தம்பட்டம் தாயம்மாவும் நானும் ரொம்ப நாள் கழித்து சந்தித்து கொண்டோம். சென்ற வாரம் நடந்த செமினார் பற்றி அவளிடம் கூறிவிட்டு, அதை பற்றி தான் பதிவு எழுதப் போகிறேன் என்று சொல்லி கொண்டு இருந்த பொழுது, அங்கே பதிவுலக தோழி, ஆசியா ஓமர் வந்து சேர்ந்தாங்க.....
ஆசியா: சித்ரா, எப்படி இருக்கீங்க? உங்களை, நான் ஒரு தொடர்பதிவுக்கு வெத்திலை பாக்கு வச்சு அழைத்து இருக்கிறேன்.
http://asiyaomar.blogspot.com/2011/03/blog-post_17.html
சித்ரா: தாயம்மா, பப்ளிக் பிளேஸ். ...... சும்மா இரு!
(அந்த படத்தில், மேலே டேபிள்ல கம்ப்யூட்டர்கள் ரெஸ்ட் எடுக்குது... பெண்கள், தரையில் உட்கார்ந்து....கஷ்டப்பட்டு எழுதுறாங்களே....)
தம்பட்டம் தாயம்மா: அடியே.... உன்னை பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுத சொல்றாங்க டோய் ....
சித்ரா: இப்போதானே லீவு முடிஞ்சுது..... அதற்குள்ள தொடர்பதிவா? என்ன டாபிக்?
சித்ரா: பெண் எழுத்து???? புதுசா இருக்கே.... நான் சின்ன வயசுல தமிழ் இலக்கண கிளாஸ்ல பாதி தூங்கியும் தூங்காமலும் டீச்சர் சொல்றதை கேட்டதுதான் ஞாபகத்துக்கு வருது. "அவன் - ஆண் பால்; அவள் - பெண் பால்" இதை பத்தி நான் என்ன எழுதுறது?
ஆசியா: அய்யோ சித்ரா...... அது பத்தி இல்லை.... பெண் எழுத்து பத்தி.
சித்ரா: Kindergarten/UKG கிளாஸ்ல பசங்களும் பொண்ணுங்களும் ஒண்ணா படிச்சோம். அப்போ பசங்களும், "அ" என்ற தமிழ் முதல் எழுத்தை "அ" என்று தான் சொன்னாங்க.... பொண்ணுங்க, நாங்களும் - "அ" என்ற தமிழ் முதல் எழுத்தை "அ" என்று தான் சொன்னோம். பொண்ணுக்கு என்று தனியா தமிழ் எழுத்து என்று எதையும் சொல்லி கொடுத்த மாதிரி நினைவு இல்லையே.... ஒரு வேளை, அன்னைக்குத் தூங்கிட்டேனோ?
தமிழில், உயிர் எழுத்து - மெய் எழுத்து - உயிர்மெய் எழுத்து தானே உண்டு. பெண் எழுத்து என்று இருக்கா என்ன?
தம்பட்டம் தாயம்மா: ஏ புள்ள சித்ரா...... தலைப்பை பார்த்தா விவகாரமான .....சாரி...... விவரமான மேட்டர் ஆகத் தெரியுது. பாத்து பதில் சொல்லு...... உன் புத்திசாலித்தனத்துக்கு வந்த சோதனையோ, இல்லை, உன் அறியாமைக்கு வந்த வேதனையோ? தெரியல. ... சொல்றதை சொல்லிப்புட்டேன், ஆமா!
தமிழில், உயிர் எழுத்து - மெய் எழுத்து - உயிர்மெய் எழுத்து தானே உண்டு. பெண் எழுத்து என்று இருக்கா என்ன?
தம்பட்டம் தாயம்மா: ஏ புள்ள சித்ரா...... தலைப்பை பார்த்தா விவகாரமான .....சாரி...... விவரமான மேட்டர் ஆகத் தெரியுது. பாத்து பதில் சொல்லு...... உன் புத்திசாலித்தனத்துக்கு வந்த சோதனையோ, இல்லை, உன் அறியாமைக்கு வந்த வேதனையோ? தெரியல. ... சொல்றதை சொல்லிப்புட்டேன், ஆமா!
சித்ரா: தாயம்மா, பப்ளிக் பிளேஸ். ...... சும்மா இரு!
ஆசியா: சித்ரா, நீங்க எழுத்து உலகில் பெண்கள் பங்கை பற்றி சொல்லணும்.
(அந்த படத்தில், மேலே டேபிள்ல கம்ப்யூட்டர்கள் ரெஸ்ட் எடுக்குது... பெண்கள், தரையில் உட்கார்ந்து....கஷ்டப்பட்டு எழுதுறாங்களே....)
தம்பட்டம் தாயம்மா: அடியே.... உன்னை பெண் எழுத்தாளர்கள் பற்றி எழுத சொல்றாங்க டோய் ....
ஆசியா: நீங்க ரெண்டு பேரும் என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்களா? நான் எவ்வளவு சீரியஸ் ஆக பெண்கள் எழுத்துக்களில் இருக்கும் "கடமை...கண்ணியம்.... கட்டுப்பாட்டை" பற்றி
எழுதி இருக்கேன். அதை பற்றி மேலும் உங்கள் கருத்துக்களை சொல்ல சொல்லி தான் இந்த தொடர் பதிவுக்கு அழைப்பு....
சித்ரா: நான் தமிழ் ப்ளாக் மட்டும் அல்ல, சில ஆங்கில பதிவுகள் - ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் இருந்து எழுதுவதையும் வாசித்து இருக்கிறேன். அவங்க சொல்ற கருத்துக்களை மட்டும் தான் பார்ப்பேனே தவிர, அவங்க ஆணா, பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கல. அவங்களும், அந்த மாதிரி ஒரு முத்திரைகுள்ள மாட்டிக்காம சுதந்திரமாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.... அதனால், "பெண் எழுத்து " என்று பொதுவாக சொல்வது அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன்.
தம்பட்டம் தாயம்மா: அப்போ, இந்த முட்டுக்கட்டை இருக்கிறது இந்திய பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும் என்று நினைக்கிறியா?
சித்ரா: தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட்ட மற்ற இந்திய மொழிகளின் எழுத்துக்களும் ரஷ்யன், mandarin சைனீஸ், அரபிக் உட்பட்ட மற்ற உலக மொழி எழுத்துக்களும் எனக்கு ஒண்ணுதான். அவங்க என்னதான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும், எல்லாமே அச்சுல வச்சு பிழிஞ்ச இடியாப்பம், முறுக்கு மாதிரி தான் அழகா தெரியுதே தவிர, என்ன சொல்ல வராங்க என்று எனக்கு ஒண்ணும் புரியல. இந்தியாவில் மத்த பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக தமிழ் பெண்களுக்கு இல்லை என்று சொல்வேன்.
ஆசியா: எதை வச்சு சொல்றீங்க?

தம்பட்டம் தாயம்மா: எனக்கு புரியுதே.
ஆண் எழுத்தாளர்கள், தங்கள் கருத்துக்களுக்கோ, கருவுக்கோ (topics) , எழுத்துக்கோ எந்த வித வரைமுறையும் இங்கே கிடையாது.
ஆனால், ஒரு பொண்ணு அடாவடியா எழுதினா, "சொர்ணா அக்கா"னு முத்திரை குத்துவாங்க......
கொஞ்சம் "அப்படி இப்படி" எழுதினால், "லோலாயி, எழுதிற தினுசை பாரு"ன்னு சொல்வாங்க.......
கொஞ்சம் "யூத்தா" எழுதினா, "அக்காவுக்கு, இருக்கிற நினைப்பை பாரு!" என்று கேலி பண்ணுவாங்க....
கொஞ்சம் காரசாரமா எழுதினால், "புரட்சி பொண்ணு" என்று அக்மார்க் முத்திரை கேட்காமலே வரும்.
மத்த கலாச்சாரத்தை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி எழுதினால், "புதுமை பொண்ணு" என்று பேரு வரும்.
தமிழ் கலாச்சார கட்டுப்பாட்டை மீறி எழுதினால், "அகங்கார அலட்டி....Feminist...." என்று திட்டு வரும்.
எதிர் கருத்துக்களை தெளிவா எடுத்து வச்சா, "அடங்காப் பிடாரி...... பொட்டச்சிக்கு இருக்கிற திமிரை பாரு!" என்ற வம்பு வரும்.

இவ்வளவு ஏன்? முதல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறது, இன்னொரு பொண்ணாகவே கூட இருக்கலாம். இப்படி ஒரு இமேஜ்குள்ள மாட்டிக்காமல், சுதந்திரமாக எதை பத்தியும் எழுத இங்கே முடியாதே.
சித்ரா: தாயம்மா, வழக்கம் போல ......குட்டையை தெளிவா குழப்பிட்டா.... எனக்கு எப்போவுமே ஒரு சந்தேகம் உண்டு.... Science fiction மற்றும் Harry Potter மாதிரி தீம்ல எல்லாம் எதனால் தமிழ் பெண் எழுத்தாளர்கள் நிறைய எழுதுறது இல்லை .....
ஆசியா: சொன்னாப்புல...... காதல், சமையல்/மருத்துவ/குடும்ப நல குறிப்பு, பயணம், ஆன்மிகம், சமூதாய நலம், அனுபவம்/ஆதங்கம் போன்றவையே கருவாக கொண்ட கவிதைகள், கட்டுரை, சிறுகதை என்ற குறுகிய வட்டத்திலேயே பெரும்பாலும் தங்கி விடுகிறோம்.
சித்ரா: சேலை கட்டினாலும் சரி, சல்வார் போட்டாலும் சரி .... ஆண் பிள்ளை கையில் இருக்கும் செல் போன் ஆயுதத்திற்கு ஒதுங்கி, "கவனமாக" இருக்க சொல்லி, பெண்களுக்கு மட்டும் தான் எச்சரிக்கை வருது. அதற்காக பொது இடங்களில், எல்லா ஆண்களையும் விட்டு விலகியா ஓட முடியும்?
அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, "ஆண்களே, அப்படியெல்லாம் தொல்லைகள்/துன்பங்கள்/மிரட்டல்கள் பெண்களுக்கு தராமல் டீசன்ட் ஆக நடந்து கொள்ளுங்கள்" என்று பேச்சு வருதா?
எது நடந்தாலும், பொண்ணுங்க ஜாக்கிரதையாக இல்லாததால் தான் நடந்துச்சுன்னு ஒரு பார்வை. இப்படி ஒரு சமூதாய கண்ணோட்டம் இருக்கும் போது, அதே தான் எழுத்துலகுக்கும் வருதுன்னு நினைக்கிறேன்.

தம்பட்டம் தாயம்மா: ஆசியா, உன்னை பெண் எழுத்து பற்றி தொடர் பதிவு எழுத சொன்னால், நீ என்ன தமிழ் பொண்ணு தலை எழுத்து பத்தி பேசிக் கிட்டு இருக்க?"
சித்ரா, ஆசியா: அவ்வ்வ்வ்வ்.......!!!
படங்கள்: கூகிள் அக்காவுக்கு நன்றி.
135 comments:
நல்ல ஆளைப் புடிச்சாங்க தமிழ்பெண் எழுத்தைப் பத்தி எழுத.....
அ பையனுக்கு ஆ பெண்ணுக்குன்னு கிடையாதுன்னு சொன்ன உடனே எஸ்கேப் ஆகியிருக்க வேணாமா........
//Science fiction மற்றும் Harry Potter மாதிரி தீம்ல எல்லாம் எதனால் தமிழ் பெண் எழுத்தாளர்கள் நிறைய எழுதுறது இல்லை .....
//
அதானே!
பகிர்வுக்கு நன்றி சகோ இதுல நெறைய உள்குத்து இருக்கும் போல ஹிஹி!
ஃஃஃஃநான் தமிழ் ப்ளாக் மட்டும் அல்ல, சில ஆங்கில பதிவுகள் - ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் இருந்து எழுதுவதையும் வாசித்து இருக்கிறேன்.ஃஃஃஃ
அக்கா அவங்களைக் கூட பொல்லோவ் பண்ணுறிங்களா ? நீங்க ஒரு அதிசயப் பெண்மணி தான்.. ஹ..ஹ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
ஆண் எழுத்தாளர்கள், தங்கள் கருத்துக்களுக்கோ, கருவுக்கோ (topics) , எழுத்துக்கோ எந்த வித வரைமுறையும் இங்கே கிடையாது.
ஆனால், ஒரு பொண்ணு ......
இம் உண்மைதான் தோழி... சிலரால் சில நேரங்களில் இது நடக்கத்தான் செய்கிறது...வரைமுறைக்குள் வாழவே வளர்க்கப் பட்டோமோ?...தெரியவில்லை இருப்பினும் உங்கள் பெண் எழுத்தில் நான் அனுபவத்தையும் தெளிவான சிந்தனையையும் பார்க்கின்றேன்...
இவ்வளவு ஏன்? முதல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறது, இன்னொரு பொண்ணாகவே கூட இருக்கலாம். இப்படி ஒரு இமேஜ்குள்ள மாட்டிக்காமல், சுதந்திரமாக எதை பத்தியும் எழுத இங்கே முடியாதே.
நானும் இதை வழிமொழிகின்றேன்....
. அவங்க சொல்ற கருத்துக்களை மட்டும் தான் பார்ப்பேனே தவிர, அவங்க ஆணா, பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கல. //
Impressive.
காதல், சமையல்/மருத்துவ/குடும்ப நல குறிப்பு, பயணம், ஆன்மிகம், சமூதாய நலம், அனுபவம்/ஆதங்கம் போன்றவையே கருவாக கொண்ட கவிதைகள், கட்டுரை, சிறுகதை என்ற குறுகிய வட்டத்திலேயே பெரும்பாலும் தங்கி விடுகிறோம்.
உண்மை தான் தோழி
சொல்றவங்க என்ன பண்ணினாலும் ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.. பொதுவா இந்திய பெண்களின் பலவீனமே விமர்சனங்களை கண்டு அஞ்சுவது! அது எப்படிப்பட்ட விமர்சனமாகவே இருக்கட்டும்! அதனால்தான் இதுபோல தோன்றுகிறது.. இந்த பதிவைபோல் சொல்லவந்ததை தெளிவாக சொன்னால் யாருக்கு பயப்படவேண்டும்? ஒருவேளை இதுதான் ஆரம்பமோ?
பதிவு அருமை தோழி...வாழ்த்துக்கள்... பெண் எழுத்து தொடர் பதிவை உங்கள் எழுத்தின் மூலம் எதிர்பார்கின்றேன்..
///பொதுவா இந்திய பெண்களின் பலவீனமே விமர்சனங்களை கண்டு அஞ்சுவது! ////
......உண்மை..... சமூதாய விமர்சனங்களுக்கு பயந்தோ ...அடங்கியோத்தானே பலரும் ஒதுங்கி விடுகிறார்கள். என்னால் இயன்ற அளவுக்கு, கடவுளின் துணையுடன், தனித்து இருக்க முயல்கிறேன்.
விக்கி உலகம் said...
பகிர்வுக்கு நன்றி சகோ இதுல நெறைய உள்குத்து இருக்கும் போல ஹிஹி!
.....எனக்குத் தெரிந்து இல்லைங்க.... உங்கள் கருத்துக்கு நன்றி.
ரேவா said...
பதிவு அருமை தோழி...வாழ்த்துக்கள்... பெண் எழுத்து தொடர் பதிவை உங்கள் எழுத்தின் மூலம் எதிர்பார்கின்றேன்..
.....ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கு நன்றி.
ரொம்ப சுவரஸ்ஸியமாக எழுதி இருக்கின்றிங்க..
கலக்கல் பதிவு..அதிலும் ஒவ்வொரும் பெண்ணுக்கும் பேர் வைத்து எழுதி இருப்பது அருமை...சித்ரா அக்கா..வாழ்த்துகள்..
லீவு எல்லாம் எப்படி போச்சு...எங்கயாவது vacation போனிங்களா...
வித்தியாசமான நல்ல பதிவு தோழி...
pls visit my www.kalyanje.blogspot.com
"சேலை கட்டினாலும் சரி, சல்வார் போட்டாலும் சரி .... ஆண் பிள்ளை கையில் இருக்கும் செல் போன் ஆயுதத்திற்கு ஒதுங்கி, "கவனமாக" இருக்க சொல்லி, பெண்களுக்கு மட்டும் தான் எச்சரிக்கை வருது. அதற்காக பொது இடங்களில், எல்லா ஆண்களையும் விட்டு விலகியா ஓட முடியும்?
அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, "ஆண்களே, அப்படியெல்லாம் தொல்லைகள்/துன்பங்கள்/மிரட்டல்கள் பெண்களுக்கு தராமல் டீசன்ட் ஆக நடந்து கொள்ளுங்கள்" என்று பேச்சு வருதா?
எது நடந்தாலும், பொண்ணுங்க ஜாக்கிரதையாக இல்லாததால் தான் நடந்துச்சுன்னு ஒரு பார்வை. இப்படி ஒரு சமூதாய கண்ணோட்டம் இருக்கும் போது, அதே தான் எழுத்துலகுக்கும் வருதுன்னு நினைக்கிறேன்."
true
நானும் இதை வழிமொழிகின்றேன்.
ஆக அக்கா தெளிவா குழப்புறது எப்புடி அப்படின்னு பிளான் பண்ணி கரக்டா அதில் வெற்றிக் கண்ட பெண் சிங்கம் அப்படின்னு நிருபிச்சாச்சு. போய் தூங்குங்க...போங்க.
இந்த கட்டுரை மூலமா சொல்ல வேண்டியத சூசகமாவும், அதே சமயம் உங்க புலனாய்வுத் திறமையையும் சரியா வெளிப்படுத்தி இருக்கீங்க. நல்லது.
நீங்க சொன்ன மாதிரி எழுத்தில் ஆண், பெண் என பேதம் பார்க்க வேண்டிய நியாயமோ, அவசியமோ இல்லை. ஒரு எழுத்தாளராக அல்லது வாசகராக தான் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை சற்றும் பிசகாமல் தெளிவா சொல்லத் தெரிந்தால் போதும்.
கருத்துகள் எதிர் கருத்துகள் என்பதெல்லாம் அவரவர் அறிவைப் பொறுத்து மாறக்கூடிய கருதுகோள்கள்.
உண்மைகளை எந்த உலகமும் ஏற்க மறுக்கிறது. அதற்காக உண்மைகளை எழுதக் கூடாது என்பது சரியல்ல. விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நம் சிந்தனையும் செயல்களும் அமைய, எழுத்தும் அர்த்தப்படும். அழகாகும்.
என்னக்கா... என் அக்கா சரிதானே..?!
நன்றி.
// உன்னை பெண் எழுத்து பற்றி தொடர் பதிவு எழுத சொன்னால், நீ என்ன தமிழ் பொண்ணு தலை எழுத்து பத்தி பேசிக் கிட்டு இருக்க?"//
கரெக்டாக சொன்னீங்க,சித்ரா.
சொல்ல வந்ததை சொல்லாமல் சொல்லிட்டீங்க.
தொடர் பதிவை எழுதியமைக்கு மிக்க மகிழ்ச்சி.
என்ன சொல்லுங்க தாயம்மாக்கிருக்கிற தைரியம் சித்ராக்கு இல்லையே :)) ..
முத்துலெட்சுமி/muthuletchumi said...
என்ன சொல்லுங்க தாயம்மாக்கிருக்கிற தைரியம் சித்ராக்கு இல்லையே :)) ..
......ஹா,ஹா,ஹா,ஹா.... ஹலோ, பப்ளிக் பிளேஸ். I am your best friend, yaar!
படிச்சிட்டேன். மறு மொழி எழுத டைம் பத்தலை. மறுபடி வந்து எழுதறேன் :))
*ஒரு பொண்ணு அடாவடியா எழுதினா, "சொர்ணா அக்கா"னு முத்திரை குத்துவாங்க......
கொஞ்சம் "அப்படி இப்படி" எழுதினால், "லோலாயி, எழுதிற தினுசை பாரு"ன்னு சொல்வாங்க.......
கொஞ்சம் "யூத்தா" எழுதினா, "அக்காவுக்கு, இருக்கிற நினைப்பை பாரு!" என்று கேலி பண்ணுவாங்க....
கொஞ்சம் காரசாரமா எழுதினால், "புரட்சி பொண்ணு" என்று அக்மார்க் முத்திரை கேட்காமலே வரும்.
மத்த கலாச்சாரத்தை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி எழுதினால், "புதுமை பொண்ணு" என்று பேரு வரும்.
தமிழ் கலாச்சார கட்டுப்பாட்டை மீறி எழுதினால், "அகங்கார அலட்டி....Feminist...." என்று திட்டு வரும்.
எதிர் கருத்துக்களை தெளிவா எடுத்து வச்சா, "அடங்காப் பிடாரி...... பொட்டச்சிக்கு இருக்கிற திமிரை பாரு!" என்ற வம்பு வரும்.*
Agmark suthamana vaarthai vilayattu.romba aumai.Naama ellam ezhudharadhu,ethanai perukku pidikkum nu correct a solli irukeenga.
என்னாடா தொடர் பதிவு எழுத சொன்னோம் asiya நினைப்பாங்க.....சரி சரி எப்போ தமிழ் பெண் எழுத்து எழுதுவீங்க....
அன்னு said...
படிச்சிட்டேன். மறு மொழி எழுத டைம் பத்தலை. மறுபடி வந்து எழுதறேன் :))////
பாருடா அப்போ இதுக்கு பேரு என்ன....
Really superbbbbbb Chitra. Wok ellam nandraga mudinthatha?
அக்கா திரும்ப கலக்க ஆரம்பிச்சுட்டாங்க.
நல்ல பார்வை சித்ரா.
முத்துலெட்சுமியின் கருத்தை மிகவும் ரசித்தேன்:)!
நான் அவளில்லை (அவனில்லை)... ஸ்டைலில் தம்பட்டம் தாயம்மாண்ணு ஒரு ஸுப்பர் வுமன் character கைவசம் வச்சிருப்பது உபயோகமான ஒண்ணு. அப்பப்ப (அன்னியன் மாதிரி) தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்கலாம்.
தம்பட்டம் தாயம்மா சொல்றதுதாங்க சரி
உண்மை... உண்மை.. உண்மை...
எங்கே போனிங்க?இத்தனை நாளா உங்களைக் கானோம்..
ஒரு சர்ச்சைக்குரிய புனைவு எழுத்தை, கதா பாத்திரம் சொல்வதை போல , ஒரு பெண் எழுத முடியாது.. எழுதினால் அவர் தன் சொந்த அனுபவத்தை எழுவதாக , நம் மக்கள் நினைப்பார்கள்...
இப்படி பட்ட அறியாமை மிகுந்த உலகை பற்றி, யோசிக்க வைத்ததற்கு நன்றி..
தாயம்மா ரெம்ப நல்லா எழுதுறாங்க. அதனாலே இனி தாயம்மாவையே எழுத சொல்லுங்க.
மன்னிக்கவும் தங்களின் மார்ச் 13 ம் தேதி பதிவை இப்போதுதான் பார்த்தேன்.
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
என்னால் உங்களை மாதிரி எழுதி தப்பித்துக் கொள்ளத் தெரியவில்லை. எதிர்மறையான ஆண்களின் கருத்துவேண்டும் என்று என்னிடம் கேட்க, நானும் மிகவும் சீரியஸாக எழுதினேன். ஆனால் டாக்டர் கந்தசாமி எனக்கு நேர் எதிர். தடாலடிதான். ட்ரான்ஸாக்ஷனல் அனாலிஸீஸ் குறித்து எழுதியுள்ளேன்.பாருங்களேன்.
ஆசியா அக்காவுக்கு ரிஸ்க் எடுக்கர்து எல்லாம் ரஸ்க் சாப்பிடரமாதிரி போலருக்கு!! இல்லைன்னா உங்க கிட்ட சிக்கி இருப்பாங்களா??..:))) உள்குத்து சூப்பர் அக்கா!!
லீவு முடிஞ்சு டுயுட்க்கு back... :))
இதைப் போன்ற பிரிவினைகளை பார்க்கும் போது பிரிவினை உண்டாக்கியவர்களின் பயம் தான் தெரிகிறது... படைப்பையின்றி படைத்தவரை (பால்/இனம்/..) தாக்குவது விமர்சிப்பவனின் இயலாமையையே சுட்டிக்காட்டுகிறது...
/
......உண்மை..... சமூதாய விமர்சனங்களுக்கு பயந்தோ ...அடங்கியோத்தானே பலரும் ஒதுங்கி விடுகிறார்கள். என்னால் இயன்ற அளவுக்கு, கடவுளின் துணையுடன், தனித்து இருக்க முயல்கிறேன்.
/
சூப்பரப்பு...
Welcome back...
உண்மை.. உண்மை! :-)
லீவ் முடிந்து வருகைக்கு வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு !
வந்தாச்ச வந்தாச்சா.வாங்க வாங்க..
தாயம்மாவுக்குள் சித்ராவா
சித்ராவுக்குள் தாயம்மாவா
உள்குத்து, வெளிகுத்து, சைடுகுத்து, எனக்கு வாங்கிவிட்டதுபோல் தெரிகிறது. ஆனாலும் அதனுள் உண்மைகள் இருக்கிறது
உங்களுக்கே உரித்தான நடையில் எழுத்து நடையில் அருமையாக எழுதிவிட்டீர்கள். சபாஷ்..
நம்மளையும் எழுத்தச்சொன்னாங்கன்னு எழுதியிருக்கோம்.ஏதோ நம்ம அறிவுக்கு எட்டியவரை.உங்களைபோலவெல்லாம் நமக்கு ம் ஹூம்..
கொஞ்சம் எட்டிப்பாருங்க
http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html
அதிரடி Come back கொடுத்திருக்கும் சித்ரா அக்கா, தம்பட்டம் தாயம்மா இருவருக்குமே சந்தோஷமான Welcome back!!! :)
"பெண் எழுத்து"..... well... ஃபர்ஸ்ட் அந்த "Pen எழுத்து" படம்.... செம தேர்வு!!
எழுத்தைத்தான் பார்ப்பேன் எழுதுவது ஆணா பெண்ணா என்று பார்க்க மாட்டேன் அப்டின்னு ஒரு தடவ சொல்லி நூறு தடவை எதிரொலிக்க வெச்சதுக்கு ஒரு ரஜினி பட ஓபனிங் ஷோ அப்ளாஸ் அக்கா உங்களுக்கு!! சூப்பர்....
உங்களுக்கு இந்தப் பதிவு எழுதினதுக்கு மரியாதையோட ஒரு படையப்பா சல்யூட் அடிக்கச் சொல்லி ஆண்டவன் சொல்லுறான்.. இந்தத் தம்பி செய்யுறான்... :)
பத்து நாள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க அக்கா...ச்சும்மா அதிருதுல்ல!!! :)))
சூப்பர் அதிரடிப் பதிவு... DOT!!!!! :)
// ஒரு முத்திரைகுள்ள மாட்டிக்காம சுதந்திரமாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிட்டு //
இருக்கணும்னு சொல்ற உங்க தைரியம் ரொம்ப பிடிச்சிருக்கு டீச்சர்.
நீங்கள் எழுதியதில் ஒத்துக் கொள்கிறேன்
நல்லா இருக்கு சித்ரா.
உங்கள் ஆதங்கம் கொஞ்சம் அங்கே இங்கே எட்டி பார்த்தாலும், நிதர்சனத்தை ஒத்துக்கொண்டாக வேண்டும்.
//முதல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறது, இன்னொரு பொண்ணாகவே கூட இருக்கலாம். //
மிக சரி சித்ரா.
இத்தனையும் மீறி ஒரு பெண் எழுத்துலகில் வலம் வருவதற்கு காரணம் அவளது தன்னம்பிக்கை, தைரியம் என்பது என் கருத்து.
உங்க பாணியில அழகா சொல்லிடீங்க . :))
//அவங்க என்னதான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும், எல்லாமே அச்சுல வச்சு பிழிஞ்ச இடியாப்பம், முறுக்கு மாதிரி தான் அழகா தெரியுதே தவிர, என்ன சொல்ல வராங்க என்று எனக்கு ஒண்ணும் புரியல//
ஜூப்பரேய் :-)))
என்ன இருந்தாலும் தாயம்மா உங்களவிட தைரியசாலிங்க ;-)
//ஆசியா: சொன்னாப்புல...... காதல், சமையல்/மருத்துவ/குடும்ப நல குறிப்பு, பயணம், ஆன்மிகம், சமூதாய நலம், அனுபவம்/ஆதங்கம் போன்றவையே கருவாக கொண்ட கவிதைகள், கட்டுரை, சிறுகதை என்ற குறுகிய வட்டத்திலேயே பெரும்பாலும் தங்கி விடுகிறோம். //
இது பெரும் குறையென்றாலும் பெண்கள் தங்கள் கருத்தை முன் வைப்பதே பதிவுலகுக்கு அழகு என்பேன்.
மேலும் தற்காப்பு வேண்டியும்,பெண்களின் மனநிலையும் இந்த எல்லைக்குள்ளே செயல்படுகிறது.இதற்கான காரணங்களாக தாயம்மா நீலக்கலரில் சொல்லும் காரணங்கள் மிக முக்கியமானது.
// ஒரு பொண்ணு அடாவடியா எழுதினா, "சொர்ணா அக்கா"னு முத்திரை குத்துவாங்க......
கொஞ்சம் "அப்படி இப்படி" எழுதினால், "லோலாயி, எழுதிற தினுசை பாரு"ன்னு சொல்வாங்க.......
கொஞ்சம் "யூத்தா" எழுதினா, "அக்காவுக்கு, இருக்கிற நினைப்பை பாரு!" என்று கேலி பண்ணுவாங்க....
கொஞ்சம் காரசாரமா எழுதினால், "புரட்சி பொண்ணு" என்று அக்மார்க் முத்திரை கேட்காமலே வரும்.
மத்த கலாச்சாரத்தை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி எழுதினால், "புதுமை பொண்ணு" என்று பேரு வரும்.
தமிழ் கலாச்சார கட்டுப்பாட்டை மீறி எழுதினால், "அகங்கார அலட்டி....Feminist...." என்று திட்டு வரும்.
எதிர் கருத்துக்களை தெளிவா எடுத்து வச்சா, "அடங்காப் பிடாரி...... பொட்டச்சிக்கு இருக்கிற திமிரை பாரு!" என்ற வம்பு வரும்.// ஆஹா..கரெக்டா சொல்லி இருக்கீங்க சித்ரா.
ம்ம்... ஜோக்கா சொல்ற மாதிரியே நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்கா..
நீங்க சொல்றமாதிரி பெண் எழுத்தாளர்களுக்கு அப்படிப் பேர் இருக்கான்னு தெரியல.. ஆனால் அப்படித்தான் நார்மலா பேசுவாங்க.. :-)..
நியாயமான கருத்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி..
அவங்க சொல்ற கருத்துக்களை மட்டும் தான் பார்ப்பேனே தவிர, அவங்க ஆணா, பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கல. அவங்களும், அந்த மாதிரி ஒரு முத்திரைகுள்ள மாட்டிக்காம சுதந்திரமாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.... அதனால், "பெண் எழுத்து " என்று பொதுவாக சொல்வது அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன்.
/////////////////
உண்மை....
கடைசில கூகிளையும் அக்கா ஆக்கிட்டாங்களே இந்த சித்ராக்கா..!! ஹா.ஹா..ஹா...
"பெண் எழுத்து " என்று பொதுவாக சொல்வது அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன்"
வெரிகுட், இதை நான் ரொம்பநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
தங்களின் பெண் எழுத்து தொடர்பான பதிவுகளை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்
கடினமான தலைப்பையும் ஸ்வாரஸ்யப்படுத்தி விடும் உங்கள் எழுத்துக்கள்
பெண் எழுத்தில் தற்போது முதல் இடத்தில இருப்பது அம்மாவின் தேர்தல் அறிக்கை. கிரைண்டர், மிக்சி, பேன், பேஸ்ட், சோப்பு, பல்பொடி, லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இலவசம். பாவம் நீங்க வெளிநாட்ல இருக்கீங்க. வெரி அன்லக்கி.
ரொம்ப அழகாக, ஆணித்தரமாக, இங்குள்ள பெண் எழுத்தாளர்களின் இன்றைய பரிதாப நிலையை, புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்.
உங்களுக்குள் இவ்வளவு விஷயங்கள் அறிவுபூர்வமாக புதைந்து உள்ளனவே என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் உள்ளது.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
பெளர்ணமி நிலவு மீண்டும் அடிக்கடி தோன்றி, இது போன்ற நல்ல வெளிச்சம் தரட்டும். அறியாமை என்ற இருள் அகலட்டும். வாழ்க, வளர்க.
முத்துலெட்சுமி/muthuletchumi said.../ என்ன சொல்லுங்க தாயம்மாக்கிருக்கிற தைரியம் சித்ராக்கு இல்லையே :)) ../
ரிப்பீட்டு!
சபாஷ் சித்ரா.. சரியா சொல்லி இருக்கீங்க..
//"அவங்க சொல்ற கருத்துக்களை மட்டும் தான் பார்ப்பேனே தவிர, அவங்க ஆணா, பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கல. அவங்களும், அந்த மாதிரி ஒரு முத்திரைகுள்ள மாட்டிக்காம சுதந்திரமாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.... அதனால், "பெண் எழுத்து " என்று பொதுவாக சொல்வது அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன்"//
உண்மை. சரியான கருத்து. என்ன செய்யறது..தொடர் பதிவு எழுதணுமே...!!
லீவு முடிஞ்சு வரும் போதே நல்ல விஷயத்தோட வந்திருக்கீங்களே. சொல்லியிருக்கிற எல்லா கருத்துக்களுமே சூப்பர். பேர் வச்சிருக்கறதும் நல்லாயிருக்கு.
//உன் புத்திசாலித்தனத்துக்கு வந்த சோதனையோ, இல்லை, உன் அறியாமைக்கு வந்த வேதனையோ? தெரியல. ... சொல்றதை சொல்லிப்புட்டேன், ஆமா!//
இதுல எதுங்க ???
உங்கள் விடுமுறை பயனுள்ளதாகக் கழிந்திருக்கிறது என்பது இந்த இடுகையிலிருந்து புலப்படுகிறது. :-)
பதிவு வித்தியாசமாகவும் ரசிக்குபடியாகவும்
பிரச்சனைகளின் மென்னியை மிகச் சரியாகப்
பிடித்து உலுக்குவதாகவும் இருக்கிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
.கண்ணோட்டத்தில் இருக்கலாம் ஆண்களிலேயே வித்யாசம் உண்டே.எழுத்து என்பது அவரவரின் மனோபாவத்தையும் அறிவையும் கொண்டது, ஆணா பெண்ணா என்று இல்லை.பெண்கள் எழுத்து,ஆண்கள் எழுத்து என்று பிரிப்பது விசித்ரமாக இருக்கேபெண்கள் வேண்டுமானால் பெண்கள பற்றிய விஷயங்களை அதிகம் எழுதலாம்.ஆண்களுக்கு அது முக்யமாக படாமல் இருக்க கூடும்
உங்கள் வித்தியாசமான மைன்ட் வாய்ஸ் எனக்குப் பிடிச்சிருக்கு!
ஜே.கே.ரவுலிங்கினால் முடியும்னால், நம்ம நாட்டு பெண் பதிவர்களால முடியாதா என்ன?
வெட்டிப் பேச்சாக இல்லாமல், சிந்திக்க வைக்கும் பேச்சாக இருக்கிறது!
திரும்ப வரும்போதே ஆர்ப்பாட்டமாக வருகிறீர்கள்!
இப்பத்தான் களை கட்டுது!
தமிழில் அரசியல் பதிவு எழுதும் ஒரு பதிவர் கூட இல்லை (இருக்கிறார்களா? ). இங்கு உரிமைகள் மறுக்கப்படுவது உண்மைதான்.
நீங்கள் ஆங்கிலத்தில் இது போன்று எழுதும் பெண்களை இங்கு அறிமுகப் படுத்தலாம்.
அத்துடன் நீங்கள் குறிப்பிட்டு உள்ள குறிப்பிட்டு உள்ள வட்டத்தை தாண்டி எழுதும் தமிழ்ப் பெண்களையும் கூட அறிமுகம் செய்யலாம்.
என்னமோ இருக்குது ...
மர்மமாய் இருக்குது ....
கண் பார்வை அற்றவனுக்கு 'கண்ணன்' என்று பேர் வைப்பது போல், அர்த்தமான பேச்சு பேசும்(எழுதும்) சித்ராவுக்கு 'வெட்டி பேச்சு சிதரானு' பேர்
ஆகா, எனக்கு இந்த பெண் எழுத்து பத்தி புரியலை. நல்ல வேளை என்னை யாரும் தொடர அழைக்கவில்லை.ஙே-ன்னு முழித்து இருப்பேன்.நீங்க கலக்கிட்டீங்க சித்ரா..
லேட்டானாலும் வந்துட்டோம்ல்ல...
ஆகா, எனக்கு இந்த பெண் எழுத்து பத்தி புரியலை. நல்ல வேளை என்னை யாரும் தொடர அழைக்கவில்லை.ஙே-ன்னு முழித்து இருப்பேன்.நீங்க கலக்கிட்டீங்க சித்ரா..
கலக்கிடீங்க சித்ரா ...
.தாயம்மாவுக்கு துணிச்சல் ஜாஸ்த்தி
சித்ரா இது வெட்டிப்பேச்சுமாதிரி தோணலை, விவரமான பேச்சாவேதோணுதும்மா.
supeeeerb post .
நன்றாக இருந்தது உங்கள் இப்பகிர்வு!
`பெண் எழுத்து ' என்ற சொல்லாட்சியே தமிழுக்குப் புதிது. நிச்சயமாக சாரமுள்ள செய்தியாகத்தான் இருக்க வேண்டும்.
பெண் எழுத்து என்றால் என்னவென்று உங்கள் பொன்னெழுத்துக்களால் சீக்கிரம் விளக்கி விடுங்களேன்.
தேர்தல் சஸ்பென்ஸ் , கிரிக்கெட் சஸ்பென்சை விட இந்த சஸ்பென்ஸ் பலமாக இருக்கிறது.
இங்கே பதிவை போட்டுட்டுதான் பேஸ்புக்'ல பேசிட்டு இருந்தீங்களா.....அது சரி...
ஓகே படிச்சுட்டு வர்றேன்...
//ஆண் எழுத்தாளர்கள், தங்கள் கருத்துக்களுக்கோ, கருவுக்கோ (topics) , எழுத்துக்கோ எந்த வித வரைமுறையும் இங்கே கிடையாது.
ஆனால், ஒரு பொண்ணு அடாவடியா எழுதினா, "சொர்ணா அக்கா"னு முத்திரை குத்துவாங்க......//
அம்மாடியோ.....
அவ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு ஒன்னுமே புரியலை...
எலேய் யார்லேய் அங்கே அந்த பக்கார்டி குப்பிய கொண்டா....
***ஸாதிகா said...
// ஒரு பொண்ணு அடாவடியா எழுதினா, "சொர்ணா அக்கா"னு முத்திரை குத்துவாங்க......
கொஞ்சம் "அப்படி இப்படி" எழுதினால், "லோலாயி, எழுதிற தினுசை பாரு"ன்னு சொல்வாங்க.......
கொஞ்சம் "யூத்தா" எழுதினா, "அக்காவுக்கு, இருக்கிற நினைப்பை பாரு!" என்று கேலி பண்ணுவாங்க....
கொஞ்சம் காரசாரமா எழுதினால், "புரட்சி பொண்ணு" என்று அக்மார்க் முத்திரை கேட்காமலே வரும்.
மத்த கலாச்சாரத்தை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி எழுதினால், "புதுமை பொண்ணு" என்று பேரு வரும்.
தமிழ் கலாச்சார கட்டுப்பாட்டை மீறி எழுதினால், "அகங்கார அலட்டி....Feminist...." என்று திட்டு வரும்.
எதிர் கருத்துக்களை தெளிவா எடுத்து வச்சா, "அடங்காப் பிடாரி...... பொட்டச்சிக்கு இருக்கிற திமிரை பாரு!" என்ற வம்பு வரும்.//
March 24, 2011 2:30 AM ***
இதுபோல் விமர்சிப்பவர்கள், பட்டம் கொடுப்பவர்கள் எல்லாமே ஆண்கள் இல்லைங்க! மாற்றுக்கருத்துகள் உள்ள பெண்களும்தான்! :)
சித்ரா...கொஞ்ச நாளா இந்தக் கலகலப்பு காணாம போயிருந்திச்சு.வந்திட்டீங்க.
வாழ்த்துகள் !
////இதுபோல் விமர்சிப்பவர்கள், பட்டம் கொடுப்பவர்கள் எல்லாமே ஆண்கள் இல்லைங்க! மாற்றுக்கருத்துகள் உள்ள பெண்களும்தான்! :) ////
.... நானும் குறிப்பிட்டு சொல்லவில்லையே.... ஆண் ...பெண் என்று பிரிவு கிடையாது.
:-)
//இவ்வளவு ஏன்? முதல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறது, இன்னொரு பொண்ணாகவே கூட இருக்கலாம்//
ஒரு வாசகம்'னாலும் திருவாசகம் இது...
//Science fiction மற்றும் Harry Potter மாதிரி தீம்ல எல்லாம் எதனால் தமிழ் பெண் எழுத்தாளர்கள் நிறைய எழுதுறது இல்லை//
நீங்க வேற சித்ரா... காமெடியா எழுதறதே ஆணுக்கு தான் சொந்தம்னு நினைக்கறாங்க... நாம எழுதினா ஒரு மாதிரி பாக்குறாங்க... "இது எப்பவும் இப்படி தானா"ங்கற மாதிரி... இதுல மத்ததெல்லாம் எழுதினா கிழிஞ்சது கிருஷ்ணகிரி தான்...
//எது நடந்தாலும், பொண்ணுங்க ஜாக்கிரதையாக இல்லாததால் தான் நடந்துச்சுன்னு ஒரு பார்வை//
நெத்தியடி நெத்தியடினு கேள்விப்பட்டு இருக்கேன்... இதானா அது...hats off சித்ரா....
//சித்ரா, ஆசியா: அவ்வ்வ்வ்வ்.......!!! //
நானும் அவ்வ்வ்வவ்....
சகோதரி, சும்மா கையில கிடைத்த எழுது கோலால் வாங்கு வாங்கு என்று வாங்கிட்டிங்க.
பெண்ணுக்குப் பெண்ணே எதிரி, சில சமயம்.
என் அக்கா பெண் ஒரு முறை கூறினாள், " சில நேரம் ஆண்களை விட பெண்கள் ரெம்ப 'Male Chauvinist' ஆக இருக்காங்க." சிரிக்க வைத்த அதே நேரம் சிந்திக்கவும் வைத்தது. என்னுடைய அருமைத் தோழி ஒரு முறை எழுதிய காதல் கவிதையை வாசித்து விட்டு, இன்னொரு பெண்ணே அவரை பற்றி அவதூறாகப் பேசினார் ஒரு முறை, அதுவும் பொது வெளியில்.
இப்படித்தான் இருக்கிறது நம் சமூகம் :(((( தம்பட்டம் தாயம்மா போன்ற உண்மை விளம்பிகள்தான், பெண்களையும், பெண்கள் எழுத்தையும் முடக்குபவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்டுத் திருத்த வேண்டும் :)))
நல்லா எழுதி இருக்கிறீங்க. எனக்கு என்ன எழுதுவதுன்னு தெரியாம மண்டை காயுது.
Chithra I think that is a good challenge, please consider writing about it.
Well, I have deepest thought over it too...I am an Anthropologist' I write all sorts of controversial topics to my newspaper...but I don't have even the slightest guts to spill one or few extra thoughts/ideas of mine in the blog to the readers, coz' whatever I say other than food...it backfires:( They do brand women as they mentioned in ur article!
You are so much like me' I hate when people mention 'women doctor' , 'women police' 'women prof' and now 'penn Ezhuthu'...can't help it:( Me too, consider myself as 'Universal Citizen' rather than keep clinging to ethnic/national/linguistic grounds!
இந்தியாவில் மத்த பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக தமிழ் பெண்களுக்கு இல்லை என்று சொல்வேன்.
yes.it is true only
அருமைடா சித்து.. பெண்களுக்கு உள்ள வரைமுறைகளையும் வகுக்கப்பட்ட எல்லைகளையும் தெளிவா சுட்டிக் காமிச்சுட்டே..:))
இது ஏதோ ஊமை குத்து போல் அல்லவா இருக்கிறது .....
http://idhazhsundar.blogspot.com/
லீவெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா:)))
பதிவு நல்லாருந்தது சித்ரா..
கூகுள் அக்கா சொல்லி, பெண் ஆக்கிட்டீங்க?? :-0)
கலக்கல்.......நெத்தியடி.......
அதிக தொடர்பதிவு எழுதி சாதனை புரிந்த சித்ரா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
good
இயல்பாய் எழுதினால் கூட உள்குத்து வெளிகுத்து தேடுகிற இடத்தில் பெண் என்ன ஆண் என்ன
very interesting...well said Chitra..:)
Tasty Appetite
தெளிவா அழகா குழப்பிட்டீங்க.
நல்ல கருத்து.
”..அவங்க ஆணா, பெண்ணா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கல. அவங்களும், அந்த மாதிரி ஒரு முத்திரைகுள்ள மாட்டிக்காம சுதந்திரமாக சொல்ல வேண்டியதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.... அதனால், "பெண் எழுத்து " என்று பொதுவாக சொல்வது அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன்....”
நகைச் சுவையாகச் சொல்லியிருக்கறீர்கள்.
இனிப்பாக இருக்கிறது.
ஆனால் இது காரமாக முகத்தில் அடிப்பது போலச் சொல்ல வேண்டிய விடயம் என்பது தாழ்மையான கருத்து.
சரியாக சொல்லி இருக்கீங்க..வாழ்த்துக்கள்
பெண் எழுத்து அழகா இருக்கும்.
என் மனைவி, என் மகள் எல்லோரும் அழகா எழுதறாங்க... ஆண் எழுத்து கோழிக் கிறுக்கலாய் இருக்கும்.
நல்ல இருந்துதுங்க.. தம்பட்டம் தாயம்மா... வாயம்மாவா இருக்காங்களே. ;-)))
கொஞ்சமே கொஞ்சம் புரிஞ்சிது...
”அ என்றுதான் படித்தோம் ”:))
நியாயமான கருத்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி..
நீங்க சொல்லி இருக்குறது ரொம்ப சரிங்க.
இன்றைக்கு நிறைய பெண் பிளாக்கர்களின் பதிவுகளில் சமையல் குறிப்பும்,கவிதைகளும் தான் இருக்கின்றன. பெரும்பாலும் அதைத் தாண்டி வேறு எதுவும் இருப்பதில்லை.
வழக்கமான உங்கள் நகைச்சுவையோட சொல்லி இருக்கீங்க.பகிர்வுக்கு நன்றி.
செம form-ல திரும்பி வந்திருக்கீங்க போல.
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.
i don't know anything about "women in tamil writing"... ovvaiyaar- is the only woman tamil writer who i know... oh ya.. of course- and the women bloggers who write in tamil!
but the post is like-- a 'tea time chat' that makes you think even after you leave the chat room! can't agree more to what you've said...
brilliant write-up!
Goosebumps Chitra!Goosebumps!
Love the logo with pennib and female sign
இந்தியாவில் மத்த பெண்களுக்கு எழுத்து சுதந்திரம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக தமிழ் பெண்களுக்கு இல்லை என்று சொல்வேன்.//
வணக்கம் சகோதரி! உங்களின் இந்தக் கருத்துக்களுடனும், நீங்கள் பதிவில் சொல்லிய அனைத்துக் கருத்துக்களுடனும் உடன்படுகிறேன்.
தமிழில் இலக்கிய காலமாகிய சங்க காலங்களையும், அதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதிகளிலும் இரண்டே இரண்டு பெண் எழுத்தாளர்களை தமிழிலக்கிய உலகம் முதன்மைப்படுத்தியிருக்கிறது.
ஆண்டாள்- இவர் நாச்சியார் திருமொழி பாடியவர்,
இவரினைக் கூட, இவரின் கண்ணன் மீதான ஒரு தலைக் காதல் உணர்வுகளைக் கூட எமது சமூகம் ஆணாதிக்க அடிப்படையில் தான் விமர்சித்தது, விமர்சித்து வருகிறது.
ஆண்டாளுக்கு பாலியல் உணர்வு அதிகம். ஆதலால் தான் அவர் தன் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் என்று மட்டுமே எமது சமூகம் நோக்குகிறது. இதனைத் தான் இக் காலப் பெண்களுக்கு ஏற்படும் பெயர்கள் மூலமும் பதிவில் நீங்கள் விளக்கியிருக்கிறீர்கள்/ விளித்திருக்கிறீர்கள்.
பதிவினடிப்படையிலும், இன்றைய கால தமிழர்களின் அடிப்படையிலும் பார்க்கையிலும் அக்காலம் முதல், இந்தக் காலப் பகுதி வரை பெண்களை இத்தகைய பார்வையில் தான் எமது தமிழ்ச் சமூகம் நோக்குகிறது. ஆக மொத்தத்தில் எமது சமூகம் திருந்த வில்லை அல்லது மாறவேயில்லை என்றே கூறலாம்.
அடுத்த பெண் ‘காரைக்கால் அம்மையார்.
அவர் பாடியவை திருவிரட்டை மும்மணிக் கோவை, திருவிடை மருதூர் கோவை, அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம். முதலிய நூல்களாகும்.
அவரின் ஒரு பாடல் ‘இறவாத அன்பு வேண்டிற் பிறவாமை வேண்டும்
எனத் தொடங்கி...
’’அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருத்தல் வேண்டும்! என்று முடிகிறது.
இங்கே காரைக்கால் அம்மையாரைக் கூட இறைவனின் அடியின் கீழ் இருந்து ஏதோ பார்க்க நினைக்கிறார், அவருக்கு அமர் என்றே எமது சமூகம் விமர்சிக்கின்றது,
இத்தகைய விமர்சனங்களை இலக்கியக்கார பெண் எழுத்தாளர்கள் தொடக்கம் இன்றைய பெண் எழுத்தாளர்க்ளை வரை கண்டு கொள்ளலாம்.
தமிழ்ப் பெண் எழுத்து?
தலைப்பே இரண்டு பொருள் உணர்த்தி நிற்கிறது.

இன்றைய காலப் இலக்கிய உலகிலும் சரி, தமிழ் உலகிலும் சரி பெண்களின் பங்கு ஆணாதிக்கம், எனும் இலக்கிய விற்பனர்களினால் மிக மிக குறைவாக இருக்கின்றமையினை நாம் கண்டு கொள்ளலாம்.
பெண்கள் எதனை எழுதினாலும் சமூகம் அவர்களை வேறோர் கோணத்தில் பார்ப்பது இன்று வரை உள்ளது என்பதற்கு சகோதரியின் உதாரணங்களே போதுமானது.
‘வான்மழையில் நனைந்தால் பூக்கள் உருவாகும்!
வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்!(அந்நியன் ஐயங்கார வீட்டு அழகே பாடல்..)
என்று ஒரு ஆண் கவிஞர்(வைரமுத்து) எழுதினால் அது கவிதை. அதில் இலக்கிய நயம் பொருந்தியிருக்கிறது,
‘விஞ்ஞானக் கள்வன் நீ என்று கண்டும் உள்ளாடை நீரானதே...(ஆஞ்சநேயா படத்தில் வரும் வெண்ணிலா வெண்ணிலா...)
என்று ஒரு ஆண் மகன் எழுதும் போது அதனை கவிதை, நவீனத்துவம் என்று பாராட்டும் கவிஞர்கள்
தாமரை போன்ற பெண் கவிஞர்கள் ஒரு பாட்டை எழுதினால் எவ்வாறு விமர்சிக்கிறார்கள் எனும் ஒரு உதாரணமே போதும், சமூகத்தில் பெண் எழுத்திற்கு இருக்கும் அந்தஸ்தினை விளக்க...
‘சில சமயம் உன் உள்ளாடைக்குள் நான் வேண்டும்..(மின்னலே வசீகரா... பாடல்? இதனை எழுதியவர் தாமரை.
இந்த உதாரணங்களே போதும் பெண் ஆணாதிக்கம் எனும் ஆண்களின் பார்வையினூடாக எப்படி விமர்சிக்கப்படுகிறாள், அல்லது நோக்கப்படுகிறாள் என்பது. அன்று முதல் இன்று வரை ஆண்கள் மாறவில்லை என்பதை ஒரு ஆண்மகனாக இருந்து சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறேன் நான்.
இந்தப் பின்னூட்டங்களை சகோதரி சித்திரா, வானதி ஆகிய இருவரின் பதிவுகளும் ஒரே விடயத்தை விளக்கி நிற்பதால் இரு பதிவுகளுக்கும் என் விமர்சனங்களாக மாற்றி மாற்றி விட்டிருக்கிறேன்.
இணைய உலகில் டெம்பிளேட் பின்னூட்டங்களை தவிர்த்து, விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் எனும் காரணத்தால் நான் கொஞ்சம் லேட்!
வாய் காது வரைக்கும் போகும் போல..
அதென்ன கொஞ்சம் வெட்டி பேச்சு?
#டவுட்டு.
மிக அழகாக பெண்களை பற்றி
அலசி ஆராய்ந்து இருக்கீர்கள் !
வாழ்துக்கள் சித்ரா..
காரமான அரசியல்.
சொல்ல வந்ததை சொல்லாமல் சொல்லிட்டீங்க.
விஜய் தொலைக்காட்சியிலே வரும் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியைப் போல, தமிழ், பெண், எழுத்து என்ற மூன்று குறிப்புகளால் தூண்டப்பட்டு, தமிழ்ப் பெண்ணின் "தலையெழுத்து" பற்றித்தான் பேசப் போகிறீர்கள் என்று நினைத்தேன்! அப்படியே நடந்து விட்டது தான் ஆச்சரியம் (உங்களுக்கும், எனக்கும்)! :-)))
நல்ல பதிவு சித்ரா பல தடவை பதிவு ஆணின் பதிவா பெண்ணின் பதிவா என்றறியாமல் படித்திருக்கிறேன்
பதிவின் கருத்தே என்னை கூட்டிசெல்லும் ஆண் பாலும் பெண் பாலும் பெரும்பாலும் அப்புறம் தான்
சொல்வோர் சொல்லிக்கொண்டிருக்கட்டும் நாம் தொடர்வோம் பதிவுலக பகிர்வை நம் தோழமையை
நன்றி
ஜேகே
"கொஞ்சம் வெட்டிப்பேச்சு" என்ற பெயரில் நிறையவே முக்கியத் தகவல்களைத் தருகின்றீர்கள். தங்களின் பதிவுகளில் சமூகம் சார்ந்த அரட்டைகளையும் அலசல்களையும் காண்கின்றோம். எழுத்துக்களில் / எழுத்தாளர்களில் ஆணென்ன, பெண்னென்ன என்கின்ற உங்கள் வாதம் வரவேற்கத்தக்கது.
//பொதுவா இந்திய பெண்களின் பலவீனமே விமர்சனங்களை கண்டு அஞ்சுவது! ////
நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம்.பெண்கள் அஞ்சினால் மாதவிக்குட்டிபோன்ற எழுத்தாளர் கிடைத்திருப்பார்களா.
இடுக்கைக்கு
பயனுள்ள செய்தி பாராட்டுகள் .
“தம்பட்டம் தாயம்மா” கருத்து அருமை...
கும்பல்ல நானும் ஒரு கோவிந்தா போட்டுக்கிறேன். கோவிந்தாஆஆஆஆஆஆஆஆஆ
எழுத்தில் ஆணெழுத்து பெண்எழுத்து என்ற பாகுபாடே அபத்தமான ஒன்று. சிந்தனையும் படைப்பையும் இந்த பாகுபாடுகளை மீறியவை. சித்ரா! எழுதுவர் ரசிப்பவர் என்றஇரு பிரிவே இருக்க வேண்டும். சரிதானே?
சித்ரா, மறந்துவிட்டீர்களா?? என் வலைப்பூ பக்கம் காணவில்லையே!
சுவாரஸ்யமான பதிவு! பெண்கள் எப்படி எப்படியெல்லாம் எழுதினால் எப்படியெல்லாம் பெயர் கிடைக்கும் என்று தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எழுத்தில் வித்தியாசம்!
இன்னும் எத்தனை நாளைக்கு தான் பெண் எழுத்து ஆண் எழுத்து என்று பிரித்து பார்த்து கொண்டிருக்க போகிறீர்களோ, ஆண் எழுதினாலும் இதே போல் திட்டுக்கள் வருவது உண்டு, என்ன அதை ஒரு காதில் வாங்கி இன்னோரு காதில் விட்டு விட்டு சென்று விடுகிறோம், பெண்கள் அதையும் ஒரு பிரச்சினையாக பார்க்கிறீர்கள் போலிருக்கிறது...
//ஏ புள்ள சித்ரா...... தலைப்பை பார்த்தா விவகாரமான .....சாரி...... விவரமான மேட்டர் ஆகத் தெரியுது. பாத்து பதில் சொல்லு...... உன் புத்திசாலித்தனத்துக்கு வந்த சோதனையோ, இல்லை, உன் அறியாமைக்கு வந்த வேதனையோ? தெரியல. ... சொல்றதை சொல்லிப்புட்டேன், ஆமா!//
சித்ரா, கவனம். தாயம்மா உங்களை மிஞ்சி விடுவார்கள் போல!
sema..interesting....nice blogging chitra.
Times are changing , but e cant deny the fact that there are some cocooned minds who still use mocking, teasing, tradition, culture,and use all cards and cheap shots to provoke and intimitate to suppress women.
Once we cultivate the art of ignoring the ignorants I think sky is the limit.
கொஞ்சம் வீக் இதயம் உள்ளவர்கள், இத்துடன் அபௌட் டர்ன், ப்ளீஸ்.... அப்புறம் கம்பெனி எதற்கும் பொறுப்பு எடுக்காது.
ஹி.........ஹி..........ஹி...........!! நான் தொடர்ந்து படிப்பேன்! எனக்கு பாம்புக்கு பயமில்லை!! ( அப்பாடா தைரியத்தை வரவழைத்தேன்! )
வணக்கம்...
அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...
சித்ரா நலமா? இந்தப் பகிர்வை வலைச்ச்ரத்தில் பகிர்ந்துள்ளேன்.மிக்க நன்றி.
Post a Comment