மீண்டும் வணக்கங்கள்:
என்னை குறித்து கடந்த சில நாட்களாக - ஈமெயில் வழியாகவும் - போன் மூலமாகவும் - facebook messages மூலமாகவும் நலம் விசாரித்த அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்துச்சு.
கடந்த இரண்டு வாரங்கள் - எப்பப்பா....
புயல் அடிச்சுது......
பேய்மழை அடிச்சுது ......
மரங்கள் விழுந்துச்சு ......
வேலிகள் பறந்துச்சு......
வெள்ளம் வந்துச்சு.....
இன்டர்நெட் தொடர்பு போச்சு.....
தொலைபேசி தொடர்பு போச்சு....
கரண்ட் கட் ஆச்சு.....
எல்லாம் "old is gold" technology style தான்....
நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன் - நோ ஸ்கூல் -
in fact , இவை இல்லாமல் இருந்தால் கூட, உலகம் எப்போவும் போல தான் இருக்குது. இவை எல்லாம் தாண்டி உலகம் எப்படி இருக்குது என்று தெரிஞ்சிக்க முடிஞ்சுது.
அதிசயம் என்னவென்றால், நோ கம்ப்ளைன் - நோ புலம்பல் - நோ அழுகை.
ஆனால், ஒண்ணு மட்டும் சொல்றேன். போதுமான அளவுக்கும் மேலே மழை பார்த்து விட்டோம். மெல்ல சாரல் அடிக்கும் மழையில், அழகு தெரிகிறது. ரசிக்க முடிகிறது. இப்படி புயல் மழை வந்தால், ஒதுங்கி இருக்கத்தான் செய்கிறது. பயமுறுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு மழை மட்டும் இல்லை, மழை பற்றிய கவிதைகள் - மழையில் காதல் பழுத்துரிச்சு; கத்திரிக்காய் புழுத்துருச்சு என்றெல்லாம் வருகிற கவிதைகள் பக்கத்தில் கூட வருவதாக இல்லை. மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!
போர்டு கேம்ஸ் எடுத்து வச்சு , குட்டீஸ் கூட விளையாடுறது. (வெளியில் அடிச்ச புயல் காத்திலேயும் மழையிலேயும் அங்கே போய் விளையாட அனுப்ப முடியல) -
சீக்கிரமே தூங்க போறது. ஒரே ஒரு பிரச்சனை - அதிகாலையில் சீக்கிரமே முழிப்பு தட்டிடும். திரும்பவும் அதிகால ஆதிகால வாழ்க்கை தொடர்ந்துச்சு.
மாறுதல்கள் - எப்படி இருந்தாலும் - வித்தியாசமா இருக்கிறது, ஒரு விதத்தில், நல்லாத்தான் இருந்துச்சு. பயந்த மாதிரி எதுவும் இல்லை.
சொல்ல மறந்துட்டேனே.... எங்க வீட்டில் கூடு கட்டி இருந்த பறவையின் கூடு, புயல் காற்றில் கீழே வந்து விழுந்து கிடந்தது. அது இருந்த இடத்தில், மீண்டும் எடுத்து வைத்தோம். கீழே புல் தரையில் விழுந்து கிடந்த இரண்டு பறவை குஞ்சுகளையும் தேடி கொண்டு வந்து வைத்தோம். ஒன்று மட்டும் கிடைக்கவே இல்லை. என்ன ஆச்சோ தெரியல. மற்ற இரண்டும் வளர்ந்து, பறந்து போக ஆரம்பிச்சிடுச்சு.
எங்கள் வீட்டுப் பகுதியில் தான் முதலில் எல்லாவற்றையும் சரி செய்தார்கள். ஏதாவது சொல்லணும் போல இருக்குது. ஆனால், தன்னடக்கம் தடுக்குது.
இன்டர்நெட் connection வந்ததும், பதிவு பக்கம் வரலாம் என்று நினைத்தேன். ரோம் நகரம் பத்தி எரிந்துகிட்டு இருந்த போது, நீரோ மன்னன் fiddle வாசித்து கொண்டு இருந்த மாதிரி, ஊரே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிட்டு இருந்த போது, சித்ரா பதிவு வாசித்து கொண்டு இருந்தாளாம் என்று நாளை வரலாறு சொல்லாக்கூடாது பாருங்க...... ஹி, ஹி, ஹி, .....
விட்ட கதையை தொடர்ந்து சொல்றேன். கரண்ட் மற்றும் இன்டர்நெட் தொடர்பு எல்லாம் சரி பண்ணாங்களா...... அப்புறம், கரண்ட் - போன் - இன்டர்நெட் வராத ஒரு நண்பரின் குடும்பம் எங்க வீட்டில் வந்து தங்கி இருந்தாங்க. அவங்க ஏரியாவில் சரி செய்ததும் கிளம்பி போனாங்க. அதுவரை, நல்லா டைம் பாஸ் பண்ணோம். நாள் பூரா, சூப்பர் அரட்டை கச்சேரி தான்.
முதலில் புயல் ஏன்டா வந்துச்சுன்னு நினைச்சேன். ஆனால், அது வர வரைக்கும் - நான் உண்டு - என் குடும்பம் உண்டு - என் வலை உலக பொழுதுபோக்கு உண்டு என்று குறுகிய வட்டத்தில் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இருக்கிற வாழ்க்கையை - ஆசிர்வாதங்களை மதிக்கிறது - மற்றவர்களுக்கு உதவுறது - குடும்பத்தோட ஜாலியா டிவி தொல்லை இல்லாமல் லூட்டி அடிக்கிறது என்று புது பொலிவை அடையாளம் காட்டிவிட்டு சென்று இருக்கிறது.
ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா.....
இந்த மாதிரி வெள்ள சமயங்களில் விளையாடுகிற காய்ச்சல் - வாந்தி - சரியா எங்க வீட்டிலேயும் கதவை தட்டி, குட்டி மகனிடம் ஆஜர் போட்டுட்டு போச்சு. இப்போதான் சரி ஆச்சு.
நேத்து, என் கணவர் கேட்டார். " வருகிற Sunday , "Mother's Day". இரண்டு வாரங்களாக tough and rough time. எல்லோரையும் நல்லா கவனிச்சிக்கிட்ட. சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு. உனக்கு என்ன வேண்டும்?"
"Right now, I am super tired. Mother's Day அன்று, நான் பொறுப்புள்ள அம்மா என்று நினைக்க விடாதீங்க..... நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!
அப்புறம், இந்த வார இறுதியில் Michigan பக்கம் யாராவது போனீங்க என்றால், இரண்டே வாரங்களுக்கு பூத்து குலுங்கும் Tulip மலர்களுக்கு என்று Festival ஒன்று Holland என்ற ஊரில் நடக்கும். அதை பார்க்க மறக்காதீங்க. சில வருடங்களுக்கு முன், "Mother's Day Sunday" அன்னைக்கு அங்கு சென்று இருந்தோம்.
பொதுவாக, மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் தான் கொண்டாட்டங்கள் நடைபெறும். வெள்ளை நிறத்தில் இருந்து deep purple வரை உள்ள பல வண்ணங்களில் - மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று - tulip மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
Holland, Michigan - Tulip Festival: http://www.tuliptime.com/
Dutch மக்கள் பலர் அங்கே வந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். ஊரில் கட்டடமைப்பு - பழக்க வழக்கங்கள் எல்லாம் டச் ஸ்டைல் தான். திருவிழா கொண்டாட்டங்களில், ஆயிரக்கணக்காக நடனக் கலைஞர்கள் ஊருக்கு நடுவில் உள்ள ஒரு பூங்காவில் கூடி டச் பாரம்பரிய நடனங்கள் ஆடி காட்டுவார்கள். சூப்பர்!
Clog எனப்படும் மர ஷூஸ் போட்டு கொண்டு ஆடியது அருமையாக இருந்துச்சு.
மனதை கொள்ளை கொண்ட அழகு மலர்கள் - நடனங்கள் கண்டு ரசித்து கொண்டாடிய அன்னையர் தினத்தை மறக்க முடியாது.
தென்றல் வருடுவதும் புயல் அடிப்பதும் வாழ்க்கையில் சகஜம் போல. எல்லாம், நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை கடந்து போய் கொண்டு இருக்கிறது.
படங்கள்: நன்றி: கூகுள் புயல்.
101 comments:
இப்ப எந்தப் பிரச்னையும் இல்லையே . அதுவரைக்கும் சந்தோசம்.
நம் கையில் எதுவும் இல்லை. என்று இறைவன் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள நினைக்கிறானோ அன்று அனைத்தும் அழிந்து விடும்.
சில சமயம் இந்த மாதிரி விடுமுறை சித்ரா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
நலமறிந்து மகிழ்ச்சி:)!
கடைசிப் படம் கொள்ளை அழகு.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
//மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!//
:))!
அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.......................
ஆண்டவன் அருள் அனைத்திலும் முதன்மையாக இருந்தது உங்களுக்கு சித்ராக்கா!
அக்காவுக்கு, குட்டீஸ்களோடு சேர்ந்து நானும் சொல்லிக்கிறேன் அன்னையர் தின வாழ்த்துக்கள்! :)
பெருமூச்சு நல்லா இருக்கு. உலகத்தில் எல்லாமே அளவாக இருக்கிற வரை தான் ரசிக்க முடியும். அதில் தான் மகிழவும் முடியும். அதீத மழை, அதீத வெயில், இயற்கை சீற்றங்கள் எல்லாமே வாழ்க்கையை புரட்டி போட்டுடும்.
அன்னையர் தின வாழ்த்துக்கள் சித்ரா...
திருப்பவும் உங்களோட பதிவப் பாக்கறது சந்தோசம்க்கா.
>> நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன்
ஹா ஹா அப்புறம் எப்படி விசாரிச்சாங்க?#டவுட்டு ( சும்மா ஜோக்)
ஒரு யுகத்தில் மனிதன் செய்த ஆக்கத்தை ஒரே நிமிடத்தில் இயற்கை அழிக்க முடியும்...
நல்ல அனுபவம். பூக்கள் சூப்பர்.....
//அன்னையர் தினம் அன்று அம்மா பொறுப்புக்கு லீவ்//
சேட்டைதான் போங்க ☺☺☻☻
அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா!
நிம்மதியான வாழ்க்கைக்கு எது அவசியம் எது அவசியமே இல்லை என்பதை உணர்த்த இறைவன் இப்படி ஒரு சூறாவளி மூலம் சொல்லித்தருவார் போலும் .
முந்தைய பதிவிற்கான பின்னூட்டம் இதற்கும் பொருந்தும்
When things go as expected - you get success.. when they don't you gain experience :) Glad to know that the family is safe and sound..
இங்க Houstonலியும், ஒவ்வொரு முறை புயல் வரும்போதும், india summer holidays தான் ஞாபகம் வரும்.. அத்தனை நண்பர்களும் ஒரே இடத்தில் - no work, no commitments - ensoy thangamani தான்..
>>நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!
குட் மம்மி.. வாழ்த்துக்கள்
எங்க டா ஆளையே காணோம் பார்த்தேன்... எங்க சித்து வை காணோம் ஆனந்தி கிட்ட கேட்டேன்..அவங்க தான் சொன்னாங்க புயல்...!!புயல் னா என்னனு கேட்டேன் அடிக்க வந்தாங்க...மதுரைகாரி அதான் :P
நாங்க இங்க வெயில் அவதி படுறோம் அங்கே புயல் மழை பாருங்க இதுவும் உலகம் தான்
சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு. உனக்கு என்ன வேண்டும்?"
அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!////
என்ன வேணும் கேட்டது தப்பா போச்சே நினைச்சு இருப்பார்...
welcom... புயலை அடித்து விரட்டிய (அன்னைக்கு)அன்னையர் தின வாழ்த்துக்கள்.... ரொம்ப ஓவர் தான் அதுக்கு அடிக்க வராதீங்க..!!
பகிர்வுக்கு நன்றி அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ!
சி.பி.செந்தில்குமார் said...
>> நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன்
ஹா ஹா அப்புறம் எப்படி விசாரிச்சாங்க?#டவுட்டு ( சும்மா ஜோக்)
......அண்ணாத்த, connection வந்தப்புறம் மொத்தத்தையும் வாசிக்க முடியும் என்பதை மறந்திட்டீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா....
எல்லாம் நன்மைக்கே ன்னு சொல்றது எவ்வளோ நிஜம் பாருங்க!!!!
நம் கையில் எதுவுமில்லை என்பது சத்தியம்.
மூணு மாசத்துக்கு முன்னே எங்கூர் நிலநடுக்கத்துலே உணர்ந்துக்கிட்டோம்:(
இப்ப எல்லா பிரச்சனையும் சரியயிடிச்சுல்ல அக்கா ...
எல்லாம் நன்றாக இருந்தால் சரி..
அன்னையர் தின வாழ்த்துக்கள்...
Neengalum,naangalum,koopidum dhoorathil dhan irukkirom,evlo periya difference paarunga.Mazhai engal idathil just thoorala dhan vandhadhu.aanal,neengal patta thunbam konja nanjam illai.meendum thendralena veesa ungalukku permission kuduthuche puyal,adhu varaikkum sandhosam.
”எல்லாம் நல்லதற்கே!” ஒரு வழியாக புயல் எல்லாம் முடிந்து விட்டது நினைத்து சந்தோஷம்.. அன்னையர் தின வாழ்த்துகள்...
பதிவர்கள் தங்களது சொந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியம். காப்பி பேஸ்ட் செய்வதற்கு அந்த குறிப்பிட்ட தளத்திற்கு இணைப்பு கொடுத்து பதிவின் சொந்தகாரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தால் என்ன? யாரோ திறமையை திருடி தங்கள் பதிவுலக ராஜாக்கள் என்ற பட்டத்தை சூடி ஊரை ஏன் ஏமாற்ற வேண்டும்?
இவர்களால் பல தரமான பதிவர்கள் எழுதுவதை நிறுத்தியதோடு, திருட்டு பதிவர்களின் மீது துப்பிய எச்சில் அனைவரின் மீது விழுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.
திருட்டுப்பதிவிலும், காப்பி பேஸ்ட் பதிவிலும் தமிழ்மணத்தில் ஓட்டி வாங்கி சிறந்த பதிவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் சிறுபுத்திக்காரர்களைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். இதை செய்யாதவர்கள் இதை செய்தவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டாம்.காரணம், இந்த அசிங்கமான கலாச்சாரத்தில் அழியப்போகப்போவது எல்லோரும் தான்.
இதை ஏணியாக வைத்து மேலே ஏற வாய்ப்புகள் உள்ள போது அந்த மாதிரியான பதிவர்களை குறுக்கு வழியில் கிழே தள்ளினால் உண்மையான திறமை வாய்ந்தவர்களின் எப்படி முன்னேறு வார்கள்?
காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு இது தான் பொழைப்பு என்றால் திறமைசாலிகளுக்கு வழி விடுவது தானே உத்தமம்!
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதனால் யாரும் வக்காலது வாங்கி மேலும் மேலும் காப்பி பேஸ்ட் திருட்டு பதிவர்களை ஊக்குவிக்க வேண்டாம்
நீங்க பட்ட அவதி எங்கூர் வெள்ளத்தை நினைவுபடுத்திடுச்சு.. ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க இல்லே. இருந்தாலும், எங்களுக்கும் கிட்டத்தட்ட ஆதிவாசி வாழ்க்கை நல்லாத்தான் இருந்துச்சு.
எல்லோரும் நலமாக இருக்கணும்ன்னு பிரார்த்திக்கிறேன்.
சமீபத்திய ஜப்பானின் சுனாமி, பூகம்ப விளைவிகள் கூட வந்து துவசம் செய்து போய்விட்டன. ஜப்பானியர்கள் அந்த அதிர்வுகளில் இருந்து மீண்டும் ஆரவாரம் இல்லாமல் எழுந்து தம் வாழ்வை தொடர்கின்றனர். உண்மைதான் இயற்கையின் முன்னாள் எதுவும் ஒன்றுமில்லாமல் போய்விடும்.. ஆனால் நாம் தான் ஏதோ சகலத்தையும் உடன் கொண்டுவந்ததை போன்ற எண்ணத்துடன், சகலமும் நமக்கு மட்டுமே வாய்த்தது என்ற அகந்தையுடன் வாழ்கிறோம்.நிலையாமையே நிலையானது இல்லையா?
புயலை புற முதுகோட செய்து தென்றலாய் வந்த சித்ரா மேடத்திற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
சகோ, நலமா?
குடும்பத்தினர் எல்லாமே நலமா?
சகோ, நலமா?
குடும்பத்தினர் எல்லாமே நலமா?
இன்னும் ஒரு மாதத்துக்கு மழை மட்டும் இல்லை, மழை பற்றிய கவிதைகள் - மழையில் காதல் பழுத்துரிச்சு; கத்திரிக்காய் புழுத்துருச்சு என்றெல்லாம் வருகிற கவிதைகள் பக்கத்தில் கூட வருவதாக இல்லை. மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!//
ஆஹா....ஆஹா...
செமையாத் தான் கடிக்கிறீங்க.
இன்னும் ஒரு மாதத்துக்கு மழை மட்டும் இல்லை, மழை பற்றிய கவிதைகள் - மழையில் காதல் பழுத்துரிச்சு; கத்திரிக்காய் புழுத்துருச்சு என்றெல்லாம் வருகிற கவிதைகள் பக்கத்தில் கூட வருவதாக இல்லை. மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!//
ஆஹா....ஆஹா...
செமையாத் தான் கடிக்கிறீங்க.
அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ.
சொல்ல மறந்துட்டேனே.... எங்க வீட்டில் கூடு கட்டி இருந்த பறவையின் கூடு, புயல் காற்றில் கீழே வந்து விழுந்து கிடந்தது. அது இருந்த இடத்தில், மீண்டும் எடுத்து வைத்தோம். கீழே புல் தரையில் விழுந்து கிடந்த இரண்டு பறவை குஞ்சுகளையும் தேடி கொண்டு வந்து வைத்தோம். ஒன்று மட்டும் கிடைக்கவே இல்லை. என்ன ஆச்சோ தெரியல. மற்ற இரண்டும் வளர்ந்து, பறந்து போக ஆரம்பிச்சிடுச்சு.//
ம்....பாவம் அந்த குருவிகள். எவ்ளோ கஷ்டப்பட்டு கூடுகட்டியிருப்பார்களோ.
இன்டர்நெட் connection வந்ததும், பதிவு பக்கம் வரலாம் என்று நினைத்தேன். ரோம் நகரம் பத்தி எரிந்துகிட்டு இருந்த போது, நீரோ மன்னன் fiddle வாசித்து கொண்டு இருந்த மாதிரி, ஊரே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிட்டு இருந்த போது, சித்ரா பதிவு வாசித்து கொண்டு இருந்தாளாம் என்று நாளை வரலாறு சொல்லாக்கூடாது பாருங்க...... ஹி, ஹி, ஹி, .....//
இவ்வளோ சோகங்களுக்கு மத்தியிலும் எங்களை எல்லாம் சிரிக்க வைக்கிறீர்க்ளே- இது தான் ஓர் எழுத்தாளனின் எழுத்துக்களின் வீரியத்திற்கு எடுத்துக் காட்டாய் அமைகிறது.
Tulip மலர் என்று Festival, இயற்கை அன்னையின் கோபம், என இரண்டு விடயங்களிலும் நகைச்சுவை கலந்து எங்களை சிரிக்கும் படி எழுதியிருக்கிறீர்கள்.
//இரண்டு வாரங்களாக tough and rough time. எல்லோரையும் நல்லா கவனிச்சிக்கிட்ட. சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு.//
அன்னையர் தின வாழ்த்துகள் சித்ரா!
பிரச்சனைகளையும் நகைச்சுவை உணர்வோடு எடுத்துச்சொல்லி யிருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்..!!
in fact , இவை இல்லாமல் இருந்தால் கூட, உலகம் எப்போவும் போல தான் இருக்குது. இவை எல்லாம் தாண்டி உலகம் எப்படி இருக்குது என்று தெரிஞ்சிக்க முடிஞ்சுது.//
நல்ல சிந்தனை..அன்னையர் தின வாழ்த்துக்கள்..லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தோமில்ல மேடம்
நல்லாருக்கீங்க..என மீண்டும் உங்க பதிவை படிக்கும் போது சந்தோசமா இருக்கு
Welcome back akka !
எங்களுக்கு வரும் மே 13 அன்றுதான் அன்னை(யர்)தினம்!
எங்களுக்கு வரும் மே 13 அன்றுதான் அன்னை(யர்)தினம்!
Happy Mother's Day!!!
Welcome back. அன்னையர் தின வாழ்த்துக்கள்
VERY HAPPY TO NOTE
YOUR ARRIVAL AFTER
A VERY LONG PERIOD.
WELCOME TO YOUR CHITHRA!
தென்றலோ புயலோ .. சித்ராக்கு முன்னாடி எல்லாமே ஒன்னு தான்னு ஊதித்தள்ளிட்டீங்களா..குட் :))
வெல்கம் பாக்!
பல்சுவையுடன் இருக்கு பதிவு!
ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்து பகிர்ந்தமைக்கு நன்றி சித்ரா.அன்னையர்தின வாழ்த்துக்கள்.
அக்கா திரும்பி வந்ததில் சந்தோசம்!
ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன்.//
சத்தியமான் வார்த்தைகள்.
Happy mothers day . . . Nature is a king of anything
//பயந்த மாதிரி எதுவும் இல்லை. //
//மற்ற இரண்டும் வளர்ந்து, பறந்து போக ஆரம்பிச்சிடுச்சு.//
அப்பாடா..
ரொம்ப நல்ல பகிர்வு :))
அன்னையர் தின வாழ்த்துகள்.
நீங்கள் திரும்பி வந்தது சந்தோசம்.
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு முதலில் என் சந்தோசங்கள். அப்புறம் ஜெஸ்..தென்றலும் புயலும் அவரவர் பார்வையில்தான் உள்ளது.
பறவையின் கூடும் இரண்டின் பறப்பும் மிக்க சந்தோசம். ஜீவகாருண்யம் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கும்போது உங்கள்போல இரக்க உள்ளம் படைத்தவர்கள் இருப்பது மிக்க மகிழச்சி. உண்மைதான் கெட்டதிலும் சில நன்மைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
ஏனொ தெரியவில்லை எனக்கு அந்த மூன்றாவது குஞ்சுப்பறவையை நினைத்து கவலையாகத்தான் உள்ளது.
WELCOME BACK TO THE WORLD OF BLOG!
//நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!//
SUPER!
தென்றல் வருடுவதும் புயல் அடிப்பதும் வாழ்க்கையில் சகஜம் போல. எல்லாம், நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை கடந்து போய் கொண்டு இருக்கிறது.
super
புயல் ஓய்ந்து பதிவு பக்கம் வந்ததில் சந்தோஷம் சித்ரா. ஆதிவாசி வாழ்க்கை நல்லா இருந்ததா!
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
நலம் அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் குருவிக்குஞ்சுகள் எப்படி இருக்கிறார்கள் எனக்கேட்கணும் என நினைத்திட்டே இருந்தேன். இரண்டு தப்பியதில் மகிழ்ச்சி.
அன்னையர்தின வாழ்த்துக்கள்.
உங்கள் நலம் சுகம் அறிந்து மிக்க மகிழ்ச்சி....
//ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா..///
நூற்றில் ஒரு வார்த்தை இது....நம் கையில் ஒன்றுமே இல்லை...
//ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா..///
நூற்றில் ஒரு வார்த்தை இது....நம் கையில் ஒன்றுமே இல்லை...
எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது மகிழ்ச்சி...
அன்னையர் தின வாழ்த்துகள்..
இந்த வாரம் இங்கே Albanyயில் Tulip Festival நடக்கின்றது...எங்க ஊர் தான் என்பதால் வருடாவருடம் போவது...
மகிழ்ச்சி சித்ரா!! நம்ம நிறைய விஷயங்களை granted ஆ எடுத்துக்கறோம். இந்த மாதிரி ஏதாவது வர்ரப்போதான், அதோட அருமை தெரியுது.
எங்களுக்கு மழையே பெய்ய மாட்டேங்குது :((
அடித்த புயலிலும் கொட்டும் மழையிலும்.குழந்தையின் வருத்தத்திலும் கல கல கலப்பாக சுவாரசியமாக எடுத்து
எழுத தெரிந்த சித்திரத்துக்கு ஒரு ஜெ ஜெ போடலாம். எதுவுமே நிரந்தரமில்லை இது தான் உண்மை.
Glad to see your update...you narrated the experience in such a poetic manner with a hint of humour too... we missed you... take care... Happy Mothers day...(without mothering....).....:))
வெல்கம் பேக்.. மகிழ்ச்சி.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
பகிர்வு அருமை..எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ள தயாராக இருக்கனும் என்று உங்க பதிவு சொல்லாமல் சொல்லுது...
தங்கள் பதிவைப் படிக்கையில்
கரிய இருள் முடிந்து
புலர்காலைப் பொழுதை
உணர்வதுபோல் இருந்தது
எல்லாம் நன்மைக்கே
அன்னையர் தின வாழ்த்துக்களுடன்...
//"Right now, I am super tired. Mother's Day அன்று, நான் பொறுப்புள்ள அம்மா என்று நினைக்க விடாதீங்க..... நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!//
இப்படிதான் சமயோஜிதமா செயல்படணும்.ஹி.ஹி..
வாழ்த்துக்கள் சித்ரா..
அப்பாடி.. திரும்ப வந்தாச்சு.. சந்தோஷம்
என் கணினி செயலிழக்க நானும் வலைப்பக்கம் வரமுடியவில்லை. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடக்க இருப்பவை நல்லதாக இருக்கட்டும்.
டிவியில பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
இந்த மாதிரி சமயத்தில்தான் உறவுகளின் நினைப்பு வரும்.
அனைவரும் நலம் பெற வாழ்த்துகிறேன்,
அன்னையர்தின வாழ்த்துகள்.
இயற்கையை மறக்கும், அவமதிக்கும் மனிதனுக்கு இயற்கை அவ்வப்போது விடும் எச்சரிக்கை நினைவூட்டல். இந்த சிந்தனை எங்களுக்கும் வருமளவு பகிர்ந்து கொள்ளப் பட்ட பதிவு. இந்தப் புயலிலும் சில முட்டைகள் தப்பிப் பிழைத்திருப்பதும் இயற்கையின் அற்புதம்தான்.
//"என் கணவர் கேட்டார். " வருகிற Sunday , "Mother's Day". இரண்டு வாரங்களாக tough and rough time. எல்லோரையும் நல்லா கவனிச்சிக்கிட்ட. சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு. உனக்கு என்ன வேண்டும்?"//
அம்மம்மம்மம்மம்மா....அன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..னை...!
அன்னையர் தின வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Welcome back to our Blogger World!!
தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்...
எதுவும் அளவோடு இருக்கும்போது இம்சைகள் தான்...
மழையை ரசிக்கமுடியாது
ஒழுகும் வீட்டில் இருப்பவன்...
தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்..
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
சித்ரா நல்ல இருக்கீங்களா , பதிவு பார்த்து சந்தோஷம்
புளு முட்டை பறவ கூட யாரோ கண்ணு போட்டுட்டாங்க பொல
நோ பிலாக், நோ ஃபேஸ்புக், ரொம்ப சிரமாமா இருந்திருக்கும்
தீடீர் புயல் மழை என்றால் , சாமானகல் வாஙக் வெளியில் போகனுமே
அபப் சாப்பாட்டுக்குஎல்லாம் சாமான்கள் எல்லாம் அவசர தேவைக்கு , அதெல்லாம் எப்படி சமாளித்தீஙக்/
இதெல்லாம் இயற்கையின் சீற்றம் நம் கையில் எதுவும் இல்லை, பதிவை
பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
welcome back..... :(....
புயல் உங்களை கொஞ்சமாவது மாத்தும்ண்ணு நினைச்சேனே.. :(
அன்பு சகோதரி எது எப்படியோ நீங்கள் பேஹெஹிரம் தானே, நல்லபடியாக அனைவரையும் காக்கும் கடவுளுக்கு நன்றி, உங்கள் பதிவு நன்றாக இருந்தது இங்கிருந்தே எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தது போல உள்ளது. இந்த படங்களை எல்லாம் எங்கிருந்து டவுன்லோட் செய்கிறீர்கள்,
அன்னையர் தின வாழ்த்துக்கள்
சித்ரா...
தென்றல் வருடுவதும் புயல் அடிப்பதும் வாழ்க்கையில் சகஜம் போல. எல்லாம், நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை கடந்து போய் கொண்டு இருக்கிறது.
.... இது புதுசு சித்ரா
இயற்க்கையின் சீற்றத்திற்கு முன் எல்லாம் அடங்கித்தான் போகும்..
உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
வணக்கமுங்க.. நேத்துதான் மகி கிரானி அம்மா பேசும்போது சொன்னாங்க.. ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து ஊர்ல இருக்கறா... உங்களின் நலனையும் அறிந்துகொண்டேன். சந்தோஷம்.. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. (பட் டூ லேட்டோ)
Happy Mother's day to you. Nice narration. Loved those flower pictures.
அன்னையாய்...இருப்போம்.புயல்..மழை...ஒன்றும் செய்யாது.
அன்னையர் தின வாழ்த்துக்கள்
Happy Mother's Day dear!!
சந்தோஷம்ப்பா, எல்லோரும் நலம் என்றறிந்து.
//அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்//
கரெக்ட், உழைப்பாளர் தினத்தன்னிக்கு உழைக்கிறவங்களுக்கு லீவு விடறாங்கள்ல, அது மாதிரி. ;-)))))
புயலும்,மழையும் கூட புன்னகையோடு! உங்களுக்கே உரிய சிரியஸ் பாணியில் அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
The part where u mention about putting up back the bird's nest-- really touching... Times may be rough. but rough times, usually bring out the better person in us! these times really bring out the community feeling in most of us!
really enjoyed reading this post! and very happy to hear about u'r well-being!
happy mothers' day! :)
Taken the things in the right way! Take Care!
இயற்கை தரும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை பக்குவப்படுத்தவே. குருவிகளைக் காத்த உங்கள் அன்னை மனதிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்
glad to see your post again Chitra...Wishing you a very happy mother's day..awesome flower clicks..:)
Tasty Appetite
புயலைப் பற்றி முதன் முதலில் ஒரு ஜாலியான பதிவைப் படித்தது இங்கேதான்,
சித்ரா...கடைசியா வந்து சுகம் விசாரிச்சு வாழ்த்தும் சொல்லிக்கிறேன் !
இருக்கிற வாழ்க்கையை - ஆசிர்வாதங்களை மதிக்கிறது - மற்றவர்களுக்கு உதவுறது - குடும்பத்தோட ஜாலியா டிவி தொல்லை இல்லாமல் லூட்டி அடிக்கிறது என்று புது பொலிவை அடையாளம் காட்டிவிட்டு சென்று இருக்கிறது.
ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா.....//
நல்லா சொன்னீங்க சித்ரா !
நம்ம கையில் ஒன்றும் இல்லை.
அவன் அருளால் தான் எல்லாம் என்று உணர்ந்து கொண்டால் இன்பம் வந்தால் தலை , கால், தெரியாமல் குதிப்பதும், துன்பம் வந்தால் இறைவனை வெறுப்பதும் செய்ய மாட்டோம்.
இயற்கை தான் இறைவன். இறைவன் தான் இறைவன் என்று உணர்ந்து விட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
தாமதமான அன்னையர் தின வாழ்த்துக்கள்.
இப்பொழுது அனைவரும் நலம் தானே .மழை புயலாக வந்தாலும் சரி ,சாரலாக வந்தாலும் சரி பார்த்து கொண்டே இருக்கலாம் ..இயற்கைக்கு முன் மனுஷன் எவளவு சின்னம் என்பது அப்பப்ப நம்ம மண்டைக்கு போனா தான் நல்லது
//புயலை புற முதுகோட செய்து தென்றலாய் வந்த சித்ரா மேடத்திற்கு//
ஆஹ்ஹா... அடுத்த அமைச்சரவையில் உங்களுக்கு மந்திரி பதவி ரெடியாயிடிச்சு போல...
நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன் - நோ ஸ்கூல் -
in fact , இவை இல்லாமல் இருந்தால் கூட, உலகம் எப்போவும் போல தான் இருக்குது. இவை எல்லாம் தாண்டி உலகம் எப்படி இருக்குது என்று தெரிஞ்சிக்க முடிஞ்சுது.
-------- நிதர்சனம்
//ஊரு உலகத்துல இந்த டயட் இருக்கிறவங்க தொல்லை தாங்க முடியல. //
ஹா ஹா ஹா அருமை அக்கா...
நமக்கு இருக்குற வெயிட்க்கு டயட் இருந்த பூனை கூட தூக்கிட்டு போயிடும் என்னை. அதனால அந்த பக்கமே போறது இல்ல.
தாங்கள் பதிவிட்ட அன்றே வாசித்து விட்டேன் கருத்திட முடியவில்லை. புயல் சம்பந்தமான காட்சிகளை டி.வியில் பார்த்தோம். நோ இன்டநெட், நோ பேஸ்புக் என்றால் கண்டிப்பாக பல சிந்தனைகள் ஓடி ஏராளம் பதிவுகளுக்கான கரு கட்டியிருக்கும். எதிர்பார்க்கின்றேன்.
என் அம்மாவிற்கு எப்பொழுதுமே வாழ்த்து சொன்னதில்லை இத்தினத்தில். ஆமாம் இதெல்லாம் எப்போ கொண்டாட ஆரம்பிச்சாங்க. எல்லா உழைக்கும் மனிதர்களுக்கும் ஓய்வு என்பது அவசியம்
Post a Comment