கரகாட்டக்காரன் படத்தில், ஒரு காட்சியில், கவுண்டமணி செந்திலை பாத்து மனது தாங்காமல், "அதை ஏண்டா என்னை பாத்து கேட்ட?" என்பார்.
உங்களுக்கு எப்படியோ எனக்கு சில தருணங்களில் சிலருடைய கேள்விகள் என்னை அப்படி கேக்க தூண்டியிருக்கு.
நான் அசடு என்பதாலோ என்னவோ சில "புத்திசாலிகள்" என்னிடம் ஏதும் யோசிக்காமல் ஒரு கேள்வி கேப்பாங்களே பாக்கணும்............
நிஜமா இது எல்லாம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:
Scene 1:
(ஒரு நம்ப முடியாத expression முகத்தில் வைத்துக்கொண்டு) "புத்திசாலி":
"சித்ரா, நீங்க அமெரிக்காவிலா இருக்கீங்க?"
அசடுவின் பதில்: இல்ல இந்தியாவில் இருந்து கொண்டு வெயிட் போட்டதில் இப்ப அமெரிக்க வரைக்கும் விரிஞ்சுட்டேன்.
Scene 2:
"புத்திசாலி": "சித்ரா, நீங்க உங்க deliverykku அப்புறம் இப்படி குண்டு ஆயிட்டீங்களா? இல்ல கல்யாணத்துக்கு முன்னால இருந்து இப்படித்தானா?"
அசடுவின் பதில்: சாலமன் ஒரு குண்டு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு முன்னாலேயே நேந்துக்கிட்டார். என்னால திருநெல்வேலி ஒரு ஒன்னரை அடி பூமிக்குள்ள போய்ட்டதால மக்களை காப்பதலாமுன்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.
Scene 3:
"புத்திசாலி": "உங்களை கட்டிக்கிட்டு சாலமன் முழிக்கிறார?"
அசடுவின் பதில் கேள்வி: என்னை ரவுடி ராக்கம்மா என்றீர்களா இல்லை solomonai பாத்தா கேனையன் மாதிரி தோணுதா? எப்படி பாத்தாலும் damaging ஆன கேள்வி.
Scene 4:
"புத்திசாலி": "சித்ரா, நீங்க தமிழை இன்னும் மறக்கலையா?"
அசடுவின் பதில் கேள்வி: நான் தமிழை மறக்கதான் அமெரிக்கா போனேன்னு யார் சொன்னா?
Scene 5:
"புத்திசாலி": அங்கே அமெரிக்காவில் எல்லாமே கம்ப்யூட்டர் தானாமே?
அசடுவின் பதில்: ஆமாம். ஏன் ரெண்டு புள்ளைகளுக்கும் அப்பாவ கூட இருக்கேனுச்சு. நாந்தான், solomone போதும்னுட்டேன்.
Scene 6:
"புத்திசாலி": அங்கே ஒரே mechanical life ஆமே?"
அசடுவின் பதில்: ஒரு வருஷம் கழிச்சு நீங்க electrical or chemical கூட choose பண்ணிக்கலாம்.
Scene 7:
"புத்திசாலி": உங்களுக்கு வீட்டிலேயே இருந்தா bore அடிக்காதா?
அசடுவின் பதில்: வெளியே வந்தா "சிலர்" பேச்சும் போர் அடிக்குது. என்ன செய்ய?
Scene 8:
"புத்திசாலி": நீங்க எப்படித்தான் முழு நேரமும் house-wife ஆ இருக்கீங்களோ?
அசடுவின் பதில்: Solomon, part timekku வேற ஆள் பார்த்தார். ஒன்னும் சரியாய் அமையவில்லை.
கேள்வியும் பதிலும் இன்னும் தொடரும்.....................
11 comments:
"சித்ரா, நீங்க அமெரிக்காவிலா இருக்கீங்க?"
அசடுவின் பதில்: இல்ல இந்தியாவில் இருந்து கொண்டு வெயிட் போட்டதில் இப்ப அமெரிக்க வரைக்கும் விரிஞ்சுட்டேன்." :))))))))))))))
ithu Thirunelveli puththisaliyaa? thamirabaraNith thanni makkaLai ivvalavu poththisaali aakkum enpathu theriyaamap pochhu :((((((((
Ammu, thaamirabarani thanniya kuththam chollatheenga. indha keLvigaL America, Chennai, Sattur, Andhra endru pala ooru thanneeraal aakkappattadhu.
சமயத்தில் நிறைய பேருடைய கேள்விகள் என் மனதில் பதில்களை இப்படிப் பந்தாட வைக்கும் .அதையெல்லாம் வெளியே விட்டேன்னு வச்சுக்கோங்க ......தாங்க மாட்டாங்க.....பாவம்ன்னு விட்டு வச்சிருக்கேனாக்கும்
gomakkaa sollitanga... naan unna kelviye keeka maaten thaaye
Dhamyanthi, un kElvigaL nichchayam mokkai kidayaadhu. nee titanic, naan veRum boat........
ஹையோ... ஹையோ... சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணா போச்சி... சித்ரா, இப்படி பின்னி பெடல்-எடுப்பீயன்னு தெரியாம போச்சே !!! Copyright this... Later on you can publish !!!
Say hi to Solo, Chellam and Selvam.
Chandra, Aruna, Sajiv and Viraj
(via e-mail)
4,5,6,8 சூப்பர்.
Thank you, pinnokki.
ஹாஹாஹா
கடைசி கேள்வி தான் செம டரியல்!
:)))))
நான் இன்னும் உங்கள் ப்ளாகை விட்டு போகல .இங்க யே தான் சுத்திட்டிருக்கேன்.
செம கலாய் :))))
Post a Comment