கவிதை வகை:
சிந்து - நொண்டி சிந்து - கவிதை - புது கவிதை - ஹைக்கூ - வசன கவிதை - என்ட்டர் கவிதை - கவுஜ - ..........இதிலும் பல வகை: வாசித்த உடனே - புரிகிற கவிதை - புரிகிற மாதிரி இருக்கிற கவிதை - புரிகிற மாதிரி நடிக்க வைக்கும் கவிதை - "ஒண்ணும் புரியல" கவிதை ..............
பதிவர் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள வகையில் ஒன்றை கண்டிப்பாக எழுதி இருக்க வேண்டும் என்று என்னை சிலர், "மிரட்டி விட" , இதில் எந்த வகையில் எழுதுகிறோம் என்று தெரியாமலேயே, என் முதல் பதில் "மிரட்டல்" முயற்சி:
முத்தம் போதாதே
அப்புறம், சென்ற வாரம் என் தோழி ஒருத்தியின் அழைப்பின் பேரில், மீண்டும் ஒரு "மிரட்டல்" நடவடிக்கை.
முகப்புத்தகத்தில் (Facebook) : இங்கு பல முகங்களில் ஒரு முகமாக இருப்பது, "கவிதை முகம்":
அதில் பங்கு பெற்ற எனது கவிதை, இதோ:
முகம் ஒன்று -
ஒரே முகம் -
மலர் என்றது, காதல் கொண்ட அகம் -
தளிர் என்றது, சேயாய் கொண்ட அகம் -
கடுகு என்றது, வெறுப்பு கொண்ட அகம் -
குரங்கு என்றது, தோழமை கொண்ட அகம் -
அழகி என்றது, அன்பு கொண்ட அகம் -
ஆழி என்றது, அறிவு கொண்ட அகம் -
அம்சம் என்றது, வெற்றி கொண்ட அகம் -
ஆர்வம் என்றது, காமம் கொண்ட அகம் -
அந்நியன் என்றது, அறியாமை கொண்ட அகம் -
தெய்வம் என்றது, தாழ்மை கொண்ட அகம்.
என் ஒரே முகம் -
பிறரின் அகங்கள், (மனங்கள்)
கண்டு கொண்ட வகைகளில்,
எனக்கு, பல முகப் பிம்பங்கள்.
என் ஒரே முகம் -
தெரிவது -
என் அகத்தின் அழகா?
உன் அகத்தின் அளவா?
என் ஒரே முகம்.
பி.கு. : படங்கள்: Google Images
Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil (UNESCO Collection of Representative Works: European)
பி.கு. : படங்கள்: Google Images
Poems of Love and War: From the Eight Anthologies and the Ten Long Poems of Classical Tamil (UNESCO Collection of Representative Works: European)
64 comments:
இவ்ளோ சீக்கிரம் புது பதிவா ? நல்லது.. வித்தியாசமான கவிதை. படங்கள் தேர்வு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் . நெறைய கவிஜ எழுதுங்க
Thank you, LK. இது எந்த category என்று கண்டுப் பிடித்து சொல்லியதற்கு. எனக்கே தெரியாது. :-)
நீங்க எழுதறதுதான் கவிதை . யாருக்கும் புரியாம இருந்தா அது பின் நவீனத்துவ கவிதை . சினந்தான் இருந்தா ஹைக்கூ. கொஞ்சம் பெருசா இருந்தா புது கவிதை ... நாம்தான் முடிவு பண்ணனும்
நல்லா இருக்குதுங்க சித்ரா!!!
"மிரட்டல்" :))
கலக்குங்க
kavithai and picture both are superrr :-))
echusmee... ஒரு சின்ன டவுட்..
கவிதை ஆரம்பிக்கும் முதல்... என்ன சொல்ல வந்தீங்க.?
எனக்கு மட்டும் ரகசியமா சொல்லிருங்க..
இல்ல...அப்புறம் நா பதில் கவிதை எழுதிருவேன் :D
வாழ்த்துகள் . நெறைய எழுதுங்க
கவிதாயினி ஆனந்தியே, எனக்கு கவிதையின் இலக்கணம் தெரியாது. இத்தனை வகை கவிதையும் - புரியும் விதமும் இருக்கிறது என்று தெரியும். அதில் எந்த வகையில் என் கவிதை சேரும் என்று தெரியாமலே, எழுதி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். இப்போ புரிந்து விட்டதா?
sappppaaahhh.. yaruppa anga.. oru soda edungappa...
ok ok..purinchittu..!!
கவிதைனு சொன்னீங்க... அப்படி ஒன்னியும் காணோமே... ஹிஹி
Just kidding...
நல்ல முயற்சி. படங்கள் அருமை. நேரம் இருந்தால் என் பக்கம் வந்து போங்க... :)
சித்ரா நீ பௌர்ணமி ..இன்று..நேற்றே அழகாக இருந்தாய்...இன்றூ இன்னும் கவிதையில் அழகாக பூரணமாக.... ஜொலிக்கிறாய் ...அக்காவின் வாழ்த்துக்கள் டா
அக்கா, "வசிஷ்டர்" வாயால் வாழ்த்து வாங்கிய மகிழ்ச்சி. உங்கள் கவிதைகள் முன் .......... எனது கவிதை?
நீங்களே வாழ்த்துவது, உற்சாகமூட்டுகிறது. :-)
கவிதை நல்லாயிருக்கு! இது கவிதையா இல்லையான்னெல்லாம் குழம்ப வேண்டாம்; கவிதைதான்! தொடர்ந்து தூள் கிளப்புங்க! (நாங்கெல்லாம் துணிஞ்சு வெண்பாவோடயே வெளாடறோமில்லே?)
ஆஹா கவிதையுலும் கலகுரிங்க
வாழ்த்துக்கள் அக்கா
உங்க அகத்தின் அழகு தாங்க.. உங்க முகம். கவிதை அருமை.
கவிதை எழுதுங்க.... ஆரம்பம் நல்லா இருக்கு..
கெள்ம்பிட்டாங்கய்யா....கெளம்பிட்டாங்க.......கலக்குங்க....வாழ்த்துக்கள்...
சித்ரா,
சும்மா சொல்லக்கூடாது, படங்களும் கவிதையும் நிஜம்மாவே தூள்மா.. பெண்ணின் முக நிழலும், பூ,செடி,வண்ணத்துப்பூச்சி பெண் முகமும் அற்புதம். என்ன கீ வேர்ட்ஸ் யூஸ் பண்ணி சர்ச் பண்றீங்க?
சிறப்பான பதிவு... சித்ரா.... ! எனக்கு என்னமோ உங்களுக்கு அன்பான அகம்தான் நல்ல முகமாக இருப்பதாகத் தெரிகிறது....!
நல்லாயிருக்கே இது...
வாவ்! கவிதை போட்ட் வரைக்கும் போயிடுச்சா, நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் சித்ரா!!
நல்லா இருக்கு...
எனக்கு நல்லா புரியுது.. ஆனா இப்பிடி புரியுற மாதிரி கவிதை எழுதினா பின்நவீனத்துவ கவிஞரா ஒத்துக்க மாட்டாங்களே...?
எதுக்கும் இன்னொருக்கா யோசிச்சு புரியாத மாதிரி எழுதுங்க... ஒங்கள கவிஞர்னு ஒத்துக்கறோம்
படங்களே கவிதை போல் தான் இருக்கு. அதற்கே இன்னுமொரு பதிவு போடலான்க்கா...
முகம் முகம் என்று கவிதை இருந்தாலும் அங்கு அகம் அழகு.
சபாஷ்!! இத்தனை நாள் தெரியாம போச்சே நீங்க கவிதயும் நல்லா எழுதுவீங்கன்னு.
வாவ் அருமையான கவிதை.. வாழ்த்துகள் சித்ரா... மேலும் மேலும் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. ரொம்ப சூப்பர்.
பிரமாதமான கவிதை. அட, என் அகத்தின் அழகா? உங்கள் அகத்தின் அளவா? பல வரிகள் கவிதைகளில் எழுதப்பட்டாலும் ஒரு சில வரிகள் கவிதைகளுக்கு முத்தாய்ப்பாக இருக்கும்.
"சித்ரா" ஒரே ஒரு நல்ல பதிவர் இருந்தாங்க! அவங்களையும் மிரட்டி இப்புடி ஆக்கிபுட்டாங்களே! :(
ஏனுங்க நல்லாத்தானே போய்ட்டுருந்தது! ஏன் இப்பிடி?
ஒண்ணுமே புரியாம எழுதினா, "சாகித்ய அகாடெமி" விருது கொடுப்பாங்கன்னு யாராவது சொன்னாங்களா? முதல் ரெண்டு பாரா, சுத்தம், ஒண்ணும் விளங்கலை!
கவிதைக்கேற்ற படம் - பளிச்!
வாழ்த்துக்கள்!!
புதுமையான சிந்தனை . மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க
அருமையாயிருக்குங்க மேலும் நிறைய எழுதுங்க
சூப்பரா இருக்கு சித்ரா.
இந்த வரிகளை சுட்டுக்கிறேன் :))
//பிறரின் அகங்கள், (மனங்கள்)கண்டு கொண்ட வகைகளில்,எனக்கு, பல முகப் பிம்பங்கள்.என் ஒரே முகம் -தெரிவது -என் அகத்தின் அழகா?உன் அகத்தின் அளவா?என் ஒரே முகம்.//
வாவ்...கவிதையில கலக்குறா சித்ரா.மனித முகங்களைப் பிச்சுப் போட்டிருக்கிங்க சித்ரா.
//என்னை சிலர், "மிரட்டி விட"//
யாருங்க அந்த கொலைவெறிப்படை...
என்கையில மட்டும் கெடைக்கட்டும்... பெறவு வச்சிக்கிறேன்... (ஹி..ஹி.... சும்னாச்சுக்கும் ....)
ம்ம்ம்... நல்லாத்தாங்க இருக்கு... அகத்திற்கான அழகை முகவழி வெளிப்படுத்தியமை....
அட! இதெப்போ ஆரம்பிச்சுது?
இன்னும் நிறைய எழுதுங்கள் சித்ரா டீச்சர்.
super kavithai ... ithula pala vaaarthaikku enakku artham puriyalai .. ini enakku tamil to tamil dictionary venumnu nenaikkaren .. romba shame illa ...
awesome ellam wordkum meaning kandu pudichitaaen hee hee ...
brilliant it is
///மீண்டும் ஒரு "மிரட்டல்" நடவடிக்கை.///
இப்படி "மிரட்டி மிரட்டியே...........?!
எதுகை மோனை போட்டு கலக்குறீங்க
கவிதை நல்லாயிருக்கு. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
முகம்
(முகம் பார்க்கும்) கண்ணாடி மட்டும் இல்லையேல், முததின் பாடு திண்டாட்டமே!
நல்ல மிரட்டல் முகம் :)
தொடர்ந்து முயற்சி செய்யுங்க
வாழ்த்துகள்
வித்தியாசமான கவிதை,கலக்குங்க..
இதுலயும் இறங்கியாச்சா. வாழ்த்துகள்.
அட உங்களோட இந்த முகம் இத்தனை நாளா தெரியலயே.. நல்ல கருத்து..
எனக்கு கவிதைகளை ஆழமாக ரசிக்கத் தெரியாது. ஆனால் இந்தக் கவிதை நம் பார்வையின் பல கோணங்களை விளக்கியது.
கவிதைல்லாம் எழுத ஆரமபிச்சுட்டிங்க. ஒன்னியும் புரியல எனக்கு :)
கவிதை,நல்லாருக்கு சித்ரா.தொடர்ந்து எழுதுங்கள்.
என்ன திடிர்ன்னு கவுஜ எல்லாம் எழுதி பயமுறுத்துறீங்க
வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்தில் எனக்குப்பிடித்தது நகைச்சுவை உணர்வுதான்.அடுத்த கவிதையில் அதை எதிர் பார்க்கலாமா?
/என் ஒரே முகம் -
தெரிவது -
என் அகத்தின் அழகா?
உன் அகத்தின் அளவா?
என் ஒரே முகம்.// அப்படின்னு சொல்லி உங்களோட இன்னொரு முகத்தையும் காட்டிவிட்டீர்கள்...அகத்தின் அழகை வலியுறுத்தும் கவிதை கண்ணாடி. நல்லா இருக்கு..அப்படியே டாப் கியர் ய் போட்டு வண்டிய தூக்கு தூக்குன்னு தூக்குறீங்க (speed-unleashed)
//எனக்கு கவிதையின் இலக்கணம் தெரியாது. இத்தனை வகை கவிதையும் - புரியும் விதமும் இருக்கிறது என்று தெரியும். அதில் எந்த வகையில் என் கவிதை சேரும் என்று தெரியாமலே, எழுதி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.// akka, neengaley oru kavithaithaan akka!...:)
***என் அகத்தின் அழகா?
உன் அகத்தின் அளவா?***
ரெண்டும்தாங்க! :)
அகத்தில் தோன்றும் பல உணர்வுகளை பிரதிபளி(லி)க்கும்போது, ஒரே முகம் "படையப்பா வாக' (ஆறுமுகமாக) மாறுவதால், எல்லாரும் "மிஸ்கவுண்ட்" பண்ணிடுறாங்க போல :)
அக்கா அருமையா இருக்கு... மேலும் எழுத வாழ்த்துக்கள்
கவிதையும் உங்களுக்கு நல்லா வருது.
/Chitra said...
Thank you, LK. இது எந்த category என்று கண்டுப் பிடித்து சொல்லியதற்கு. எனக்கே தெரியாது. :-)//
எப்போ உங்களுக்கே இது கவிதையான்னு சந்தேகம் வந்துதோ, அப்ப இது நிச்சயம் கவிததான்!!
ஆனா என்ன, எனக்கே புரியுது உங்க கவிதை!! புரியாம எழுதுனாத்தான் கவுஞர்!! (கலைஞர் இல்லை!)
கொன்னுட்டீங்க போங்க... :-)
சொல்லிருக்குற கருத்துக்கள் / அர்த்தங்கள் நல்லாயிருக்கு...
ஆனா இது கவிதை இல்ல. அது மாதிரி.
அன்புடன்,
ரோஸ்விக்
bramaadham... aahaa... ooohoo...
(Vanguna kaasuku iwlo dhaan solla mudiyum ;-)
unmaiyaa solren enaku purila....
venuna oru vati mela poe padichutu vandhu marubadi comment podren.....
Romba suthathamizhil eludhiteengalo..?
ரோஸ்விக் said...
//கொன்னுட்டீங்க போங்க... :-)//
Yen bro awanglo kola casela maati vidreenga....? ;-p
//சொல்லிருக்குற கருத்துக்கள் / அர்த்தங்கள் நல்லாயிருக்கு...//
Idhulendhe theryudhu ungalukum purilanu.... ha ha ;-)... purinjirundha konjam vilakkam kudunga enna karuthunu....
Aavaludan,
Anbuthozhan ;-)
thank u Dr.chitra give me ur email id pls send me
mohanblueginger@yahoo.com
வாழ்த்துக்கள் தோழி அகத்தின் அழகு
முகத்தில் தெரியும் என்பார்கள் தாங்கள்
சற்று கவிதையால் அகத்தையும் அறியும்படி
முகம்போல் சித்தரித்துள்ளீர்கள் அருமை!..
அழகான வரிகள்.ஒரே முகம் பல முகங்களாய் தெரிவது பார்வையாளர்களின் மனப்பாங்கு.ஒரே முகம் கூட இருப்பருக்கே பல நேரங்களில் பலவிதமாக தெரிவதும் இயல்பே
Post a Comment