Friday, October 23, 2009

என் குற்றமா? உன் குற்றமா?

அமெரிக்கா என்றாலே மக்கள் என்னமோ அவுத்து போட்டுட்டு அம்மணமா ஓடிக்கிட்டு இருப்பாங்க என்று இன்னும் எத்தனை பேர் நினைக்கிறாங்க தெரியுமா? அமெரிக்கன் இப்படியான் அப்படியான் என்று சொல்றவங்க அவங்க fantasy  lifein நிறை வேறாத  ஆசைகளை பரப்புராங்க போல சில சமயம் தோணும். இது  சில இந்தியர்களுக்கு மட்டும் இல்லை, western country lifenaa ஆபாச முகம் கொண்டதுதான் என்கிற எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும்.

சத்தியமா இந்த சம்பவம் Miami இல் வைத்து எனக்கு நடந்தது:

ஒரு டிசம்பர் மாதத்தில், Solomonukku  Surprise Christmas gift வாங்க எங்கள் நண்பர் பாலாவுடன் நான் ஷாப்பிங் mall  சென்றேன்.  Christmas time, அமெரிக்காவில் family portrait photos எடுப்பது ரொம்ப common. Miami இல் South American countries களான Cuba, Ecuador, Columbia போன்ற இடங்களில் இல் இருந்து செட்டில் ஆனவர்களும் அதிகம். ஒருவன் South American Accent Englishil பேசியபடி நாங்கள் mall உக்குள் வரவும்,  எங்கள் அருகே வந்து family portraits க்கு order புடிக்க  வந்தான். (உங்களுக்காக தமிழில்)

ஆர்டர் புடிக்கும் ஆள்:  சார், family portraits எடுக்க வாங்க.
பாலா (தன்னை மட்டும் என்று நினைத்து):  இன்னும் family ஆகலை.
ஆர்டர் புடிக்கும் ஆள்: (என்னையும் சுட்டி காட்டி): husband and wife ஆகவும் எடுக்கலாம்;
பாலா: அவங்க என் wife இல்ல.
ஆர்டர் புடிக்கும் ஆள்:  boyfriend girlfriend ஆனாலும் ஓகே.
பாலா: (சிறிது அதிர்ந்து): இது என் girlfriend இல்ல. என் friend's wife.
ஆர்டர் புடிக்கும் ஆள்: (பெரிய அதிர்ச்சியுடன் கண்ணை சிமிட்டியவாறு) : Oh man, anything is possible in America!!!!

இப்படிதான் இருக்கும் என்று ஒருத்தர் நினைத்து விட்டால் நாம் மேல மேல சொல்லும் செய்திகள் அவர்கள் பார்வையின் படியேதான் மெருகேறும். என்னால் அப்பொழுது சிரிப்பை அடக்க முடியலை. ஆனால் பாலாவின் முகத்தில் ஒரு சோகம். ஏதோ என்னவோ நு நினைக்காதீங்க. அவர் சொன்ன காரணம்:  இப்பதான் புரியுது. ஏன் என்னை, நான் mall உக்குள் வந்ததில் இருந்து, எந்த பொண்ணும் ஒரு தடவை கூட பாக்கலைனு யோசிச்சேன். இந்த மாதிரி எத்தனை பேர் நினைச்சாங்களோ? அவர் கவலை அவருக்கு.

2 comments:

goma said...

பாலாவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துவிடுங்கள்

ஆமா என்ன கிஃப்ட் வாங்கினீங்க...அதைச் செப்பவே இல்லையே

Chitra said...

naan vaangiya giftai vida, nadandha indha sambavathai sonna pOdha romba rasiththu siriththaar.