Monday, January 23, 2012

சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....

இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம்,  பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால்,   எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த ஒரு அவசர பதிவு.
இதை காமெடியா எழுதி, எப்படி சிரிக்கிறது?   மத்தவங்க நம்ம பார்த்து சிரிக்காம இருக்கணுமே ..... மனசு கேட்கலைப்பா.....

சென்ற வாரம் மட்டும்,  மூன்று வெவ்வேறு  நிகழ்வுகளின் மூலம், இந்திய வெளிநாட்டினரின் பார்வையில் வேறு விதமாக பார்க்கப்பட்டு வந்து இருக்கிறது. 

ஒரு பக்கம், உக்ரனியன் ( Ukranian) பெண்கள் , இந்தியாவுக்கு எதிராக போர் கொடி - நிஜமாகவே தேசிய கொடியை - தூக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு இருக்கிறார்கள். 


இந்தியாவுக்கு முதல் முறையாக வந்த அமெரிக்க டிவியில் முத்திரை பதித்துள்ள பெண்மணி  - பெரும்புள்ளி -  ஓப்ரா - Oprah Winfrey - இந்திய வருகையின் போது, சில விஷயங்களில் கடுப்பாகி அதுவே, இந்தியாவுக்கு முதலும் இறுதியுமான வருகை என்று சொல்லி இருக்காங்க. 

அப்புறம் , நோர்வே நாட்டில் இருந்து கொண்டு, இந்திய முறைப்படி குழந்தை வளர்ப்பில் ஈடுபட்ட இந்திய தம்பதியினரிடம் இருந்து அவர்களது இரண்டு குழந்தைகளையும் , நோர்வே அரசாங்கமே வாங்கி வேறு குடும்பத்தினரிடம் வளர்க்க சொல்லி விட்டது.  இப்பொழுது, இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் , குழந்தைகளை அதன் பாட்டி தாத்தாவிடம் ஒப்படைக்க சொல்லி  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



இது வரை,   இந்தியாவின் கலாச்சாரத்தை ... இல்லை, இல்லை,  தமிழ்நாட்டு கலாச்சாரத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து கொண்டு மற்ற நாடுகளை - அவர்களின் பழக்க வழக்கங்களை -  எண்ணங்களை - சுதந்தரத்தை  - கலாச்சாரத்தை குறை கூறி கேட்டதுண்டு.  

ஆனால், சென்ற வாரம் தான்,  பல வெளிநாட்டினர் , இந்தியாவின் கலாச்சாரத்தை - மக்களின் நடவடிக்கைகளை - பின் தங்கி இருக்கும்  சில பழக்க வழக்கங்களை  - அலசி ஆராய்ந்து பேசியதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,  செய்திதாட்களிலும்  ஆங்கில பதிவுகளிலும் முதன் முறையாக பார்த்தேன்.  

அவற்றில் குறிப்பாக, வெளிநாட்டினரால்  எழுப்பப்பட்ட கேள்விகளை ,   இங்கே தொகுத்து தந்து இருக்கிறேன். 


வெளிநாட்டினரும்  மதித்து வந்த இந்தியாவின் பாரம்பரியம், திடீர் என்று வில்லங்கத்தனமாக  பார்க்கப்படுவது ஏன்?  இது வரை இருந்து வந்த  புரிதலை தவறாக,  இந்தியர்களே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால் தானா? 

இந்தியர்கள்,  இந்திய  நாட்டில் கூட சரியாக கடைப்பிடிக்காத பழக்க வழக்கங்களை, வெளிநாட்டில் வந்ததும் கடைப்பிடிப்பதன் காரணம் என்ன? 

David Hawks என்பவர் எழுப்பிய கேள்வியில்,   இந்தியர்கள் Developed countries வந்த பின்னும் Developing countries உள்ளது போலவே உள்ள அணுகுமுறையில் , தங்களை மாற்றி கொள்ளாமல் இருப்பது எதனால்?  


பெரும்பாலான இந்தியர்கள்,  "the glass is half  full" - என்ற மனப்போக்குடன் இந்தியாவையும் - " the glass is half empty"  - என்ற மனப்போக்குடன் வெளிநாட்டினரையும் மதிப்பிடுவது எதற்கு? 


 இந்தியர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு என்று ஒரு இந்தியாவை அங்கே உருவாக்கிக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர,  இருக்கும் நாட்டின் நல்ல கருத்துக்களை - பண்புகளை - ஏற்று கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்?  

"ஊரோடு ஒத்து வாழ்" என்ற முறையை இந்தியாவில் கடைப்பிடித்தாலும்,   அதையே வெளிநாட்டில் வரும் போது அங்கே உள்ள விதிமுறைகளை, குறிப்பாக , அரசாங்க விதி முறைகளை   தெரிந்து கொள்ள - புரிந்து கொள்ள - எந்த வித முயற்சியும் எடுக்காமல்,  கிணற்றுத் தவளைகள் ஆகவே இருப்பதன் காரணம் என்ன? 

பரந்த மனப்பான்மையுடன் இல்லாமல், ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தங்களை வைத்துக் கொள்வதேன்? 
இந்தியர்களுக்கு தங்கள் நாடு பெருமையானது என்பது போல், மற்றவர்களும் தங்கள் நாட்டை  பெருமையாக நினைப்பார்கள் என்பதை மறந்து,  அவர்களை கேலி பேசுவதேன்?

பெரும்பாலான இந்தியர்கள்,  hypocrites (இதற்கு தமிழ் வார்த்தை தேடினால், ஆசாரகள்ளன் என்று ஆங்கில - தமிழ் அகராதி காட்டுகிறது)  ஆகவே இருக்க வேண்டிய அவசியம் ஏன்? 

இப்படியாக நிறைய விவாதித்துக் கொண்டே போனாங்க.... 

திருவிளையாடல் நக்கீரன் மாதிரி ஒரே பீலிங்க்ஸ்சு  ஆஃப்  இந்தியாவா ஆயிடுச்சு.... ..... இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில்,  யாராவது குறைவாக  குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்.....  ஃபீல் பண்ண போற அடுத்த ஆள், நீங்க தான்னு தெரியும்..... அதான் உங்க காதுல விஷயத்தை போட்டு விட்டேன்.


 







123 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் இந்தியன்

சி.பி.செந்தில்குமார் said...

>, கிணற்றுத் தவளைகள் ஆகவே இருப்பதன் காரணம் என்ன?

ஹி ஹி ஹி ,

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில், யாராவது குறைவாக குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்...


ஆஹா!!

ப.கந்தசாமி said...

மிகவும் ஆழமாக யோசித்து செயல்படவேண்டிய விஷயம். இந்தியர்கள் ஆஷாடபூதிகள் (வெளியில் வேஷம் கட்டுபவர்கள்) என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

மற்ற விஷயங்களும் குறிப்பாக எங்கு போனாலும் ஒரு குட்டி இந்தியாவை உருவாக்குவது உண்மையே. வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், கவனிக்க வேண்டிய விஷயம்.

test said...

வணக்கம்!

test said...

அவ்வ்வ்வ்!

test said...

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை விளக்கி, விவரித்து
தானைத்தலைவி, விடிவெள்ளி,பதிவுலக குறிஞ்சிமலர், கலங்கரை விளக்கம் சித்ராக்கா அவர்கள் விரிவாக ஒரு பதிவு எழுதுவார் என தெரிவித்துக் கொள்கிறேன்! :-)

test said...

அவிங்க கூட அக்காவும் சேர்ந்து கேள்வி எழுப்பிராய்ங்க! ஒரு வேளை பாளையங்கோட்டைல யாருக்கோ சேர்த்து விழுதோ?
ஸ்ஸ்ஸ் அப்பாடா! இப்பதான் நிம்மதியா இருக்கு! :-)

Robin said...

இப்போதான் அவங்க நம்மளப் பற்றி சரியாப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க :)

mamtc said...

Not to forget one another label every indian carries "argumentative indian".
This is an very interesting post Chitra and lot of things to ponder about in this.
From my personal experience, I love America. In US, you can be the way you want ie follow the beliefs - ie you dont have to take or give bribe, be honest and not lie and honesty is honored and you can have selfrespect and not bother about your family background, caste or your kindergarden scores to dicate or determine your current state. You dont have to face personal attacks.
Whereas, these arent options in India, if you want to blend in live peacefully, you have to compromise and loose your identity and be forced to bribe, lie, cheat and be dishonest and always be ready to attack the person rather than the idea.
I am not painting a utopic picture here but as a average Joe or Jane you can pretty much live as you want whereas in India unless you have "chalta hai" attitude you cant survive.

கௌதமன் said...

இந்தியாவை விட்டு வெளியே எங்கும் கால் வைத்தது இல்லை. ஆனால், இந்தியாவுக்கு உள்ளேயே தமிழ்நாட்டில், ஓர் அண்டை மாநில மக்கள் பற்றி இப்படி மற்றவர்கள் பேசிக் கேட்டதுண்டு.

Asiya Omar said...

//திருவிளையாடல் நக்கீரன் மாதிரி ஒரே பீலிங்க்ஸ்சு ஆஃப் இந்தியாவா ஆயிடுச்சு.... ..... இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில், யாராவது குறைவாக குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்..... ஃபீல் பண்ண போற அடுத்த ஆள், நீங்க தான்னு தெரியும்..... அதான் உங்க காதுல விஷயத்தை போட்டு விட்டேன்.//

இந்த அவசரப் பகிர்வு உங்கள் அக்கறையை காட்டுகிறது.நம் நாடு நம் இனம் எங்கும் தூற்றப்பட்டால் இரத்தம் கொதிப்பது இயல்பு தானே!

Jayanthy Kumaran said...

very thoughtful post chitra..
its really painful to read the near past happenings..
to think positively lets rely on our young kids to grow up perfectly..:)
Tasty Appetite

Thenammai Lakshmanan said...

இருக்கும் ஊருடன் ஒத்து வாழணும் என்பதுதான் என் கருத்தும்..:)

கும்மாச்சி said...

ஊருடன் ஒத்துவாழ் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். நாம் தான் அதை சரியாக கடை பிடிப்பதில்லை.

Unknown said...

மூணாவது நியூஸ் கொஞ்சம் ஓவராதாங்க இருக்கு

KParthasarathi said...

ரொம்ப நாட்கள் கழித்து வந்தமைக்கு மிக்க சந்தோஷம்.
Like curate's egg, your post is good in parts.நம்முடைய அணுகுமுறைகளில் எல்லாம் தப்பல்ல.ஒரு சிலர் பண்ணுவதை வைத்து மொத்த பேரையும் அளவிடுவது சரியாகப்படவில்லை.
நீங்கள் குறிப்பிடிருந்த சில நாடுகளிலிருந்து நிறைய பெண்கள் தப்பான காரியத்துக்கு வருகிறார்கள்.அங்கிருந்து பெண்களே வரக்கூடாது என்று சொல்லுவது பைத்தியகாரத்தனம்.சரியாக பரிசோதித்து அனுமதிக்க வேண்டியது சரிதானே.
இங்க வருகிற celebrities பண்ணும் கூத்து வேடிக்கைதான்.
நம்முடைய அனுபமா ராவையும்,அப்துல் கலாமையும் அவர்கள் படுத்தின அவமானகளை எங்கு சொல்வது.எல்லா முக்கிய புள்ளிகளையும் மீடியா அல்லது papparazzi கும்பல் சூழ்வது எங்கும் நடப்பது தானே.Diyana பற்றி மறந்து விட்டீர்களா?Security என்கிற பெயரில் நம் ஆட்களிடம் நடந்து கொள்வது சரியா. Oprah வருவது வராதது அவர்கள் இஷ்டம்.
நார்வே சமாசாரம் முரட்டுத்தனமாக இருக்கிறது.What is the spirit behind rules?The children should not be ill treated.Is feeding a child in an Indian family by hand or sleeping with parents a crime.முட்டாள்த்தனதிற்கு வேறு சம்பவமே வேண்டாம். எதிலும் நிதானம் வேண்டும்.

மற்றபடி நீங்கள் கூறி உள்ளதில் உண்மை இருக்கிறது.நம்மை தாழ்த்தி கொள்ளவேண்டாம்.மற்றவர்களிடமிருந்து நல்லதை கற்றுக்கொள்ள தயங்கவும் வேண்டாம்.நாம் செய்வது அனைத்தும் தப்பல்ல.

bandhu said...

மற்றவர் நம்மை பற்றி நினைப்பது மிகவும் சரியாகவே இருக்கிறது என நினைக்கிறேன். ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்றாலும் நாம் கடைபிடிக்கும் பழக்கங்களை விட்டு விட வேண்டும் என்பது இல்லையே! தனித்தன்மையுடன் ஊரோடு சேர்ந்து வாழ வேண்டும்!

Chitra said...

Dear K.P. Sir,

பநாம் செய்வது அனைத்தும் தப்பல்ல ...ஆனால், நாம் விமரிசிக்கப்படுவது எதனால் என்றால், நாம்
செய்வது அனைத்தும் சரியே என்ற எண்ணத்தினால் தானே

Chitra said...

ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்றாலும் நாம் கடைபிடிக்கும் பழக்கங்களை விட்டு விட வேண்டும் என்பது இல்லையே! தனித்தன்மையுடன் ஊரோடு சேர்ந்து வாழ வேண்டும்!

........ அதை சரியாக புரிந்து கொள்ளாமல், குழப்பத்தினால் வரும் சங்கடங்கள் அதிகம் உண்டு.

கிரி said...

உக்ரைன்

இதில் இந்திய அரசாங்கம் விசாக்கு என்ன கட்டுப்பாடுகளை விதித்தது என்று தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் விசா முறைகள் அவ்வளவு கடுமையானதாக இல்லை. எனவே இது அனைத்து நாடுகளிலும் நடக்கும் ஒன்றும் தான். மற்ற நாடுகளை எதிர்த்தும் சில நேரங்களில் போராட்டங்கள் நடை பெற்று இருக்கிறது.

ஒபரா

பொதுவா நம்ம ஆளுங்க வெளிநாட்டு ஆளுங்கன்னா பல்லை காட்டிட்டு வேலை பார்ப்பானுக.. இவங்களுக்கு பிரச்சனை ஆகி இருக்குன்னா ஒருவேளை இவங்க மேலையும் தவறு இருக்கும். அவங்க ஊர்ல இருக்கிற மாதிரியே இங்கேயும் எதிர்பார்த்தால் அது நடக்காது. இவங்க இந்தியா வரணும் என்று யாரும் அழவில்லை. அங்கேயே இவர்கள் இருந்து கொள்ளட்டும் இதனால் இந்தியாக்கு எந்த நஷ்டமும் இல்லை.

நார்வே

சரியாக புரியலை.

மற்றபடி மற்றவர்கள் கேட்பதாக நீங்கள் கூறியுள்ள கேள்விகள் எல்லாம் உண்மை தான் அதே போல வெளிநாட்டவர்களிலும் பலர் கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை தான். சதவீத அளவில் வேறுபடலாம்.

தமிழ் உதயம் said...

இது இந்தியருக்கு மட்டுமல்ல - ஆசிய கண்டத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் பொருந்தக்கூடும் என்று நினைக்கிறேன். நல்ல பதிவு.

Chitra said...

கிரி சார்,

The incidents may be trivial matters. But, indeed, they have triggered some issues in highlighting the less noticed side of Indian faces. :-(

Take care.

கிரி said...

ஐயையோ சித்ரா என்னை சார் எல்லாம் கூப்பிடாதீங்க :-)) கிரியே போதும்.

Chitra said...

ஓகே, கிரி...... :-)

தமிழ் உதயம் said...

தூத்துக்குடியில் சில வெளிநாட்டு இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள் - தாங்கள் நாட்டு பாரம்பரியப்படி. குடித்து விட்டு சாலையில் சென்ற தமிழ் பெண்களுக்கு முத்தமிட்டு. கொதித்து போன நம்மவர்கள் - அவர்களிடம் தங்கள் பாரம்பரியத்தை (அடித்து, உதைத்து) காட்டி விட்டார்கள். அமெரிக்கர்கள் இந்தியாவில் அமெரிக்க நினைப்பிலும், இந்தியர்கள் அமெரிக்காவில் இந்திய நினைப்பிலும் வாழுவது தவறு தான்.

Chitra said...

யாராக இருந்தாலும் தவறுதான். ஆனால், அவர்கள் விவாதித்தது - இந்தியர்கள் தங்கள் மேல் உள்ள தவறுகளை என்றுமே நல்லவிதமாக ஏற்றுக் கொள்வதில்லை என்று.

ஆனந்தி.. said...

மூணு லிங்க் கும் படிச்சேன்...முதல் லிங்க் இல் அவங்க போராடுற மெத்தடே செம காமடியா இருக்கே...இந்த மாதிரி;-))) முறையில் போராடினால் இந்தியன் எம்பஸி கட்டுப்பாடும் நியாயம் தான்னு தோணுது...ஹீ ஹீ....;-))) இந்தியா னால் கலாச்சாரம்பூ...;-)))) dont break the rules..;-))

நார்வே விஷயம் பத்தி சொன்னால் இந்திய பெற்றோர்கள் அப்டிங்கிறது தான் ஒரு issue ...ரைட் ...;-))) இப்படி ஆஸ்ட்ரேலியா ஓரமா கூட இப்படி கிறுக்கு பெற்றோர் இருக்கலாம்...உசிலம்பட்டி ரெண்டாவது தெருவுலயும் இப்படி பெற்றோர் இருக்கலாம்...;-)) ஆனால் இந்தியா ங்கிற மாஸ் ;-)) தான் இப்ப டவுன் ஆப் டாக்...;-))

ஒபேரா விஷயம் ...இங்கே இந்தியா மீடியா வெளிநாட்டு பப்பராஸி களை விட கொஞ்சம் வீக் தான்...;-)) பட் நம்மாளுங்க இன்னும் கொஞ்சம் அசடுஸ் ஆ இருக்கறது தான் அபத்தம்...;-))

அப்புறம் அம்மு....வெளிநாட்டில் இருக்கீங்க...ஸோ,,நீங்க சொல்றதிலும் உண்மை இருக்கும் இந்தியா பத்தி அங்க சொல்ற குற்றசாட்டுகளில்...;-)) ஸோ நாட்டாமையம்மா...நன்றி தங்கள் பகிர்விற்கு..;-)))

ராஜ நடராஜன் said...

சித்ரா நலமாக இருக்கீங்களா?குடும்பத்தில் அனைவரும் நலம்தானே?

நேற்றுத்தான் பதிவுகளில் காணமல் போனவர் பட்டியலில் நீங்களும் சேர்ந்திட்டீங்களோன்னு நினைச்சேன்:)

Welcome back!

ராஜ நடராஜன் said...

நேற்றைய நினவுபடுத்தலுக்கும் கூட காரணம் ஜிடிவி தொலைக்காட்சியில் அமைதிப்படை படம் போட்டார்கள்.சத்யராஜ் தாயம்மாவை கலாய்த்துக் கொண்டிருந்தார்:)

Chitra said...

ஆனந்தி,

இதுதான் முதல் முறையாக நெகடிவ் விமர்சனங்கள், இந்தியாவுக்கு எதிராக கேட்கிறேன் என்று நினைக்கிறேன். அதான், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். பொதுவாக, இங்குள்ளவர்கள், இந்தியா மேல் தனி மதிப்பும் மரியாதையும் வைத்து பேசி தான் நான் பார்த்து இருக்கிறேன்.

Chitra said...

நடராஜன் சார்,

உங்கள் ப்ளாக் ஓபன் ஆகவில்லை.
காணாமல் போகவில்லை, சார்.... நேரமின்மைதான் காரணம்.

ஆனந்தி.. said...

புரியுது அம்மு....

ஆனால்...இந்தியா வை பத்தி கடந்த வாரம் நல்லா பேசிகிட்டே சில விஷயங்களில்...

பிரபல வெளிநாட்டு மாடல் நவோமி காம்பெல் இந்தியா வந்திருக்காங்க....கேரளா கோவளத்தில் இப்ப இருக்காங்க....நம்ம ஊரை பார்த்து அசந்து போயி....போகவே பிடிக்கலன்னு சொல்லிட்டு திரியுதாம்.....;-))

rajamelaiyur said...

எவ்வளவு விஷயம் நடக்குதா ?

rajamelaiyur said...

==================================

மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?

Chitra said...

ஹா, ஹா, ஹா, ஹா,..... நடராஜன் சார், செம!

ராஜ நடராஜன் said...

//இந்தியர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு என்று ஒரு இந்தியாவை அங்கே உருவாக்கிக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர, இருக்கும் நாட்டின் நல்ல கருத்துக்களை - பண்புகளை - ஏற்று கொள்ள தயக்கம் காட்டுவது ஏன்? //

இந்தியாவில்தான் மொழிவாரியா மாநிலங்களைப் பிரித்து விட்டோம்.ஆனால் குவைத்தில் சல்மியா,அபாசியா போன்ற இடங்கள் குட்டி இந்தியா மாதிரி மொழி,மதம் கடந்த ஒரே பகுதியில் வாழும் ஆனால் ஒருவருக்கு ஒருவர் ஒட்டிக்கொள்ளாத Flat system வாழ்க்கை.

தீபாவளிக்கு பட்டாசு,கிறுஸ்மஸ்க்கு சர்ச்ல கூட்டம்,ரம்ஜான்க்கு புத்தாடை,ஆகஸ்ட் 15க்கு தூதரகத்தில் இந்திய கொடி என இந்திய கலாச்சாரத்தின் விகுதிகளும் மொத்தமாக வெளிப்பட தவறவில்லை.

Thoduvanam said...

ரொம்பவே சுய பரிசோதனை பண்ணிக் கொள்ளவேண்டும். ஆக்கபூர்வமாய் சிந்திக்க வேண்டிய கருத்து.

Yoga.S. said...

வணக்கம் சித்ரா!அருமை!கடந்த வார விஜய் டி.வி "நீயா?நானா?"பாருங்கள்!

ஹுஸைனம்மா said...

ஒரு நாட்டின் விஸாவுக்கான கெடுபிடிகள் செய்வதென்பது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நன்மைகள் கருதி, அந்நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள் பலகட்ட விசாரணை, ஆய்வுகள், ஆதாரங்களுடன் கலந்தாய்ந்து எடுக்கும் முடிவு. அதை எப்படி தவறு சொல்ல முடியும்? மேலும், அப்படியும் ஒருவேளை அது தவறான முடிவு என்றால், அதை எதிர்த்துப் போராட இதுதான் வழியா? முறையா? (இந்தியாவிலும், இதே முறையில் இந்திய ராணுவத்தை எதிர்த்து அஸ்ஸாமில் பெண்கள் போராடினார்கள். அது தவறான வழிமுறை என்றாலும், உயிர்ப் பிரச்னைக்காகப் போராடியது.) தகுந்த சான்றுகள்/ காரணங்கள் இருந்தால் விஸா வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை என்பது எதிரி நாடான பாகிஸ்தானிலிருந்தே பலரும் வந்து போவதிலிருந்து கண்கூடு!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில், யாராவது குறைவாக குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்..... //

ஆஹா, வெகு அருமையாக எழுதி முடித்துள்ளீர்கள், சித்ரா.

இருக்கும் நாட்டுடன்+ஊருடன் ஒத்து வாழணும் என்பதுதான் என் கருத்தும்..:)

அன்புடன் vgk

ஹுஸைனம்மா said...

நார்வேயில் அரசாங்க செய்தது, என்னைப் பொறுத்த வரையில், அராஜகம் என்பேன்!! தன் குழந்தையை, தன்னுடன் படுக்க வைப்பது ஒரு தவறா? கையால் உணவு ஊட்டுவதில் என்ன கொடுமை உள்ளது என்று புரியவில்லை!!

முதலில் இந்த (அமெரிக்க/ ஐரோப்பிய) நாடுகள் எல்லாம், அளவில்லாத சுதந்திரம் வழங்குகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். We are open towards multiculturalism என்றும் சொல்கிறார்கள். ஆனால், என் வாழ்க்கைமுறையை அங்கு பின்பற்ற முயலும்போது, இது தப்பு, எங்கள் முறையைத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார்கள். இது என்ன double standard? பொதுவெளியில் உள்ள விதிமுறைகளை மதிப்பதில் தவற மாட்டேன். ஆனால், தனிப்பட்ட வழக்கங்களை மாற்றச் சொல்வது??

மேலும், இதுபோல, பெற்றோரை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரித்து, யாரோ ஒரு ஸோஷியல் வொர்க்கரால் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்ல மனநிலையுடன் வளருமா?

இது குறித்த ஒரு செய்தி: பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான ஜான் லெம்மிங், “சமீபத்தில் நடந்த லண்டன் கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் பெரும்பாலோனோர் இம்மாதிரி அரசு காப்பகங்களில் கண்டிப்பின்றி வளர்க்கப்பட்டவர்களே. எனவே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே அரசு தலையிடக்கூடாது” என்று பாராளுமன்றத்தில் பேசியதற்கு பெற்றோர்களும் பேராதரவு தெரிவித்ட்துள்ளனர்.

இராஜராஜேஸ்வரி said...

பீலிங்க்ஸ்சு ஆஃப் இந்தியா//


ரோமில் இருக்கும் போது ரோமானியனாக இரு என்றொரு பழமொழி கூட உண்டே!

வெளி நாடு சென்ற பின்பே நம் கலாச்சாரம் பற்றிய பற்றே தலைதூக்கத்தொடங்குகிற்தோ என்ன்வோ !!

ஒபாமா கூட இந்தியப் பெற்றோர் மாதிரி இருங்கள் என்று கூறினாரே..

ஹுஸைனம்மா said...

அதே போலத்தான், ஓப்ரா வின்ஃப்ரேயின் முடிவும். எல்லாரின் எதிர்பார்ப்பும் ஒரே மாதிரி இருக்காது. அமெரிக்காவுக்குப் போயிட்டு, இனி இந்த பக்கம் தலவச்சுகூடப் படுக்க மாட்டேனு சொன்னவங்களும் உண்டு. அவர் வருவதாலோ, வராததாலோ இழப்பு இந்தியாவுக்கு இல்லை.

//இந்தியர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு என்று ஒரு இந்தியாவை அங்கே உருவாக்கிக் கொள்வதில் தான் கவனமாக//
இது எல்லா நாட்டினருக்கும் பொருந்து சித்ரா. அமீரகத்திலேகூட, ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள் உண்டு. இரானியர்கள் பெரும்பான்மையாக உள்ள் ஏரியா உண்டு. ஏன், அமெரிக்காவில் afro-americans மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் ஊர்கள் இல்லையா? இப்படி எல்லாரும் தத்தம் இனத்தவருடன் இருப்பது பெரும்பாலும் உணவு-சார் பழக்கங்கள் காரணமாகவே என்று நினைக்கிறேன்.

உங்க ஆதங்கம் புரியுது. நானும் அந்தமாதிரி உணர்ந்திருக்கிறேன் பலமுறை. சில காரணங்கள் நியாயமானவை என்றாலும், பல ஏற்றுக் கொள்ள முடியாதவை. There are plus and minus in every community/society in this world.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு சித்ரா. ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவா.. பிசியா?.. தொடரட்டும்.

Mythili (மைதிலி ) said...

நல்லா கொட்டி இருக்கீங்க குப்பையை...

ஸாதிகா said...

ஊருடன் ஒத்து வாழ் என்பது பழமொழி ஆச்சே!

சுட்டபழம் said...

ச்சே... இம்புட்டுதானா.... ஒன்னும் பிரச்சனை இல்ல... ஒரு ஐநூறுகிலோ மிளகாய்வத்தல் ஒரு நூறுகிலோ உப்பு ரெண்டையும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்ல ஏத்தி இந்தியாவ ஒரு கிளாக்வைஸ்ல மூணுதபா...ஆண்ட்டிகிளாக்வைஸ்ல மூணுதபா சுத்தவச்சு திருஷ்டி கழிச்சிட்டா சரியாபோகும்... இதுக்கெல்லாம் டென்ஷனாகலாமா கூல் ;-))

goma said...

எல்லா கலாச்சாரத்திலும், தங்களுக்குச் சாதகமானதை மட்டுமே ,அரை குறையாகப் புரிந்து கொண்டு, ஆட்டம் போடும் ,பெரும்பாலான இந்தியர்கள்தான், இந்தியாவின் பெயரைக் கெடுக்கின்றனர்

RAMA RAVI (RAMVI) said...

உங்கள் மறுபடி பதிவு பக்கம் பார்க்க சந்தோஷமா இருக்கு சித்ரா.

வருந்தத்தக்க விஷயத்தை சொல்லியிருக்கீங்க.

baleno said...

சுவாரஸ்யமான தகவல்.
அது இலங்கையர்களுக்கும் பொருந்தும்.

இந்திய நாட்டில் கூட சரியாக கடைப்பிடிக்காத பழக்க வழக்கங்களை வெளிநாட்டில் வந்ததும் கடைப்பிடிப்பதன் காரணம் என்ன

இது பற்றி நாங்களும் (நண்பர்கள்) குழம்பியது உண்டு.

ஆர்.வேணுகோபாலன் said...

ஓப்ரா வின்ஃப்ரே- சி.என்.என் –ஐ.பி.என், என்.டி.டிவி போன்ற சேனல்களுக்கு அளித்த பேட்டியில் “India is the greatest show on the earth,” என்றும் “My visit to India is the greatest experience ever,” என்றும் சொன்னார். நார்வேயில் அந்த அரசு நடந்துகொண்டிருக்கும் விதம், நகைப்புக்குரியதாக இருக்கிறது. இந்தியர்களைப் பற்றி வெளிநாட்டினர் மட்டம்தட்டுவது புதிதல்ல; வின்ஸ்டன் சர்ச்சில் காலத்திலிருந்தே, அல்லது அதற்கு முன்பிருந்தே கூட இந்த சிண்ட்ரோம் இருக்கிறது. இந்தியாவில் தான் ‘அதிதி தேவோ பவ,’ என்று சுற்றுலாத்துறை விளம்பரங்களில் போட்டு, வெளி நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கு கடவுளையொத்த மரியாதை அளிக்கின்றனர். பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், பல தட்பவெட்பசூழ்நிலைகள், பல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைத் தன்னுள் கொண்டுள்ள இந்தியாவை, மேற்கோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவது அவர்களது எரிச்சலையே காட்டுவதாக உணர்கிறேன்.

Because, they always want to see India as their favourite whipping boy!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில், யாராவது குறைவாக குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்.....//

ஹா...ஹா...ஹா...

ஸலாம் சகோ.சித்ரா...
உலகில் மனிதர்கள் பலவிதம்...
அவர்களில் நல்லவர்களை கண்டால் பெருமை படுவோம்...
தீயவர்களை கண்டால் வருத்தப்படுவோம்...
ஒரு சிலருக்காக ஒரு நாட்டை பொதுமைப்படுத்துவது தவறு.

அதுமாதியான உக்ரைன் பெண்கள் இந்தியா வராமல் தடுக்கப்பட்டது நமக்கு பெருமை. வெல்டன் இந்தியன் எம்பசி.

ஏதோ அடிதடி கலாட்டா போல... வகையாக மாட்டி மூக்குடைபட்டு அவமானப்பட்டு உள்ளார் போலும் ஓப்ரா. அதனால் வராவிட்டால் போய்ட்டு போறார் நஷ்டம் அவருக்குத்தான்.

நார்வே அரசு நடந்துகொண்டிருக்கும் விதம், செம காமடியாக இருக்கிறது. உணர்வற்ற பொம்மைகளா மக்கள்..? பாவம் அங்கே உள்ளோர்.

இந்தியர்கள் ஒன்றும் அகதிகளாக வெளிநாடு செல்லவில்லை. இங்கே வந்து நம் திறமை கல்வி அனுபவ அறிவுக்காக இன்டர்வியு வைத்து அழைத்து சென்று உள்ளனர். we are their guests..!

தப்பு செய்யாம இருக்கும்போதே இவ்ளோ திட்ட ஆரம்பிச்சிட்டாங்களா..? ம்ம்ம்... சர்தான். இவர்களின் பேச்சு இந்தியர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டது போல உள்ளது. நாம் உஷாராக வேண்டிய தருணம்.

Chitra said...

சம்பவங்களை தனித்தனியாக ஆராய்வது எனது நோக்கமல்ல. அப்படி பார்த்தால், வெளிநாட்டினரை, ஒட்டு மொத்தமாக - "அவர்களே இப்படித்தான்" என்று நம்மவரும் stereotyped image உடன் பார்ப்பதுண்டு. இந்தியரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் விஷயங்கள், மற்ற நாட்டினரால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படலாம். vice versa.

இந்தியர்கள், வெளிநாட்டில் தங்களின் பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அங்கும் இந்தியர்களாகவே இருக்க முயல்வதில், அந்நாட்டுக்கு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு - இருப்பதில் , தவறும் இல்லை.

ஆனால், அதே சமையத்தில், ஒரு வெளிநாட்டினருக்கு இந்த உரிமை இந்தியாவில் வழங்கப்படுகிறதா - அவர்கள் பழக்க வழக்கங்கள் எந்த அளவில் ஏற்றுக் கொள்ள படுகிறது என்று தெரியவில்லை.

வெளிநாட்டினர்கள் பலரை - குறிப்பாக, white skinned people, still get a royal treatment in India. :-(

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

It is not the news as such, but the discussions and questions that came along with those news, that got my attention.


இந்த கேள்விகளில் சிலவற்றை, இந்தியர்களே எழுப்பினார்கள் என்பது தான் வேடிக்கையான விஷயம்.

You can read many newspaper articles and blogs (in English) on these issues and the comments that they received for them.

Chitra said...

In the news about the Ukaranian women, many Indians saw that there was nothing wrong in scrutinizing the visas before giving it to them.

ஆனால், போராட்டம் நடந்த காரணமே வேறு. உக்ரனியன் பெண்களை, இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக விலைமாதுக்கள் போல குற்றம் சாட்டுவதற்கு கண்டனம் தெரிவித்தே போராட்டம் நடத்தினார்கள்.

ஒரே விஷயம், இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது.

ராஜ நடராஜன் said...

//ஆனந்தி.. said...

புரியுது அம்மு....

ஆனால்...இந்தியா வை பத்தி கடந்த வாரம் நல்லா பேசிகிட்டே சில விஷயங்களில்...

பிரபல வெளிநாட்டு மாடல் நவோமி காம்பெல் இந்தியா வந்திருக்காங்க....கேரளா கோவளத்தில் இப்ப இருக்காங்க....நம்ம ஊரை பார்த்து அசந்து போயி....போகவே பிடிக்கலன்னு சொல்லிட்டு திரியுதாம்.....;-))//

மறுமொழி பார்க்க வந்தேன்,ஆனந்தி சிக்கிகிட்டாங்க:)

கோவாதானே!பின்ன போகவே பிடிக்கலைன்னு ஏன் சொல்ல மாட்டாங்க?அஞ்சுனா பீச் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா போறேன் பேர்வழின்னு வந்தவங்க நிறைய பேர் கிடார்,கஞ்சா,வீடு,Flee market ன்னு அங்கேயே செட்டிலாகிட்டாங்க.நட்பான மாநிலமாக இந்தியாவில் கோவாவை முதன்மைப் படுத்தலாம்.ஆனால் அங்கேயும் அம்ச்ச முனிச் (நம்மாளுக) என்ற கொங்கணி பாசம் கொண்டவர்கள் இருந்தாலும் பொதுவாக நட்பான மக்கள்.

பெண்களுடனும் லஜ்ஜையில்லாமல் நட்பாக பழக இயலுமென்று எனக்கு கற்றுக்கொடுத்த இடம் கோவா.

middleclassmadhavi said...

My feelings too...

விச்சு said...

இந்தியாவைப் பற்றிய வேறு கோணம்.

விச்சு said...

நீங்கள் சொல்வது உண்மையும் கூட. ஊரோடு ஒத்து வாழ்ந்தால் யாருக்கும் பிரச்சனையில்லை.

ஆனந்தி.. said...

/மறுமொழி பார்க்க வந்தேன்,ஆனந்தி சிக்கிகிட்டாங்க:)//

யாரு சிக்குனா??
ஹீ..ஹீ...நல்லா படிங்க தொர:-)))
ஹலோ!! கோவா இல்லை ...என் கொ.ப.ச. ராஜ நடராசன் அவர்களே;-)) கோவளம்;-)) (கேரளா) நவோமி அக்கா;-) அசந்து
போனது நம்ம ஊருஆயுர்வேதம்,சாப்பாடு,கலாச்சாரம் பார்த்து;-) கோவா ஆர்ப்பாட்டங்களை
விட பலமடங்கு நவோமி செல்லம் அவங்க ஊரில் பார்த்திருக்கும்...அங்க
இல்லாத ஒன்னு நம்ம நாட்டில் அதை அசத்திருக்கே...ஒபேரா போனால் போகுது..அழகி நவோமிக்கு புடிச்சிடுத்தே அம்பி??;-))
Jokes apart...ஆயிரம் பேரு இந்தியாவை விமர்சனம் பண்ணினாலும்...குறைகளை மீறி
நிறைகள் தான் சித்ரா மிஞ்சும்...ஹீ..ஹீ...பின்ன
..சித்ரா,ஆனந்தி எல்லாம் படைக்கபட்ட நாடாச்சே...;-)))

பொன் மாலை பொழுது said...

இந்தியாவை பற்றி சொல்லப்படும் குறைகள் அனைத்தும் பிற நாடுகளுக்கும் பொருத்தும்.
பிற நாடுகள் எல்லாம் மிகவும் தாராளம் போலவும் இந்தியாமட்டுமே கட்டுப்பெட்டி போலவும் சித்தரிப்பது நியாயம் இல்லை.
வெளிநாட்டினர் இந்தியாவில் ஒரு இடத்தில் அல்லது அருகருகில் வசிக்க நேர்ந்தால் அவர்களும் ஒரு குழுவாகவே நாளடைவில் அமைந்துவிடுவர். அது இயல்பானது.

ஒரு விஷயம் முற்றிலும் உண்மை வெள்ளைத்தோல் காரர்கள் என்றால் இந்தியர்களிடையே சற்று மதிப்புத்தான்.
ஆங்கில ஆட்சியினால் இந்த மனப்பான்மை இந்தியர்களிடம் வளர்ந்துள்ளது.காலப்போக்கில் இதுவும் மாறிவிடும்.

அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிலையை இந்தியாவுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது.
ஆசிய நாடுகளில் சில குண நலன்கள் ஒரே மாதிரியே இருக்கும்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சில குண நலன்கள் ஒரே மாதிரி இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிற ஆசிய நாடுகளின் மக்களின் பழக்க வழக்கங்களை நோக்கினால் இது புலப்படும்.

மேலும் வெள்ளையர்கள் ஆசிய நாடுகள் எதிலும் கூட்டமாக தொடர்ந்து வாழ்வதில்லை. அப்படி வரவும் மாட்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் அவரவர் தாய் மொழியில்தான் அணைத்து வித கல்வி முறைகளும்.

நமக்கு இன்னமும் ஆங்கிலம் தான் வேண்டும் என்ற மனோ பாவம்.

ஆசிய நாடுகளில் கல்வி கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைபதில்லை. கற்றவர்களுக்கும் அதிக Exposher கிடைபதில்லை.

nellai ram said...

இருக்கும் ஊருடன் ஒத்து வாழணும்!

Chitra said...

///அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிலையை இந்தியாவுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது.////


..... அதே போல, அமெரிக்க ஐரோப்பிய கலாச்சாரத்தை நாம் குறை கூறுவதும் பொருத்தமற்றதுதானே என்ற கேள்வியும் வருகிறதே.

Chitra said...

///வெளிநாட்டினர் இந்தியாவில் ஒரு இடத்தில் அல்லது அருகருகில் வசிக்க நேர்ந்தால் அவர்களும் ஒரு குழுவாகவே நாளடைவில் அமைந்துவிடுவர். அது இயல்பானது. ///



..... உண்மை. சில சமயங்களில், இந்தியன் என்ற அடையாளத்தை கூட தொலைத்து விட்டு, தமிழராக மட்டும் என்னை பார்த்து, குறிப்பிட்ட தமிழ் குழுவினரோடு சேர சொல்லி, எனக்கு அறிவுரை வழங்கப்பட்ட சம்பவங்கள் கூட உண்டு. :-(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிச்சயமா இது சிந்திச்சு பார்க்க வேண்டிய விஷயம்தான். முதலில் நாம் நம் குறைகளை ஒத்துக் கொண்டு சரி செய்ய பழக வேண்டும்.

Rathnavel Natarajan said...

உங்கள் பதிவைப் படித்தேன்.
வேதனைப் படுகிறேன்.
நீங்கள் நீண்ட இடைவேளைக்கப்புறம் வந்தது மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள்.
மனப்பூர்வ வாழ்த்துகள் சித்ராம்மா.

Chitra said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிச்சயமா இது சிந்திச்சு பார்க்க வேண்டிய விஷயம்தான். முதலில் நாம் நம் குறைகளை ஒத்துக் கொண்டு சரி செய்ய பழக வேண்டும்.


...... Self-denial nature விட்டு விட்டு வேண்டும் என்பதை அருமையாக சொல்லி இருக்கீங்க.

Avargal Unmaigal said...

சித்ரா மேடம் உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்களுக்கு தெரியுமா ? தன் உண்மையான கலாச்சாரத்தை இழந்து வருவதுதான் இந்தியாவின் தற்போது கலாச்சாரம்.

பால கணேஷ் said...

இந்தியர்கள் எங்க போனாலும் தங்களுக்குன்னு கோயில், குரூப்னு அமைச்சுக்கறாங்கன்னு சொல்லப்படறதுல நிஜம் இருக்கோன்னு தோணுது. அந்தந்த ஊர்ல இருக்கற நல்ல பழக்கங்களை எடுத்துக்கிட்டு மாறணும்கறதும் ஒப்புக்க வேண்டிய கருத்துதான். யோசிக்கிறேன், யோசியுங்கள், யோசிப்போம்!

Madhavan Srinivasagopalan said...

எல்லாம் நேரம்..

Chitra said...

ஆனந்தி மேடம்,

நவோமி அக்காவுக்கு , இப்போ இங்கே மவுசே கிடையாது. ஆனால், ஓப்ரா மேடம் பெரிய ஆளு....... She is a great TV personality , who influences many American people.

ஆனந்தி.. said...

//ஆனந்தி மேடம்,

நவோமி அக்காவுக்கு , இப்போ இங்கே மவுசே கிடையாது. ஆனால், ஓப்ரா மேடம் பெரிய ஆளு....... She is a great TV personality , who influences many American people.//

நவோமி அக்காக்கு அங்கே மவுசு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் இந்தியா அழகை கொண்டாடும் நாடு;-)) ஒபரா பாட்டியை விட
அழகி நவோமி ஒஸ்த்தி மேடம்;-)))

இந்திரா said...

//பல வெளிநாட்டினர் , இந்தியாவின் கலாச்சாரத்தை - மக்களின் நடவடிக்கைகளை - பின் தங்கி இருக்கும் சில பழக்க வழக்கங்களை - அலசி ஆராய்ந்து பேசியதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், செய்திதாட்களிலும் ஆங்கில பதிவுகளிலும் முதன் முறையாக பார்த்தேன். //


வருத்தப்பட வேண்டிய விஷயம்..

Advocate P.R.Jayarajan said...

Good Analysis ...

சசிகுமார் said...

அக்கா திரும்பும் வந்தாச்சா நல்வரவு...

ஒரு கேள்விக்கு கூட பதில் தர முடியவில்லை....

ஸ்ரீராம். said...

நம்மைப் பற்றிச் சொல்லப் படும் குறைகளைக் கேட்கக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. குற்றம் கூற நீளும் கையின் மற்ற விரல்கள் அவர்கள் மார்பினையும் காட்டுவதை அவர்களும் ஒத்துக் கொள்ள வேண்டும். ப. இராமசாமி சொல்வதை ஏற்றுக் கொள்வோம்.

சுட்டபழம் கமெண்ட் சிரிக்க வைத்தது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

என்ன சொல்ல ?.
தவறான புரிதல்கள்.
......
பகிர்வுக்கு நன்றி .

சென்னை பித்தன் said...

சிந்திக்க வேண்டிய விஷயம்

kumaraguruparan said...

சிரிக்கவும் சிந்திக்கவும் செய்திகளைப் பகிர்ந்திருந்தீர்கள்...தாங்கள் பேரா பொ ம ராசமணியாரின் புதல்வி என்பதறிந்து மகிழ்ச்சி!...தொடர்ந்து உரையாடுவோம்.

Sivakumar said...

//
சி.பி.செந்தில்குமார் said...
முதல் இந்தியன்//

நான் கூட இத்தனை நாளா கமலைத்தான் அப்படி நெனச்சிட்டு இருந்தேன்..

Sivakumar said...

சித்ரா மேடம்...லீப் இயருக்கு ஒரு தபாதான் இனிமே பதிவு எழுதுவீங்க போல...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ரோமனில் ரோமனாக இருக்கத்தெரிய வேண்டும். இங்கிலாந்தில் கூட ஒரு முறை இந்தியர்கள் குறித்த ஒரு தகவல் படித்தேன். இந்தியர்கள் அலுவலக்த்தின் பேனா,பென்சில், பேப்பர் மற்றும் வீட்டிற்குத்தேவையான பொருட்களைத் திருடிக்கொண்டு போவதாகவும், வேலை நேரத்தில் அரட்டை அடிப்பதாகவும். எவரோ ஒருவர் செய்யும் தவறுகள், வெளி நாட்டில் அவர்களின் தாய் நாட்டுடன் இணைத்துக்கூறப்படும் என்பதையும், அனைவரையும் அது பாதிக்கும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும். வெளி மாநிலங்களில் வாழும் அனைவருக்கும் கூட இப்படியான அனுபவங்கள் இருக்கும்

மாலதி said...

கவனிக்க வேண்டிய விஷயம்.

பட்டிகாட்டு தம்பி said...

நல்ல பதிவு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Feel bad to hear such things... attitude and approach should change within us as well them I guess

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட...ராகவா?

மாலதி said...

நல்ல பதிவு.

பித்தனின் வாக்கு said...

opra varavillai enral enna kuraiji pogum. vantha vara illaiti poranu vidama en kavalaip paduringa.

ella nadum economic condition down aakki irukkum pothu namma nikkaramla athukku karanam namma family style and savings than. so antha culturai udaikka try pannuranga. dont worry.

bee indian.

பித்தனின் வாக்கு said...

ஆனால், நாம் விமரிசிக்கப்படுவது எதனால்

namathu family culturai break panninal mattum than nammai ulaga aarankil dummi aakka mudiyum.

பித்தனின் வாக்கு said...

...ஹீ..ஹீ...பின்ன
..சித்ரா,ஆனந்தி எல்லாம் படைக்கபட்ட நாடாச்சே...;-)))


ha ha well said. kooda ennaiyum serthu vidavum. mee tooooo

கோமதி அரசு said...

அன்பு சித்ரா, உங்களுக்கு என் வலைத்தளத்தில் விருது.

அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

சந்திர வம்சம் said...

தங்களுக்கு விருதொன்று காத்திருக்கு என் "தாமரை மதுரை" தளத்தினிலே!!

நெல்லி. மூர்த்தி said...

உக்ரைன்: எந்த நோக்கத்திற்காக ’விசா’ தடுத்தனர் எனும் அடிப்படையே புரிந்துக் கொள்ளாமல், நாங்கள் இப்படித்தான் என வித்தியாசமான முறையினில் எதிர்ப்பது போராட்டமாய் தெரியவில்லை. பேயாட்டமாய் தங்கள் அ(ங்)கத்தினை வெளிச்சம் போட்டு காண்பிப்பது போல் இருக்கின்றது! இதனால், விசாவினை தடுத்தது தவறே இல்லை எனும் கருத்திற்கே மேலும் வலுவூட்டியுள்ளனர்.
ஒபரா: ஒரு முறை நிகழ்ந்த அனுபவத்தினைக் கொண்டு இந்தியாவைக் குறை கூறுவது நியாயமாகத் தென்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாக திட்டமிட்டிருந்திருந்தால் தவறுகள் தவிர்த்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.
நார்வே: தாங்கள் வசிக்கும் நாட்டின் விதிமுறைகளை புரிந்துக் கொண்டு பின்பற்றுவோமேயானால் எவ்வித சிக்கலுமில்லை. இல்லையில்லை… இவையெல்லாமே தவறானவை எனும் எண்ணம் எழுமேயானால், நாம் வசிப்பதற்கான இடம் அதுவல்ல என்றறிந்து தாயகம் திரும்புதலே நலம். கனடாவினில் என் நண்பர் வட்டத்திற்கு நெருக்கமான ஒரு குடும்பத்தினை பற்றிக் கூறினார். நம் இந்தியாவில் இருப்பது போல தங்கள் குழந்தையை பொது இடத்தில் கண்டித்ததோடு இன்றி தண்டிக்கவும் செய்துள்ளனர். அதனைக்கண்ட காவலர்கள், குழந்தையினையும், பெற்றோரையும் சில நாட்கள் பிரித்து பெற்றோர்களுக்கு மழலைகளை பேணுவது எப்படி என வகுப்பெடுத்து பின்னர் குழந்தையினை தந்துள்ளனர். இது நமக்கு சரிபட்டு வராது என அடுத்த சில நாளிலேயே அவர்கள் தாயகம் திரும்பிவிட்டதாக கூறினர். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் நம் இந்தியாவினைப் போல ’தாம் செய்வதனைத்தும் சரி’ எனும் போக்கினில் நடைமுறை படுத்துவது அல்லது ஆதிக்கம் செய்வது… தவறென்றே கூறலாம்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வினிலும் ’சரி எது?’ எனும் தேடலை தவறவிடுவோமெனில்; ’தவறென்றறிந்தால் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம்’ அமைத்துக்கொள்ளாவிடில், ஆறாம் அறிவாம் பகுத்தறிவிற்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்பது போல நடந்துக் கொள்வோமேயெனில்….சிறப்பான வாழ்வியல் அமைவது கடினமே.
தங்களுக்கென்ற தனித்துவ பண்பாட்டினை பேணுவது தவறேயல்ல. நம் பண்பாட்டினை இனிவரும் தலைமுறைக்கு நாம் தான் உணர்த்த வேண்டும். ஆனால், அவை நாம் வசிக்கும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அங்குள்ளவர்களால் வேறுபடுத்தி பார்க்காத வண்ணம் இருக்கவேண்டும். அது இயலாத பட்சத்தில், தாயகம் திரும்புவதே உத்தமம். தங்களைப்போன்றே உள்ளக் கொதிப்பினில் நம்மவர்கள், குறிப்பாக அயலகம் பெயர்ந்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர் என்பது முற்றிலும் உண்மை.

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Malar Gandhi said...

This is very informative post. All along, I thought Indians do follow the govt' rules religiously in an alien land than in India. Yes, indeed, we don't blend with local community so well...it may take years!!!

Unknown said...

ஏன் இப்பொழுதெல்லாம் பதிவு எழுதுவது இல்லை? இங்குள்ளவர்கள் ஏதும் மனஉளைச்சலை ஏற்படுத்தி விட்டார்களா?
அப்படி எனில்
//Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes.//என்பது பொய்த்து விட்டதா?

Chitra said...

இல்லீங்க..... யாரும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு, நான் பலவீனமான மனம் உடையவள் இல்லீங்க.... கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.
நேரம் இன்மையும், எனது புதிய voluntary work மற்றும் இன்னும் சில commitments தான் காரணம். இத்தனைக்கும் மத்தியில் கம்ப்யூட்டர் நேரம் குறைவாகவே எனக்கு கிடைக்கிறது. பதிவுலகை மிஸ் செய்கிறேன். விரைவில் வர ஆசையுடன் - ஆவலுடன் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
உங்கள் விசாரிப்புக்கும் அன்புக்கும் நன்றி.

என்றும் அன்புடன் சித்ரா

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோ எப்படி
இருக்கின்றீர்கள் ?.....
ஆக்கம் எழுதும் எண்ணம் இன்னும் இல்லையா?..கருத்துரைகளில் மட்டுமே உங்களைக் காண முடிகிறதே!..

வரதராஜலு .பூ said...

என்ன ஆயிற்று மேடம், கிட்டதட்ட 6 மாதமாக எந்த பதிவும் இல்லை?

Vellupillai said...

நல்லதோர் வீணை செய்தே ! அதை நலங்கெட புழுதியில் எறிவருண்டோ ? சொல்லடீ சிவசக்தி என்றான் மகாகவி ! ஆனால்,,,,,,,,,,,,,,உள்ளூரில் இருக்கும் போது,,,பல சடங்குகளைக் கடைப்பிடிக்காதவர்கள்,,,,வெளியூர் சென்றதும்,ஊர் மெச்ச வேண்டுமென எல்லாவற்ரையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது என்பது சகஜமாகிப்போனது !,,,
இது விந்தை இல்லை ? வேடிக்கை ?

Vellupillai said...

நல்லதோர் வீணை செய்தே ! அதை நலங்கெட புழுதியில் எறிவருண்டோ ? சொல்லடீ சிவசக்தி என்றான் மகாகவி ! ஆனால்,,,,,,,,,,,,,,உள்ளூரில் இருக்கும் போது,,,பல சடங்குகளைக் கடைப்பிடிக்காதவர்கள்,,,,வெளியூர் சென்றதும்,ஊர் மெச்ச வேண்டுமென எல்லாவற்ரையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது என்பது சகஜமாகிப்போனது !,,,
இது விந்தை இல்லை ? வேடிக்கை ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

Madam, I am sharing an award with you.

Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

Kindly accept it.

vgk

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From Vai.Gopalakrishnan SIR..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

நன்றி...

Dino LA said...

அருமை

Dino LA said...

அருமை

Chitra said...


Asiya Omar has left a new comment on your post "சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.......":

//திருவிளையாடல் நக்கீரன் மாதிரி ஒரே பீலிங்க்ஸ்சு ஆஃப் இந்தியாவா ஆயிடுச்சு.... ..... இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில், யாராவது குறைவாக குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்..... ஃபீல் பண்ண போற அடுத்த ஆள், நீங்க தான்னு தெரியும்..... அதான் உங்க காதுல விஷயத்தை போட்டு விட்டேன்.//

ஆஹா!
விரைவில் தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்

பூ விழி said...

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை ஆயிடுச்சி இதோட போச்சா இப்படியும் ...... ஆச்சு போல
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் கலாசாரத்தை கால்சாராயாய் போட்டு கொண்டால் இப்படிதான் முன்னுக்கு முரணாய்

minnal nagaraj said...

உங்கள் கேள்விகள் நியாயமானவை சிந்திக்க வைப்பவை நமது குறைகளை நாம் களையவேண்டிய நேரமிது நம் கலாச்சாரம் போற்றபடவேண்டுமனால் நாம் நம்மிடமுள்ள தவறுகளை சரி செய்யவில்லை என்றால் நாம் உலக நடப்பில் தூற்றப்ப்படுவோம் என்பதில் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்

Angel said...

Happy Birthday Chithra .May God Bless You .

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சிறந்த பதிவாளா் சித்ரா! வளா்க
நிறைந்த புகழால் நிலைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Ellen said...

Hi Chitra,

I do not speak your language although how I wish I did so that I could read your posts. But Kp has made up for that lack himself by telling me about you and your writing. Further saying that we strike a common chord in the heart.. that of adoring Dad (in your case) and Mom (in mine). Though in this parental pack of nurturing neither is better than the other because both have individual and joint roles to play in our growing up. Praise a wise and magnificent God!

I am here to thank you for dropping by my blog and for your kind comment, encouragement and inspiration. It's so appreciated.

May the good Lord bless you and your family a thousandfold more with everything good.

Blessings in Christ.

Ellen

Unknown said...

வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா said...

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ரா சாலமன்.

NRIGirl said...

Thank you Chitra! For your encouraging comments on Konjam Ungalodu.

I have read your posts in the past; will continue.

Sorry to hear about these issues around Indians. The only thing we can do is to be better Indians ourselves. What do you say?

anitha shiva said...

சித்ராக்கா தயவு செய்து எழுதுங்கள்.
எவ்வுளவு பதிவர்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுத இருந்தாலும்,எழுத்தில் நகைச்சுவையைக் கொண்டு வந்து வயிறு புண்ணாகும் வரை சிரிக்க வைப்பது அபூர்வம் அக்கா.உங்களுக்கு அது இறைவனின் வரமாக அனைந்துள்ளது.நேயர் விருப்பம்.பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி சித்ரா (கொஞ்சம் வெட்டிப் பேச்சு) அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (12.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/12.html