Tuesday, March 8, 2011

இங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா.....

போன வாரம், நான் நெல்லையில் உள்ள ஒரு தோழியிடம் தொலைபேசியில்  பேசிக் கொண்டு இருந்த பொழுது, அவள் ஒரு கேள்வி கேட்டாள்.  "சித்ரா, நீ அமெரிக்காவிலேயே இருக்கியே?  நம்ம ஊரு கலாச்சாரத்தை அங்கே பின்பற்ற முடிகிறதா?"  

எனக்கு அமெரிக்காவில் பிடித்ததில் முக்கியமாக ஒரு விஷயம் - இங்கே உள்ள கலாச்சார சுதந்திரம்.  ஹலோ, தப்பா எடுத்துக்காதீங்க...  நீங்க எந்த கலாச்சாரத்தை வேண்டுமானாலும் இங்கே பின்பற்றலாம் என்று சொல்ல வந்தேன்.  அது உங்கள் உரிமையாக கருதப்படுகிறது ... அத்துமீறல்கள்  நடக்கும் வரை. கட்டுப்பட்டியாகவும் இருக்கலாம் - எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் இருக்கலாம். அது சுதந்திரமாக நீங்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது.  


நான் இருக்கும் மாநிலத்திலும் சரி, அருகில் உள்ள சில மாநிலங்களிலும் சரி - தமிழ் கலாச்சாரங்களை தூக்கி சாப்பிட்டு விடுகிற மாதிரி ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தோடு,  ஆமீஷ் ( Amish)  என்ற ஒரு பிரிவினர் (sect)  வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களே இங்கே - இதே அமெரிக்காவில் இருக்கும் போது - நாங்கள்,   நம்மூரு கலாச்சாரத்தைப் பின் பற்ற தடை என்ன?  சொல்லுங்க... 



அவர்களை பற்றி நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருப்பதால், காமெடி கீமெடி பண்ணாமல்,  செய்திகளை  மட்டும் இந்த பதிவில்,  தொகுத்து தந்து இருக்கிறேன். 

Amish Mennonites என்ற ஒரு குழுவினர், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சபையை (denomination) சார்ந்தவர்கள்.  எளிமையான வாழ்க்கை முறை -  உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை -   எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது,  இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள். 

 1693 ஆம் ஆண்டு,  Switzerland ல்  Jakob Ammann என்பவரால் தான் இந்த ஆலய சபை முறை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.   ஆமானை பின்பற்றியவர்கள்,  ஆமிஷ் என்றழைக்கப்பட்டார்கள். அதுவே இன்று வரை தொடர்கிறது. 

18 நூற்றாண்டில், இதில் பலர், அமெரிக்காவில் பென்சில்வேனியா  ( Pennsylvania ) என்ற மாநிலத்திற்கு வந்து குடியேறி இருக்கிறார்கள்.  அன்றைய வாழ்க்கை முறையையே இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதா?   அமெரிக்காவின் சாயல் இவர்களை பாதிக்கவில்லை. 
2010 இல் எடுக்கப்பட்ட கணக்குப் படி,  கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மட்டும் சுமார் 2, 50, 000 ஆமிஷ் மக்கள் இன்னும் அந்த வாழ்க்கை முறைப்படி வாழ்வதாக சொல்கிறார்கள்.  

தங்கள்  பிரிவைச் சார்ந்தவர்களைத் தவிர, இவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. இவர்கள் எல்லோரும், அந்த அந்த மாநிலத்தில் ஒரே colony யாக சேர்ந்து வாழ்கிறார்கள்.  ஒரு காலனி என்பது - 20 - 40 குடும்பங்கள் கொண்டதாக இருக்கும்.   அடுத்த வீடுகளில் வசித்தாலும், கூட்டு குடும்பத்து முறைப்படி மாதிரிதான், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள். 


தங்களுக்கு வேண்டிய பெரும்பாலான உணவு தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி,  காய்கறி பயிர் உற்பத்தி எல்லாம் அவர்களின் கைவேலைகளே. 



இவர்கள் தச்சு வேலை செய்வதில் வல்லுனர்கள். தங்கள் வீடுகளை,  அவர்கள் குழுவினரின் உதவியுடன் தாங்களே கட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தச்சு வேலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மர மேஜைகள்,  நாற்காலிகள் போன்ற பொருட்களை தங்கள் காலனி பக்கமே கடையாக போட்டு விற்கவும் செய்வார்கள்.  பெண்களும் தையல் குறிப்பாக quilting என்ற கலையில் தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள்.


இப்படி தனித்து வாழ்வதால்,  இவர்களுக்கு மற்ற கலாச்சாரத்தைக் கண்டு எந்த வித தூண்டுதலும் (temptation) இருக்காது போல.  இவர்கள் வாழ்க்கை முறைக்கு, இவர்கள் நகரங்களில் இல்லாமல் சின்ன சின்ன கிராமங்களில் தான் தங்கி இருக்கிறார்கள்.

அவர்களது  மத விதிகள், அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் கட்டுப்படுத்தாது - அவர்களது அன்றாட வாழ்க்கை முறைக்கும் சட்ட திட்டங்களை வகுத்து உள்ளது.  

அவற்றில், முக்கிய பத்து விதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: 

1.  அவர்கள் உடைகள் கவர்ச்சியான  நிறத்தில் - முறையில் - இல்லாமல், ( பொதுவாக கருப்பு நிறம், நீல நிறம்)  எளிய முறையில் தைத்து இருக்கப்பட வேண்டும்.  

ஆமீஷ் இளம்பெண்கள்: 




2 . எந்த காரணம் கொண்டும்  மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.  அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது.  தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை. 

அவர்களின் சமையல் அறை:  எல்லாம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஜாம் மற்றும் பொருட்கள்: 
இவர்கள் செய்யும் ரொட்டிகள் மிகவும் பிரபலமானவை.  fridge இல்லாததால், உணவு பதார்த்தங்கள் பதப்படுத்தப்படுகின்றன:


3.  கார் போன்ற எந்த வித நவீன பயண வசதிகளையும் பயன்படுத்தக் கூடாது.  குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களில்  தான் அவர்கள் இன்றும் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  (எங்கள் ஊர்ப் பக்கம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம்.  நான் இருக்கிறது ஒரு கிராமம் என்று தெரிந்து போச்சா!) 


4.  தொலைபேசிகள் மற்றும் அலைபேசிகள் பயன்படுத்தக் கூடாது.  சில ஆமீஷ் வியாபாரிகள் (குடும்பங்கள் அல்ல) , சில சமயம் தங்கள் வியாபாரத்துக்கு மட்டும் அலைபேசி சில சமயங்களில் பயன்படுத்துவது பழக்கத்துக்கு வந்துள்ளது.

5.  அஹிம்சை முறைகளைத்தான் பின் பற்ற வேண்டும்.  இதனால், இவர்கள் எந்தவித ராணுவ சேவைகள் செய்வது இல்லை. 

6.  அதை பின்பற்ற விருப்பமில்லாதவர்கள்,  ஆமீஷ் வாழ்க்கை முறையை விட்டு விட்டு, அந்த காலனியையும் விட்டு  விலகி சென்று விட வேண்டும்.  அங்கேயே இருந்து கொண்டு புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது.  மீறி,  குடும்பத்துடன் தங்க விளைந்தால்,  சபையே இவர்களை விலக்கி வைத்து விடும்.  (நம்ம ஊரு பக்கம், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவது போல.....) 

அவங்களுடைய பார்கிங் லாட்:


7.  குழந்தைகளையும் அவர்களே தங்கள் காலனியில் நடத்தும் - ஒரு அறை கொண்ட பள்ளிக்கூடத்திலேயேதான் கல்வி கற்க அனுப்ப வேண்டும்.  அதுவும் அவர்கள் கல்வி முறை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே.  அதன் பின், வாழ்க்கை கல்வி என்ற பெயரில்  அவர்கள் வாழ்க்கை முறைக்குத் தேவையான  விவாசய செய்முறை (usually organic living) - தச்சு வேலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்முறை எல்லாம் கற்றுத் தரப்படும். 


குழந்தைகளுக்கு கட்டாய கல்வி முறையை சட்டமாக கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கம்,  இவர்கள் குழந்தைகளை ,  அமெரிக்க கல்விகூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு போட்ட பொழுது, 1972 ஆம் ஆண்டு,  அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றம்,  இவர்களின் குழந்தைகளை கட்டாய கல்விக்கு வலியுறுத்துவது, Free Exercise Clause of the First Amendment விதிமுறையை மீறுவதாக அமைந்து விடும் என்று தீர்ப்பு கூறி விட்டது.   

The First Amendment (Amendment I) to the United States Constitution is part of the Bill of Rights. The amendment prohibits the making of any law "respecting an establishment of religion", impeding the free exercise of religion, infringing on the freedom of speech, infringing on the freedom of the press, interfering with the right to peaceably assemble or prohibiting the petitioning for a governmental redress of grievances.

8.  உலகப் பிரகாரமான கேளிக்கைகள் (சினிமா உட்பட) மற்றும் விளையாட்டுக்கள் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.  இன்னும் பம்பரம் விடுதல்,  roller skating  போன்ற விளையாட்டுக்கள் தான் இங்கே பிரசித்தம்.  பொழுதுபோக்கு முறைக்காக,  இறைவனைத் துதித்து பாடும் பாடல்களை,  அவர்களே  கைகளால் செய்யப்பட இசைக்கருவிகள் கொண்டு இசைத்துப் பாடிக் கொள்வார்கள். அதற்கேற்ப, பவ்யமாக ஆடிக் கொள்வார்கள். 



எங்க ஊரு பக்கம் உள்ள ரோடு sign . காரில் வேகமாக வருபவர்கள்,  கவனமாக ஓட்ட வசதியாக: 


9.  இயேசு கிறிஸ்துவை  மட்டுமே வாழ்கையின் ஆதாரமாக கொண்ட நம்பிக்கை உடையவர்கள்.  அவர்களுக்கென்று உள்ள ஆலயம் செல்வதும், கூட்டு பிரார்த்தனைகள் செய்வதுமே முதன்மையானதாக கருதப்பட வேண்டும். 

10.  பணிவும் அடக்கமுமே ( humility) எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும்.  தலைக்கனம், பெருமை,  ஈகோ, பகட்டு எதற்கும் இடம் கொடுக்க கூடாது. எல்லாவற்றிலும் எளிமை வேண்டும்.

இவர்கள் தாங்களாக புகைப்படங்கள் கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை.  புகைப்படங்கள் எல்லாம்,  தம்மை அழகாக காட்டிக் கொள்ள தூண்டி விடும் தற்பெருமைக்குள் (personal vanity) தன்னை தள்ளிவிடக் கூடும் என்று கருதுகிறார்கள். இறைவன் படைப்பில், எல்லோரும் அழகானவர்கள் தான் என்று நம்புகிறார்கள். 


மற்றவர்கள் (ஆமீஷ் மக்கள் அல்லாதவர்கள்)  தங்கள் ஆல்பத்துக்காக,  இவர்களை புகைப்படம் எடுக்க , இவர்கள் சம்மதம் வாங்கி எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல் - குழந்தைகள் வளர்ப்பில் மற்றும் அன்றாட தேவைகளுக்கு,  சமூகமாக ஒன்றுபடல் - இறைவன் ஆராதனை மட்டுமே தங்கள் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். 

மாட்டுக்குப் பதிலாக குதிரை அல்லது கழுதை வைத்து விவசாயம் நடைபெறுகிறது: 




தங்கள் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்ளும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை கொண்டவர்கள்.   இன்னும் கடும் உடல் உழைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால்,  பொதுவாக மற்றவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் இவர்களுக்கு வருவதில்லை.  அப்படியே நோய்வாய்ப்பட்டாலும்,  கைமருத்துவம் தான் நம்பி இருக்கிறார்கள்.  அதையும் மீறி வரும் பொழுது,  இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள்.  மிகவும் அபூர்வமாகத் தான் வெளிமருத்தவம் நாடி,  அவர்களுக்கென்று சபை சம்மதம் தெரிவித்து உள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு செல்வது உண்டு.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண முறை கொண்டவர்கள். விவாகரத்து என்பதே இவர்களில் கிடையாது.  
 அவர்களில் ஒருவரை  சந்தித்த பொழுது,  நவீன வசதிகளை எதற்காக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டோம்.  அவர் சொன்ன பதிலில் இருந்து நான் இன்னும் மீளவில்லை: 

" நவீன வசதிகள் எல்லாம் - மின்சாரம் பயன்படுத்துவது உள்பட - மனிதர் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் இயங்கச் செய்ய வைப்பதாகவே  உள்ளது.  (It encourages independent style of living.)  எங்கள் சமூகத்தை சார்ந்து வாழும்,  கூட்டு  வாழ்க்கை முறையை விட்டு விட்டு, தனி மனித - தனி குடும்ப வசதி முறைக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக மாற்றி விடக் கூடியதாக  உள்ளது.  அது மட்டும் அல்ல,  அந்த பொருட்கள் நம்மை அடிமையாக்கி, நம் குடும்பங்கள் - நம் சந்தோசம் - என்று நினைப்பதை விட்டு விட்டு, என் குடும்பம் - என் சந்தோசம் - என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை கொண்டு சென்று விடக் கூடும்.  எனது அடுத்த வீட்டாருடன், சகோதரத்துவ குணத்துடன் பழக வைக்க விடாமல், அவர்களையே என் போட்டியாளர்களாக கருத வகை செய்து விடும்.  அந்த பொருட்களை பயன்படுத்துவது,   நமது வசதிகளைப் பெருக்குவதாக முதலில் தோன்றினாலும்,  நமது பணத்தேவைகளையும்  அதை விட பலமடங்கு பெருக்கி,  எளிய வாழ்க்கை முறையில் கிடைக்கும் மகிழ்ச்சி - நிம்மதி கிடைக்க வழியில்லாமல் செய்து விடும், " என்றாரே பார்க்கலாம். 

இவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள: 

இப்பொழுது என் தோழி கேட்ட கேள்விக்கு எனது நேரிடையான பதில்: 

அமெரிக்க constituition  சட்ட விதிகளில் முதலாம் விதியாகவே இருப்பது,  ஒவ்வொரு அமெரிக்க வாழ் மனிதரும்,  தங்கள் தங்கள் விருப்பப்படி  தெய்வநம்பிக்கை மற்றும் கலாச்சார கோட்பாடுகளை பின்பற்ற சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே.  First Amendment Rights  பற்றி தெரிந்து கொள்ள: 


அதனால்,  எனது விருப்பப்படி தமிழ் கலாச்சாரத்தை பின்பற்ற எனக்கு அமெரிக்காவில், சட்ட ரீதியாகவே  முழு உரிமை உண்டு.   தமிழ்நாட்டில், அமெரிக்க பெயரை சொல்லிக்கொண்டு நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால்,  அமெரிக்காவில் எனது கலாச்சாரத்தை மனப்பூர்வமாக மட்டும் அல்ல, சட்ட பூர்வமாகவும் பின்பற்ற நான் புரிந்து வைத்து இருக்கிறேன்.





161 comments:

ஆனந்தி.. said...

ரெண்டுநாள் டைம் குடுங்க....தங்கி படிச்சிட்டு வரேன்...:))) (பதிவு நீளம் னு சொன்னேன்:))) )

சுதர்ஷன் said...

நம் பண்டைய தமிழர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இவர்களும் இருக்கிறார்கள் ..நல்லவங்க போல ..புகைப்படம் எடுத்து கொள்ளாததன் காரணம் பிடித்திருக்கிறது ..தெரியாத இனம் பற்றி நல்ல தகவல் நிறைய ... :))

Nagasubramanian said...

அந்த ஊரு பொண்ணுங்க ரொம்ப சூப்பருங்க:)

Kanchana Radhakrishnan said...

Nice post

ஆனந்தி.. said...

டேய்...The Best and Best Post...

சசிகுமார் said...

பத்து செய்திகளும் மிக அருமை. ஆனால் மின்சாரம் உபயோகிக்க கூடாது,பிள்ளைகளை எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க கூடாது, போட்டோ எடுக்க கூடாது இவையெல்லாம் மூட நம்பிக்கையாகவே எனக்கு படுகிறது. போட்டோ எடுக்க கூடாது என்றால் அவர்கள் முகக்கண்ணாடியே பார்க்க கூடாது. எப்படியோ இருக்கட்டும் நவீன அமெரிக்காவிலும் இது போன்று வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் அந்த இன மக்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

nalla thagaval... arumaiyana post.

ஆனந்தி.. said...

சத்தியமா அவங்க சொன்ன காரணத்தை படிச்சிட்டு ஒரு கணம் அமைதியானேன்...ஆரம்பத்தில் படிக்கும்போது என்னடா இந்த நூற்றாண்டில் இப்படி என்ன லூஸு தனம்...டெக்னாலஜியை எதுக்காத பத்தாம்பசலிகள் னு தோணிச்சு...ஆனால் அவங்க சொன்ன காரணம்...சத்தியமான உண்மை....

ஆனந்தி.. said...

அமெர்க்கா என்றால் கலாச்சார அசிங்க மாயை இன்னும் தமிழர்களிடையே இருக்கு அம்மு...இந்த போஸ்ட் நிச்சயம் அந்த எண்ணத்தை மாற்றும்...:))

sathishsangkavi.blogspot.com said...

இது வரை அறியா விசயம்... நம்மை விட அவர்கள் கலாத்தாரம் வித்தியாசமாக உள்ளது...

ஆனந்தி.. said...

என்னை கேட்டால் நாமெல்லாம் டெக்னாலஜி க்கு அடிமையாகி...உறவுகளை தூரமாய் வச்சிட்டு...இயந்திர வாழ்க்கை வாழறோம் பா...உண்மையில் இவங்களை பார்த்தால் பொறாமையா தான் இருக்கும்..(கொஞ்சம் கருப்பு வெள்ளை படம் பார்த்த மாதிரி அவங்க வாழ்க்கை முறை இருந்தாலும்.. ) அதுவும் பரவசமா தாண்டா இருக்கு...

Asiya Omar said...

ஆமிஸ் மக்கள் பற்றிய பகிர்வு அருமை.18ஆம் நூற்றாண்டு ஸ்டைலில் இப்ப அவர்கள்,இன்னும் கொஞ்ச காலத்தில் மற்றவர்களுக்கு எல்லாம் சலித்து போய் இந்த ஸ்டைல் திரும்ப போவுது,என்னடா படத்தில் ,etihad,emirates air hostess ஆக நிற்கிறாங்களேன்னு பார்த்தால் ஆமிஸ் பெண்கள்.

ஆனந்தி.. said...

வார்த்தையில் மட்டும் கலாச்சார பால் ஊத்தும் போலிதனமான நம்மை சுற்றி இருக்கும் கலாச்சார காவலர்களுக்கு...அந்த ஊரு மக்களை கை எடுத்து கும்பிடலாம் டா...

Madhavan Srinivasagopalan said...

தெரியாத.. அருமையான தகவல்கள்.
அதுக்காக மின்சாரம், எ.சி, ஃபிரிஜ், கம்பியோட்டார் இதெல்லாம் இல்லாம,.... ம்ம் ஹூம்.. நம்மளால முடியாது சாமியோவ்..

Unknown said...

நிறைய தகவல் தெரிந்து கொண்டோம் ,அருமையான பதிவு அக்கா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முன்பே அறிந்திருந்தாலும்.. மிக விளக்கமாக இருந்தது சித்ரா உங்கள் பதிவு.. நன்றி.. அழகான பதில் அந்த நண்பருடையது.. ஹ்ம்..

Unknown said...

@ஆனந்தி

அக்கா கமெண்ட்டா அடிச்சு எழுதுறீங்களே,சமைக்கிற வேலை எதுவும் இல்லியா ஹி ஹி ஹி

ஆனந்தி.. said...

@ மணிவண்ணன்
சித்ரா பதிவு அவளவு மெய் மறக்க வச்சிருச்சு....(அதெல்லாம் முடிச்சுட்டு தான் ப்லாக் பக்கம் வருவோம் சகோ...:)) டோன்ட் வொர்ரி...:)) )

Yaathoramani.blogspot.com said...

அமீஷ் மக்கள் குறித்து எனக்கு
தங்கள் பதிவு படிக்கும் முன்பு எதுவுமே தெரியாது
ஆனாலும் தங்கள் பதிவு படித்து முடித்ததும்
அவர்களை குறித்து அனைத்தையும்
தெரிந்துகொண்டதைப்போல் ஒரு நிறைவு
அதற்குக் காரணம் தாங்கள் மிகத் தெளிவாக
விவரித்துள்ளதுதான்
தாங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் எடுத்துக்கொள்ளும்
அதீத முயற்சிகளுக்கு எங்கள் மனங்கனிந்த பாராட்டுக்கள்

தமிழ் உதயம் said...

பழமை, புதுமை - இரண்டும் கலந்த தேசமாக தான் இனி அமெரிக்காவை பார்க்க வேண்டும்.

சௌந்தர் said...

தெரியாத பல தகவல் தெரிந்து கொண்டேன் இன்னும் இதே மாதரி பல பதிவுகள் எழுதணும்....ஆனா சின்ன பதிவா போடனும்

ரேவா said...

தெரியாத அமெரிக்க ஆமீஷ் மக்கள் கலாசாரத்தை தெரிந்து கொண்டேன்...நல்ல தகவல்.... பகிர்வுக்கு நன்றி.......

Unknown said...

கலாச்சாரம் என்பதும் தனி மனித விருப்பங்கள்..

Vishy said...

உருப்படியான பதிவு.. நல்ல தகவல்கள்

priyamudanprabu said...

ஆமீஷ் இளம்பெண்கள்:
///////////

அந்த படங்கள் தெரியவில்லை..உங்கள் சதியை வன்மையாக கண்டிக்கிறேன் ...

priyamudanprabu said...

NICE POST...

priyamudanprabu said...

OK OK
ippo picture theriyuthu... payanthudinga pola.....

அஞ்சா சிங்கம் said...

எந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. .............///////////////////

அமெரிக்காவிலா இன்னும் எனக்கு ஆச்சரியம் விலகவில்லை ..................

Prabu M said...

நம்ம மட்டும் தான் உலகத்திலேயே கலாச்சாரப் பின்னணி உடையவர்கள் என்றும் மேலை நாடுகளில் கலாச்சாரமே கிடையாது என்றும் கண்மூடித்தனமா பேசிட்டு பெத்த மகளை கூடப் பிறந்த சகோதரியை "கௌரவக் கொலை" பண்ணுற கலாச்சாரம்தானே ந‌ம்முடைய‌து.... ரொம்ப சீக்கிரமா நாகரிகம் கண்டுபிடிச்ச அதே நம்ம இனம்தான் மிக எளிதில் நாகரிகத்தைத் தொலைச்ச இனமும் கூடன்னும் சொல்லலாம்.... என்னைப் பொறுத்தவரை கலாச்சாரம் என்பது ஒவ்வொரு மனுஷனுக்கும் மாறுபடும்...ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபடும்... அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளை விதித்தால் பொதுவாகக் கலாச்சாரம் மாற்றி எழுதப்படுவது நிதர்சனம்....


ஏற்கெனவே இவர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன்.... நான் யூனிசிஸில் வேலை பார்த்தபோது எங்கள் ப்ராஜெக்டின் ஃப்ரண்ட் ஆஃபீஸ் எஞ்சினியர் இங்கே வந்திருந்தபோது பெங்களூர் சிவாஜி நகர் சர்ச்சுக்கு சண்டே மாஸுக்கு அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் கூட்டிட்டுப் போனேன்... அப்போ நம்ம ஊர் பற்றி நான் எடுத்துச்சொல்ல இந்த மக்களைப் பற்றி அவரும் நிறைய சொன்னார்...... இப்போ உங்க பதிவைப் படித்த பிறகுதான் யோசிக்கிறேன் ஒருவேளை அவரும் இந்த இனத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பாரோன்னு!!!! ஏன்னா அவருடைய உடைகளை இப்போ யோசிச்சுப்பார்த்தா அப்படி ஒரு டவுட் வருவதைத் தடுக்க முடியல.... "பேக்கர்" என்பது அவருடைய சர் நேம் மேட்ச் ஆகுதான்னு அக்கா தான் பார்த்து சொல்லணும்!! :)

வெல்..... இந்தப் பதிவு வித்தியாசமான நடையில் இருந்தது அக்கா.... ரொம்ப எளிமையா எடுத்துச் சொல்லிப் பதிஞ்சிருக்கீங்க... அது எவ்ளோ கடினம்னு நீங்க கொடுத்திருக்குற லிங்கைப் படித்துப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.... நிறைய எழுதுங்க அக்கா..... அமெரிக்காவுக்குப்போனாமோ சான்ஃப்ரான்ஸிஸ்கோ ப்ரிட்ஜுல நின்னு ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டோமான்னு இல்லாம அவங்க வாழ்க்கை முறையையும், பல தெரியாத இடங்களையும் மக்களையும் எளிய தமிழில் சுவாரஸ்யமா அறிமுகப்படுத்திப் பதிந்து வைப்பது ரொம்ப அழகான விஷயம் அக்கா.... இது நிச்சியம் அடுத்த தளத்துக்குக்கான அங்கீகாரம் பெறும் காலப்போக்கில்..... தொடர்ந்து கலக்குங்க அக்கா.....

Chitra said...

///"பேக்கர்" என்பது அவருடைய சர் நேம் மேட்ச் ஆகுதான்னு அக்கா தான் பார்த்து சொல்லணும்!! :///

He maybe from another group of people called Quakers. ஆமிஷ் மக்கள் பொதுவாக தங்கள் கூட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். இல்லை, அவர் இந்த கூட்டத்தை விட்டு விலகி வந்தவராக இருக்கலாம்.

சுந்தரா said...

//அந்த பொருட்களை பயன்படுத்துவது, நமது வசதிகளைப் பெருக்குவதாக முதலில் தோன்றினாலும், நமது பணத்தேவைகளையும் அதை விட பலமடங்கு பெருக்கி, எளிய வாழ்க்கை முறையில் கிடைக்கும் மகிழ்ச்சி - நிம்மதி கிடைக்க வழியில்லாமல் செய்து விடும்//

எவ்வளவு சரியா யோசிச்சு வாழறாங்கன்னு நினைக்கும்போது வியப்பாகத்தான் இருக்குது. நவீன வசதிகளால் மக்கள் மனதளவில் தீவுகளைப்போல மாறிக்கொண்டுவருவது உண்மைதான்.

வைகை said...

இதை படிக்கவும் பார்க்கவும் நமக்கு நன்றாக இருக்கலாம்....ஆனால் இன்றைய தலைமுறை இதை மனப்பூர்வமாக கடைபிடிக்கிறார்களா இல்லை போன தலைமுறையின் கட்டுப்பாட்டுக்கு பயந்தா? கிராம பஞ்சாயத்தை குறை சொல்லும் நாம் இதை பாராட்டுவதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்!

அன்புடன் மலிக்கா said...

ஆமிஸ் மக்கள் பற்றிய அறியதந்தமைக்கு நன்றி சித்ராக்கா.
இவர்களை நேரில் பார்க்கவேண்டும்போல் உள்ளது.
பேணிக்காக்கிறார்கள் கலாச்சாரத்தை
நல்லதொரு வாழ்க்கைமுறைய அமைத்துகொண்டிருக்கிறார்கள்.

அருமையான பதிவு..

Chitra said...

குழந்தைகள் - 14 வயதிற்கு மேல், எப்பொழுது தயார் என்று நினைக்கிறார்களோ அப்பொழுது தான், இந்த குழுவிற்குள்ள விதிகளை - நிரந்தரமாக - உறுதிமொழியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். விருப்பம் இல்லா குழந்தைகள் குழுவை விட்டு விலகி செல்ல உரிமை உண்டு.

அருண் பிரசாத் said...

நல்லாதான் இருக்கு

ஆனா இப்படியும் வாழ முடியுமா? கல்வி மிக மிக அவசியம்....

சீக்கிரத்துல பெட்ரோல் தீர்ந்தா...நாமெல்லாம் குதிரை வண்டி சவாரி தான்

திருவாரூர் சரவணா said...

இந்தியாவில் இன்னும் பழமையை ஆதரிக்கிறோம் என்று பெண்களையும் காதலர்களையும் (உண்மையான காதலர்களை சொன்னேன்) கொடுமைப்படுத்தி சாகடிப்பது என்றெல்லாம் சிலர் இருக்கிறார்கள். ஆனால் போக்குவரத்து முதல் போன் வசதி வரை எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொண்டுதான் இப்படி சொல்கிறார்கள். நிச்சயம் ஆமிஷ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்தான். அவர்களால் நம் வாழ்க்கைக்கு எளிதாக மாறிவிட முடியும். ஆனால் நம்மால் அந்த உலகத்துக்குள் போக நினைத்தாலும் நம் மனம் என்னும் குரங்கு விடாது.

pudugaithendral said...

நிறைய்ய விவரங்கள் ....

பகிர்தலுக்கு நன்றி

Unknown said...

நவீன வசதிகள் கலாச்சாரத்தை பாதிக்கும் விஷயம் தான். ஆனால் நேரத்தை மீதப்படுத்தி கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.
காலத்திற்கு ஏற்ப ஏற்படக்கூடிய மாற்றங்களை ஏற்கும் கலாச்சாரங்களே நீடிக்கின்றன. இல்லையெனில் கட்டாயப்படுத்தப்படுதல் என்பது மட்டுமே மக்களின் மனதில் நிற்கும்.

மாணவன் said...

நிறைய தகவல்களை சிறப்பாக தொகுத்து சொல்லியிருக்கீங்க மேடம் சூப்பர்

Chitra said...

////காலத்திற்கு ஏற்ப ஏற்படக்கூடிய மாற்றங்களை ஏற்கும் கலாச்சாரங்களே நீடிக்கின்றன. இல்லையெனில் கட்டாயப்படுத்தப்படுதல் என்பது மட்டுமே மக்களின் மனதில் நிற்கும்.////


......////காலத்திற்கு ஏற்ப ஏற்படக்கூடிய மாற்றங்களை ஏற்கும் கலாச்சாரங்களே நீடிக்கின்றன. இல்லையெனில் கட்டாயப்படுத்தப்படுதல் என்பது மட்டுமே மக்களின் மனதில் நிற்கும். /////

......அது அவர்களுக்கு மட்டும் அல்ல, நமது தமிழ் கலாச்சரத்துக்கும் பொருந்தும் தானே.... ஆனால், நான் சொல்ல வந்தது என்னவென்றால், அமெரிக்காவில் 18 வது நூற்றாண்டில் இருந்து இருந்தாலும், தங்கள் கலாச்சாரத்தை பேணி வரும் சுதந்திரமும் பக்குவமும் அவர்களிடம் இருக்கிறது. நாளை, அவர்கள் நிலை மாறலாம். அது அவர்களுக்கு இருக்கும் சுதந்தரத்தைத் தான் காட்டுமே தவிர, குறையாக - சாபக் கேடாக காட்டாது.

RVS said...

அறிவதற்கு பல அறிய விஷயங்கள் சித்ரா.. நன்றாக உள்ளது. இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட மக்களா? ஆச்சர்யம். ;-))

இளங்கோ said...

இதெல்லாம் தெரியாத தகவல்கள்.
அதிலும் எந்த அறிவியல் வளர்ச்சியையும் உபயோகிக்காமல் இருப்பதென்பது எவ்வளவு பெரிய விசயம். அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

//எந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது. தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை//

கொஞ்ச நேர மின்வெட்டுக்கே நாமெல்லாம் கூப்பாடு போடறோம் :-))))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவர்களது மத விதிகள், அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் கட்டுப்படுத்தாது - அவர்களது அன்றாட வாழ்க்கை முறைக்கும் சட்ட திட்டங்களை வகுத்து உள்ளது.

அய்யய்யோ என்னங்க இப்படிச்சொல்றீங்க? இந்த நவீன உலகத்துல இப்படியுமா இருக்காங்க?

Unknown said...

நல்ல தகவல்கள்

பகிர்வுக்கு நன்றி சகோ

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனது விருப்பப்படி தமிழ் கலாச்சாரத்தை பின்பற்ற எனக்கு அமெரிக்காவில், சட்ட ரீதியாகவே முழு உரிமை உண்டு. தமிழ்நாட்டில், அமெரிக்க பெயரை சொல்லிக்கொண்டு நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் எனது கலாச்சாரத்தை மனப்பூர்வமாக மட்டும் அல்ல, சட்ட பூர்வமாகவும் பின்பற்ற நான் புரிந்து வைத்து இருக்கிறேன்.


நச்! இங்கு பிரான்சிலும் அப்படித்தான்! மரண வீடுகளில் வாசிக்கப்படும் பறை எனப்படும் மேளத்தை நான் ஊரில் இருக்கும் போது கேட்டதில்லை! ஆனால் இங்கு பல மரண வீடுகளில் பார்த்திருக்கிறேன்!



நாம் நமது சொந்த இடங்களில் இருக்கும் போது கலாச்சாரம் ஆற்றி கவலைப்படுவதில்லை! ஆனால் அந்நிய தேசத்துக்கு வந்தவுடன் எமது மண், மொழி, கலாச்சாரம் மீது பற்று வந்துவிடுகிறது! இல்லையா?

Unknown said...

எனக்கும் எல்லா நவீன வாய்ப்பும் கிடைத்திருந்தால், என் வளர்ச்சி வீதம் அதிகமாய் இருந்திருக்குமே என்று இங்கே இருக்ககூடிய கிராமத்து இளைஞர்கள், நினைப்பது போல, அங்கே உள்ள இளைஞர்கள் பிற்காலத்தில் நினைக்ககூடும் அல்லவா?

சி.பி.செந்தில்குமார் said...

வெல்கம் பேக் டூ நார்மல் சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு நீளம்னு சிலர் கமெண்ட் ல சொல்லி இருக்காங்க.. ஆனா மயிலுக்கு தோகை நீளம்கறதால அதை வெட்டி விட முடியாது..இந்த பதிவுக்கு இந்த விளக்கம் அவசியம் தான்... சிறந்த கலாச்சாரம் பற்றிய பதிவு

Chitra said...

/////எனக்கும் எல்லா நவீன வாய்ப்பும் கிடைத்திருந்தால், என் வளர்ச்சி வீதம் அதிகமாய் இருந்திருக்குமே என்று இங்கே இருக்ககூடிய கிராமத்து இளைஞர்கள், நினைப்பது போல, அங்கே உள்ள இளைஞர்கள் பிற்காலத்தில் நினைக்ககூடும் அல்லவா?/////


இருக்கலாம்... ஆனால், இங்கே கவனிக்கப்பட வேண்டியது ஒன்று.... நாங்க சந்தித்தவரின் பதிலில் இருக்கிறது... அவர்கள், வளர்ச்சியை விட கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள். வளர்ச்சி தான் வேண்டும் என்பவர்கள், விட்டு விட்டு போய்விடலாம். மற்றவர்க்கும் தொல்லையாய் இருக்க கூடாது. கடுமையான கலாச்சாரத்தை கட்டிக் காப்பவர்கள், குழந்தைகள் சுதந்தரமாக எடுக்கும் முடிவுக்கும் தடை சொன்னதில்லை. குழந்தைகளுக்கு, தாங்கள் எதனால் அப்படி இருக்கிறோம் என்று சொல்லியும் வளர்க்கிறார்கள். அதை புரிந்து கொண்டு தான் குழந்தைகள் அங்கு விரும்பி இருக்கிறார்கள். விட்டு விட்டு சென்றவர்களும் உண்டு. அப்படி இருந்தும், எப்படி இவர்களால் மூன்றாம் நூற்றாண்டுக்குள் காலடி எடுத்து வைக்க முடிந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆமீஷ் மக்களின் மக்கள் தொகை குறையாமல், வளர்ந்து வருவதையும் கவனிக்க வேண்டும்.
சரியான முறையில், கலாச்சாரம் காரண காரியங்கள் - முக்கியத்துவம் புரிந்து வளர்க்கப்பட்டால், அமெரிக்கா வாழ்க்கை முறையினால் - மேல் நாட்டு கலாச்சாராத்தால், தமிழ் கலாச்சாரம் சீரழிந்து போய் விடுமோ என்ற கவலைப்பட வேண்டாமே....

Chitra said...

வெல்கம் பேக் டூ நார்மல் சித்ரா



......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நான் எப்போ abnormal ஆக இருந்தேன் என்று எனக்கு தெரியல.... நான் எப்போவும் போலத்தான் இருக்கிறேன். எல்லாமே பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கிறது. :-)

Sukumar said...

அருமையான தகவல் மேடம்.. ஆனால் நாம்தான் இனி இயற்கையோடு வாழ கூடிய இதுபோன்ற முறைகளில் கற்பனையில் கூட வாழ முடியாது...

ராஜ நடராஜன் said...

தேடினாலும் தெரிந்து கொள்ள இயலாத பகிர்வுக்கு நன்றி.

goma said...

அருமையான ஆக்கப் பூர்வமான பதிவு.அசத்திட்டீங்க சித்ரா...
நிறைய நல்ல விஷயங்களை நாம் தெரியாமல் இருக்கிறோம் என்பதை உணரவைத்தது இந்த பதிவு.
அவர்களது கலாச்சாரம்,அதன் மூலம் எல்லோருக்கும் தரும் நீதிகள் அற்புதம்

செங்கோவி said...

ரொம்ப கட்டுப்பெட்டியா இருப்பாங்க போலிருக்கே..அமெரிக்க கலாச்சார சுதந்திரம் பற்றிய விளக்கம் அருமை..மெக்ஸிகோ கலாச்சாரமும் நம் கலாச்சாரத்தை ஒட்டி வரும் இல்லையாக்கா?

உணவு உலகம் said...

கட்டுப்பாடும் உண்டு, சுதந்திரமும் உண்டு. வித்தியாசமான சமூகம். நல்ல பகிர்வு. அமெரிக்காவில் இன்னும் என்னெல்லாம் சொல்ல போறீங்களோ!

ஹுஸைனம்மா said...

//எந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது. தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை//

ஆற்காடு ராமசாமி பாத்தா எம்பூட்டு சந்தோஜப்படுவார்? ஆனா, இலவச டிவி கொடுத்து காக்கா பிடிக்க வழியில்லியேன்னு கலஞ்சர் வருத்தப்படுவாரே?

வித்தியாசமான வாழ்க்கை முறை. அவர்கள் சொல்வதுபோல நம்மில் அதிகம்பேர் டெக்னாலஜியினால் தனிமைப்பட்டுத்தானே போகிறோம்? அவர்களோ வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்கள்.

//உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - உடைகள் கவர்ச்சியான நிறத்தில் - முறையில் இல்லாமல்,(பொதுவாக கருப்பு நிறம், நீல நிறம்)எளிய முறையில்//

இங்கே போல அங்கேயெல்லாம் பதிவெழுதும் கலாச்சாரக் காவலர்கள் இல்லை போல!! :-))))))

S Maharajan said...

ஆமிஸ் மக்கள் பற்றிய அறியதந்தமைக்கு நன்றி சித்ராக்கா.

ரஹீம் கஸ்ஸாலி said...

ஓட்டு போட்டுட்டு நான் எஸ்கேப்


இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present madam

MANO நாஞ்சில் மனோ said...

//கார் போன்ற எந்த வித நவீன பயண வசதிகளையும் பயன்படுத்தக் கூடாது. குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களில் தான் அவர்கள் இன்றும் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். (எங்கள் ஊர்ப் பக்கம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம். நான் இருக்கிறது ஒரு கிராமம் என்று தெரிந்து போச்சா!) //

ஹே ஹே மாட்டிகிட்டாங்க....

K.S.Muthubalakrishnan said...

already know of people they are living in US known by one film,but u explanied more details thanks

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, ம்... ஒரு நீண்ட பெரு மூச்சு, என்ன ஒரு ஆச்சரியம்- இப்படியும் மக்களா? எங்கள் நாட்டு மக்களுடன் ஒப்பிடும் போது இவர்களின் கால் பங்கு பண்பாட்டு, கலாசார விழுமியங்களிற்கும் சமனாவார்களோ தெரியாது. அவர்களுக்கு சபாஷ். அருமையான பதிவு. எங்களைப் போன்ற அன்பு உள்ளங்களுக்காக அதிக கவனம், தேடல் எடுத்துப் பதிவினைத் தந்துள்ளீர்கள்.

//S.Sudharshan said...
நம் பண்டைய தமிழர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இவர்களும் இருக்கிறார்கள் ..நல்லவங்க போல ..புகைப்படம் எடுத்து கொள்ளாததன் காரணம் பிடித்திருக்கிறது ..தெரியாத இனம் பற்றி நல்ல தகவல் நிறைய ... :)//

பண்டைய தமிழர்கள் தம்மைப் பற்றி, தமது பண்பாட்டுப் பாடல்கள் பற்றி குறிப்புக்களாக ஏட்டுச் சுவடிகளிலும், கல்வெட்டுக்களிலும் எழுதி வைத்திருந்தார்கள். இம் மக்களுடன் பண்டைய தமிழர்களை ஒப்பிடுவது தவறு என்று நினைக்கிறேன்.

சகோதரி, இன்றைய கால கட்டத்தில் ஒரு மனிதனது சுய நிர்ணய உரிமையை நிர்ணயிக்க இம் மக்களைப் போன்ற கட்டுக் கோப்பான பண்பாட்டு முறைகள் அத்தியாவசியமாகின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது கலை கலாச்சாரங்கள் குறிப்பிட்ட ஒரு சந்ததியிடன் மாத்திரமே நிலைத்திருக்கிறது. பிறிதொரு அல்லது இன்றைய இரண்டாம், மூன்றாம் தலை முறையினரிடம் இத்தகைய கலாசார விழுமியங்கள் பற்றிய அறிவோ அல்லது அதனைப் பின்பற்றும் திறமையோ பின் தங்கிய நிலையில் தான் உள்ளது. ஆகவே எம்மவர்கள் இந்த மக்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

இன்னொரு விடயம், இந்த மக்கள் என்ன மொழியினைப் பேசுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்?
ஆங்கிலம் தான் பேசுவார்களா?
கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் விவசாயம் செய்து தமக்குள்ளே பரிமாறிக் கொண்டாலும் இதர தேவைகளுக்கான பணத்தினை எப்படிப் பெற்றுக் கொள்வார்கள்?

Angel said...

நல்ல பகிர்வு .எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த குதிரை வண்டி சவாரிதான

Unknown said...

சித்ரா, மின்னசோட்டாவில் ஒரு தடவை அமிஷ் ஃபார்ம் டூர் போனோம் (ஆமா, இதையும் கமர்சியல் ஆக்கிட்டாங்க!!). ரொம்ப ஆச்சரியப்படத்தக்க மக்கள். அங்கே போனவுடன்தான், நாங்கள் ஆர்கானிக் உணவு முறைக்கு மாறி (2003 லருந்து), அமிஷ் பண்ணைகளிலிருந்து வரும் உணவுப்பொருட்களை விற்பதற்கென்றே உள்ள கோ-ஆப்பரேடிவ் கடைகளில் பொருட்கள் வாங்க ஆரம்பித்தோம். அடடா, அந்த உணவுப்பொருட்கள்தான் என்ன ருசி... எங்க கிராமங்களில் முன்பு கிடைக்கும் இயற்கை உணவுப்பொருட்கள் மாதிரியே!!

என்ன, க்ரோசரி ஸ்டோரில் 2.50 க்கு கிடைக்கும் 1 காலன் பால். இந்தக் கடைகளில் 5 க்கு (ஆர்கானிக்) கிடைக்கும். அந்த (உண்மையான) சுவைக்காக வாங்கலாம். அப்புறம், அங்கு கிடைக்கும் சாலட், பேக்கரி ஐட்டம்ஸ், ஜாம் எல்லாம் தனிச்சுவையோடு இருக்கும்.

புதுப்புது தகவலோடு கலக்குங்க. அப்படியே பென்சில் பக்கம் இருக்கும் பூர்வீக இந்தியர்கள் (இப்பவும் இருந்தால்) பத்தியும் எழுதுங்க!!

இந்த ஃபர்ஸ்ட் அமென்ட்மென்ட் தான் - கிளின்டனக் கேள்வி கேட்கவும் வைக்குது. போர்னோ வெப்சைட்டுகள தைரியமா உலவவும் வைக்குது :(

அமெரிக்கக் கலாச்சாரத்தை தவறாகப் புரிந்துகொண்டவர்கள்தான் இந்தியாவில் அதிகம். ஏனென்றால், அந்தக் கலாச்சாரத்தின் தவறான பக்கங்கள்தான் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன!!

ADHI VENKAT said...

நிறைய புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

ஜோதிஜி said...

வலைபதிவுகளின் நோக்கமே இது போன்ற செய்திகள் தான். வெகு ஜன ஊடகம் நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை செய்திகளையும் இந்த வலையுலகம் வழங்க முடியும். ஆனால் எவரும் செய்வதில்லை. தமிழர்கள் வாழும் அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தை வாழ்க்கை முறையை எத்தனை எளிதாக உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே படிக்க முடிகின்றது.

இது போன்ற விசயங்களை தொடர்ந்து எழுதுங்க.

இது போன்ற விசயங்களுக்கு நீளம் அகலம் பார்க்காதீங்க.

settaikkaran said...

//கட்டுப்பட்டியாகவும் இருக்கலாம் - எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாமல் இருக்கலாம். அது சுதந்திரமாக நீங்கள் எடுக்கும் முடிவை பொறுத்தது.//

அம்புட்டுத்தேன்! கலாச்சாரத்துக்கு ரெண்டே ரெண்டு பக்கம்தானிருக்கு! இதை ஒப்புக்கொள்ளுகிற துணிச்சல் எல்லாருக்கும் வந்தா பாதி பிரச்சினை தீர்ந்திரும். :-)

ம.தி.சுதா said...

சில இடத்தில ஒன்றுமே செய்ய எலாதக்கா இடத்திற்க தகுந்தத போல மாறத் தான் வேணும் (அதுக்காக கட்டுப்பாட்டை மீறக் கூடாது)

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

settaikkaran said...

//எளிமையான வாழ்க்கை முறை - உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது, இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள். //

அமெரிக்காவிலா இப்படி என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.

ஆமீஷ் குழுவினர் போல, தமிழகத்திலும் பல பழங்குடியினர் தங்களது குடியிருப்புகளில் சத்தமின்றி, அவரவர்களின் சுயகட்டுப்பாட்டுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இருபத்தியோராம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியை அவர்கள் விரும்பவில்லை. கொல்லிமலைப் பகுதியில் ஒரு கிராமத்தில் சமீபத்தில்தான், அதுவும் மாவட்ட ஆட்சியாளர் வற்புறுத்திச் சொல்லி மின்சாரமே பெற்றுக்கொண்டார்களாம்.

நிறைய தகவல்களும், நல்ல படங்களுமாய் ஒரு சுவாரசியமான இடுகை. பகிர்வுக்கு நன்றி!

ஸாதிகா said...

நல்ல பகிர்வு.

Anonymous said...

செமத்தியான பதிவு சித்ராக்கா! :)

சாருஸ்ரீராஜ் said...

பகிர்வுக்கு நன்றி சித்ரா.

ஜெய்லானி said...

//10. பணிவும் அடக்கமுமே ( humility) எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும். தலைக்கனம், பெருமை, ஈகோ, பகட்டு எதற்கும் இடம் கொடுக்க கூடாது. எல்லாவற்றிலும் எளிமை வேண்டும்.//

இதை படிச்சதுமே கை காலல்லாம் புல்லரிச்சி போயிடுச்சி :-))

Ram said...

இந்த காலத்துல இப்படி ஒரு கலாச்சாரமா.???

இனியும் இப்படி மாறுவது என்பது முடியாதது.. நல்லவேளை அவர்கள் இந்தியாவில் இல்லை.. இருந்திருந்தால்.??? இப்ப இருந்திருக்கமாட்டாங்க..

ரொம்ப அருமையான பதிவுங்க.. அமெரிக்கா மேல கலாச்சார சீரழிவுக்கான இடம் அப்படி இப்படி கேவலமா பேசுறவங்க எல்லாரும் இத படிங்கப்பா.!!!

Menaga Sathia said...

சூப்பர்ர் பதிவு!! பகிர்வுக்கு மிக்க நன்றி...

GEETHA ACHAL said...

எங்களுடைய பார்க்க வேண்டிய லிஸ்டில்
இந்த அமினிஸ் villageயும் இருக்கின்றது...சென்ற வருடம் போகலாம் என்று பிளன் போட்டோம்...அப்பறம் அதற்கு போகாமல் அக்‌ஷ்தாவிற்காக Hersheyஸ் பார்க் போய்விட்டு வந்தாச்சு...திரும்பவும் ஞாபகம் செய்து விட்டிங்க...இந்த முறை கண்டிப்பாக போக வேண்டும்..

G.M Balasubramaniam said...

lot of information. Do they mix with other group fo people. ? Does the groups population remain same or dwindling.? Are their values in life remain constant.? Thanks a lot chithrs for this post.

ponraj said...

அருமையான பதிவு.
வியக்கதக்க பதிவு.

simply superb!!!

goma said...

எத்தனை நல்ல விஷயங்களை நாம் அறியாமல் இருந்து வருகிறோம் என்பதை உங்கள் பதிவு அழகாக எடுத்துச் சொல்கிறது.
வாழ்த்துக்கள் சித்ரா

Unknown said...

உண்மையிலேயே அருமையான பதிவு, இக்காலத்தில் இப்படி ஒரு மக்களா என ஆச்சரியப்படும் வேலையில், நம் ஊரில கலாச்சாரம் கத்தரிக்காய் என நடக்கும் சமாச்சாரங்களை நினைக்கையில் வேதனையே வருகிறது, ஆனாலும் ஒரு வேளை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இல்லாமல், நமது நாட்டை போன்ற நாடுகளில் இருந்தால் அது போன்ற வாழ்க்கை வாழ முடியுமா?

Chitra said...

////இந்த மக்கள் என்ன மொழியினைப் பேசுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம்?////

இவர்கள் டச் என்ற மொழியின் ஒரு வித கலவையில் (Dutch and German mixed) பேசுகிறார்கள்.

///கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் விவசாயம் செய்து தமக்குள்ளே பரிமாறிக் கொண்டாலும் இதர தேவைகளுக்கான பணத்தினை எப்படிப் பெற்றுக் கொள்வார்கள்? ////

இவர்கள் வளர்க்கும் கோழிகள் (organic) கடைகளில் விற்கிறார்கள். மேலும் இவர்களது தச்சு வேலை பொருட்கள் மற்றும் Quilts எல்லாம் , தங்கள் கடைகளில் விற்கிறார்கள். இந்த கடைகளும் ஊருக்கு ஒதுக்குப் புறமாகவே உள்ளன.

நட்புடன் ஜமால் said...

very much new and interesting infos.

அமெரிக்கா பெயரை சொல்லி வழமை போல் நடப்பது நடந்துகினேதான் இருக்கு ...

முழுமையான உடை ‍‍--- ஹும்ம்ம் ...

Chitra said...

Do they mix with other group fo people.

.....When they meet us, they talk. But since they speak mostly a language mixed with German and Dutch, it is little bit hard to follow their English. They usually live in their own villages. They don't live with the main stream people.

Does the groups population remain same or dwindling?

.... Between 2002 to 2010, the Census found that they have a population growth rate of 10 %

Are their values in life remain constant?

.... 98 % ...yes.

எல் கே said...

உண்மையில் அவர்களை பார்த்து பொறாமையா இருக்கு சித்ரா . இந்த மாதிரி நம்ம ஊர்ல நடக்குமா ? நடக்க "முர்ப்க்குவாதிகள்" விடுவார்களா ?

ஆகுலன் said...

இவர்களை பற்றி முதலில் கேள்வி பாட்டு இருக்குறேன் ஆனால் இவளவு தகவல் தெரியாது ....
நல்ல தொகுப்பு ....
Now I remember the first amendment!!!!!!!!!!!!!

Jayanthy Kumaran said...

very informative post Chitra..really awesome to know abt their culture.
Tasty appetite

Unknown said...

மிகவும் நல்ல தகவல் ..பகிர்வுக்கு நன்றி இங்க ..

arasan said...

உங்க பதிவுகளை வைத்தே
அமெரிக்க நிகழ்வுகளை
அறிந்து கொள்கிறேன் ..
வாழ்த்துக்கள் மேடம்

Sathish said...

அட போங்க அக்கா. முதல்ல நம்ம ஊருக்கு கலாச்சாரம்னா என்னனு சொல்லி தரனும்.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Very nice detailing you have done Chithra.

Very good info.

A lot of people who live in the US don't know this deep.

Great.

குறையொன்றுமில்லை. said...

நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கமுடிந்தது

செல்ல நாய்க்குட்டி மனசு said...

காமெடி கீமெடி பண்ணாமல், செய்திகளை மட்டும் இந்த பதிவில், தொகுத்து தந்து இருக்கிறேன். //
முடியுமா அது ? சதம் போட்டாச்சா?

Sriakila said...

நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டோம் உங்கள் பதிவின் மூலம்..

Vetirmagal said...

Very well written. Congrats.

I recalled the movie "witness". The Amish way of life was portrayed in that movie.

Anonymous said...

அந்த மக்களை பார்த்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

Oklahoma- இந்த இடத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

Unknown said...

அருமையான பதிவு...பதிவிற்க்கு மிக்க நன்றி..மிக அருமை..

வருண் said...

***ஆமீஷ் ( Amish) என்ற ஒரு பிரிவினர் (sect) வாழ்ந்து வருகிறார்கள்.**

இவங்க பத்தி "Harrison Ford's Witness"படம் மூலம்தான் நான் தெரிந்துகொண்டேன். நீங்க கொடுத்திருக்க ஒரு சில ஸ்டில்ஸ் அந்தப்படத்தில் இருந்து எடுத்த மாதிரி இருக்கு :)

***நீங்க எந்த கலாச்சாரத்தை வேண்டுமானாலும் இங்கே பின்பற்றலாம் என்று சொல்ல வந்தேன். ***

கண்சர்வேட்டிவா வாழவும் கலாச்சார சுதந்திரம் வேணும்/கொடுக்கப்படனும் னு பலருக்கு தெரிய மாட்டேங்கிது! :)

karthickeyan said...

அருமையான பதிவு!
பகிர்வுக்கு நன்றி சகோதரி.

சிநேகிதன் அக்பர் said...

தேடிப்பிடித்தால் நம்மூரிலும் எங்காவது மூலையில் உள்ள கிராமங்களில் இது போன்ற எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள் இருப்பார்கள்.

மிக அருமையான தகவல் சகோதரி சித்ரா. உங்களது இடுகைகள் ஒவ்வொன்றும் உங்கள் மனப்பக்குவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

தொடருங்கள்.

ஹேமா said...

இந்தக் காலத்திலும் இப்படியா என்பதுபோல அருமையான விளக்கம் சித்ரா.பாராட்டலாம் உங்களை.
இவர்களைப்போல ஒருபகுதியினர் இங்கும் வாழ்கிறார்கள்.
இன்றுவரை ஜீன்ஸ் அல்லது முழுக்கால்ச்சட்டை பெண்கள் அணிவதேயில்லை !

அரசூரான் said...

நான் இந்த ஆமிஸ் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கலாம் (எட்டாம்ப்புக்கு மேல படிக்க வேண்டாம்ல)...ஹா...ஹா...ஹா.

இந்த ஆமிஸ் குடும்ப பின்னனியை வைத்து ஒரு ”ஆமிஸ் ஃபயர் ப்ளேஸ்” விளம்பரம் வரும் பார்த்து இருக்கீங்களா?

எரிபொருள் சிக்கனம், தச்சில் டச்சு(Dutch Crafters) வேலைப்பாடு என அருமையாக இருக்கும்.

Unknown said...

Ennala nambave mudiyalai.ippadi oru ooru,america vila? ayyo,padangaloda arpudham.thanks for sharing.

தாராபுரத்தான் said...

நல்ல தகவல்கள்.

Chitra said...

////ஆனால் மின்சாரம் உபயோகிக்க கூடாது,பிள்ளைகளை எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க கூடாது, போட்டோ எடுக்க கூடாது இவையெல்லாம் மூட நம்பிக்கையாகவே எனக்கு படுகிறது./////


.... அது அவர்கள் கலாச்சாரம். அதை நாம் குறை கூற கூடாது. மதிக்கத் தானே வேண்டும். நமக்கு உயர்வாகத் தெரியும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி மற்ற நாட்டினரிடம் பேசும் போது, அவர்களுக்கு எத்தனையோ விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவே படலாம். அதற்காக நாம் அவற்றை பின்பற்றாமல் இல்லையே.. மேலும், அவர்கள் வாழ்க்கை முறைக்கு, அவர்களுக்கு basic education பெற்று கொள்ள எட்டாம் வகுப்பு வரைக்கும் - அதுவும் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தான் கற்று கொள்கிறார்கள். அதுவே போதும் என்றும் நினைக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

நவீன மின் உபகரணங்கள் உபயோகிக்காமல் வாழ முடியுமா...ஆச்சர்யமாக இருக்கிறது. அதை கண்டிப்பாகப் பின்பற்றும் அவர்கள் கலாச்சாரமும் போற்றுதலுக்குரியது. மிகுந்த ஆச்சர்யமூட்டும் சமூகம்.

//"அஹிம்சை முறைகளைத்தான் பின் பற்ற வேண்டும்."//

இவர்களது உணவுப் பழக்கங்கள் எப்படி...?

சிவகுமாரன் said...

அமெரிக்காவை கண்டபடி தொட்டதற்கெல்லாம் திட்டிக் கொண்டிருக்கும் நம்ம ஊர் கம்யூனிஸ்ட்கள் இந்த கட்டுரையை படிக்கட்டும்

Chitra said...

What do Amish eat?

http://amishamerica.com/what-do-amish-eat/

தனியன் said...

கழகப் பிரியாவோ / களப் பிரியாவோ என்று ஒன்னு கலாச்சாரம் பற்றி குப்பை கொட்டுமே அது இதையெல்லாம் வாசிக்காதா?
பெண்கள் ஜீன்ஸ் போடுறதும் ,தண்ணி அடிக்கிறதும் , கண்டவனோடு சுத்துரதும்தான் கலாச்சார சுதந்திரம் என்று நினைக்கும் கேவலமான அந்தப்
பிறவிக்கு இந்த லிங்க் அனுப்பி இருக்கேன் மேடம். நன்றி

மாதேவி said...

நல்ல விரிவான தகவல்கள்.
இந்த நூற்றாண்டில் ஆச்சரியம்தான்.

R.Gopi said...

வெயிட் ய மினிட் ஃபார் த்ரீ டேஸ் ப்ளீஸ்...

பதிவ படிச்சுட்டு வந்து கமெண்ட் போடறேன்... மூணு நாளுக்குள்ள முடியுமான்னு தெரியல... பார்ப்போம்..

R.Gopi said...

அட...

நீங்க சொன்ன மாதிரியே நம்மூர் கலாச்சாரத்தை மிஞ்சியவர்களாக இருக்கிறார்களே... ஆமாம்.. நீங்க அம்புட்டு கிராமத்துலயா இருக்கீங்க...

சக்தி கல்வி மையம் said...

பத்து செய்திகளும் மிகமிக அருமை. படிக்க , படிக்க சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது.

raji said...

// பாரத்... பாரதி... said...
நவீன வசதிகள் கலாச்சாரத்தை பாதிக்கும் விஷயம் தான். ஆனால் நேரத்தை மீதப்படுத்தி கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது. //

உண்மையில் அலைபேசியினாலும்,கணிணியினாலும்
தொலைக்காட்சியினாலும் நம் குடும்பத்தில் உள்ளவர்களுடனேயே
கலந்து பழகும் நேரம்தான் குறைந்து விடுகின்றது

raji said...

தெரிந்து கொள்ள வேண்டிய இதுவரை அறியாத
புது தகவல்கள் நிறைந்த பதிவு

வெட்டிப்பேச்சு said...

//அது மட்டும் அல்ல, அந்த பொருட்கள் நம்மை அடிமையாக்கி, நம் குடும்பங்கள் - நம் சந்தோசம் - என்று நினைப்பதை விட்டு விட்டு, என் குடும்பம் - என் சந்தோசம் - என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை கொண்டு சென்று விடக் கூடும். எனது அடுத்த வீட்டாருடன், சகோதரத்துவ குணத்துடன் பழக வைக்க விடாமல், அவர்களையே என் போட்டியாளர்களாக கருத வகை செய்து விடும். //

பிரமித்தேன்.

இவர்கள் ஜெகொவைட்டுகளைப்போலவா..?

Chitra said...

////இவர்கள் ஜெகொவைட்டுகளைப்போலவா..///

you mean Jehovah witness people? இல்லீங்க... இவங்க வேற....

மனம் திறந்து... (மதி) said...

//சி.பி.செந்தில்குமார்:...பதிவு நீளம்னு சிலர் கமெண்ட் ல சொல்லி இருக்காங்க.. ஆனா மயிலுக்கு தோகை நீளம்கறதால அதை வெட்டி விட முடியாது..இந்த பதிவுக்கு இந்த விளக்கம் அவசியம் தான்... //

:)))

ராமலக்ஷ்மி said...

அருமையானதொரு பகிர்வு. மிக நன்று சித்ரா.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அற்புதமான பதிவு சித்ரா. ஆச்சர்யமான தகவல்களை அளித்ததற்கு நன்றி.

CS. Mohan Kumar said...

ஆச்சரியமூட்டும் தகவல்கள். அதற்கேற்ற புகை படங்களுடன் வெளியிட்டுள்ளீர்கள் வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

இலவச டிவிக்களையெல்லாம் அவங்க வாங்க மாட்டாங்களா?? ஐயோ ஐயோ :-)

vinu said...

sorry paaa konjooondu late aayuduchchuuuuuuuuuuuuu


but fantastic article...........


great workngooow

Thenammai Lakshmanan said...

தமிழ்நாட்டில், அமெரிக்க பெயரை சொல்லிக்கொண்டு நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கலாம்.//// மொத்தத்துல சூப்பர் மொத்து தங்கச்சியோவ்..:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுவராசியமான தகவல்கள்.....! அவர்கள் சொன்ன காரணங்கள் சிந்திக்க வைக்கின்றன....!

சுசி said...

//அமெரிக்காவில் எனது கலாச்சாரத்தை மனப்பூர்வமாக மட்டும் அல்ல, சட்ட பூர்வமாகவும் பின்பற்ற நான் புரிந்து வைத்து இருக்கிறேன்//

எனக்கும் இதே புரிந்துணர்வு இருக்கு சித்ரா.

அருமையான பகிர்வு. அந்த மக்களுக்கு ஒரு வணக்கம்.

இராஜராஜேஸ்வரி said...

நிறைய தகவல்களை சிறப்பாக தொகுத்து சொல்லியிருக்கீங்க
நிறைய விஷயங்கள் அறியச்செய்து
புகைப்படஙகளும் சிறப்பாக இருந்தன.நன்றி.

க.பாலாசி said...

என்னங்க இது இந்த காலமான காலத்திலயும் இப்படிபட்ட கட்டுக்கோப்பான, அதே சமயத்தில் அந்த காலத்திய கலாச்சார பழக்கவழக்கங்களையே பின்பற்றும் மக்களா!!! ஆச்சர்யமா இருக்கு... நல்ல பகிர்வுங்க..

FARHAN said...

இந்த காலத்தில் இப்பிடி பட்ட மக்களா நிச்சயம் இவர்களை நேரில் சந்திக்க வேண்டும்

R. Gopi said...

எல்லோரும் வெளிநாட்டிற்குச் சென்றால் சொந்த ஊரைப் பற்றியே எழுதுவார்கள். நீங்கள் மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசமாக வாழும் ஊரைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள்.

தொடரட்டும் உங்கள் பணி.

ரோஸ்விக் said...

புதிய தகவல். நன்றி சித்ரா.

இவங்க வாழ்கைமுறையும் ஒருவிதத்துல நல்லாத்தான் இருக்குது. :-)

Butter_cutter said...

அருமைஅருமைஅருமைஅருமை

Anonymous said...

கலாச்சார பதிவிட்டு பதிவுலகின் கலாச்சாரத்தை காப்பாற்றி விட்டீர்கள்.

சென்னை பித்தன் said...

இந்தக் காலத்திலும்,அதுவும் அமெரிக்காவில்,இப்படியொரு பிரிவினரா?வியக்க வைத்த பதிவு.

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் அருமை சித்ரா....இப்படியும் வாழ முடியும்.....இப்படித்தான் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது...பகிர்வுக்கு நன்றி...

kathir said...

மிக நல்லதொரு பகிர்வுங்க சித்ரா!

நன்றி

ராஜவம்சம் said...

எந்த ஒரு கொள்கையோ கலாச்சாரமோ முழு மனதோடு ஏற்றுக்கொண்டாள் பின்பற்றுவது மிக மிக சுலபம்

வாழ்த்துக்கள் மிக அருமையானப்பதிவு.

ஸ்ரீராம். said...

http://amishamerica.com/what-do-amish-eat/

அகிம்சை என்று சொல்லப் பட்டதில் புலால் உண்ண மாட்டார்களோ என்று நினைத்தேன். லிங்க் தந்ததற்கு நன்றி. படித்தேன்.

பாலா said...

அரிய தகவல்கள்...
மின்சாரமே இல்லாமல்.... யப்பா...

இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்று இவர்கள் புரிய வைக்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி அக்கா...

Unknown said...

ஆச்சரியமான தகவல்கள்.. இவ்வளவு ரூல்ஸோட வாழ்றது ரொம்பவே கஷ்டங்க.. அதுலயும்.. கரெண்ட் இல்லாம.. ரொம்பக் கஷ்டம்..

Thenu said...

படித்த பிறகு மீள முடியா ஓர் உணர்வுக்குள் தள்ளப்பட்டிருக்கிறேன், மீண்டிட மிகவும் முயற்சித்து இந்த பின்னூட்டத்தினைப் பதிவு செய்கிறேன்.. நிச்சயமாக பகிரப்பட வேண்டிய ஒன்றுதான், பகிர்ந்த உங்களுக்கு மனமுவந்த நன்றிகள்..

எப்படியும் வாழலாம் என்று இருப்போருக்கு மத்தியில் இப்படியும் வாழ முடியும் என்று காட்டியிருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றி இன்னும் அதிகமாக படிக்க ஆசை இருக்கிறது..
வாழ்த்துக்கள் Ma'am இப்படி ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு..

பொன் மாலை பொழுது said...

Sorry Chitra I am too late.
முதல் தடவையாக உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். நீங்கள் பகிர்ந்த செய்திகள் நிறைய யோசிக்க வைத்து, இன்றும் இதுபோல ஒரு சமூகம் அதுவும் உலக வல்லரசான ,பணக்கார நாடான அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள் என்று அறிந்து வியப்பு. நீண்டகாலமாகே உங்களின் பின்னூடங்களை நானும் படித்து வருவேன். ஏனோ இன்றுதான் தங்களின் பிளாக் பக்கம் வரும் நிகழ்வு. நிறைய சொல்ல நினைக்கிறன்,வேண்டாம் நிறைய நாட்கள் இருக்கின்றன . உங்களின் "மனிதம் " எனக்கு பிடித்துப்போனது. :))

KParthasarathi said...

கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமா?நாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது.நாம் எல்லோரும் இந்த மாதிரி இருந்தால் சித்ரா வுடன் இப்படி எழுதி பேச முடியுமா

வை.கோபாலகிருஷ்ணன் said...

அமீஷ் மக்கள் குறித்து எனக்கு தங்கள் பதிவு படிக்கும் முன்பு எதுவுமே தெரியாது. ஆனாலும் தங்கள் பதிவு படித்து முடித்ததும், ஒரு பத்து தலைமுறைக்கு முன்பு நம் முன்னோர்களும் இப்படித்தான் எளிய வாழ்க்கை வாழ்ந்திருப்பர்களோ என்ற ஒரு நிறைவு ஏற்பட்டது.

அமெரிக்காவிலும் குதிரை வண்டி உண்டு என்பது போன்ற அருமையான தகவல் கொடுக்கும் உங்கள் வலைப்பூவினுள், பின்தொடரும் வண்டாக வந்து அமர்ந்து விட்டேன் இன்று. (as follower).

இனி உங்கள் படைப்புகள் யாவும் தேனாக வந்து சேருமே, தானாக என் டேஷ் போர்ட்டில் .. ஹைய்யா .. இனிமேல் ஜாலிதான்.

Unknown said...

///இலவச டிவிக்களையெல்லாம் அவங்க வாங்க மாட்டாங்களா?? ஐயோ ஐயோ :-)//

ha ha ha ha

Chitra said...

////கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமா?நாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது////


......அவங்க கலாச்சாரம் சரியா தவறா என்று நான் சொல்லலைங்க.... நவீன உலகில், இன்னும் தங்கள் கலாச்சாரத்தை விடாப்படியாக காப்பற்றி கடை பிடித்து வரும் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Malar Gandhi said...

Thats an indeed well-written post. Me too living in a country side...in fact I buy vegetables from nearby Amish place:) I enjoy more freedom and individuality in America than my homeland to be a radical thinker and practice my way of life!

கிரி said...

//KParthasarathi said...
கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமா?நாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது.நாம் எல்லோரும் இந்த மாதிரி இருந்தால் சித்ரா வுடன் இப்படி எழுதி பேச முடியு//

நமக்கு அவ்வாறு தோன்றலாம் ஆனால் அவர்களுக்கு இது தான் பிடித்து இருக்கிறது என்கிற போது அது பற்றி நாம் விமர்சிக்க முடியாது. இவர்களால் யாருக்கும் தொல்லை இல்லாத போது அதனால் என்ன பிரச்சனை?

அவர்கள் அவர்களுக்குள் சந்தோசமாக இருக்கிறார்கள் அவ்வாறு இருக்க பிடிக்காதவர்கள் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் போடுவதில்லை..வெளியே செல்ல அனுமதிக்கிறார்கள் ஆனால் அவர்கள் கலாச்சாரத்தை இங்கே இருந்து கெடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதில் ஒன்றும் தவறு இல்லையே..

நமக்கு அவர்கள் கற்காலமாக தோன்றுவது போல அவர்களுக்கு நாம் நாகரீக கோமாளியாக தெரியலாம் :-) ஒவ்வொருவரின் பார்வை தான்..

சித்ரா ரொம்ப நன்றாக இருந்தது.. இவர்கள் இதைபோல இன்னும் எத்தனை நாள் தொடர முடியும் என்று தெரியவில்லை. இந்தக்காலத்தில் அதுவும் அமெரிக்காவில் இதைபோல இருப்பது மிக மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

மற்றவர்களுக்கு தொல்லை இல்லாமல் இருந்தால் சரி! :-) இதைப்போல விசயங்களை நீங்கள் தருவது புதிய விசயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.

tamilbirdszz said...

நல்லா இருக்கு அக்கா, வாழ்த்துக்கள் அமெரிக்க மக்களின் வாழ்க்கையை ஒரு பதிவாக எழுதியமைக்கு ,
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_13.html
நேரம் இருந்தா கெளதம் பீட்டர் மேனனின் வண்டவாளங்களையும் படித்து பாருங்கள்;

ரிஷபன் said...

ஹேட்ஸ் ஆஃப் டூ ஆமிஷ்!
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்..

Prabu Krishna said...

பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க போங்க. உம் கொடுத்து வச்சவங்க அவங்க ஊர்க்காரங்க.....

மைதீன் said...

ஆச்சர்யம் தாங்கவில்லை. இப்படியொரு மக்களைப் பற்றி இப்பொழுதுதான் படிக்கிறேன். பதிவிட்டதற்கு நன்றி. 2, 50, 000 மக்கள் இப்படியொரு வாழ்க்கை முறை பிரமிப்பை தருகிறது. மின்சாரம் இல்லாமல் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.

நானே அமாவாசைக்கும், ஆடிக்கும்தான் பதிவு எழுதுகிறேன். அதையும் நீங்கள் கண்டுக்காமல் இருந்தால் எப்படி?
http://tmaideen.blogspot.com/2011/03/c.html

மைதீன் said...

உங்கள் பதிவை விட கமென்ட் படிக்கத்தான் அதிக நேரம் செலவாகிறது. அதும் நான்கு நாட்கள் ஆகிவிட்டால் கடைசியில்தான் இடம் கிடைக்கிறது.

Gayathri Kumar said...

Very interesting..

Anisha Yunus said...

amish பற்றி நிறைய கேட்டும், படித்தும் இருக்கிறேன் என்றாலும், உங்கள் பதிவு மிக மிக சிறப்பாய் இருந்தது. பகிர்னதமைக்கு நன்றியும், எழுத்து நடைக்கு வாழ்த்துக்களும்.

//அமெரிக்க constituition சட்ட விதிகளில் முதலாம் விதியாகவே இருப்பது, ஒவ்வொரு அமெரிக்க வாழ் மனிதரும், தங்கள் தங்கள் விருப்பப்படி தெய்வநம்பிக்கை மற்றும் கலாச்சார கோட்பாடுகளை பின்பற்ற சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே.//

ஹெ ஹெ, அதுல இப்பல்லாம் எக்செம்ப்ஷன்சும் பண்ணறாங்களே... ஹெ ஹெ :(

செந்தில்குமார் said...

சரியான பதிவு சித்ரா.....

வழக்கமான நாகைச்சுவையை மீறி நாகரீகசுவையை தாந்து தடுமாறவச்சிட்டிங்க...

இப்படி இன்னும் கலாச்சாரத்தை கழங்கமில்லாம் எத்தனை பேர் இந்த விஞ்ஞான யுகத்தில் கடைப்பிடிக்கிரார்கள்

Unknown said...

உங்களுடைய இந்த ஆக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.ரொம்ப நன்றி.

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம்.அன்புக்குழந்தையே.மிகநீண்ட
நாட்களாக தொடர்பில்லையே.கூட்டுக்குடும்பங்களின் மகிழ்ச்சிபற்றி இந்தக்காலத்திலும்,[அதுவும் அமெரிக்காவில்] தெரிந்து பின்பற்றி வாழ்கிறார்கள் என்பதுகுறித்து
மிக்கமகிழ்ச்சியாக இருக்கிறது.நாங்கள் உடன்பிறந்தோர் எழுவர்.எங்கள் மாமா மக்கள் ஒன்பதுபேர்எங்கள்பாட்டி
வீடுக்குச்சென்றால் எல்லோரும் ஒற்றுமையாக வேலைபார்ப்போம்.பெரியவர்களுக்கு சமயல்வேலையில் உதவியாக அம்மியில் அரைப்பது,ஆட்டுக்கல்லில் அரைப்பது,தண்ணீர் இறைப்பது,மற்றும், துணிதுவைப்பது
இன்னபிற வேலைகளையெல்லாம்
ஆளுக்கு ஒன்றாகப்பிரித்துக்கொண்டு
சலிப்பில்லாமல்,உற்சாகமாகச்செய்வோம்.அதுஒரு பொற்காலம் மதிரி.இப்போதுஉள்ள குழந்தைகளெல்லாம் ஆமிஷ் மக்கள் சொல்வதுபோல மின்சாதனங்களால்
வேற்றுமனிதர்கள்போலத்தான் ஆகிவிட்டார்கள்.நாம் அவர்களுக்கு நமது கலாச்சாரம் குடும்பஒற்றுமை இவற்றை சிறுவயதுமுதலே கற்பிக்கவேண்டும்.இது மிக மிக முக்கியம்.அமெரிக்காபற்றிய இதுமாதிரி நல்லசெய்திகளை மீண்டும் மீண்டும் சேகரித்து வெளியிடு கண்ணே.நல்லது.

S.Bennet Sajit Singh said...

romba arumaiyana article

Murugeswari Rajavel said...

அருமையான பதிவு.கலாச்சாரத்தைப் பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.
இதைப் படிக்கும்போது இந்தியாவில் கலாச்சாரத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள மட்டும் செய்கிறோம் என்றே தோன்றுகிறது.

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

சன் டி.வி பாணியில், வரலாற்று சிறப்பு மிக்க பதிவு