Sunday, January 24, 2010

முத்தம் போதாதே ........


இதய துடிப்பின் தாளத்தில்,
இதழ் மீட்டும் ராகத்தில் - உன்
 மூச்சு காற்றையும் உள் இழுத்து
மூங்கில் குழலாய் நான், இசைக்கின்றேன் -
முத்த கடலின் அன்பு அலைகளில்,
மூழ்கி மூழ்கி ஆசைமொழியில் இசைகின்றேன் - உன்
ஒற்றை பார்வை தரும் சிலிர்ப்பில் - இசைஞானி நான்.

மேல் இதழ் - பெண்ணின் இனிமையிலும்
கீழ் இதழ் - அவளின் நாணலிலும்
இணைந்தும் இணையாமலும் வேண்டாம் என்று சிணுங்க -
மேல் இதழ் - ஆணின் வலிமையிலும்
கீழ் இதழ் - அவனின் காமத்திலும்
சேர்ந்தும் சேராமலும் வேண்டும் என்று நெருங்க -
முத்த யுத்தத்தில் வென்றது, காதல் தர்மம்.

ஈர மருதாணி இவளின் கரங்களில்  -
இரு கலைகள்  சங்கமித்த பின்,
இரவின் கருமை  விடியலில் கரைய
சிவந்திருந்தவைகளில்
இவளின் கரங்களும்தான்.

காதல் நாயகனை வேட்கையில் தள்ளி
காம ராட்சசன் வேங்கையென பாய
இடையில் இவளின் மென்மை இரையாகி
இளமை காட்டில் - இனிய  வேட்டை.

அன்பு கணவருக்கு:  ஆயிரம் முத்தங்களுடன், திருமண நாள் தின வாழ்த்துக்கள்!


113 comments:

Vishy said...

ஆஹா.. கவிதை... கவிதை.. சித்ரா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என இத்தனை நாள் தெரியாமல் போச்சே.. I liked ”இரவின் கருமை விடியலில் கரைய”..

சரி சரி புருஷனுக்கு எழுதியிருக்கீங்க.. நான் ரொம்ப comment எழுதாம ஓரமா நின்னு ஒட்டு கேட்டுட்டு போயிடறேன்...

கண்ணா.. said...

பார்றா.... சித்ரா டீச்சர் கவிதையெல்லாம் எழுதி கலக்குறாங்க..

அருமையான வரிகள்....ஆனா அங்கங்க கொஞ்சம் எண்டர் தட்டி செப்பனிட்டா இன்னும் அழகாய் இருக்கும். க்யூட்டா ஓரு படத்தையும் இணைத்து விடுங்கள் அது இன்னும் அழகாய் இருக்கும்.

திருமண நாள் வாழ்த்துக்கள்.


:)

Prathap Kumar S. said...

ஹீஹீஹீ... ஒண்ணும் சொல்றதுகில்லை... திருமண வாழ்த்துக்கள் மட்டும்...

மகா said...

ஆஹா இப்படி கூட திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லலாமா ....அருமையான கவிதை ....

நாடோடி said...

கவிதை சூப்பர்..உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

திருமணநாள் வாழ்த்துக்கள்..

Chitra said...

Hi Vishy,

Love is in the air....... ;-)

Chitra said...

கண்ணா டீச்சர், நீங்கதான் எனக்கு என்டர் கவிதைக்கு டீச்சர். பாடங்களுக்கு நன்றி. அடுத்த கவிதை பரீட்சையில் நிச்சயம் நினைவில் கொள்வேன்.

Chitra said...

நாஞ்சிலார், என்ன எப்பவும் கமெண்ட் எழுத வந்துட்டு, ஹா, ஹா, ஹி, ஹி, ஹி,.... னு?
:-)

Chitra said...

மகா, இப்படி சொல்லணும்னு ஏனோ இந்த வருஷம் தோணியது.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, நாடோடி சார்.

Chitra said...

முனைவருக்கு, மிக்க நன்றி.

Mythili (மைதிலி ) said...

ennadi.. ithu.. kaadhal rasam sottuthu kavithaiyila... irunthaalum unakku romba thayriyam thaan ..appadiye naan kooda flash back poittennaa pathukoyen..(santhanamoda thaan..)..thanks for rekindling kaadhal..Appadiye cinema hero aakitta Solomonai..Enna nadakkuthu inga??? Purushanum Pondaatiyum sernthu cinema yethaavathu..??

Unknown said...

திருமண நாள் வாழ்த்துகள்...

கவிதையோட நிறுத்திராம இன்னிக்காச்சும் வாய்க்கு “ருசி”யா சாலமனுக்கு சமைச்சிப் போடுங்கக்கா..

Chitra said...

மைதிலி, எங்கள் இருவருக்கும், காதல் மயக்கம் இன்னும் தீரவில்லை. திருமண நாள் சமயம், அதிகம் ஆகி விடுகிறது.

Chitra said...

சமைத்தும் போடுகிறேன், முகிலன்.

கண்ணா.. said...

//Chitra said...
சமைத்தும் போடுகிறேன், முகிலன்.//

யக்கா... வேண்டாம்..

திருமணநாள் அதுவுமா ரிஸ்க் வேண்டாம்.

ஹோட்டல்லயே டிரை பண்ணலாமே....

Chitra said...

கண்ணா, நெல்லை சமையலுக்கு என்ன குறைச்சல்? நல்லா தான் சமைக்கிறேன். :-)

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா... கவிதையும், கவிதை வரிகளும் அனுபவசிச்சு எழுதியிருப்பீங்க போல...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

//அன்பு கணவருக்கு: ஆயிரம் முத்தங்களுடன், திருமண நாள் வாழ்த்துக்கள்!//

இந்த பரிசுக்கு ஈடு இணையே இல்லைங்க...

ஹுஸைனம்மா said...

திருமணநாள் வாழ்த்துக்கள்.

//Chitra said...
நாஞ்சிலார், என்ன எப்பவும் கமெண்ட் எழுத வந்துட்டு, ஹா, ஹா, ஹி, ஹி, ஹி,.... னு?//

தெரிஞ்சதைத்தானே செய்யமுடியும்?

ஹுஸைனம்மா said...

//Chitra said...
கண்ணா, நெல்லை சமையலுக்கு என்ன குறைச்சல்? நல்லா தான் சமைக்கிறேன்.//

அக்காவைப் பாத்தாத் தெரியலையா கண்ணன் சார்?

;-)

vasu balaji said...

திருமண நாள் வாழ்த்துகள்.:)

Prathap Kumar S. said...

திருமண நாள் அதுவுமா நல்ல மனைவியா புருஷனுக்கு ஹோட்ல்ல ட்ரீட் வையுங்க...
சமைச்சு கொடுக்கறேன்னு சொல்லி அவரை டரியலாக்கிடாதீங்க...பாவம்...

Chitra said...

சங்கவி, என் கணவர் இந்த கவிதையை ரொம்ப ரசித்தார். ப்லொக்கில் போடலியா என்று கேட்டு என்னை உற்சாகப் படுத்தினார். வாழ்த்துக்கு நன்றி.

Chitra said...

ஹுசைனம்மா, நம்ம ஊரு ஆளை விட்டு கொடுக்காம, நெல்லை நக்கலுடன் கமெண்ட் அடிக்கிறீகளே. சூப்பர்.

Chitra said...

மிக்க நன்றி, பாலா சார். வாழ்த்துக்களுக்கும் ஆசிருக்கும்.

செ.சரவணக்குமார் said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சித்ராக்கா.

Chitra said...

Pratap, எல்லோரும் எப்போ அமெரிக்கா வாரீக? ஒரு நாள் சமைச்சு போட்டாதான் தெரியும். ஜலீலா அக்கா சிஷ்யை ஆக்கும், நான்.. நெல்லை மனமும் மணமும் உண்டு. சும்மா வாயாடாதீக. சொல்லி புட்டேன்.

Chitra said...

நன்றி, சரவணா. உங்களுக்கும் அக்காவா? சரியா போச்சு.

goma said...

திருமணநாள் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

தலைப்பு அழகான பாடலை நினைவூட்டியது

திருமண வாழ்த்துகள்.

கவிதை பற்றி சொல்லத்தோனுதுதான் - உங்களை தெரியாமல் இருந்திருந்தால் - பின்னூட்டம் பின்னியிருப்பேன்

இப்போதைக்கு முதலில் சொன்னவரின் கருத்தை வழிமொழிந்து விலகி நிற்கிறேன்.

Chitra said...

நன்றி, கோமா மேடம்.

Chitra said...

நண்பா ஜமால், நட்புடன் அனுப்பிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

SUFFIX said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!! கவிதை செம சூப்பரு சித்ரா!!

ஜெட்லி... said...

எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.....
இன்னைக்கு என்ன ஸ்பெஷல்....??
ஹோட்டல்க்கு போறது பெட்டர்னு சார்
சொல்லி இருப்பாரே??.....

Chitra said...

ஜெட்லி, நீங்களுமா? எல்லோரும் கேட்டுக்கோங்க: நானும் நல்லா சமைச்சுகிட்டு தான் இருக்கேன்.

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, SUFFIX.

பின்னோக்கி said...

திருமண நாள் வாழ்த்துக்கள். கவிதை
..... ..... ......... ............. ......... .. ..... .... .........

டாட்ட டிகோட் பண்ணி படிங்க. :)

சாருஸ்ரீராஜ் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு திருமண நாள் வாழ்துக்கள்

Chitra said...

அட, அட, அட,....... நம்ம கவிதை மண்டை சொரிய வச்சிடுச்சே,..... பின்னோக்கி, என்ன சார் சோதனை?

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, sarusriraj.

கற்போம் கற்பிப்போம் said...

மிகவும் அழகிய கவிதை. திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் உங்கள் இல்லறம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

இரா.மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

Chitra said...

திரு. இரா.மோகனகிருஷ்ணன் சார்,
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.
என் கணவரை, எனக்கு ஆசிர்வாதமாக தந்த என் இறைவனுக்கு நன்றி என்றும் சொல்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

அழகான கவிதை.

மனமார்ந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். இன்றும், என்றும் நிலைத்திருக்கட்டும் இந்த சந்தோசம்.

Chitra said...

தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, S.A. நவாஸுதீன் சார்.

தமிழ் உதயம் said...

கவி அரசி சித்ராவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் வளமும், மனதில் மகிழ்ச்சியும் தொடரட்டும்.

Chitra said...

திருமண நாளுக்கு வாழ்த்து மட்டும் அல்ல, பட்டமும் பரிசாக தந்து ஆசிர்வதித்து உள்ள, தமிழ் உதயம் சாருக்கு, நன்றிகள் பல. :-)

தமிழினிமை... said...

முதலில் இக்கவிதை
என்னை முத்தமிட்டது குறித்து
எனக்கு மகிழ்ச்சி..
(face bookகின் inbox வழியாக..
அண்ணாவின் அதரங்களை எட்டும் முன்பே..)
.................................................
ஆனா எவ்வளவு யோசிச்சாலும்
ஒன்னே ஒண்ணு மட்டும் முடியல
-அது..
FACE BOOKகில் இதற்கு
முத்த.. sorry மொத்த மனதுடன்
நான் எழுதியிருந்த comment..
அதுதான் எத்தனை வலி-மை-உடையது..??
and before the desks of censors..
............................................
அனல் பறக்கும் மின்சார கம்பிகள்
இந்த சிறு குருவிகளின்
அமர்தலை தாங்க முடியாமல்
சிக்கி சின்னா பின்னமாகி போனது
தனிக் கதை..
வெப்பங்களும் அதன் வீச்சுக்களும்
சூரியனுக்கு மட்டும் சொந்தக்காரர்களா என்ன..??
..................................................
இன்று காலையில்
உன் கவி வாசித்த பிறகு
என் வீட்டுக் கண்ணாடியில் கண்ட
என் முகம் என்னிடம் சொல்லிற்று
ஆயிரம் கவிகள்..
(வழக்கத்துக்கு மாறாக என் முகம்
இன்று பிரம்மாண்டமான அழகுடன்..!!
அதனுடன் அழகு சேர்த்தது உன் கவிதை..)
ஏற்கனவே
உன்னிடம் தொலை பேசியில்
பகிர்ந்ததுதான்..
இருந்தாலும் மீண்டும் முனைப்போடு
பகிர்வதில் ஆர்வங்கள் ஆயிரம் உண்டெனக்கு..!!
....................................................
A beautiful preface in life..
The first beautiful thing that
u can do with your lips..
Nectar and nectar running
without any tributaries..
என்று எத்தனையோ கவிக்கிறுக்கல்கள்
இதற்கென்று இருந்தாலும்
the most beautiful one is the
bondage it creates in your life..
...............................................
We advice our patients
to be in a healthy
kissing life style
to keep our harmone levels stable..
The OESTROGEN level is
submissive to a touch..
For a woman moving towards her
MENOPAUSE it is a
BLESSING IN DISGUISE..
...........................................
வாழ்க்கையும் வண்ணமும்
எல்லாம் இருந்தது இப் பகிர்வில்..
மேலும் மேலும் """இப்பகிர்வுகள்"""(in the true literary sense)
வாழ்க்கையிலும் ..உன் வார்த்தைகளிலும்
tenancy வாங்கிக் கொள்ள
என் வாழ்த்துக்கள்..!!

Paleo God said...

திருமண நாள் வாழ்த்துக்கள் சித்ராஜி..:))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

திருமண நாள் வாழ்த்துகள்.:)

S Maharajan said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

தமிழினிமை... said...

நாம் பேசுவோமே..
அடிக்கடி..
நட்பைப் பற்றி..
சில பல முத்துக்களை
எடுக்க வேண்டும் என்றால்
அவ்வப்பொழுது சில வாய் உப்புத்தண்ணியையும்
குடித்துக் கொள்ள வேண்டும் என..
அந்த மாதிரி compulsions அற்றது இது..
ஏனெனில் இங்கு எடுக்கப்பட்டது முத்து மட்டுமே..
.......................................
பெண்களின் frequencyயில் சில
sensitive issues எழுதுவது சிரமம்..
என் எல்லா தோழிகளிடமும்
நான் இதையே சொல்லியிருக்கிறேன்..
..........................................
மருதாணி..,
அயர்ந்த தூக்கத்திலும்
அழியாத சாகாவரம் வாங்குவது போல் இது..
u have to enjoy the sleep
at the same time get the preferred redness..
வாழ்க்கை போல் இதுவும்..
and its a bliss
since u
got the sleep and the
desired redness..!!
its a blessing as for as i
extend my thought..
you have added a female charm in
your writing..
.....................................................
ஆண்களின் பார்வையில்
இது ஒரு giving-endடாகவே
இருந்திருக்கும்..
but here in your ALPHABETS
i felt enticed with the summary of the RECIEVING END..
பெண்களின் பேனா மை
இங்கு வழிந்திருப்பதாகவே தோணுது எனக்கு..
.................................................
வார்த்தைகள்
வருடியதா இல்லை
வண்ணம் செய்ததா என்று
face book comment
மூலம் உனக்கு புரிந்திருக்கும்..
உன் தோழியும் பெண்ணாய் இருப்பதால் அதிகம்
நேசிக்கத் தோன்றுகிறது உன்னை..உன் எழுத்தை..
அதன் வார்த்தை ருசியை..
.......................................
அனைத்துக்கும் எனது அன்பு..
என் வார்த்தைகளை
உன் வாசலில்
மிதியடி ஆக்குவதும் மாடமாக்குவதும்
உன் கையில்..!!
உன் முத்தங்கள் தந்த மிச்சங்களோடு..
-நட்பு...

malar said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு திருமண நாள் வாழ்துக்கள்.....

அழகாக கவிதை எழுதியிருக்கேங்க சூப்பர்.....

malar said...

கவிதை நீங்களேவா எழுதுனேஹ ....திருவிளை யாடல் சிவாஜி நாகேஷ் மாதிரி கேளிவிகேட்டால் எப்படி இருக்கும் என்று யொசித்தேன் ....

malar said...

தமிழ் உதயம் said...

கவி அரசி சித்ராவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.

வைரமுத்துக்கு வேலை போய்டாமே ....

Prathap Kumar S. said...

//கண்ணா : கொஞ்சம் எண்டர் தட்டி செப்பனிட்டா இன்னும் அழகாய் இருக்கும். //

அது எப்படிவே எங்கப்போனாலும் உம் கொத்தனாரு புத்தியை காட்டுதீரு...
தட்டி தட்டி செப்பனிட இது என்ன கான்கிரீட் தளமா? கவிதைய்யா கவிதை..அதுவும் சித்ரா டீச்சர் எழுதுன கவிதை...

//கண்ணா டீச்சர், நீங்கதான் எனக்கு என்டர் கவிதைக்கு டீச்சர். பாடங்களுக்கு நன்றி. அடுத்த கவிதை பரீட்சையில் நிச்சயம் நினைவில் கொள்வேன்.//

வெளங்கிடும்... சித்ரா டீச்சர் அடுத்தவாட்டி மண்ணையும் கல்லையும் போட்டு கவிதை எழுதுவது எப்படின்னு சொல்லப்போறாரு...கவிதை குருவுக்கு வேற ஆளே கிடைக்லையா?

www.vimarsagan1.blogspot.com
இந்த வலைப்பூவுக்கு போங்க அவரை குருவா மதிங்க...

செ.சரவணக்குமார் said...

சாரிங்க, இனிமே சித்ரா மேடம்னு கூப்புடுறேன்.

Prathap Kumar S. said...

நாஞ்சிலார், என்ன எப்பவும் கமெண்ட் எழுத வந்துட்டு, ஹா, ஹா, ஹி, ஹி, ஹி,.... னு?//

ஹுசைனம்மா Said...

//தெரிஞ்சதைத்தானே செய்யமுடியும்?//

ஏய் எல்லாரும் சிரிங்கப்பா... ஹூசைனம்மா ஜோக்கடிக்கிறாங்களாம்...

Priya said...

சித்ரா, நான் கூட இந்த மாதிரி எழிதியிருக்கேன், ஆனா வெட்கப்பட்டு இதை எப்படி blogல போடுறதுன்னு விட்டுடேன்! நீங்க ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க, அதுக்கு முதல வாழ்த்துக்கள்.

உங்களுக்கும், உங்க ஆசை கணவருக்கு இனிய திருமனநாள் வாழ்த்துக்கள்!!!

வெற்றி said...

திருமண நாள் வாழ்த்துக்கள்..உணர்வுபூர்வமான கவிதை..:)))

ஜெய்லானி said...

///அன்பு கணவருக்கு: ஆயிரம் முத்தங்களுடன், திருமண நாள் வாழ்த்துக்கள்!///

என்னித்தான் தருவீங்கலோ.!!!!
வாழ்த்துக்கள்..இன்று போல் என்றும் வாழ்க.

கும்மாச்சி said...

கவிதை அருமை சித்ரா

உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

Chitra...a great Wedding Day present..May Heaven's choiciest Blessings be showered on both of you today, and throughout your life..With wishes and regards..GH

Night Sky said...

iniya thirumana naal valthukkal madam

ரிஷபன் said...

மண நாள் வாழ்த்துகள்!

Vettipullai said...

கலக்கலா ஒரு கவிதை... காமமும் காதலும் கலந்து... வாழ்த்துக்கள்... இன்று போல் என்றென்றும் வாழ்க... முத்தம் எனும் போது இணையும் உதடுகள் போல...

Chitra said...

தமிழினி, உன் நீண்ட............................................. கமெண்ட், நீ எவ்வளவு ரசித்து, ஆழமா வரிகளின் பாதிப்பில் எழுதி இருக்கிறாய் என தெரிகிறது.
இதில், மெடிக்கல் benefit வேறா? நான் மெனோபாஸ் நேரத்தில வரும் போது, ஆயிரம் முத்தங்களை பத்தாயிரமா dosage கூட்டிக்கிறேன் போதுமா? ஹா,ஹா,ஹா....

Chitra said...

மிக்க நன்றி, பலா பட்டறைஜி.

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ஜெஸ்வந்தி.

Chitra said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, மகாராஜன் சார்.

Chitra said...

மருதாணி..,
அயர்ந்த தூக்கத்திலும்
அழியாத சாகாவரம் வாங்குவது போல் இது..
u have to enjoy the sleep
at the same time get the preferred redness..
வாழ்க்கை போல் இதுவும்..
and its a bliss
since u
got the sleep and the
desired redness..!!
its a blessing as for as i
extend my thought..
you have added a female charm in
your writing..

.............தமிழினி, I will treasure this comment. Thank you, புள்ள.

Chitra said...

அழகிய திருமண நாள் வாழ்த்துக்களுக்கு, நன்றி மலர்.
I wrote what I feel and I what I felt.
இதை மண்டபத்தில் உள்ளவள் எழுதி கொடுத்து நான் வாங்கி வர, சாலமன் மண்டபத்துக்கு போய் வரலியே? ஹா,ஹா,ஹா,ஹா,.....

Chitra said...

ஹாய்..........நாஞ்சிலார், "ஹா, ஹா, ஹி, ஹி, ஹீ, ஹீ,....." எழுத்துக்களை தாண்டி கமெண்ட்ஸ் எழுத வந்துட்டார்........... டன் டன் டன் டனக்கு டன் டன் டனாடன் ......

Chitra said...

பிரியா, கற்பனையில் வயப்பட்ட காதல் கவிதையிலும் , கைவிடப் பட்டு ஏங்கி எழுதிய காதல் கவிதையிலும் இல்லாத ஒரு தனி அழகு, ஆசை கணவர் மேல் கொண்ட காதலில் எழுதும் கவிதைகளில் உண்டு என்று நம்புகிறேன். இதில் வெட்கம் எதற்கு?
வாழ்த்துக்களுக்கு நன்றி.

Chitra said...

திருமண நாள் வாழ்த்துக்கு நன்றி, வெற்றி.

Chitra said...

jailani, எண்ணி தரும் முத்தம் தந்த கவிதை அல்ல - தந்த முத்தங்களை, "எண்ணி, எண்ணி" எழுதிய கவிதை. :-)

Chitra said...

அருமையான வாழ்த்துக்களுக்கு நன்றி, கும்மாச்சி சார்.

Chitra said...

George, Thank you for your heartfelt wishes and blessings.

Chitra said...

Thank you, Suresh.

Chitra said...

மிக்க நன்றி, ரிஷபன் சார்.

Chitra said...

வெட்டி பேச்சுக்கு, வெட்டி புள்ளையின் கலக்கல் வாழ்த்துக்கள். காதலும் காமமும் கனிந்து வரும் திருமண வாழ்க்கை, இறைவன் தரும் பெரிய பரிசு தானே. இறைவனுக்கு புகழ்.

திருவாரூர் சரவணா said...

அய்யய்யோ...இன்னைக்கும் சாலமன் அண்ணாச்சிக்கு உங்க சமையலா.அது சரி...அண்ணாச்சிபடுற கஷ்டத்தை யாரால தடுக்க முடியும். ஊர்க்காரங்க நாங்க எல்லாம் அப்படி ஓரமா நின்னு வாழ்த்து சொல்லிட்டுப் போயிடுறோம்.

திருமண நாளின் மகிழ்ச்சி என்றும் தொடர வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

கமல் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் .... ( ரொம்ப விளக்கவில்லை ...... )
இதே கவியுணர்வோடு என்றென்றும் வளமாக வாழ தம்பதியருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ..

Chitra said...

சரண், "மையல்" தீராத நேரம், சமையல் எப்படி இருந்தாலும் ருசிக்கும். சரிதானே?
ஊர்க்காரங்க வாழ்த்துக்கள் விசேஷமானது. நன்றிங்கோ.

Chitra said...

கவித்துவமாகவும் கமல்த்துவமாகவும் வாழ்த்து கூறிய பத்மநாபன் சாருக்கு நன்றி.

க ரா said...

கவிதைலாம் எழுதி கலக்க ஆரம்பிச்சுடிங்க. பட்டைய கிளப்புங்க.

க ரா said...

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

Chitra said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க. கவிதை தானா வந்துச்சுங்க. :-)

நசரேயன் said...
This comment has been removed by a blog administrator.
நசரேயன் said...

தமிழ் படத்துக்கு பாட்டு எழுத ஆள் தயார்

suvaiyaana suvai said...

அருமையான வரிகள்!! திருமண நாள் வாழ்த்துக்கள்!

லெமூரியன்... said...

ஹேய் சித்ஸ்...!
கவிதையை படிச்சு முடிச்சதும் ரொம்ப வெக்கம் வந்த்ருச்சுனா பாத்துக்கோங்களேன்..!
பதிலுக்கு பப்ளிக்கா கலைகாதீங்க...

- இரவீ - said...

திருமணநாள் வாழ்த்துக்கள்.

Chitra said...

saravanakumar sir, chitra nu kooppittaale pothum.

Romeoboy said...

அட அட அட .. எனக்கு இது மாதிரி எல்லாம் கவிதை எழுத தெரியாம போச்சே... என்னோட அடுத்த திருமண நாளுக்கு நீங்கதான் கவிதை எழுதி குடுக்கணும்

(நமக்குள்ள எவ்வளவோ அடிதடி பிரச்சனை இருக்கும், அதை எல்லாம் மறந்துடுங்க) :D

அன்புத்தோழன் said...

அடடா...... கவித... கவித... அப்டியே அடிமனசுலேந்து அள்ளிவிட்டு அமுகிபுட்டீன்களே அண்ணி அண்ணன... இதுபோலவே நிறைய நிறைய சந்தோசங்கள் உங்க வாழ்வில் வசந்தமாய் வீசிக்கொண்டே இருக்க... வாழ்த்ர வயசில்ல..... So வேண்டிக்றேன்..... இறைவனிடம்....

+Ve Anthony Muthu said...

Hearty Greetings. & All the best...

ஹேமா said...

சித்....ரா அசத்துறீங்கப்பா !இன்னும் இனிக்கும் முத்தங்கள் நித்தமும் நிறைவாய்க் கிடைக்க வாழ்த்துக்கள் தோழி.உங்கள் துணைக்கும் என் வணக்கங்கள்.

சிங்கக்குட்டி said...

சூப்பர் கவிதை சித்ரா :-)

உங்க கவிதை வந்தவுடன் படித்து பின்னூட்டம் போட முடியாததால் ஓட்டு மட்டும் போட்டேன் (கொடுத்து வைத்த கணவர் என்று கொஞ்சம் பொறாமையுடன்).

அன்பரசன் said...

லேட்டா இருந்தாலும் பரவாயில்ல.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

anbu senakitheku mor wisses

Radhakrishnan said...

அருமையான கவிதை. மிகவும் சிறப்பாக இருக்கிறது.

Unknown said...

Wish you a very happy anniversary?

Enthanavathu?

பித்தனின் வாக்கு said...

நிறைய வேலைகளில் படிக்காமல் விட்டு விட்டேன் சித்ரா.மன்னிக்கவும். அருமையாக இருக்கின்றது.
எங்க போனாரு சாலமன்? அவர கூட்டிவந்து திருஷ்டி சுத்திப் போடுங்கள். தங்கையை மணமுடித்து இன்னமும் எங்களின் திருஷ்டி போகவில்லை. மிகவும் சந்தோசம். இனிய இல்லறம்,அன்பு,பண்பு,ஊடல்,கூடல் கலர்ந்து சிறப்பதைக் கண்ணுறும் போது
இன்றும் போல நீவீர் இருவரும் பல்லாண்டு,பல்லாண்டு வாழ அந்த பல்லாண்டு ஏந்தும் பரமேட்டியைப் பிரார்த்திக்கின்றேன்.
ஆமா திருமண நாளுக்கு எங்களுக்கு எல்லாம் கிடா பிரியானியும், நெல்லை குழிப்பணியாரமும் இல்லையா? இது ரொம்ப அநியாயம் ஆவ்வ்வ்வ்வ்வ்.

திவ்யாஹரி said...

திருமண நாள் வாழ்த்துக்கள் சித்ரா அக்கா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ராவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!

Anto Rajkumar said...

Chitra...This is superb.
Kavithai enbathu illakkanangaLaal kattapattathu illa...uNarvukaLaalaal Ezhuppapaduvathu enbathai purinthu konden. This is a great effort. You should keep writing more kavithai. Once again, I like to suggest adding some pictures in ur blog...Keep gr(l)owing

JeevA s PandiaN said...

hai mam,

regularly i read ur blogs...all thougts r vry nice...i am also from sankai taluk, tirunelveli district...now wkg in Hyundai at Chennai....... how is ur chellams?all d best to ur upcoming blogs.....

Endrum anbudan

Jeeva s Pandian
955 1086 007
spandian1984@yahoo.co.in

Anonymous said...

அருமையா இருக்கு கவிதை. திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!!

காஞ்சி முரளி said...

இதய துடிப்பின் தாளத்தில்,
இதழ் மீட்டும் ராகத்தில் - உன்

மூச்சு காற்றையும் உள் இழுத்து
மூங்கில் குழலாய் நான், இசைக்கின்றேன் -
முத்த கடலின் அன்பு அலைகளில்,
மூழ்கி மூழ்கி ஆசைமொழியில் இசைகின்றேன் - உன்

ஒற்றை பார்வை தரும் சிலிர்ப்பில் - இசைஞானி நான்."

சும்மா சொல்லக்கூடாது
நல்ல வரிகள்... நல்ல கவிதை.....

வாழ்த்துக்கள்......

நட்புடன்......
காஞ்சி முரளி.........

Jaleela Kamal said...

அட சித்ரா கவிதையும் நல்ல எழுதுவீங்களா? ரொம்ப அருமை

முன்பே வாழ்த்தி விட்டேன், ஆனால் 5 முறை வந்து விட்ட்டேன், பதில் போட முடியாமல் போய் விட்டேன்.

வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா said...

சித்ரா சாலமன் இணையருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.