாம் கூடவா பேர் வைப்பாங்க ;)))))))))))))
அருமை!
படித்தேன்!
கருத்துதான், தீர்ப்பு இல்லை, நானும் தவறாக இருக்கலாம்!
குதிரை, கடிவாளம் இரண்டும் ஒன்றிக்காக ஒன்று ஏற்ப்பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஒன்றாய் போய் இருக்கிறது. மனம் ஒரு குரங்கென்றால் சிந்தனை ஒரு குதிரை. சிந்தனை என்னும் குதிரையை கட்டுபடுத்த தெரிந்தவனே மனம் என்னும் குரங்கை ஆட்டுவிக்கும் சக்தியாகிறான்.
நாடு என்னும் பெரிய கடிகாரதிற்குள் குடும்பம், சமூகம், நட்பு வட்டம் என்னும் பல சிறிய சக்கரங்கள். இவை அனைத்தையும் சீராய் ஓட்ட வேண்டும் என்பதே ஆதி காலத்திலிருந்து மனிதன் பாடு பட்டு வந்தான். அதற்காகவே மதங்களும் நம்பிக்கைகளும் தோன்றின. இருப்பினும் புற வாழ்வும் அக வாழ்வும் முரண்பாடுகளை சந்தித்தே வந்திருக்கின்றன.
இந்தியா கலாசாரம், பண்பாடு என்று பல கட்டுப்பாடுகளுடன் முக்கியமாக குடும்ப வாழ்கையில் ஒரு உன்னத நிலைமையை வகித்தது என்றால் அது மிகையாகாது. சமூக வாழ்வில் ஏற்ற தாழ்வுகள், மத முரண்பாடுகள் போன்றவை இருந்தாலும் நாட்டு நடப்பில் போர், ஆக்கிரமிப்பு போன்ற தடைகள் இருந்தாலும், குடும்பம் ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ்ந்ததால் மக்கள் மன நிறைவுடனே இருந்தனர்.
இதில் சமூகம் என்னும் சக்கரம் விஸ்வ ரூபம் எடுக்க ஆரம்பித்தது. மதம் ஒரு மனிதனின் உயர்வுக்கு உதவும் கட்டுப்பாட்டு யந்திரமாக இருந்தது போக அது குடும்பத்தையும் தாண்டி சமூகம் வரை வளர்ந்து அஸ்திவாரத்தையே பதம் பார்க்க ஆரம்பித்தது. பின்னர் சமுகம் நம் குடும்பமும் அரசும் எப்படி இருக்க வேண்டும் என்று அதிகாரம் செய்ய ஆரம்பித்தது. நம்மை அறியாமலே அதன் அதிகாரத்திற்கு அடிமை ஆனோம். இன்று மனத்தையும் அடகு வைத்திருக்கிறோம்.
குறிப்பாக கடந்த நூறு வருடங்களில் வியாபாரம் பெரும் இயந்திரமாக மாறியிருக்கிறது. இன்று சிலவு செய்வதே நாம் ஒருவருக்கு காட்டும் அன்பை வெளிப்படுத்தும் அளவு கோல் ஆனது அதன் தாக்கமே.
மனைவி பிறந்த நாளுக்கு கணவன் அவளுடைய தொழில் தளத்திற்கு பூங்கொத்து அனுப்பவது முதல் குழந்தைகளின் பிறந்த நாட்களுக்கு பெரிய விடுதியில் அனைத்து சமூக வட்டத்தையும் தருவித்து தங்களின் பிள்ளை பாசத்தை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது வாடிக்கை ஆகி விட்டது. அனைத்திலும் சமூகமும் வியாபாரமும் தலை விரித்து ஆடுகின்றது. இவ்வகையில் ஒருவன் செய்ய வில்லை என்றால் அவன் அன்பையே சந்தேகிக்கும்படி சமூக வியாபார சக்திகள் இன்று ஆட்டுவிக்கின்றன.
அமெரிக்கா தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் என்றோ கட்டுப்பாட்டை வியாபார நோக்கத்துடன் தகர்த்து எறிந்து விட்டது. இன்று வியாபாரம் மதம் அரசியல் இவை மூன்றும் பின்னி பிணைந்து விட்டது. ஒரு பணக்கார கிருத்துவன்தான் நாடு ஆள முடியும். ஆனால் அதற்க்கு பெயர் குடியரசு. கடவுள் நம்பிக்கை இல்லாத ஓரின பெண் ஜனாதிபதி ஆக முடியுமா என்பது சந்தேகமே.
இந்தியா அதற்கு பெருமை பட வேண்டிய வழியில் இருந்தாலும், ஓட்டு அளிக்கும் மக்கள் குழம்பிப்போய் தவறான தலைவர்களையே தேர்ந்து எடுத்து வந்திருக்கின்றனர். நல்ல தலைவர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். குப்பையில் மாணிக்கத்தை தேடி கொண்டு இருக்கிறோம்.
இப்போது உங்கள் கருத்திற்கு வருவோம்.
பெண்ணோ ஆணோ எங்கு வளர்ந்தாலும், பெற்றோர்களுடன் வாழ்வதே நல்லது என்பது எனது எண்ணம்.
சமூக திணிப்புகளை ஆராய்ந்து அவற்றின் வலையில் விழாமல் இருக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
நீங்கள் எந்த மதமோ, தியானம் போன்றவற்றை குழந்தைகளுடன் செய்யலாம். கடவுள் நம்பிக்கை இல்லாவிடில் சிறிய சமூக சேவைகளை செய்யும் மத வியாபார நோக்கமில்லாத இயக்கங்களில் பங்கு பெறலாம். (இவற்றில் ஏதோ ஒன்று நிச்சயம் தேவை, அது உள் மனத்தை திட படுத்த உதவும்).
குடும்ப உறவுகள் உள்ளுக்குள் இருக்க வேண்டுமே அல்லாது வெளியில் வந்தால் அன்னோன்யம் பாதிக்கப்பட்டு வெளி விவகாரங்கள் வாழ்கையை நடத்தி செல்லும்.
ஆக அமெரிக்காவோ இந்தியாவோ, குடும்பம் வீட்டில்தானே தவிர வெளியில் இல்லை. வெளி சக்திகள் உள்ளே பாய்வதை தடுத்தால் கண்ணதாசன் சொன்னது போல்,
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்யமே" !!!
நல்ல பதிவு. வித்யாசமான ஊர் பெயர்கள் நல்லா இருக்கு.
மிகவும் நல்ல பதிவு
http://eyesnotlies.blogspot.com
சும்மா பிண்ணுறீங்க... சரி அந்த "லார்ட் லபக்கதாஸ்" ஓட வீட்டுகார அம்மா (மருத்துவர் மாத்ருபூதம் அவர்களின் துனைவி) எங்க ஊருக்கு வந்திருக்காங்க பார்க்க வறீங்களா?
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html
சித்ரா உங்களோட பழக்க வழக்கங்கள் அந்த நாட்டு கலாச்சாரத்தை தெரிந்துகொள்ள விளைவது எனக்கு உங்களை ரொம்பப் பிடித்திருக்கிறது.
நீங்கள் சொல்வதுபோல வெளிநாடு என்றாலே எல்லாரும் தவறானவர்கள் போன்ற இமேஜை நாம் வளர்த்துக்கொண்டுவிட்டோம். ஆங்கிலப்படங்கள் பார்த்தால் புரியும். அவர்களும் தங்கள் குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். நம்முடைய உணர்வுகள் அத்தனையுயம் அவர்களிடமும் பார்க்க முடியும். எல்லோரும் மனிதர்கள்தானே. நல்ல பதிவு.
//நாங்கள் லபக் என்ற ஊரில் தான் ஐந்து வருடங்கள் போல இருந்தோம்..... நண்பர்கள், செல்லமாக என் கணவரை: "லார்ட் லபக்தாஸ்" என்று அப்பொழுது அழைத்தது உண்டு. ஹா,ஹா,ஹா,ஹா..... ) //
சில பேரு அவ்வளவு பொருந்திப்போகுது இல்ல. சிரிப்பப்பாரு.
நல்லா இருக்கு சித்ரா, நிறைய தெரிந்து கொண்டோம்.
nalla vishayangal niraya solli irukkeenga vaazhthukkal. nalla pahirvu
சித்ரா
வழக்கம் போல் கலக்கல் பதிவு....
உங்க ப்ளாக் பெயருக்கும், நீங்கள் இடும் இடுகைக்கும் ஏனோ எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை.
ஒருத்தருக்கொருத்தர் அட்வைஸ்னு அறுக்காம, நல்லா ஜாலியா அதே சமயம் உபயோகமான விஷயங்களை பற்றியும் பேசி இருக்கீங்க....
இன்னும் பார்க்க பாக்கி எதுவும் இருக்கா, இல்லையா!!
அருமை,,அருமை,
intha pakirva innum nirayaa paer padikknum....
romba arumai chitra mam! superb...!!!
அடேங்கப்பா வெட்டிப்பேச்சு ஸ்டைல்ல பயங்கர பயனுள்ள தகவலா தர்ரீங்க...அசத்தலா இருக்குங்க.
நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே......
நாடுகளுக்குள் மட்டுமல்ல.. இந்த புத்திமதி. மனிதர்களுக்குள்ளும்.
வணக்கம் சித்ராக்கா
முல்லுக்கும் வலியிருக்கும்
சொல்லுக்கும் வலியிருக்கும்
முழுமையாக பாதிக்கப்பட்டவர்
யாரோ........
சும்மா நீங்க சொன்னதையே திரும்ப சொல்லகூடாதில்லையா அதான்
சித்ரா கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இங்கு வந்து எத்தனை வருஷாமாகிறது.
எங்க ஊருக்கு இன்னும் நிங்க வரல்லை போல இருக்கு. அதுதாங்க.எம்.ஐ டி இருக்கிற ஊர்.
சித்ரா ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து நடை.வாவ் சூப்பருங்க.
சரி எனக்கு ஒரு மடல் அனுப்ப முடியுமா?
என்னோட தளத்தில் இருக்கு. என்னோட ஐடி.
நல்ல பகிர்வு சித்ரா..வெளிநாடு போரதுனால் அந்த கலாச்சாரம் ஒரு மாதிரின்னு குறை சொல்றதை விட்டு பாசிடிவ் ஆ யோசிக்கிறதை பகிர்ந்துட்டேங்க..அருமையான பதிவு..
அருமையான பகிர்வு! புகுந்த வீடு-பிறந்த வீடு உதாரணம் பிரமாதம்! அனுபவங்கள் தான் வாழ்க்கையையாகிறது. அவைதான் நம்மை செதுக்குகிறது! நல்ல மனம் இருப்பவர்கள்தான் அனுபவங்களிலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொள்கிறார்கள். நீங்களும் அந்த ரகம்! உங்களின் வெளிப்படையான பேச்சுக்கும் நேர்மைக்கும் hats off சித்ரா!
அப்போ நீங்க அமெரிக்காவில் உள்ள 25 மானிலங்கள சுத்திபாத்துடிங்க ?
எல்லா ஊரும் சுத்தி பாத்துட்டு எங்களுக்கு நல்ல நல்ல வாழ்க்கை க்குள்ள விஷயங்களும் சொன்னீங்க சித்ரா மேடம்!!
ஆமா இத்தனை நாளாச்சே. ஏன் அடுத்த பதிவு போடல!! உடம்புக்கு நல்லா இருக்கீங்களா?? நல்லது!!
நாளை உங்களுக்கு பிடித்த
"எந்திரன்" படத்த பார்த்துட்டே அடுத்த பதிவ போடுங்க மேடம்!! ஹா..ஹா..ஹா..ஹா
அருமையான பகிர்வு
Hi Akka,
Missed your post!!You have an award akka...Kindly accept it!!
Another great write up from you..Wish i had started blogging long back!!
Dr.Sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
//எந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாட்டின் வரலாறு தெரியாமல் - மக்களின் பூர்வீகம், பழக்க வழக்கங்கள், மனப்பக்குவம், சூழ்நிலை, எதிர்பார்ப்புகள், கோட்பாடுகள், தெரியாமல் - எப்படி நம்மூரு கலாச்சார அளவுகோலை கொண்டு குறை சொல்ல முடியும்//
chitra akka, neengathaan yeluthineengalaa?? yeppudikka ipdiyellam..:) nice post.
v nice dear sonnal thirum pasinal poivedum \
unkalidam pasavendum naanum oru sokatthirkku adimai
unkalitam pasinal thirumena nambukeran
சித்திரா... ரெம்ப அருமையா எழுதியிருக்கீங்க. உங்க கூட இருந்தா கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது போல. வாழ்த்துக்கள்.
'ஆஹா... என்ற வீட்டுக்காரிகிட்ட சொல்ல முடியாததை இந்த வரிகளை வாசிக்க வைத்து இப்ப நாம இருக்கற வளைகுடாவை மட்டுமல்ல வாழ வந்த இடத்திலேயும் எப்படி இருக்கோணும்ன்னு சொல்லியாச்சுங்க. சீக்கிரமா புரிஞ்சுக்குவாங்கன்னு நினைக்கின்றேன்' என்கின்றார் புதிதாக திருமணம் செய்த என் நண்பன். " வெட்டிப் பேச்சு' என்ற பெயரில் உள்ள வலைப்பூ 'விவரமாக இருப்பதற்கு' கொஞ்சமாக இல்லீங்க... நிறையவே ஒவ்வொரு பதிவிலும் சொல்லிகிட்டு வர்ரீங்க...
" பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு வந்து இருக்கும் நம் நிலைமை, ஒரு மருமகளை போன்றது. பிறந்து வீட்டு பேரையும் பெருமையையும் மறக்க கூடாது. புகுந்த வீட்டிலும் நல்ல புரிதலுடன் நடந்து கொண்டு, பேர் எடுக்க வேண்டும். - நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும்..... நல்லதை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காதே...... தீயதை மட்டும் சொல்லி கொண்டு திரியாதே...... "
'ஆஹா... என்ற வீட்டுக்காரிகிட்ட சொல்ல முடியாததை இந்த வரிகளை வாசிக்க வைத்து இப்ப நாம இருக்கற வளைகுடாவை மட்டுமல்ல வாழ வந்த இடத்திலேயும் எப்படி இருக்கோணும்ன்னு சொல்லியாச்சுங்க. சீக்கிரமா புரிஞ்சுக்குவாங்கன்னு நினைக்கின்றேன்' என்கின்றார் புதிதாக திருமணம் செய்த என் நண்பன். " வெட்டிப் பேச்சு' என்ற பெயரில் உள்ள வலைப்பூ 'விவரமாக இருப்பதற்கு' கொஞ்சமாக இல்லீங்க... நிறையவே ஒவ்வொரு பதிவிலும் சொல்லிகிட்டு வர்ரீங்க...
Post a Comment