Monday, December 14, 2009

ஒரு சிரிப்பின் வலி



போன பதிவில் ஒருவர், நான் கொஞ்சம் சீரியஸா சில விஷயங்களை எழுதலாமே என்று பின்னூட்டம் போட்டிருந்தார். எனக்கு சுகமில்லை என்றால்  கூட சீரியஸ் ஆகுமா என்று என் நெருங்கிய நண்பர்கள் என்னை கேலி செய்வதுண்டு. அதனால், நமக்கு நல்லா வரும் சிரியஸ் விஷயத்தை பற்றியே ஒரு ஆராய்ச்சி பண்ணலாம் என்று முடிவு பண்ணி, இதோ ஒரு பதிவு:


"கடி"த்தாலும் சிரிப்பு:
வாய் விட்டு சிரிச்சேன் அப்படிங்குறாங்க. எனக்கு புரியவில்லை. வாயாலே தானே சிரிப்போம். வாயை விட்டுட்டு எப்படி சிரிக்க முடியும்?

சிரித்து வாழ வேண்டும்:
திரு. NSK அவர்கள், ஒரு பாடலில் நிறைய விதங்களில் சிரித்து காட்டியதாக என் அப்பா சொல்வார்.
யோசித்து பார்த்தேன். சிரிப்பில் தான் எத்தனை உணர்ச்சிகள் ஒளிந்து கொள்கின்றன?
அத்தனை உணர்ச்சிகளையும் சிரிப்பில் காட்டி, சிரித்து வாழ வேண்டும் போல.

புன் சிரிப்பு
சந்தோஷ சிரிப்பு
குதூகல சிரிப்பு
ஆதரவு சிரிப்பு
குழந்தை சிரிப்பு
தெய்வீக சிரிப்பு
சிறு புள்ள (த்தனமான) சிரிப்பு
காரிய சிரிப்பு
கன்னியின் சிரிப்பு
மயக்கும் சிரிப்பு
வெட்க சிரிப்பு
வெற்றி சிரிப்பு
ஆணவ சிரிப்பு
அலட்சிய சிரிப்பு
கேலி சிரிப்பு
கிண்டல் சிரிப்பு
நக்கல் சிரிப்பு
அசட்டு சிரிப்பு
நமட்டு சிரிப்பு
கேன(த்தனமான) சிரிப்பு
கிறுக்கு(த்தனமான) சிரிப்பு  (லூசு சிரிப்பு)
கோப சிரிப்பு
கொக்கரிக்க சிரிப்பு
எகத்தாள சிரிப்பு
வில்ல (த்தனமான) சிரிப்பு
வில்லங்க சிரிப்பு
அவமான (படுத்த) சிரிப்பு
கேவல சிரிப்பு
விரக்தி சிரிப்பு
சோக சிரிப்பு
இன்னும் சில உணர்வுகள், அந்த சிரிப்புக்கு பின்னால். பயங்கர சிரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாமோ?

தலையில் அடித்து கொண்டு சிரி:

எங்கள் ஊரு சிங்காரி - யார் அவள்?
இவள் நடந்தால் காம நெடி.
இவள் சிரித்தால் காமெடி.
இவள் பேசினால் செம கடி.
இவள் பார்த்தால் செத்து மடி.
இவளிடம் இல்லாத சரக்கு -
சில நூறு இருக்கு.
எங்கள் ஊரு சிங்காரி - யார் அவள்?
இட்லி ஊரில் பட்லி இவள்.
வட இந்திய ஊர்கள்,
சிங்கார சென்னைக்கு தந்த
வரமா? இல்லை, சாபமா? - இவள்
ஒருத்தியா, இல்லை புற்றீசலா?
bollywoodil போணி ஆகாத இவள் தேவை -
kollywoodil துணி இல்லாத கலை சேவை.
தமிழ் பட heroine -
என்ற பெயரில் நமக்கு அஜீரணம்
கொடுக்கும் இந்த மைதா மாவு போண்டாக்கள்.
--------ஒண்ணு ரெண்டு படங்களில் தலையை (ஓகே, ஓகே, "உடம்பு" பூரா ) காட்டிட்டு காணாமல் மறைந்து போகும் கதாநாயகிகளுக்கு சமர்ப்பணம். இந்த நடிகைகள், success ஆனால் கோயில் கட்டி ஆடு பலி கொடுக்குறாங்க. இல்ல, அதுக்கும் ஒரு படி மேல போய், டிவி ஸ்டேஷன் வச்சு, செம்மொழி தமிழையே பலி கொடுக்குறாங்க. புளப்பு சிரிப்பாய் சிரிக்குது. தலையில் அடித்து கொண்டு சிரிக்கும் இந்த சிரிப்புக்கு தமிழ்  நெஞ்சு வலிக்க வேண்டியதுதான்.
மற்றுமொரு டிவியில் ஒரு அவஸ்தை சிரிப்பை வச்சுகிட்டு ஒருத்தர்,  தன் புளப்பை நடத்திக் கொண்டு, நம்மை கஷ்டப் படுத்தி கொண்டு இருக்கிறார்.

சிரித்தாலும் ஏனோ  வலிக்குது: 

கொல் என்று சிரித்தாள்.
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி.
ரொம்ப சிரிச்சி வாய் வலிக்குது.
கீழே விழுந்து உருண்டு சிரிச்சேன்.
நல்லா  சிரிச்சதுல, கண்ணுல தண்ணியே வந்திட்டு.
மொக்கை போட்டான். ரத்தம் வந்துச்சு.

ஏன், ஏன், ஏன், ஏன்...............???
சந்தோஷத்தால் வரும் வலி, ஒரு சுக வேதனையோ?
நோகும் வரை சிரிப்பதில் தான் சந்தோஷத்தின் உச்சம் இருக்கிறதா?
வலி கொண்டுதான் சிரிப்பின் வலிமையையும் அளக்கப்படுகிறதா?
துன்பம் வரும்போது சிரிப்பவர்கள், சோகத்தில் இன்பம் காண்கிறார்களா?
இல்லை, சிரித்து சோகத்தின் கடுமையை குறைத்து கொள்கிறார்களா?

இன்று என் ஆருயிர் அப்பா என்னை விட்டு மறைந்து, 18 நாட்கள் ஆகிவிட்டன. அவரை நினைத்து அழ உட்கார்ந்தால் கூட, அவரின் மித மிஞ்சிய நகைச்சுவை உணர்வின் நினைவலைகள் எனக்குள் வந்து என்னை சிரிக்க வைக்கிறது. சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க .............. !

58 comments:

Vishy said...

"comedy is a serious business" - W.C.Fields. சிரிப்பு விஷயம் பற்றி சீரியஸான ஆராய்ச்சி. சிரிப்புக்கும் நகைச்சுவைக்குமே நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதை பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
மற்றபடி.. மசாலா படங்களுக்கு மைதா போண்டாக்கள் சரியான தேர்வு தானே..

புலவன் புலிகேசி said...

முதலில் உங்கள் தந்தைக்கு எனது இரங்கல்கள்....சிரிப்பை எப்படியெல்லாம் வக பிரித்து விட்டீர்கள்..நோயின்றி வாழ சிரிக்க வேண்டும்..

Mythili (மைதிலி ) said...

Enna Chitra siripilirunthu serious ukku poyita??
koncham sogamaayidichonnu oru chinna doubt thozhi..

paasaththin sirippu... (nam thai/thanthai) namakkaaga sirikkum sirippu..

Keep posting chitra....

ஜெட்லி... said...

சிரிப்பை பற்றி ஒரு பி.எச்.டி பண்ணிறிங்க....
அப்புறம் நீங்க டாக்டர்.சித்ரா வா ஆயிடலாம்..

அண்ணாமலையான் said...

முதலில் உங்கள் தந்தைக்கு எனது இரங்கல்கள். சிரிப்பு என்பதே சந்தோஷத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அத்தோடு வலி என்பதையும் சேர்த்து இரு வேறு உணர்ச்சிகளையும் இனைத்து பிரமாதமாக எழுதியிருக்கீர்கள். திறமைக்கு வழ்த்துக்கள்..

Vishy said...

என்னைப் பொருத்த வரை சிரிப்பில் கடினமான சிரிப்பு “நோகா சிரிப்பு” - அடுத்தவரின் மனம் கோணாதபடியான சிரிப்பு.. அந்த வகைச் சிரிப்பு தான், இப்போது அரிதாகி வருகிறது..

Another urban myth about smile
http://www.snopes.com/science/smile.asp

Thenammai Lakshmanan said...

அட அழுகையிலும் சிரிப்பா
நல்லா இரு புள்ள
கடவுள் உனக்குக் கொடுத்த வரம்
ஆனா அமுதா தமிழ் கிட்ட மட்டும் அப்பா நினைவு தினத்துல சிரிச்சேன்ன்னு சொல்லிடாத
அப்புறம் உன்ன அழாம அடிக்க மாட்டா

ராமலக்ஷ்மி said...

கடைசி வாக்கியம் எங்களுக்கும் வலிதான் சித்ரா. உங்கள் தந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காலம் வலியை ஆற்றப் பிரார்த்திக்கிறேன்.

தமிழினிமை... said...

////போன பதிவில் ஒருவர், நான் கொஞ்சம் சீரியஸா சில விஷயங்களை எழுதலாமே என்று பின்னூட்டம் போட்டிருந்தார். எனக்கு சுகமில்லை என்றால் கூட சீரியஸ் ஆகுமா என்று என் நெருங்கிய நண்பர்கள் என்னை கேலி செய்வதுண்டு. அதனால், நமக்கு நல்லா வரும் சிரியஸ் விஷயத்தை பற்றியே ஒரு ஆராய்ச்சி பண்ணலாம் என்று முடிவு பண்ணி, இதோ ஒரு பதிவு:////
உன் face book சுவற்றில் நான் இதைத்தான் எழுதியிருக்கிறேன்...உன்னால் சிரிக்க முடியும் எல்லா தருணங்களிலும்..வாழ்க்கையின் வலிகளில் இருந்து கூட நீ மகிழ்ச்சிகளை தோண்டி எடுப்பவள்..proud to be ur frend..

Admin said...

சிரிப்பில் இத்தனை வகைகளா. பகிர்வுக்கு நன்றிகள்.

goma said...

உங்க பதிவு ஒரே சிரிப்பா சிரிக்குது போங்க!!!!!!

இந்த சிரிப்புகளில் நக்கல் சிரிப்பு ,நான் யாரிடமும் பார்க்க விரும்பாத ,நானும் சிரிக்க விரும்பாத நச்சு சிரிப்பு

மீன்துள்ளியான் said...

இன்று முதல் நீங்கள் சிரிப்பு சித்ரா அப்படின்னு அழைக்கப்படுவீர்கள்

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

முனைவர் இரா.குணசீலன் said...

நகை
பற்றிய சுவையான பதிவு!!

vasu balaji said...

உங்கள் தந்தையாருக்கு வணக்கங்கள். உங்கள் எக்ஸ்ப்ரஸ் நடை பிரமிப்பைத் தருகிறது. பாராட்டுகள்.

தேவன் said...

/// இன்று என் ஆருயிர் அப்பா என்னை விட்டு மறைந்து, 18 நாட்கள் ஆகிவிட்டன. ///

......
///


எத்தனை பூ எல்லாம் சிரிப்'பூ'!

நல்ல பதிவுங்க.

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் தந்தைக்கு எனது இரங்கல்கள்.......

தந்தையை இழந்த சோகத்தில் சிரிக்க முடியாமல் சிரித்து (தந்தையை நினைத்து அழுது)
ஒரு நல்ல இடுக்கையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

சித்ரா சிரிப்ப பிரிச்சி பிரிச்சி வகை வகையா போட்டுட்டீஙக போங்க‌

மன வேதனைய சிரிப்பு மூலம் சொல்லி இருக்கீங்க.

நீங்கள் இவ்வளவு சிரிக்க பதிவு போட்டு இருக்கீங்க உங்கள் மனரணம் சீக்கிரமே ஆரட்டும், உங்கள் அப்பா அவ்வளவு நகைச்சுவையாக பேசியதால் தான் உங்களால் மனதை தேற்ற முடிகிறது.

மகா said...

உங்கள் தந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஹுஸைனம்மா said...

எக்கா,

சிரிப்புல இம்புட்டு வகை இருக்கா?

“சிலர் சிரித்துக்கொண்டே அழுகின்றார்” மாதிரி சில சிரிப்புகளுக்குப் பின் சோகமும் இருக்கலாம், இதோ நீங்கள் அப்பாவின் இழப்பையும் சிரித்தே மறக்க நினைப்பது போல்.

SUFFIX said...

வாழ்வினை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கு, கவலைகள் இருந்தாலும் அதனை வேறு முறையில் ஆரோக்கியமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் சித்ரா. நீங்க நல்லா இருக்கணும்.

கண்மணி/kanmani said...

ரொம்பவே மெனக்கெட்டு ஆராய்ந்திருக்கீங்க.சிலது ஒரே பொருள்தானே
கிண்டல்/கேலி
அலட்சியம்/எகத்தாளம்
சரி இருக்கட்டும் இப்படியெல்லாஅம்தான் சொல்றோமே

//வாய் விட்டு சிரிச்சேன் அப்படிங்குறாங்க. எனக்கு புரியவில்லை. வாயாலே தானே சிரிப்போம். வாயை விட்டுட்டு எப்படி சிரிக்க முடியும்?//
:))))))

பூங்குன்றன்.வே said...

அப்பாவின் மரணம் எதைக்கொண்டும் ஈடு செய்ய முடியாதது.மனதை தளர விடாமல் இருங்கள் தோழி.

பிறகு உங்கள் சிரிப்பு வகைகளை படித்து என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.நீங்கள் எதாச்சும் பி.எச்.டி பட்டம் ட்ரை பண்றீங்களா?

லெமூரியன்... said...

சிரிப்பை பற்றி நிறைய எழுதி கடைசில ரொம்ப டச்சிங்கா முடிசிடீங்க...!
சார் மறைந்து விட்டாரா?? மன்னிக்கவும் Shocking uh
இருந்தது...

Prathap Kumar S. said...

ஏய் டண்டனக்கா...எய் டணக்குநக்கா..நீங்க என்ன டி.ஆர்க்கு சொந்தமா?

சிரிப்பைபத்தி இவ்வளவு சொன்னீங்களே...
சீறும்பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே-ங்கறக்கு உண்மையான அர்த்தம் என்னன்னு சொல்லுங்க? இப்படி ஒருபதிவு போட்டா இப்படித்தான் எக்குத்தப்பா கேள்விகேட்போம்...எஸ்ஸாகம் பதில் சொல்லனும்...

கலையரசன் said...

நல்லா சிரிப்பா சிரிக்க வச்சிட்டு...
கடைசியா குண்டை போடுறீங்க?

கண்ணா.. said...

//இன்று என் ஆருயிர் அப்பா என்னை விட்டு மறைந்து, 18 நாட்கள் ஆகிவிட்டன. அவரை நினைத்து அழ உட்கார்ந்தால் கூட, அவரின் மித மிஞ்சிய நகைச்சுவை உணர்வின் நினைவலைகள் எனக்குள் வந்து என்னை சிரிக்க வைக்கிறது. சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க .............. !//

வார்த்தை கோர்வைகள் வியக்க வைக்கிறது.


:(

செ.சரவணக்குமார் said...

ரசித்துப் படித்துக்கொண்டு வந்தேன், முடிவில் சிறு வலி. உங்கள் தந்தையின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Rekha raghavan said...

தங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
சிரிப்பில் இவ்வளவு வகைகளா என்று ஆச்சரியப்படுத்திய பதிவு.

ரேகா ராகவன்.

Romeoboy said...

\\இன்று என் ஆருயிர் அப்பா என்னை விட்டு மறைந்து, 18 நாட்கள் ஆகிவிட்டன. அவரை நினைத்து அழ உட்கார்ந்தால் கூட, அவரின் மித மிஞ்சிய நகைச்சுவை உணர்வின் நினைவலைகள் எனக்குள் வந்து என்னை சிரிக்க வைக்கிறது. சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க//

டச்சிங் வரிங்க

தமிழ் உதயம் said...

நாந்தான் சீரியஸா எழுத சொன்னவன். தெரியாமா சொல்லிட்டேன். சிரிப்பை பத்தின ரெண்டு பாட்டு சொல்றேன். கேளுங்க. ரிக்ஷாகாரன் சொன்னது"வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி. ஊரார் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி" உலகம் சுற்றும் வாலிபன் சொன்னது "சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே"

ரிஷபன் said...

இப்பவும் உங்க பதிவு சீரியஸ்தான்! கலகலப்பா போயி கடைசில கண் கலங்க வச்சா வேற என்ன சொல்றது..

ஹேமா said...

உங்கள் வலியை மறக்க எங்களையும் சேர்த்துச் சிரிக்க வைக்கப் பார்க்கிறீர்கள்.
எப்படிச் சிரிப்பு வரும் இப்போது !

இளைய கவி said...

gud one.. கலகலப்பா போயி கடைசில கண் கலங்க வச்சா வேற என்ன சொல்றது..?

ப்ரியமுடன் வசந்த் said...

சிரிப்பு வகைகள் படித்து தெர்ந்து கொண்டேன்

தந்தைக்காக சில நிமிட பிரார்த்தனைகள்..

Unknown said...

என்ன சிரிப்பா பத்தியே பேசிட்டு சீரியஸ் ஆகிடீங்க..., மனம் தளராதிங்க...,

Jaleela Kamal said...

ஹா ஹா சித்ரா இப்ப தான் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் சித்ரா விருதை என்ன பண்ணனும் கேட்டாஙக்ளே வந்து சொல்லொ தரேன் சொன்னமே என்று ஓடி வந்தேன் ஆனால் அதற்குள் அவார்டு உங்கள் வீட்டு சுவரில் மாட்டியாச்சு, ஒகே, வாழ்த்துக்கள், இந்த சிரிக்கவைப்பது சிலரால் மட்டும் தான் முடியும்.

அது உங்கள் அப்பா உங்களுக்கு கொடுத்த வரம்

Chitra said...

எல்லோரின் பரிவுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. என் நகைச்சுவை உணர்வில் என் தந்தை வாழ்வதை காணும் வரத்தினை தந்த இறைவனுக்கு நன்றி. என் தந்தை, என்னோடு இறுதியாக பேசிய வார்த்தைகள்: "எழுது, எழுது, நல்லா எழுது." தொடர்ந்து எழுதுவேன். சிரிப்பேன்.

விக்னேஷ்வரி said...

சிரிப்பின் வகைகள் நல்லாருக்கு.
சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க .............. ! //
ம்.

எம்.எம்.அப்துல்லா said...

:)

:(

Priya said...

//சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க .............. !//...
படிக்கும் போது எனக்கும் வலிக்கிறது,ஆனாலும் சிரிக்கிறேன் உங்களுடன் சேர்ந்து!

Don't worry, be happy!(நம்ம விவேக் ஸ்டைல படிச்சிக்கோங்க,சரியா)

goma said...

சிரித்தமுகம் நல்லது
ஆனால் இளிச்சவாய் கெட்டது.
ஜோக் அடிக்றது நல்லது
நாமே ஜோக்கர் ஆவது கெட்டது.
நம் எல்லோரையும் சிரிக்க வைப்பது நல்லது
நம்மைப் பார்த்து எல்லோரும் சிரிப்பது கெட்டது.
நல்லது கெட்டது புரிந்து கொண்டால் நல்லது.
புரியாமல் ’கெக்கே பிக்கே ’பண்றது கெட்டது
புரியுதா சித்ரா.

Chitra said...

புலவன் புலிகேசி, மைதிலி, அண்ணாமலையான், தேனம்மை அக்கா, ராமலக்ஷ்மி அக்கா, சந்துரு, மீன்துள்ளியான், முனைவர் ரா.குணசீலன், வானம்பாடிகள், கேசவன் கு. , சங்கவி, மகா, ஹுசைன்அம்மா, கண்மணி, கலையரசன், கண்ணா, வெ.சரவணகுமார், ரேகா ராகவன், romeoboy, ரிஷபன், ஹேமா, இளைய கவி, வசந்த், பேனா மூடி, விக்னேஷ்வரி, அப்துல்லா சார், ப்ரியா, SUFFIX : ரொம்ப ரொம்ப நன்றிங்க.விஷி: நான் நகைச்சுவை பத்தி இங்கு கூறவில்லை. சிரிப்பு மட்டும்தான் எடுத்து கொண்டேன்.
ஜலீலா அக்கா: உங்கள் ஆதரவுக்கும் விருதுக்கும் நன்றி.
ஜெட்லி, பூங்குன்றன்: நான் எங்கே டாக்டர் பட்டம் வாங்குறது? அரசியல் வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. :-)
தமிழினி: என் ஆருயிர் தோழியே, "உன்னால் சிரிக்க முடியும் எல்லா தருணங்களிலும்..வாழ்க்கையின் வலிகளில் இருந்து கூட நீ மகிழ்ச்சிகளை தோண்டி எடுப்பவள்." என்னை நன்கு பறிந்து கொண்டாய்.
கோமா மேடம்: உங்கள் கருத்துக்கும் கவிதைக்கும் நன்றிங்க.
தமிழ் உதயம் சார்: சிரிப்புலும் சீரியஸ் விஷயங்கள் உண்டு போல. என்னை வித்தியாசமாக யோசிக்க வைத்ததற்கு நன்றி, சார்.
நாஞ்சில் பிரதாப்: சரியாக சொல்வது என்றால்: அது: சீறும் பாம்பை நம்பு - நயமாய் சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று இருக்க வேண்டும். இப்பொழுது, உங்களுக்கு புரியும்.

Chitra said...

கண்மணி: கேலி சிரிப்பு என்பது ஒருவர் கீழே கால் தட்டி விழுந்தாலும் சிரிப்பது. கிண்டல் சிரிப்புக்கு வார்த்தைகளும் தேவை. மற்றவர் உடன் சேர்ந்து சிரிப்பது.
அலட்சியம் வேறு எகத்தாளம் வேறு.

Chitra said...

லெமூரியன் சார், I was blessed to have him as my appa.

Dr.Rudhran said...

the finishing touch is a poetic smile..teasing tears. i have always appreciated your writing. keep writing. plan a book too. best wishes

அன்புடன் மலிக்கா said...

/வாழ்வினை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கு, கவலைகள் இருந்தாலும் அதனை வேறு முறையில் ஆரோக்கியமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் சித்ரா. நீங்க நல்லா இருக்கணும்./

ஷஃபியண்ணா சொன்னதை நானும் மொழிகிறேன்
உலகில் பிறக்கும் எவரும் நிரந்தரமில்லை. நேற்று அவர்கள் நாளை நாம்.. அவர்களுக்காக பிராத்தனை செய்து அவர்களின் வழியை பின்பற்றுங்கள்
நாளும் நலமே விளையும்..

நினைவுகளுடன் -நிகே- said...

சிரிப்பில் இத்தனை வகைகளா?
பகிர்வுக்கு நன்றிகள்.

Chitra said...

Thank you, Dr.Rudhran. Your comments are very encouraging.......

Chitra said...

malikka, Ni Ke, Thank you very much.

சுந்தரா said...

சிரிப்பைப்பத்தின ஆராய்ச்சி சிரிக்கவும்,

இறுதி வரிகள் நெகிழவும்வைத்தது சித்ரா.

உங்க அப்பாவுக்கு என்னுடைய அஞ்சலிகள்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

சீரியசா :) :) :)

Chitra said...

Thank you, Sundhara and Saravanakumar

கமலேஷ் said...

சிர்ரிப்பை பற்றி அழகான ஆராய்ச்சி
வாழ்த்துக்கள்...

பெசொவி said...

நன்றாகச் சொல்லிக் கொண்டு வந்து கடைசி பாராவில் மனத்தை தொட்டுவிட்டீர்கள்.
மகாத்மா காந்தி சொன்னார் "நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை என்றால் என்றோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" என்று. உங்கள் நகைச்சுவை உணர்வு உங்கள் சோகங்களை மறக்கச் செய்யட்டும்.

பா.ராஜாராம் said...

:-))))

CS. Mohan Kumar said...

உங்கள் காமெடி சென்சுக்கு பின் இருப்பது உங்கள் தந்தை என்பதை இதை படித்த பின் தான் உணர்ந்தேன்.

"நீங்கள் விரும்பும் நபர் இறந்து விட்டால் அவர் பற்றிய இனிமையான நினைவுகளில் இளைப்பாறுங்கள். மரணத்துக்கு பிறகு அவர்கள் வாழ்வது அந்த நினைவுகளில் தான்" என்பார்கள். தங்கள் தந்தை பற்றி எழுதியது படித்ததும் அது தான் நினைவுக்கு வந்தது.

ருத்ரன் சார் உங்களை பாராட்டியது பெரிய விஷயம். புக் வேறு போட சொல்லிருக்கார். ரெடி ஆகுங்க., இருக்கவே இருக்கார் நம்ம பொன். வாசுதேவன்!!

பின்னோக்கி said...

கடைசி பத்தியை படிப்பது வரை சிரிப்பாக இருந்தது. வருத்தங்கள்.

ISR Selvakumar said...

சிரிப்பின் பின்னால் அனைத்தையும் மறைக்கும், என் தங்கையின் மனக் கட்டுப்பாட்டை நினைத்து பெருமைப்படுகின்றேன்.