இதை பத்தி THODARUNGO .....அதை பத்தி THODARUNGO என்று ...... சரி -
முதலில் சாத்தூர் ராமசாமி கண்ணன் அவர்கள் "இருமியது" - சாரி - இடுகையிட்டது:
http://satturmaikan.blogspot.com/2010/07/blog-post.html
அவர் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த விவரம்:
முத பலி:
நம்ம தானை தலைவி டாக்டர் வெட்டிப்பேச்சு சித்ராக்காதான் ( நாங்களாம் யூத்துல). திடிர்னு நம்ம கடவுள் சார்வாள் உங்க முன்னாடி வந்து மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கைய குழந்தை பருவத்துல இருந்து ஸ்டார்ட் பன்னி புச்சு புச்சா எதுனாச்சும் பன்னிக்கலாம் அப்படின்னு ஒரு வரம் கொடுத்தா என்ன என்னலாம் பண்ணலான்னு நீங்க நினைப்பீங்க. உங்களுக்கு உண்டான தலைப்பு: “ மீண்டும் குழந்தை பருவத்திலிருந்து”.
ராமாசாமி அங்கிள்: சித்ரா செல்லம், இங்கே வாம்மா ...... யார் வந்துருக்கா பாரு........!!
சித்ரா செல்லம்: அங்கிள், அங்கிள், ஆரு ...இது?
ராமசாமி அங்கிள்: இவர் தான் கடவுள் சார்வாள். உனக்கு பிடிச்ச எதுனாச்சும் புச்சு புச்சா பண்ணிக்கலாம்னு சொல்றார். ..... சித்ரா குட்டி, கடவுளுக்கு ஹாய் சொல்லுடா......
சித்ரா செல்லம்: ஹாய் ....கடவுள் அங்கிள்..... உங்க சிரிப்பு என்க்கு புச்சிருக்கு.....
ராமசாமி அங்கிள்: அவருக்கு ஒரு பாட்டு பாடி காட்டும்மா.....
சித்ரா செல்லம்: என்க்கு குச்சி ஐஸ் வேணுமே......
ராமசாமி அங்கிள்: அவரே தருவார்மா ...... பாடு ராஜாத்தி.....
சித்ரா செல்லம்: அப்போ சரி......
(குழந்தை ஏதோ பாடுகிறாள்...... அது கடவுளுக்கு மட்டும் புரிகிறது..... ராமசாமி அங்கிள், ஒண்ணும் புரியாமல், ஏதோ நேசமித்திரன் சார் கவிதையை, அவர் வாசித்து விட்டு கமென்ட் போடுற மாதிரி - புரிந்தும் புரியாமலே - புரியாமல் புரிந்தும் - ஹி, ஹி, ஹி, என்று வழிந்து கொண்டு..... நல்லா இருக்குது, என்கிறார்.....)
சித்ரா செல்லம்: ஐஸ்-கிரீம்க்கு தேங்க்ஸ், கடவுள் அங்கிள். நெம்ப நன்னா இருக்குது.... உங்க கூட "கண்ணா மூச்சி .....ரே..... ரே......" விள்யாத போலாமா?
ராமசாமி அங்கிள் கூட டூ.... டூ...... டுட்டூ ..... வெவ்வே வெவ்வெவ் வெவ்வே ..... நான் போன வாட்டி, ப்ளோரிடா போனப்போ, ஐஸ்-கிரீம் வாங்கி தராமா...... டாட்டா சொல்லிட்டார்.... போ..... போ.....
கடவுள் அங்கிள், நான் இப்படியே இருக்கேன்..... சரியா? அங்கிள் கூட சண்டை..... அவர் சீக்கிரம் தாத்தா ஆவட்டும்....
எப்போ பாரு, நான் யூத் யூத் என்று பீலா விடுறார்...... கடவுள் அங்கிள், ராமசாமி அங்கிள் கிட்ட பொய் சொல்லக் கூடாதுனு சொல்லுங்க..... ஹையா ஜாலி....... எல்லாம் ஓகேனு சொல்லிட்டாங்க..... அய் லவ் யு, கடவுள் அங்கிள்! உம்மா.......
ராமசாமி அங்கிள்: ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹா,....... சின்ன பிள்ளைங்க அப்படிதான்..... கடவுள் சார்வாள்..... கண்டுக்காதீங்க...... சித்ரா குட்டி, சும்மா ஐஸ்-கிரீம், பாட்டு, கண்ணா மூச்சு விளையாட்டு தானா...... இது கடவுள் மா.... கடவுள்..... வேற எதுவும் கேக்க தோணலியா? அவர் வரம் கொடுப்பார்..... என்ன கேட்டாலும் தருவார்..... நல்லா யோசித்து கேளுமா?
சித்ரா செல்லம்: எனக்கு இப்போ அதான் வேணும்..... இன்னும் ஒரு ஐஸ்-கிரீம் வேணும்......
ராமசாமி அங்கிள்: எத்தனை விஷயங்கள் இருக்குது? சாதி, மதம், சண்டை, கவலை, ஏமாற்றம், இன்னல், ஏழை-பணக்காரன் வேறுபாடு இல்லாத காலம் வேண்டும் என்று என்னை மாதிரி கேட்க தெரியலியே?
சித்ரா செல்லம்: அப்படினா என்ன? அங்கிள், அங்கிள், அங்கிள், ..... உங்களுக்கு காலமே ஐஸ்-கிரீம் வேணுமா? ஹாங்.... என்ன, அங்கிள்?
கடவுள் அங்கிள்: ராமசாமி, குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்..... விளையாட்டு, இனிப்பு, ஐஸ்-கிரீம், பாசம் - இது போல தான் அவங்க உலகம்..... இதை பெரியவர்கள் கெடுக்காமல், கிடைக்க வேண்டியதை மட்டும் கொடுக்க வழியை பாருங்க.... அதுக்குதான் உங்களை பெரியவர்களாக இருக்க விட்டுருக்கேன்..... சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க...... டி வி, சினிமா, கம்ப்யூட்டர் தான் உலகம்னு குழந்தைகளுக்கு காட்டுறீங்க..... அதையும் தாண்டி, நான் படைச்ச உலகம் இருக்குனு புரிய வைக்க மறக்குறீங்க...... வெள்ளந்தி மனசுல விஷத்தை பாய்ச்சுட்டு, இதெல்லாம் எப்போ மாறுமோ? நல்ல காலம் எப்போ பிறக்குமோ? என்று புலம்புறீங்க..... எனக்கு நேரமாச்சு..... நான் சித்ரா செல்லத்துக்கும் அவள் கூட இருக்கிற மற்ற குழந்தைகளுக்கும் நல்ல கதை சொல்ல போறேன்..... வர்ட்டா......
"நிலா நிலா ஓடி வா என்றால்
நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
கண்ணீரால், கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்."
இந்த பருவம் - விலை மதிப்பு இல்லாத பொக்கிஷ பருவம்....... எந்த விலை கொடுத்தும் திரும்ப வாங்க இயலா பருவம்.... அந்த பருவத்தில், நல்ல விஷயங்களை பயிர் செய்......
வாசகர்கள்: ஆமாம் ..... ஜோரா இருக்குதே...... யார் எழுதியது இது?
சித்ரா : மக்காஸ்...... காமெடி பண்ணாதீங்க...... நான் பதிவுலக குழந்தையா இருந்தப்போ "கவுஜ"னு கிறுக்கியதுதான்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.....
பி.கு. அடுத்த "THODARUNGOTITIS " பலி கடா யார் ஆகணுமோ ஆகிக்கோங்க.......................!!!!!!!
வர்ட்டா......
55 comments:
தலைப்பு வைங்கோ....
" இந்த பருவம் - விலை மதிப்பு இல்லாத பொக்கிஷ பருவம்....... எந்த விலை கொடுத்தும் திரும்ப வாங்க இயலா பருவம்.... அந்த பருவத்தில், நல்ல விஷயங்களை பயிர் செய்...... /////
சிரிப்புடன் கூடிய பதிவுக்கு நடுவே சிறப்பான சிந்தனை. நீங்க பாப்பாவா இருந்தப்ப எடுத்த போட்டோவை போட்டு நல்லா இருக்கும்.
ஆஹா, மறுபடியும் மாட்டிக்கினீங்களா :)
ஆமா தலைப்பு எங்கே
ரொம்ப செல்லமான பதிவு சித்ரா:)!
We're sorry, but we were unable to complete your request.
When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:
* Describe what you were doing when you got this error.
* Provide the following error code and additional information.
bX-o3qgph
Additional information
blogID: 4070141950327107725
host: www.blogger.com
postID: 1896609074244506684
uri: /comment-moderate-confirm.g
This information will help us to track down your specific problem and fix it! We apologize for the inconvenience.
Find help
See if anyone else is having the same problem: Search the Blogger Help Group for bX-o3qgph
If you don't get any results for that search, you can start a new topic. Please make sure to mention bX-o3qgph in your message.
....... SORRY! DUE TO TECHNICAL DIFFICULTIES, I WILL PUBLISH YOUR COMMENTS IN A WHILE!
KEEP SENDING YOUR COMMENTS!!!!!!!!!
கடந்த இரண்டு நாட்களாய் உங்களின் மறுமொழிகளை காண வில்லை . எனவே தான் உங்கள் சார்பாக நான் இருபத்தி மூன்று மறுமொழிகள் நேற்று இட்டேன். உங்களை போல நாற்பது, ஐம்பது மறுமொழிகள் ஒரே நாளில் இட முயற்சி செய்கிறேன்
..ஸேம் ப்ளட்
Hilarious as usual :)
பின்தொடர சொன்ன பாவத்துக்காக அவர அங்கிள் அங்கிள் னு ரொம்ப காய படுத்திடீங்க போங்க....இனி உங்கள எல்லாரும் குழந்தை சிற்றானு கூப்டலாம்னு முடிவேடுத்துடோம்...எல்லாம் எங்க பாதுகாபுக்காகதான்...!
அற்புதமான கதை.
//குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்..... விளையாட்டு, இனிப்பு, ஐஸ்-கிரீம், பாசம் - இது போல தான் அவங்க உலகம்..... இதை பெரியவர்கள் கெடுக்காமல், கிடைக்க வேண்டியதை மட்டும் கொடுக்க வழியை பாருங்க.... அதுக்குதான் உங்களை பெரியவர்களாக இருக்க விட்டுருக்கேன்..... சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க......//
செம வசனம். அடுத்த ரஜினி படத்துக்கு நீங்கதான் வசனமாம்.
me the first?
உண்மைதான், குழந்தைப் பருவம் மறக்க முடியாதது.. இருந்தாலும், அத விட்டு வெளியே வந்துதான ஆகணும்..
நா கூட உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன் (http://madhavan73.blogspot.com/2010/07/blog-post.html) .. முடிஞ்சா தொடருங்க.. இல்லேன்னா அந்த வாய்ப்பு (!!), வெயிட் லிஸ்டுல இருக்குற ஆளுக்கிட்ட போயிடும்..
:)) ஹாஹாஹா ஹேஹெ ஹிஹிஹி
அடபோங்க முடியலை :))
good and good sense.
இதை அநியாயத்தை தட்டி கேட்க ஒரு பதிவர் வராமலா போய்டுவாரு???? :)))
ay ramasamikku thoppi
ay ramasamikku thoppi
Nalla irukku unga thodarpathivu...
அப்பாடா..
நன் தான் first .
நல்ல பதிவு சித்ரா.
அதோடு புகைப்படங்களும் அருமை..
தொடர் பலிப் பதிவுன்னு இல்ல போட்டிருக்கணும். அந்த ஆடு மாலையைக் கூடே தானே போட்டுக்கணும் போலையே:))
அருமையான சிந்தனைகள்.
குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்.
// சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க..//
இது பாயிண்ட்.:)
கொழந்டையாவே மாறிட்டீங்க.
( மேடம் நீங்க என்னோட பிளாக்ல போட்ட பின்னூட்டம் பப்லிஸ் ஆகமாட்டேங்குது, ஏதோ ப்ராப்ளம் போல சாரி மேடம்.)
உண்மைதான் சின்ன வயசுல பெரியவங்களின் என்னங்களை விதைத்து விட்டு பிறகு குத்துதே குடையுதான்னு அலற வேண்டியது. சும்மா நச்சுன்னு உச்சந்தலையில் அடித்த வரிகள் அருமை...
இது வெட்டி பேச்சு இல்லை உலக கோல்ட் அவார்டு வாங்கிய சூப்பர் பேச்சு..
//சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க......//... உண்மைதான்!
கலக்கலா இருக்கு சித்ரா!
சின்னப்புள்ளன்றத காட்டீட்டீங்களே. ஐஸ்கிரீம் மட்டும்தான் கேட்பாங்களா? சாக்லேட், குச்சிமுட்டாயி, குருவி ரொட்டியெல்லாம் கேக்க மாட்டீங்களா?
//சித்ரா : மக்காஸ்...... காமெடி பண்ணாதீங்க...... நான் பதிவுலக குழந்தையா இருந்தப்போ "கவுஜ"னு கிறுக்கியதுதான்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..... //
உங்க காமெடிக்கு அளவே இல்லை அக்கா
நான் என்னத்த சொல்ல, எப்புடி தான் யோசிக்கறாங்களோ நமக்கு இருக்க மாட்டேங்குதே
சூப்பர்ர்ங்கோ..
//சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க...... டி வி, சினிமா, கம்ப்யூட்டர் தான் உலகம்னு குழந்தைகளுக்கு காட்டுறீங்க..... அதையும் தாண்டி, நான் படைச்ச உலகம் இருக்குனு புரிய வைக்க மறக்குறீங்க...... வெள்ளந்தி மனசுல விஷத்தை பாய்ச்சுட்டு, இதெல்லாம் எப்போ மாறுமோ? நல்ல காலம் எப்போ பிறக்குமோ? என்று புலம்புறீங்க..... //
அருமையான வரிகள், அனைவரும் உணரவேண்டியது.
யாருங்க அது அந்த ராமாசாமி அங்கிள் :-).
கடைசியில் கடவுள் அங்கிளின் அறிவுரை அருமை....
வழக்கம்போல சூப்பரா எழுதியிருக்கீங்க சித்ரா!!!!
என் பதிவிற்கு நீங்கள் அனுப்பிய பின்னூட்டம் ஏதோ காரணத்தால் பின்னூட்ட பெட்டிக்குள் நுழைய வில்லை[சம் டெக் ப்ரொப்ளம்]
காத்திருக்கிறேன்.6 பின்னூட்டங்கள் க்யூவில் காத்திருக்கின்றன
தொடர் பதிவு பலி ஆடு நீங்கதானா...
புது மாலை.. புது அரிவாள்,..புது மஞ்சத் தண்ணி....கலக்ற மச்சி
"நிலா நிலா ஓடி வா என்றால்
நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
கண்ணீரால், கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்."
இந்த பருவம் - விலை மதிப்பு இல்லாத பொக்கிஷ பருவம்....... எந்த விலை கொடுத்தும் திரும்ப வாங்க இயலா பருவம்.... அந்த பருவத்தில், நல்ல விஷயங்களை பயிர் செய்.....//
தத்துவம் கலந்த தங்களின் குழந்தைப் பருவப் பதிவினை ரசித்தேன். நானே சின்னப் பிள்ளையாக மாறியது போன்ற உணர்வு.. நன்றிகள் தோழி!
//ராமசாமி அங்கிள்: எத்தனை விஷயங்கள் இருக்குது? சாதி, மதம், சண்டை, கவலை, ஏமாற்றம், இன்னல், ஏழை-பணக்காரன் வேறுபாடு இல்லாத காலம் வேண்டும் என்று என்னை மாதிரி கேட்க தெரியலியே?
சித்ரா செல்லம்: அப்படினா என்ன? அங்கிள், அங்கிள், அங்கிள், ..... உங்களுக்கு காலமே ஐஸ்-கிரீம் வேணுமா? ஹாங்.... என்ன, அங்கிள்?//
சூப்பர்.ஓராயிரம் வார்த்தைகளில் விவரிக்கவேண்டியத்தை ஒரே ஒரு படம் சொல்லிவிடும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த வரிகள் ஓராயிரம் படங்கள் விளக்கும் விஷயத்தை சொல்லிவிட்டது.
நகைச்சுவையிலயே தத்துவங்களைச் சொல்லிட்டீங்களே...
முதல்ல போட்ட பின்னூட்டம் காணாம போச்சு.
அடடா... சாமி கிட்ட லம்ப்பா எதாச்சும் கேக்காம விட்டுட்டீங்களே..??
ச ச.. அடுத்த முறை என்னையும் கூப்பிடுங்க.. ஐடியா தரேன்.. :D :D
(சூப்பரா இருக்கு சித்ரா.. வாழ்த்துக்கள்...!! )
குட்டி பிள்ளைங்கள பிள்ளைகளாகவே இருக்க விடனும்... ;-
அருமையான பதிவு...!!
வாவ்வ்வ் சித்ரா டீச்சர்ர்ர் சூப்பர்ர்ர்ரா சொல்லிருக்கிங்க....
சின்ன வயசு ஆசை அவ்வளவு தான ???
கலக்கலா எழுதி இருக்கீங்க...
ஐஸ்கிரீம் எனக்கும் வேணும்.
நல்லா இருக்கு.எப்படி இப்படி எல்லாம் யோசிக்கரீங்க சித்ரா மேடம்?
என் எதிரே கடவுள் வந்தா என்னையும் உன்கூட கூடின்டுபோய்டு தெய்வமேனூத்தான் கேட்பேன். ( அதான் வரலயோ?.)
சித்ரா செல்லம் எப்போதும் சமத்து..
நகைச்சுவையோட கலந்து அடிக்கிறீங்க.எப்பவும்போல பாராட்டுக்கள் குட்டிப்பாப்பா சித்ராவுக்கு !
உள்ளேன் டீச்சர்
ம்.. ஹூம்.. இன்னும் தொடரா..?
அப்புறம் படங்கள் அருமை...
//குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்..... விளையாட்டு, இனிப்பு, ஐஸ்-கிரீம், பாசம் - இது போல தான் அவங்க உலகம்..... இதை பெரியவர்கள் கெடுக்காமல், கிடைக்க வேண்டியதை மட்டும் கொடுக்க வழியை பாருங்க.... அதுக்குதான் உங்களை பெரியவர்களாக இருக்க விட்டுருக்கேன்..... சின்ன வயசுல பெரியவா மாதிரி பேச சொல்றீங்க.... பெரியவர் ஆனதும், சின்ன புள்ளையாகவே இருக்க முடியலியே என்று ஏங்குரீங்க......//
சூபேரா எழுதியிரிகிங்க சித்ரா ..மேலே சொன்னது மிகவும் சரி ..நன்றி
அருமைடா சித்து நல்ல பதிவு..
//நம்ம தானை தலைவி டாக்டர் வெட்டிப்பேச்சு சித்ராக்காதான்//
இதெல்லாம் கொஞ்சம் ஓவரு !!!..........இப்படியே உங்கள உயரமா தூக்கி ஒருநாள் தொபுக்கடீர்னு கீழ போடப்போறாங்க !! உசாரய்யா உசாரு !!
akkaa akkaa... neenga sonnathu enakku nemba pidichchikku akka.. Neenga second std thane pakkireenga. Ungalukku mittai kechchaa enakku thaveengalaa??
அக்கா தத்துவமெல்லாம் சொல்லுறீங்க ...!!!
ம்ம்ம்ம் அருமையான பதிவு சித்ரா ....
கருத்துக்கள் ம்ம்ம் பலே....
Post a Comment