2003 - "அவள் என் காதலை எப்படியும் புரிந்து கொண்டு ஏற்று கொள்வாள்."
2004 - "அவள் என்னை காதலிக்கிறாள். எனக்கு அது போதும்."
2005 - "அவள் பெற்றோர் சம்மததுக்காக காத்திருக்கிறோம்."
2006 - "காதலித்தவளையே எல்லோரின் ஆசிர்வாதங்களுடன் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்."
2008 - "என்னவள், என் மகன், என் வேலை னு சந்தோஷமா வாழ்க்கை போயிட்டு இருக்கு."
2009 - "காதலிக்கும் போது, அப்படி இப்படி னு சொல்லுங்க. இப்போ, எல்லா வேலையையும் என் ஒருத்தி தலை மேல தூக்கி போட்டுட்டு, நீங்க ஹாய்யா உக்கார்ந்து டிவி பார்த்து கிட்டு இருங்க. இவர் என் பின்னால லோ லோ னு சுத்துனப்போ இப்படிதான் எதையும் கண்டுக்காம இருக்க போறேன்னு சொல்லி இருந்தா, இவர் இருந்த பக்கம் திரும்பி பார்த்திருக்க மாட்டேன். "
எங்கள் நண்பர் ஒருவரின் காதல் புளி ரசம் சொட்டும் கல்யாண வாழ்க்கை நல்லா புரிஞ்சிருக்குமே......
என்னவோ தெரியலை, மக்கா. கல்யாணத்துக்கு முன்னால் காதல் கத்திரிக்காய் னு கூவுரவங்க நிறைய பேர், கல்யாணம் ஆன பின்னால, கிலோ என்ன விலைனு கேக்க ஆரம்பிச்சுடுறாங்க ......
இருக்கிற வேலை வெட்டி, அம்மா அப்பா, பொறுப்பு பருப்பு எல்லாத்தையும் துடப்பை கட்டை மாதிரி கதவுக்கு பின்னால வச்சுட்டு, ஒருத்தர் பின்னால ஒருத்தர், ஒருத்தர் கனவுல ஒருத்தர் சுத்தி சுத்தி டூயட் பாட வேண்டியது. கல்யாணத்துக்கு அப்புறம், அது துடைப்ப கட்டை இல்லை, அதான் குத்து விளக்கு என்று மண்டைக்குள்ள மணி அடிக்க, பொண்டாட்டி ஆன காதலி - கனவு கன்னி ரோல் போய், டி வி சீரியல் கதாநாயகி ரேஞ்சுக்கு ஆகி போறா. ஐயோ பாவம்!
நான் காலேஜ் படிக்கும் போது, ஒருத்தன் ஒரு தாளில், அழகா படம் வரைஞ்சு:
"மாதத்துக்கு ஒரு அமாவாசை - உன்னை
காணாத நாள் எல்லாம் எனக்கு அமாவாசை தானே."
என்று எழுதி என்கிட்டே கொடுத்தான்.
இந்த கிறுக்கலையும் அதை எழுதிய கிறுக்கனையும் பாத்தேன்.
காதுக்குள்ளே நோ மூசிக் - மண்டைக்கு மேல நோ பல்பு - உடம்புக்குள்ள நோ மின்சாரம் - மனசுக்குல நோ சிலிர்ப்பு - அட போடா போக்கத்தவனே, என்று அந்த தாளை அவன்கிட்டே திருப்பி கொடுத்துட்டு திரும்பி பாக்காம போயிட்டேன். இப்போ அந்த அமாவாசைக்கு பொறந்தவன், வேற பௌர்ணமி வெளிச்சத்தில். ஆனால், தன் நிலவை சரியாக பாக்காமல், இன்னும் மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு, வேறு நிலவுகளுக்கு ராக்கெட் விட்டு கொண்டிருக்கிறதா சொல்லிக்கிறாங்க. நான் தப்பிச்சேன்டா, சாமி.
என் தோழிகளில் சிலர், கல்யாணத்துக்கு முன்னால, கற்பனை காதலனையோ கணவனையோ நினைத்து காதல் கவிதை எழுதி வைப்பாங்க - காலேஜ் படிக்கிறப்போ. நமக்கு காதல் படங்கள், காதல் கவிதை எல்லாம் அபத்தம் என்று நினைச்ச டைம். பிரக்டிகலா இல்லைன்னு ஒரு நினைப்புதான். கிண்டல் பண்ணுவேன்.
"நீ காதலிக்கும் போது உனக்கு புரியும்" என்று திட்டுவாங்க. அப்போ சாபம் கொடுக்கிற மாதிரி வாழ்த்துனாங்க போல.
முந்தைய கவிதையாயினி ஒருத்தியை சமீபத்தில் சந்திச்சப்போ, உன் latest கவிதை சொல்லுனு கேட்டாக்க, அதையெல்லாம் எழுத ஏதுடி மூடு, நேரம்னு சொல்றா. அட பாவி! பாலா இருந்தப்போவே கடைஞ்சு வெண்ணை எடுக்க அலைஞ்சவங்க ....... இப்போ தயிர் பானையே போட்டு உடைக்கிறாங்களே.

ஒரு சமயம், என் நண்பர்கள் ரவுண்டு-அப் சந்திப்பில், ஒருத்தர் உணர்ச்சி வசப்பட்டு, இந்த க்ரூப்புல யாரவது காதலிச்சிருக்கீங்களா? இருந்தா, என் வலி உங்களுக்கு புரியும், என்றார். நம்ம சொக்காரவங்க, "ஆமாடா" என்று சொன்ன பேரு எல்லாம் அவங்க அவங்க கல்யாணத்துக்கு முன்னால டாவு அடிச்சா பேரா இருந்துச்சு.
தன் பொண்டாட்டியை காதலிச்சு கல்யாணம் பண்ணுனவன் கூட அர்த்தம் (??!!) உள்ள, இல்லா சிரிப்பை சிரிக்குராக.
நான் மட்டும் தான், "காதலிச்சி இன்னும் முடிக்கலை" என்று சாலமன் ஐ நினைச்சி சொன்னா, வேற்று க்ரஹத்து ஜந்து ஒண்ணு, UFO crash ஆகி இவங்க முன்னால நின்னு, "கியாங் சியாங்கி கி கி கூய்ந்ச்சி..." னு பேசுராப்புல முறைச்சி பாத்தாங்க.

ஆயிட்டா, அப்படி ஆயிட்டா இப்படி ஆயிட்டானு புலம்பாதீங்க. அழகு, உருவம், பருவம் பாத்து வரது, லவ் (love) இல்ல மக்கா, அதுக்கு பேரு லஸ்ட் (lust) .
கல்யாணத்துக்கு அப்புறம், அன்பு, பாசம், பரிவு, நேசம், அக்கறை, புடலங்காய் னு இருந்தாலும், புருஷனோ பொண்டாட்டியோ புலம்புறதுக்கு எரிச்சல் படுறதுக்கு, என்ன காரணம்ங்க? எல்லாம் இருந்தும் ஏதோ மிஸ்ஸிங் மாதிரி தோணுதுல. அதான் - அதான் - அதேதான் - கணவன் மனையின் ஆத்மார்த்தமான காதல் உணர்வுகள். இதில், ஒரு கை ஓசை கூடாது.

நான் போன பதிவில் போட்ட, "முத்தம் போதாதே" கவிதைக்கு என்ன குறைச்சல்? ரெண்டு புள்ளைங்களை பெத்த புறகும் இப்படி காதல் தோய தோய புருஷனை நினைச்சி கவிதை எழுதினேன். unpublished comments சிலவற்றில், "உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி, இப்படி எழுதுறதுக்கு" என்று சொன்னாப்புல. எவனையோ காதலிக்குறேன் என்று நினைச்சி கல்யாணத்துக்கு முன்னாலே கவிதையில் சொன்னா ஓகேவாம்.. கட்டி இருக்கிறவனை காதலிக்கிறேன் என்று சொல்ல, தைரியம் வேணுமாம். நல்லாத்தான் ஓட்டுறாங்க. அதுலேயும் ஒருத்தர்: "சித்ரா, கவிதை படிச்சிக்கிட்டே வந்தேன். கடைசியில் நல்ல twist. உங்க கணவருக்குள்ள கவிதைன்னு." அடங்கொப்புரானே! பின்ன நான் யாரை நினைச்சி அவ்வளவு அனுபவிச்சு ரசிச்சு எழுதினேன்னு நினைச்சாவுக? இது வில்லங்க பேச்சுடா, டோய்.
காதல், ஒரு பக்க கதையா? வேறு ஒருத்தரை கல்யாணம் பண்ணியும், ஒரு நிமிஷம் நினைவலையில் வந்து வந்து போக.
காதல், சிறுகதையா? கல்யாணத்தில் முடிந்து விட.
காதல், தொடர்கதையா? வேற ஆள கல்யாணம் ஆன பின்னும், அதையே நினைச்சி தொடர்ந்து உருக.
காதல், மர்ம கதையா? கள்ள காதலாகவும் உருவெடுக்க.
காதல் - கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிகிட்டவுக மேல வரணும். கன்னி தீவு சிந்துபாத் கதை மாதிரி............. நீளணும்.........!