Tuesday, December 14, 2010

கேள்வி நேரம் (தொடர் பதிவு)

இன்னைக்கு என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தப்போ,  நம்ம "Tasty Appetite -  Jay" 
- ஒரு  தொடர்  பதிவு  கேள்வி நேரத்துக்கு அழைப்பு விடுத்து இருக்காங்க.  இந்த கேள்விகள் எல்லாம், சமையல் ராணிகளின் கோட்டைக்குள்ளே  சுத்திக்கிட்டு இருந்து இருக்குப்பா.  Jay - ஒரு வம்பு பண்ணலாம்னு நினைச்சு,   இதுல என்னையும் கோர்த்து விட்டுட்டாங்க....  நல்லா இருங்க, மக்கா!

வெட்டி பேச்சில் வந்த  "சமையல் அட்டூழியம்"  என்ற பதிவை   பார்த்த பிறகு, மக்கள் பெருவெள்ளத்தின் கோரிக்கை:  "தயவு செய்து சமையல் குறிப்பு எதுவும் நீங்க போட்டுராதீங்க,"  என்று.  இன்னைக்கு வரைக்கும், சத்தியத்தை காப்பாத்திட்டு வாரேன்.  ரைட்டு!

வெயிட் அ மினுடே போர் ௫ மினுட்ஸ்.  ஏதாவது புரிஞ்சுதா?  Jay Madam அனுப்பிய  கேள்வி எல்லாம் ஆங்கிலத்தில் இருந்துச்சா -   அதை அப்படியே டைப் பண்ணா,  சரி வரல. .  இருங்க ..... முழி  பேத்துருவோம் .... சாரி ... மொழி பெயர்த்து விடுவோம்.

1.  உங்களுக்குப் பிடித்த  உணவு வகை (cuisine -  உதாரணம்: சைனீஸ்?  மெக்சிகன்? இடாலியன்? தாய்? இந்தியன்?) 
அல்லது உணவு ஐட்டம்  எது?
மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி நிறைய போட்டு, கார சாரமா ரெண்டு கால் + இறக்கைகள்  அல்லது   நாலு கால் + சின்ன வால்   (மே.... மே...... என்றால் ஒரு தனி பாசம் தான்)  அல்லது  காலே இல்லாத நீச்சல் பார்டிகள் (யு நோ வாட் ஐ  "மீன்"!)  வைத்து சமைத்த எல்லா ஐட்டங்களும்   ஓகே தான்.   இல்லைங்க,  அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா   என்று எல்லாம் நான்  பார்க்கிறது இல்லை. 


2.  If you could have any four people, from any where in place, over for dinner, who would they be?
 சிறப்பு விருந்தில்,  கூட இருக்க விரும்பும் நான்கு பேர் .......
1.  என் தட்டில் இருப்பதை "தட்டி" கொண்டு போகாதவர்.
2.   நன் சாப்பிடும் போது, என்னை அழ - கோபப்பட - எரிச்சல் பட வைக்காதவர்.  அதாவது, என் தட்டில் துப்பி வைக்காதவர்.
3 .  உப்புக்கு பதில் சீனியையோ - சீனிக்குப் பதில் உப்பையோ கலந்து வைக்காதவர்.
4 . மிக முக்கியமாக,   நான் சாப்பிட்டதற்கும் சேர்த்து  பில் பே (pay)  பண்ணக் கூடியவர்.
இந்த நான்கையும் செய்யக் கூடிய நான்கு பேர்தான்.......

3. உங்கள் ப்லாக் ஆரம்பிக்க எது காரணம்? 
(What made you to  decide to start your site?)
கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட,  ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்......


4 .  புதிய வாசகர்களுக்கு, உங்கள் ப்லாக்கை எப்படி விவரித்து சொல்வீர்கள்?
(How would you describe your blog  site to new readers?)
நான் வெட்டியாக இருக்கிற நேரத்தில், இங்கே வந்து எதையாவது கொட்டி விட்டு போய் இருப்பேன். நீங்க, வெட்டி ஆக இருக்கிற நேரத்துல வந்து வாசிச்சு, உங்கள் அறிவுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா , கம்பெனி பொறுப்பு எடுக்காது.

5.  நீங்கள் இந்த உலகத்தில் இருந்து அழித்து விட நினைக்கும் ஒரு உணவு பொருள் எது?
(If you could just banish any one food, from the earth, what would it be? )
Tofu போட்டு சமைத்த பாம்பு கறி.   இரண்டுமே உவ்வே..........

6.   உங்களுக்கென  இருக்க விரும்பும் ஒரு சூப்பர் பவர் எது?
( What’s the one super power that you wish you had?)
 சூப்பர்  Sonic வேகத்தில், எல்லா இடத்துக்கும்  பறந்து போக முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும் இல்லை.... ம்ம்ம்ம்........இப்போதைக்கு,  சூப்பர் பவர் மட்டும் இல்லை,  வெறும் பவர் டிடர்ஜென்ட் சோப்பு  கூட என் கையில் இல்லையே...... அவ்வ்வ்வ்.......


Jay , என்னை மாட்டிவிட்ட மாதிரி, நான் யாருக்கும் தூண்டில் போடல.  ஆனால், நீங்களா யாராவது வந்து மாட்டிக்கிட்டீங்கனா கொண்டாட்டம் தான்..... ஸ்டார்ட்டுங்க! 

117 comments:

எப்பூடி.. said...

//அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை.//

இது மேட்டரு :-)

settaikkaran said...

பறக்குறதுலே ஏரோப்ளேன், ஊருறதுலே கூட்ஸ் வண்டி, நீஞ்சுறதுலே கப்பல் தவிர எல்லாம் பிடிக்குமுன்னு சொல்லுங்க! :-)

Unknown said...

Nice!! :-))

Prabu M said...

செம கலாட்டா அக்கா!! :)
இந்த மாதிரி காரசாரமா சாப்பிட்டா இப்படியெல்லாம் ரகளையா ஐடியா வருமோ?? :-)))))

THOPPITHOPPI said...

இன்றுதான் உங்கள் பதிவுக்கு முதல் 10 பின்னூட்டத்தில் ஒன்றாக போடமுடிந்தது

Kurinji said...

Interesting Chitra!!!Kurinji

Unknown said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு, ஒன்னுமே புரியலியே?

வெங்கட் நாகராஜ் said...

நகைச்சுவை ததும்பும் பதில்கள். பகிர்வுக்கு நன்றி.

எல் கே said...

ஹ்ம்ம் வழக்கம் போல் கலகல பதிவு... ஏனுங்க விமானத்துக்குக் கூடத்தான் வால் இருக்கு மூணு கால் இருக்கு அதுவும் சாப்பிடுவீங்களா ??

Chitra said...

விமானத்துக்கு இருக்கிறது கால் இல்லைங்க, வீல்... ஹா,ஹா,ஹா,ஹா....

வைகை said...

. மிக முக்கியமாக, நான் சாப்பிட்டதற்கும் சேர்த்து பில் பே (pay) பண்ணக் கூடியவர்.////////////


இதுக்காகவே நான் உங்களோட விருந்து சாப்ட முடியாது!

Kousalya Raj said...

ஆமாம் சித்ரா அங்கே கேள்விகள் எட்டுன்னு பார்த்த ஞாபகம்...இங்கே ஆறு தான் இருக்கு...? doubt!!!

//விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை//

இந்த மாதிரி எல்லாம் யோசிக்க உங்களால தான் முடியும்...உங்களை பதில் சொல்ல சொன்னவங்க இப்ப எப்படி முழிச்சிட்டு இருக்காங்களோ தெரியல...!! :)))

Chitra said...

கரெக்ட் பா..... அதுல ரெண்டு சமையல் ப்ளொக்ஸ் பற்றிய கேள்விகள். என்னுடையது சமையல் ப்லாக் இல்லையே... அதான் அங்கேயே அவங்க கிட்ட, ரெண்டு கேள்விகளுக்கு ஜூட் விட்டுட்டேன்னு சொல்லிட்டேன். :-))

pudugaithendral said...

நல்ல பதில்கள்...

Anonymous said...

//என்னை மாட்டிவிட்ட மாதிரி, நான் யாருக்கும் தூண்டில் போடல. //

சித்ரா நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்லவர்ங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் உங்களுடன் விருந்துண்ண விரும்புகிறேன். ஆனால் ஒன்லி உங்க வீடோ அல்லது என் வீடோவா இருந்தா சரி..

:))

Jayanthy Kumaran said...

Chitra, had a heartfelt laugh..Just I loved all your fun answers..Here's a hug for being such a wonderful sportive person..;)
Love,
Jay
Tasty appetite

Chitra said...

I was waiting for your comment/reply, Jay. I feel so happy that you liked it. Praise the Lord!

Thank you for inviting me for the questionnaire. I had great time, answering the questions. :-)

mightymaverick said...

// உப்புக்கு பதில் சீனியையோ - சீனிக்குப் பதில் உப்பையோ கலந்து வைக்காதவர்.//



சாலமன் எப்போதோ இதில் ஒன்றை பண்ணி இருக்கார்னு மட்டும் தெரியுது...


//காலே இல்லாத நீச்சல் பார்டிகள்//



அப்படின்னா நண்டு எல்லாம் சாப்பிட மாட்டீங்களா? அப்புறம் நடக்குறதுல நாய் கறி தாய்லாந்தில ரொம்ப பேமஸ்; தவளைக்கறி சீனாவுல பேமஸ்; சிங்கக்கறி கொத்து (கீமா) பரோட்டா தென்னாப்ப்ரிக்காவுல பேமஸ்... இதெல்லாம் சாப்பிடுவீங்களா?


//நீங்க, வெட்டி ஆக இருக்கிற நேரத்துல வந்து வாசிச்சு, உங்கள் அறிவுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா , கம்பெனி பொறுப்பு எடுக்காது.//



இதுக்கும் கடைசியா போட்டிருக்கிற படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே? (அந்த பாராசூட் படம்)...

தமிழ் உதயம் said...

நீங்க சாப்பாட்டு ராணின்னு தெரிஞ்சு போச்சு.

Chitra said...

அப்படின்னா நண்டு எல்லாம் சாப்பிட மாட்டீங்களா? அப்புறம் நடக்குறதுல நாய் கறி தாய்லாந்தில ரொம்ப பேமஸ்; தவளைக்கறி சீனாவுல பேமஸ்; சிங்கக்கறி கொத்து (கீமா) பரோட்டா தென்னாப்ப்ரிக்காவுல பேமஸ்... இதெல்லாம் சாப்பிடுவீங்களா?


...... நண்டு, நிலத்தில் நடக்கும் போது பிடிச்சதுனு ..... ஹி,ஹி,ஹி,ஹி.... நண்டு வறுவல், ரொம்ப பிடிக்கும். தவளைகால் வறுவல் - ஒரு தடவை ட்ரை பண்ணேன். (ஒரு தாய் restaurant ல) - taste பிடிக்கல. சிங்க கறி - இன்னும் கிடைக்கல. :-(

எல் கே said...

///சிங்க கறி - இன்னும் கிடைக்கல. :-( ///

மேடம்க்கு ஒரு ப்ளேட் சிங்கக் கறி பார்சல்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Interesting சித்தராக்கா... எப்பிடி அக்கா உங்களால மட்டும் இப்படி எல்லாம் எழுத முடியுது?????

Chitra said...

கார்த்திக், உங்கள் நல்ல மனசை பாராட்டுறேன். அவ்வ்வ்......

எல் கே said...

//உங்கள் நல்ல மனசை பாராட்டுறேன். அவ்வ்வ்...... ///

நம்ம இந்தியன் டீம் இப்ப தென் ஆப்ரிக்காலதான் இருக்காங்க. வரப்ப வாங்கிட்டு வருவாங்க.

Chitra said...

ha,ha,ha,ha,.... Thank you.

Anonymous said...

ரைட்டு.. பதிலெல்லாம் வழக்கம் போல உங்க ஸ்டைல "நச்" :)

தமிழ் அமுதன் said...

///மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி நிறைய போட்டு, கார சாரமா ரெண்டு கால் + இறக்கைகள் அல்லது நாலு கால் + சின்ன வால் (மே.... மே...... என்றால் ஒரு தனி பாசம் தான்) அல்லது காலே இல்லாத நீச்சல் பார்டிகள் (யு நோ வாட் ஐ "மீன்"!) வைத்து சமைத்த எல்லா ஐட்டங்களும் ஓகே தான்.///

சபரி மலை சீசன்ல இப்படி ஒரு பதிவு போடலமா..? என்னை மாதிரி சாமிங்ல்லாம் உங்க போஸ்ட்ட படிக்கிறோம்ல..? ;) இருந்தாலும் அந்த படம் அருமை..! ;;) கலக்குங்க..!

arasan said...

சூப்பருங்க ...

கலக்குங்கோ...

Chitra said...

சாரிங்க.... இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்ன என்றால்: சபரி மலை சீசன் டைம் ல, இந்த மாதிரி தொடர் பதிவுக்கு என்னை கூப்பிடாதீங்க என்று தெரிவித்து கொள்கிறோம்.

a said...

Enna kolaveri???????

மாணவன் said...

//நான் வெட்டியாக இருக்கிற நேரத்தில், இங்கே வந்து எதையாவது கொட்டி விட்டு போய் இருப்பேன். நீங்க, வெட்டி ஆக இருக்கிற நேரத்துல வந்து வாசிச்சு, உங்கள் அறிவுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா , கம்பெனி பொறுப்பு எடுக்காது.//

ஏண் நல்லாத்தானே பொய்க்கிட்டுருக்கு...

ஹிஹிஹி...

சூப்பர் தொடருங்கள்.....

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு பதில்கள்:))!

புவனேஸ்வரி ராமநாதன் said...

கலக்கல்.

சசிகுமார் said...

//அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை.//

இது தான் நம்ம சித்ராக்கா ஸ்டைல்

Unknown said...

nice flow !

சசிகுமார் said...

//கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட, ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்......//


கலக்கல்

தமிழ் அமுதன் said...

//அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை. ///

;;))

சங்கரியின் செய்திகள்.. said...

சூப்பர் சிதரா எப்பவுமே.......

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
This comment has been removed by the author.
VELU.G said...

//Blogger இந்திரா said...

//என்னை மாட்டிவிட்ட மாதிரி, நான் யாருக்கும் தூண்டில் போடல. //

சித்ரா நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்லவர்ங்க..
//

repeat..............

சி.பி.செந்தில்குமார் said...

ஒரே அசைவ நெடி

பை சைவப்பிள்ளைமார்கள் சங்கம்.

வந்தேமாதரம் சசிக்கு போட்டியா வரப்போறீங்க போல?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

ADHI VENKAT said...

நல்ல கேள்வி!!!! நல்ல பதில்!!! பகிர்வுக்கு நன்றி.

அம்பிகா said...

\\உங்கள் ப்லாக் ஆரம்பிக்க எது காரணம்?
(What made you to decide to start your site?)
கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட, ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்\\
good answer.
பதிவு வழக்கம் போல கலகல.

Gayathri Kumar said...

Very hilarious!

மங்குனி அமைச்சர் said...

ஹையோ ....சோறு , சோறு ..............

Starjan (ஸ்டார்ஜன்) said...

சாப்பிட்டு சாப்பிட்டு வயித்துக்கு ஒத்துக்கல.. சாரி.. சிரிச்சி சிரிச்சி வயித்தவலி..

ஆமா.. நல்லா சமைப்பீங்களா.. நம்பி சாப்பிடலாமா.. :)).‌

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

saami soru soru saami soru. ayy

vasu balaji said...

செத்துப் போன இந்த கோழி ஆடு எல்லாம் ப்ளாக் போட்டு ’சமையல் அட்டூழத்துல’ உங்களச் சொல்லியிருப்பாய்ங்களோ:))))

Arun Prasath said...

நல்லா இருக்குங்க

மொக்கராசா said...

உங்கள் பதிவு என்னை சாப்பிட தூண்டுகிறது :)

எங்கப்பா முனியாண்டி விலாஸ்.....

suneel krishnan said...

4 . மிக முக்கியமாக, நான் சாப்பிட்டதற்கும் சேர்த்து பில் பே (pay) பண்ணக் கூடியவர்.//

ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க :)

இளங்கோ said...

//சபரி மலை சீசன் டைம் ல, இந்த மாதிரி தொடர் பதிவுக்கு என்னை கூப்பிடாதீங்க என்று தெரிவித்து கொள்கிறோம். //
:)

Jaleela Kamal said...

அது எப்படி சித்ரா அதுக்கேற்றார் போல படத்த போட்ட்டு டக்கு டக்குன்னு பதில் , பட்டாசா வெடிச்சுது/

sathishsangkavi.blogspot.com said...

Nice.......

NADESAN said...

அக்கா என்ன ஒரு கொலைவெறி
நான் சைவம் தான்

என்னா சிரிப்பு

நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

போளூர் தயாநிதி said...

நான் மரக்கறி மட்டுமே உண்பவன் எனக்கு எதாவது உணவுத்திட்டம் சொல்ல மாட்டீர் கலா?
பாராட்டுகள் நல்ல பதிவுதான் மாமிசம் உண்பவர்களுக்கு பயன்படும்

செல்வா said...

///யு நோ வாட் ஐ "மீன்"!//

I CAN'T UNDERSTAND WHAT U FISH...!!

ஹி ஹி ஹி ..!! கலக்கல் அக்கா ..!!

செல்வா said...
This comment has been removed by a blog administrator.
சைவகொத்துப்பரோட்டா said...

"ருசி"யான பதில்கள்.

Sumi said...

romba nalla irunthathu intha post

ஆனந்தி.. said...

சித்ரா...எல்லா பதில்களும் செம கலக்கல்...அதுவும் சூப்பர் பவர் பதில் ரொம்ப டாப்பு...சிரிக்கணும் நினைச்சால் உங்கள் ப்ளாக் ஓபன் பண்ணி படிச்சால் போதும்....:))

Gayathri Kumar said...

Ungalukkana adutha kelvigal en bloggil wait pannudhu. Vandhu answer pannunga please..

Unknown said...

:-)

நிலாமதி said...

உங்களை போலவே பதிலும் கலக்கல்.

சுசி said...

:))))))))))))

சிநேகிதன் அக்பர் said...

என்ன இருந்தாலும் நம்ம நாட்டு ஆடு மாதிரி வராது :)

Priya said...

//அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை//.....உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருகு சித்ரா!
எல்லா நாட்டு உணவு வகைகளும் பிடிக்கும்ன்னு என்னா சிம்பாலிக்கா சொல்லியிருக்கிங்க:)

எப்போதும்போல கலக்கலா எழுதி இருகிங்க.

HVL said...

நீங்க எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்கன்னு கண்டிப்பா ஒரு பதிவு போடணும்!

Someone like you said...

Had a hearty laugh :)

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அந்த நாலாவது நபர் ரொம்ப பாவம் அம்மணி :)

Malar Gandhi said...

Thats kool man, loved all ur answers...had a good laugh:)

தினேஷ்குமார் said...

கல்யாண சமையல் சாதம் காய்"கறி"களும் பிரமாதம் ஹா ஹா ஹா

அன்பரசன் said...

//3. உங்கள் ப்லாக் ஆரம்பிக்க எது காரணம்?
(What made you to decide to start your site?)
கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட, ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்...... //

இது நல்லா இருக்கே..

Vidhya Chandrasekaran said...

பதில்கள் நல்லாருக்கு.


கூடவே ஒரு நல்ல சமையல் பக்கத்தின் முகவரியும் கிடைத்திருக்கிறது. ஹி ஹி ஹி:)

ம.தி.சுதா said...

அக்கா உங்களை மாதிரி எல்லாம் எங்களுக்கு சமைக்க வராது தான் அனால் பொட்டி என்று வந்தால் கலாய்த்துடுவோமுல்ல...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

ஸாதிகா said...

சிதரா ஸ்டைலில் பதிவு கலகல..

தெய்வசுகந்தி said...

ha ha ha :))!!!

pichaikaaran said...

3. உங்கள் ப்லாக் ஆரம்பிக்க எது காரணம்?
(What made you to decide to start your site?)
கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட, ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்...... "

பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு :)

Nithu Bala said...

That is wonderful:-) lovely answers..

Suni said...

very funny.
உங்களுக்குப் பிடித்த உணவு வகை (cuisine - உதாரணம்: சைனீஸ்? மெக்சிகன்? இடாலியன்? தாய்? இந்தியன்?)
அல்லது உணவு ஐட்டம் எது? இந்த கேள்விக்கு எந்த உணவு வகையா இருந்தாலும் கொஞ்சம் சால்(ல)மன் fish சேர்த்து இருந்தா ரொம்ப பிடிக்கும்னு சேர்த்து சொல்லி அண்ணன் மனசை சந்தோசப்படுத்துங்கள் எப்படி என் idea?

வருண் said...

Good question and very good answers, Chithra :)

கொங்கு நாடோடி said...

1. நம்ப கேசு நீங்க ஆடு, கோழி, மீன், மசாலாவுளே போட்டு கொடுத்தா எப்போ வேணும்னாலும் முழுங்கலாம்.
2. சாலமன், அப்புறம் உங்க டாக்டர் தம்பி (டயட் விட்டுட்டார் இல்லையா), இரண்டு பேரும்தான் இந்தனை கட்டளைகளை பொறுதுகுவங்க.
5. Tofu போட்டு சமைத்த பாம்பு கறி. இரண்டுமே உவ்வே.......... அப்போ பாம்புகறி சாப்பிடுடிங்க? உவ்வே.... ஆனா டோபு என்ன பாவம் பண்ணிச்சு.

தாராபுரத்தான் said...

ரைட்டு..வெயிட்/முழி..மொழி/வெட்டி..கெட்டி/ வாயிக்கு ருசியாத்தான் இருக்கும்மா.

Asiya Omar said...

இனிமேல் இதுமாதிரி தொடர்பதிவுகள் நிறைய வரட்டும்,அப்ப தானே இப்படி வித்தியாசமான பதில்களை சுவைக்க முடியும்.அருமை.

vanathy said...

super answers!

கோமதி அரசு said...

பதில்கள் நல்லா இருக்கு சித்ரா.

R.Gopi said...

//மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி நிறைய போட்டு, கார சாரமா ரெண்டு கால் + இறக்கைகள் அல்லது நாலு கால் + சின்ன வால் (மே.... மே...... என்றால் ஒரு தனி பாசம் தான்) அல்லது காலே இல்லாத நீச்சல் பார்டிகள் (யு நோ வாட் ஐ "மீன்"!) வைத்து சமைத்த எல்லா ஐட்டங்களும் ஓகே தான். இல்லைங்க, அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை.//

********

சித்ரா....

சுருக்கமா பூமிக்கு மேலே, ஆகாயத்துக்கு கீழே ஒரு உயிரினத்தையும் விட்டு வைப்பதில்லை என்று சொல்லி விடுங்களேன்...

பலே சாப்பாட்டு ராமி(!)) ஏமி... ஈ தெலுகு ராங்கா ரைட்டா... நாக்கு தெலீதுங்கோ..

//சேட்டைக்காரன் said...
பறக்குறதுலே ஏரோப்ளேன், ஊருறதுலே கூட்ஸ் வண்டி, நீஞ்சுறதுலே கப்பல் தவிர எல்லாம் பிடிக்குமுன்னு சொல்லுங்க! :-)//

சேட்டைக்காரனின் சேட்டையை மிகவும் ரசித்தேன்....

தூயவனின் அடிமை said...

உங்களுடைய நகைசுவை கலந்த பதில்,அருமை.

R.Gopi said...

//4 . புதிய வாசகர்களுக்கு, உங்கள் ப்லாக்கை எப்படி விவரித்து சொல்வீர்கள்?
(How would you describe your blog site to new readers?)
நான் வெட்டியாக இருக்கிற நேரத்தில், இங்கே வந்து எதையாவது கொட்டி விட்டு போய் இருப்பேன். நீங்க, வெட்டி ஆக இருக்கிற நேரத்துல வந்து வாசிச்சு, உங்கள் அறிவுக்கு டேமேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா , கம்பெனி பொறுப்பு எடுக்காது.//

*********

இந்த பதில் ரொம்ப “வெட்டி”யாக இருந்ததால், சோம்பலில் நெட்டி முறித்தேன்....

'பரிவை' சே.குமார் said...

செம கலாட்டா.

எம் அப்துல் காதர் said...

// Tofu போட்டு சமைத்த பாம்பு கறி. இரண்டுமே உவ்வே.//

அப்ப தவக்களைக் கறி, முதளைக் கறி எல்லாம் ஓகே வா?? அவ்வவ்..

செங்கோவி said...

உண்மையைப் ’புட்டு புட்டு’ வைக்கிறீங்களேக்கா..நான் வருமுன் கடையே காலி ஆயிடுச்சு போல!

----செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

ஆமினா said...

வித்தியாசமான கேள்விகளுக்கு நகைசுவையான பதில்கள் அருமை. அதுவும் குறிப்பா கூகுள் போல ஆரம்பிக்க முடியல. அதான் ப்ளாக் ஆரம்பிச்சேன்னு சொன்னதை கேட்டு பயங்கரமா சிரிச்சுட்டேன் :))

Vaitheki said...

ரொம்ப நல்லா இருக்கு

Mythili (மைதிலி ) said...

Nallaa answer panni irukka chitraa... Nee paasaagitta. Aaththaa Aadu valartha.. kozhi valarththaa... aanaa pambu mattum valarkkala en theriyumaa??

Chitra said...

Mythili Madam, அதை மட்டும் தான் நான் சாப்பிடுறதில்லை என்ற காரணமோ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Very interesting Chitra.

Dhans said...

நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்க போல. லாஜிக் உதைக்குதே 4 பேர். 4 பேரும் எப்படி பணம் உங்கள் சாப்பாடுக்கு கொடுக்க முடியும். எதோ என்னால் முடிந்தது. உங்கள் வார்த்தை ஜாலங்கள் அருமை

சிவகுமாரன் said...

//அந்த கோழி, ஆடு, மீன் எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை.//

தன்ஊன் பெருக்கற்கு பிறிதின் ஊன் உண்பானை
எங்கணம் ஆளும் அருள் ?
--வேறென்ன சொல்ல ?

Thoduvanam said...

I had rib racking laugh after seeing your blog..adhaanga vilaa kulunga sirichen..kalakkitinga vayitthai..Tofu,paambu innu ore pejaaraap pochu..kudos keep it up..

Chitra said...

Dhans has left a new comment on your post "கேள்வி நேரம் (தொடர் பதிவு)":

நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்க போல. லாஜிக் உதைக்குதே 4 பேர். 4 பேரும் எப்படி பணம் உங்கள் சாப்பாடுக்கு கொடுக்க முடியும். எதோ என்னால் முடிந்தது. உங்கள் வார்த்தை ஜாலங்கள் அருமை

ஐயா.... ஒரு ஆளு பர்ஸ் மறந்துட்டாலும்..... பிரச்சனை வராது பாருங்க... அதான்.

அஞ்சா சிங்கம் said...

///சிங்க கறி - இன்னும் கிடைக்கல. :-( ///

உங்க ஊருல சிங்குங்கள கூட சமைச்சி சாப்பிடுவாங்களா?...................

செந்தில்குமார் said...

இதுதான் சித்ரா style...

கேள்வி கேட்டவரே அதாங்க Jay பயங்கரமா சிரிச்சி பாரட்டிருக்காங்க...thats what சித்ரா

அதாங்க அந்த கோழி ஆடு மீன்
எல்லாம் சைனீஸ் ஆ? மெக்சிகனா? இடாலியனா? தாயா? இந்தியனா? - விசா வாங்கிட்டு தான் நாட்டுக்குள்ள வந்துச்சா இல்லையா என்று எல்லாம் நான் பார்க்கிறது இல்லை

Jay , என்னை மாட்டிவிட்ட மாதிரி, நான் யாருக்கும் தூண்டில் போடல. ஆனால், நீங்களா யாராவது வந்து மாட்டிக்கிட்டீங்கனா கொண்டாட்டம் தான்..... ஸ்டார்ட்டுங்க!

ம்ம்ம்ம்ம்ம்..... வெளுத்துகட்டுங்க

Anonymous said...

Nice!! :-))

ஸ்ரீராம். said...

Nice post as usual...

ரிஷபன் said...

கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட, ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்......
எல்லாமே சூப்பர்னாலும் இதுக்கு கொஞ்சம் கூடவே சிரிச்சேன்..

ஜோதிஜி said...

கூகிள் மாதிரி ஒன்றை ஆரம்பிப்பதை விட, ப்லாக் ஆரம்பிப்பது ஈஸியாக இருந்ததால்......


சிரித்து மாளமுடியல. நான் பின்னோட்டத்த படிச்சு முடிக்கனும்ன்னா இன்னும் ஒரு மணி நேரம் வேண்டும்.

வெற்றி பெற வாழ்த்துகள் சித்ரா.

சிவகுமாரன் said...

மேடம் நம்ம பதிவுப் பக்கம் கொஞ்சம்
வந்து ஏதாவது கொட்டிட்டு போங்க... நாங்க எல்லாம் புச்சா வந்துக்கிறோம் பொழைக்க வேண்டாமா ?

Unknown said...

ஜாலியா பேசியிருக்கீங்க... ப்லாக் ஆரம்பிச்சதற்கான காரணம் ரொம்ப சிரிக்க வச்சது...

Sivakumar said...

உங்களுக்கென இருக்க விரும்பும் ஒரு சூப்பர் பவர் எது?
( What’s the one super power that you wish you had?)
சூப்பர் Sonic வேகத்தில், எல்லா இடத்துக்கும் பறந்து போக முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும் //

i just now saw virudhagiri.....சித்ரா மேடம், சூப்பர் பவருக்கு கேப்டன் கிளாஸ் எடுக்கறார்!! பற பறன்னு பறக்கறார்..!!!

Anonymous said...

சித்ராவால் மட்டுமே இப்படி திகட்டாமல் சிரிக்கவைக்க முடியும்...சரியான கலக்கல்..

Prabu Krishna said...

//"தயவு செய்து சமையல் குறிப்பு எதுவும் நீங்க போட்டுராதீங்க," என்று. இன்னைக்கு வரைக்கும், சத்தியத்தை காப்பாத்திட்டு வாரேன். ரைட்டு!//

உங்கள் நல்ல மனசை பாராட்டுறேன்.

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன் (கமெண்ட் பாக்ஸில் உள்ளது. ). நேரம் இருந்தால் எழுதவும்.

http://balepandiya.blogspot.com/2010/12/blog-post_19.html

எட்வின் said...

எந்த பதிவ போட்டாலும் கலக்குறீங்களே, அதோட சிரிக்க வச்சி எங்க வயித்தயும் புண்ணாக்கிடுறீங்க. குளிர் கால விடுமுறை வாழ்த்துக்கள் :)

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம். ஏம்மா எப்பிடிம்மா
இப்படியெல்லாம் உன்னால் முடிகிறது?!கடவுள்கொடுத்த அபூர்வவரம்இது.நீ என்றென்றும் இப்படியே
சிரித்து+சிநிக்கவைத்துக்கொண்டே
இருக்கவேண்டுமம்மா!வாழ்கவளமுடன்
நாலுநாட்களாக உடம்பு ரொம்பமுடியாமல்
போய்விட்டது.இப்போதுதான் உனக்கு கிரித்துமஸ் வாழ்த்து கூறுவதற்காக
எழுந்துவந்து அமர்ந்தேன்.நல்லது.

Unknown said...

புதிய புகைப்படம் அருமை.